சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
-
- 25 replies
- 2k views
-
-
Carmen Carrera என்பவர் விக்ரோறியா சீக்ரட்டின் முதலாவது திருநங்கை மொடலாவர். இவர் அமரிக்காவிலுள்ள நியூஜெர்சி என்னும் இடத்தச் சேர்ந்தவர். பிறப்பால் Christopher Roman என்னும் ஆணான இவர் பெண்ணாக மாறி தற்போது விக்ரோறியா சீக்ரட்டின் பெண் மொடலாக வலம்வருகின்றார்!! http://www.cnn.com/video/data/2.0/video/living/2014/02/04/natpkg-orig-ancil-carmen-carrera-transgender-model-fashion.cnn.html
-
- 1 reply
- 5k views
-
-
அண்மையில், எனது நண்பி ஒருவர் டொராண்டோவில் ஒரு warehouse இல் புதிதாக தொடங்கிய அம்மன் கோவிலுக்கு கூட்டிச்சென்றார். சிறிய இடத்தில், இந்து சமயத்தில் எத்தனை சாமிகள் இருக்கோ அத்தனை சாமிகளையும் நாலாபக்கமும் வைத்திருந்தார்கள். அதைவிட ஊர் சாமிகளின் பெயரில் சிலைகள் அதற்கும் மேலாக ஊரில் புழக்கமில்லாத ஐயப்பன்சாமி சிலை அதற்கு ஏணிப்படி வேறு , அதைவிட சுத்தி கும்பிட இடமில்லாமல் காலுக்குள் இடறுப்படும் ஆயிரத்தெட்டு உண்டியல்கள், மேலும் கைகளுவுவதற்கு வாஸ்ரூம் போனால் அது இன்னும் ஒருபடி மோசம். கடைசியாக வெளியே வரும்போது கோவில் தொண்டர் ஒருவர் ஆளுக்கு ஒரு பிரசாத பெட்டியை தந்தார், நான் கையை பிசைந்து கொண்டு என் நண்பியை பார்த்து ஒன்று போதும் என்றேன், நண்பி என்னை முறைத்து பார்த்தார், உடனே நானும் வாங்…
-
- 3 replies
- 3.1k views
-
-
இன்னொருவரின் கட்டுரையின் தலைப்பினை எழுதியவர் அனுமதி இன்றி மாற்றி எழுதுவது Ethic இல்லையாயினும், நல்லதொரு பதிவு இன்னும் சிலரை சென்றடையட்டும் என்று தலைப்பில் அடைப்புக் குறிக்குள் 'பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளிடம்' என்பதை சேர்த்துள்ளேன்.: நிழலி பேசுவதற்கு என்ன இருக்கிறது? வா.மணிகண்டன் http://www.nisaptham.com/ புத்தகக் கண்காட்சியில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள் ஒரு கடையில் இருப்பதாகச் சொன்னார்கள். பார்த்துவிட்டு வருவதற்காகச் சென்ற போது அவரிடம் பேசுவதற்கு என்னிடம் எதுவும் இல்லை. எதைக் கேட்பது? அவரிடம் ‘நல்லா இருக்கீங்களா?’ என்பதை விடவும் அபத்தமான கேள்வி எதுவும் இருக்க முடியாது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் தனது மகனின் விடுதலைக்காக தேய்ந்து கொண்டிருக…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடந்த வாரம் என் கணவர் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது இன்னொருவரையும் ஏற்றிக்கொண்டு அவரின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டி இருந்தது. வானுக்குள் ஏறியவுடன் பெரிதாகச் சத்தம். கணவருக்கு விளங்கவில்லை. சைலென்சரில் ஓட்டை விழுந்துவிட்டுதாக்கும் என்று இருவரும் கதைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எமக்குத் தெரிந்த வாகனத்தைப் பழுது பார்ப்பவரிடம் போன் செய்துவிட்டு வாகனத்தைக் கொண்டுபோய்க் காட்டினால், அவர் வாகனத்தை ஓடிப் பார்த்த்துவிட்டு பின்னர் குனிந்து கீழே பார்த்துவிட்டு எழுந்தார். என்னக்கா, அண்ணை சைலென்சரை நடுவால வெட்டி வீட்டில வச்சிட்டு உங்களிட்டை வானைத் தந்துவிட்டவரோ?? என்று கேட்டபோதும் விளங்கவில்லை எனக்கு. அவர் ஒண்டும் செய்யவ…
-
- 22 replies
- 2k views
-
-
http://www.tubetamil.com/tamil-tv-shows/watch-zee-tamil-tv-shows/solvathellam-unmai-09-01-2014-zee-tamil-tv-show-solvathu-ellaam-unmai.html
-
- 3 replies
- 1.5k views
-
-
சில தலைமுறைகள் முன்னர் வரையில் குழந்தைகளுக்குக் கதைகள் ஏராளமாக எளிதாகச் சென்றடைந்தன. தினம் தினம் கதைகள் கேட்பார்கள், சுவையான, சுவாரஸ்யமான கதைகள். விடுமுறை நாட்களின் மாலைகளும் இரவுகளும் பாட்டி சொல்லும் கதைகளால் நிரம்பி இருக்கும். பாட்டியின் வழியே கதை கேட்க அத்தனை ஆர்வமாக இருப்பார்கள் பேரன் பேத்திகள். உணவு உண்ணும் பொழுதில் இருந்து ஆரம்பித்துவிடும் இந்தக் கூற்று, நிலாவினைக்காட்டி தூங்க வைப்பது வரையில் தொடரும். கதை கேட்பது பெரும்பாலும் கூட்டாகவே நிகழும். கூட்டுக்குடும்ப வாழ்வின் மிக முக்கியமான அம்சம் பாட்டிமார்கள் வழியே கடத்தப்பட்ட கதைகள் தான். பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா மற்றும் மாமன் பிள்ளைகள், பக்கத்துவீட்டுப் பொடிசுகள் என்று பாட்டி அருகே அமர்ந்து கதைக் கேட்கும் காட்சி…
