உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
குடிவரவு நடைமுறையை கடுமையாக்குகிறது பிரிட்டன் வேற்று நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு குடியேறுவது அடுத்த வருடம் முதல் கடினமாகவிருக்கும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளதைப் போன்று, புள்ளிகளின் அடிப்படையில், பிரித்தானிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கக் கூடியவர்களுக்கே விசாக்களை வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பிரித்தானியாவில் குடியேற விரும்புவர்களின் தகுதி அடிப்படையில் விசாக்கள் வழங்கப்படும் என்றும், விண்ணப்பிப்பவர்களில் தொழில்சார் வல்லுநர்களுக்கும் தொழில் துறையினருக்குமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்சார் வல்லுநர்கள் தவிர்ந்த ஏனையவர்கள், மாணவர்கள் …
-
- 1 reply
- 829 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images Image caption முதல் இந்திய-அமெரிக்கனான மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி தெலுகு மொழி பேசக்கூடியவர் கூற்று: அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மொழி தெலுங்கு. உண்மை: ஆம். சில வல்லுநர்களின் ஆய்வுப்படி இது உண்மைதான். தென் இந்திய மொழியான தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், ஆங்கிலத்தைத் தவிர பரவலாக பேசப்படும் மொழிகளில் முதல் 20 இடங்களில் தெலுங்கு இடம் பெறவில்லை. …
-
- 0 replies
- 920 views
-
-
45 லட்சம் ரூபாய் இருக்கிறதா? கனடா குடியுரிமை வாங்கலாம் புதுடெல்லி, மே 3: உங்களிடம் ரூ.45 லட்சம் இருக்கிறதா? உங்கள் குடும்பத்துக்கே கனடா குடியுரிமை பெற்றுவிடலாம். கொஞ்சம் அதிகம் பணம் வைத்திருந்தால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் குடியுரிமை பெறலாம். இதற்கு சட்டரீதியாக மிகச் சுலபமான வழி இருக்கிறது. வெளிநாடுகளில் குடியேற வேண்டும் என விரும்பும் பலரும் அறியாத விஷயம் அது. அந்த ரகசியம் இதோ. வெளிநாட்டில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யத் தயார் எனத் தெரிவித்தால் போதும். எவ்வளவு தொகை என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். ஆனால் இதன் மூலம் குடும்பத்துக்கே குடியுரிமை கிடைக்கும். முதலீட்டு தொகையை எப்படி திரட்டுவது என்ற கவலையும் தேவையில்…
-
- 3 replies
- 3k views
-
-
கனடா- எதிர்வரும் கோடைகாலத்தில் ரொறொன்ரோவில் நடைபெற உள்ள Pan Am விளையாட்டுக்கள் நடைபெறும் இடத்திற்கு அண்மையில் ஒரு நிலக்கீழ் சுரங்கபாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சுரங்கபாதை ரொறொன்ரோவின் றெக்சால் சென்ரர் மற்றும் யோர்க் பல்கலைகழகத்தின் கீல் வளாகம் ஆகிய பகுதிகளிற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தோண்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் தோண்டும் கருவிகள் மற்றும் ஜெனரேட்டரும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த சுரங்கபாதையானது ஒருவர் நிற்பதற்கு போதுமான அளவுடையதாக 2.5 மீற்றர்கள் உயரம், கிட்டத்தட்ட 7 மீற்றர்கள் நீளமுடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கபாதைக்குள் ஒரு ஜெனரேட்டர் மூலம் விளக்குகள் இயக்கப்படுவதுடன்…
-
- 0 replies
- 364 views
-
-
அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை உலகில் அதிக செல்வாக்கு பெயர் பெற்ற பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரபலங்களில் முதல் 100 பேரை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டுள்ளது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை வாரியாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 4-வது ஆண்டாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொது சேவை பிரிவில் செல்வாக்குமிக்கவர்களாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இடம் பிடித்துள்ளார். தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களில் இந்திய வம்சாவழியை சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமிமிட்டல் இடம் பிடித்திருக்கிறார். உலக அமைதி மற்றும் நன்மைக்காக பாடுபடும் மதத்தலைவர்கள் வரிசையில் போப் ஆண்டவர் பெனடிக் இடம் பெறுகிறார்…
