Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பள்ளிச் சீருடையில் பட்டென்று வந்தவளா இவள்.. கண்கள் அகல விரிய பார்வை விழுந்தது அவள் மீது..! நேற்று அவள் வகுப்பில் என்னோடு கதிரைக்கு சண்டை பிடிக்க தள்ளி விட்டதில் சிறு உரசல் கத்தியே உயிரை எடுத்தாள் வாத்தியார் தந்த அடியோடு அது நினைவில் பதியும் வரை. அன்று அவள் சிறுமி நான் சிறுவன். வளர்ந்தோம் இருவரும் பருவமும் வந்து சேர்ந்தது அவள் கடைக்கண் பார்வை வீச நானும் பதிலுக்கு பேச ஆசைகள் அரும்பின அதற்கு அன்பு என்று பெயரிட்டோம். கடிதங்கள் பரிமாறி கடலையும் போட்டு கையும் கோர்த்து வலண்டைனும் கொண்டாடினோம். காலமோ ஓட்டமாய் ஓடியது.. ஓர் நாள் சொன்னாள் "அப்பாக்கு லண்டனில் நிரந்திர விசா வந்திட்டுது நாங்களும் போகப் போறம்." மின்னலா…

  2. படத்தினைபெரிதாகப்பார்க்க இது புத்தர் ஞானம் பெற்ற சித்திரைநாளின் சிறப்புப்பரிசு. பாவப்பட்ட ஈழத்தமிழருக்கு பெளத்த தேசம் வழங்கிய விருது. அன்று விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன எங்கள் ஊர்களில் உயிர்கள் அணைந்தன. பாருங்கள் எல்லோரும் உற்றுப் பாருங்கள். ஈரம் நொதிக்கும் இதயங்களே! தீர்ப்பு வழங்கவரும் தேசங்களே! எங்கள் வாழ்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள். ஏதும் அறியாமல், ஏன் சாகிறோமென்றும் தெரியாமல் குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு குடும்ப விருட்சம். பிஞ்ச அணைத்தபடி பூவும், பூவைப்பிணைத்தபடி காயும் தமிழருக்குக் காவலென்பதால் நாயும் ஏரியுண்டு போவதுதான் எமக்கெழுதிய விதியா? உலகமே! இதற்கும் உன் மெளனம் தான் பதிலா? …

    • 1 reply
    • 2.2k views
  3. அன்று கையில் புத்தகமும் கையுமாய் கல்வியும் கண்ணுமாய் அன்னை தந்தை ஆசிரியன் சொற்படிமாய் தமிழ்த் தம்பிமார் இருந்தார்கள் இன்று வாயில் புகையும் தண்ணியுமாய் கையில் கத்தியுமாய் வாளுமாய் கொன்று திரிகிறார்கள் அன்று ஒரு காலம் மேய்ப்பவன் ஒருவன் இருந்தான் ஏன் என்று கேட்க அங்கு ஒரு ஒழுங்கு இருந்தது அமைதி பேண தமிழருக்காய் ஒரு படை இருந்தது இன்று என்ன இருக்கின்றது இன்று எவரும் இல்லாமல் ஏன் என்று கேட்க தானாய் தம்மையே அழிக்கிறார்கள் தமிழர் தெரிந்து கொள்ளுங்கள் எம்மை ஆக்கிரமித்து இருப்பவனுக்கும் நாம் அழிவது தானே விருப்பம் இனி என்ன தான் மிஞ்சி இருக்கப் போகிறது கஞ்சிக்கு கடைசியில் என்ன செய்வீர் …

  4. அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டினில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல். சுஜீத்தின் சிங்கிள் என்ற அல்பத்தில் இடம்பெற்ற பாடல்களை நீங்கள் ஏற்கனவே சயந்தன் அண்ணாவின் சுஜீத்திடுனான நேர்காணலின் மூலம் அறிந்திருப்பீர்கள்.இன்று கூட வசந்தன் அண்ணா சுஜீத்தின் அடுத்த அல்பத்தில் இடம்பெறுகின்ற "விடுதலை" என்ற பாடலின் ஒளிப்பதிவை வசந்தம் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். ஒருதடவை பார்த்தபோதே "இது கதையல்ல நியம்" என்ற இந்தப்பாடல்என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.பாடலைப் பார்க்கும்போது மலேசியத்திரைப்படமான "ஆண்டாள்" கண்முன்னே …

