Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யாழில் உலாவரும் போது எனது புணைபெயருடன் இருந்ததிந்த தலைப்பும் அதனுடன் இருந்த "கற்பனை விஞ்ஞான கதை" என்னும் விளக்கமும் என்னை உள்ளே செல்ல தூண்டியது. கலைஞனானால் பதியப்பட்ட திரியாதலாலும் அவர்மீதிருந்ததோர் தனிப்பட்ட யாழ்கள மதிப்பினாலும் தொடர்ந்து வாசிக்க தொடங்கினேன். வாசிக்க ஆரம்பித்தவனை முழுவதுமாக வாசிக்க தூண்டியது அவரது கற்பனைக்கதை நடை. ஆங்காங்கு காணப்பட்ட சிறு தவறுகளை சுட்டிக்காட்ட தூண்டியபோதும் அதனை ஒரு "கற்பனை விஞ்ஞான கதை" யின் விமர்சனமாக கொண்டுசெல்வதே சிறந்ததாகப்பட்டது. யாழில விமர்சனத்திற்கு பெயர்போன கலைஞனின் படைப்பிற்கு நானே ஒரு தனித்திரியில விமர்சனம் செய்யலாமே என்றதொரு நப்பாசையுடன் இந்தத்திரியை ஆரம்பிக்கின்றேன். இந்தத்திரியில் பதியப்பதியபடும் அடியேனின் விமர்சனங்கள் கதாசி…

  2. வியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா என்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகுவான விடயமல்ல. அவ்வாறு சிங்கள பண்பாட்டில் பல பாரம்பரிய அம்சங்கள் இன்றும் அதேமுறையில் பின்பற்றபட்டு வருகின்றது. இலங்கை பன்மைத்துவ சமூகத்தைக் கொண்ட நாடு. இன்று இன நல்லிணக்கம் குறைவாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக ஒரு இனத்தின் புராதன பண்பாட்டு, கலை, கலாசார அம்சங்கள் பற்றிய புரிந்துணர்வு இன்னொரு இனத்திற்கு இன்மையே ஆகும். இக்குறையை நிவர்த்தி செய்யும்பொருட்டும், இதுவரை தமிழில் அதிகம் பேசப்படாத சிங்கள புராதன கலாசாரத்தையும், பண்பாட்டு அம்ச…

  3. நேர்காணல்: விருது கிடைக்கும் என்று நினைக்கவில்லை! Last Updated : தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவர் டி.செல்வராஜ். அவருடைய "மலரும் சருகும்', "தேநீர்' நாவல்கள் வாசகர் மனதில் என்றும் கமழ்பவை. "தேநீர்' நல்ல திரைப்பட முயற்சி. அண்மையில் அவர் எழுதிய "தோல்' நாவலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. மனித வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களைக் கலையழகுடன் சித்திரிக்கும் படைப்பாளியான அவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் கூட. தமிழக அரசின் விருது பெறுவதற்காகச் சென்னைக்கு வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து... நான் தமிழில் எழுதுவேன் என்று என் சிறு வயதில் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஏனென்றால் நான் பள்ளியில் படிக்கும்போது முழுக்க முழுக்க ஆங்கில…

    • 0 replies
    • 740 views
  4. வணக்கம் யாழ் கள உறவுக ளுக்கு ..... ..நமது சக கருத்துக்கள உறவு இளங்கவி அவர்கள் ,தனது கவிதை தொகுப்பை ...தொகுத்து ஒரு வெளியீடாக , தர இருக்கிறார். யாழ் களத்தில் பல கவிதைகளை தந்த அவரை , பாராடுவதும் , அதை வரவேற்று எம்மை இயன்றதை செய்வதும் யாழ் கள உறவுகளின் கடமையாகும் . இது பற்றிய மேலும் தகவல்களை அவரிடம் தனி மடலிலும் பெற்று கொள்ளலாம் .எனக்கு விபரம் தெரியுமிடத்து மேலும் விபரங்களை அறிய தருவேன். அல்லது இது பற்றி எங்களுடன் அவர் களத்தில் அறிய தருவார் என நம்புகிறேன். விரைவில் எதிர் பாருங்கள் ............

