கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
களத்தில் போராட்டம் கையிலே ஆயுதங்கள் புலத்தில் போராட்டம் கையில் உயிருடன் – பெயர்ந்த புலத்தில் போராட்டம் எதில் என்று தேடுகிறேன் எது எது என்று வரைந்து விட்டுப் பார்க்கிறேன் மாமனிதன் ஜெயக்குமார் உருதான் வரைந்துள்ளேன். மாமனிதர் பலர் கண்டோம் - மறைந்தபின் மாமலையாய் எழுந்ததைக் கண்டோம் மறையாது இருப்பதைக் கண்டோம் - எம் உயிரோடு கலந்ததைக் கண்டோம் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர் பலர் தலைவருக்கு வாழுமிடம் சமைத்தவர் சிலர் சட்ட நுணுக்கங்கள் கொடுத்தவர் சிலர் அம்மாமனிதர் பலருள்ளே தனித்தவர் இவர் ஊரைவிட்டு வேரோடு வந்தவரெல்லாம் ஊதியம் தரும் உழைப்புடனே மகிழ்ந்திடுவர் மண்ணிண் மணத்தின் சுகத்தில் மிதப்போரோ செய்தியைத் தேடி வெறு…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஊடக விபச்சாரம் கொழும்பில் குண்டு வெடித்தால் அது பயங்கரவாதமெனக் கூச்சல் தமிழன் மேல் குண்டு விழுந்தால் அவர் பேசா மடந்தையாவர் காசாவில் மக்கள் இறந்தால் காது கிழியக் கத்துவார்கள் ஈழத்தில் குழந்தைகள் இறந்தால் காதிலேயும் போட மாட்டார்
-
- 4 replies
- 2.4k views
-
-
கண்கள் அக்கிரமம் கண்டும் மூடிக் கொள்கின்றன....... காட்சிகளைக் கண்களுக்குள் படமாக்கி கண்ணீரில் கழுவிப் பின் உலர்விக்கின்றன தவிப்போடு என் நாவு பேச எழுந்து துடித்துப் பின் துவழ்கிறது.. முறுக்கேறி என் கரங்கள் முயல்கின்றன ஏதோ ஒன்றை..... எல்லாமே தோற்றுப் போகின்றன.. நான் தமிழச்சி என்பதால்... முள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்.. பேசினால் ஒருவேளை அது தான் என் இறுதிப் பேச்சு....- இது கோழைத்தனம் என்று எனக்குள் குறுகிப் போகிறேன்....ஆனாலும் இன்றே நான் அழிந்து விட்டால்.. எனக்குள் சேமித்து வைத்திருக்கும் நம்மவர் தியாகங்களும்.. நம் இனத்தின் அவலங்களும் என் சந்ததிக்கு யார் பகிர்வார்... ஆனாலும்.... குமுறி எழுகின்ற யாவையும் கொட்ட முடியா வேதனை... பிரசவிக்க முடிய…
-
- 4 replies
- 917 views
-
-
கண்ணே!... வருகின்றேன். உறங்காத கண்மணிக்கு உயிர் நண்பன் வரையும் மடல் கூதலுக்குள் ஒடுங்கும் குருவிக் கூட்டம்போல - அன்று சுய தேவைகளுக்குள் ஒடுங்கிப்போனது என் சுதந்திரவேட்கை காதலுக்குச் சாவு மணி அடித்துவிட்ட பெண்ணே! சாதலுக்கு அழைப்புமணி கட்டிவிட்டாய் கண்ணே! உறவுகள் தேடும் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு உரிமைப்போருக்கு உன்னையே கொடுத்தவளே! உறவுகளை வாழ வைக்க உயிர்காத்து வந்தவன்நான். என்னுள்ளம் இங்கு இன்று உறங்கவில்லைக் கண்மணியே! களங்களில் சதிராடிக் காலிழந்து விட்டாயாம், இருப்பினும் கரும்புலிக் களத்திற்குக் காலாகி நிற்கிறாயாம்! செவிப்புலன் மோதும் சேதிகள் கேட்டுத் தவிப்புகள் என்னிடம் தளம் சமைத்துக் கொண்டன. உள்ளத்தில் எழுந்த அலையில் …