-
- 10 replies
- 1.3k views
-
-
கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? ஒரு பிசினஸ் கூட்டம் அல்லது ஏதோ ஒரு கூட்டம் நடக்கிறது, அதில் பலர் கலந்து கொள்வார்கள், இதில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என கண்டுபிடிக்க வேண்டும். யார் என்ன பொசிஷன் என்று கூட்டத்தில் வெளிப்படையாக சொல்லாத நேரத்தில் யாரை தமது பேச்சால் திருப்தி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிகாரி அல்லது முடிவெடுப்பவர் வருவார், கூடவே சில அல்லக்கைகள் கூட வருவார்கள், கூட வருகின்ற கைகள் பல கேள்வி கேட்பார்கள், அதிகாரி அமைதியாக இருப்பார், அல்லது அதிகாரி நூறு கேள்வி கேட்பார் அல்லக்கைகள் அமைதியாக இருப்பார்கள். ஒரு கூட்டத்தில் ஒருவர் 100 கேள்வி கேட்பார், இன்னொருவர் ஒரே ஒரு கேள்வி கேட்டிருப்பார், நூறு கேள்விக்கு பதில் அளித்து…
-
- 2 replies
- 930 views
-
-
வா.மணிகண்டன் http://www.nisaptham.com/ ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது வகுப்பிற்கு லீடராக இருந்தேன். அப்பொழுது பெரிய பஞ்சாயத்தெல்லாம் இல்லை. ‘யார் லீடருக்கு நிக்குறீங்க?’என்று க்ளாஸ் டீச்சர் கேட்பார். எழுந்து நிற்கும் இரண்டு மூன்று பையன்களில் அவருக்கு யாரைப் பிடிக்குமோ அவன்தான் லீடர். லீடர் ஆகிவிட்டால் சில சாதக அம்சங்கள் உண்டு. யாராவது ஒரு பையனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டால் வீட்டில் விட லீடரைத்தான் அனுப்புவார்கள். அவன் வீடுவரை செல்வதும் திரும்பி வருவதுமாக அரை நேரத்தை ஓட்டிவிடலாம். வகுப்பின் வருகைப் பதிவேடு மொத்தமும் லீடர் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதால் அவ்வப்போது சாக்லெட், கம்மர்கட்டுகளாக காலம் கும்மாளமாக நகரும். அதைவிட முக்கியம் வீட்டுப்பாடம் எழ…
-
- 6 replies
- 1.3k views
-
-
f69d4a47715c9d4b0096660b5abc65c7
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? எதிர்காலத்தை பற்றிய கனவு எல்லோருக்குமே இருக்கிறது. அத்தனை கனவுகளையும் நனவாக்கிட அடிப்படையாக ஸ்திரமான வேலை தேவை. இன்றைய நிலையில் வேலைச்சூழல் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப நாம் திட்டமிட்டால்தான் நிரந்தர வேலையைப் பெற்று நிம்மதியாக வாழ முடியும். வேலை சார்ந்த திட்டமிடுதல் பற்றி இந்த கட்டுரையில் விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார். எப்படியும் நல்ல பணிவாய்ப்பை பெற வேண்டும் என்றே பலரும் எண்ணுகின்றனர். தொடர்ந்து அனுபவத்தையும், கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டு பணியையும், சமூக அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவது…
-
- 0 replies
- 2.4k views
-
-
தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பெறுகின்றது. இத் திருநாளை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது. இவ் விழா சங்க காலத்தில்; வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும் (வெய்யிலையும்), காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்தகால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தம…
-
- 0 replies
- 3.6k views
-
-