  5. விவசாயி சஞ்சிகை வெளியீடு – பத்திரிகை செய்திக்குறிப்பு இயற்கை விவசாயம் மற்றும் நம்மூர் விவசாயம் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய “விவசாயி” எனும் மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் சஞ்சிகை ஆசிரியர் சி.அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது. ‘நஞ்சில்லா உணவு நாளைய சந்ததிக்கு’ எனும் மகுடவாக்கியத்துடன் விவசாயம், விலங்கு வேளாண்மை, மீன்பிடி மற்றும் உள்ளூர் உற்பத்திகள் ஆகியவற்றுடன் தமிழரின் மரபுசார் வாழ்க்கைமுறை தொடர்பான விவசாய விற்பனர்கள், சாதாரண விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆக்கங்களுடன் சஞ்சிகையாக மாதாந்தம் வெளிவர…

  6. பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. மகாவிஷ்ணு ஒருமுறைத் திரும்பிப் படுப்பது ஒரு யுகம் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகிறது. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது - இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம். …

  7. வீடில்லா புத்தகங்கள் 1 - புயலின் கண் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். எந்த ஊருக்குப் போனாலும் பழைய புத்தகக் கடைகளைத் தேடிப் போகிறவன் நான். பழைய புத்தகங்களின் மீதான காதல் என்பது முடிவில்லாத தேடல். புயலின் கண் எத்தனையோ அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களைத் தற்செயலாகப் பழைய புத்தகக் கடைகளில் கண்டெடுத்திருக்கிறேன். அந்தத் தருணங்களில் நிலவில் கால் வைத்தவன் அடைந்த சந்தோஷத்தைவிடவும் கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைந்திருக்கிறேன். பழைய புத்தகங்களைப் பேரம் பேசி வாங்குவது ஒரு கலை. நாம் புத்தகத்தை ஆசையாகக் கையில் எடுக்கும்போதே புத்தக வியாபாரிக்கு இது முக்கியமானது எனத் தெரிந்து…

    • 62 replies
    • 27.2k views
  8. உடலில் விழும் அடியைவிட மனதில் விழும் அடி வலி மிகுந்தது. அதுவும் சின்னஞ்சிறு வயதில் யாராவது மிக மோசமாக திட்டிவிட்டால், அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். எத்தனை வயதானாலும் அந்த வலி மறப்பதே இல்லை. அப்படிதான் மேரி மெக்லியோட் பெத்யூனுக்கும் நடந்தது. அமெரிக்காவில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்கு உரிமை, சொத்து உரிமை, கல்வி உரிமை எதுவும் கிடையாது. திருமணம் செய்துகொள்வது கூட எஜமானர் அனு மதித்தால் மட்டுமே நடக்கும். குடும்பமே பண்ணை முதலாளிக்கு அடிமைப் பணி செய்ய வேண்டிய கட்டாயம். எதிர்த்துப் பேசினால் பட்டினி போட்டு அடித்து வதைப்பார்கள். தப்பி ஓடினால் பிடித்து வந்து சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவார்கள். அதன் பிறகு வாழ்நாள் …

  9. வீழுமுன் சில வரிகள் - கப்டன்.வாமகாந்தன் Source :Sankathi

    • 3 replies
    • 2.7k views
  10. வீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள் டிசே தமிழன் -'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு- 1. யுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது. 'வன்னி யுத்தம்' என்…

  11. வெண்முரசு – ஒரு பார்வை வெ.சுரேஷ் வெண்முரசு- ஒரு பொதுப்பார்வை நேற்றுதான் தொடங்கியது போல் இருக்கிறது ஜெயமோகனின் மகாபாரத ஆக்கமான வெண்முரசு. அவரே கூறியிருக்கும்படி, இது 10 வருட செயல்திட்டம். ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்ற கணக்கில் பத்து புத்தகங்கள் வர வேண்டும். ஆனால் தொடங்கிய 7 மாதங்களிலேயே 3 புத்தகங்கள் வந்துவிட்டன. சுமார் 2500 பக்கங்கள் அளவுக்கு எழுதியாயிற்று. இதற்கிடையே பல கட்டுரைகள், கேள்வி பதில்கள், விவாதங்கள், வெண்முரசு பற்றிய கேள்விகளுக்கென்றே தனியாக ஒரு தளம், இலக்கியச் சந்திப்புகள் மற்றும் நெடும்பயணங்கள். ஜெயமோகனின் ஆற்றலும் உழைப்பும், அனைத்துக்கும் மேலாக புறச்சூழல் எப்படி இருந்தாலும் கவனம் குலையாத அவரது படைப்பூக்கமும், இதுதான் யோக மரபில் சொல்லப்படும் ஏகாக்கிர…

