Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கல்லையும் கடவுளென்பர் - தாவும் குரங்கையும் கும்பிடுவார் மாட்டையும் மாதாவென்பர் - அதன் மலத்தையும் மதித்திடுவர் பாவிகளையும் பகவானென்பர் -பகைப் பாம்புக்கும் பால்விடுவர் சனியையும் சாமியென்பர் - சுடும் சூரியனையும் சிறப்பிப்பர் தர்மத்தைத் தொலைத்திடுவர் - தவிக்கும் தமிழரைத் தவிர்த்திடுவர் http://gkanthan.wordpress.com/index/pakthar/

  2. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! குறள் நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள் …

    • 5 replies
    • 1.8k views
  3. Started by nochchi,

    1987 யூலை 5 …. --------------------------------- இது வெறும் நினைத்து மறந்திடும் நினைவுநாளல்ல எம் தேசம் மீட்டிடத் தீயென வாழ்ந்தவர் தீரத்தைப் பாடிடும் வீர நாளன்றோ! விடுதலைப் பாதையின் தடைகளை வீழ்த்திட வெடிகளாய் மாறிய வேதங்களன்றோ! இவர் பாதம் பதிந்த நிலங்களின் மீதிலே பூக்களைத் தூவிடும் காலத்தைப் படைப்போம்! மக்கள் வாழ்வினை நெஞ்சிலே சுமந்தவர் தம்முயிர் வீசிடும் வேளையிற் கூடத் தாயக விடுதலை கீதம் பாடிடும் பெரும் ஞானிகளானோர்! ஞாலம் மீதிலே வாழ்கின்ற வரையிலே இவர் நாமத்தை எங்கள் நெஞ்சிலே சுமப்போம்! - நொச்சி -

  4. கரும்புலிகள்..... கரும்புலிகள் நினைவுக் கவிதை.... கவிதை - இளங்கவி தமிழீழக் கடலின் ஒவ்வோர் நீர்த்துளியும் தன்னில் எரிந்த கரும்புலியின் கதை சொல்லக் காத்திருக்கு........ எதிரியிடம் சிக்கி மானம் இழந்ததனால் அது விடும் கண்ணீர்த்துளிகள் சேர்ந்து ஆழிப்பேரலையாகக் காத்திருக்கு...... நீரிலே அக்கினிக்குண்டம் வளர்த்து அதிலே எதிரியைப் பலிகொடுத்து எங்கள் கடலை எதிரி தொடாமல் எங்களுக்காய் வைத்திருந்த இரும்பு மனிதர்கள் எங்கள் கரும்புலிகள்........ பிரயாணம் தொடங்கிவிட்டால் அவனுக்கு புரிவதெல்லாம் ஈழ விடுதலை...... தெரிவதெல்லாம் எதிரியின் இலக்கு....... அவன் இலட்சியம் தான் எரிந்து எதிரியை எரிப்பது..... தன் வாழ்வுக்காய்…

  5. களனி கங்கையின் இசை நிலவிலே பெளத்த நாட்டிளம் பெண்களுடனே சுந்தர சிங்களத்தில் பாட்டிசைத்து ரயில்,பஸ் ஒட்டி விளையாடிடுவோம் யாழ்ப்பாணத்து செம்மண் புறத்து பனம்பண்டம் புளத்சிங்கள வெத்திலைக்கு மாறு பண்டம் முஸ்லிம் மக்களின் கவிதை கொண்டு அரபிய தொப்பிகளை பரிசளிப்போம் புலத்து தமிழருக்கோர் பாலம் அமைப்போம் இணையத்தை பலப்படுத்தி உறவு சமைப்போம் மகாவலியில் ஒடிவரும் நிரின்மிகையால் எல்லா மாவட்டங்களிலும் பயிர் செய்திடுவோம் மலையகத்தில் தேயிலை பயிரிடுவோம் வெளிநாட்டுக்கு ஏற்றியிடுவோம் மட்டுநகரில் கருவாடு காயவைப்போம் தொப்புள் கொடி உறவுகளுக்கு பார்சல் பண்ணிடுவோம் ஆயுதம் செய்வோம் நல்ல குடியேற்றம் செய்வோம் விகாரைகள் வைப்போம் அகதி முகாம் வைப்போம் ச…

