உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
லடாக்கில்.... 100 இந்திய வீரர்களை. 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்? டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 100 இந்திய வீரர்களை 300 சீன ராணுவத்தினர் முற்றுகையிட்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே உறுதியான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் புர்ட்சே என்ற இடத்தில் கடந்த மாதம் 25 கி.மீ தூரம் சீனப் படையினர் ஊடுருவினர். இந்திய ராணுவத்தினர் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் லடாக் பகுதியில் டெம்சாக் என்ற இடத்தில் சீன வீரர்கள் 30 பேர் கடந்த 11ந் தேதி 500 மீட்டர் தூ…
-
- 0 replies
- 844 views
-
-
ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப்போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்திரா காந்தி ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, "உலகமெல்லாம் நடப்பதுதான்' என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர். இது நடந்தது 1983-ம் …
-
- 1 reply
- 1.6k views
-
-
இராணுவம் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக செர்பியா அறிவிப்பு! செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்குப் மத்தியில், செர்பிய இராணுவம் அதன் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. நாட்டு மக்களை பாதுகாக்கவும் செர்பியாவைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தெரிவித்துள்ளார். வட கொசோவோவில் உள்ள செர்பிய இனப் பகுதிகள் மீது கொசோவோ தாக்குதல் நடத்துவதற்கு தயாராகிவருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இந்த பிரச்சினையை சுமூகமாக மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் ம…
-
- 1 reply
- 614 views
-
-
சில்மிஷ பாதிரியார் 'எஸ்கேப்'போராட்டம் டிசம்பர் 05, 2006 சென்னை: சிறுமிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதராக சர்ச்சையில் சிக்கியுள்ள பாதிரியார் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள், பெண்கள் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் போபர்ஸ் ஜெயராஜ். 60 வயதாகும் இவர் ஒரு பாதிரியார். அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் உள்பட பல சிறுமிகளை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று தனது காம வெறியைக் காட்டியதாக ஜெயராஜ் மீது மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சகாயமேரி என்பவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை உதவி ஆணையர…
-
- 0 replies
- 712 views
-
-
கிழக்கு மியான்மார் பகுதியில் இன்று ரிக்டர் அளவு கோலில் 7.0 என்று பதிவான பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் மையம் தாய்லாந்து, லாவோஸ் எல்லைப்பகுதிக்கு அருகே மலைப்பகுதியில் 10கிமீ ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதன் தாக்கத்தினால் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கட்டிடங்கள் குலுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1103/24/1110324071_1.htm
-
- 2 replies
- 891 views
-
-
ஹா – ஹாங்காங் -1 பொருளாதாரத்தில் அப்படி யோர் அப்பப்பா வளர்ச்சி! எனவே அந்த நான்கு பகுதிகளையும் ‘ஆசியப் புலிகள்’ என்று கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதத்துக்கும் அதிகம் என்கிற அளவில் பொரு ளாதார வளர்ச்சி. வெகு வேகமான தொழில் முன்னேற்றம். சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவற்றுடன் கைகோத்து கர்வம் பொங்க இப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஹாங்காங்.ஹாங்காங் என்றால் சீன மொழியில் ‘‘நறுமணம் வீசும் துறைமுகம்’’ என்று பொருள். ஆனால் இன்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ‘’எங்கள் மூச்சுக் காற்றே தடை பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நறுமணத்தை எங்கே சுவாசிப்பது?’’ என்கிறார்கள் விரக்தியோடு. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பதுதான் இப்போதை க்கு அவர்களுக்கான சுவாசம். …
-
- 4 replies
- 1.4k views
-
-
