நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
நடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள் – தர்மு பிரசாத் February 17, 2019 ஈழத்து போர்க்காலப் படைப்புகள் கருணையுடன் கை தூக்கிவிடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகி விட்ட பின்னர், சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற்செறிவோ, படைப்புமொழி குறித்த ஓர்மையோ, சொல்முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை. ஆழமும் உள்விரிவுமற்ற குறைப்படைப்புகள் ஈழத்தின் நவீன முகங்களாக உரையாடப்படும் போதும், போரின்/ போராட்டத…
-
- 3 replies
- 698 views
-
-
தமிழ் நூல்களின் பட்டியல் http://www.viruba.com/ptotalbooks.aspx?id=28
-
- 3 replies
- 3.2k views
-
-
புத்தகங்களை வாங்க! அல்லது விற்க! தமிழில் எத்தனையோ புத்தகங்கள் தற்போது மறுபதிப்பு இல்லாமல் நின்று விட்டது. ஆங்கிலத்தில் கிடைக்காத புத்தகங்களையும் வாங்குவதற்கு வசதி உள்ளது. தமிழிலும் இது போன்ற வசதியை ஏற்படுத்த http://tamilbookmarket.com/ என்ற வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது. புதிய புத்தகங்கள், அரிதான புத்தகங்கள், அதிகளவில் பிரபலம் இல்லாத புத்தகங்கள், பரவலாக அறியப்படாத எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் என அனைத்துப் புத்தகங்களையும் இந்த "தமிழ் புத்தகச் சந்தை' வெப்சைட்டில் வாங்க முடியும்.
-
- 3 replies
- 5.1k views
-
-
பெண் விடுதலை இன்று ஆசிரியர்: க.வி.இலக்கியா விலை: ரூ.60 விடியல் பதிப்பகம் பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளியப் பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில், இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட அடிமை நிலையே பெண் விடுதலை என்று நம்பப்படுகிறது என்று பேசும் நூல் இது. ***** எங்கள் ஐயா - பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள் பதிப்பாசிரியர்கள்: பெ.முத்துசாமி, ஆ.சின்னதுரை, ரெ.மகிந்திரன், ப.குமரேசன், விலையடக்கப் பதிப்பு ரூ. 250 காலச்சுவடு பதிப்பகம் எழுத்தாளர் பெருமாள்முருகனிடம் பயின்ற மாணவர்…
-
- 3 replies
- 2.4k views
-
-
புத்தாண்டில் படைப்பாளிகள் பரிந்துரைக்கும் நூல்கள் - பகுதி 1 | கனலி கனலி கலை – இலக்கிய இணையதளம் வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது . அந்த வகையில் மலர்ந்திருக்கிற புத்தாண்டு 2020 ல் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் உள்ளிட்ட படைப்பாளிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கேள்வி ஒன்றை முன் வைத்தோம். “இந்த புத்தாண்டில் யாருக்காவது புத்தகம் பரிசளிக்க அல்லது பரிந்துரைக்க விரும்பினால், அது எந்த புத்தகமாக இருக்கும்? ஏன் அந்த புத்தகம் ?” இந்த கேள்விக்கான பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் புத்தகங்களை பரிந்துரை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த பரிந்துர…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஓட்டிச உலகில் நானும் sudumanal தன் வரலாற்று நூல் ஆசிரியர் : மைதிலி றெஜினோல்ட் வெளியீடு : எங்கட புத்தகங்கள் (யாழ்ப்பாணம்). “இந்தப் புத்தகத்தை எங்கட