உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26631 topics in this forum
-
சீனா போட்டுள்ள முத்துமாலை குறித்தும், அதனை முறியடிக்க அமெரிக்கா போட்டு வருகின்ற பாதுகாப்பு வளையம் குறித்தும் கடந்த இதழில் பார்த்திருந்தோம். பலுசிஸ்தான் மாகாணத்தை தனிநாடாகப் பிரிப்பதற்கு நடந்துவரும் நகர்வுகளைப் பார்ப்பதற்கு முன்பாக இந்து - பசுவிக் சமுத்திரத்திரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் தென் சீனக் கடற் பிராந்தியம் குறித்தும், இதற்காக சீனாவும் - இந்தியாவும் முட்டி மோதிக்கொள்வது ஏன் என்பது குறித்தும் இந்தத் தொடரில் பார்ப்போம். இந்திய - சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் இந்தியா தனக்கு சொந்தமானது என்கின்றது. ஆனால், இதனை தனக்கு சொந்தமென சீனா உரிமை கொண்டாடி வருவதுடன், அப்பகுதி மக்கள் சீனாவிற்குள் நடமாடுவதற்கும் விசா தேவையில்லை எனக்கூறி, தனது சொந்த நாட்டு மக்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தானின் பழங்குடிகள் பகுதியில் குண்டு வெடிப்பு-15 பேர் பலி பாகிஸ்தானில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அங்காடிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குர்ரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் பலி, ஏராளமானவர்கள் காயம் பழங்குடிகள் பிரதேசமான குர்ரம் பகுதியின் தலைநகர் பராச்சினாரிலுள்ள துணிகள் அங்காடியில் இடம்பெற்ற இந்தக் குண்டு வெடிப்பில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு காரணமாக அந்த அங்காடி சிதறிப் போனது. இச்சமவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தமது பிடியில் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள இந்த நகரத்தில் ஷியாப் பிரிவு முஸ்லிம்களே பெரும்…
-
- 0 replies
- 515 views
-
-
வணக்கம் நேயர்களே.... உங்கள் அனைவரையும் சுண்டலின் சுண்டல நிகழ்சியின் ஊடாக சந்திபதில் பெரும்மகிழ்ச்சி... நான் வாசிக்கும் விடயங்களை ஒருங்கினைத்து இந்த பகுதியினூடாக உங்களுடன் பகிர்ந்துகொள்வதை நோக்கமாக கொண்டு இதை யாழ் களத்தின் ஊடாக உங்கள கணணிகளுக்கு எடுத்த வருகின்றேன்... படியுங்கள் சுவையுங்கள்...அவ்வபபோது நீங்க அறிந்தவற்றையும் இதணூடாக பகிர்ந்துகொள்ள தவறாதீர்கள...புதிய கண்டுபிடிப்பு பூமியைப் போல வேறு கிரகங்கள் எதுவும் தொலைதூர வான்வெளியில் இருக்கிறதா? என்று விண்வெளி விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதற்கான பணியில் ஹப்பிள் டெலஸ்கோப் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ஈ.எஸ்.ஏ ஆகி…
-
- 15 replies
- 2.1k views
-
-
அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒசாமா பின் லாடனின் உடல் இருக்கும் இடத்தை தான் கண்டறிந்துள்ளதாக, பிரபல தொல்பொருள் ஆய்வாளர் பில் வாரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 2ம் தேதி, அமெரிக்காவின் சீல் கடற்படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் ஒசாமா பின்லாடன் பலியானார். பாகிஸ்தானின் அபோதாபாத்தில் நடந்த இந்த தாக்குதலுக்குப்பின், ஒசாமாவின் உடலை கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரபல தொல்பொருள் ஆய்வாளரான பில் வாரன் என்பவர் அமெரிக்கா கடலில் வீசிய ஒசாமாவின் உடல் அடங்கிய பை எங்குள்ளது என தான் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடலில் மூழ்கும் கப்பல்களின் இருப்பிடத்தை கண்டறிந்து அவற்றை மீட்கும் பணியில் நிப…
-
- 3 replies
- 997 views
-
-
இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி! இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்…
-
- 0 replies
- 177 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கருவூலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பணம் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கருவூலத்தை அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழித்ததாகவும் இந்த தாக்குதலில் கோடிக்கணக்கான பணம் தீக்கிரையானதாகவும் தெரியவந்துள்ளது. ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அவர்கள் பணத்தை சேகரித்து வைத்துள்ள பாதுகாப்பு நிறைந்த கருவூலம் ஒன்றும் இயங்கி வருகின்றது. உலகம் முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் கைக்கூலிகள் மற்றும் ஐ.எஸ். படையில் சேரும் வெளிநாட்டினர்களுக்கு இங்கிருந்துதான் பணபட்டுவாடா நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த கருவூலத்தின்மீது தாக்குதல் நடத்தி அழித்…