-
- 4 replies
- 1.3k views
-
-
உன்னை கண்டேன் ஓவியனானேன் உன்னிடம் கண்டேன் ஒளி(ழி)ந்தவன் ஆனேன் உன் கண்ணை கண்டேன் கவிஞனானேன் உன்னை கண்ணால் கண்டேன் காதலானேன் உன் உரைகள் கவனித்தேன் பேச்சாளன் ஆனேன் உன் உடைகள் கலைந்தேன் சிற்பி ஆனேன் உன் மனதை கண்டேன் மகிழ்வானேன் உன் மார்பு கண்டேன் மழலையானேன் உன் கழுத்தை கண்டேன் முத்து குளித்தேன் ( முத்து குளித்தேன் . சங்குதான் கிடைத்தது ) உன் கவின் மேனி கண்டேன் காம ராஜன் ஆனேன். உன்னதை வில(ள)க்கி வித்தகனானேன் விலகி விடாதே காவியமே . வில்லனாகி விடுவேன்
-
- 4 replies
- 1.1k views
-
-
என் உயிரே காதல் செய்தாயே என்னை ஞாபகம் இருக்கிறதா? நான் உன் மீதூ பைத்தியம் ஆகும் வரை காதல் செய்தாயே ஞாபகம் இருக்கிறதா? நாம் கற்பனையில் வாழ்வதாக பல கதைகள் சொன்னாயே ஞாபகம் இருக்கிறதா? நான் உன்னை புரிந்துகொள்ள வைத்தாயே ஞாபகம் இருக்கிறதா? காலத்தின் கோலத்தால் நான் உன்னை பிரிந்து வந்தேனே ஞாபகம் இருக்கிறதா? பிரிந்துஇருப்பதிலும் ஒருவித சுகம் உண்டு என்றாயே ஞாபகம் இருக்கிறதா? தொலைபேசியில் நாங்கள் மணிக்கணக்கில் பேசியது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் அனுப்பிய காசில் நீ உன்னை அலங்கரித்தது எல்லாம் ஞாபகம் இருக்கிறதா? எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் உன்கூடத்தான் …
-
- 4 replies
- 1.4k views
-
-
என் காதலியும் என் கல்லறையும் ________________________________________ என் சவப்பெட்டியை செய்து எத்தனித்தேன் உள்ளே செல்ல வந்தாளே காதலி இடுகாட்டில் இருந்த பெட்டிக்கு மெல்ல அன்பே இன்னும் இற்க்கவில்லை காத்திருந்தேன், நான் சொல்ல பெட்டியில் அடிக்காமல் ஆணியை நெற்றியில் அடித்தாள் என்னை கொல்ல இறந்தேன் - இறப்பைப் போன்று உறுதியான உண்மை. தந்தை வந்தார் அழுதுச் சென்றார் தாயும் நின்றாள் சோர்ந்து தம்பி வந்து தேம்பி அழ அக்காவோ புலம்பி அழுது சுற்றமும் முற்றமும் தோழர்களும் ஏங்கி சேர்ந்து அவளை தேடி அலுத்தது கண்கள் அங்குமிங்கும் பாய்ந்து இறந்தாலும் - இருந்தேன் அங்கே ஆன்மாவாக. அவளும் வந்தாள் கல்லறைக்கு பூக்கள் நிறைந்த கரங்கள் ஆகா என் கண்மணி அறிவாள் எனக்கு…
-
- 4 replies
- 1.5k views
-
-
இப்ப போகலாமென மனம் அடித்துக் கொள்கிறது. 83இன் பின்னர் மறந்து போயிருந்தவையெல்லாம் நினைவிற்குள் மீண்டன. கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம், புத்தகக் கவருக்குள் ஒளித்து வைத்த காதல் கடிதங்கள், திண்ணைச் சுவரில் எண்ணெய் பிசுக்காய் அப்பியிருக்கும் ஆச்சியின் அடையாளம். பின்முற்றம் கக்கூஸ் கிணற்றடி இத்தனை காலமாய் மறந்து போயிருந்த அனைத்தையும் கூட்டி நினைவிற்குள் மீட்க புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது. என் மண் என் நாடு என் மக்கள் படபடக்கின்றது மனம் தங்குவதற்கு வசதியான இடம் சப்ப “சுவிங்கம்” சாப்பாட்டு ஒழுங்கும் போக முன்பே செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்குக் குடுக்க கொஞ்ச பழைய உடுப்பு சொக்லேட்டுப் பெட்டிகள், …
