உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26661 topics in this forum
-
பெங்களூர் நகரில், ஆட்டோ ஓட்டி, பிழைப்பு நடத்திய பெண், வழக்கறிஞராகி, சாதனை படைத்துள்ளார்.வெங்கடலட்சுமி, 40, பெங்களூரு நகர வீதிகளில், ஆட்டோ ஓட்டும் பெண்களில் ஒருவர். பட்டப்படிப்பு முடித்திருந்த இவர், வழக்கறிஞராக வேண்டும் என, சிறு வயதிலிருந்தே விரும்பினார்.எனினும், பட்டப்படிப்பு முடித்ததும், திருமணம், குழந்தை, வாழ்க்கையை ஓட்ட, ஆட்டோ ஓட்ட வேண்டிய நிர்பந்தம் போன்ற கட்டாயங்களால், நேரடியாக அவரால், வழக்கறிஞர் ஆக, தேவையான படிப்பை படிக்க முடியவில்லை. கடந்த, 13 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டி வரும் வெங்கடலட்சுமி, தினமும் காலை, 8:00 மணிக்கு, தன் பணிகளை துவக்கி விடுவார். 8:30 மணிக்கு, மகளை, பள்ளியில் கொண்டு விடும் இந்த பெண், 10 கி.மீ., தூரத்தில், பசவேஸ்வர் நகரில் உள்ள, பாபு ஜெகஜீவன் ராம் ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
இத்தாலிய ஓவியரின் நிர்வாண நங்கையின் விலை 170 மில்லியன் christies இந்த ஓவியம் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டதில்லை இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் டாலர்களுக்கு நியூயார்க் நகரில் ஏலம் போயுள்ளது. இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது. இத்தாலியர் ஒருவர் தீட்டிய ஓவியம் இந்த அளவுக்கு விலைபோயுள்ளது இதுவே முதல் முறை. நியூயார்க்கிலுள்ள கிறிஸ்ட்டி ஏல நிறுவனத்தின் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் ஓவியத்தை வாங்க பெரும் போட்டி நிலவிய சூழலில் ஒன்பது நிமிடங்கள…
-
- 3 replies
- 1.2k views
-
-
17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கிய கடன் குறித்து சீனாவின் ஆச்சரிய முடிவு 17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார். அண்மையில் செனகலில் நடைபெற்ற சீன-ஆபிரிக்கா ஒத்துழைப்பு மன்றத்தின் 8வது அமைச்சர்கள் மாநாட்டில் சீன இராஜாங்க அமைச்சர் இந்த முடிவை அறிவித்துள்ளார். சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான பொதுவான அபிவிருத்திக்கான புதிய சகாப்தத்திற்கான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 2021 நவம்பரில் செனகலின் டாக்கரில் நடைபெற்ற சீனா-ஆபிரிக்க ஒத்துழ…
-
- 23 replies
- 1.2k views
-
-
பல்மைரா: பாலைவனத்து வெனிஸ் என்று பாராட்டப்படும் நகர் பல்மைரா நகரைப் பார்ப்பவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் இந்த பாலைவனத்தின் மத்தியில் நீண்ட நெடிய தூண்களும், கலைநயமிக்க தோரணவாயில்களும் எப்படி வந்தன என்பது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த வழியாகச் செல்ல நேர்ந்த பயணிகள் தாங்கள் பார்த்த காட்சியைக் கண்டு மீண்டும் மீண்டும் பிரமித்தனர். சிரியாவின் பாலைவனத்தின் மத்தியில் பாழடைந்த பழம்பெரும் நகரம். மத்திய தரைக்கடலுக்கும் யுப்ரடிஸ் நதிக்கும் இடையிலான வழியில் சரிபாதி தூரத்தில் பல்மைரா அமைந்திருக்கிறது. பாலைவனத்தின் மத்தியில் இப்படியொரு செல்வச்செழிப்பு மிக்க பழம்பெரும் நகர் எப்படி உருவானது என்று வியப்பவர்களுக்கான பதில்--பாலையை ஒட்டிய பேரீச்சமர பசுஞ்சோலையின் எல்லையி…
-
- 2 replies
- 1.2k views
-
-
தாலிபான் குழுக்களிடையே மோதல்: முல்லா மன்சூர் 'படுகாயம்' ஆப்கான் தாலிபான் தலைவர், முல்லா அக்தார் மன்சூர், பாகிஸ்தானில் தீவிரவாதிகளிடையேயான ஒரு சந்திப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தார் என்று ஆப்கானிய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். I முல்லா மன்சூர் பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் முல்லா மன்சூருக்கும் மற்றொரு தாலிபான் தளபதிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறுக்குப் பின்னர் துப்பாக்கி வேட்டுகள் சுடப்பட்டதாக தாலிபானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தாலிபான் தலைவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது அவர் இறந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சண்டை நடந்தது என்பதையே த…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை, அக்.24 : சென்னை அசோக்நகர் போலீஸ் நிலையம் அருகே உள்ள புதூரில் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் கழுத்தில் நேற்று (அக்.23) காலை செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. 