Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய …

  2. 'போர் இன்னும் ஓயவில்லை' மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா இப்போதும் நினைவி்ருக்கிறது போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும் அவர்கள் கொல்லப்பட்ட லட்சம் சனங்களின் சடலங்களை ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக அழித்து முடித்திருக்கக்கூடவில்லை காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து புழுக்கள் கொட்டித் தீரவில்லை திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல எல்லாம் முடிந்துவிட்டது இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும் வெள்ளைய…

    • 0 replies
    • 1.2k views
  3. அப்பிக்கிடக்கும் அந்தகாரம் துடைத்து கசியும் நிலவொளி துருவேறிய கம்பிகளை கடந்து கரடுமுரடான பழுப்பேறிய சுவர்களில் திட்டுதிட்டாய் விழுகிறது காய்ந்த உதிரச் சிதறல்கள் உயிர்வற்றிய ஓவியங்களாய் பயமுறுத்துகிறது. இரவின் நிசப்தம் உடைகிறது கூட்டத்தைப் பிரிந்து தனியனாகிப்போன குட்டியானையொன்றின் பிளிறலைப்போல் அருகிலோர் அறையில் அலறி அடங்கிப்போகிறது அந்தரித்த ஒரு தமிழ்க்குரல் அடிவயிற்றைப் பிழிகிறது பயம் அடுத்தது நானாகவும் இருக்கலாம் கடந்த விசாரணையின் காயங்களே காயவில்லை உதிரம் கலந்து ஒழுகிறது சலம் பிளாஸ்ரிக்குழாய் செருகப்பட்ட மலவாயிலில் மரணவேதனை நகம் பிடுங்கப்பட்ட விரல்களில் இலையான்கள் இருக்க எத்தனிக்கிறது. இன்னமும் நான் இருக்கி…

  4. ஒரு உறவை இழந்தாலே ஆண்டாண்டு தவிக்கும் எம் இனத்தில் கொத்துக்கொத்தாய் ஆயிரமாயிரமாய் கொடுத்துக்கொண்டிருந்ததை கேட்டு பார்த்து அழுது புரண்டு காப்பாற்றும்படி மன்றாடி தோற்று இன்றும் எழும்பமுடியாமல் நித்திரை தொலைத்து நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து நடைப்பிணங்களாக வாழ்கின்ற தமிழினம் தொலைத்தவை கொஞ்சமா? காவலுக்கு நின்ற தம்பிகளை தங்கைகளை பறி கொடுத்து தலைமை தாங்கிய தளபதிகளை இழந்து காப்பாற்றவேண்டிய தலைமையை தொலைத்து இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரர்களின்றி தலை குனிந்து நிற்கும் எம் இனம் மீண்ட…

  5. இறந்த காலத்தை மறப்பதற்கான கருவி கவிதை: தமிழ்நதி - ஓவியம்: ரமணன் அரசே, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உங்கள் கட்டளைப்படி கைகளை உயர்த்தியபடி அம்மணமாக வெளியேறிய பாதை செப்பனிடப்பட்டுவிட்டது துருத்தி நின்ற எலும்புகளை சதை வளர்ந்து மூடிவிட்டது மண்மேடுகளினுள்ளிருந்து `வா’வெனக் கை அசைத்த உடுப்புகளும் உக்கிப்போயின துருப்பிடித்த தகரத்தால் தொப்பூள்கொடி அறுக்கப்பட்ட குழந்தை ஒன்பது வயதுச் சிறுவனாகி மீண்டும் பள்ளிக்கூடமாகிவிட்ட அகதி முகாமில் படிக்கச் செல்கிறான் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’யாகவிருந்த கடற்கரையில் சூள்விளக்குகள் மினுமினுக்க மீன்பிடி வள்ளங்கள் தளும்பித் திரிகின்றன இன்னமும் செப்பனிடப்படாத வீடுகளுள் தங்கள் …

  6. தேநீர் கவிதை: உனக்கு என்ன அர்த்தம்? உன் பிறப்புச் சான்றிதழ் உன் பெற்றோர் வாங்குவர். உன் இறப்புச் சான்றிதழ் உனக்குப் பின்னால் இருப்பவர் வாங்குவர். நீ என்ன வாங்குவாய்? **** பகல் வந்துபோனதற்கு நட்சத்திரங்கள் அடையாளம் இரவு வந்து போனதற்கு விடியலே அடையாளம் நீ வந்து போனதற்கு என்ன அடையாளம்? **** அகராதியில் ஒரு புழுக்கூட இடம் பெற்றிருக்கும் அதற்கு…

  7. தேநீர் கவிதை: ரசாயன அடிமைகள் பின் தொடர்ந்து வருகிறார்கள் குடிநோயாளியை ஒரு தாயோ தங்கையோ மனைவியோ மகளோ அடிப்பதற்கு விரட்டுகிறான் ஞானமற்ற பாதகன். சுவர் முட்டி நிற்கிறான் குடிநோயாளி குடத்துக்குள் தலை மாட்டிய நாய். தப்பிக்க நினைத்து ஓடுபவனை விரட்டி களைத்து விட்டு விடுகிறது மதுமிருகம். வாழ்க்கையிடம் கற்றுக்கொள்பவன் குடிநோயாளி... …