  6. கொடூர முகங்கள் கவிதை - இளங்கவி புலியாய் பாய்ந்தவள் பிணமாகிய பின்னும் அவளின் அம்மணத்தை ரசிக்கும் கொடூர முகங்கள்..... தமிழ் மானம் காக்க தன்னுயிர் தர நினைத்தவள் என்றோ நினைத்திருப்பாள் தன் உயிர்தான் முதலில் போகுமென்று.... உயிர் போனபின்னும் பிணம் தின்னிக் கழுகுகள் சுற்றி நின்று தன் பிணத்திலும் பெண்மையை ரசிக்கும் கூட்டத்தின் நடுவே தன் குருதி ஈழமண்ணை நனைக்க கருகிய பூக்களாய் கிடப்பாளென்று கனவிலும் நினைத்திருக்காள்......! மாவீரர் கல்லறையில் மரியாதையாய் துயில்கொள்ள நினைத்தவளுக்கு மானமில்லா கொடூர முகங்களின் கையடக்க தொலைபேசியில் புகைப்படமாய் கிடப்பாளென்று நினைத்திருக்கவே மாட்டாள் தான்....... பூப்படைந்த நாள…

  7. Started by nochchi,

    அகோர கோரம் மரணத்தின் ஓலங்களினாலானதாயிருக்கிறது அங்கு படர்ந்திருக்கும் கனத்த இருள் குருதியின் கருஞ்சிவப்பாயிருக்கிறது அந்த இருளின் நிறம் ரத்த மயமான அந்நிலம் சூழ் ஆழியிலிருந்து அலைகளுக்கு பதிலாய் பிரேதங்களெழும்பிக் கொந்தளித்து கொடும்மரணத் தடம் பதிக்கின்றன காலூன்ற இடமின்றி நிலமெங்கும் உறைந்த ரத்தப் புள்ளிகளிட்டு தெறித்துச் சிதைந்த மனித நரம்புகளால் அகோர கோலம் இட்டிருக்கும் துப்பாக்கியேந்திய கொடுங்கரங்கள் உணர்வின் வேள்வி குண்டத்திலிருந்து ரணங்களின் பெரும் ஓலம் எதிரொலிக்க அக்கினியில் ஆகுதியாயின மரித்த சடலங்கள் யுத்தச் சரித்திரங்களின் சிதிலக் குவியல்களிலிருந்து மரணத்தின் மஹாகுரூர முகம் தனது ஆட்காட்டி விரலால் உதட்டை …

    • 1 reply
    • 1.1k views
  8. அறிவுமதி அண்ணனின் க(அ)ண்ணன் பாட்டு ------------------------------------------------------------------------------------------------ என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான்! வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான்! நேர்க்கோடு வட்டம் ஆகலாம் நிழல்கூட விட்டுப் போகலாம்! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான்! அவன் வருவான் …

    • 2 replies
    • 1.5k views
  9. அகதித் துயர்வெளி 01. மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில் வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள் பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்? அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில் உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில் தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில் எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர் வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும் நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும் இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர் அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு …

    • 2 replies
    • 684 views
  10. “தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய கருணாநிதி ஸ்ரீமச்சாசனம் ஊர்வச சிரோபபிஷசேகரி…” இச்செப்பேடு செப்புவது யாதெனில், “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!” என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு விடாது கடிதமெழுதியதோடு, அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட மணித்துளியில் அன்ன ஆகாரம் உண்ண மறுத்து, ஈழத்தமிழர் செத்த பின்பு போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன் கருணாநிதிச் சோழனின் மற்ற கைங்கர்யங்களாவன: சோழநாடு சோறுடைத்ததைப் பின்னுக்குத் தள்ளி ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்! பகை முடித்தார்! வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு, மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி, மகப்பேறு உதவித்தொகை… …

    • 2 replies
    • 1.4k views
  11. இன்று மீண்டும் அகதி முகாமில் கருணாகரன் அலைக்கழிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட அந்தக் காலை நேரத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டோம் இலக்கங்களாக எதுவும் தெரியாது அடுத்துவரும் கணங்கள் எப்படியென நீண்டவரிசை வழங்கப்பட்ட இலக்கங்கள் அவரவரக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அவரவர் அவரவர்க்கருகில் நகராப் பொழுதுகளோடு பிணைக்கப்பட்ட படுக்கை படுக்கையைச் சுற்றி முள்வலைகள் முப்பத்தி ஆறாவது தடவையும் இன்னொரு ஒப்பனை புதிய இடத்தில் பழைய அகதி அகதிகளின் நிழலைக் கண்காணிக்கும் முள்ளரண்கள் பழைய அகதிக்கு புதிய இலக்கங்கள் பழைய இலக்கங்களுக்கும் புதிய இலக்கங்களுக்குமிடையில் முடிவுறாத குழப்பங்களுடன் தூங்கும் கண்களில் துடித்துக்கொண்டிருக்கு…

