உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
அமெரிக்க ராணுவத்திற்காக, ஜீரோ அழுத்த டயர் - இந்தியருக்கு சொந்தமான நிறுவனம் தயாரிப்பு! [Tuesday, 2014-03-11 09:31:36] அமெரிக்க ராணுவத்திற்காக, ஜீரோ அழுத்த டயரை, இந்தியருக்கு சொந்தமான நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் உள்ள, ஏ.இ.ஜி., நிறுவனத்தின் தலைவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஆப்ரகாம் பனிகோட். அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான உதிரி பாகங்களை, இந்த நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. இந்த நிறுவனத் தலைவரான ஆப்ரகாம், இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின், அக்ரான் பல்கலைக்கழகத்தில், பாலிமர் சயின்ஸ் ப…
-
- 2 replies
- 367 views
-
-
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை பணியமர்த்துவதில் உள்ள தடையை அடுத்த மாதம் பென்டகன் நீக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளார்கள். இந்த விதிமுறை காலாவதி ஆகிவிட்டதாகவும், ராணுவத்திற்கு தீங்கு இழைப்பதாகவும் பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் தெரிவித்துள்ளார்.இந்த முடிவு, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடும் பிரசாரகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் செயலராக எரிக் ஃபேனிங் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது. அவரும் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=160221&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 459 views
-
-
அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு May 3, 2019 அமெரிக்க ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் மீறி இவ்வாறு ராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. 2016ஆம் ஆண்டு 14,900 என்னும் அளவில் அமெரிக்க ராணுவத்தில் காணப்பட்ட பாலியல் குற்றங்கள் , 2018ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணிக்காக எடுக்கப்படும் 17 முதல் 24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு காணப்படும் மூன்றில் ஒரு குற்றத்திற்கு…
-
- 0 replies
- 665 views
-
-
அமெரிக்க ராணுவமே MH 370 மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது : - முன்னாள் ஏர்லைன்ஸ் அதிகாரி தகவல்! [Tuesday 2014-12-23 13:00] மாயமான மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம் என்று முன்னாள் ஏர்லைன்ஸ் அதிகாரி மார்க் துகாய்ன் தெரிவித்துள்ளார். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்க ராணுவம் அதிகளவு வயாகரா வாங்குவது ஏன்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிறைப்புத் தன்மைக்கு பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடப்பட்டுள்ளது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் இனிமேல் பணியாற்ற முடியாது என டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், திருநங்கைகளின் உடல்நலத்திற்காக செலவிடப்படும் தொகையை விட மற்றொரு விடயத்திற்காக செலவிடப்படும் தொகை அதிக அளவில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அமெரிக்க ராணுவத்தினரின் விறைப்புத் தன்மை குறைபாட்டை சரிசெய்ய பயன்படுத்தப்படும் மருந்திற்காக 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளதாக மிலிட்டரி ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
Reports: 3 shot at Lone Star College in Houston Three people, including one gunman, were wounded in shooting between two people at Lone Star College campus in Houston, Texas, school spokesman says Second gunman is on the loose, but not believed to be on campus, school spokesman says Fourth person suffered heart attack, federal law enforcement source says Below are the latest updates as they come to us; full story here. Also, check out CNN affiliates KHOU, KPRC and KTRK [updated at 3:17 p.m. ET] A freshman who was in a nearby classroom, Amanda Vasquez, tells CNN's Brooke Baldwin that she heard about six shots. She says she heard from other people that some shooting happ…
-
- 0 replies
- 327 views
-
-
அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்தின் வோகோ பகுதியில் அமைந்திருக்கும் உர ஆலை ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட பாரிய வெடிப்பையடுத்து ஆலையின் கட்டிடங்கள் மற்றும் அருகிலுள்ள குடியிப்புப் பகுதிகளில் தீ பரவியுள்ளது. இதனால் பலர் காயமடைந்துள்ளனர் மேலும் பலர் தீ பரவியுள்ள கட்டடங்களில் சிக்குண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போஸ்டன் குண்டு வெடிப்பை தொடர்ந்து இடம்பெற்றுள்ள இந்த உர ஆலை வெடிப்பிற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
-
- 7 replies
- 576 views
-
-
அமெரிக்க ரெக்சாஸ் மாநிலத்தில் டலஸ் என்னும் இடத்தில் அடித்த புயல்காற்றால் ரைக்ரர் ரெய்லர் பெட்டிகள் தீப்பெட்டி உருள்வதைப் போல் உருட்டிக் கொண்டு போகிறது.12000 இறாத்தல் எடை கொண்ட பெட்டியை நீண்ட தூரத்திற்கு காற்றில் கொண்டு போகின்றது. (CNN) -- Tornadoes ripped through the Dallas-Fort Worth area Tuesday, tossing tractor-trailers like toys and causing widespread damage to homes and other structures. One tornado was spotted on the ground five miles east of downtown Dallas, the National Weather Service said. All flights at Dallas-Fort Worth International Airport were grounded and passengers and airport employees were moved into shelters as the storm system spawned multiple fun…
-
- 0 replies
- 489 views
-
-
அமெரிக்க ரைம்ஸ் என்னும் சஞ்சிகையில் நவநீதம்பிள்ளை வருவதற்காக எங்கள் பொன்னான வாக்கைப் போடுவோம் http://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107953_2109999,00.htmlமேலுள்ள சுட்டியை அழுத்தி What do you think? என்னும் பகுதியைப் பாருங்கள் அங்கே Definitely No Way என்ற பகுதி இருக்கிறது இதில் Definiteiy என்ற இடத்தில உங்கள் புள்ளியைப் போடவும். உற்றார் உறவினர் நண்பர்களையும் கேடடு வாக்களிக்க வைக்கவும்.