  12. வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்” ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன். குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது. முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் ச…

  13. வெண்முரசு நாவல் 17: இமைக்கணம் வெண்முரசு மகாபாரத 26 நாவல் வரிசையில் 17 ஆவது நாவலாகிய “இமைக்கணம்” வாசிப்பை நிறைவுசெய்துவிட்டேன். பகவத்கீதையின் யோகதத்துவங்களை விரிவாகச் சொல்லும் நாவல். மகாபாரதப்போரின் நடுவே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததாகவே அறிந்திருக்கின்றேன். எப்படிப் போர் நடுவே அர்ஜுனனின் கேள்விகளுக்கான பதில்களை தத்துவ விளக்கங்களோடு கிருஷ்ணர் சொல்லியிருக்கமுடியும் என்ற கேள்வி இருந்ததால், கீதை ஒரு இடைச்செருகல் என்றே நினைத்திருந்தேன். மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை எனவும் நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமான நாராயணவேதம் எனும் கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்றும…

  14. வெண்முரசை என்ன செய்வது? சுரேஷ் பிரதீப் சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த 'அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் 'நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?' என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக 'கண்டெடுக்கப்பட்டு' கொடுக்கப்படும் எதையுமே நமக்கு - அதாவது தமிழர்களுக்கு - முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன் தொடர்ச்சியாக மேற்சொன்ன கேள்வியை முன்வைத்தார். வெண்முரசின் இறுதி நாவல் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு இன்று காலையும் மாலையுமாக ஜெயமோகன் வெண்முரசு வாசகர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதை ஒட்டி தமிழ் அறிவ…

    • 7 replies
    • 2.4k views
  15. வென்றது ஆரியம் துணைநின்றது திராவிடம்: சிறையிலிருந்து சீமான் எழுதும் புதிய நூல் திகதி: 09.08.2010, தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் எனது மீனவனை அடித்தால் நான் உனது சிங்கள மாணவனை அடிப்பேன் என இன உணர்வுடன் பேசிய நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமானை சென்ற மாதம் தமிழக காவல்துறை கைது செய்து அவரைத் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வேலூர் சிறைச்சாலையில் அடைத்தது.இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் கருணாநிதி அரசு மீது கடும் கோபத்தை மீது ஏற்படுத்தியது. நாம் தமிழர் என்னும் அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மற்றும் ஈழப்பிரச்சனை தொடர்பாக மிகவும் பரபரப்புடன் இயங்கிய சீமான் சிறையில் கடந்த ஒரு மாத காலமாக …

  16. வெற்றிச் செல்வியின் "ஆறிப்போன காயங்களின் வலி" புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை எட்ட இன்னும் நாலு பக்கம் தான் எஞ்சியிருந்தது. அதற்குள் வேலையில் இருந்து திரும்பும் ரயில் தன் தரிபிடத்தை வந்தடையவும் சனக்கூட்டத்தில் இருந்து விலகி அந்த ரயில் நிலையத்தில் நின்று கொண்டு முழுதையும் படித்து முடித்தது மூன்று மணி நேரத்துக்கு முன்புதான். சிட்னியில் மழை கனத்துப் பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுக் கொளுத்திய உச்சபட்ச வெயிலுக்கு எதிர்மாறாகக் குமுறிக் கொட்டிய அந்த மழைதான் இந்த நூலில் வெற்றிச்செல்வி கொணர்ந்த உணர்வின் வெளிப்பாடோ எனத் தோன்றியது. அந்த மழைக் கதகதப்போடு என் கண்ணீரும் சேர்ந்து கொள்ள இலக்கியா இருக்கும் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் நோக்கி நடந்தேன். எதிர்…

  17. பிறந்துவிட்டது புத்தாண்டு... புதுப்பொலிவுடன் வருகிறது சென்னை புத்தகக் காட்சி..! எந்தப் பதிப்பாளர், என்ன புத்தகம், யார் எழுத்தாளர், புத்தகத்தின் 'ஹைலைட்' என்ன என்பது பற்றி பிரபல பதிப்பகங்களில் அடித்த ஒரு ரவுண்ட் அப் இது... புரட்சி, சிவப்புச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் அதிக சிரத்தையுடன் செயல்படும் 'விடியல்' பதிப்பகம் சுமார் 27 புத்தகங்களை வெளியிட இருக்கிறது. அதில் வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பியின் 'இந்திய வரலாறு', பிடல் கேஸ்ட்ரோ தன் கைப்பட எழுதிய சுயசரிதை ஆகியவை முக்கியமானதாம்! ''இந்தியாவின் புகழ்பெற்ற வராலாற்றாசிரியர்களில் டி.டி.கோசாம்பியும் ஒருவர். இந்திய வரலாறு பற்றி இதற்கு முன் புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகம் அவற்றி…