  12. நந்தவன நாட்கள் தந்தையுடன் வாழ்ந்த அந்த நந்தவன நாட்களின் சிந்தையுடன் என் பாசமுள்ள தந்தைக்கும் அனைத்து தந்தையர்க்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் அன்னையெனும் ஆலயத்தின் அழகான கோபுரமாய் தன்னையே உருக்கி எமைத் தரணியிலே உருவாக்கி கண்ணிலே கனவு பொங்க காலமெல்லாம் எமைச் சுமந்து பண்புடன் பாசமதும் பரிவுடன் எமக்கூட்டி அன்புடன் அறிவூட்டி ஆசையாய்க் கதைபேசி உறுதியாய் நாம் நிற்க உறுதுணையாய்க் கல்வி அறிவுடன் அமுதூட்டி அறநெறிதனைக் காட்டி பிறர் நலம் பேணுவதைப் பெருமையாய் எடுத்தோதி வறுமையிலும் எம்மை வளமையாய்த் தினம் பேணி குடும்பமே கோவிலெனும் கொள்கையுடன் போராடி அடுத்தவர் நலம் பேணி அயலவர் துயர் போக்கி அறிவூட்டும் ஆசானாய் அகிலத்தில் தொழிலாற்றி மௌனமே வேதமதாய் மனது…

  13. என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... மே 18 இக்கு பிறகு எல்லாம் தலைகீழா தெரியுது எங்களுக்கு... ஒண்டு நாங்கள் தலைகிழா நிக்கிறோமா?-இல்லை எல்லாம் தலைகீழா நடக்குதோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... புலம்பெயர் தேசத்தில எல்லாமே புதிரா இருக்குது புரிஞ்சு கொள்ள புத்தி மட்டாக்கிடக்குது புதுசு புதுசா கனக்க முளைக்குது எது விதை?எது களை எண்டு எவருக்கேனும் தெரியுமோ? என்ன நடக்குது இங்க? எங்களுக்கு ஒண்டும் விளங்கயில்ல... யாருக்கேனும் தெரிஞ்சா சொல்லுங்கோ... தமிழர் பேரவை என்றோம் உலகமெல்லாம் தமிழர் ஒருகுடை என்றோம் ஓங்கி குரல் கொடுப்ப…

  14. கவியல்ல இது ஒரு காவியம் தேடியும் கிடைத்திடா தேவதையாய் எண்ணியது தேய்ந்து கட்டெறும்பான கதை சொல்லும் ஜீவகாவியம்…! ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு தோப்பிலே குருவியொன்று சிங்காரச் சிறகு விரிக்க சுதந்திர வானம்….! சுதந்திரமாய்க் குடியிருக்க சின்னக் கூடு சுமை தாங்கியாய் சின்ன மாமரம்…! சுந்தரக் கானமிசைக்க தென்றல் போடும் தக திமி தாளம்..! இவை சேர தப்பாமல் தன்பாட்டில் வாழ்ந்தது மனதோடு மகிழ்ச்சி பொங்க….! அன்றொரு வேளை அந்திசாயும் மாலை நெருங்க அருமையாய் வசந்தம் பூத்திருக்க பூமி மகள் அழகு காட்டியிருக்க கண்ணினைக் காட்சிகள் காந்தமாய்க் கவர களம் ஏகியது குருவி….! கண்கொள்ளாக் காட்சிகள் விருந்துகள் படைக்க வாயோடு வந்த கீதம் இசைத்துப் ப…

  15. - சீமை வாழ்கை : அன்னம்மக்கா ... பொன்னம்மக்கா... கச்சிதமாக சீமை வாழ்கையை சித்தரிக்கும் கவிதைத்தன்மை நிறைந்த நல்ல பாட்டு, நல்ல அமைதியான இசையமைப்பு ...!! யார் எங்கே பாடினாரோ தெரியாது ? தெரிந்தால் சொல்லுங்கோ ... யாழ் களத்தில் தொலைஏற்றவோ இணைக்கவோ முடியவில்லை ... !? http://xa.yimg.com/kq/groups/13723470/1689555141/name/Anammakka அன்னம்மக்கா ...பொன்னம்மக்கா வை தொலை எற்றிய jaffna_centr, yahoo group - விஜயநாதனிற்கு நன்றி -

