உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26647 topics in this forum
-
பிரிட்டனில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்த முடியும் என்றால் அதனை வெற்றிகரமான நடவடிக்கையாக கருத முடியும் என பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் தேசிய மருத்துவ இயக்குநர் பேராசிரியர் ஸ்டீபன் பொவிஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவும் இத்தாலியின் பாதையில் பயணிக்கின்றதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புகளை 20,000ற்குள் கட்டுப்படுத்தினோம் என்றால் நாங்கள் இந்த உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம் என அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மரணமும் துயரம் என்றபோதிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 20,000ற்குள் கட்டுப்படுத்தினால் அது சிறந்த…
-
- 16 replies
- 1.3k views
-
-
தமிழக உள்ளூராட்சி தேர்தல்: திமுக கூட்டணி முன்னணியில் தமிழக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக கூட்டணி முன்னணி வகிக்கிறது. தமிழக உள்ளாட்சிமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று புதன்கிழமை நடந்து வருகிறது. மதியம் இரண்டு மணி நிலவரப்படி, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் ஆளும் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது. சென்னை மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாலை வரை தடைவிதித்திருப்பதால், அதன் வாக்குகள் எண்ணப்படவில்லை. மாநிலத்தில் மொத்தமுள்ள 102 நகரசபைகளில் சுமார் 75 நகரசபைகளில் ஆளும் திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதாகவும், 10 நகர சபைகளில் அதிமுக முன்னணியி…
-
- 3 replies
- 1.3k views
-
-
புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆனால் இமயமலையின் மேற்கு பகுதியான காரகோரம் மலையில் பனி இறுகி, கெட்டியாகி வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. புவி வெப்பமடைவதால் இமய மலையின் மற்ற பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி வரும் நிலையில், இந்த மலை மட்டும் இறுகி வருவதன் காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 10 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக இருந்து வருகின்றன. இமயமலையில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்துக்கான குழுவின் அறிக்கை கூறியது. இதையடுத்து, இமயமலை பனி …
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் : தங்கபாலு அறிவிப்பு இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக் கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=51971
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழக அரசு துணையோடு கருணாஸ் இலங்கை பயணம். இலங்கை அரசு வானொலியில் நிகழ்ச்சி நடத்த இன்று காலை செல்லவிருந்த நிலையில் தமிழகம் முழுக்க இருந்து மர்ம மனிதர்கள் கருணாஸை கண்டித்ததாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து செய்தியாளர்களிடையே பேசிய காமெடி நடிகர் கருணாஸ். “இலங்கை செல்ல முடிவு செய்துள்ளதால் தன்னை நாம்தமிழர் இயக்கத்தினர் செல்போனில் மிரட்டு வதாகவும், தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி இழிவுபடுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கருணாஸின் புகார் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல்துறை ஆணையர் பொறுப்பு வகிக்கும் சஞ்சய் அரோரா உத்தரவிட்டுள்ளார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முட…
-
- 7 replies
- 1.3k views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியா பாரிய பங்காற்ற முடியும்: மாலைதீவு நிதி அமைச்சர் இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியா பாரிய பங்காற்ற முடியும் என்று மாலைதீவு நிதி அமைச்சர் அகமெட் சகாகீத் தெரிவித்துள்ளார். இருநாள் பயணமாக இலங்கை வந்திருந்த அவர், கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார். "இந்தியா இப்போதும் முக்கியமானது. சர்வதேச அனுசரணையாளர்களை விட இந்தப் பிரதேசத்தில் வலிமை வாய்ந்த இந்தியாவினால் சிறப்பாக செயற்பட முடியும்" என்றார் அவர். வடக்கு-கிழக்கு வன்முறைகள் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மாலைதீவு