  18. வெளிவந்துவிட்டது 'தாயக தரிசனம் பார்வை - 1' [ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2007, 19:35 ஈழம்] [கி.தவசீலன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் 'அனைத்துலகத் தொடர்பகம்' தாயகத்தின் பல்வேறு நிகழ்வுகளை தொகுத்து ஒளிச்சஞ்சிகையாக வெளியிட்டுள்ளது. அனைத்துலகத் தொடர்பகத்தின் வெளியீட்டுப்பிரிவினரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் இச்சஞ்சிகை 'தாயக தரிசனம் பார்வை - 1' என்னும் தலைப்புடன் வெளிவந்திருக்கின்றது. இரண்டு மணிநேரம் கொண்டதான இவ் ஒளிச்சஞ்சிகையில், காலக்கணிப்பு உண்மையின் பக்கம் அனைத்துலகம் பார்க்குமா? உலைக்களம் நடந்து வந்த பாதையில் கடந்து சென்ற - 2006 பாடல்: வல்வை தந்த கிட்டண்ணா காலக்கடமை நெருப்பின் குறிப்பு யாருக்கு …

    • 1 reply
    • 1.9k views
  19. வேகமாய் வாசிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நேற்று “எப்படி வாரம் ஒரு புத்தகம் படிப்பது?” என்றொரு ஆங்கிலக் கட்டுரை படித்தேன். எழுதினவர் புத்தகம் என்பது அபுனைவுகளையே. தான் ஒரு மெதுவான வாசகன் என்று கூறும் அவர் எப்படி கல்லூரியில் தன் பேராசிரியர் கூறிய அறிவுரை அவரது வாசிப்பை பன்மடங்காக்க பெருக்க உதவியது என விளக்குக்கிறார். ஒருமுறை அவர் வகுப்பில் தன் வரலாற்று பேராசிரியரிடம் பாடத்திற்கான துணை நூல்களை வாசித்து முடிப்பதற்கு தான் திணறுவதாய் கூறுகிறார். பேராசிரியர் உடனே வகுப்பை பார்த்து “எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை?” எனக் கேட்கிறார். கிட்டத்தட்ட அத்தனை பேரும் கையை தூக்குகிறார்கள். அடுத்து அவர் அபுனைவு நூல்களை எப்படி படிக்கலாம், எப்படி படிக்க கூடாது என விளக…

  20. அலெக்ஸ் ஹேலி இளம் வயதில் கடலோர காவற்படையில் பணிபுரிந்தார். அதன் பின் பத்திரிகை துறைக்கு வந்தார். எழுத்தாளராக மாறினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பசிபிக் கடலில் பயணம் செய்யும் ஒரு சரக்கு கப்பலில் அமெரிக்க கடற்கரைப் பாதுகாப்புப் படை சார்பாக சேர்ந்தார். அங்கே இருக்கும் நூலகத்தின் மூலம் ஏற்படும் வாசிப்பு அனுபவம் அவருக்கு எழுத்தார்வத்தைத் தூண்டியது. லண்டனில் ஒரு மியூசியத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு பழங்கால எகிப்திய சிலையை கண்டார். அதில் உள்ள எழுத்துக்களை வைத்து அதன் வரலாற்றை ஒரு பிரெஞ்சு அறிஞர் கணிப்பதையும் கண்டார். அப்போதே அவருக்கு தனது முன்னோர்கள் மூலம் வழிவழியாக கடத்தப்பட்டு வரும் சில வார்த்தைகளையும், விசித்திரமான ஒலிகளையும் கொண்டு தமது மூத…

