சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
(நாக்கில் எச்சில் ஒழுக..)கடல்மட்டத்துக்கு கீழே வாழ்ந்து உயிர்த்தியாகம் செய்தவற்றின் கறிகள். இந்தப் பதிவுடைய முன்னைய பதிவு இங்கே உள்ளது. அதற்கு இத்தனை ஆதரவு வரும் என்று நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. தமிழனின் உணவு சார்ந்த பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றி விட்டோம் நாங்கள். உண்மையில் இந்தப் பதிவுகள் எங்களது கடந்த பலகால யாழ்ப்பாண சாப்பாட்டுக்கடை அனுபவங்களைப் பற்றிய ஒரு பகிர்வு. (அதுவும் முக்கியமாக சென்ற வருட நடுப்பகுதியில் எமது வலைத்தளப் பதிவர்கள் நால்வர் யாழ்ப்பாணத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்லும், அங்கெல்லாமுள்ள உணவுக் கடைகளில் சாப்பிடும் அனுபவத்தை பெற்றதால்.) எமக்கு தகுதியும், காலமும் வாய்த்தால், யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கங்கள் பற்றிய விரிவான பதிவை எழுதுகிறோ…
-
- 23 replies
- 3.8k views
-
-
இராவணனின் ராச்சியத்தில் உய்யலாலா..! யாழ் 'தமிழ் சிறி'யின் நீராகார 'வெள்ளி இரவு' முடிந்து, சனிக்கிழமையாக உதித்திருக்கும் இந்த நாள் இனிய நாள்..! இப்பொன்னாளில், உங்கள் மன்னனின் வாழ்க்கை பொன்பொழிகளை சற்றே கேட்டு இந்நாளை தொடங்குவோமா..? முள்ளிவாய்க்காலைவிட மிக மோசமான யுத்தம்..! இரத்தம் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக்கொண்டிருந்தது..!! எங்கு நோக்கினும் பிணக்குவியல்கள், அலறல்கள், உயிர்மூச்சுக்கள்..!!! போரில் தோற்று வீழ்த்தப்பட்ட இராவணன், தனது இறுதி கணங்களை நெருங்கிக்கொண்டிருந்தான்.. குருதிசகதிக்குள் அமிழ்ந்த இராவணன், மரண எல்லையில் வலியால் முனங்கிக்கொண்டிருந்தான்.. இராமன், இலக்குமணனை அழைத்தான்.. தமையன் சொல்லுக்கு எப்பொழுதும் கீழ்ப்…
-
- 23 replies
- 2.5k views
-
-
'என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய 'நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற 10 விதிகள்... 1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள். 2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள் மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய வி…
-
- 23 replies
- 2k views
-
-
பெண்கள்... பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் வீட்டை மாற்றிக்கொள்கிறார்கள் பிறந்த குடும்பத்தைவிட்டு பிரிகிறார்கள் உங்களோடு வாழ்க்கை பயணத்தை தொடர வருகிறார்கள் உங்கள் வீட்டை கட்டமைக்கிறார்கள் உங்கள் வாரிசை சுமக்கிறார்கள் உங்கள் குழந்தைகளால் அவளின் உடலில் மாற்றங்கள் இல்லற வாழ்வின் மாற்றத்தால் உடல் பருமனாகிறார்கள் உங்கள் குழந்தைகளை பிரசவிக்க வலியால் செத்து உயிர்மீள்கிறாள் உங்கள் குடும்ப பெயரை தன் குழந்தைக்கு சூட்டுகிறாள் அவளின் கடைசி மூச்சு வரை உங்களுக்கு அனைத்தையும் செய்கிறாள், சமையல், வீட்டை பராமரிப்பது, உங்கள் பெற்றோரை கவனிப்பது, குழந்தை வளர்ப்பு, சம்பாதித்தல், உங்களுக்கு ஆலோசகராக, நீங்கள் ஓய்வெடுக்க, உங்கள் உறவினர்களின் உறவை பேண இவையனைத்தையும் செய்கையில் தன்னை வருத்தி, பொலிவ…
-
- 23 replies
- 2.6k views
-
-
