Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. "பூமியில் மலைகளும் நதிகளும் எது வரை உள்ளதோ அது வரை மக்களிடையே ராமாயணம் நிலைத்து நிற்கும்" - ராமாயணத்தில் வால்மீகி முனிவர் 1-2-34 ராமபிரான் காலடியாகவே அயோத்தி முதல் ராம சேது தாண்டி இலங்கை வரை யாத்திரை புரிந்துள்ளார். அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம். அயோத்யா இது ராம ஜென்ம பூமி. ஹிந்துக்களின் புனித பூமி. துளஸிதாஸர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம் அளித்த ராம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம். வடக்கு ரயில்வேயின் வாரணாசி - லக்னோ மார்க்கத்தில் அயோத்யா ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியிலிருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும் லக்னோவிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. பக்ஸர் …

  2. மாயப் பொன்மான் மாயை என்னும் மான் நம் உடலில்- மனிதனின் உடலில் வசிக்கிறது. இது ஒரு தோற்ற மயக்கம். அது உண்மையில் அங்கு இல்லை; அது இருப்பதுபோல் தோன்றுகிறது. இத்தோற்ற மயக்கம் உங்களுக்குள் ஆசையை உருவாக்குகிறது. சீதை கேட்ட பொன்மானின் கதை உங்களுக்குத் தெரியும். சீதை காட்டில் தன் குடிசைக்கு வெளியே வந்து நிற்கிறாள்; அங்கு ஒரு பொன்மானைக் காண்கிறாள். இந்த கதையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொன்மான் என்பது உண்மையாக இருக்க முடியாது (அது மனதில் தோன்றும் ஆசை). ஆனால் சீதை , “ அந்த பொன்மான் எனக்கு எப்படியும் வேண்டும்.” என்று கேட்டாள் . இராமன் அவள் அவ்வளவு ஆசையுடன் கேட்ட பொன்மானை துரத்திக் கொண்டு காட்டுக்குள் போனார். இராமன் உங்களுக்குள் இருக்கும் சாட்…

  3. - பாவண்ணன் 'வழிமயக்கம்' என்ற தலைப்பில் பாலகுமாரன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அடுக்கப்பட்ட வாழைத்தார்களோடு சாலைவழியாக வண்டியை இழுத்துக்கொண்டு செல்வார் ஒரு வண்டிக்காரர். அதே சாலையில் ஓரமாக வேறொருவர் நடந்து செல்வார். அவருக்கும் வண்டிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இருவருமே வெவ்வேறு நோக்கங்களோடு தனித்தனியாகச் செல்கிறவர்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. எதிர்பாராதவிதமாக சந்திக்கிற நண்பரொருவர் பார்வையில் வாழைத்தார்களை வாங்கி வண்டியிலேற்றிவிட்டு கூடவே இவரும் நடந்துசெல்வதுபோலத் தோன்றுகிறது. என்ன விலைக்கு வாங்கினீர்கள், எங்கே வாங்கினீர்கள் என்றெல்லாம் கேட்கத் தொடங்குகிறார். நடந்துசெல்லும் நண்பர் குழப்பமும் கூச்சமுமடைகிறார். அது தன்னு…

  4. காஞ்சிபுர சிவத் தலங்கள் காஞ்சி மற்றும் காஞ்சி புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவத் தலங்கள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ள கோயில்கள் கச்சிநெறிக்காரைக்காடு புண்ணியகோடீசம் சிவாஸ்தானம் மணிகண்டீசம் சார்ந்தாசயம் அங்கீரசம் அத்திரீசம் - குச்சேசம் காசிபேசம் கௌதமேசம் பார்க்கவேசம் வசிட்டேசம் பராசரேசம் ஆதீபிதேசம் கருடேசம் பணாதரேசம் காயாரோகணம் சித்தீசம் அரிசாப பயந்தீர்த்ததானம் இஷ்டசித்தீசம் கச்சபேசம் சுரகரேசம் தான்தோன்றீசம் அமரேஸ்வரம் அனேகதங்காவதம் கயிலாயநாதர் கோயில் வீ…

  5. Started by sudalai maadan,

    புத்தர் ஞானமடைந்தபின் அவர் உறவினர் தேவதத்தன் அவருக்கு விஷமிட முயற்சி செய்தான். அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான். ஆனால் எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான். ஒருமுறை ஒரு மதம் பிடித்த யானையை புத்தரின் அருகில் ஏவி விட்டான். ஆனால் அது புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,கண்களை மூடிக் கொண்டது. சிலர் புத்தரைக் கேட்டார்கள்,''தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான். ஆனால் நீங்கள் அவனை ஒன்றும் செய்வதில்லை.ஏன்?அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?'' புத்தர் சொன்னார், ''என்னுடைய கடந்த காலச் செயல்களால்தான் இவை எல்லாம் நடக்கின்றன. கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன். அந்த கர்மசங்கிலித் தொடரின் பிரதிபலி…