இலங்கையை விட சிறிய நாடு. தன்னளவில் என்ன வகையான உதவிகளைச் செய்ய இயலுமோ செய்யும் என்றும் அவர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழகமே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. காரணம்... நான்குமுறை உலக ‘செஸ் சாம்பியன்’ விஸ்வநாதன் ஆனந்துக்கு ஹைதராபாத்தில் நடந்த கணித நிபுணர்கள் மாநாட்டில் ‘டாக்டர்’ பட்டம் மறுக்கப்பட்டிருப்பதுதான். மறுத்திருப்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். ‘ஆனந்த், ஸ்பெயின் நாட்டுக் குடியுரிமை பெற்றவர். அவர் இந்தியர்தானா என்பதில் சந்தேகம் இருக்கு. அதனால் டாக்டர் பட்டம் கொடுக்க வழியில்லை!’ இப்படி உப்புசப்பில்லாத காரணங்களை அடுக்கியிருக்கிறது மத்தியஅரசு. இதில் வேதனையான வேடிக்கை என்ன தெரியுமா? அமெரிக்காவின் ‘ஹார்வேர்ட்’ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர். டேவிட் மம்ஃபோர்டு என்பவருக்கு அதே மாநாட்டில் டாக்டர் பட்டம் கொடுக்க மத்திய அரசு எந்த மறுப்பும் சொல்லவில்லை என்பதுதான். …
-
- 5 replies
- 1.3k views
-
-
வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் - பிரித்தானிய அரசு தனது நாட்டினருக்கு எச்சரிக்கை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரிட்டன் அரசு தனது நாட்டினரை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அவசிய தேவை இருந்தால் மட்டுமே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகளும் குழப்பநிலையும் காணப்படுகிறது. நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து செயற்படுங்கள். அரசியல் கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தியாவை சுற்றிவளைத்திருக்கும் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.: ’ரா’ எச்சரிக்கை. டெல்லி: இந்தியாவை சுற்றி இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பதாக வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான ‘ரா' எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மத்திய அரசிடம் சில வாரங்களுக்குமுன்பு ரா அமைப்பு அளித்திருக்கும் ரகசிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் நாசவேலைகளை செய்வதற்காக அயல் நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலைகொண்டு இந்தியாவை சுற்றிவளைக்கும் நோக்கில் நாசவேலை குழுவினருக்கு மறைவு இடங்களை ஐ.எஸ்.ஐ. உருவாக்கிக் கொடுத்து வருகிறது. நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் இதற்கான வா…
-
- 5 replies
- 1.3k views
-
-
கோவை: கோவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை திடீரென மாயமானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ரவிசந்திரன். ஒரு ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சாந்தாமணி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் இருவரும் வேறு வேறு ஜாதி, மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் தங்களது வீட்டினரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு சம்மதம் பெற்றனர். இதையடுத்து பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை ரவிச்சந்திரன் அதி காலையில் பாத்ரூம் செல்வதாக கூறி விட்டு சென்றவர் முகூர்த்…
-
- 3 replies
- 1.3k views
-
-
சட்ட விரோத ஆட்கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இரு இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது. சட்டவிரோத ஆட்கடத்தல் ஈடுபட்ட இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர் . கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களிடமிருந்து கடவுச்சீட்டுகள், கிரடிட் காட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆணையாளர் பஜ்டியர் ஹசனுடின் ரம்பியூஞி தெரிவித்துள்ளார். சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 7ம் திகதி ஜகார்த்தாவிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் . அத்துடன் அவுஸ்திரேலியா கடற்படையினரால் அவுஸ்திரேலிய கடற்பரப்பிப் கைது செய்யப்பட்ட 83 இலங்கையர்களையும் இவ் இருவருமே சட்டவிரோதமாக கடந்த முற்பட்டுள்ளனர் . எனவும் ஒவ்வொருவரிடமிருந்து 100-150 மில்லியம் ரூபாயை வரை சந்தேக நபர் பெற்றுள…
-
- 1 reply
- 1.3k views
-
-