    • 1 reply
    • 1.2k views
  21. வைரமுத்து சிறுகதைகள் அன்புள்ள ஜெயமோகன், வைரமுத்து சிறுகதைகளில் விஞ்சி நிற்பது கதை வளமா, மொழி வளமா என்றொரு பட்டிமன்றம் விஜய்டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. அவ்வை நடராஜன் நடுவர். மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா போன்ற வைரமுத்துவின் ரசிக பேரவையின் ஆஸ்தான தொண்டர்களின் புகழ்பேச்சுக்கள். பார்வையாளர்களின் பிரதானமான இடத்தில் அமர்ந்திருந்தவர் வைரமுத்து. தன் படைப்புகளின் மீதான சிலாகிப்புகளை கேட்டு புல்லரித்தது மகிழ்ந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் வைரமுத்து. தன்னுடைய சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர்ச்சியாக தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றார். இதனை எப்படிப் பார்க்கின்…

  22. வாசன் நான் என் வாசிப்பு அனுபவங்களை பல்வேறு வடிவங்களிலும் பகிர்ந்து வருவதுண்டு. அவைகள் யாவும் எத்தனை பேரால் கவனங்கொள்ளப்படுகின்றது என்பது குறித்தெல்லாம் எனக்குப் பெரிதாக கவலை ஏதும் இல்லை. ஆயினும் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதில் மட்டும் நான் எப்போதுமே அவதானமாக இருந்து வருகின்றேன். ஏற்கனவே ஈழவிடுதலைப் போரினாலும், அதன் உள்ளக முரண்பாடுகளினாலும், அதன் பகை முரண்பாடுகளினாலும் ஏற்படுகின்ற சர்ச்சைகளினாலும் அதன் குத்து வெட்டுக்களினாலும் ஏற்கனவே பல நட்புக்களினதும் உறவுகளினதும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையில்லாத பிரச்சினைகள் எதுவும் எனக்குத் தேவையில்லை என்பதே எனது மனநிலை. இந்த என்னுடைய அவதானத்தையும் மீறி ஒரு தடவை மட்டும் ஒரு சிக்கலில் மாட்டிக…

  23. எனது பார்வையில் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் by கோமகன் அண்மையில் கறுப்புப் பிரதி வெளியீடான ஷோபாசக்தியின் ‘BOX கதைப் புத்தகம்’ நாவல் வாசிக்க நேர்ந்தது. பொதுவாகவே எழுத்தாளர்கள் தங்கள் கதையைச்சுற்றி வரும் சுற்றுப்புறச் சூழல்களை உவமானத்துக்காகவே பயன்படுத்துவார்கள். இந்த உவமான உவமேயங்கள் அச்சுப்பிசகாமல் சங்ககால இலக்கியத்தில் இருந்து இன்றுவரை இருந்து வந்துள்ளது. ஆனால் ஷோபாசக்தியின் BOX கதைப் புத்தகம் வாசிக்கும் பொழுது முதன் முறையாக முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் க…

  24. ஸர்மிளா ஸெய்யித்தின் உம்மத் - யமுனா ராஜேந்திரன் முழுமையான நாவல் வாசிப்பென்பது சமநேரத்தில் பல்வேறு அடுக்குகளிலான சிந்தனையுடன் அந்நாவல் சுட்டும் புனைவுலகினுள் பயணம் செய்வதாகும். தொடர்பாடல் எனும் வகையில் வாசகனோடு கொள்ளும் உறவில் நாவலின் சொல்முறை இணக்கமாக இருக்கிறதா எனக் காண்பது ஒரு அணுகுமுறை. வட்டார வழக்கு நாவல்களில் பின்குறிப்பாகச் சொற்பட்டியலில் வட்டார வழக்குகளுக்கு விளக்கம் தராதுவிட்டால் நாவலின் சொல்முறையில் முழுமையாகத் தோய்வது பல சமயங்களில் இயலாதுபோய்விடுகிறது. மாறாக, கதை சொல்லியின் விவரணங்களில் தமிழகம் ஈழம் புகலிடம் என அனைத்துத் தமிழருக்குமான மொழியைக் கண்டடைந்து, பாத்திரங்களுக்கு இடையிலான உரையாடலில் குறிப்பிட்ட மதம் மற்றும் வட்டார மாந்தர்களின் வழக்கு மொழிய…

  25. ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை by அரவின் குமார் 2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து உணர்வைக் கலைக்கும் எதனையும் குற்றவுணர்வாகக் கூட கற்பனை செய்திருக்கிறேன். பின்னாளில், ஷோபா சக்தியின் நாவல்களைப் படிக்கிற போதுதான், இலங்கையில் நிகழ்ந்த போராட்டத்தைப் பற்றிய மாற்றுப்பார்வைத் தெளியத் தொடங்கியது. தனிந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.