  5. இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து மலரத் துடித்த போது உன் வசியப் பார்வை என்னை சட்டென மலரவைத்தது. உன்னைப் பார்த்த அந்நிமிடத்தில் இருந்து என் மனசுக்குள் எதோ ஒரு தாக்கம். இதைத்தான் காதல் என்பார்களோ? புரியவில்லை..! எனக்கு புரியவில்லை, கிளியே..! அவனிடம் ஒரு முறை கேட்டு சொல் மெளனத்தின் ஓரத்தில் நெஞ்சின் ஈரத்தில் வெட்கப்படும் என் மனசு இராத்திரியில் கனவுகள் பகலில் அவன் நினைவுகள் இதுதான் என் வாழ்க்கை கிளியே இதையும் அவனிடம் சொல் ஆயிரமாயிரம் கனவுகளில் அவன் வந்து என் கூந்தல் கோதி தூக்கத்தை கலைத்து விளையாடி மகிழ்ந்த அந்த இனிமையான இரவுகள் அதையும் மறக்கவில்லை நான் இதையும் அவனிடம் சொல் கிளியே. பசுவின் மடியினைத் தேடும் பசுங்க…

  6. "போலிச்சாமி வண்டியில் போகிறார்" "திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் அள்ளித் தூவி திருநங்கை ஒன்றைத் தேடுறான்!" "குருவி சாஸ்திரம் கூறி குருட்டு நம்பிக்கை வளர்த்து குருவாய் தன்னை நினைத்து குருதி கொதிக்க குழைகிறான்!" "ஊரு பேரு தெரியாதவன் இருளும் பகலும் புரியாதவன் தருமம் பற்றி பேசுகிறான் செருக்கு பிடித்து அலைகிறான்!" "தெருவில் தனிய நின்றால் அருகில் வந்து போதிக்கிறான் புருஷன் இல்லை என்றால் புருவம் உயர்த்தி பார்க்கிறான்!" "அருள் வேண்டி பத்தினி அருகில் நெருங்கி வந்தால் அரு…

  7. புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ திட்டம் போட்டு அறுந்த விழ…

    • 10 replies
    • 3.5k views
  8. Started by Jamuna,

    மாவீரர்கள்..........!! தமீழீழ விடிவிற்காய் நும் விடியலை துறந்து தமிழருக்காக விடியலை தேடிய உன்னதமானவர்களே! எம் உதட்டில் பூக்கும் புன்னகைமலரிற்காக உயிர்துறந்த உங்களுக்கு மலர்தூவும் நேரம் இது!! கதிரவன் ஒளிபாய்ச்ச அஞ்சும் எம் தமீழீழ மண்ணில் நஞ்சுமாலையணிந்து திக்கெட்டும் ஒளிபாய்ச்சிய துஞ்சா நெஞ்சங்களே!! பெயருக்கும், புகழிற்கும் பேராசைப்படும் இவ்வுலகில் எதையும் எதிர்பாராது பெயரதனை மறந்து தலைவனின் கரத்தை பலபடுத்த வந்தவர்களே!! உதட்டளவில் வீரத்தை உச்சரிக்கும் மனிதருள் வீரத்தை நிஜமாக்கி காட்டி மெளனமானவர்களே..!! எம் மண்ணிற்கு உயிர் தந்து உம்முயிரை மண்ணிற்கு அர்பணித்த வீரர்களே நீங்கள் வீரர்கள் அல்ல வீரபுருசர்…

    • 7 replies
    • 1.8k views
  9. போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள் ---------------------------------------------------------------- கவிதை:தீபச்செல்வன் _______________________________ 01 போராளிகள் மடுவைவிட்டு பின் வாங்கினர். நஞ்சூறிய உணவை தின்ற குழந்தைகளின் கனவில் நிரம்பியிருந்த இராணுவ நடவடிக்கைகளிலிருந்து போர் தொடங்குகிறது. நகர முடியாத இடைஞ்சலில் நிகழ்ந்து வருகிற எண்ணிக்கையற்ற இடப்பெயர்வுகளில் கைதவறிய உடுப்புப்பெட்டிகளை விட்டு மரங்களுடன் ஒதுங்கியிருக்கின்றன சனங்கள். போர் இன்னும் தொடங்கவில்லை. 02 போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு பின் வாங்கினர். பயங்கரவாதிகளை துரத்திக்கொண்டு வருகிறது அரச யுத்தம். மரத்தின் கீழ் தடிக்கூரைகளில் வ…

