Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒசாமாவுக்கு மரணதண்டனை-இனப்பிரச்சினைக்கு தீர்வு:ஒபாமா விருப்பம் ஒசாமா பின்லேடன் உயிருடன் பிடிக்கப்படும் பட்சத்தில்,அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒபாமா தெரிவித்துள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில்.... ஓசாமா பின்லேடேன் உயிருடன் பிடிபட்டால் அவன் மீது அமெரிக்க சட்டம் மட்டுமின்றி உலக அளவில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மரணதண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.மரண தண்டனை வழங்கப்படுவது எனது விருப்பம் அல்ல.ஆனால் கொடூரமான பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடும் நபருக்கு மரணதண்டனை தவிர வேறு வழியில்லை. அமெரிக்க அத…

    • 2 replies
    • 1.1k views
  2. காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து லண்டனில் பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவமதிக்கப்பட்ட தேசிய கொடியை கூட்டத்துக்குள் புகுந்து பறிமுதல்செய்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி லண்டனில் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தானியர்கள் பலரும் கலந்துகொண்டனர். லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். போராட்டத்தில் முட்டை, வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன. அதேபோல, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் கொடிகளை கையிலெந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்…

    • 0 replies
    • 1.1k views
  3. ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு 1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார். நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மேலும் தங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார். …

  4. இங்கிலாந்துக்கு தப்பியோடிய தாய்லாந்து மாஜி பிரதமர் ! பாங்காக்: ஒலிம்பிக் போட்டிகளைக் காண செல்வதாகக் கூறி தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவத்ரா குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு தப்பியோடிவிட்டார். தாய்லாந்தின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தை நடத்திய வந்த ஷினாவத்ரா தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார். ஆனால், இவரது குடும்பத்தினர் பெரும் ஊழலில் ஈடுபட்டனர். இந் நிலையில் 2006ம் ஆண்டு குடும்பத்தோடு இவர் வெளிநாடு சென்றபோது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து இங்கிலாந்தில் வசித்து வந்தார். ஆனால், இவர் மீதும் குடும்பத்தினர் மீதும் தாய்லாந்தில் ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை எதிர்கொள்ள குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்க…

  5. காவலன்’... தியேட்டருக்குள் சில்லுனு ஒரு 'காதல்’ படம். வெளியேவோ, சுள்ளுனு ஒரு 'மோதல்’ படம்! எப்போதும் இல்லாத வகையில் இடியாப்பச் சிக்கலில் இந்த முறை சிக்கினார் விஜய். 'காவலன்’ படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய அவர் நாள் குறித்தபோது, படத்துக்குச் சம்பந்தமே இல்லாத பல பேர் அதற்கு மாறி மாறித் தடை வாங்கக் குதித்தனர். கடன் வாங்கினார்... கதை மாற்றினார்... என்ற சிக்கல்கள் எல்லாம் தாண்டிய பிறகு, தியேட்டர்கள் கிடைக்காமல்... தேதி கொடுத்தவர்களும் திடீரென மறுத்து... பெட்டி வராத சோகத்தில் ரசிகன் தீக்குளிக்கப் போய், 'என்னைச் சுத்தி என்னதான்டா நடக்குது?’ என்று விஜய் திணறிய கடந்த இரண்டு வாரங்கள் பரபரப்பானவை. விஜய் ரசிகர்கள் வெளிப்படையாகக் கொந்தளிக்கிறார்கள். இளைய தளபதியை அரசியலுக்கு இ…

    • 2 replies
    • 1.1k views
  6. அடுத்த கொடூரம்... சீக்கியரைக் கடத்தி தலையைத் துண்டித்துக் கொன்ற பாக். தீவிரவாதிகள். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தால், 2 இந்திய வீரர்கள் கொலை செய்யப்பட்டதும், ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் வசித்து வந்த ஒரு சீக்கியரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரைத் தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவரது பெயர் மொஹீந்தர் சிங். 40 வயதான இவர் மருந்து வியாபாரி ஆவார். கைபர் பழங்குடியினப் பகுதியில்உள்ள தப்பாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். இவரை நவம்பர் 20ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதக் கும்பல் கடத்திச் சென்றது. பின்னர் அவரைத் தலையைத் துண்டித்துக் கொலை செய்து உடலையும், தலையை…

