கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எங்களைத் தெரிகிறதா? எம் நிலை புரிகிறதா எங்களின் எண்ணிக்கை அடிக்கடி கூறப்படும் எண்ணிக்கைகள் மாற்றப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும் ஆனால் எங்களை எவருக்கும் தெரியாது எங்கள் வாழ்நிலையும் எவருக்கும் புரியாது இப்போதாவது எம்மைத் தெரிகின்றதா? குடும்பத்தலைவர்களை இழந்தவர்கள் என சுட்டிச்சொல்லப்படுபவர்கள் நாங்கள். எண்ணுக்கணக்குக்கு அப்பால் எங்கள் உணர்வினை புரிந்து கொள்ள முயலுங்கள் எத்துணை இடர்களுக்குள் எம் வாழ்வு தொடர்கின்றது என பாருங்கள் வாழ இடம், வசிக்க வீடு உழைப்புக்கு வழி உண்பதற்கு உணவு உடுக்க உடை இப்படி எதற்குமே வழியின்றி தனித்து விடப்பட்டு மெல்ல செத்துக்கொண்டிருக்கின்றோம் பசித்து அழும் குழந்தையை ஆ…
-
- 4 replies
- 737 views
-
-
நம் பசி தீர்க்க தன் பசிக்கு உணவு நாடிச் சென்றவள சென்றும் பல நாழியாச்சு நலமோடு வரும் வரையில் நாம இருப்போம் ஒற்றுமையாய் நகர்ந்து சென்று ஓடாதே நன்றும் தீதும் காத்திருக்கும் நிறத்தில் வேறு கண்டாலும் நிஜத்தில் நாம் உறவுகள் பத்திரமாய் நாம் இருப்போம் சென்ற வழி பார்த்திருப்போம் பதறாதே சோதரி பகல் பொழுது சாய முன் பசி தீர்க்கும் தாயவள் பாயந்து ஓடி வந்திடுவாள்
-
- 4 replies
- 940 views
-
-
காலம் உலர்த்த மறந்த நீர் விரல்களில் ஒட்டிக் கொண்டது தன்னிலை பகிராமல்.. வலிந்த வெப்ப இழப்பினை உருவாக்கி, திரட்டத் தொடங்கியது ஆதிச் சிதைவுகளை, ஈமத்தாழிகளையும் வண்டல் படுகைகளையும் கிளறி, சூரிய நட்சத்திரங்களுடனும் கனியாத கருமேகங்களுடனும் உறவாடி, காற்றில் நெருப்பில் உப்பு நீரில் நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும், இழந்துபோன ஈரலிப்பை தேடி அலைந்தது.. வழியெங்கும்.. வர்ணக் கலவைகளாலும் நறுமணப் பூச்சுகளாலும் தரவேற்றிக் கலையாடிக்கொண்டிருந்தன சில. அதீத மோகத்துடன் காலத்தை கலவி செய்து கொண்டிருந்தன சில. ஆதியின் அன்புப் போர்வைக்குள் சிக்கிப் பிணமாய் கிடந்தன சில. இன்னும் சில கௌரவ வெற்றிடங்களில் எதிரோலியோடு மோதிச் சாவடைந்து கிடந்தன. …
-
- 9 replies
- 1k views
-
-
வாசித்ததில் பிடித்தது.... I Love You! I யப்படாதே கண்ணே! L லோர்க்கும் கிடைக்காது நம்மைப் போல O ருங்கிணைந்த இதயம் இருந்தும் V தியால் பிரிந்தோம், கவலைப்படாதே! E திகாசத்தில் அம்பிகாபதி அமராவதி போல இடம்பெறும் நம்காதல் Y யாரக் கன்னியே O ருநாள் இந்த U கத்தின் சரித்திரத்தில் நம்காதல் இடம்பெறும்!