  16. சும்மா ஒரு கிறுக்கள் பக்தர்கள் பகுத்தறியாமல் பம்பரமாய் சுத்துபவர்கள் அவதாரங்கள் ஆத்மீகத்தின் சாபக்கேடுகள் பூசாரிகள் கோயில் புனித்தத்தை கெடுத்த புண்ணியவான்கள் கோயில் தொண்டர்கள் சலுகைகளை கூலியாக பெறுபவகள் இலக்கியவாதிகள் இறந்தகால எண்ணங்களுக்கு இனிப்பு தடபுபவர்கள் சித்தாந்தம் தனிநபர் எண்ணங்களின் தொகுப்பு

    • 3 replies
    • 997 views
  17. முத்துக்குமரன்களும் முத்துவேலர்களும் தானாடாவிட்டாலும் தசை ஆடும்..அது ஆகாவிட்டால் தசை எரியும் ..முத்துக்குமரன்கள்... தானாடாவிட்டாலும் தசை நெரியும் முதுகுவலியில் (சாட்டாக) ஒதுங்கும்..முத்து வேலர்கள்... தமிழ் உணர்வு துரத்த ..தன்னுயிர் தானமாக்கும் முத்துக்குமரன்கள்.. தமிழ் உணர்வு வளர்த்து ... தன் வயிறு வளர்க்கும் முத்துவேலர்கள்.. தன் உறவுகள் துயர் பட ...உயிர் துறக்கும் ..முத்துக் குமரன்கள்.. தன் உறவுகள் கொழுத்துச் சிறந்திட ...உயிர் வளர்க்கும் ..முத்து வேலர்கள்.. ஒப்பிடவே முடியாத ..துயரம் ..கனக்கும் முத்துக்குமரன்கள்... ஒப்பிடலே இல்லாது ...காறி உமுழும் ...நிலையில் முத்து வேலர்கள்.. முன்னையது ..முத்து... பின்னையது..சொத்தை.. http://il…

    • 0 replies
    • 731 views
  18. உனைத் தொடர்ந்த எனைப் பிறர் தொடராதிருக்க, எங்கள் தடங்களை என் கூந்தலால் மறைத்தேன். எங்கள் கட்டில் தீவில் சூரியன் அஸ்த்தமித்தது, எதிரொலிகளை உண்டபடி இரவு எழுந்தது. கடலில் மிதக்கும் மரக்கட்டைகளைப் போல் கிடந்த நம் முதுகளோடு மெழுகுவர்த்த்தி மின்னி மறைந்து இரகசியம் பேசியது. எங்கள் தீவில் எங்கள் கடற்கரையில் நாங்கள் பின்னிப் பிணைந்து கிடந்தோம். எனக்கு மேல் உந்தன் விழிகள் கடைப்பிடித்துவிடுவேனோ எனத் தோன்றிய எனது வாக்குறுதிகள் பற்றிய பயத்தோடு, நாங்கள் பகிர்ந்து கொண்ட மெய்களைக் காட்டிலும், உரைக்கத்தவறிய பொய்களிற்காக அதிகம் வருந்திக்கொண்டு, நான் ஆழமாய்ச் சென்றேன். உனக்காக இறந்த காலத்தோடு போர் புரிய, நான் ஆழஆழமாய்ச் சென்றேன். இப்போ எங்கள் இருவரிற்கும் த…

    • 3 replies
    • 1.2k views
  19. o தீபச்செல்வன் 01 கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின் சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலில் எல்லோரையும் கைது செய்தனர் சிலரது கண்களை கட்டினர் சிலரது கைகளை கட்டினர் இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன வரிசையாக இருத்தப்பட்டனர் புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும் வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர் மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில் குருதியின் மேலாய் பூக்களை தூவ தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள் மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது உருக்கிக் கொட்டுகிறது சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன துப்ப…