-
- 0 replies
- 521 views
-
-
சஞ்சய் தத் விடுதலைக்கான காரணங்களை தெரிவிக்குமாறு பேரறிவாளன் கோரிக்கை திரைப்பட நடிகர் சஞ்சய் தத் எந்த காரணங்களின் அடிப்படையில், யாரால் தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளன் தண்டிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனுக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான இரா இராஜீவ் காந்தி பிபிசி தமிழோசையிடம் இதை உறுதிப்படுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான பதிலை ஏர்வாடா சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரியுள்ளார். சஞ்சய் தத…
-
- 0 replies
- 320 views
-
-
Published By: RAJEEBAN 11 APR, 2025 | 03:26 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை 90 நாட்களிற்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பதற்கு முன்னர் தனது ஆதரவாளர்களை பங்குகளை கொள்வனவு செய்யுமாறு தூண்டியதன் மூலம் சந்தையை தனக்கு ஆதரவானவர்களிற்கு சாதகமான விதத்தில் பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்காவின் பல செனெட்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டிரம்ப் தனது வரிக்கொள்கையில் மாற்றங்களை அறிவிக்கப்போகின்றார் என்பது அவரது நிர்வாகத்தை சேர்ந்த யாருக்கு முன்கூட்டியே தெரியும் என கேள்வி எழுப்பியுள்ள கலிபோர்னியாவின் ஜனநாயக கட்சியின் செனெட்டர் அடம் ஷிப் யாராவது பங்குகளை கொள்வனவு செய்து விற்று இலாபம் சம்பாதித்தார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இ…
-
- 1 reply
- 268 views
- 1 follower
-
-
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, ‘பரஸ்பர வரி’ பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும் எனவும், அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்…
-
- 0 replies
- 279 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - குடியேறிகள் பிரச்சினை குறித்து ஆராய ஐரோப்பிய அமைச்சர்கள் பிரஸல்ஸில் சந்திக்கும் அதேநேரம் அகதிகளுக்கான கோட்டா குறித்து மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஹங்கேரி நடத்துகின்றது. - லண்டன் கடைகளில் சட்டவிரோதமாக விற்கப்படும் தோலை வெண்மையாக்கும் கிறீம்கள். - அத்துடன், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் உலக கோப்பையை வென்றும் சொந்த நாட்டில் ஏமாந்துபோன நைஜீரியாவின் கால்பந்தாட்ட வீரர்கள்.
-
- 0 replies
- 345 views
-
-
கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன்(Patrick Brown) தெரிவித்துள்ளார். எக்ஸ் தள பதிவு ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு ,அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும், சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை ஆகும். ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைகள், வழக்கு…
-
-
- 2 replies
- 748 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 11:04 AM மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரான 69 வயதுடைய பில் கேட்ஸ் தனது சொத்தில் பெரும்பகுதியை அடுத்த 20 ஆண்டுகளில் ஆபிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி முன்னேற்றம் முதலியவற்றின் மூலம் ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு மூலம் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் வழிகளைச் சிந்திக்கும்படி அவர் இளையர்களைக் கேட்டுக்கொண்டார். அடுத்த 20 ஆண்டுகளில் தமது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்கபோவதா…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
சீனாவில் உள்ள மொங்கோலியா புறகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த பெண் ஒருவர், மருத்துவக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லையெனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த மருத்துவமனை பெண் மருத்துவர், அறுவை சிகிச்சை அறையிலேயே அந்தப் பெண்மணியை கொடுரமாக தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு மருத்துவர் கண்டும் காணாதது போல இருந்துள்ளார். அறுவை சிகிச்சை அறையிலேயே நோயாளிடம் அதிக பணம் கேட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். http://tamil.srilankamirror.com/news/item/7201-c…
-
- 0 replies
- 440 views
-
-