தன் ராஜ்ஜியத்திற்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று அழகிரி நினைத்திருக்க மாட்டார். தென் மாவட்ட இடைத்தேர்தல்களைப் போல் பணத்தையும், ஆட்களையும் வைத்து சட்டமன்றத் தேர்தலை எளிதாக எதிர்கொள்ளலாம் என நினைத்தார் அழகிரி. அந்த எண்ணத்திற்கு ஆப்பு வைத்து அஞ்சாநெஞ்சனையே நிலைகுலைய வைத்து விட்டது தேர்தல் ஆணையம். மதுரையில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாமா? என்கிற அளவுக்கு தேர்தல் ஆணையம் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. தேர்தலை தள்ளிவைக்க வேண்டும், தேர்தல் முடிவுகளை சீக்கிரம் அறிவிக்க வேண்டும் என்கிற அரசியல் கட்சிகளின் எந்தக் கோரிக்கையையும் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மாற்றப்பட் டன…
-
- 0 replies
- 712 views
-
-
சிதம்பரம் கண்டுபிடித்த பெரிய வரிப்பூதம் சேவை வரியாகும். அரசு நிர்ணயித்த ரூ.36500 கோடி இலக்கை தாண்டி அதிகமாக ரூ 5600 கோடி வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் சேவை வரி வசூலிப்பதன் மூலம் ரூ.40000 கோடி கிடைக்கும். இந்திய மொத்த வரிவருவாயில், சேவை வரியின் பங்கு 54 விழுக்காடாக உள்ளது. இன்னும் பல துறைகளை சேவை வரியின் பிடியில் சிதம்பரம் கொண்டு வர உத்தேசித்துள்ளார். 12% சேவை வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இது ரொம்ப அதிகமானது. சேவை வரியின் சுமை மத்தியதர மக்களின் தலையில் தான் இறங்கிறது என சிதம்பரத்துக்கு தெரியும். யார் எப்படி போனால் என்ன, என் கணக்கில் பணம் சரியாக இருக்க வேண்டும் என சிதம்பரம் நினைக்க கூடியவர். அதெல்லாம் சரி, தொல…
-
- 1 reply
- 761 views
-
-
அகதிகளுக்கு தாற்காலிக நுழைவு இசைவு (விசா) வழங்கும் சர்ச்சைக்குரிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், தனது குடியேற்றச் சட்டத்தை ஆவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா ஆவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்ககல் செய்யப்பட்டது. மசோதா மீது இரவு முழுவதும் நடைபெற்ற விவாதத்துக்குப் பின், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அது வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தையடுத்து, தஞ்சம் தேடி ஆவுஸ்திரேலியா வரும் அதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான தாற்காலிக நுழைவு இசைவு வழங்கப்படும். அந்த நுழைவு இசைவு வைப் பெறுவதன் மூலம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகத் தங்கும் உரிமையை அகதிகள் பெற முடியாது. நுழைவ…
-
- 0 replies
- 261 views
-
-
புதுடெல்லி, ரஷியா அதிபர் விளாடிமீர் புதின் இந்திய வருகை இருநாடுகள் இடையிலான நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா - ரஷியா நாட்டு தலைவர்களுக்கு இடையேயான 15–வது உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உயர்மட்டக்குழுவினருடன் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முதலில் தனிப்பட்ட முறையிலும், பின்னர் உயர்மட்டக்குழு மட்டத்திலும் நடைபெறுகிறது. பின்னர் அவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து பேசுகிறார். ரஷியா அதிபர் புதினை இன்…
-
- 0 replies
- 495 views
-
-
அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்பு Google அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பல உயிரிழந்துள்ளதாக பிட்ஸ்பர்க் நகர போலிஸ் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் போலிஸ் காவலில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த பகுதிக்கு அர…
-
- 1 reply
- 651 views
-
-
பிரதமர் பதவியை ஏற்கும் முழுத் தகுதியும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு- சரத்குமார் சென்னை: இந்திய நாட்டின் பிரதமராகும் முழுத் தகுதியும் படைத்த ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உணர்ச்சிவசப்பட்டுக் கூறியுள்ளார். சரத்குமார் இன்று தனது பிறந்த நாளை எளிமையான முறையில் கொண்டாடினார். ஈழத் தமிழர்களுக்காக தனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்திருந்த அவர், தனது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் ஏழை எளியோருக்கு இன்று உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். சரத் பிறந்த நாள் இளைஞர் தினம் பிறந்த நாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது அவர் பேசுகையில், …
-
- 1 reply
- 587 views
-
-
மலேசிய விமான நிலையத்தில் 7 மாதங்கள் தங்கியிருந்த சிரிய அகதி கனடா அனுப்பி வைப்பு November 29, 2018 விசா காலாவதியாகிய நிலையில் மலேசிய விமான நிலையத்தில் தங்கியிருந்த சிரிய அகதி ஒருவர் 7 மாதங்களுக்குப் பின்னர் கனடா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிரியாவைச் சேர்ந்த 37 வயதான ஹசன் அல் கோடார் என்பவர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்து அங்கிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முயன்ற போது கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர். மேலும் ஹசனின் விசா காலம் முடிந்து விட்டதாகத் தெரிவித்து அவருக்கு அனுமதி மறுத்ததனைத் தொடர்ந்து அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்குப் பின்னர் இந்த வாரம் அவர் கனடா சென்றடைந்து…