என்ரை தீபாவளி சின்னவயசிலை எங்கடை தீபாவளி சேட்டையளை எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு . உண்மையிலை இப்ப நினைச்சாலும் கண்ணுக்கை தண்ணி வரும் . நாங்கள் தீபாவளிக்கு முதல் நாளே லைற்றா தொடங்கீடுவம் , அடுத்தநாள் எந்தெந்த உடுப்புகள் போடுறது , ஆரோடை என்னென்ன விளையாட்டுகள் விளையாடிறது எண்டு . தீபாவளியை நினைச்சு அண்டு இரவே எங்களுக்கு நித்திரை வராது . அண்டிரவுதான் பலகாரச்சூடு அனல் பறத்தும் . எங்கடை அம்மாச்சி ஒரு கெட்டசாமன் . அந்தக் காலத்திலை அம்மாச்சி பிளவுஸ் போடாது . ரெண்டு காதிலையும் பெரிய தொக்கட்டான் தொங்கும் . என்னிலை செரியான பட்ச்சம் எண்டாலும் , எங்களை பலகாரச்சூட்டு நேரம் எதையாவது எடுத்து வாயிலை போட விடாது . நாங்கள்அதை உச்சிக்கொண்டு பலகாரங்களை லவட்டுவம் . மனிசி சிலநேரம் தூசண…
-
- 23 replies
- 3.6k views
-
-
வாழ்க்கையின் ஒரு புறம் நீங்கள் நிற்கிறீர்கள். மறுபுறம் வெற்றி நிற்கிறது. இரண்டிற்கும் இடையே இடைவெளி. இடைவெளியை நிரப்பி வெற்றியை அடைய உறுதுணை புரிவது எது? தலைவிதியா? கடின உழைப்பா? பெரும்பாலானோர் வெற்றி என்பது தலைவிதியையும், கடின உழைப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தால் வெற்றி பெறபல தன்மைகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அத்தகைய பல தன்மைகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம். ஆயிரம் மைல் தூரப் பயணம் கூட ஒற்றை, முதல் அடியுடன் தான் தொடங்கும் என்பதைப்போல முதல் அடியை எடுத்து வையுங்கள் உங்கள் வெற்றிக்காக…. பில்கேட்ஸும் கற்பனை சக்தியும்: நிஜத்தில் உணர்ந்திடாத ஓர் அனுப…
-
- 23 replies
- 14.9k views
-
-
மரணம் வளர்ச்சிக்கான ஒரு படிக்கல் மே 18, 2009ம் ஆண்டு எல்லாம் நடந்து முடிந்து விட்டதாக செய்திகள் அறிவித்தன. இந்த ஆண்டு, இந்த நாள் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாகும். ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்த இனவழிப்பு போர் முடிவூற்றதாக கூறிய நாள். உலகில் நடந்த போர்களில் இதைவிட அதிகமான மனிதர்கள் இறந்திருக்காலாம். ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் ஈழத்து மனிதர்கள் தொடர்ச்சியாக பல வருடங்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட நாட்களின் இறுதி நாள். பல மரணங்கள் நடைபெற்ற நாள். ஈழத் தமிழின அழிப்பு நடந்த நாள். பல இழப்புகளை சந்தித்த நாள். ஈழத் தமிழ் தேசம் முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழர்களுக்கு …
-
- 23 replies
- 2.9k views
-
-
திருமணம் ஆகாத ஒரு இளம் ஆண்.. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா..??! (சட்டப் பிரச்சனை தவிர்ந்த சமூகப் பிரச்சனை பற்றி கேட்கிறேன்.) ஆண் குழந்தையையா பெண் குழந்தையையா தத்தெடுப்பது நல்லது..?! எத்தனை வயதில் தத்தெடுப்பது நல்லது. வளர்க்க.. வளர்ப்பவரை புரிந்து கொள்ள.. ??! குறித்த குழந்தையை தத்துக் கொடுப்பவர் (அதன் உண்மைத் தாய் தந்தை மற்றும் சம்பந்தப்பட்டவர்கள்) பற்றி அறிந்திருப்பது அவசியமா..??! அல்லது வளர்ந்து தெரிந்து கொள்வது நன்றா..??! அல்லது தெரியாமல் வளர்வதே நன்றா..??! குழந்தைக்கு அறிவு வந்து சூழலை மதித்து அம்மா எங்கே என்று கேட்கும்..??! அந்த நிலை வராமல் அப்பா மட்டும் தான் என்று எப்படி ஊட்டி வளர்ப்பது.. குழந்தையின் உளத்தை எதி…
-
- 23 replies
- 12.1k views
-
-
எங்கள் உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் குடும்ப உறவுகளான தாத்தா, பாட்டி அம்மம்மா,அப்பப்பா என எல்லோரும் கூட இருப்பது ஒருவரம் என்று தான் இத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் பெரும்பாலும் புலம்பெயர்த்தோர் தம் பெற்றோரை நன்றாக வைத்ட்டுப் பார்க்கிறார்களா என்றால் பெரும்பாலுமில்லை என்ற பதில் தான் வரும். சாதாரணமாகப் பெண்கள் தம் பெற்ரோரைத் தம்முடன் வைத்திருப்பர். ஏனெனில் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதுக்குறைவு. ஆனால் மாமனாரைத் தம்முடன் வைத்திருந்தாலும் மாமியாரைத் தம்முடன் வைத்திருப்பதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் பெற்ற பெண்பிள்ளைகள் பலர் தமது பெற்றோரை வயதுபோன காலத்தில் நின்மதியாக இருக்கவிடாது தம் உதவிக்காகப் பெற்றோரை தம்முடன் வைத்திருப்…