-
- 4 replies
- 1.5k views
-
-
வணிகம் பேசினாலே மனிதம் பேசுவார்களா? இற்றைக்கு இரண்டு ஆண்டுகள் முன்புவரை ஒரு “தேசத்தின் குரல்” சர்வதேசத்தின் செவிப்பரைகளில் மோதி மோதி இந்து சமுத்திரத்தில், ஈழத்தமிழினத்தின் விழிகரித்த உப்புகடலில் குருதி கொப்பளித்துக் கிடக்கும் ஈழத்தின் இருப்பை உரைத்துரைத்து ஓய்ந்து போனது. கண் மறைந்து போன கால நீட்சியில் கற்றுக் கொண்டதும், கண்ணீர் விட்டதும், கனக்கும் இதயக்கூட்டின் கணக்கில் அடங்காமல் நீண்டநெடும் பயணத்தில் இன்னும் தொடர்கிறது. வேர் மடியின் தாகம் கொண்டு எத்தனையோ உன்னதங்களை, வேதனையைச் சுமந்து சுமந்து உலகிற்குக் காட்டியாயிற்று. தர்மத்தின் தலையில் சூது இல்லை என்பதையும் உணர்த்தியாயிற்று. நீறிட்டுக் கிடக்கின்றன நெருப்பின் முகவரிகள் …
-
- 4 replies
- 914 views
-
-
உப்புக் கண்ணீர் ஈரத்தில்.. குருதிக் காயாத கறையோடு முள்ளிவாய்க்காலில் மூடப்பட்ட.. எம் உறவின் எலும்புக் கூடுகளின் வழியாய்.. எழும்புகிறது எம் மாவீரர்களைப் போலவே காந்தள் பூ! இன அழிப்பில் இறந்த காந்தள் மாவீரர் நாளில் முட்டி முளைத்து நிமிர்கிறது.. விடுதலை திறப்பின் அடையாளமாய்! கார்த்திகைப் பனிச்சாரலிலும் முற்றத்து ஓரங்களிலும் முன்னிலும் பெரிதாய் சுடர் விடுகிறது தமிழீழம் நோக்கிய காந்தள்! உலகில் வாசனை பரப்பவே பூத்த பிற பூவெல்லாம் தலைகுனிந்தது… தன் மண்ணை வணங்க தலை நிமிரும் காந்தள் பூவைக் கண்டு “மாவீரர் நாளில்!” கார்த்திகைக் காந்தள் - கவிபாஸ்கர்
-
- 4 replies
- 1.2k views
-
-
வன்னிக் குழந்தைகளின் கதறல்கள்..... பாகம் - 2 கவிதை..... எம் நினைவு தெரிந்த நாள் முதலாய் நாம் அறிந்ததெல்லாம் அப்பாவும் அம்மாவும்..... அதன் பின்னர் உடன் பிறந்தோர்.... அதன் பின்னர் அதிகமாய் அறிந்ததெல்லாம் பல்குழல் எறிகனையின் நெஞ்சை பிளந்துவிடும் அதன் சத்தங்கள்..... விமானச் சத்தம் கேட்டால் அம்மாவின் சொல்கேட்டு ஓடிடுவோம் குழிகளுக்குள்.... காலையில் பள்ளிபோய் மாலையில் வரும் வயதில் பள்ளத்திலே எம் வாழ்க்கை பல ஆண்டாய் செல்கிறது....... பசியென்று சொல்லிச் சொல்லி எங்கள் வயிறேதும் நிரம்பவில்லை..... பசியெனும் சொல்லுமட்டும் பாடப் புத்தகத்தை நிரப்பியது.... எங்களுக்கோ படுக்கையும் மறந்து போச்சு பாம்ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரலை துடைத்தாலும் .... உரலில் ஓரத்தில் ..... துவல்கள் ஒட்டி இருப்பது .... போலவே ...... முதல் காதல் நினைவும் .... இதயத்தின் ஒரு ஓரத்தில் ..... ஒட்டியே இருக்கும் .