புத்தகங்கள் வெளியீடாக வெளியிட வேண்டும் என்று முழுமூச்சாகச் செயற்பட்டு சிறப்புற வெளிக் கொணர்ந்திருக்கும் வெற்றிச்செல்வி அவர்களுக்கும் எமது நன்றிகள்” என எங்கட புத்தகங்கள் குலசிங்கம் வசீகரன் அவர்கள் குறிப்பிடுகிறார். நூல் அறிமுகம் ஓட்டிசம் (Autism) என்பதற்கான தமிழ்ப் பதம் தீரனியம் எனவும் தன்னியம் எனவும் இருவேறு வார்த்தைகளால் சொல்லப்படுகிறது. இந் நூல் தீரனியம் என்ற வார்த்தையை பாவிக்கிறது. தனது குழந்தை ஓட்டிச குறைபாடால் பாதிக்கப்பட்டதை அறிந்த அந்தக் குடும்பம் அதிர்ச்சிக்கு உள்ளாகிறது. தமது எ…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஆறிப்போன காயங்களின் வலி உண்மையில் அவை ஆறிப்போகாத வடுக்களின் நினைவுகள் தான். 18 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக செயற்ப்பட்ட வெற்றி செல்வியின் ஏழாவது நூல் இதுவாகும். பெயருக்கு ஏற்றாற் போல அவர் வெற்றி செல்வியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நம் வாழ்க்கையில் தினம் தினம் எத்தனையோ நூல்களை வாசிக்கின்றோம். ஆனால் ஏனோ ஒரு சில நூல்கள் தான் எப்போதும் நெஞ்சை வருடிக்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் இந்த நூலும். அவர் வாழ்ந்த சமூக சூழலில் உள்ள மக்களின் பிரச்சினைகள்தான் அவரது படைப்புக்களின் கருவாக மாறியுள்ளது. ஆறிப்போன காயங்களின் வலி என்ற இந்நூல் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தவமணி வெளியீட்கதால் வெளியிடப்பட்டது. ஈழப் போருக்கு பின்னரான காலப்பகுதியில் புனர்வாழ…
-
- 3 replies
- 958 views
-
-
புத்தகம் ஏன் சக்களத்தர் ஆகிவிடுகிறது? சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார். பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கல…
-
- 3 replies
- 937 views
-
-
http://tamilsforum.com/unspeakabletruth.html http://www.pagegangster.com/p/2Lweq/ இதுக்கு முதல் யாரும் இந்த நூலைப் பற்றி இங்க இணைச்சிட்டினையோ தெரியாது. இருந்தாலும் ஒருக்கா பாருங்கோ....
-
- 3 replies
- 2.3k views
-
-
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு மரம் ஒன்றின் கீழ் வட்டமாக அமருமாறு கூறப்பட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறையில் ஒரு தலைவராகச் செயற்பட்ட கரிகாலன் எம்முடன் உரையாடுவதற்காக அங்கு வந்திருந்தார். சிறையிலிருந்த எம்மை விடுதலை செய்வதற்கு அவர்களுக்கு நாங்கள் உதவவேண்டும் என கரிகாலன் எம்மிடம் கேட்டார். கைதிகளை விடுவிப்பதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதுமாறு கரிகாலன் எம்மிடம…
-
- 3 replies
- 1k views
-
-
தமிழ் கவியின் 'இனி ஒருபோதும்' சமகாலத்தில் எழுதுகின்ற ஈழத்தவர்களில் இருவர், எதேனும் கருத்துக்கள் கூறினால் தூரத்துக்குப் போய்விடுவேன். புனைவுக்கு வெளியில் இவர்கள் இப்படி அபத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தாலும் இந்த இருவரும் புனைவில் என்னைத் தொடர்ந்து தேடி வாசிக்கச் செய்பவர்கள். அதில் ஒருவர் தமிழ் கவி (நல்லவேளையாக நான் அவரோடு முகநூலில் நண்பராக இல்லை). அவருடைய நாவல்களில் 'இருள் இனி விலகும்' தவிர்த்து, 'இனி வானம் வெளிச்சிரும்', 'ஊழிக்காலம்' என்பவற்றை ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். 'இனி ஒருபோதும்' அவரது நான்காவது நாவல். 1990களின் நடுப்பகுதியில் தொடங்கி, 2009ல் பெரும்போர் நிகழ்ந்தகாலப்பகுதி வரை நீளும் கதை. 'ஊழிக்காலத்தை' ஏற்கனவே வாசித்தவர்க்கு அதில் வரும் பாத்திர…