  6. தூக்கில் தொங்கப் போகிறேன் என்று ஒருவன் போவோர் வருவோருக்கெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறான். அவனுடைய குரலை சிலர் கேட்கிறார்கள் பலர் கேட்கமலே போகிறார்கள். சட்டென அவன் தூக்கில் தொங்குகிறான், அவ்வளவுதான் கவனிக்காமலேபோன அனைவரும் அவனைக்காப்பாற்ற ஓடி வருகிறார்கள். இங்கு வாய் மொழி பெறத்தவறிய கவனத்தை அவனுடைய செயல் சட்டெனக் கவர்ந்துவிட்டதை உணர முடியும். உடல் மொழியே 80 வீதமான கவனத்தைத் தொடுவதாக உளவியலாளர் கூறுகிறார்கள். சாகப்போன ஒரு செயலுக்கு இவ்வளவு தாக்கம் இருக்குமானால் வாழ்க்கை முழுவதும் விநாடிக்கு விநாடி நாம் செய்யும் செயல்களுக்கு எவ்வளவு வலிமை இருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். தற்கொலை முயற்சி ஒரு குறுங்காலச் செயல், அந்த உயிர் தப்பினாலும், உயிர் போனாலும் அதன் மீதான கவனம் கு…

  7. "எவனால் நடக்கும் உலகம்?" (சயிலாதி) இத்தலைப்பு ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு சந்திர மண்டலத்தில் இறங்குவதர்கன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது. எவனால் நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது? என்ற வினாக்கள் எல்லாம் இன்றைய "நாகரிக" மாந்தரின் கவனத்துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத்தைக்குறிக்கோளாக�� �் உடைய நாஸ்திகமே. ரஷ்யா சென்று திரும்பிய இந்திய கல்வி அமைச்சர் திரு. சக்ளா. "What struck me most was that everywhere the…

  8. மதுரை: தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!. திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ? முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா? கடந்த 1956 ல…

  9. "மதமும் மரணமும்" [ சைவ மதம் / இந்து மதம்] உலகின் மிக பழமையான மதமான, சைவ / இந்து மதத்தின் படி, மரணம் என்பது இயற்கையானது. முற் பிறப்பிலே செய்த பாவ, புண்ணியத்தின் படி அல்லது அதன் கர்மாவின் படி, தொடர்ந்து உயிர் வாழ பல பிறப்புக்களை அல்லது மறுபிறப்புகளை ஒரு ஆன்மா [soul] எடுக்கும். ஒரு மனிதனை அவனுக்குள் இருந்து இயங்க வைப்பது ஆன்மா என்கிற இந்த இறைசக்தி (அல்லது சக்தி / ஆற்றல்) ஆகும். சக்தி கொள்கை என்ன சொல்கிறது தெரியுமா ? சக்தியாகிய ஆற்றல் என்பது அழிவற்றது. அது வேறு ஒரு ஆற்றலாக உருமாறுமே அன்றி அழிவு என்பது ஆற்றலுக்கு என்றுமே கிடையாது என்கிறது ["Energy can neither be created nor destroyed"]. உடலினின்று செயல் பட முடியாத ஒரு நிலைக்கு நோயினால் உடல் மிகவும் தளர்ந்து விட…

  10. இலங்கையில் வடமாகாணத்தில் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ளது. இவ்வூரின் தனித்துவத்தை உலகறியச் செய்யும் கோயிலாகும். இக்கோயில் திருமேனியார் மகன் பெரியதம்பியார் என்னும் காரணப்பெயர் பெற்ற வெங்கடாசலப்பிள்ளை என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இப்பெரியாருடைய கனவிலே சிவபெருமான் தோன்றித் தனக்கோரு கோயில் எடுக்கும் படி பணித்தார். இவர் பரம்பரையாக வந்த வயல் நிலங்களைப் பயிரிட்டுச் செல்வத்தைப் பெருக்கினார். 12 கப்பல்களை அமைத்து பட்டினத்துப் பிள்ளையார் போன்று கடல் வணிகஞ் செய்து பெரு வணிகனாகி இக்கோயிலை இந்தியாவிலிருந்து ஸ்தபதியார்களை வரவழைத்து பெரிய கோவிலாக அமைத்துக் கும்பாபிஷேகமும் செய்வித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆறுகாலப் பூசை நடைபெறுகிறது. பின்னர் கோவிலுக்கு ராஐகோபுரம் அமைக்கப்பட்டது. கோய…

