சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
எனது நண்பர்கள் விமான பராமரிப்பு தொழில் நுட்பத்தில் aircraft maintance engineering (டிப்ளோம) முடித்து உள்ளார்கள் அவர்கள் தங்கள் மேற்படிப்பை தொடருவதற்கு (degree) விரும்புகிறார்கள்.அவர்களின் முதல் தெரிவாக கனடா உள்ளது .ஏனெனில் அவர்களின் உறவுகள் அநேகம் பேர் கனடாவில் உள்ளார்கள். கனடாவிற்கு student விசா விண்ணப்பிபதற்கான நடை முறைகள் என்ன .sponcer எவ்வளவு காட்டனும் ..எவ்வளவு காலத்திற்கு இது இருக்கணும் ..நகரத்தில் உள்ள பல்கலை கழகத்திற்கு apply பண்ணுவது சிறந்ததா?or நகரத்திற்கு வெளில விண்ணப்பிப்பது சிறந்ததா? AIRCRAFT MAINTANECE இல் அவர்கள் படித்தது MECHANICAL இதே துறையில் ELECTRONIC (avionics engineering டிப்ளோம )படிப்பதற்கு APPLY பண்ணலாமா?APPLY பண்ணினால் பிறகு VISA INTERVI…
-
- 4 replies
- 1.4k views
-
-
நேற்று தனது 89ம் வயதில் தொடர்ச்சியாக 12வது தடவையாக 76% பெருன்பான்மை வாக்குகள் மூலம் கனடாவில் உள்ள ஓர் பிரபல நகரமாகிய Mississaugaஇல் Hazel McCallion அவர்கள் மீண்டும் நகரபிதாவாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். அண்மையில் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருப்பினும், ஊடகங்கள் இவர்பற்றி பலவிதமாக கருத்துக்கள் கூறினாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீண்டும் நகரபிதாவாக சேவை செய்வதற்கு தனது 89வது வயதில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வாழ்த்துகள் கூறும் அதேவேளை... இவரை பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தமது முன்னோடியாக கொள்ளலாம் என்றும் கூறத்தோன்றுகின்றது. உயிர்ப்புடன் சவால்களை சந்தித்து சாதிப்பதற்கு வயது ஓர் எல்லை இல்லை. தகவல் மூலம்: Wikipedia
-
- 2 replies
- 960 views
-
-
கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி - அ.ஞா. பேரறிவாளன் - மரண தண்டனைச் சிறைவாசி - த.சி.எண். 13906 - நடுவண் சிறை, வேலூர் - 2 அன்புக்குரியீர், வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன். எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநில…
-
- 0 replies
- 1k views
-
-
எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனக்கு எப்ப 65 வயது வரும் என்று அவசரப்படுகிறார் ஏன் என்றால் ஓய்வூதியம் எடுப்பதுக்காம் அவனவன் எவளவு காசை கொட்டியாவது எப்படி இளமையை தக்க வைக்கலாம் என்று அல்லாடுறான். அதுக்குள்ள இப்படியும் சிலமனிதர்கள் போற போக்கில எங்கட சனம் காசுக்காக இன்னும் என்னென்ன செய்யுமோ
-
- 21 replies
- 2.7k views
-
-
ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் கேட்டிருப்பார் நீ என்னவா வர விரும்புகிறாய் என்று.. நாங்களும் டாக்டர்.. இஞ்சினியர்.. எக்கவுண்டன்.. இப்படி எப்படியோ எல்லாம் சொல்லி இருப்பம். என்னை கேட்ட போது நான் ஒரு விஞ்ஞானி ஆகனும் என்று சொன்னதாக நல்ல ஞாபகம். அதன் படி ஒரு உருப்படியான விஞ்ஞானி ஆக முடியல்லை என்றாலும் அத்துறையில் கொஞ்சம் படிக்க முடிந்திருக்கிறது. இடையில் வெவ்வேறு தலைப்புக்கள் மீது மோகம் ஏற்பட்டிருந்தாலும் இப்போ எல்லாம் எனக்கு CEO (Chief executive officer) என்ற தொழில் தலைப்பு மேல் ஆசை முளைத்திருக்கிறது. (அப்பிள் நிறுவனத்தின் CEO க்கு வழங்கப்படும் முன்னுரிமை இத்தலைப்பு மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.) இப்படி உங்களையும் நிச்சயம் சில தொழில் தல…