-
- 3 replies
- 1.5k views
-
-
நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால் Monday, September 16, 2024 மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோ…
-
-
- 3 replies
- 695 views
- 1 follower
-
-
ஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் -தொகைநூல் January 17, 2021 யமுனா ராஜேந்திரன் இவ்வாறு அறிவித்திருக்கிறார் ‘ஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம்’ நூலுக்குக் கட்டுரைகள் அனுப்பிய நண்பர்களுக்கும், நூலை எதிர்பார்த்து ஆவலுடன் விசாரித்த நண்பர்களுக்கும் நற்செய்தி. நூலைத் தொகுத்து முடித்துவிட்டேன். தோழர். டிராட்ஸ்க்கி மருதுவின் அட்டை வடிவமைப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நூல் விரைவில் உங்கள் கைகளில் இருக்கும். 650 பக்கங்கள். இடதுசாரி இலக்கிய விமர்சன மரபில் இந்த நூல் ஒரு மைல்கல்லாக இருக்கும். அப்படித்தான் நான் நினைக்கிறேன். என்னைப்பற்றி இணையவெளியில், சிற்றிதழ்ச்சூழலில் எழுதப்பட்டவற்றில் ஒருபகுதி இப்படி தொகு…
-
- 3 replies
- 1k views
-
-
கடந்த வார வீரகேசரி வாரமலரை எடுத்துப் புரட்டாமலே ஒரு வாரம் கழிந்து விட்டது என்ற நினைப்பில் நேற்று அந்தப் பத்திரிகையை மேய்ந்தேன். கண்ணிற் பட்டது கவிஞர் எருவில் மூர்த்தியின் மரணச் செய்தி.மட்டக்களப்பு வன்னியனார் தெருவைச் சேர்ந்த பிரபல கவிஞர் எருவில் மூர்த்தி ஜனவரி 11 ஆம் திகதி இறந்ததாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கு ஜனவரி 14 ஆம் திகதி மாலை நடைபெறும் என்றும் இருந்தது. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/01/blog-post_21.html
-
- 3 replies
- 2.5k views
-
-
மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச்செல்வி (வேலு சந்திரகலா)எழுதிய முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில்இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதை நூலில் முழுக்க ழுழுக்க போரில் பாதிக்கப்பட்டமாற்றுத்திறானாளிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் முடியாத ஏக்கங்கள் என்றசிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா கடந்த முதலாம் திகதி அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி செல்வி வேலுசந்திரகலாவின் இந்த நூல்வெளியீட்டு விழா கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் வெளிப்பாடுகளுடன்அமைந்திருந்தது. போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்…
-
- 3 replies
- 815 views
-
-
இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கிவிட்டது. அவர்கள் படைத்த இலக்கியங்களைவிட 1983இல் இலங்கையில…
-
- 3 replies
- 1.3k views
-
-