    • 5 replies
    • 2.1k views
  20. மறப்போமா மன்னிப்போமா நாம்....? பின் வாங்கினால் இன்று போய் நாளைவா என்ற பெருமையுடைய தேசத்திடம் பின் வாங்கினோம் கலைத்து கலைத்து தொலைத்ததென்ன நியாயம்... மறப்போமா மன்னிப்போமா நாம்....? உண்ணாவிரதமிருந்தால் உயிர் போகும் என்று கருணை காட்டும் தேசம் உயிரோடு கொழுத்தி முடி என உண்ணா நோன்பு இருந்ததை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? ஒரு ஊர் திரண்டாலே ஊசலாடும் உலகத்திடம் ஊர் ஊராய் ஊர்வலம் நடாத்தி உலகையே உலுக்கியும் எம் உறவுகளை உயிரோடு கொழுத்த சம்மதித்த உலகை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? மிருகவதை என்றாலே மினக்கட்டு சபை கூட்டி தடுத்திடும் உலகிடம் சதையும் பிணமுமாய் தமிழர் என்ற மனிதர் என்று சடுதியுடன் விபரித்தும் தடுக்காத உல…

  21. மரணம் ! அது உனது முகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.... சொல்ல எழுகிற சொற்களைக் குற்றித் துளைக்கும் கூர்முனைக் கத்தியிலிருந்து உயிர்க்காற்று மூர்ச்சையுறுகிறது. உதிரும் குருதித் துளிகள் உனக்குள்ளிருந்த பலம் முழுவதையும் உறிஞ்சிக் கொண்டு போகிறது..... கத்தியின் இடுக்கிலிருந்து ஒழுகுகிறது உனது கடைசிக் கனவுகள்..... ஓர் உயிரின் பெறுமதி பற்றிய எந்தவித கவலையுமின்றி உன்னைக் குற்றிக் குருதியில் குளிப்பாட்டி மகிழ்கிறது காடேறிகளின் கர்வம்..... இன்றைய முகப்புச் செய்திகளிலும் தலைப்புச் செய்திகளிலும் நீ நிறைந்து வழிகிறாய்..... வியாபாரிகள் வயிறு முட்ட நீ வலியில் துளித்துளியாய் செத்துப் போகிறாய். எத்தனையோ கொடுமைகள் …

    • 32 replies
    • 4.4k views
  22. நீயே எனக்கு வேணுமடா! - அஞ்சனா உனை மறந்து எனக்கோர் வாழ்வா என் அன்பே?! கண்ணை மறந்து இமையும் பிரியுமோ சொல் அன்பே?! உள்ளுக்குள் உன்னை நினைத்தே வாழ்கின்றேன்! உன் சொல்லால் தானே ஆனந்தம் நான் காண்கின்றேன்! பண்ணைக்கொண்டே பண்ணைக்கொண்டே என்னைச்செதுக்கினாய்! உன் உள்ளம் தந்தே என்னை எனக்கு அன்பே உணர்த்தினாய்! கள்ளமில்லா மொழியால் காதல் நீயும் செப்பினாய்! கவிதை வடிவே ஆகி என் உயிரை நிரப்பினாய்! தெள்ளுத் தமிழே தேனின் சுவையே.. வண்ணக் கனவே வடிவே எழிலே.. பிள்ளை மொழியே.. என் உயிரின் அழகே.. எண்ணம் எல்லாம் நிரப்பும் சுவையே! நீயே எனக்கு வேண்டுமடா! யாவுமாகி!! - அஞ்சனா நீ இன்றிப்போனால் என் உலகம் சுத்தாது! நீதான் அன்பே என் உடல் வெப்பத்தின் உயிர் மூச்ச…

  23. இந்தப்பாடல் கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பில் கொல்லப்பட்ட எமது மக்களுக்கும் சண்டையிட்டு மடிந்துபோன எமது மாவீரச் செல்வங்களுக்குமாக அஞ்ச்சலி செலுததுவதற்காக உருவாக்கியிருந்தேன்.... என்னிடமிருக்கும் மிகச்சிறிய வளங்களை வைத்தே உருவாக்கியிருக்கிறேன். அதனால் sound quality யில் சரியான தரம் கிடைக்கவில்லை. ஆனாலும் இசையமைப்பு, பாடல் வரிகள் பாடலைப்பாடியது அனைத்தும் நான்தான். எனது குரலில் நிறையக்குறைகள் இருக்கும், குரலைப் பார்க்காதீர்கள், பாடலில் நான் சொல்லிய வலிகளும் வைராய்க்கியமும் தான் உங்களுக்கும் இருக்குமென்று நம்பி இதை இணைக்கிறேன். மிக முக்கியமாக இதை இணைப்பதில் ஏற்பட்ட சிரமதில் எனக்கு உதவிசெய்து இதை இணைக்க உதவிய மச்சானுக்கு மிக்க நன்றிகள்... http://k…

  24. மேமாதம் எங்களின் சா மாதமாய்..... முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவுகளோடு ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.

    • 0 replies
    • 836 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.