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒரு தமிழனாய் -------------------------- என் மனதைப் போலவே கூதிரின் காத்தும் கூவிச் சில்லிடுகின்றது பனியைப்போல உறைக்காவிட்டாலும் மனதை குடையும் வெம்மையின் சூடு என்னைப் போலவே இன்னும் உறையாமல் எல்லாவற்றைப் பற்றியும் பாடும் என் பாடல்கள் பாட முடியாது தோற்கும் இடம் என் சந்ததிகள் என்னைப்போலவே முறையறியாது குழம்பித் தவிக்கும் அவள் தமிழ் சிரிப்பாய் சித்திரமாகப் பதிகின்றது மறந்து போன இன்பங்களைப் போல உன் ஊரில் பாம்புண்டா ? அவள் பயங்கள் பாம்பாய்ச் சுற்றுகின்றன. "பெக்கர்ஸ்" அகதியாய் வந்தவர்களும் பெக்கர்ஸ் தானே வாழ்க்கையை யாசித்தவர்கள் தானே எல்லாவற்றையும் தாண்டி மூவேந்தர் பற்றியும் பாரி முல்லை தேர் ஒளவை தமிழ்ச…
-
- 4 replies
- 1.4k views
-
-
நண்பர்களே - கவிதை ஒன்று அன்புக்கு என்றும் பஞ்சமில்லை!! வாருங்கள் - என்னிடம் நீங்கள் எதிர்பார்த்ததை விட நிறையவே கிடைக்கும்!! ஆனால் ஒன்று அதற்கான தொகையை சரியாக செலுத்திவிட வேண்டும் - என்னிடம் பணமாக!!! அன்புக்கும் விலை பேசும் சில மனிதர்கள்!!! என் செய்வது??? என்னுடைய ஆற்றாமை இது. உங்கள் கருத்து எதுவாயினும் எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
-
- 4 replies
- 1.3k views
-
-
நினைவுவலிகளை நீக்குமொரு நிகழ்வுப்பயணத்தை நினைவுகளூடே நீட்டிக்கொள்கிறேன்..... காலக்கரைவுகளில் புது வர்ணங்கள் பூசப்பட பூரித்துப்போகிறது நிகழ் கணங்களில் முகம் . வல்வைக்கடலுவர்க்காற்று வந்துமோதி முற்றத்து முல்லை பூவுருத்திப்போகும்_ .அதுவே மயங்குமாலையில் மன்மத வாசம் பூசும் காற்றில் ............. எருக்கலையும் நாயுருவியும் தெருக்கரைகளில் கதைபேசும் உருக்குலைதிருந்தாலும் எந்தநூர் திருக்கலையாதிருக்கும் பிணிஎதுமில்லாமல் போய்வர முனியப்பரை துணை கேட்டு வல்லை வெளியூடே எல்லைத்தாண்டும் பயணம் தொடரும் . உடுவை சந்தியில் உணர்வரியா உவர்ப்புடன் தேடல் பாடுபொரு…
-
- 4 replies
- 1.1k views
-
-
*** பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான் - அந்தக் காலம் பாலுக்காய் பாலகனே கால் கடுக்க பாதையில் நிற்பது - இந்தக் காலம் *** மங்கைக்கு மாலையிட சுயம்வரம் நடப்பது - அந்தக் காலம் மங்கைக்கு மாலையிட பணவரம் கொடுப்பது - இந்தக் காலம்
-
- 4 replies
- 1.4k views
-
-
தினம் நினைக்கப்பட திணிக்கப்பட்ட தினமல்ல, மனிதம் பேசும் மரபுக்காயெழுந்த மகத்தான தினமிது ! மூர்க்கம் கொண்ட முதலாளி வர்க்கம் கலைக்கும் வகையறியாது , பார்க்குமிடமெல்லாம் வதைபட்டு வேர்த்தவொருவனின் வேதனை சிதைத்த தினமிது !! புரட்சியின் பரிணாமமாய் எழுந்தான் எங்கெல்ஸ், பொங்கிவெடித்தான் மார்க்ஸ்_அரசியலில் அழைத்துவந்தான் லெனின் . தோழர்கள் தோள்மேல் பயணப்பட்ட எழுச்சி விதைத்துவைத்தது தொழில்புரட்சி. ஓங்கியோலிக்கட்டும் இங்குமினி புரட்சியின் குரல் , அடக்குமொரு அரசினை _மனிதம் மறுக்குமதன் அரசியலிருப்பினை, பாசிச தலைவர்களை _இன அழிப்பின் இயங்குபொறிகளை இனங்காட்டி ஓங்கியோலிக்கட்டும் . உழைக்குமொருவனின் உரிமைகள் இழக்கப்படாதிரு…