-
- 2 replies
- 982 views
-
-
சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை November 9, 2018 குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நீதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகள் வெளியிட்ட புதிய உத்தரவின்படி குடியேறிகள் தொடர்பான ஜனாதிபதியின் தடையை மீறும் நபர்களுக்கு புகலிடம் மறுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டிற்குள் சட்டவிரோதமாக அல்லது ஆவணங்கள் இன்றி நுழையும் அனைத்து வெளிநாட்டினரின் வருகையை இடைநிறுத்துவது மற்றும் நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அமெரிக்காவின் நலன்களுக்கு பாதிப…
-
- 0 replies
- 488 views
-
-
பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார் கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், எடியூரப்பா ராஜினாமா செய்யவில்லை, என்று பா.ஜ., தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளதால், கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறியுள்ளன. சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில…
-
- 1 reply
- 419 views
-
-
ஈரானில் 6.3 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஈரானில் நேற்றிரவு 6.3 ரிக்டெர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை ஒட்டியுள்ள கெர்மன்ஷா மாகாணத்தின் சர்போல் இ ஸகாப் அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கட்டடங்கள் சேதம் அடைந்ததுடன் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். அத்துடன் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் தாக்கிய இடங்களில் 6 மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இராணுவம் மற்றும் துணை இராண…
-
- 0 replies
- 572 views
-
-
சென்னையில் பிறந்து தனது 16வது வயதில் அமெரிக்காவுக்கு சென்றவரான ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தற்போது 43 வயதாகும் ராஜ ராஜேஸ்வரி, ரிச்மாண்ட் கவுண்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் உதவி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ரிச்மாண்ட் கவுண்டி மேயரான பில் டி பிளாசியோ பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ராஜேஸ்வரி பொறுப்பேற்றார். நீதிபதியாக தான் பொறுப்பேற்றது குறித்து அவர் கூறுகையில், இது கனவு போல தோன்றுகிறது. நான் நினைத்ததை விட, மிக அதிகமான பதவி கிடைத்துள்ளது என்றார். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து…
-
- 1 reply
- 326 views
-
-
ஈரானின் கெர்மன் நகரில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி காசிம் சுலைமானியின் புதைகுழிக்கு அருகே நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் புதன்கிழமை குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 170 பேர் காயமடைந்தனர், இதில் அதிகாரிகள் பயங்கரவாத தாக்குதல் என்று அழைக்கப்பட்டனர். முதல் வெடிப்பு சுலைமானியின் கல்லறையிலிருந்து 700 மீட்டர் தொலைவில் இருந்தது, இரண்டாவது ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் யாத்ரீகர்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டபோது, IRNA மேலும் கூறியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதன்கிழமை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.