-
- 23 replies
- 3.1k views
-
-
கைபிடித்து நடந்த கால்தடங்கள் என் பின்னால் வருகின்றன! ஆனால்... நான் இறுக பிடித்த கையையும் காணவில்லை.. ஊரி குத்தும் எனதூர் தெருக்களையும் காணவில்லை! காலமாகிப்போன தெருக்கள்.. ஊனமாகிப்போன உறவுகள்.. என் கண்தேடும் எனதூரின் அழகை காணமுடியவில்லை! கவிபாடும் பனைமரங்கள் தலையறுந்த முண்டங்களாக.... பேயாட்டம் ஆடும் தென்னைகள் பேச்சு மூச்சற்று உறங்குகின்றன! ஊர் அரண்மனையாக திகழ்ந்த கோவில் வௌவால்களின் இருப்பிடமாக.... மழைக்காலத்தில் கூட புல் முளைக்காத எனதூர் மைதானங்கள் பற்றைகளாக.... கோவில் தேர்முட்டியில் குடியிருக்கும் ஆட்டுக் கூட்டம் எங்கே.. மடிந்து விட்டதா.......? கோவில் மடத்தில் கச்சான் விக்கும் ஆச்சியின் குரல் எங்கே..... ஓய்ந்து …
-
- 18 replies
- 2.1k views
-
-
பெண் மலர் தான் மலிவல்ல...?! பெண் மலர் தான் மலிவல்ல... சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது , சில்லிட்டு உறையாமல் சிக்காமல் மீண்டு எழுந்தால்; பெண் மலர் தான் மலிவல்ல...! ஆப்பிள் தேவதைகள் தான் ... அழுகிப் போகாமல் காக்கும் வரை; சாக்லேட் தேவதைகள் தான் ... சாக்கடையில் நழுவாமல் தன்னைத் தானே காக்கும் வரை; பெண் மலர் தான் மலிவல்ல! ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்... ஏவல்களில் தேய்ந்து போன பெண்ணியத்தின் முதுகெலும்பில் விரிசல்களை எண்ணக்கூட வராதொழிக்கும் ஆதாமை சட்டை செய்யாது விட்டு விடுதலையாகி சிட்டுப் போல் சிறகு விரித்து பறந்து திரிந்து ஊரில் பல…
-
- 3 replies
- 1.3k views
-
-
TODAY IS MY LOVELY MOTHER'S 95TH BIRTH DAY. MISSING YOU AMMA. மறக்க வில்லை அம்மா நான் வண்டி இன்னும் வரவில்லை. மாறவும் இல்லை அம்மா நான் வளமைபோல் பயணக் காசோடு வாசலில் வந்து காத்திரம்மா 1 அம்மா * போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் …
-
- 3 replies
- 955 views
-
-
இருள் சூழ்ந்த கரிய மேகத் திரளிடையே அடிக்கடி விட்டு விட்டு பொழிகின்ற செவ்வானத் தூறல்களாய் சீழ் கட்டிய இரத்த வாடைகள் நிரூபனின் நாற்று வலை தாங்குவோர் இன்றி தத்தளிக்கும் ஈழ மக்களை ஏந்திட நாமிருக்கிறோம் எனும் குரலுக்கு ஏதும் செய்திய முடியாதோராய் நாமிங்கு! நேற்று முத்துக்குமார் மூட்டிய தீ முது பெரும் விடுதலைத் தீயாய் கனன்று மிளாசி எரிந்தது, அதில் காங்கிரஸின் பொய் வேடத்தை தமிழகம் உணர்ந்து கலைஞரின் வாழ்விற்கும் காற் புள்ளி குத்தி வீட்டுக்கு அனுப்பி மகிழ்ந்திருந்தது! நிரூபனின் நாற்று வலை இன்று செங்கொடி அவர்கள்; முத்துக்குமார் வரிசையில்.... நீயும் போனாயா சகோதரி- இல்லை உன் கண் முன்னே காங்கிரஸின் நர்த்தன நடனத்தில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒரு காலை விடிவதற்குள் எத்தனைபேர் அடங்கிப் போனார்கள்!? மீதமிருந்த அழுகுரலையும் பகற்பொழுதுகள் அடக்கியது! ஏங்கித் தவித்தெல்லாம் அனாதையாய்க் கிடக்க, நாங்களும் அனாதைகளாய்த்தான் ஓடி வந்தோம்! வழியில் வந்த குழிகள் எல்லாம்..... அன்று, பதுங்கு குழிகளாகவும் புதைகுழிகளாகவுமே தெரிந்தது!.....