-
- 2 replies
- 550 views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கள்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் 4.7 ஆக இருந்தது, ஆனால் பின்னர் அது 4.4 ஆக குறைக்கப்பட்டது. ஆழமற்ற நிலநடுக்கம் 7.5 மைல் ஆழம் மற்றும் நேரடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடியில் இருந்தது, எனவே ஒப்பீட்டளவில் மிதமான தீவிரம் இருந்தபோதிலும் பரவலாக உணரப்பட்டது. 4 முதல் 5 அளவுள்ள நிலநடுக்கங்கள் பொதுவாக லேசான அதிர்வை ஏற்படுத்துகின்றன மற்றும் எந்த சேதமும் ஏற்படாது. https://www.cnn.com/2024/08/12/us/earthquake-los-angeles-california-pasadena-la/index.html @ரசோதரன் @நீர்வேலியான் கதிரை ஏதாவது ஆடிச்சுதா?
-
-
- 11 replies
- 641 views
- 1 follower
-
-
One suspect is dead, and two others may be at large in the Baton Rouge shooting, the East Baton Rouge sheriff's office said. -- Six law enforcement officers were shot -- three are dead and three others are injured, Baton Rouge Police Department spokesman Sgt. Don Coppola told CNN. -- No motive has been identified at this time. FULL STORY Three officers were killed and three others wounded in a shooting in Baton Rouge that officials think were carried out by multiple gunmen. …
-
- 0 replies
- 254 views
-
-
அமெரிக்க வங்கியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி January 24, 2019 அமெரிக்காவில் வங்கி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோக தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செப்ரிங் பகுதியில், இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் 21 வயதுடைய செப்ரிங் பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கையின் படி, அமெரிக்காவில் 2017-ம் ஆண்டில் சுமார் 40…
-
- 0 replies
- 419 views
-
-
வடக்கு கலிபோர்னியாவின் யுரேகா பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2:34 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம், ஹம்போல்ட் கவுண்டி நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 7.5 மைல் தொலைவில் கடற்கரைக்கு சற்று அப்பால் பசிபிக் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அது யுரேகாவிற்கு தென்மேற்கே 20 மைல் பயணமும், சாக்ரமெண்டோவிற்கு வடமேற்கே 280 மைல் பயணமும் ஆகும். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹம்போல்ட் கவுண்டியில் பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தன. PowerOutage.us என்ற பயன்பாட்டு கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, 64,000 க்கும் மேற்பட்ட செயலிழப்புகள்…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு போர்வை ஒன்றினை காணிக்கையாக அனுப்பியுள்ளார். அஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற காஜா கரிப் நவாஸ் தர்காவின் 803-ம் ஆண்டு உருஸ் விழா விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், உருஸ் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த தர்காவில் உள்ள கோபுரத்தின் மீது போர்த்துவதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு போர்வை ஒன்றினை காணிக்கையாக அனுப்பியுள்ளார். அந்தப் போர்வையை அஜ்மீர் தர்காவின் தலைமை காதிமிடம் இந்தியாவுக்கான அமெரிக்க தலைமைத் தூதர் ரிச்சர்ட் வர்மா ஒப்படைத்தார். பிரசித்தி பெற்ற காஜா கரிப் நவாஸ் தர்காவுக்கு தெற்காசியாவைச் சேர்ந்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் போர்வைகளை காணிக்கைய…
-
- 0 replies
- 244 views
-
-
-
- 1 reply
- 798 views
-
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20-ம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவிக்கயைில், சட்டவிரோதமாக குடியேறிய 538…
-
-
- 12 replies
- 662 views
- 1 follower
-
-
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக கடற்படையில் முதல் கறுப்பின பெண் விமானி அமெரிக்க கடற்படை விமான பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க கடற்படையில் போர் விமானத்தை இயக்கும் விமானியாக வரலாற்றில் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேட்லைன் ஸ்வெகிள் என்ற அந்தபெண் இந்தமாத இறுதியில் “தங்கத்தின் சிறகுகள்“ என்று அழைக்கப்படும் விமான அதிகாரி அடையாளத்தை பெறுவார் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. வேர்ஜீனியா மாகாணம் பர்க் நகரைச் சேர்ந்த மேட்லைன் ஸ்வெகிள் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து 3 ஆண்டு கால தீவிர பயிற்சிக்குப் பிறகு தற்போது அவர் போர் விமானத்தின் வி…
-
- 0 replies
- 231 views
-
-
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை; ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனையை குறைத்த பைடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி கொரோனா பரவல் அதிகரித்தபோது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 தண்டனை கைதிகளின் தண்டனை குறைக்கப்படுகிறது, வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி …
-
- 2 replies
- 431 views
-
-