  10. [size=3]போராட்டம் மறந்து, பிரிவினை தொடக்கி,[/size] [size=3]தலைமை மறந்து, தலைமை பதவி விரும்பி,[/size] [size=3]ஈகம் மறுத்து, ஈனம் பூண்டு[/size] [size=3]வலிகள் மறந்து, வடுக்கள் மறைத்து[/size] [size=3]அபகரிக்கவும், ஆழவும், [/size] [size=3]அவலத்தில் குதித்தாடும் தமிழர்களே,[/size] [size=3]மாவீரர்களின் ஈகங்களை அவமதிப்பது... [/size] [size=3]மாவீரர்களின் தியாகங்களை கூறுபோடுவது...[/size] [size=3]மாவீரர்களை[/size]யே [size=3]பங்குபோடுவது...[/size] [size=3]மாவீரர்களை வருவாய் முதலீட்டாக்குவது...[/size] [size=3]கிராதகர்களே!! நீங்கள் பிணந்தின்னியிலும் கேவலம், உங்களைப் பார்த்து தாசி கூட கேவலமாகச் சிரிப்பாள். மாவீரரின் தியாகங்களில் வியாபாரம் செய்வதை விடுத…

  11. ஒரு கூதல் மாலை ............. குளிருக்குப் பயந்து ஒதுங்கிய பகலவன். இருட்டின் அரசாட்சி. பனி மூடிய மலைகள் வழிய வழி இல்லை. நாட்கள் விறைத்தபடி. காற்றில் ஈரம் இறுகி பனிப் பாதையாகி, வழுக்கி வழுக்கி தெருவில் திரிவதோ செப்படி வித்தையாய். உடைகள் பாதணிகள் பாரமாய் மனம் அதைவிட கனமாய். என்றாலும் ஓர் இதம் பனியின் உறைதலில். பனி கிழித்து சாணகம் தெளித்து கோலம் வரைய நினைக்கிறேன். நிமிடங்கள் சேமித்து ரசிக்க மறுக்கும் தெருப்பாடகனின் பாடலாய், அவரவர்க்கான அவசர அழைப்புக்களாய் அலுவல்கள். கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள். பூச்சாண்டி மனிதர்கள். பனி ரசித்து பார்வைகள் கண்ணாடி உடைக்கும் படியோடு நடை நிறுத்தும் பூனைக…

  12. முள்ளிவாய்க்கால் தனில் அழித்திட்டோம் புலிக் குகை கலைத்திட்டம் தமிழ்க்குடி.. எக்காளமிட்டது துட்டகைமுனு வம்சம்..! கலைத்திட்டது தமிழ் குடியல்ல தேன்கூடு.. தமிழ் உலகெங்கும் - அது கட்டுது வதைவதையாய் பெரும் கூடு..! தேடி வந்து அழித்த பகை திகைத்து நிற்கும் தருணங்கள் பல காத்திருக்குது..! வெற்றி முழக்கமிட்ட சிங்களம் விழி பிதுங்க முழங்குது விடுதலைக் கோசம் தமிழ் மாணவர் பாசறையெங்கும்..! செம்மொழியாம் தமிழ் மொழியில் தாய் நிலமாம் தமிழகத்தில் மையம் கொண்டு....! வீழ்த்திவிட்டோம் சோழப் பெருங்கொடியாம் புலிக்கொடி..! மமதையில் நின்ற மகிந்த கூட்டம் முன்னிலையில் பறக்குது மீண்டும் புலிக்கொடி சர்வதேசம் எங்கும்..! உச்சரிக்கக் கூட முடியாது.. பிரிவினை…