[size=4]நார்வே நாட்டில், 77 பேரை சுட்டுக்கொன்ற கொலையாளிக்கு, 21 ஆண்டு சிறை தண்டனை, வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டில், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், உத்தேயா என்ற தீவில், நடந்த கோடை முகாமில், கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 77 பேர் கொல்லப்பட்டனர்.[/size] [size=4]நியோ நாசிச அமைப்பை சேர்ந்த ஆண்டர்ஸ் பெரிங் பிரேவிக், என்பவன் கைது செய்யப்பட்டான். இந்த படுகொலை செய்ததை ஒப்பு கொண்ட ஆண்டர்சுக்கு, ஆஸ்லோ, நகர கோர்ட், 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, இன்று தீர்ப்பளித்தது.[/size] [size=4]http://tamil.yahoo.com/ந-ர்வ-பட-க-ல-141200637.html[/size]
-
- 6 replies
- 928 views
-
-
செவ்வாய்க்கிழமை வரை பிரஸல்ஸ் விமான நிலையம் மூடல் பிரஸல்ஸ் விமான நிலையத்திலிருந்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் பயணிகள் விமான சேவை தொடங்காது என பெல்ஜிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பெல்ஜியம் விமான நிலையம் கடந்த வாரம் அங்கு தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில், அந்தக் கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆய்வு செய்யவுள்ளனர். இதனிடையே 31 பேர் உயிரிழக்கக் காரணமான அந்த குண்டுவெடிப்புகளை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா எனும் கேள்விகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன. இதற்கிடையில் பாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் சாலாஹ் அப்தஸ்லாமிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளின் குற…
-
- 0 replies
- 390 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தில் உள்ள வசிரிஸ்தானில் தீவிரவாதிகளின் இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த தாக்குதல் சரியான நடவடிக்கைதான் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்குள் உள்ள பகுதியில் அமெரிக்க படைகள் நடத்தியுள்ள இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அரசு கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளது. வசிரிஸ்தான் பகுதி, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. தலிபான்கள் மற்றும் அல் கொய்தா அமைப்பினரின் முழுக் கட்டுப்பாட்டில் இப்பகுதி உள்ளது. இங்குள்ள தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட முடியாமல் பாகிஸ்தான…
-
- 2 replies
- 855 views
-
-
இன்று பின்லாந்தின் சரித்திரத்தில் முக்கிய நாளாகும். (27.03.2020) 1710 ஆண்டு பின்லாந்தின் முக்கிய நகராக அப்போதுஇருந்த் Helsinki யில் மக்கள் தொகையேஎ 3555 மட்டுமே அதி மூன்றில் ஒரு விகிதத்தினர் தொற்றுநோய் காரணமாக இறத்துவிட அவர்களைப் புதைத்த இடமே என இப்போகும் "Roottopuisto" என அழைக்கப்படுகிறது தவிர அதற்குப்பின்வந்த கொடுமையான பஞ்சத்தின்போது பின்லாந்தில் வாழும் அனேகர் இறந்துவிட ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடும் நிலைக்கு மக்கள் இருந்ததாக அறியப்படுகிறது அவ்வேளையில் வறுமையின் காரணமாக கணிபலிஸம் தோன்றியதா என இப்போதும் ஆராச்சியாளர்கள் ஆதாரங்களைத் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள் அதன்போது இறந்தவர்களையும் தொற்றுநோயின்போது இறந்தவர்களை புதைத்த இடத்திலேயே புதைத்தனர் இப்பே…
-
- 0 replies
- 459 views
-
-
லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஒரே நாளில் 500 பேர் வரையில்பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் 31 வரையில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2,352 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரையில் 29,474 பேர் தங்களை பரிசோதித்துள்ளனர். இது கடந்த முந்தைய நாளைவிட 4, 324 பேர் அதிகமாகும்.நாட்டில் முதன் முறையாக ஒரேநாளில் பலியானோர் எண்ணிக்கை 563ஆக ஆனது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் அரச குடும்பத்தையும் தாக்கிய. தாக்குதலுக்கு உள்ளான இளவரசர் சாரலஸ் இது குறித்துவீடியோவில் கூறி இருப்பதாவது: இந்த வைரஸ் தாக்க…
-
- 0 replies
- 272 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சியா? துப்பாக்கியை பறிக்க முயற்சித்ததற்காகவும், ட்ரம்பை கொலை செய்யப்போவதாக கூறியதற்காகவும் ஒரு பிரிட்டிஷ்காரர் கைதானார். - குடிநீருக்காக ஆற்றை மறிக்கும் மத்திய கிழக்கு நாடுகள். வேகமாக வறண்டு கொண்டிருக்கும் மரணித்த கடல். - அமெசான் காடுகளை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் அழிக்கிறார்கள். ஆனால், கூடவே பழங்குடியின மக்களின் வாழ்வும் அழிகிறது.