-
- 46 replies
- 5.6k views
-
-
நட்பு அல்லது தோழமை என்டால் என்ன?...நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?...நட்பு என்டால் விட்டுக் கொடுத்தல் என்டு நான் கருதுகிறேன்...பரஸ்பரம் புரிந்துணர்வு,ரகசியம் காத்தல்,விட்டுக் கொடுத்தல் இல்லாமல் இருவர் அல்லது பலர் நண்பர்களாக இருக்க முடியாது...நண்பர்கள் இரு வகைப்படும்1)நண்பர்கள் நாங்கள் பாடசாலையில் படிக்கும் போதோ,அலுவலகத்திலோ அல்லது பக்கத்து வீட்டிலோ வசிக்கும் எம் வயதை ஒத்தவர்கள்...சில விடயங்களில் எமக்கு உதவி இருப்பார்கள்...எமக்குப் பிடித்தது சில இவர்களுக்கும் பிடித்திருக்கும் 2)உயிர் நண்பர் இவர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவீர்கள்...எதையும் மறைக்க மாட்டார்கள்...ரகசியம் காப்பார்கள்...இருவரது ரசனையும் பல விடயங்களில் ஒத்துப் போகும்...அவர்க…
-
- 13 replies
- 6.8k views
-
-
1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும்கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை. 2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாகஇருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம்அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும். 3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள்.உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம்திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களைவசீகரமானவர்களாக மாற்றும். 4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.…
-
- 8 replies
- 1.5k views
-
-
நாங்கள் அனைவரும் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை காணப்படாவிடினும் பிறப்பின் அடிப்படையில் ஏதோ மதத்துடன் அல்லது மதங்களுடன் மற்றும் சாமியார்களுடன் எங்கள் வாழ்க்கையில் இணைக்கப் பட்டுள்ளோம். ஒவ்வொரு சாமியார்களினதும் உண்மையான உள்நோக்கங்கள் எவை என்பதை நாம் கண்டறிவது கடினம். ஆயினும், மக்களை வசீகரிப்பதற்காகவும், அவர்களை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதற்காகவும் வெவ்வேறு சாமியார்கள் வெவ்வேறு விதமான நுட்பங்களை கையாள்கின்றார்கள். இவற்றில் முக்கியமான ஒன்று மீண்டும் மீண்டும் தமது உரைகளில் – பிரச்சாரங்களில் சாவு – நோய் – தோல்வி – பிரச்சனை – வேதனையின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்வதாகும். ‘மூளைச்சலவை எனும் உத்தியை அரசியல்வாதிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும…
-
- 8 replies
- 1.3k views
-
-
ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய பிரச்சினையை மற்றவரால் நிச்சயமாக முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. தலைவலியும் திருகுவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்! பிரச்சினையில் ஒருவர் இருக்கும்போது, மற்றவர் சொல்லும் சமாதான எந்த அளவிற்கு ஆறுதல் தரும் என்பது, பிரச்சினையின் வீரியம் மற்றும் ஆறுதல் சொல்லும் நபரை பொறுத்தது! ஆனால் அதிலிருந்து மீண்டு வருதல் என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. வாய்ப்புகள் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லையென்றால் யாராலும் பிரச்சினையிலிருந்து மீள்வது கடினம்தான். ஒரு உண்மைக் கதை. ஒரு இளைஞன். அவன் விருப்பப்பட்ட படிப்பு சில காரணங்களால் தடைபட்டது. அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அவனை வீட்டி…
-
- 9 replies
- 1.6k views
-
-
வெற்றி பெற வேண்டுமா? -விவேகானந்தர் வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு. காந்தியடிகளும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர். அவரவர்க்கு ஏற்ற வழிகளையும், தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றி வேண்டுமா உங்களுக்கு? அப்படியானால் இப்படி செய்யுங்கள் என்று விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போமா... அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம். அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக…
-
- 0 replies
- 853 views
-
-
அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும் கடந்த வாரத்தின் ஒரு மதிய வேளையை வீட்டில் செலவழிக்க நேர்ந்தது, அப்படியே ஆயா பார்க்கும் சீரியலையும். ஒரு பெண்ணை காணோமென்று அவளது அப்பாவும், கணவரும் பதைபதைத்ததோடு , அப்பெண்ணை நீதான் துரத்தி விட்டாயென்று இன்னொரு பெண்ணையும் தூற்றிக்கொண்டிருந்தனர். முன்கதை சுருக்கம் கேட்டதில், வாடகைத்தாய் அந்த வீட்டிற்கு வந்துவிட சொந்தத்தாய்(?) வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். (அல்லது சிச்சுவேஷன் மாறியிருக்கலாம்.) வாடகைத்தாய்க்கும் சொந்தத்தாய்(?)க்கும் நடக்கும் பிரச்சினைதான் கதை போலிருக்கிறது. சீரியலின் பெயர் அத்திப்பூக்கள். வாடகைத்தாய் என்பவர் கருவை வாடகைக்குச் சுமந்து பெற்றெடுத்தவர். சொந்தத்தாய் என்பவர் கருவிற்கான முட்டைய…
-
- 0 replies
- 774 views
-
-
இது கூட தீவிரவாதம்தான் ஈவ் டீசிங் என்பது எதற்க்காக எங்கே ஏன் ஏற்ப்பட்டது என்பதைப் பற்றி யோசிக்கும் முன்பு இதன் பாதிப்பு மரணம் தற்கொலை என வேகமாகிவிட்டது. கிராமப்புறங்களில் பெண்களை ஆண்கள் கேலி செய்யும் வழக்கம் உண்டு, சிலருக்கு அடுத்தவரை கேலி செய்வது கிண்டல் செய்வது என்பது கைவந்த கலை, கேலி செய்பவர் பெண்ணாகவும் கேலி செய்யப்படுபவர் ஆணாகவும் இருப்பது கூட கிராமப்புறங்களில் உண்டு ஆனால் இவ்வகைப் பெண்கள் திருமணமானவர்களாகவும் மிகவும் தைரியசாலிகளாவும் இருப்பதுண்டு. ஒரு இளம் பெண் அல்லது இளம் ஆணை கிண்டல் செய்வது என்பது கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி எங்கும் காணப்படுகின்ற பொதுவுடைமை என்று கூட சொல்லலாம். இளம் ஆண்களை சற்று வயது முதிர்ந்த ஆண்களோ சம வயது ஆண்களோ கிண்டல் கேலி செய்வத…
-
- 0 replies
- 966 views
-
-