-
- 23 replies
- 3k views
- 1 follower
-
-
பிள்ளை, விரும்பியதை படிக்க விடும் எண்ணம் என்னிடம் இல்லை. இதை பலர் எதிர்க்கலாம். பிள்ளை தான் விரும்பியதை படிச்சு போட்டு, திரும்பவும் என்னிடம் தான் வந்து கையை நீட்டிக்கொண்டு நிக்கும். பிள்ளை விரும்பியதை அறிந்து அது சார்ந்ததாக, அதாவது பிள்ளை எஞ்சினீர் என்றால், எந்த எஞ்சினீர்க்கு இலகுவாக நல்ல சம்பளத்துடன் வேலை எடுக்கலாம் என்று ஆராய்ந்து அதை படிக்க சொல்வது (வழிநடத்துவது) தான் பெற்றோர் கடமை. உதாரணமாக இலங்கயில் பலர் சிவில் எஞ்சினீர் படிச்சுபோட்டு, UK ல் கடைதான் போட்டு இருக்கினம். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர் படிச்சா பலர் நல்ல சம்பளத்தோட வேலை பாக்கினம்.
-
- 23 replies
- 2.8k views
-
-
பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம். பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை. தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அ…
-
- 23 replies
- 2.7k views
-
-
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்…
-
- 23 replies
- 3.2k views
-
-
விடுதலை என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளனவாயினும் விட்டு விடுதலையாதல் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே எம் புலன்களும் மனதும் ஆடக்கி ஆளப்படுகின்றன என நான் எண்ணுகிறேன். மனைவியிடமிருந்து, கணவனிடமிருந்து, பிள்ளைகளிடமிருந்து, காதலன் காதலியிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தன் பொறுப்பிலிருந்து விடுதலையாகி நின்மதியாக இருக்கவே பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அவ் அரிய நிலை பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதில்லை. நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தும்போது அதீதமாக அவர்பால் ஈர்ப்புக்கொண்டு அவரும் எம்மேல் அந்தளவு அன்பு கொண்டுள்ளார் என எண்ணி அவர்களுடன் உரையாடுவதைப் பேறாகவும் எண்ணி உரையாடிக்கொண்டிருப்போம். ஆனால் அன்பு என்பதும் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது என்பது…
-
- 23 replies
- 1.7k views
-
-
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது அவர்களது நன்மைக்காகத்தான்... என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!! FB
-
- 23 replies
- 5.8k views
-
-
மனசே சரியில்லை...பிறந்ததில் இருந்து இன்று வரை ஒன்றுமே சரி வருதில்லை...எடுத்த காரியம் எல்லாம் தடைபட்டு கொண்டு போகுது...என்ன செய்யலாம் என்றே தெரியல்ல...சின்னனில் இருந்து படிப்பு ஒழுங்காய் வரவில்லை...ஒரு மாதிரி தட்டு தடுமாறி வெளிநாடு வந்து தட்டு தடுமாறி வேலை எடுத்தால் அதிலையும் ஒழுங்காய் நிலைக்க முடியல்ல...மாறி,மாறி இரண்டு மூண்டு வேலை செய்து கடைசியில் அந்த வேலையும் போட்டுது...புது வேலையும் எடுக்கெலாமல் இருக்கு...பேசாமல் கல்யாணம் கட்டிட்டு செட்டில் ஆவோம் என பார்த்தால் ஒருதரும் மாப்பிள்ளை தாறங்களில்லை...தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு...சாக வேண்டும் என நினைத்தாலும் தற்கொலை செய்ய பயமாய் இருக்கு...என்ன செய்யலாம் என யாராவது ஒரு ஜடியா தாங்கோ...புண்ணியமாய் போகும்.