2 செருப்புகளை துணியால் கட்டி யாரோ தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். செருப்புமாலை உடனடியாக அகற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. மாயகிருஷ்ணன், யுவராஜ், தனசேகரன் ஆகிய 3 காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென ஆவேசத்துடன் கோஷமிட்டபடி மண் எண்ணையை ஊற்றி தீக்கு…
-
- 5 replies
- 1.2k views
-
-
Published By: SETHU 06 JUN, 2023 | 04:14 PM ஈரானின் புரட்சிகர காவல்படையானது, ஒலியைவிட 15 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையொன்றை ஈரான் இன்று (06) காட்சிப்படுத்தியுள்ளது. ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு அதிக வேகமானது ஹைப்பர்சோனிக் வேகம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏவுகணை மணித்தியாலத்துக்கு 1400 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என ஈரானின் ஐஆர்என்ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 'பத்தாஹ்' என இந்த இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் ஆற்றலை புகழ்ந்துள்ளதுடன், இது ஈரானின் தடுப்பாற்றலை அதிகரிக்கும் எனவும பிராந்திய …
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
இந்தியப் போலிசினது நாகரீகமான நடத்தை, உலகெங்கும் கிழிகின்றது! தயவு செய்து இரண்டே நிமிடங்கள் ஒதுக்கி இந்த விடியோவைப் பாருங்கள்! உங்கள் கருத்தையும் பதியுங்கள்!
-
- 8 replies
- 1.2k views
-
-
இதனை சாதாரணமாக எடுக்கக் கூடாது. ராகுல் தமிழகம் வர உள்ள நிலையில்.. அவரை காங்கிரஸ் கூலிகளே ஆட்களை வைச்சு.. கொல்லத்திட்டமிட்டிருப்பதன் ரகசியத்தின் கசிவாகவும் இருக்கலாம். ராஜீவ் கொல்லப்பட முன்னரும் சுப்பிரமணியம் சுவாமியும் இவ்வாறு..அறிவிப்புக்களைச் செய்திருந்தவர்.. ராஜீவ் செத்திட்டார் என்று. !!!!
-
- 6 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் யூதப் பள்ளியில் துப்பாக்கிசூடு 4 பேர் பலி பிரான்ஸின் துலூஸ் நகரில் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்தவர்களில் 3 பேர் அப்பள்ளிக்கூட மாணவர்களும் ஒருவர் ஆசிரியரும் ஆவர். துப்பாக்கிதாரி பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்குள் விரட்டிவந்து சுட்டுவிட்டு கருப்பு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிதாரிக்கு தெரிவிக்கப்படுகின்ற அதே அங்க அடையாளங்கள் உடைய ஆசாமி, இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவதென்பது கடந்த ஒருவாரத்தில் இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் நடந்திருந்த இரண்டு சம்பவங்களில் பிரஞ்சு சிப்பாய்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்…
-
- 19 replies
- 1.2k views
-
-
எனக்கும் அமெரிக்க அணுகுமுறை எரிச்சலையும், கோபத்தையும் தந்தது. ஆனால் இந்தக்கேள்வியும் எழுந்தது. கூலிகளை உருவாக்குகிற, தனது சுய சமூகத்தின் முன்னேற்றத்தை விட அமெரிக்காவுக்கு வளம் சேர்க்கவே, திறம்படைத்த கூலிகளை உருவாக்க எல்.கே.ஜி யில் இருந்து பி.எச்.டி வரை கல்வியைத் திட்டமிடும் சமூக அக்கறை இல்லாத கல்வியாளர்கள் தங்களுக்கு சான்றோர்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதையை எப்படி எதிர்பார்க்கமுடியும்? கூலிகளை வேண்டும்போது அதிக கூலிக்கும் வேண்டாத போது தூக்கியெரியவும் செய்வது எஜமானனின் விருப்பம் அல்லவா?