தண்ணீரில் வீர ஆஞ்சநேயர் உருவம் வில்லியனுõரில் பக்தர்கள் பரவசம் வில்லியனுார் : வில்லியனுாரில் தண்ணீர் தொட்டி மேற்பரப்பில் நீர்குமிழ்கள் இணைந்து ஆஞ்சநேயர் உருவம் தெரிந்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். வில்லியனுõர் பத்மினி நகரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் தற்போது விரிவுப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணியும் நடந்து வருகின்றது. இக்கோவிலில் வைப்பதற்காக மூலவர் சிலை காலாப்பட்டு அடுத்த புத்துபட்டு கிராமத்தில் வடிவமைக்கப்பட்டது. அங்கேயே அந்த சிலைக்கு ஒன்பது நாட்கள் தானிய பூஜை செய்து கோவிலுக்கு எடுத்து வந்து, ஐதீகப்படி சிலையை கோவில் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் வைத…
-
- 3 replies
- 1.3k views
-
-
சூடான் இரண்டாக உடைகிறது வெள்ளி, 21 ஜனவரி 2011( 18:49 IST ) 99 சதவீதம் பேர் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால்: சூடான் நாடு, இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்களும், தென்பகுதியில் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். கிறிஸ்தவர்கள், தனிநாடு கோரி, 20 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில், இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்; 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், தனிநாடு தொடர்பாக, தென்பகுதி கிறிஸ்தவர்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரிவினைக்கு ஆதரவாக 99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனால், சூடான் இரண்டாக உடைந்து, தெற்கு சூடான் தனிநாடாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது! Posted Date : 10:32 (10/09/2012)Last updated : 15:23 (10/09/2012) மும்பை: தேசிய சின்னத்தை அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி,தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது,அதற்கு ஆதரவாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, தனது இணைய தளம் மூலம் ஏராளமான கார்ட்டூன்களை வரைந்தார். அதில் ஒன்றில் நான்…
-
- 6 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இதே பல்கலைக்கழகத்திற்கு உட்பட் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தான் கடந்த 1957ம் ஆண்டு படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் படித்த கல்லூரிக்கு சிங் விஜயம் செய்து, பழைய நினைவுகளில் மூழ்கினார். புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில், எடின்பர்க் கோமகனும், பல்கலைக்கழக வேந்தருமான பிலிப், மன்மோகன் சிங்குக்கு டாக்டர் பட்டத்தை வழங்க…
-
- 8 replies
- 1.3k views
-
-
டிரம்ப் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட மொடல் அழகி ரஸ்யாவில் கைது-வீடியோ இணைப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு சார்பாக ரஸ்யா செயற்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக தெரிவித்த மொடல் அழகியை ரஸ்ய அதிகாரிகள் கைதுசெய்யதுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நஸ்டியா ரைபகா என அழைக்கப்படும் இந்த மொடல் அழகியை மொஸ்கோ விமானநிலையத்தில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். மொடல் அழகி கைதுசெய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை அவரது சட்டத்தரணி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். பெண்ணொருவர் போராடுவதையும் நால்வர் அவரை சக்கரநாற்காலியில் அமரச்செய்து இழுத்துச்செல்வதையும் காண்பிக்கும் வீடியோவை மொடலின் சட்டத்தரணி வெளியிட்டுள…
-
- 0 replies
- 1.3k views
-
-
“ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார். அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்” “ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... என்னடா என்னமோ ஏதோன்னு வந்தா ஒன்னையும் காணோமேன்னு தவிக்கிறீர்களா? கவலை வேண்டாம். போட்டு வாங்குவது மற்றும் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் என்ன தெரியுமா? நானும் இந்திய தமிழன் என்பதால் எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் கொஞ்சம் நேரங்கழிச்சு பாருங்க.... நம்ம உறவுகள் வந்து இங்கே கொட்டோ கொட்டுன்னு தமிழ் மாநாடு பற்றி கொட்டும் பாருங்க. இது எப்டி இருக்கு ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா.... ஹா...ஹா... ஹா....