-
- 4 replies
- 979 views
-
-
நீ.. எனக்கு ஒரு ஏஞ்சல் (கெஞ்சல்) நான்.. உனக்கு ஒரு வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல். (கஞ்சல்) ஓசில வந்ததென்று கிவ்டை கவ்விக்கிட்ட நீ கஞ்சலை.. தூசென.. தூக்கி வீச முன் கண் திறந்து பார்.. அங்கு.. கசங்கிக் கிடப்பது நானும் என் அன்பும்..!(காதல்)
-
- 4 replies
- 1k views
-
-
இனி அழுவதற்கில்லை... கடல் சூழ்ந்த யாழ் நாட்டில் உப்புக்கே வழியில்லையாம்... சொல்லடி அபிராமி..தமிழ் இழைத்த தப்பென்ன தப்பு... வந்தாரை வாழவைத்து.. வயிராற விருந்து வைத்தோம்.. வரந் தரும் அபிராமி-என் பிள்ளைப்பசி தீர என்ன செய்ய மூலைக்கு ஒரு பொங்கல்.. முளை சுரந்த பசுவுக்கு ஒரு பொங்கல்.. முற்றத்தில் பொங்க அபிராமி-ஒரு சொநடதமில்லை எங்கு செல்ல.. அன்று வருடத்திற்கு இரண்டுதினம் பட்டாசு சத்தம் வரும்..இன்று நித்தம் நித்தம் அபிராமி.-எங்கள் இதயவறை அதிருதடி.. ஊருக்கு ஒன்று பறிபொடுத்தோம்.. வீட்டுக்கொன்று பறிகொடுத்தோம்.-என்.. தாயே அபிராமி..இப்ப வீட்டோடு சாகுதம்மா.. வாடி வதங்கி நின்று.. கூடி அழுததெல்லாம்..கூத்தாடி வேடமென்றோ அபி…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒட்டு படை ஒழிகிறது...... ஓலங்கள் தந்தது ஒட்டுப் படை -அந்தோ ஓடியே ஒளியுது அந்த படை... அவலங்கள் ஆயிரம் தந்த படை - அந்தோ அழியுது பாரது அந்த படை... இனவாதி யோடது இருந்த படை இளைஞரை யுவதியை பிடித்த படை.... காட்டியே கொடுக்கின்ற கயவர் படை கண்களை கட்டியே கடத்திய படை... சுட்;டு வெட்டியே கொன்ற படை - அதை சுற்றியே அழிக்குது புலிகள் படை..... கொடுமையாய் கொடுமைகள் ஆடியதே கொடியாரை தமிழரை சாடியதே... கடத்தியே கப்பங்கள் பறித்ததுவே அவர் உயிர்களை வேறது குடித்ததுவே.... எத்தனை எத்தனை இன்னல்களை எண்ணியே எண்ணியே தந்ததுவே... அந்தோ பாரது அழிகிறதே ஆனந்தம் எமக்கு பிறக்கிறதே.... ஒட்டு படைய…
-
- 4 replies
- 1.5k views
-
-
அவள் மேடை ஏறி பேசியதில்லை.. ஆனால் பேச தொடங்கினால் ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்…!! அவள் தன்னைத்தான் “அழகில்லை” என்பாள்… ஆனால் “அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம் அவளை திரும்பி பார்ப்பார்கள்..!! அவளுக்கு “கவிதை” பிடிக்காது… ஆனால் எல்லா கவிதைக்கும் அவளை பிடிக்கும்..!! அவள் யாரையும் காதலிப்பதில்லை… ஆனால் ஒரு ஊரே அவள் காதலிக்க ஏங்குகிறது என்னோடு சேர்த்து..!! அவள் பெயரை…, என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்.. காத்திருங்கள்… அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்.. ஒரு “விருந்து உண்டு” எல்லாருக்கும்..!