திருமணமாகாத இளம்பெண்கள், திருமணமான ஆண்களை ஏன் காதலிக்கிறார்கள்? ஜி. ஆர். சுரேந்தர்நாத் இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தவுடனேயே எனது மனைவி மிகவும் பரபரப்பாக, "ரமலத் உண்ணாவிரதம் இருக்கப்போறாங்களாமே? " என்றாள். நான் குழப்பத்துடன், "ரமலத் யாரு?" என்றேன். "காந்தி யாரு?" என்று நான் கேட்டது போல் என்னை முறைத்துவிட்டு, "ரமலத் யாருன்னு தெரியாதா? அப்புறம் பேப்பர், புக்ல எல்லாம் என்னத்ததான் படிக்கிறீங்க? ரமலத், பிரபுதேவாவோட ஒய்ஃப்." என்றாள். என் மனைவியின் பொதுஅறிவு வீச்சைக் கண்டு எனக்குப் புல்லரித்துப்போனது. ~~ஏன் உண்ணாவிரதம் இருக்காங்களாம்?" என்றேன். "பிரபுதேவா நயன்தாராவ லவ் பண்றத வெளிப்படையா சொல்லிட்டாராம். அதுக்கு எதிர்ப்பு…
-
- 8 replies
- 2.5k views
-
-
படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி செலவிடும் போதே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது புதன், 6 அக்டோபர் 2010( 17:53 IST ) ஏழையாக இருப்பவனைவிடப் பணக்காரனாக இருப்பவனால் நல்லவனாக, விவேகமுள்ளவனாக, புத்திசாலியாக, ஈகைக் குணம் உடையவனாக இருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டமானதாகும். ஈகைக் குணத்திலும் நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒருவகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்புதமான ஒரு பற்று. நான் உறுதியாகக…
-
- 4 replies
- 1.1k views
-
-
டேய் பட்டாபி பட்டாபி இறந்த பத்தாவது நிமிடத்தில் சித்திரகுப்தன் எதிரில் நின்றான். சித்திரகுப்தன் பட்டாபியின் கணக்குப் புத்தகத்தைத் திறந்தபடியே கேட்டார். "அப்பா, அம்மா இருவரில் யாரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்..?". பட்டாபி லேசான வெறுப்புடன் பதில் சொன்னான். "எனக்கு ரெண்டு பேரையுமே பிடிக்காது..!". சித்திரகுப்தன் அடுத்த கேள்வியைக் கேட்டார். "உனக்கு மனைவியைப் பிடிக்குமா இல்லை குழந்தையைப் பிடிக்குமா...?" பட்டாபி சுவாரஸ்யமே இல்லாமல் கூறினான். "ரெண்டு பேரையுமே பிடிக்கததாலதான் நான் என் மனைவியை டைவர்ஸ் பண்ணி, குழந்தையையும் அவ கூடவே அனுப்பிட்டேன்...!". சித்திரகுப்தன் தொடர்ந்தார். "நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா...?". பட்ட…
-
- 4 replies
- 1.1k views
-
-
கடந்த வாரத்தில் ஒரு நாள் நான் லண்டனில் உள்ள லூசியம் பகுதியில் ஒரு உணவு விடுதிக்கு போயிருந்தேன். அங்கு நடந்த சம்பவம் என் மனசை பெரிதும் பாதித்திருந்தமையால் நான் எப்படியும் அந்த சம்பவத்தை எழுதி இந்த பகுதியில் இணைக்க வேண்டும் எண்ணி இருந்தேன். நான் பார்த்த சம்பவம் மாதிரி நிச்சயம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும், உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வையுங்கள்... மற்றவர்களுக்கு உதவியாகவே இருக்கும்... வெளி நாட்டில் இருக்கும் சனம் பலர் இப்படி கஸ்ரப்படுகிறார்கள் என்று மற்றவர்களுக்கும் தெரியவேண்டும்... அறுபது வயசு மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், முப்பத்தைஞ்சு வயசு மதிக்கத்தக்க ஒரு மனிதனிடம் ( அதாவது அந்தக்கடையின் முதாளியிடம்) கெஞ்சி கொண்டிருந்தார். …
-
- 51 replies
- 5.1k views
-
-
-
- 0 replies
- 861 views
-
-