-
- 10 replies
- 1.1k views
- 2 followers
-
-
தமிழில் எம்.பி.பி.எஸ்.,! ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுகிறது மருத்துவ சொற்களை மொழிபெயர்க்கும் பணி தீவிரம் நமது சிறப்பு நிருபர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. மருத்துவச் சொற்களுக்கு உரிய தமிழ் சொற்களை உருவாக்குவது, மருத்துவ படிப் பிற்கான பாடப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்தல் ஆகிய பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் தமிழில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற முடியும். தமிழ் ஆர்வலர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வரும் தமிழில் மருத்துவ படிப்பு என்ற கோரிக்கை குறித்து தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் …
-
- 12 replies
- 2.7k views
-
-
புலிகளுக்காக நார்வேயிலிருந்து சென்னைக்கு வந்த கருவிகள்: வி.சி. பிரமுகர் கைது வியாழக்கிழமை, அக்டோபர் 11, 2007 சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த உதவி செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கைது செய்யப்பட்டுள்ளார். க்யூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இருந்து கடல் வழியாக ஆயுதங்களும் உதிரிப் பாகங்களும் கடத்தப்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறையான ஐபி எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக கடலோர பகுதிகளில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து வன்னியரசுவின் பெயருக்கு நார்வே நாட்டில் இருந்து இரண்…
-
- 0 replies
- 938 views
-
-
தூணாக நின்ற தமிழன் துரும்பானது ஏன்? இந்திய மக்கள்தொகையில் ஏறத்தாழ பதினாறில் ஒரு பங்கு தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்குரிய அங்கீகாரம் என்பது இந்திய அரசியலில் அளிக்கப்படவில்லை. இந்திய அரசும் சரி, அகில இந்திய அரசியல் கட்சிகளும் சரி தமிழர்களின் தலையாய பிரச்னைகளைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. …
-
- 1 reply
- 546 views
-
-
மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர் கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார். மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார். …
-
- 35 replies
- 6.1k views
-
-
சிதம்பரத்திற்கு எதிராக சுவாமி வழக்கு: தீர்ப்பு பெப்ரவரி 4 இல் இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுப்ரமணியன் சுவாமியின் வாதம் முடிவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பை ஒத்திவைத்தார். அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் பிரதான குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆ. ராசாவுடன், ப. சிதம்பரமும் சமபங்கு குற்றம் புரிந்திருக்கிறார் என்பது, நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் பூர்வாங்கமாகத் தெரிய வருவதாக சுவாமி தெரிவித்துள்ளார். நிதிய…
-
- 0 replies
- 665 views
-
-
உலகை உலுக்கிய புகைப்படம் : உதவிக்கரம் நீட்டிய ஜெர்மனி ஜாம்பவான் கால்பந்து அணி! சிறுவன் ஆயலான் கடற்கரை ஓரத்தில் இறந்து கிடந்த புகைப்படம் வெளியானதையடுத்து, ஜெர்மனியில் கால்பந்து ரசிகர்கள், அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், அகதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளுடன், ரசிகர்கள் போட்டியை காண வருகின்றனர். இந்த புகைப்படம் வெளியான அடுத்த நாளே, ஜெர்மனியின் புகழ்பெற்ற கால்பந்து அணியான பேயர்ன்மியூனிச், ஜெர்மனிக்கு வரும் அகதிகளுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உதவி செய்யும் அறிவிப்பை வெளியிட்டது. நட்புமுறையிலான போட்டிகளில் பங்கேற்று, அதில் வரும் நிதியையும் அகதிகள் நல்வாழ்வுக்காக வழங்க முடிவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் என்ற பாலைவன நகரத்தில் கடந்த 113 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் (38 டிகிரி செல்சியஸ்) அதிகமான வெப்பநிலை நிலவி வருகின்றது. அதிரகரித்த வெப்பநிலை காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த பகுதியில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் பல பிராணிகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஃபீனிக்ஸ் மரிகோபா கவுண்டியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெப்ப அலை காரணமா…
-
- 0 replies
- 518 views
-
-
படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணதிலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