    • 9 replies
    • 1.1k views
  7. 6th June 2013 அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சூசன் ரைஸ் நியமிக்கப்படுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தற்போதைய, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டானிலான் (Tom Donilon) அடுத்த மாதம் ஓய்வு பெற்றவுடன் சூசன் ரைஸ் அந்த பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சூசன் ரைஸ், தற்போது அமெரிக்காவுக்கான ஐநா தூதராக செயல்படுகிறார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்கும் போது சூசன் ரைசை அமைச்சராக்க முயன்ற ஒபாமா, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் எதிர்ப்பால் பின்வாங்கினார். இதையடுத்து, தற்போது அமெரிக்க அரசு நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்புக்கு அதிபர் ஒபாமாவால் அவர் தேர்வு செய்யப்ப…

  8. இராவணனை வழிபடக்கூடிய பழங்குடி மக்கள் இந்தியாவில் இருக் கிறார்கள். இராமாயணம் – ஆரிய திராவிடப் போராட்டத்தையே குறிக் கிறது என்றார், மறைந்த ஜவகர்லால் நேரு. நேரு குடும்பத்தில் வந்ததாகக் கூறிக் கொள்ளும் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும், குடியரசுத் தலைவரும் டெல்லியில் இராவணன் உருவத்தை எரிக்கும் ‘ராமலீலா’ ஆரியத் திருவிழாவில் பங்கேற்று, தென்னாட்டு மக்களை திராவிடர்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள். மாவீரர் இராவணன் பூமியில் வாழ்ந்த ஈழத் தமிழர்களை அழித் தொழித்தக் கூட்டம், மீண்டும் ஆர்ப்பரிக்கிறது. ‘இராமன் பிறந்த இடத்தை’ உயர்நீதி மன்றங்கள் தீர்மானிக்கின்றன. ‘இராவணன்’ அழிவில் சோனியா குடும்பம் மகிழ்ச்சி கூத்தாடுகிறது. அன்று ராஜாஜியின் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற இராமா…

    • 1 reply
    • 1.1k views
  9. புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, தண்டனைக் குறைப்பு பெற்றவர்கள் இரட்டை பலன் பெற முடியாது என்று கூறியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்த…

    • 2 replies
    • 1.1k views
  10. புதிய மனுநீதிச் சோழனின் நீதி? சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் குடும்ப இதழ்கள் தமிழுக்கும், தமிழருக்கும் எதிராகவே செயல்பட்டுவருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். குறிப்பாக சன் தொலைக்காட்சி தமிழ்மொழி சிதைப்பு, தமிழர் பண்பாட்டுச் சீரழிவு ஆகியவற்றின் நிலைக்கலனாக உள்ளது. இதற்கு எதிராக சுண்டு விரலினால் கூட சுட்டிக்காட்டித் திருத்த தி.மு.க. தலைவர் முன்வரவில்லை. கடந்த காலத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலைமுரசு இதழின் ஆசிரியர் பா. இராமச்சந்திர ஆதித்தன் போன்ற பல தலைவர்களை வரம்புமீறி இழிவுபடுத்தி செய்திகள் வெளியிட்டபோது அதைக் கண்டிக்கவோ திருத்தவோ தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் வளர்த்த கடா மார்பில் பாய்வது ப…

  11. உத்தர்காண்ட் பெரும் வெள்ளத்தில் கேதர்நாத் பகுதியில் மட்டும் 5 ஆயிரம் பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கேதர்நாத் கோயில் வளாகத்தில் இருந்த ஆதி சங்கரரின் சமாதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலை ஒட்டி ஓடும் மந்தாகினி ஆற்றில் கேதார் பனிச்சிகரத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்ததால் வெள்ளம் வெடித்துக் கிளம்பி எதிர்பட்டதையெல்லாம் அள்ளிச்சென்றது. இக் காட்டாற்று வெள்ளம் பல இடங்களில் திசை திரும்பியதால் சுமார் 200 கிராமங்கள் அழிந்தேபோயுள்ளன. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கதி என்ன என்பது தெரிய வில்லை. கேதார்நாத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நூற்றுக் கணக்கான வீடுகள், வாகனங்கள் எங்கே சென்றன என்றே தெரியவில்லை. கேதர்நாத் சிவாலயத்…

  12. இலங்கைக்கு ஆயுதம் கடத்தல்: பாதுகாப்பு சட்டத்தில் கைதான 3 பேர் விடுதலை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக கடந்த ஜனவரி மாதம் தினகரன், விஜயகுமார், மொய்தீன்யாகு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் சிவகங்கை கலெக்டர் உத்தர வின் பேரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பு கூறியது. கியூ பிராஞ்ச் போலீசாரின் சிபாரிசை அப்படியே ஏற்று கலெக்டர் செயல்பட்டு இருக்கிறார். தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை 7 நாட்க…