  11. காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.. நூல் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடம் செய்யும் மயில்வாகனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வர வர வேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வ…

  12. பிப்.,18 - எறிபத்தர் குருபூஜை குடும்பம் மற்றும் தொழில் ரீதியாகவும், இன்னும் பல வகைகளிலும் நமக்கு எதிரிகள் இருப்பர். அவர்கள் நமக்கு செய்த கெடுதல்கள், மன்னிக்க முடியாத அளவில் கூட இருக்கும். இருப்பினும், அப்படிப்பட்டவர்களையும் மன்னிக்கும் பக்குவத்தைப் பெற வேண்டும் என்பதையே, எறிபத்தர் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. புகழ்ச்சோழ மன்னர், கரூரை ஆண்ட காலத்தில், அங்கு எறிபத்தர், சிவகாமியாண்டார் என்ற சிவபக்தர்கள் வாழ்ந்து வந்தனர். கரூரில் அருள்பாலிக்கும் பசுபதீஸ்வரரை தினமும் வணங்கி வந்தனர். சிவகாமியாண்டார், பசுபதீஸ்வரருக்கு தினமும் பூஜைக்குரிய பூக்களை பறித்துச் சென்று கொடுத்து, சிவ கைங்கர்யம் செய்து வந்தார். ஒருநாள், அவர் பூக்கூடை யுடன் வரும் போது, மன்னரின் பட்டத்து யானை, மதம…

    • 2 replies
    • 834 views
  13. -- பாலகார்த்திகா ஒரு நாள் காலைநேரம், ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது. ஒரு இளைஞன் ஒருவன், அலைகளினூடேயும், கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட்டது. அவன் அருகில் சென்றார். அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி, மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். "தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர். "ஐயா! வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது, அலை உள்வாங்குகிறது. எனவே, கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்து…

  14. ஜீவகாருண்ய ஒழுக்கம் (Part-1) சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம் - முதற் பிரிவு ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும். அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப…

    • 0 replies
    • 833 views
  15. கடவுள் சக்தி விதண்டாவாதம் Periyar Articles பகுத்தறிவு 1.9.1935 நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது, நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம். ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும், மனதினால் நினைத்த அக்கிரமங்களையும் பார்த்தும் ஒன்றுகூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக்கூறி, தண்டனை கண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம். நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது! அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு, எ…

  16. கார்த்திகை தீபத்திருநாள் நடத்துவது ஏன்? டிசம்பர் 04,2014 கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது, சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது என்கிறது. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதி…

  17. வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மகோற்சவத்திருவிழா நேற்று ஆரம்பம். (படங்கள்) வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நேற்று காலை விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந்த திருவிழாவின் முக்கிய அம்சமான கொடியேற்றம் சரியாக நண்பகல் 12 மணியளவில் சுபமுகூர்த்தவேளையில் இடம்பெற்றது. நேற்று முதலாம் நாள் கொடியேற்றத்திருவிழாவில் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அம்மன் அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 16 நாட்கள் நடைபெறவுள்ள இத்திருவிழாவில் எதிர்வரும் 21ம் திகதி சப்பரத்திருவிழாவும், 22ம்திகதி தேர்த்திருவிழாவும், 23ம்திகதி தீர்த்த உற்சவமும் இடம்பெற்று கொடிய…

  18. "தமிழர் சமயமும் அதன் வரலாறும் [ஒரு அலசல்]" / "An analysis of history of Tamil religion" - PART / பகுதி: 01 எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், …

  19. ஸ்ரீரங்கம் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றிய சில அரிய தகவல்களை இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம் 1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். 3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.4. ஸ்ரீரங்கம் கோவிலில் வ…

  20. சனாதனம், சனாதன எதிர்ப்பு ஜெயமோகன் jeyamohanSeptember 13, 2023 சனாதன தர்மம் பற்றிய உதயநிதியின் பேச்சு பற்றி என்னிடம் ஆங்கிலத்தில் எழுதும் கேரள இதழாளர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். என் கருத்துக்களைச் சுருக்கமாகச் சொன்னேன். அவை வெளியாயின. என் கட்டுரைகளில் எப்போதுமே வாசிப்பில் என்னென்ன குழப்பங்கள் உருவாகும் என ஊகித்து, அவற்றையும் கருத்தில் கொண்டு, முழுமையாகவும் விரிவாகவும் கருத்துக்களைச் சொல்லியிருப்பேன். ஏனென்றால் எல்லா கருத்துக்களையும் இங்கே திரித்துச் சிதறடித்துவிடுவார்கள். ஆனால் பேட்டிகளில் அவ்வாறு அமைவதில்லை. சுருக்கமாகவே அந்தக் கருத்து இருந்தது. என் கருத்தையொட்டி ஒரு விவாதம் உருவானதை அறிந்தேன் – நான் பயணங்களில் இருந்தமையால் அவற்றைப் பெரியதாக கவன…