இருந்தது! சின்ன மழைத் தூறல் கூட எம் பெருங்கண்ணீரை மறைத்தது! என்னவென்று சொல்ல.... எப்படிச் சொல்ல........??????? மானமுள்ள தமிழர் என்றிருந்த நிலை சொல்லவா? இல்லை... ஓடிவந்து மானம் விட்ட கதை சொல்லவா? கடைசிவரை எதையெதையோ நம்பியிருந்தோம்! ஒன்றுமே நடக்கவில்லை!! இப்பொழுதும் இருக்கின்றோம்.........! சொல்லும்படி ஒன்றுமில்லை!! எதிர்காலம் உட்பட எதுவுமில்லை எங்களிடம்! எதற்காகத் தொ…
-
- 7 replies
- 1.6k views
-
-
சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்! சூடான பாலை-வனத்திலே .... நீராடினோம்!! என் அங்கத்தில் ஒரு கை மட்டுந்தான் அங்கிருந்தது! மற்றையவை எல்லாம் மற்றவை நாடி... தேடத் துணிந்தது!! தடுத்தவள் கைகளில் உணர்ந்த நாற்குணமும் - என் முற்றுந்துறந்த "போர்க்குணத்தில்" அடங்கிப் போனதோ என்னவோ??? பெண்மையை புதிதாய்..... பார்த்த துடிப்பு! பருவங்களுக்கே.... உரிய வெடிப்பு!!! இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில், நம் பயணம் தொடர்ந்தபோதும்..., சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்..., பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!! மூடியும் மூடாத விழிகள்... தேடிடும் வழிகள்... அந்நியம் பார்க்காமல் எழுப்பிய ஒலிகள் - அத்தோடு பாதி தெரிந்த உருவங்கள்... தெறி…
-
- 41 replies
- 3.3k views
-
-
தன்மானத் தந்தையே! திருநிறை பழநெடு மாறன் ஐயா! தன்மானத் தமிழனாய்த் தகைசார் அறிஞனாய்த் தரணியில் இலங்கிடும் தமிழகத் தந்தையே! இன்னலில் ஆழ்ந்த ஈழத்தவன் பசிதனை இல்லா தொழிக்க எண்ணம் கொண்டுநீர் உன்னதப் பணிபுரிந்தீர் உலகமே வியந்திட உறுதியாய் நின்றங்கு உயிர்தனை வருத்தும் மன்னும் உண்ணா நோன்புதனில் இறங்கி மனிதம் நின்னிடத்தே என்பதை எண்பித்தீர்! தங்கத் தம்பியாம் திலீபனின் நாளில் தந்தையே நீவீரும் திருவுளம் கொண்டு அங்கம் நொந்து அறிவினா லுயர்ந்து ஆரும் புரிந்திடா அறப்போராட் டம்தனில் இங்கிதமாய் இசைந்தீர் ஏற்றமிகு தந்தையே! என்னகைம் மாறுநாம் இதற்காய்ச் செய்வோம்? இங்கிருந்து நெஞ்சத்தால் இனியவுயிர் நிலைத்திட எஞ்ஞான்றும் இறைவனை வணங்கி நின்றிடுவோ…
-
- 1 reply
- 918 views
-
-