கூச்சத்தை நீக்க சில வழிகள் பொதுவாக நம்மில் பலருக்கு முக்கியமான சந்திப்புகளின் போது புதிய நபர்களை அணுகுவதில் பிரச்னை எழுகிறது. இதனால் நல்ல வாய்ப்புகளை நாம் இழக்க நேரிடுகிறது. எடுத்துக்காட்டாக நேர்முகத்தேர்வின் போதும், வியாபார சந்திப்புகளின் போதும் கூச்சத்தால் நாம் பல வாய்ப்புகளை இழக்கிறோம். இதனால் நமது வளர்ச்சி தடைபடுகிறது. புதிய நபர்களை சந்திக்கும் போது ஏற்படும் கூச்சத்தால் அசௌகரியமாக உணர்கிறோம். கூச்சத்தை போக்குவதற்கான சில வழிகளை நாம் இங்கு காண்போம். உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள்: ஒரு செயலை தங்களால் செய்து முடிக்க முடியும், என உங்களுக்கு நீங்களே ஒத்துழைப்பு கொடுங்கள். இதன் மூலம் தங்களது அறிவு வளர்ச்சி பெற்று குணாதியங்கள் மாற வாய்ப்பிருக்கிற…
-
- 0 replies
- 1.1k views
-
-
உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன் மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க.. அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை. மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு அர்த்தம் : வேற வீடு பாக்கணும் மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..? …
-
- 4 replies
- 1.3k views
-
-
வேலையில் சிரமம், வீடு வந்தால் மனைவியிடம் எரிந்து விழுவது… அம்மா அப்பாவிடம் கோபம் கொள்வது…படிப்பில் பிரச்சினை; அதனால் மற்ற நேரங்களில் சோகம்…உடல் நலம் சரியில்லை; அதனால் படிப்பில் கவனம் இல்லை…காதல் தோல்வி; அதனால் வேலையில் நாட்டம் இல்லை…இப்படிக் கஷ்டப்படுபவர்களுக்கு நான் வெகுநாளாக வெற்றிகரமாக பழகும் ஒரு தத்துவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இதை நான் அஞ்சறைப் பெட்டி மனம் என்று அழைக்கிறேன். சமயலறையில் அஞ்சறைப் பெட்டி கண்டதுண்டா. மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, ஏலம் என்று ஐந்து அறைகள் இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கொன்று கலக்காமல் மணமும் மாறாமல் இருக்கும். நம் மனதும் அப்படி இருந்தால்… நம் மனதைப் பல அறைகளாக முதலில் பிரிப்போம். 1. கல்வி 2. வேலை 3. திருமண வாழ்க்கை 4. நட்பு 5. பொழ…
-
- 1 reply
- 726 views
-
-
ஆண்கள் அலைபவர்கள் அல்ல! ) ஓர் ஆணை காதல் வளையத்தில் சிக்கவைப்பது மிகவும் எளிது என்றுதான் பெரும்பாலான பெண்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு சிரிப்பு, கொஞ்சம் செக்ஸியான உடல் அசைவு என எதையாவது செய்தால் ஆண்கள் அம்பேல். அப்படியே குட்டி போட்ட பூனை மாதிரி தங்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதெல்லாம் மாயைதான். அப்படியானால் ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் இல்லையா என கேட்காதீர்கள். பெண்களுக்காக அலைபவர்கள்தான். ஆனால் காதலுக்காக அல்ல. குழம்பாதீர்கள். பெண்களிடமிருந்து எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், பணம் செலவில்லாமல், எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் செக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அலைவார்கள். ஆனா…
-
- 12 replies
- 2.1k views
-
-