    • 2 replies
    • 825 views
  21. சைவ சமயமும்... வாழைப் பழமும். எப்போதும் இறைவழிபாட்டுப் பொருட்களில் வாழைப்பழம் தவறாறு இடம் பெற்று விடுகின்றது. பழம் பாக்கு வெத்திலை தேங்காய் என்று சொல்லும் போது கூட அங்கே பழம் என்று சொல்லப்படுவது வாழைப் பழத்தைத் தான் குறிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படி என்ன பெருமை வாழைப்பழத்துக்கு இருக்கின்றது என்று இப்போது நான் சொல்லப் போகின்றேன். சைவ சமயம் பிறவி தான் எல்லாத் துன்பத்துக்கும் காரணம் அதனால் பிறவாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் தான் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றார் திருவள்ளுவர். எல்லாப் பழங்களும் திரும்பவும் மண்ணிலே நட்டால் கன்றாக முளைக்கும். ஆனால் வா…

  22. Started by ஏராளன்,

    நேர்மை தமிழில் வாய்மை, நேர்மை, உண்மை, மெய் போன்று பல சொற்கள் உள்ளன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கின்றது தொல்காப்பியம். அதே வேளையில் ஒரு சொல் ஒரு பொருள் என்பதுதாம் மொழியின் அடிப்படை. ஆகவே நாம் சொல்லுக்கும் சொல்லுக்குமான நுண்ணிய வேறுபாட்டை அறிந்து செயற்பட வேண்டும். அல்லாவிடில் பொருள்மயக்கம், பொருட்சிதைவு என்பன தோன்றி, பொய், பித்தலாட்டம், புரட்டு, திரிபுகளுக்கு ஆட்பட்டு வாழ்வியலே அப்படியானதாக ஆகிவிடும். வாய்மை, வாய்ப்புக்கு இடமளிப்பதை மட்டுமே சொல்லுதல். நேர்மை, சொல்லவந்ததை ஒளிவு மறைவின்றி நேரிடையாகச் சொல்லுதல். மெய், நடந்ததை, இடம் பெற்றதை மட்டுமே சொல்லுதல். பொய், நடந்திராததை, இடம் பெறாததைச் சொல்லுதல். உண்மை, நடப்பில் உள்ளதை மட்டுமே குறிப்ப…

  23. நம் தமிழர்கள்.. சைவர்களாயின் இறந்த மனித ஜீவனின் உடலை.. சுடலையில்.. தீயில் சங்கமிக்கவிடுவர். இதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன..??! சுடலை என்பது தகனம் செய்யும் இடம். இது ஊருக்கு வெளியே மக்கள் அதிகம் புழங்காத இடத்தில் இருக்கும். காரணம்.. இறந்தவர் ஏதாவது தொற்று நோய் கண்டிருப்பின் அது மற்றவர்களையும் அதிகம் பாதிக்காமல் இருப்பதற்காக இருக்கலாம். தகனம் செய்த பெரிய கூட்டத்தை அனுப்பவதில்லை. நெருங்கிய உறவுகள் சிலரே போவர். அவர்களும் தகனம் தொடங்கியதும் அங்கிருக்க அனுமதியில்லை. காரணம்.. மனித உடல் தகனமடையும் போது பல விதமான இராசயன வாயுக்கள் வெளியேறும். இதில் நேரடியாகச் சுவாசிக்கும் நச்சுத்தன்மை அமைய வாய்ப்புள்ள வாயுக்களும் அடங்கும்.. அதன் காரணமாக இருக்கலாம். மேலும் த…

    • 1 reply
    • 822 views
  24. மதம் பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பொதுவுடைமைவாதம்’ என்றும், தந்தை பெரியார் வெளிப்படுத்திய கருத்துகள் ‘பெரியாரியம்’ என்றும் கொள்ளப்பட்டு, அவைகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மதம் மதம் பற்றி மார்க்ஸோ, எங்கெல்ஸோ தனித்துப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. ஆனால் அவர்களின் படைப்புக்களில் ஆங்காங்கே மதம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். லெனின் மதம் பற்றி அதிகமாகப் பேசியும், எழுதியும் இருப்பதால் ‘மதத்தைப் பற்றி’ எனும் தலைப்பில் தமிழில் நூலாக வெளிவந்துள்ளது. ஆனால், தந்தை பெரியார் மதம் குறித்து பல கட்டுரைகள் எழுதியும், பல மேடைகளில் பேசியும் உள்ளதால், அவைகளெல்லாம் தொகுக்கப்பட்டு பல தொகுதிகளாக வெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.