இந்த வருசமும் நான் விடுறதா இல்லை ,யாருடைய தலையிலாவது அடிச்சு சத்தியம் பண்ணி புதுவருச சத்தியப்பிரமாணம் செய்யுற முடிவோடதான் இருக்கிறேன் .பெரிசா ஒண்டுமில்லை இப்ப நாலஞ்சு வருசமா எனக்கு நானே சொல்லுற விசயம்தான் . உடம்பைக் குறைக்க வேணும் தொன்னூற்றி மூண்டு கிலோ எண்டது உங்களுக்கு சின்ன விசயமா தெரியலாம் .ஆனா அதை தூக்கி திரியுற எனக்குத்தான் தெரியும் அதின்ர பாரம் .வழமை போலவே மனுசி ஒரு பார்வை பாத்தா இதெல்லாம் நடக்கிற விசயமா எண்டு . ஆனாலும் நான் முடிவோடதான் இருக்கிறேன் .வயசு கூடக்கூட வாழ்க்கை உயிர்ப்பயமும் மெல்ல மெல்ல எட்டிப்பாக்குது ,கடமை ,கண்ணியம் எண்டு இருந்திட்டு முத்திப்போன நேரத்தில கலியாணம் கட்டினதின்ர அருமை பெருமையாய் ரெண்டு சின்னனுகளும் காலுக்க நிக்க…
-
- 52 replies
- 4.4k views
- 1 follower
-
-
என்னடா இவன் லூசன் போல ஒரு தலைப்பை கொண்டு வந்திட்டான் ...ஏறிட்டிதாக்கும் ........நினைக்கிறீங்க .அது தவறு ................. அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் பொறுப்புக்கள் ,பிரச்சனைகள் இவற்றிற்கு முகம் கொடுத்து வாழ்க்கை என்னும் சக்கரத்தை வெற்றி கரமாக சுழல வைத்து ,மேலும் மேலும் வேகமாக சுழல வைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு தியாகங்கள் ,பல புரிந்து சொந்த சுமையை சுமந்து அன்றாடம் மன உழைச்சல்களை சந்தித்து ........வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன் ................. அவனுக்கு ஓர் ஆறுதல் ,அன்பு ,அரவணைப்பு தேவை இவை அனைத்தும் இருந்தும் அவனுக்கு அதற்கு மேல் ஓர் இளைப்பாறல் தேவை ,தனது முழு மன அழுத்தத்தையும் ஒரு சில கணங்கள் மறக்க நினைக்கிறான் ................அது தவறா ??????? அது தவறு இ…
-
- 53 replies
- 6.7k views
-
-
பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள். கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. 1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் 1960 களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது. காரணங்கள்: இதற்குக் காரணம் என்ன? - பலரும் பலவாறு ஊகிக்கிறார்கள். அடிப்படைக் காரணம் முற்றும் புதியதான வாழ்க்கை முறைதான் என நம்பப்படுகிறது. போஸாக்கான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது. இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியு…
-
- 1 reply
- 3.1k views
-
-
புது வருடத்தோடு பலர் பல உறுதிமொழிகளை எடுத்துக் கொள்வார்கள். குடிப்பதில்லை, சிகரெட் பிடிப்பதில்லை, சூதாடுவதில்லை, சீட்டுப்பிடிப்பதில்லை, இப்படிப்பல.... நானும் நாற்பது ஆண்டுகள் திருமண வாழ்க்கையின் பின்பாக, இப்புது வருடத்திலிருந்து என் மனைவியுடன் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி வாழுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். மனது புண்படும்படி பேசக் கூடாது. கோபப்படக்கூடாது. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது. பலர் முன் திட்டக்கூடாது. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க …
-
- 21 replies
- 1.9k views
-
-
நீங்கள் மாற்றுத் தந்தையாக இருக்கும் நிலை ஏற்படுவது ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் தான். மாற்றுத் தந்தையாக இருப்பதென்பது ஒரு புதிய குழந்தையை பெற்றெடுத்து தந்தையாக மாறுவதில் இருந்து முழுவதும் மாறுபட்டதாகும். நீங்கள் தந்தையாக இருப்பதை விட இதில் சந்திக்கும் சவால்கள் அதிகம். புதிதாக பிறந்த குழந்தையை ஒரு தந்தையாக வளர்க்கும் போது, அந்த உறவு இயல்பாகவும், சுமூகமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் ஒரு மாற்றுத் தந்தையாக வேறு ஒருவரின் இடத்தை பூர்த்தி செய்ய முயலும் போது, இதுவரையிலும் தங்கள் தந்தையுடன் இருந்து வந்த, குழந்தைகளை கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டும் மற்றும் அவர்களுடைய உண்மையான தந்தையுடனான உறவை மதிக்க வேண்டும். அவர…
-
- 0 replies
- 617 views
-
-
எங்கு இதைப் பதிவது என்று சரியாகத் தெரியவில்லை, சரியான இடத்திற்குத் தயவுசெய்து நகர்த்திவிடவும். நன்றி! 12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக. மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….) மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால…