படித்ததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி விலை மதிப்புடையது தங்கமா? வெள்ளியா? செவ்வாய்இ 28 செப்டம்பர் 2010( 17:29 ஐளுவு ) ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த பெரிய காரியமாக இருந்தாலும்இ அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே எதையும் செய்வார். அந்த நாட்டு மன்னர் மட்டுமல்லாமல்இ அண்டை நாட்டு மக்களுக்கும்இ பொருளாதார நிபுணரின் தனித் திறன் பற்றிய செய்தி பரவியது. அந்த நாட்டு மன்னர்களும் பொருளாதார நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்க ஆரம்பித்தனர். ஒரு நாள் பொருளாதார நிபுணரைஇ அவர் வசிக்கும் ஊரின் தலைவர் அழைத்…
-
- 9 replies
- 1.3k views
-
-
உணவுப் பற்றாக்குறை என்பது இந்தியத் துணைக்கண்டத்திற்கு பழகிப்போன ஒன்று. சுதந்திர இந்தியாவில் கடந்த 63 ஆண்டுகளாக வறுமை ஒழிப்பு முழக்கம் கேட்டுக் கொண்டு-தானிருக்கிறது. அரசுகள் முயன்று-கொண்டிருப்-பதாகச் சொல்கின்றன.உற்பத்தியை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கின்றன.உணவுப் பொருள் களை இறக்குமதி செய்கின்றன.மானியங்கள் அளிக்கின்றன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க,மக்கள் இந்த விஷயத்தில் எப்படி இருக்கிறார்கள்? உணவுத் தேவை, உணவுப் பற்றாக்குறை பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது? _ எனபன பற்றியெல்லாம் சிந்தித்தால் அது பூச்சியம்தான். தனிமனிதருக்கே சிக்கனம் பற்றிய சிந்தனை இல்லை.எல்லாம் அரசு பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணமும், அதற்குமேல் ஆண்டவன் விட்ட வழி என்ற நிலையில் தான் இருக்-கிறார்கள…
-
- 0 replies
- 881 views
-
-
இது இங்கே இன்னுமொரு இடத்தில் இணைக்கப்பட்ட செய்தி. "உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ?' நாங்களும் பல சந்தர்பங்களில் கதைத்துள்ளோம், எமக்கிடையே உள்ள மத, சாதி இன்ன பிற வேறுபாடுகளை பற்றி. எனக்குள்ள ஒரு குழப்பம், எல்லா விரல்களும் ஒன்று மாதிரி இல்லை என்பதுபோல், எமக்கிடையும் பல பிணக்குப்பாடுகள் உண்டுதானே. நிறைய பிரிவுகள் எமக்கிடையே உண்டு, இந்த ஊர், இந்த பள்ளிக்கூடம், இந்த கோயில்கார், இந்த சாதி.....ஒரே சாதிக்குள்ளும், வேறு வேறு பிரிவுகள்.. என்ன விதத்தால் இவைகளை இல்லாமல் செய்யலாமா தெரியாது, ஆனால் அப்படி இல்லது செய்தாலும் அவை மீண்டும் எதோ ஒருவழியில் வரும் அல்லது இருக்கத்தான் செய்யும். உதரணத்துக்கு மேலுள்ள நி…
-
- 1 reply
- 874 views
-
-
தொழில் வழிகாட்டல் பயிற்சிகளும் உதவித் திட்டங்களும் அவசியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-25 07:56:14| யாழ்ப்பாணம்] எதை எடுத்தாலும் நூற்று இருபது ரூபா என்று கொச்சைத் தமிழில் உரக்கக் கூறி விளையாட் டுப் பொருள்களை விற்பனை செய்யும் சிங்கள இளைஞரை நல்லூர்த் திருவிழாவின்போது கண்டோம்.றம்புட்டான் பழத்தை வாகனத்தில் எடுத்து வந்து அதை விற்பனை செய்யும் தென்பகுதி வியாபாரிகளை யாழ்ப்பாணத்தின் முக்கிய சந்திகளில் அவதானித்தோம். ஆரியகுளத்தில் சோளம் விற்பனை, யாழ். ஆஸ்பத்திரி வீதியில் செவ்விளநீர், பழ நாற்றுக் கள், தென்னங்கன்றுகள் என நீண்டு செல்லும் விற்பனைகளை தினசரி பார்த்துச் செல்கிறோம். இதற்கு மேலாக தெருவோர வியாபாரத்திலும் தென்பகுதி மக்களின் முயற்சிகளைக் காண முடிகின்றது. …
-
- 0 replies
- 968 views
-