  13. போர் கண்டு பொலிவிழந்த தேசம் எமது பேரல்லல் கொண்டு இன்றும் இருக்கிறது பெருமைகள் சொல்லி ஆற்றிட முடியா பேரவலம் கண்டேதான் பேசாது நிற்கிறது எத்தனை ஆண்டுகள் எம் காலில் நின்றோம் நாம் அத்தனையும் அழிந்து ஆவியாகிப் போனது கொத்தளங்கள் சுமந்து கொடிகட்டி ஆண்டவர் நாம் கேடுகள் சுமந்து கேட்பாரற்றுக் கிடக்கின்றோம் வீதிகள் எங்கும் விளக்கொடிந்து வழக்கொழிந்து வீடுகள் எங்கணும் விலையற்ற மனிதராய் கூடைகள் நிறைக்கும் குப்பைகளாய் நாங்கள் கூடுகளின்றிக் கூனர்களாய்க் கிடக்கின்றோம் பண்பாடு காத்து பார் புகழ வாழ்ந்தவர் நாம் பட்டினிகொண்டு பரிதவித்து நிற்கின்றோம் மானமிழக்கா மாண்பு மிக்கவர் நாம் மாசுபட மடையரிடம் மண்டியிட்டு நிற்கின்றோம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்தகுடி காலூன்ற நிலை…

  14. 2018ன் முதலாவது கவிதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இது பிரபஞ்சத்துள் மாநுடமாக நம்மை உயர்த்தும் காதல் பற்றிய கவிதை. இன்னும் முடியாத கவிதையின் முதல் பத்தி இதோ. அர்த்தமுள்ள ஆரம்பமா? உங்கள் கருத்துகளை அறிய ஆவல். எழுதுங்கள். ஒரு கவிதை வளருவதை தருவது கவிதைப் பட்டறைபோல இளம் கவிஞர்களுக்கு உதவக்கூடுமானால் மகிழ்வேன். பல தடவைகள் நான் எடிற் பண்ணி மாற்றுவதையும் கவனியுங்கள்..முகநூலை அணைத்துவிட்டு சன்னலை திறக்கிறேன் முன்னே ஒளி அலைக்கும் பனி மலைகளில் உன் மலரும் மார்புகளூடு அசைகிற தங்கப் பதக்கம்போல காலைச் சூரியன் உயர்கிறது. . கண்ணம்மா உன் பந்தாடும் காதலால் …

    • 3 replies
    • 1.1k views
  15. நெஞ்சு (உ)ரசிய பூவே... --------------- செவ்வானச் சிவப்புக் கன்னம் சிந்தாகும் முல்லைச் சிரிப்பு முன்னாடும் இரண்டு கண்கள் முத்தாடும் செவ் விதழ்கள் தள்ளாடும் வாழைக் கால்கள் தடுமாறும் அந்த நினைவு பந்தாடும் உந்தன் அங்கம் பஞ்சாகும் எந்தன் இதயம் முகம் துடைக்கும் காற்றில் முந்தானை அது சரிய தீ வளர்த்த மெழுகாய் தீப்பிடித்து நான் உருக கண் மூடி ரசிப்பதேன் காதல் நோயை வளர்ப்பதேன் மனம் அமிழ்ந்து போகுமட்டும் மது நிரப்பி வைப்பதேன் சொல் ஆடும் சுந்தரம் செதுக்கி வைத்த சிற்பமிது வில் ஆடும் புருவம் விளை யாடும் பருவமிது கொன்று கொன்று போகிறாய் கொஞ்சம் மீதி வைக்கிறாய் நெஞ்சு (உ) ரசிய பூவே கொஞ்சி இருக்க வந்துவிடு -எல்…

    • 11 replies
    • 1.9k views
  16. Started by வல்வை சகாறா,

    மௌனம் மௌனம் தேவைதான் - ஆனால் காலமெல்லாம் மௌனிக்காதே! நாவைப்புூட்டி வைத்தல் நாளைய சந்ததிக்கு நல்லதெனில் மௌனத்தைக் காத்துக்கொள்! தேவை ஏற்படின் மோனம் கலையலாம். தென்றலை மீறிப் புயலாவும் வீசலாம். மௌனம் நிலைக்கும்வரை - அதன் மகிமை புரியாது. மாறி எழுந்த பின் மௌனிக்க முடியாது.