-
- 17 replies
- 1.3k views
-
-
சேலம் மாவட்டம் தைலானூர் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி வசந்தா (வயது 35). இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- எனக்கும், அய்யனார் என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு பூவரசன் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ள னர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கண வரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. அவர் வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னை யும், குழந்தைகளையும் துன் புறுத்தி வந்தார். எனக்கு பெற்றோர் சீதன மாக கொடுத்த 15 பவுன் நகைகளை சமீபத்தில் பறித்துக் கொண்டு மேலும் ரூ.50 ஆயிரம் வரதட்சணை வாங்கி வா என்று என்னையும், குழந்தைகளையும் துரத்திவிட்டார். அதன்பின்னர் சில நாட்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இதயம் இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதயத்திற்குப் பதில் அவருக்கு செயற்கையாக ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த சாதனத்துடன் அவர் 118 நாட்கள் (4 மாதங்கள்) வாழ்ந்துள்ளார். அந்த சாதனைச் சிறுமியின் பெயர் டிஸானா சிம்மன்ஸ் ( D'Zhana Simmons) . இதற்கு முன்பு, ஜெர்மனியில் ஒரு நபர், செயற்கை ரத்த சுத்திகரிப்பு சாதனத்துடன் 9 மாதங்கள் வாழ்ந்துள்ளார். ஆனால் ஒரு சிறுமி இயற்கையான இதயம் இல்லாமல், இத்தனை நாட்கள் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர் சிம்மன்ஸ். தனது இதயமற்ற இந்த அனுபவம் குறித்து சிம்மன்ஸ் கூறுகையில், மிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஸ்பெயினின் பார்சிலோனாவில் வானொன்றினால் மோதி தாக்குதல் – பலர் காயம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வானொன்று பொதுமக்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் லஸ்ரம்பிலஸ் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவர் வீதியில் விழுந்து கிடைப்பதையும் சிலர் அவர்களிற்கு மருத்துவசிகிச்சை அளிப்பதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயுதமேந்திய நபர் ஓருவர் துப்பாக்கிய…
-
- 9 replies
- 1.3k views
-
-
முஸ்லீம்கள் மீதான வன்முறை திட்டமிடப்பட்டதா? அதற்கான 9 காரணங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாட்டின் முக்கியமான பல நகரங்களில் கடைகளை தேடி தீ வைப்பது, உடைத்தெறிவது என்ற அண்மை வன்முறை சம்பவங்களில் பல ஏறக்குறைய ஒன்றுபோலவே உள்ளன. படத்தின் காப்புரிமைSUBODH/BBC அண்மையில் பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை மற்றும் கலவரங்கள் என சுமார் பத்து சம்பவங்கள் ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும் , அமெரிக்க அதிபர் பராக் ஒபமா காயம் அடைந்ததாகவும் Associated Press பெயரால் போலி டுவிட்டர் நேற்று அனுப்பப் பட்டது. இதனால் சில முதலீட்டாளர்கள் 250B USD இழந்தனர். மீண்டும் சில நிமிடங்களில் அந்த இழப்பு மீள பெறப்பட்டது. சில முதலீட்டாளர்கள் 250B USD இனை பெற்றனர்.
-
- 0 replies
- 1.3k views
-
-
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பேருடன் மாயம்! March 8, 2014, 8:50 [iST] கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் இன்று அதிகாலை மாயமாகியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு எம்.எச்.370 என்ற போயிங் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 12 ஊழியர்கள் மற்றும் 227 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் போய் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளது. தற்போது, மாயமான எம்.எச்.370 போயிங் விமானத்தையும் அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் மல…
-
- 15 replies
- 1.3k views
-
-
சென்னை வான் வெளி இப்போது பண்பலை வரிசை வெள்ளத்தில் திழைக்கிறது. • சிட்டி 91.1 MHz • ஆஹா 91.9 MHz • பிக் 92.7 MHz • சூரியன் 93.5 MHz • ரேடியோ ஒன் 94.3 MHz • மிர்ச்சி 98.3 MHz • பெயரிடப்படாதது 98.9 MHz • கோல்டு 105 MHz • ஹலோ 106.4 MHz • ரெயின்போ 107.1 MHz
-
- 2 replies
- 1.3k views
-