-
- 0 replies
- 499 views
-
-
[11 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * புஷ் கவலை கொசோவாவிற்கு ஐ.நா. ஆதரவுடன் சுதந்திரத்தை வழங்குவதற்கான திட்டம் ரஷ்யா மற்றும் சேர்பியாவின் எதிர்ப்பினால் பாதிப்படையும் நிலையிலுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் தெரிவித்துள்ளார். இத்தாலிக்கான விஜயத்தின் போது அந் நாட்டு பிரதமர் றோமனோ புறொடியுடன் பேச்சுக்களை நடத்திய பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இப் பேச்சுக்களின் பின் புஷ்ஷூக்கு எதிராகத் திரண்ட ஆர்ப்பாட்டகாரர்களை கலகத் தடுப்பு பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கலையச் செய்தனர். ஜனாதிபதி புஷ்ஷின் ஜரோப்பிய விஜயத்தின் அடுத்த கட்டமாக அவர் அல்பேனியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். சேர்பியாவிடமிருந்து கொசோவாவிற…
-
- 0 replies
- 763 views
-
-
அமெரிக்காவின் கல்ஃபோர்னியா மாகாணத்தில், தண்ணீர் பஞ்சம் முன்னேப்போதும் இல்லாத அளவில், அதிகரித்துள்ளது. நெஸ்லே நிறுவனம் தண்ணீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வதை கண்டித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சியால், அங்குள்ள தேசிய வனப்பகுதிகளில் லட்சக்கணக்கான மரங்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால், அம்மாகாணத்தில் தண்ணீரைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவில் வறட்சி நிலவுவதால் பெருநகரங்களில் தண்ணீர் உபயோகத்தில் 25 சதவீதத்தை குறைக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்…
-
- 5 replies
- 595 views
-
-
எந்த நாட்டிலும் ஊழல் இல்லாமல் இல்லை' - தன்னார்வ நிறுவனத்தின் அதிரவைக்கும் ஆய்வு ..! watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் பட்டியலில் சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள் முதல் முன்று இடங்களைப் பிடித்துள்ளன. வறட்சி, போர், முதலான விஷயங்களால் சிக்கி தவித்து வரும் இந்த நாடுகளில் லஞ்சம், ஊழல் அதிக அளவில் தலைவிரித்தாடுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியா 78-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு…
-
- 0 replies
- 955 views
-
-
பெங்களூர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு வீட்டிற்கு சென்ற 24 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எச்.ஏ.எல் பகுதியில் வசிக்கும் அப்பெண்ணின் பேஸ்புக் நண்பனான ஆரிப் இன் பிளாட்டில் இந்தச் சம்பவம் நடந்தேறியுள்ளது.பேஸ்புக் நண்பர்: பேஸ்புக் மூலம் நண்பர்களான ஆரிப் மற்றும் எம்.பி.ஏ படித்து வரும் அப்பெண், ஆரிப் இன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக அவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஆதித்யா மற்றும் ஆரிப் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.பிறந்த நாள் கொண்டாட்டம்: ஆரிப், ஆதித்யா மற்றும் அப் பெண் மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பிறந்தால் கொண்டாட்டத்தில் கள…
-
- 44 replies
- 3.2k views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/5/2011 11:02:45 AM 4Share அல் கொய்தா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடன் வெறும் 90 வினாடிகளுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற பரப்பான தகவலை அமெரிக்க சீல் படையின் முன்னாள் அதிகாரியொருவர் வெளியிட்டுள்ளார். சக் பாரர் என்ற அமெரிக்க நேவி சீல் படையின் முன்னாள் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியவரே இப்புத்தகத்தினை எழுதியுள்ளார். அவர் தற்போது வெளியிட்டுள்ள புத்தகமொன்றில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். பாரர் இத்தாக்குதலில் நேரடியாக பங்குபற்…
-
- 1 reply
- 854 views
-
-
கொடூரத்தின் உச்சக்கட்டம்: பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை வெடிக்க செய்து ஒத்திகை பார்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள்[ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 04:42.10 பி.ப GMT ] ஈராக்கில் பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் ஈராக்கின் தியாலா மாகாணத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அதிநவீன வெடிகுண்டுகளை உடலில் எப்படி கட்டி வெடிக்கச் செய்வது என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் செய்து காண்பித்துள்ளனர். அதற்காக தங்களுக்கு எதிராக போராடிய ஒருவரின் குழந்தையின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் அதை வெடிக்கச் செய்துள்ளதாக த…