கண்டதையும் கேட்டதையும் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன் பயணத்தில் பல பார்க்கிறேன் பட்ட பார்த்த அனுபவத்தை வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது என் மனதில் இரத்தம் வடியும் எழும் என் உணர்வை சமுதாய கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல் படும் குடும்பங்களை பார்ப்பேன் மனம் வருந்தும் பொருளாதார கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து கண்ணாலும் சைகையாலும் தன்னை ம…
-
- 0 replies
- 3.4k views
-
-
கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளைக் கனவுகள்.. ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் கண்ணீர் தொய்ந்த வாசமாகவும் எம் கனவுகள் இத் துரோக மண்ணில் காய்ந்துப் போவதின்னும் எவ்வுயிர் பிரிந்து மிஞ்சும் கடைசி பொழுது வரைக்குமோ.. அறியோம்; அறியோம்; இறக்கை முறித்து - உயிர் உதிர்த்து - உடல் முடைந…
-
- 1 reply
- 719 views
-
-
அழியா வரம் பெற்ற ஆதவன்கள் எழுதியவர்: த.சரிஷ் விடுதலை நெருப்புக்கு நெய்சேர்த்து சென்றுவிட்டது ஒரு நெருப்புக்குழந்தை...! ஈழத்தின் ஒவ்வொரு ழூலை முடுக்கிலும் விடுதலை நெருப்பை விதைத்துவிட்டு மெல்ல அணைந்துவிட்டது அந்த நெருப்பு...! இந்த நெருப்புப்பந்தின் வெளிச்சம் மெல்ல அணைந்தாலும் வெப்பம் இன்னும் அடங்கவில்லை...! தமிழீழத்தில் புறப்பெடுக்கும் கடைசிக்குழந்தையின் காலம்வரை கட்டாயம் அடங்காமல் இருக்கும் இந்த வெப்பம்...! ஒரு வழிகாட்டி புறக்கப்போகும் பிஞ்சுக்கும் பாடமாகிவிடுகிறான்...! மானிடகுலத்தின் கடைசிக்காலம்வரை செல்லும் வாழ்க்கைப்பயணத்தில் எதிர்பாராமல் இடைக்கிடையே இனம்தெரியாத இடிமின்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தேன் சிந்துதே வானம்........... இரவல் ஒளியெடுத்து இரவில் ஒளிஉமிழும் அழகில் மயங்க வைக்கும் ஒற்றைத் திங்கள் வளையில் ஒளித்திருந்து வாகாய் படம் பிடித்து வளைய வரும் எட்டுக் காலில் நண்டு காற்றடிக்கும் திசைகளெங்கும் காலாற நடைபயின்று பூப்பந்தாய் உருண்டு வரும் இராவணனின் மீசை வெள்ளி நிலா விளக்கேற்ற வீச்சுவலை இழுத்து வரும் கடலோரக் கவிதைகளாய் கட்டுமரம் சோளகத்தில் மோதிவரும் சுழற்காற்றில் தலையாட்டி தாளலயம் தப்பாத தென்னம்பிள்ளை வானக் குடைபிடிக்க வண்ணமலர் சிரிக்க சோலையிலே இசைபாடும் கானக் குயில் வாடைக் காற்றுரச வயல்களிலே கதிருரச பூமணத்தை சுமந்து வரும் காலைத் தென்றல் காலைப் பனித் துளியில் மேனி தனைத் துவட்டி தளுக்காகச் சிரிக்கின்ற செம்பருத்தி ஆத வன் எழும்பு முன்பு அடிவானம் சிவக்கு முன்பு ம…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஒழித்து விளையாடும் அம்மாவும் தெருவும் தேயிலை மலையும் மீண்டும் வருமெனக் காத்திருக்கும் குழந்தையின் முன்னால் குருதியை உறிஞ்சும் அட்டைகளும் வெறும் கூடைகளும் துளிர்த்திருக்கும் கொழுந்துகளும் அடர்ந்த