-
- 22 replies
- 9.3k views
-
-
இனிய வணக்கங்கள், இன்றுவரை இருபத்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள் தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்து உள்ளார்கள். இன்றுவரை லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தாயகவிடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை பறிகொடுத்து இருக்கின்றார்கள். இன்று தமிழர் தாயகத்தில் பாரிய மனித அவலம் நடக்கின்றது. காணும் இடம் எல்லாம் இரத்தமும் சதையுமாய் மனித உடல்கள் சீரழிந்து இருக்கின்றது. இந்த நிலமையில்... இன்றும்கூட... இப்படி நடக்கின்றது: ஓர் தாய் அதுவும் ஓர் மாவீரரின் தாய் சொன்னார் தனக்கு நல்ல சாதிக்கார மாப்பிள்ளைகள் மூன்றுபேர் தேவையாம்... யாரோ மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு. இங்கு விடயம் என்ன என்றால்... நான் அவரைக்குற்றம் கூற இல்லை…
-
- 22 replies
- 4.5k views
-
-
செக்ஸ் எகனாமி! - உலகை புரட்டிப் போடும் புதிய பொருளாதாரம் * பத்திரிகை ஆசிரியர் ஒருவர், நிருபரை அழைத்து செக்ஸ் வலைதளங்கள் குறித்து புலனாய்வு செய்து கட்டுரை எழுதச் சொன்னார்.ஆறு மாதம் போர்னோ வலைதளங்களைப் பற்றியும் அவர்கள் எப்படி பணம் ஈட்டுகிறார்கள் என்பதைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்த அந்த நிருபர் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். அதாவது ஓர் ஆண்டு அவர் சம்பாதிக்கும் பணத்தை ஒரே வாரத்தில் போர்னோ வலைதளங்கள் ஈட்டிவிடுகின்றன! அவ்வளவுதான். கட்டுரை கொடுப்பதற்கு பதில் தன் ராஜினாமாவைக் கொடுத்தார். முழுநேர போர்னோ வலைதளத்தை தொடங்கிவிட்டார்! இப்போது கலிபோர்னியாவில் மிகப் பெரிய மூன்று மேன்ஷன்களுக்கு அவர் சொந்தக்காரர்! ஒவ்வொன்றும் பல மில்லியன் டாலர்கள் விலைபோகும்! சத்தியமாக இது…
-
- 22 replies
- 9.3k views
-
-
மூன்று முட்டாள்கள் (3 idiots) என்ற பெயரில் வெளி வந்த ஹிந்தி திரைப்படத்தை அப்படியே முழுங்கி சங்கர் எடுத்த வாந்தியே.. பொங்கலுக்கு சில நாட்கள் முன் வெளிவந்துள்ள.. நண்பன் படம் ஆகும். அதில் விஜய்.. ஜீவா.. சிறீகாந்த்.. சத்யன்.. சத்யராஜ்.. இலியானா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் விஜயின் அறிமுகத்தில்.. ஒரு காட்சி.. ராக்கிங் (பகிடிவதை) என்று ரவுசரை கழற்றிப் போட்டு ஜட்டியில் நிற்பது..! ஆரம்பத்தில் புகுத்தப்பட்ட அந்த பழக்கம்... படம் முழுக்க வியாபித்து விடுகிறது. நண்பனுக்கு நன்றி சொல்லவும் ரவுசரை கழற்றிறாங்க.. அந்தளவுக்கு அது எல்லை மீறிப் போனதை காண முடிகிறது. ஆரம்பத்தில் அந்தக் காட்சி.. ராக்கிங்கின் கொடூரத்தை காட்ட செய்யப்படுகிறது என்று த…
-
- 22 replies
- 2.6k views
-
-
தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க... இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியாக அமைவது தாம்பத்தியம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தாம்பத்தியம் பெரிதும் உதவுகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும். தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு. தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சி…
-
- 22 replies
- 2.7k views
-
-
புலத்தில் பிறந்தவர்களும், வளர்ந்தவர்களும் -அவமானப்படும் விடயம் எனக்கு நடந்தது, என்னை சுற்றியிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு நடக்கும் ஒரு விடயம். (புலத்தில் பிறந்து வளர்பவர்கள், வளர்பவர்கள்) பிரச்சனை என்ன என்றால்? நாங்கள் தமிழ் கதைப்பது சரி ஆனால் யாழ்பாண தமிழ் கதைப்பதில்லாயாம்..அதாவது jaffna Slang . எனக்கு அதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. (சோழியன் அண்ணாட்டா கேட்டிருக்கன்...பதில் வந்ததும் மாற்றப்படும்) தமிழ்கதைத்தால் போதாதா? இப்படி சொன்னால், தமிழ் கதைக்கும் பிள்ளை நாளை தமிழ் கதைக்க கூச்சப்படும்...யாராவாது ஏதாவது சொல்வார்களோ என.. காலை முதல் மாலை வரை வெளியே பாடசாலை, வகுப்புகள் என்று இருக்கும் ஒரு பிள்ளை, தமிழ் கதைத்தாலே அது பாராட்டபட வேண்டிய விடய…