-
- 3 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,REUTERS/IBRAHEEM ABU MUSTAFA படக்குறிப்பு, காசாவின் தெற்கே உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு மசூதி இஸ்ரேலிய தாக்குதலில் சேதமடைந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யோலண்டே ஆணி பதவி, பிபிசி நியூஸ், ஜெருசலேம் 7 நிமிடங்களுக்கு முன்னர் 1973 ல் இஸ்ரேல் மீது எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகள் திடீர் தாக்குதல் நடத்திய பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து, பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை சனிக்கிழமை நடத்தினர். ஹமாஸின் இந்தத் தாக்குதல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், யூதர்களின் விடுமுறை தினமான ஷபாத் அன்று நடந்தது. 1973ல் நடந்த அந்தத் தாக்கு…
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-
-
அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பு Posted Date : 14:56 (03/11/2012)Last updated : 16:48 (03/11/2012) வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ம் தேதி நடக்கிறது.தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திர…
-
- 7 replies
- 1.2k views
-
-
பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு 6 ஆண்டுகள் சிறை பாப்பாண்டவரின் நிதி ஆலோசகருக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவை சேர்ந்த 75 வயதான கார்டினல் ஜோர்ஜ் பெல் என்பவர் பாப்பாண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகராக பணிபுரிந்து வந்துள்ளார். 1970 ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து 40 வயதைக் கடந்த 2 ஆண்களை கார்டினல் ஜோர்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதே போன்று 1980 ஆம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜோர்ஜ் பெல், தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபு…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜெர்மன் பெரியார்! செக்கச் செவேல் பிள்ளையார் சிலைக்கு அருகே பார்த்திபன். பக்கத்தில்... அட, நம்ம பெரியார்! ‘‘போன வாரம் சுவாமிமலைக்குப் போயிருந்தபோது இவரைப் பார்த்தேன். ஜெர்மனியைச் சேர்ந்தவராம். பெயர் ‘ஓல்டன்புரூச் கன்தர்’. அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘எங்கள் ஊரில் தத்ரூபமாக உங்களைப் போலவே ஒரு பெரியவர் இருந்தார். அந்த ஆச்சர்யத்தில்தான் உங்களைச் சந்திக்க வந்தேன்’ என்றேன். ‘சந்தோஷம்! ஆனால், நான் ஒன்றும் வயதானவன் கிடையாது. எனக்கு ஜஸ்ட்... 70 வயசு தான் ஆகுது!’ என்று உரிமையோடு கடிந்து கொண்டார். இந்தியக் கலாசாரம் பற்றியும், தமிழகக் கட்டடக் கலை பற்றியும் தெரிந்துகொள்வதற்காகச் சுற்றுப் பயணம் வந்திருக்கிறாராம். அவரிடம் பெரியாரைப் …
-
- 0 replies
- 1.2k views
-
-
பந்த்திற்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக புதன்கிழமை அன்று தமிழக கட்சிகள் நடத்தவுள்ள பந்த்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதன்கிழமை இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த ஜெயநீதி சரவண சதீஷ்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும். அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவற்கான உரிமை என்று …
-
- 4 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 05 JAN, 2024 | 12:00 PM சுவீடனில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக பொழிந்த கடும் பனியினால் ஸ்கேன் பகுதியில் உள்ள E22 பிரதான வீதியில் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன. சுவீடனில் செவ்வாய்க்கிழமை கடும் குளிரினால் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது. ஹார்பி மற்றும் கிறிஸ்டியான்ஸ்டாட் இடையே இரு திசைகளிலும் பனி சூழ்ந்ததால் புதன்கிழமை அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணிக்கு E22 பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது. இந்நிலையில், E22 பிரதான வீதியில் காரில் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை காலை வரை லொறி சாரதிகள் மட்டுமே தங்கள் வாகனங்…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
[size=2][size=4]ஐரோப்பாவில் உள்ள பணக்கார நாடுகளில் பிரான்சும் ஒன்று.[/size][/size] [size=2][size=4]ஆனால் இப்போது அங்கு பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது.[/size][/size] [size=2][size=4]கடும் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்தபடி உள்ளது. அதுவும் சோசலிச ஆட்சி வந்த பிறகு அங்கு நிலைமை மிக மோசமாகி இருக்கிறது.[/size][/size] [size=2][size=4]தற்போது அங்கு 30 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதுதொடர்பாக அந்த நாட்டு தொழில்துறை மந்திரி மைக்கேல் சபீன் கூறியதாவது:-[/size][/size] [size=2][size=4]பிரான்சில் 30 லட்சம் பேர் வேலை தேடி காத்திருக்கிறார்கள்.[/size][/size] [size=2][size=4]இந்த எண்ணிக்கை இன்னும் உயரலாம். புதி…
-
- 17 replies
- 1.2k views
-
-