-
- 0 replies
- 392 views
-
-
2025 தேசிய பாதுகாப்பு உத்தியை (NSS) வெளியிட்டது. கீழே, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் இந்த ஆவணத்தின் தாக்கங்களைப் பற்றி ப்ரூக்கிங்ஸ் அறிஞர்கள் சிந்திக்கிறார்கள். மேலே திரும்பு ஸ்காட் ஆர். ஆண்டர்சன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை முன்னுரிமையாக இருந்த பெரிய சக்தி போட்டி மறைதல் தற்போதைய டிரம்ப் நிர்வாகத்தின் புதிய தேசிய பாதுகாப்பு உத்தி, அதன் இரண்டு முன்னோடிகளால் பகிர்ந்து கொள்ளப்பட்ட பெரிய சக்தி போட்டியின் மீதான வெளிப்படையான கவனத்திலிருந்து விலகிச் செல்கிறது . முதல் டிரம்ப் மற்றும் பைடன் நிர்வாகங்கள் இரண்டும் சீனா மற்றும் ரஷ்யாவின் " அமெரிக்க மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு எதிரான ஒரு உலகத்தை வடிவமைக்கும் " விருப்பத்தை ஒரு முன்னணி வெளியுறவுக் கொள்கை கவலையாக வடிவமைத்தன. உலகளாவி…
-
- 0 replies
- 117 views
-
-
[size=4]கருகலைப்பு செய்ய டாக்டர்கள் மறுத்ததால் இந்திய பெண் அயர்லாந்து மருத்துவமனையில் இறந்தார். இது குறித்து விசாரணை நடத்த அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.[/size] [size=4]இந்தியாவைச்சேர்ந்த பிரவீன் ஹலப்பான்னாவர் (36), இவர் அயர்லாந்தில் கால்வே நகரில் பூஸ்டன் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவீதா ஹலப்பான்னாவர் (31). இவர் 17 வார கர்ப்பிணியாக இருந்தார். நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு கால்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.இதில் இதயத்துடிப்புஅதிகமானதால் கருகலைப்பு செய்தால் தாய் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. [/size] [size=4]இதையடுத்து கணவர் பிரவீன் , தனது மனைவிக்கு…
-
- 6 replies
- 1.3k views
-
-
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அமெரிக்காவை எகிறி அடித்த ரஷ்யா..!! திமிர் பேச்சை நிறுத்த எச்சரிக்கை..!! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத ்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தியிருப்பது சுயநலத்தின் உச்ச கட்டம் என்றும், குழப்பமான மனநிலையின் வெளிப்பாடு என்றும் ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவையும் , உலக சுகாதார நிறுவனத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த வைரஸை சீனாவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றும், ஆரம்பத்திலேயே இந்த வைரஸ் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்க சீனா தவறி விட்டது என்றும் , உலகில் ஏற்பட்டு வரும் பேரழிவுக்கும் ச…
-
- 0 replies
- 671 views
-
-
ஆகஸ்ட் 2019-லேயே சீனாவின் வூஹானில் கரோனா பரவியுள்ளது: செயற்கைக் கோள் ஆதாரத்துடன் அமெரிக்க ஆய்வில் தகவல் சீனாவின் வூஹான் நகரின் மருத்துவமனையில் வாகன நிறுத்துமிடம் பற்றிய செயற்கைக் கோள் படங்கள், இணையதளத்தில் தேடல் எந்திரத்தில் தேடப்பட்ட ட்ரெண்டுகளைப் பார்க்கும் போது கரோனா வைரஸ் சீனாவின் வூஹானில் ஆகஸ்ட் மாதமே பரவியிருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் நடத்திய புதிய ஆய்வில் இவ்வாறு தெரிய வந்துள்ளது. வூஹானில் உள்ள 5 மருத்துவமனைகளின் வாகன நிறுத்திமிடங்களில் அதற்கு முந்தைய ஆண்டு ஆகஸ்டை ஒப்பிடும்போது 2019 ஆகஸ்ட்டில் கார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அத…
-
- 0 replies
- 385 views
-
-
இயக்குனர் சீமான் வீட்டில் நடந்த பிரபாகரனின் பிறந்த நாள் விழா விருந்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நேற்று காலை சில வக்கீல்கள் கொண்டாடினர். பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் வழங்கினர். பிரபாகரனை வாழ்த்தி கோஷங்களையும் எழுப்பினர். இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் வக்கீல் சங்கரன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வக்கீல் குமணன் ராஜா, இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அறிவழகன் என…
-
- 0 replies
- 1k views
-
-
நேட்டோ படையில் பெட்ரோல் டேங்க் வாகனம் ஒன்று நேற்று தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொழுந்துவிட்டு எரிந்த வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுப்பதற்காக உள்ளூர் மக்கள் பெரும் ஆர்வம் காட்டியதால், மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ வாகனங்களின் தேவைகளுக்காக பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் வந்து கொண்டிருந்தபோது, தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தி, அந்த டேங்கர் லாரியை தீவைத்து எரித்தனர். தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது, நிலைமையின் விபரீதத்தை உணராத உள்ளூர் பொதுமக்கள், அந்த லாரியில் உள்ள பெட்ரோலை கைப்பற்றுவதற்காக பிளாஸ்டிக் கேனுடன் முண்டியடித்த காட்சியை பத்திரிகையாளர் ஒருவர் படமெடுத்துள…
-
- 0 replies
- 499 views
-