-
- 22 replies
- 4.6k views
-
-
கடந்த வாரம் என் கணவர் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது இன்னொருவரையும் ஏற்றிக்கொண்டு அவரின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டி இருந்தது. வானுக்குள் ஏறியவுடன் பெரிதாகச் சத்தம். கணவருக்கு விளங்கவில்லை. சைலென்சரில் ஓட்டை விழுந்துவிட்டுதாக்கும் என்று இருவரும் கதைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எமக்குத் தெரிந்த வாகனத்தைப் பழுது பார்ப்பவரிடம் போன் செய்துவிட்டு வாகனத்தைக் கொண்டுபோய்க் காட்டினால், அவர் வாகனத்தை ஓடிப் பார்த்த்துவிட்டு பின்னர் குனிந்து கீழே பார்த்துவிட்டு எழுந்தார். என்னக்கா, அண்ணை சைலென்சரை நடுவால வெட்டி வீட்டில வச்சிட்டு உங்களிட்டை வானைத் தந்துவிட்டவரோ?? என்று கேட்டபோதும் விளங்கவில்லை எனக்கு. அவர் ஒண்டும் செய்யவ…
-
- 22 replies
- 2k views
-
-
அனைவரிற்கும் அன்பு வணக்கம், கடந்தமாதம் எனது அப்பா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், பின்னர் அவரது மரணம் ஏற்பட்டபோதும், அவர் உடல்நலம் தேறி சுகமாக வீடு திரும்புவதற்கு பிரார்த்தனை செய்தும், பின்னர் அவர் இரண்டு கிழமைகளில் இறந்தபோது அனுதாபங்களையும், ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தும், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகைகளில் உதவிபுரிந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பிறப்பும், இறப்பும் நாம் மாற்றமுடியாத இயற்கையின் நியதி. அதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், வேறு வழியில்லை. ஆயினும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் அசுரவேகத்தில் முன்னேறியுள்ள இந்தக்காலத்தில் ஒருவரின் வயதை காரணம் காட்டி அவரை சரியாக கவனிக்காமல் வைத்தியசாலையில் உதாசீனம் செய்வது என்பது (Age discrimin…
-
- 22 replies
- 2.6k views
-
-
கடன் கடன் வாங்குவதும் கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. "இன்று பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழந்து, பணத்தேவையில் தவித்து வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வங்கியிடமிருந்து நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், மீண்டும் யாரிடம் கடன் வாங்கலாம் என்று தேடி அலைகிறார்கள். அவர்களில் ஒருவராக நம் நண்பரோ, உறவினரோ இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவி செய்ய முன்வந்தாலும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் சில முக்கியமான அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன். …
-
- 22 replies
- 2.9k views
-
-
அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம். சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெ…
-
- 22 replies
- 2.6k views
-
-
என் நண்பி இண்டைக்கு என்கிட்டே அழுது கொண்டே கேட்டதையே தலைப்பாக போட்டு உங்க கிட்ட கேட்கிறன்.. எனக்கு அவளுக்கு என்ன சொல்றது என்று தெரிய வில்லை SO உங்க கிட்ட ஆலோசனை கேட்பதற்காக இதை எழுதுறன் ... அவள் யாழ் இல் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் படிச்சு கொண்டு இருக்காள். வழமையாக தன் நண்பிகளுடன் சென்று வாறவள் இன்று நண்பி கோவிலுக்கு போனதால இவள் மட்டும் தனியாக நண்பகல் அளவில் வீடுக்கு வந்து கொண்டிருந்தாள். வீதியிலிருந்து வீடுக்கு திரும்புற ஒழுங்கைல திரும்ப முற்படும் போது பின்னால மோட்டார் சைக்கிள் வந்த ஒரு இளைஞன் படார் என இவள் முதுகில் அடிச்சு விட்டு போய் விட்டான் இவள் அதை எதிர்பார்க்கதால மிகவும் பயந்து விட்டாள் EVENING முழுக்க ஒரே அழுகை இரவு என் கிட்ட சொல்லி அழுதாள்... கடந்த …
-
- 22 replies
- 2k views
-