  17. கால்களில் கிடந்த மண் பொருக்குகளை தட்டிக் கொண்டிருக்கையில் சிதைந்து ஓலமிடத் தொடங்கின விளையாதுபோன பாட்டனின் கனவுகள். கதைகளில் சொல்லாத ரேகைகளில் கூறாத விரல்களால் தீட்டாத பாட்டனின் கனவுகள் கூடி மொய்க்கத்தொடங்கின, விளைந்த நெருக்கத்தில் நான் அறியாத பாட்டனின் முத்தமொன்றை பரிசளித்தன, உடல் சிலிர்க்க நடுக்கத்தோடு முத்தம் வெளியேற்றிய கண்ணீரை முகர்ந்தவை, கால நாற்றங்களால் உணர்வடக்கிக் கொண்டன, கண்ணீர் வெளியேறிய வெற்றிடத்தில் பாட்டனின் வயல் வளரத்தொடங்கியது. விளையாத கனவுகள் உணர்வுடைத்து இனி வேர்விடக் கூடும். எனிலும், நான் இன்றே எனது வயலை கொலை செய்துவிடப் போகிறேன்.

  18. இறந்த காலத்தை மறப்பதற்கான கருவி கவிதை: தமிழ்நதி - ஓவியம்: ரமணன் அரசே, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உங்கள் கட்டளைப்படி கைகளை உயர்த்தியபடி அம்மணமாக வெளியேறிய பாதை செப்பனிடப்பட்டுவிட்டது துருத்தி நின்ற எலும்புகளை சதை வளர்ந்து மூடிவிட்டது மண்மேடுகளினுள்ளிருந்து `வா’வெனக் கை அசைத்த உடுப்புகளும் உக்கிப்போயின துருப்பிடித்த தகரத்தால் தொப்பூள்கொடி அறுக்கப்பட்ட குழந்தை ஒன்பது வயதுச் சிறுவனாகி மீண்டும் பள்ளிக்கூடமாகிவிட்ட அகதி முகாமில் படிக்கச் செல்கிறான் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’யாகவிருந்த கடற்கரையில் சூள்விளக்குகள் மினுமினுக்க மீன்பிடி வள்ளங்கள் தளும்பித் திரிகின்றன இன்னமும் செப்பனிடப்படாத வீடுகளுள் தங்கள் …

  19. அம்மா மூக்குவழி நீருகுக்க வைக்கும் இந்த முன்பனிக் காலம் இதயமாயில்லை. காதுமடல் களவாடிச் செல்லும் பைன்மரக்காடுகளின் ஊதற்காற்று துன்பம் தருகிறதம்மா! என்னிலும் சற்று வெளிறியவன் ஏவலிட்டான். மாதக் கடைசியை மனம்கொண்டு தேய்த்ததில் பாத்திரங்கள் போலத்தான் கைகளும் வெளுத்துப் போயின. என்ன குறையென்று நேற்றென் நண்பன் கேட்டான். ஏதுமில்லைத்தான் சொல்லுதற்கு. ஆனாலும் ஆனாலும் உறுத்துகிறது ஏதோவொன்று கவளம் சோற்றில் கடிபட்ட கல்லாய். அம்மா! நானும் அப்பா போல் பெரியவனாகி விட்டேன் அப்பாக்கு அறுபத்தாறில் அடங்காதென்ற "நாரிப்பிடிப்பு" உன்மகனுக்கு இருபத்தாறில். இங்கு பருவங்களில் ஒன்றாம் வசந்த க…

  20. அம்மா! தொலைவில் ஒரு குரல் இன்னும் எதிரொலிக்கின்றது பய பீதியில் உயிர்கள் பரிதவிக்கின்றது கொலை வாழுக்கு முன்னால் குற்றுயிராய் முனகும் குரல்கள் உயிருடன் எரியும் உடல்களில் இருந்து மானுட பாசைகளுக்கு விழங்காத உயிர்களின் ஓலம் மூச்சோடு திணறுகின்றது கண்ணில் தூசி விழுந்தால் கண்கள் வலித்து கலங்கும் எம் உறவுகளின் கண்களையே தோண்டி எடுத்த போது மானுடம் நிர்வாணமானது வன விலங்குகள் சிங்களத்தின் முகத்தில் காறித் துப்பின கணங்கள் அவை கறுப்பு யூலை அம்மா……………! அருகில் ஒரு குரல் இன்னும் வங்காலையில் சாமத்தின் நிசப்தங்களை கிழித்தெறிகின்றது அல்லைப்பிட்டியில் பிஞ்சுகளின் குரல் ஊமையின் அலறலாய் உலக மனட்சாட்சியிம் நிய…