சோனியாவுக்கு அழைப்பாணை அனுப்பலாமா? தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து முரண்பாடு 13.02.2008 / நிருபர் எல்லாளன் வெளிநாட்டு விருது பெற்றது தொடர்பாக சோனியா காந்திக்கு அழைப்பாணை அனுப்புவது குறித்து தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பெல்ஜியம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான "ஓர்டர் ஒப் லியோபோல்ட்' என்னும் விருதை அவருக்கு அந்நாட்டு அரசு வழங்கியது. இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், ""சோனியா காந்தி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே அவரை பாரா…
-
- 2 replies
- 774 views
-
-
பட மூலாதாரம்,SHIVAUN AND ADAM RAFF படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர். எழுதியவர், சைமன் டுலெட் பதவி, பிபிசி செய்தியாளர் "எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது" என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் - ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற 'விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர். பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக…
-
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிக மோசமான 10 சர்வதிகாரிகள் பட்டியலில் பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வேஷ் முஷாரப் எட்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றே இத் தகவலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் முதலாவது இடத்தில் தென்கொரிய ஜனாதிபதி - கிம் கொங்கும் இரண்டாம் இடத்தில் சூடான் ஜனாதிபதி - உமர்-அல்-பஷீரும் பெற்றுள்ளனர். அடுத்து வரும் இடங்கள் முறையே மியான்மார் இராணுவ ஆட்சியாளர், சவூதி மன்னர் அப்துல்லா, சீன ஜனாதிபதி ஹஜீந்தோ, சிம்பாப்வே ஜனாதிபதி ரொபேட் முகாவே, ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத், முஷாரப் , உஸ்-பெஸ்கிஸ்த்தான் ஜனாதிபதி கரிமோ மற்றும் எரித்திரியா ஜனாதிபதி அபெவெர்கி ஆகியோர் பெற்றுள்ளனர். முஷாரப்பை மிக மோசமா…
-
- 2 replies
- 1.9k views
-
-
ஐ.எஸ். அமைப்பின் அடுத்த இலக்கு லண்டன்: பிடிபட்ட தீவிரவாதி அதிர்ச்சி தகவல் சலா அப்தேசலாம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அடுத்ததாக பிரிட்டிஷ் தலைநகர் லண்டன் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 13-ம் தேதி இரவு பாரீஸின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். 130 பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் வெடித்துச் சிதறி உயிரிழந்தனர். சலா அப்தேசலாம் என்ற தீவிரவாதி மட்டும் சில நாட்களுக்கு பிறகு பிடிபட்டார். அவரிடம் பிரான்ஸ் பாதுகாப் புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன…
-
- 0 replies
- 996 views
-
-
தாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்! -கெராக்கான் வலியுறுத்து lingga அக்டோபர் 9, 2019அக்டோபர் 9, 2019220 கோலாலம்பூர், அக்.9- தமிழ், சீனப்பள்ளிகள் நிலைநாட்டப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கெராக்கான் கேட்டுக் கொண்டது. தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்படாது என்று பாக்காத்தான் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக வரலாற்றில் மிகச் சிறந்த துணை கல்வியமைச்சரான தியோ நோ சிங் கூறினார் . ஆனால், இந்தத் தேர்தல் கொள்கை அறிக்கை என்பது சட்டப்பூர்வ சாசனம் அல்ல. மேலும் இவ்வறிக்கை ஒரு பைபிள் அல்ல என்றும் இதைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் துன் …
-
- 0 replies
- 525 views
-
-
ட்ரம்பின் ஹோட்டலுக்கு வெளியே வெடித்து சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸில் (Las Vegas) அமைந்துள்ள ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியது. புத்தாண்டு தினமான புதன்கிழமையன்று (01) இடம்பெற்ற இந்த வெடிப்பில் வாகனத்திற்குள் இருந்த அதன் சாரதி உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். வெடித்துச் சிதறிய டெஸ்லா சைபர்ட்ரக் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது. அவர் டொனால்ட்…
-
-
- 3 replies
- 591 views
- 2 followers
-
-
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள 100 ஆளில்லா விமானம் வாங்க இந்தியா திட்டம் அமெரிக்காவின் பிரிடேட்டர் வகை ஆளில்லா போர் விமானம். அமெரிக்காவிடம் இருந்து 100 ஆளில்லா போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் வீரர்கள் உயிரிழப்பைத் தடுக்க ஆளில்லா போர் விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல், உளவுப் பணிகளில் ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. சீன ராணுவ அச்சுறுத்தல் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியவை மறைமுக கூட்டணி அமைத்துள்ளன. 3 நாடு களும் இணைந்து அடிக்…
-
- 0 replies
- 573 views
-