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் Automobile தொழிலாளர்கள் போராட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற Automobile தொழிலாளர்கள் போராட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி நேற்று (செப்.26) கலந்து கொண்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான பரபரப்பு அதிகரித்துள்ள நேரத்தில் ஜோ பைடனின் இந்த செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க வரலாற்றிலேயே தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் ஜோ பைடன் தட்டிச் சென்றுள்ளார். Automobile தொழிலாளர் கூட்டமைப்பு (UAW) சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்தபடி போராட்டத்தில் கலந்து கொண்ட பைடன், தொழிலாளர்களுக்கு தன்…
-
- 0 replies
- 449 views
- 1 follower
-
-
அமெரிக்க வரலாற்றில், அநியாயமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் நான்: டொனால்ட் டிரம்ப் பல பெண்கள் தன் மீது பாலியல் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டியதற்குப் பின், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில், மோசமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் தான் எனப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக உள்ள டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் பொய்யானவை என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் இந்தத் தேர்தல் தில்லு முல்லு நிறைந்தது என்றார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பெவர்லி ஹில்ஸ் ஹோட…
-
- 0 replies
- 292 views
-
-
அமெரிக்க வான் தாக்குதலில் தலிபான்களின் சிரேஸ்ட தலைவர் பலி… December 3, 2018 அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதல் ஒன்றின் போது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் அமைப்பின் சிரேஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று வழிநடத்தி வந்தவரும், ஹெல்மண்ட் மாகாணத்தின் தலிபான் மாற்று நிர்வாகத்தின் தலைவராகவும் இருந்தவருமான முல்லா அப்துல் மனன் என்பவரே சனிக்கிழமை இரவு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது செல்வாக்கு, அனுபவம், ஈர்ப்பு மிக்கவராக இருந்த அவரது மறைவு தலிபான்களுக்கு இழப்பாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக, அரச படைகளின் மீதான தாக்குதல் அதிகர…
-
- 0 replies
- 421 views
-
-
அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் லிபியா தலைவர் பலி லிபியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டுக்கான ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையக செய்திப் பிரிவு செயலாளர் பீட்டர் குக் கூறியதாவது: லிபியாவில் தீவிரவாதி அபு நபிலுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் ‘யுஎஸ் எப்-15’ போர் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் அவர் கொல்லப்பட்டார். விசாம் நஜ் அப் ஜைத் அல்-ஜுபைதி என்ற பெயரிலும் அழைக்கப்படும் நபில் அல்காய்தா அமைப்பில் நீண்டகாலம் இருந்தார். இராக்கைச் சேர்ந்த இவர் பின்னர் லிபியாவுக்கான ஐஎஸ் தலைவராக பொறுப்பேற்றார். நபில் கொல்லப்பட்டதன் மூலம் லிபியாவில…
-
- 0 replies
- 586 views
-
-
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம் பட மூலாதாரம்,Alex Wong/Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் கட்டுரை தகவல் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் 11 டிசம்பர் 2025, 07:05 GMT பிரிட்டன் உட்பட பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவில் நுழைவதற்கான நிபந்தனையாக அவர்களின் ஐந்து ஆண்டு சமூக ஊடக வரலாற்றை வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய திட்டம் கூறுகிறது. இந்த புதிய நிபந்தனை, விசா இல்லாமல் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குச் செல்லத் தகுதியுள்ள பல நாட்டு மக்களைப் பாதிக்கும். ஆனால் அவர்கள் பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (Electronic System for Travel Authorization - ESTA) படிவத்தை …
-
- 0 replies
- 61 views
- 1 follower
-
-
அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு 05 Dec, 2025 | 12:10 PM அமெரிக்காவில் பணியாற்றச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி மற்றும் எச்-4 விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை மறைத்த நிலையில் வைக்காமல், பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியவாறு “பப்ளிக்” ஒப்ஷனை தெரிவுசெய்து, பொதுவில் வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்…
-
- 0 replies
- 98 views
-
-
அமெரிக்க விசாரணைக்கு பதிலடி; கொரோனா பரவலுக்கு அமெரிக்க பெண்ணே காரணம் சீனா குற்றச்சாட்டு சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி உள்ளது. இதனால் கொத்து, கொத்தாக மக்கள் மரணமடைந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று பல ஆய்வாளர்கள் உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், சீனா இதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அமெரிக்க இதுபற்றி விசாரிக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தது. சீனாவில…
-
- 1 reply
- 684 views
-