  13. Published By: RAJEEBAN 19 JUN, 2023 | 11:01 AM அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனெட் அனுமதியளித்துள்ளது. செனெட் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சர்வஜனவாக்கெடுப்பிற்கான திகதியை அறிவிக்கவேண்டும்,இரண்டுமுதல் ஆறுமாதங்களிற்குள் அவர் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் . பிரதமர் ஒக்டோபரில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு …

  14. இந்த வாரம் தன் மீதான பதவி நீக்க விசாரணையில் ஆஜராக சட்ட ரீதியிலான அழைப்பாணையை வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்போவதாக தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியினர் மீது ஆவேசமடைந்து கடும் வார்த்தைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக ஜனநாயக கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவிநீக்கம் செய்வது குறித்த விசாரணை தொடர்பாக விசாரித்து வரும் குழுக்கள் இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளன. இழிவான வார்த்தை ஒன்றை பயன்படுத்தி, ஜனநாயக கட்சி தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்த டிரம்ப், அவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தினார். ஆனால…

    • 3 replies
    • 1.1k views
  15. தாய்மார்களை போலவே தந்தையருக்கும் 7 மாதகாலம் ஊதியத்துடன் கூடிய பேறு கால விடுமுறை வழங்க பின்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. தந்தையர்களும் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தும் வகையிலும் இந்த திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டில் 2 மாதம் 14 நாட்கள் வரை தந்தையருக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பேறு கால விடுப்பை 7 மாதங்களாக நீட்டிக்கும் புதிய முறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி தாய் - தந்தை ஆகிய இருவருக்கும் ஒருங்கிணைந்த பேறு கால விடுமுறை 14 மாதங்களாக உயர்த்தப்பட உள்ளது. https://www.polimernews.com/dnews/99627/தாய்மார்களை-போலவ…

  16. மிக அதிகபட்ச ஊடக சுதந்திரத்தைத் தருவது, பொருளாதார சுபிட்சம் அல்ல , அமைதிதான் என்கிறது, எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு. போரில் ஈடுபட்டிருக்காத நாடாளுமன்ற ஜனநாயகங்கள் ஊடக சுதந்திரம் என்ற இந்த விஷயத்தில் நன்றாக செயல்படுகின்றன; ஆனால், அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட பிற நாடுகள் பத்திரிக்கை சுதந்திரத்தைக் குறைக்க, கட்டுப்படுத்த உதவுகின்றன. இந்த அமைப்பு ஊடகச் சுதந்திரம் உள்ள நாடுகள் என்று தயாரித்த பட்டியலில், அமெரிக்கா 36வது இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது. முதல் சுமார் 20 இடங்களில் இடம்பிடித்திருப்பவை, ஐரோப்பிய நாடுகள், அதிலும் குறிப்பாக ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் பின்லாந்து போன்ற நோர்டிக் நாடுகள்தாம். எஸ்தோனியா, லாட்வியா, ஸ்லோவேகியா போன்ற புதிதாக ஜ…

    • 2 replies
    • 1.1k views
  17. ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள புனித தேவதை வெறும் வாய்ப் பேச்சால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. ஊழலை ஒழிக்க மத்திய அரசு வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வர திட்டமிட்டுள்ளது” என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள முடியாத நிலையில், பரப்புரை செய்ய அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதில் கவனிக்கத் தக்க விடயம் யாதெனில், ‘வெறும் பேச்சால் ஊழலை ஒழித்துவிட முடியும்’ என்று யார் சொன்னது என்பதுதான். காந்தியவாதி அண்ணா ஹசாரே ஊழலை எதிர்த்து இயக்கம் தொடங்கிய நாள் முதல், அவரும் அவருடைய குழுவில் இடம்பெற்றுள்ள சட்ட வல்லுனர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், அர்விந்த் கேஜ்ரிவால், நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகியோர் ஊழலை ஒழிக்க வலிமையாக …

  18. குஜராத் அணு உலை கசிவால் மூடல்: ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து தண்ணீர் கசிந்ததை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கக்ரபார் அணுமின்நிலைய இயக்குநர் எல்.கே.ஜெயின் கூறும்போது, ''முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்‌பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அணுஉலை மூடப்பட்டது. இதனால், அணுக் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை. குளிர்விப்பானுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஊழியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பாக வெ…