-
- 1 reply
- 480 views
-
-
கடந்த 5-ம் தேதி கொச்சினில் மலையாள சினிமா உலகினர் ஒன்றுகூடி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ‘அணையை உடைப்போம்…’ என்று குரல் எழுப்பினார்கள்.அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், முகேஷ் போன்ற நடிகர்களும் கமல், உன்னிகிருஷ்ணன் போன்ற டைரக்டர்களும் அடக்கம். தமிழ் சினிமா மட்டும் இன்னும் அமைதி காக்கும் சூழலில், இயக்குனர் பாரதிராஜாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ”இன்று, முல்லைப் பெரியாறு பிரச்னை அந்த அணையைக் காட்டிலும் பிரமாண்டமாக எழுந்து தமிழனை மிரட்டுகிறது. நேற்று வரை சகோதரனாக இருந்த மலையாளி, இன்று சண்டையாளி. இரண்டு மாநில மக்களையும் சமாதானப்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மாநில அரசுகளை மோத விட்டு ஓரமாய் உட்கார்ந்து ரசிக்கிறது. இப்போது கேரள…
-
- 0 replies
- 777 views
-
-
மென்பொருளின் கோளாறே விபத்துக்களுக்கு காரணம் – ஒப்புக்கொண்டது போயிங்! போயிங் 737 MAX ரக விமானங்களுக்கான பாவனை மென்பொருளின் வடிவமைப்பில் கோளாறு இருந்ததை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க குறித்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த பாவனை மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், பாவனை மென்பொருள் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் விவரங்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதேவேளை, தொடர்ச்சியாக இடம்பெற்ற விமான விபத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மென்பொருளில…
-
- 5 replies
- 815 views
-
-
இதைப்பாருங்கள் இதயமே நின்று விடும். எனக்கு இந்த நாட்டு மொழி தெரியாது. அதனால் விளக்கம் குறைவு. http://www.dagbladet.no/tv/index.html?clipid=23923
-
- 3 replies
- 3k views
-
-
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி , “கர்மயோகம்” என்னும் தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்பவர்கள் அதன் மூலம் ஒரு கட்டத்தில் ஆன்மீக ரீதியாக உயர்வான நிலையை அடைகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். சி.என்.என்.ஐ.பி.என் செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும் http://www.ibnlive.com/news/scavenging-a-s...di/53024-3.html
-
- 4 replies
- 1.3k views
-
-
பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதற்கு 'தற்செயலாக' காரணமானவர் காலமானார் EPA குண்டார் ஸ்சாபோவ்ஸ்கி ஜெர்மனியில் பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதை தூண்டிய தகவலை தற்செயலாக வெளியிட்டிருந்த அப்போதைய கிழக்கு ஜெர்மனி அரசாங்கத்தின் பேச்சாளர் காலமானார். ஜெர்மனியில் பெர்லின் சுவர் தகர்க்கப்படுவதை தூண்டிய தகவலை தற்செயலாக வெளியிட்டிருந்த அப்போதைய கிழக்கு ஜெர்மனி அரசாங்கத்தின் பேச்சாளர் காலமானார். 1989-ம் ஆண்டில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஊடக சந்திப்பொன்றில் இவர் வெளிப்படுத்திய தகவலே பெர்லின் சுவர் தகர்க்கப்பட காரணமானது. பெர்லினில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த குண்டார் ஸ்சாபோவ்ஸ்கி-க்கு 86 வயது. கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி தோல்வியடைந்து கொண்டிருந்த காலத்த…
-
- 1 reply
- 761 views
-
-
ஹெய்ட்டியின் வான்பரப்பில் அமெரிக்காவின் இரண்டு ஜெட்விமானங்கள் துப்பாக்கி பிரயோகத்தினால் சேதமடைந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஹெய்ட்டியில் அதிகரிக்கும் காடையர் குழுக்களின் வன்முறைகளின் மத்தியில் அந்த நாடு விமானப்போக்குவரத்தினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஹெய்ட்டி தலைநகர் போட் ஒவ் பிரின்சில் தரையிறங்கிக்கொண்டிருந்த ஸ்பிரிட் எயர்லைன்ஸ் விமானத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது, அதன் பணியாளர் ஒருவர் சிறியகாயங்களிற்குள்ளானார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னர் அந்த விமானம் அங்கு தரையிறங்காமல் டொமினிக் குடியரசின் சான்டியாகோவில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை சோதனையிட்டவேளை துப்பாக்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-