பாகிஸ்தான் மாடல் அழகி கந்தீல் பலூச் கொலை பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மாடல் அழகி கந்தீல் பலூச், கெளரவ கொலைகளின் வெளிப்பாடாக, தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் தைரியமாக தனது புகைப்படங்களை பதிந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச். சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வந்தார். தன்னை தற்கால நவீன பெண்ணியவாதியாக வர்ணித்துக் கொண்டார். ஆனால், பழமைவாதிகள் அவருடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் தெரிவித்தனர். பாகிஸ்தானில் முக்கிய மதகுருக்களில் ஒருவரான முஃப்தி குவாவி உடன் அவர் எடுத்து கொண்ட புகை…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஈராக்கில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய அமெரிக்க படை வீரருக்கு 90 ஆண்டு கால சிறை [18 - November - 2006] ஈராக்கில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் குடும்பத்தினருடன் சேர்த்து கொலை செய்த அமெரிக்க இராணுவ வீரருக்கு 90 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான ஜேம்ஸ் பார்க் கருக்கே 90 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அபீர் காசிம் அல்-ஜனாபி எனும் இந்த சிறுமியினதும் குடும்பத்தினதும் படுகொலைகளில் தனக்கு தொடர்புள்ளதை பார்க்கர் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், தனது முன்னாள் சகாக்களுக்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வைகோவின் எதிர்காலம்? - எஸ்.கே. செந்தில். ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான் - GTNற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக அதிமுக தொண்டன் கூட ஜெயலலிதாவுக்கு இத்தனை விசுவாசமாக இருக்க மாட்டான். அத்தனை தூரம் அம்மாவுக்காக இறங்கிப் போனார் வைகோ. இன்றைக்கு வைகோவுக்கு நேர்ந்துள்ள நிலை கண்டு தமிழகத்தின் எல்லா இரண்டாம் மட்டக் கட்சிகளுமே அதிர்ந்து போயுள்ளன. அரசியல் சுனாமி எந்த நேரத்தில் யாரை வீழ்த்தும் என்பதை அறிந்து கொள்ளவும், அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் வெறும் அரசியல் அனுபவம் மட்டும் போதாதது. சடுதியாக எடுக்க வேண்டிய முடிவுகளை எடுத்து, அதற்கு கட்சியினரையும் தயார் படுத்த வேண்டும் என்கிற அனுபவத்தை நீண்டகால அரசியல் அனுபவமும் தமிழகம…
-
- 3 replies
- 1.2k views
-
-
இராஜீவ் கொலையல்ல மரணதண்டனை - கொளத்தூர் மணி , இவ்வுரைக்காக கொளத்தூர் மணி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உரை நாள் : 26.02.2009 காணொளியை இங்கே பார்க்கவும் Get Flash to see this player. இராஜீவ் கொலையல்ல மரணதண்டனை - கொளத்தூர் மணி
-
- 0 replies
- 1.2k views
-
-
ஏணியில் ஏறும்போதே படியை பிடுங்குகிற வழக்கம் சினிமாவிலும் அரசியலும் Seeman - Vijayalaksmiசகஜம்தான். சீமான் விஷயத்திலும் அதுதான் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அண்மைகால நிகழ்வுகள். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார். இந்த செய்தி உண்மையா, பொய்யா என்பது இன்னும் சில தினங்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும். .ஆனால் விஜயலட்சுமியை து£ண்டி விட்டு சீமானின் புகழை சிதைக்கிற முயற்சியில் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நேற்று மாலை நடந்த ஒரு சிறு சம்பவமே இதற்கு சாட்சி. அண்மையில் அதிமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர்தான் இந்த தகவலை மீடியாக்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பினார். அத…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் குறித்தும் எங்களது கொள்கை, லட்சியம், பணிகள் குறித்தும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரு மகிழ்வையும், பெருமையையும் தருவதாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில்தான் நீடிக்கும் என முதல்வர் கருணாநிதி நேற்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும் அவர்களது லட்சியத்தையும், பணியையும் அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திக்கும்போது, விடுதலை சிறுத்தைகள் பற்றி கூறியுள்ள கருத்து எமக்கு பெருமகிழ்வையும், பெருமையையும் அளிக்கிறது.…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=5]துருக்கிய யுத்த விமானத்தை சிரியா சுட்டுவீழ்த்தியது[/size] துருக்கிய யுத்த விமானமொன்றை சிரியா சுட்வீழ்த்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்-4 ரக யுத்த விமானமொன்றை சுட்டுவீழ்த்தியமக்காக சிரியா மன்னிப்பு கோரியுள்ளது என துருக்கியின் பிரதமர் தாயீப் எர்டோகன் இன்று கூறினார். இவ்விமானத்தின் விமானிகள் இருவரும் உயிருடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'எமது விமானப்படையும் கடற்படையும் மத்திய தரைக்கடல் பகுதியில் தேடுதல் நடத்துகின்றன. அதிஷ்டவசமாக எமது விமானிகள் உயிருடன் உள்ளனர். நாம் விமானமொன்றை மாத்திரமே இழந்துள்ளோம்' என பிரேஸிலில் இருந்து திருப்பியபின் தலைநகர் அங்காராவில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். மத்திய தரைக்கடல் பகுதியில் சிர…
-
- 8 replies
- 1.2k views
-