  19. பரபரப்பான ஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: முதல் சுற்று வாக்குப்பதிவு துவங்கவுள்ளது ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின் முதல் சுற்று வாக்குப்பதிவுக்கு, இன்னும் சற்று நேரத்தில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படவுள்ளன. படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionஃபிரான்ஸ் அதிபர் தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் 11 வேட்பாளர்கள் போட்டியிடும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில், முதல் நான்கு வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. இது வரை அரசு பதவிகளில் அங்கம் வகித்திராத தாராளவாத மையவாதியான இமானுவேல் மக்ரோங், தேசியவாத வலது சாரியான மர்ரீன் ல பென் மற்றும் இடதுசாரியான ஷான்-லூக் மெலாங்ஷாங் ஆகிய வேட்பாளர்…

  20. "விக்ரம்' படத்தின்போது நடிகர் கமல்ஹாசன் குறித்து எம்ஜிஆருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தரத் தயாராக இருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி' என்ற தலைப்பில் புதன்கிழமை கடிதம் ஒன்று எழுதினேன். அதில் கமல்ஹாசன் தொடர்பாக எம்ஜிஆருக்கு ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய கடிதம் குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். இது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், எம்ஜிஆருடன் தினமும் பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு இருந்ததால் எதற்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார். இதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தன் பேட்டியில் கூறியுள்ளார். நான் …

    • 2 replies
    • 1.1k views
  21. குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா. வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்டில் இருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வர தகுதி பெற்ற 300,000 பேர் எதிர்காலத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார். …

  22. சூடானிய போயிங் 737 ரக விமானம் ஒன்று 95 பேருடன் கடந்தப்பட்டுள்ளது. குறித்த விமான சூடானின் Nyala இல் இருந்து Khartoum நோக்கிப் பறந்து கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளது. அது தற்போது சூடான் - லிபிய எல்லையில் லிபியாவின் விமான நிலையமொன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தீரும் நிலை தோன்றியதால் குறித்த விமானம் தரையிறங்க மனிதாபிமான அடிப்படையில் லிபியா அனுமதி அளித்ததுள்ளது. எனினும் கத்தியைக் காட்டி விமானத்தைக் கடத்திய கடத்தல்காரர்/கள் அதைப் பாரீஸ் நோக்கிக் கொண்டு செல்ல எரிபொருள் தருமாறு கோரி வருகின்றனர்..! http://news.bbc.co.uk/1/hi/world/africa/7582975.stm

    • 4 replies
    • 1.1k views
  23. சீனாவிலிருந்து 20 ஆண்டுகளில் 5 கொள்ளைநோய்கள் , இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது: அமெரிக்கா கடும் தாக்கு ராபர்ட் ஓ’பிரையன், ட்ரம்ப் கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் மக்களிடம் பரவி உலகை அச்சுறுத்தியுள்ளன. ஒருகட்டத்தில் இது நிறுத்தப்பட்டாக வேண்டும், என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ’பிரையன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் பரவலுக்கும் சீனாதான் காரணம், இதனால் உலகம் முழுதும் 250000 பேர் இறந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தையும் கடந்து விட்டது என்றார் ஓபிரையன் உலகம் நெடுகிலும் மக்கள் எழுச்சி பெற்று சீனாவிடம், ‘சீனாவிலிருந்து கிளம்பும் கொள்ளை நோய்களை இனியும் பொறுக்க மாட்டோம்’ என்று கூறும…

    • 3 replies
    • 1.1k views
  24. சேகுவேராவின் மகன் திடீர் மரணம் By DIGITAL DESK 5 31 AUG, 2022 | 03:08 PM புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமீலோ சேகுவேரா தனது 60 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவேரா. கியூபாவை சேர்ந்த சேகுவேரா புரட்சியாளர், வைத்தியர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர். சேகுவேராவின் இளைய மகன் கமீலோ சேகுவேரா. இவர் சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கமீலோ சேகுவேரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். உயிரிழக்கும் போது அவருக…

  25. கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு மரணம் மார்ச் 31, 2007 டெல்லி: பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 91. சுப்புடுவின் உடலுக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இசை விமர்சகரான சுப்புடு என்ற சுப்ரமணியம் கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர். இவரது விமர்சனங்கள் காரசாரமானவை சுவையானவை பல நேரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர் நேற்று முன்தினம் டெல்லியில் காலாமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடு…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.