தர்மினி பிப்ரவரி 17, 2013 பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு பிரண்டையாறு. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் மெலிஞ்சிமுத்தன் ஒருகவிஞரும் ஓவியங்களை வரைவதில்ஆர்வமுடையவரும்கூட. ஏற்கனவே ‘சிதையும் என்னுள்’ -’என் தேசக்கரையோரம்’ -’முட்களின் இடுக்கில்’ ஆகிய கவிதைத் தொகுதிகளும் கனவுகளின் தொகுப்பென ‘வேருலகு’ பிரண்டையாறைத் தொடர்ந்து இந்த வருடம் ‘அத்தாங்கு ‘ என்ற நாவலும் மெலிஞ்சிமுத்தனால் எழுதப்பட்டுள்ளன. 1990 இல் பெரும் எடுப்பில் தீவுப்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட சிறீலங்கா இராணுவத்தின் யுத்த நடவடிக்கைகளினால் ஊர்காவற்றுறையின் மெலிஞ்சிமுனைக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து ஓர்அகதியாக அலைந்து இறுதியாக ஒரு நாட்டைக் கண்டு விட்ட போதும் தன்நினைவுகளில்,ஏன…
-
- 3 replies
- 887 views
-
-
புதியதோர் உலகம் ரவி (சுவிஸ்) – உள்ளும் புறமும் புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 இல் தீப்பொறி குழுவினரால் வெளியிடப்பட்டது. பின்னர் இந் நூலை பிரதிகள் செய்து, தானே அதை நூலாகக் கட்டி தோழர் சபாலிங்கம் பாரிஸ் இல் விநியோகித்தார். இதன் இரண்டாவது பதிப்பு 1997 இல் வெளிவந்தது. இதை தீப்பொறிக் குழுத் தோழர்கள் விடியல் பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருந்தார்கள். (புத்தக வடிவமைப்பை நான் செய்திருந்தேன்). இப்போ மூன்றாவது பதிப்பாக தமிழகத்தின் சிந்தன் புக்ஸ் 2023 இல் வெளியிடுகிறது. 37 வருட காலத்தின் பின்னும் இந்த நூல் மறுபதிப்பாக வருவது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இலக்கியத் தளம் என்பதைவிட அரசியல் தளத்தில் அதன் பேசு பொருள் இப்போதும் பொருந்துவனவாக இருப்பதே …
-
- 3 replies
- 481 views
-
-
ஜனநாயக வரி - நிலாந்தன் 14 ஏப்ரல் 2013 அ .இரவியின் புதிய நூல் ஆயுதவரி காலச்சுவடு வெளியீடாக விரைவில் வருகிறது அதில் நிலாந்தன் எழுதிய முன்னுரை படைப்பு ஒரு மாறிலி. ஆனால், படைப்பாளி மாறிலி அல்ல. படைப்பு ஒரு தூலமான உயிரி அல்ல. ஆனால், படைப்பாளி ஓர் உயிரி. எனவே, வளரி. வளரக்கூடியது மாறும். படைப்பாளியும் மாறுபவர்தான். படைப்பாளி மாறும்போது மாறிலியான அவரது படைப்பு சில சமயம் அவரைத் துரத்திக் கொண்டுவரும் அல்லது அவரைச் சுற்றி வளைக்கும். அல்லது அவரைத் தோற்கடிப்பதுமுண்டு. படைப்பாளியின் வாழ்க்கை படைப்பைத் தோற்கடிக்கும் தருணங்களில் இதுவும் ஒன்று. அதேசமயம் மாறக்கூடிய படைப்பாளி தனது மாறாப்படைப்பை கடந்து புதிய உச்சங்களை நோக்கிப் போவதும் உண்டு. ஒரு கலை இலக்கியச் செயற்பாட்டாளரான இரவியும் ஒ…
-
- 3 replies
- 727 views
-
-
கோமகனின் தனிக்கதை - மதிப்பீடு அனோஜன் பாலகிருஷ்ணன் கோமகனின் தனிக்கதை சிறுகதைத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்குகின்றன. ஈழத்து வட்டார வழக்குடன் வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கற்பனை நுட்பத்துடன் கோமகனின் தனிக்கதைகள் இடம் பிடித்துள்ளது. பெரும்பாலும் எழுத்தென்பது வாழ்வின் சிக்கலானபோக்கை, அதன் தடுமாற்றங்களை இயல்பான போக்குடன் வாசகனுக்கு கொண்டு செல்வதினை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும். வாசகனின் வழமையான எதிர்பார்ப்புக்களை தகர்த்து நுட்பமாக பயணிக்கவேண்டும். நல்ல கதையென்பது படித்துமுடித்த பிற்பாடு வாசகனை அக்கதை சிறிதுநேரம் யோசிக்கவைக்கும். அதன் பாதிப்புக்கள் வாசகனைவிட்டு நீங்காமல் சிலநேரம் தொந்தரவு