-
- 10 replies
- 2.8k views
-
-
உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே… உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது? அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்! ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை! நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது… அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
(written by Dr. Stephen Carr Leon) – Translated by Ranjani Narayanan தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த த…
-
- 9 replies
- 2k views
-
-
அண்மையில் கோயிலில் ஒரு வயோதிபரை சந்தித்தேன்.அவருக்கு சுமார் 50லிருந்து 60ற்குள் இருக்கலாம் என நினைக்கிறேன்.அவர் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாடினார் நான் பதிலுக்கு அவருடன் தமிழில் கதைக்கும் போது அவர் சொன்னார் தான் தமிழன் எனவும்,தான் யாழை சேர்ந்தவர் எனவும் சின்ன வயதில் 58ம் ஆண்டு இனக் கலவரத்தின் போது தனது பெற்றோர் கொல்லப்பட தான் நாட்டை விட்டு வெளியேறிதாகவும் தன்னோடு தமிழில் கதைப்பதற்கு ஒருவரும் இல்லாத படியால் தன்னால் தமிழில் கதைக்க முடியாது எனவும் ஆனால் கொஞ்சம்,கொஞ்சம் விளங்கிக் கொள்ள முடியும் எனவும் சொன்னார்.தனக்கு தமிழ் கதைக்கவும்,தமிழரோடு பழகவும் ஆசையாய் உள்ளதாக சொன்னார். எனது நண்பி சொன்னார் அவர் லண்டனில் இருந்து தூரத்தில் இருக்கிறார்.அவவுக்கு தெரிந்த தாத்தாவும்,பாட்…
-
- 25 replies
- 3k views
-
-
மரணம் என்பது ஒருமுறை தானா! வாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ! ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ! என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான். எனக்கொரு கேள்வி நாம் வாழ்க்கையில் ஒருமுறை தான் மரணத்தை தழுவுகிறோமா என்பதே! ஒருவர் ஒரேடியாகவா மரணம் அடைகிறார்? நாம் ஒரேயடியாக மரணம் அடைவதில்லை ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறோம் என்று ரோசி ஃபிலிப் என்பவர் கூறுகிறார். நம் காதலை ஒருவர் புறக்கணிக்கும…
-
- 7 replies
- 3.6k views
-
-
பேய்................................ மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர். எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா? * பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம். * பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. * பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல்…
-
- 5 replies
- 1.3k views
-
-
பொறுமை கடலினும் பெரிது. பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் – பெஞ்சமின் ஃப்ராங்கிளின். ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது ! இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்ற…
-
- 0 replies
- 735 views
-
-
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! பொதுவாக திருமணம் என்று வரும் போது, நிறைய பேர் பெண்கள் தான் அதிகம் தியாகம் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் பெண்களைப் போலவே ஆண்களும் ஒருசில முக்கியமானவற்றை இழக்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், எப்படி பெண்கள் திருமணத்திற்கு பின் பெற்றோர்கள், தோழிகள் மற்றும் பலவற்றை இழக்கிறார்களோ, அதேப் போன்று ஆண்களும் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தரும் சிலவற்றை இழக்கின்றனர் என்பதை விட தியாகம் செய்கின்றனர் என்ற சொல்லலாம். ஆனால் இப்படி இழப்பதை அவர்கள் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அப்படி வெளிக்காட்டினால், பின் திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷம் மற்றும் ஆரோக்கியம் போய்விடும் என்பதால் தான். குறிப்பாக உலகிலேயே இந்திய…
-
- 60 replies
- 7.3k views
-