    • 16 replies
    • 2.4k views
  21. நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... ஏடும் எடுத்ததில்லை ஏரெடுத்த அழுக்கும் கலைஞ்சதில்லை ஏர்போட் ஏறி இறங்க எடி நான் உனக்கு ஏற்ற ஆளாய் வரமாட்டேன்.. பாடமும் படிச்சதில்லை பட்டமும் பெற்றதில்லை பகட்டும் எனக்கு இல்லை.. எடி நான் உனக்கு ஒத்துவரமாடேன்.. நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... **** வாசலில் வாடி நிற்கும் செவ்வரத்தை நான் மடி மீது ஊஞ்சல் கட்ட மாதுளை உனக்கு மன்னன் மகனும் அல்ல எடி நான் உனக்கு என்றும் தோதாய் வரமாடேன் காவல் காக்க நான் நாயும் இல்லை உன் காலடி சுற்றிவர பூனையும் இல்லை கட்டிலில் …

  22. அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை - உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ......!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் ... செருப்பில்லாத பாதங்களேடு.... இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே .....!!! அ - வரிசையில் சொற்கள் சொல்லடா அம்மா என…

  23. கார்த்திகைப் பேரொளியில், விழியோரக் கசிவோடு மீட்பர்களே!..... நீங்கள் விதையான தாய்மடிநோக்கி உமைநாடி அணி வகுத்தோம். பார்த்தொருக்கால் விழிதிறந்து உம் பூத்தமலர் முகங்காட்டி புன்னகைத்துக் கதைபேசி கண்மணிகாள் உறங்குங்கள். நெஞ்சப் பெருவெளியில் நினைவெல்லாம் விக்கிநிற்க அஞ்சாத் தேவர்காள் அகமெல்லாம் நிறைகின்றீர்! வெஞ்சமர்க் களமாடி வேர்மடிக்குக் காப்புடுத்தி காயத்தை மறைத்து கண்மறைத்து கரைந்தோரே! காற்றின் வழி எங்கள் மூச்சின் சுழல்களுக்குள் வீச்செடுத்து உலவுகின்றீர்! உணர்கின்றோம்..... உவக்கின்றோம். கண்ணுணராப் பொருளாக எம்கடிமனதில் உறையும் காவல் தெய்வங்களே! கடுங்கோபங் கொள்ளாதீர்! கண்மீறி வழிகின்ற ஈரத்தின் உப்பினை வடிகட்டி நிறுத்த கண்ணிமைக்குத்…

  24. அகரமெனும் சிகரம் அள்ளி எடுத்தேன் அழகுமயில் அணங்கவளை துள்ளி விழுந்தாள் துவண்டாள் என் அணைப்பில் கள்ளி நீதான் என்று கன்னம் வருடி நின்றேன் உன் பள்ளி அறையினிலே பாசமுடன் விளையாட எனக்கோ கொள்ளை ஆசையென்று கொஞ்சு மொழி உரைத்தாள் நெஞ்சம் முழுவதுமே மஞ்சு மேகமதாய் பஞ்சாய்த் தான் மிதந்து அஞ்சுகமாய் சிறகடித்தேன் நீல வானத்தில் நித்தம் பவனி வரும் கோல வெண்ணிலவும் கொஞ்சம் நாணி நின்றாள் என் பாவை எழிற்கோலம் பார்த்த காரணத்தால் வானத் தாரகையும் வெட்கித் தலை குனிந்தாள் “என் அன்பே உன் பெயரை அறிய ஆவல்”என்று அநேக தரம் கேட்டும் அவளோ மௌனித்தாள். “உன் பெயரைக் கூறாவிடினும் என்னுயிரே உன் பிறந்த இடம் ஏதென்று” பிரியமுடன் கேட்டேன் “என் பிறந்த இடம் பொதிகை வளர்ந்த இடம் மது…

  25. Started by சுஜி,

    தூரத்தில் அவன் ஒரு ஆண்ழகன்.. கர்ப்பனை வடித்தேன் மனத் திரையில் எங்கோ சென்று இதயம் உருகி.. அவன் கூட டுயட் பாடினேன் கனவில் பக்கத்தில் போயு பார்த்தால் அவன் ஒரு கிழவன்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.