கொடுக்கவேண்டும். கோமகனின் இத் தொகுப்பில் சிலசிறுகதைகள் அதற்கான தன்மைய…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிட்னியில் வாங்கிய கத்தி Sydney Macquarie அங்காடியின் முதல் தளத்திலுள்ள மின்னூட்டும் தரிப்பிடத்தில் வாகனத்தை கொழுவிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தேன். வார விடுமுறைக்கு ஏற்ற வளமான கூட்டம். சிட்னியில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து சம்பவங்களால், அங்காடிக்குப் போவதில் அதிகம்பேருக்கு அச்சமிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், அப்படித் தெரியவில்லை. Dymocks புத்தக் கடைக்குள் சென்று, நான் வாங்கவிருந்த புத்தகத்தை எவ்வாறு கேட்பது என்பதை ஓரளவுக்கு மனதுக்குள் தயார் படுத்திக்கொண்டேன். புத்தக விற்பனை நிலையத்திலும் நல்ல கூட்டம். வரிசையில் நின்று எனது முறை வந்ததும், "சல்மா…
-
-
- 3 replies
- 847 views
-
-
வீழுமுன் சில வரிகள் - கப்டன்.வாமகாந்தன் Source :Sankathi
-
- 3 replies
- 2.7k views
-
-
01 பத்து மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கவிதைகள் நூலாக்கப்படவுள்ளதாக தெரிவித்து அதற்கு முன்னுரை தரவேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் தீபச்செல்வன். அப்போது நான் கிளிநொச்சியிலிருந்தேன். கிளிநொச்சியை நெருங்கியதாக யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. எனினும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் மின்சாரம் இருந்தது. ஒரு இடத்தில் இணைய வசதியும் கிடைத்தது. என்றபோதும் யுத்தத்தின் தீவிரம் எதையும் நிதானிக்க முடியாத அளவிற்கு நிச்சயமின்மையை உருவாக்கிகொண்டிருந்தது. அதைவிட எப்போதும் அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும் அபாய நிலை சடுதியாக மாறும் அல்லது வீழ்ச்சியடையும் சூழல். தீபச்செல்வனுக்கு ஒப்புக்கொண்டபடி அவருடைய கவிதைகளுக்கான முன்னுரையினை அனுப்ப முடியவில்லை. யுத்தம் திடீரென வேகமெடுத…
-
- 3 replies
- 4.5k views
-
-
சாகித்திய அகாதெமி விருது 2013 2013 ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஜோ டி குருஸ் - இன் 'கொற்கை' நாவலுக்குக் கிடைத்துள்ளது என்பதை வாசகர்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறோம்.
-
- 3 replies
- 3.1k views
-
-
[size=5]மின்வலையில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-711-5.html[/size] [size=5]Author: Dr.R.Niranjchanadevi[/size] [size=5]காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டியும் காவிரியின் இரு கரைகளையும் உயர்த்தியும் தமிழ்நாட்டின் நெற்குவியலுக்கு வித்திட்டவர் மாமன்னன் கரிகாலன். இலங்கையை வென்று, 12,000 சிங்களரைக் கைதியாகக் கொண்டுவந்து, கல்லணை கட்டுவதற்கு அவர்களையும் மற்ற மன்னர்களையும் ஈடுபடுத்தினான். காவிரி, கொள்ளிடம் இரு ஆறுகளும் பிரியும் இடத்திலும், மீண்டும் சேரும் இடத்திலும் உள்ள கரை மட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்து புரிந்துகொண்ட ‘புனல் நாடன்’ கரிகாலன் தகுந்த இடத்தில் பொருத்தமான கல்லணையைக் கட்டியது இந்தக் கால அணை வல்லுனர்களுக்கும் வியப்பை …
-
- 3 replies
- 1.7k views
-