செடிகளுமாயிருக்கும் தேயிலைத் தோட்டங்களும் உழைத்துழைத்துக் கூனிய முதுகளுடன் கொழுந்துப் பைகள் கொழுவிய தலைகளுடன் மலைக்கு வந்த நலிவுண்ட பரம்பரையின் புகைப்படங்களுடன் எல்லாவற்றையும் மூடியது மண் ஒவ்வொருவராய் தேயிலைச் செடிகளுக்குள் புதைக்கப்பட அதன்மீதேறி கொழுந்தெடுத்த சந்ததியை ஊரோடு மலை விழுங்கிற்று எவ்வளவெனிலும் சம்பளம் எத்தகைய குடிசைகளெனிலும் வாழ்வு மயானங்களுமற்றவர்களின்மீது சரிந்தது பெருமலை ஒடுங்கியிருக்கும் லயன்களிலிற்குள் வெளியில் வர முடியாதிருந்தவர்கள் ஒரு நாள் மலைகள…
-
- 0 replies
- 477 views
-
-
காதல் உன்னைக் காகிதத்தில் எழுதி எழுதி தொலைத்து விட்டேன் Posted by கஜந்தி at 9:04 AM காதலன் ஐயோ! பாவம் என் காதலன் அழகழகாய் உடுத்தி என்னோடு திரிந்தவன் பணத்திற்கு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண்ணைக் காதலித்து இப்படி வேலைக்காரன் ஆகி விட்டானே... Posted by கஜந்தி at 9:15 AM கணவன் இப்படி அழகழகாய் உடுத்தி உடுத்தி என் காசையெல்லாம் தண்ணியாய் கரைக்கிறாள் இவள்... ஏனடி என்றால் அவள் அழகாயில்லை என்று தானே என்னிடம் வந்தீர்கள் சின்னவீட்டு தத்துவம் புரியாதா உங்களுக்கு என்கின்றாள்.. Posted by கஜந்தி at 6:07 AM புரியவில்லை... படிப்பது அக்காவா பிள்ளையா என்று …
-
- 0 replies
- 817 views
-
-
உயிரை எரித்து காதல் வளர்த்தேன் கடைசியில் அவளை இழந்து தனியாக நிற்கிறேன்..
-
- 0 replies
- 552 views
-
-
உங்களைச் சுற்றி மௌனம் மட்டுமே மலர்ந்து நிற்கிறது மனதுக்குத் தெரியாத மர்மங்களில் .. எங்களைச் சுற்றி இனங்கள் மட்டுமே இடித்துக் கொண்டு நிற்கிறது.. மனதுக்குத் தெரிந்த மர்மங்களில் ...! http://tamilpaingili.blogspot.com.au/2011_11_01_archive.html
-
- 4 replies
- 1.1k views
-
-
நெருடல் தந்த அகச் சிக்கல் பூமிப் பந்தில் புதியதோர் உலகம் வாரிச் சுருட்டிய மன அழுத்தம் நெம்பி மனமது விகல்பி நைந்து போயினவாம் நமதான வாழ்வாக! விரும்பிக் கேட்ட நிலையா? இடர் நீயாகத் தந்த வாழ்வாச்சு! உந்தன் பிறப்பு சாசுவதமாயின,; எந்தன் வாழ்வு அசுவதமாவோ? எமதான இறப்பில்,அதுவான இழப்பில், உமதான வாழ்வு சிறப்பாகும் என்ற நினைவுன்னை, சிதைவாக்கும் உண்மை சிந்தை கொள மறவாதே! உனதான வாழ்வுரிமை எமக்கானதுமாகும் இதை நீ மறுக்க கறுப்பாகும் உன் வாழ்வும்.; எமதான நிலத்தில் ஏகமாக நீயா? நமதான உரிமை நாதியற்று போமா? ஆனதான வாழ்வே ஆதியற்று போமா? வருடல் என்பது உனதான ஆத்மா! மருகல் ஒன்றே தமிழனவன் வாழ்வா! விரிதல் ஒன்றே எமதான ஆற்றல், பிரிதல் ஒ…
-
- 0 replies
- 596 views
-
-
-