-
- 4 replies
- 1.3k views
-
-
மின்னல்கள் கூத்தாடுதே உன்விழிகள் பார்த்து மேகங்கள் மழை தூவுதே உன் அழகை பார்த்து விட்டு விட்டு தூறும் மழையே கொஞ்சம் நில்லாயோ நெஞ்சை தொட்டு போகும் பெண்ணின் முகவரி சொல்லாயோ மேகங்கள் கொண்டு வானம் மழை பொழிகிறது மேகத்தில் நின்று மின்னல் ஒளி தெறிக்கிறது மழை போல் நீ வருவாயோ மண் போல் நான் ஏங்குகிறேன் வானத்தின் தூரத்தில் உன்னை நான் தேடுகின்றேன். http://www.youtube.com/watch?v=113R1IanoMo
-
- 4 replies
- 509 views
-
-
அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? http://deebam.blogspot.in/2011/10/blog-post_05.html
-
- 4 replies
- 709 views
-
-
பால்ய நண்பனை பேஸ்புக்கில் பார்த்தேன் - நேற்று தெருவில் பார்த்த பள்ளிச் சிறுவனின் புத்தகப் பையைப் போலவே கனக்கிறது மனசு! பாடப் புத்தகங்களின் பக்கங்களைவிட எமக்கான நினைவுப் பக்கங்கள் அதிகம்! அவனது முகத்தைப் போலவே எல்லாமே மாறிவிட்டது! மாற்றங்கள் அவனுக்குள் மட்டுமல்ல, எனக்குள்ளுந்தான்! இப்போதைய "ஹாய்" "ஹலோ" பண்வழக்க வார்த்தைகளைவிட, கண்டபடி வாயில் வரும் அப்போதைய கெட்ட வார்த்தைகளில்... நட்பின் உரிமையும் அன்பும் நிறைந்திருந்தது! நெருங்கிய நட்புக்களை பிரிவுகள் மட்டும் பிரிப்பதில்லை! காலங்களும் சேர்ந்தே பிரித்துவிடுகின்றன!! மீண்டும் இணைக்கும் முகப்புத்தகம்... பழைய நண்பர்களை "புதிதாய்" இணைத்துக்கொண்டே இருக்கிறது! இது புதிதா...? அல்லது புதிரா...? விடைதெர…
-
- 4 replies
- 654 views
-
-
இரவுகளை ஆட்கொள்ளும் இருளை, நிலவும் நட்சத்திரங்களும் எதிர்த்து நடத்தும் போராட்டங்கள் கூட இதமானவைதான்! வெண்மதியை மறைக்கும் மேகங்கள் அங்கேயே நிலைப்பதில்லை! விலகிச்செல்லும் மேகங்கள் போல, கடந்துபோகும் நேரங்கள் நகர்கிறது... விடியலை நோக்கி! வாழத் துடிக்கும் மனசு.... தாழப்பறக்கும் வண்ணத்துப் பூச்சிபோல, சிறக்கடிக்கத் தொடங்கும்! காணத்துடித்த விடியலின் ஒளியில் பூத்த மலர்களில் உட்கார்ந்து... மரகத மணிகளை உருட்டி விளையாடும்! குயில்களின் கானங்கேட்டு துயின்ற கதிரவன் துயிலெழுவான்! மனவறையில் ஒட்டிய பனித்துளித் துயரங்கள் அனைத்தும் கதிரவன் கதிரிலே காணாமற் போகும்! மெல்லப் பரவும் ஒளியில் பிரசவமாகும் விடியலில் பரவசமாகும் பூலோகம்! வலியவன் மனதிலே இருளோடு கரைய..…
-
- 4 replies
- 6.6k views
-