நாங்கள் தூக்கத்தில் விழித்து கொண்டு இருப்பவர்கள் நாங்கள் வாழ்வோடு செத்துகொண்டிருப்பவர்கள் நாங்கள் கந்தககாற்றில் கருகி போனவர்கள் நாங்கள் மருத்துவத்துக்காய் மயங்கி விழ்தவர்கள் நாங்கள் ஈழதாகம் கொண்டு தண்ணீர்தாகம் உற்றவர்கள் நாங்கள் ஈழம் எனும் கனவு கண்டவர்கள் நாங்கள் முள்ளிவாய்க்காலில் முடங்கி முட்கம்பி முடிச்சுக்குள் நாங்கள் எங்கள் மண்ணில் அகதியானவர்கள் நாங்கள் நாங்கள் வேறு யாருமல்ல நாங்கள் ஈழத்தமிழர்கள்
-
- 6 replies
- 1.2k views
-
-
தனியாக நானும் அலைகின்றேன் துணையாக நீயும் வருவாயா தூக்கங்கள் இன்றி தவிக்கின்றேன் கனவாக மட்டும் வருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) தவமாக நானும் இருகின்றேன் வரமாக நீயும் வருவாயா சுகமாக நானும் தொலைந்துவிட இதமாக உன்னை தருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) காதல் ஒன்றின் அர்த்தம் கண்டுகொண்டேன் பெண்ணே நெஞ்சுக்குள்ள உன்ன பூட்டி வைத்த பின்னே சாயங்கால பூவாய் நீயும் பூத்திருந்தாய் சாலை தோறும் பெண்ணே உன்னை பார்த்திருந்தேன் (2) மலரே நான் மயங்கிவிட்டேன் மனதில் உன்னை சுமந்துவிட்டேன் (2) உயிரே என்னை வாழவிடு உயிரை கொஞ்சம் வாழவிடு (2) அங்கும் இங்கும் சுற்றும் வாலிபத்தில் பெண்ணே உன் காலுக்குள்ள நானும் சுற்றுகின்றேன் கண்ணே இரவினை பகைத்தேன் விழிகளினால் இதயமும் த…
-
- 17 replies
- 1.4k views
-
-
மாயை… - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலையுதிர்கால சருகுகளாய் உலகமெங்கும் சிதறினமே அம்ம நீ போனது எங்கடி அனுதினம் உன்னையே தேடினேன். இனிவழி ஏதென நோகையில் இணையத்தில் வந்து கண் சிந்தினாய். நீயுமா தேடினாய் கண்ணம்மா?. எல்லை இலாத மின் அம்பலம் அங்கு ஏங்கும் மனசுகள் சங்கமம் உந்தன் இருப்பை உணர்வதில் உயிரே மயங்குது கண்ணம்மா . இணைவெளியிடைக் கண்ணம்மா உந்தன் எழிலில் மொழியில் கரைகிறேன் அகதி அழிந்திடும் அன்பிலே ஆதரவான மொழியிலே. ஆவியைத் தின்கிற கண்ணிலே போதை ஆசை சிவந்த இதழ்களிலே காட்ச்சியும் பேச்சுமே…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஓர் வளவில் குடியிருந்தோம் எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள் உங்கள் ரகசிய நடமாட்டங்களின் காலடிச் சத்தங்கள் எங்கள் பிடரியில் கேட்கத் தொடங்க எதேச்சையாகத் தான் கவனித்தோம் விசாரிக்கத் தொடங்கிய வேளை அறுகம்புல்லாய் படர்ந்து கொண்டே போனது எமை நீர் அறுப்பதற்கு தயாரான ஆயிரம் தடையங்கள் கிழக்கிலும் நீரெம்மை கிழித்துத் தொங்கவிடும் மரணத்தின் சாக்குரல்கள் அடிவயிற்றில் புரளத் தொடங்க வேறுவழியெதுவும் இருக்கவில்லை கீறோ, கிழிதலோ இன்றி அப்போதைக்கான அவகாச ஏற்பாடாய் விலகிச் செல்ல வேண்டிக் கொண்டோம் அதன் பிறகு ஆயிரம் நடந்தது போனது குலை குலையாய் எமையழித்து அதைக் கொண்டாடும் அளவுக்கு நிகழ…
-
- 4 replies
- 822 views
-