  8. தேநீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய …

  9. விறைத்த குறிகளில் மதப்பாசிசம்! ரூபன் சிவராஜா கருவறை முடி பிஞ்சுடலின் தசை திறந்து சிதைத்திருக்கிறது பாசிசப் பூமி புத்திரரின் காமவெறி ஆசிஃபா நேற்றுவரை அவள் நாடோடிகளின் செல்ல மகள் குதூகலித்து குதிரை மேய்த்துத் திரிந்தவள் காடு மலை மேடுகளில் சுதந்திரமாய் காற்றோடு நடந்தவள் இன்று அவள் என் மகள் இனி அவள் உலகக் குழந்தை எப்படித் துடித்திருப்பாள் ஐயோ மிருகங்கள்கூட அவளை இப்படிக் குதறியிருக்காது நேற்று நர்பயா இன்று ஆசிஃபா விறைத்த குறிகளில் மதப்பாசிசத்தைக் காவித்திரிகிறது காவிக்கூட்டம் காமவெறியும் பெண்ணுடலைக் கிழிக்கிறது இனவெறியும் ம…

  10. தேநீர் கவிதை: வலிக்கிறது! உயரத் துடிக்கும் முடவன் நான். அடிக்கு ஒருமுறை வழுக்கியோ திறனின்றியோ விழுகிறேன். எப்படியோ கை ஊன்றி எழுந்து விடுகிறேன் யார் தயவும் இல்லாமல். மீண்டும் விழுந்தால் மாண்டுவிடாமல் எழ மனதில் உறுதிகொண்டு. ஒவ்வொரு முறையும் உறுதி கொஞ்சம் கொஞ்சமாய் குறைகிறது. தத்தளிக்கும் என்னை தூக்கிவிட்டு துயர் துடைக்கும் தாயுள்ளம் எதிர்பார்க்கும் தற்குறி இல்லை நா…

  11. உன் தோள் சாய ஆசைதான்...... அன்பே... உன் தோள் சாய நான் தூங்காமல் கத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டும்தான் நீ வருவயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக் கிடக்கிறாய் நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே விழிப்பதும் சேர்ந்தே நடப்பதும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் முடிகிறது உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதுக்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இல்லை இருந்தும் ஏகாந்தத்தை ரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்கமானவை ப…

  12. ”எங்கிருந்தோ வந்து நம் தெருவோர மரக்கிளையில் குந்தி தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த அந்தக் குருவியைப் போல் காணாமல் போனதடி காலங்கள்.” . எனது பூவால் குருவி கவிதை 1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது நான்ஓட்டமவடி ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணி மற்றும் மந்தைகள் பிரச்சினை தொடர்பாக பேச படுவான் கரைக்குச் சென்றிருந்தேன். உயிரை பணயம் வைத்து யாருமற்ற பகுதியை கடந்து போனேன். இந்த ஆபத்தான நெடும் பயணம் ஏறாவூரில் இருந்து ஆரம்பமானது. ஏறாவூரில் இருந்து வந்தார மூலை வரை என்னை தோழன் பசீர் சேகுதாவுத் தனது வானில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். நான் பாதுகாப்பாக போய் வரவேண்டுமென்ற கவலையுடன் விடை தந்தான். . வன்னியில் இருந்து யாழ்வேந்தன் வந்திருந்தார். சில நாட்க்களின் முன்னர்…

    • 2 replies
    • 2.3k views
  13. சாவிலும் சுதந்திரம் இல்லை

    • 0 replies
    • 772 views
  14. ஈழ மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காகக் களத்தில் நின்று புரட்சிக்கனல் கக்கிய அந்த மாபெரும் கவிஞனை சும்மா புதுவையென்றாலே தமிழ்த் தேசியவாதிகள் யாவருமறிவர். 2009 இலிருந்து காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்ட அக்கவிஞனை முகநூலில் சிலர் இன்று நினைவு கூர்ந்ததால் அவரைப் பற்றி முன்பொருகால் நானெழுதிய இந்தக் கவிதையை இங்கு பதிவிடுகிறேன். தணலை மூட்டிய தமிழ்க் கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆ…

    • 3 replies
    • 1.3k views
  15. வெளிநாட்டில எங்கட பெடிபெட்டயள்

  16. பயங்கரவாதியின் மகள் இறந்தேனும் தன் துணைவனைக் கண்டுகொண்டாள் அவள் இப்படி ஒரு நீள் பிரிவு எந்தப் பெண்ணுக்கும் கிடைத்துவிடக்கூடாது என எண்ணியபடி ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி எந்தக் குழந்தையும் இப்படி ஒரு சிறை வண்டியில் ஏறிவிடக்கூடதென எண்ணியபடி தாயின் சடலத்தின் பின் கொள்ளிக்குடத்துடன் சென்றான் சிறுவன் எந்தக் குழந்தையும் இப்படி ஒரு வயதில் தன் தாயிற்கு கொள்ளி சுமக்கக்கூடாதென எண்ணியபடி காத்திருந்து காத்திருந்து இறந்துபோன துனைவிக்கு விலங்கிடப்பட்ட கைகளால் அரப்பும் சந்தனமும் அப்பினான் அவன் எந்த ஒரு துணைவனுக்கும் இப்படி ஒரு இறுதிச் சந்திப்பு நிகழ்ந்துவ…

  17. எங்கள் கனவு சுதந்திர வாழ்வு உங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கான கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர் ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர் இருந்தும் கனவின் தினவை கண்களில் ஏந்தியோர் சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர், புராணகாலப் பொழுதில் இருந்தே உமக்கு நாம் தான் போரும் புகைச்சலும் கடல் தாண்டி நீவிர் கதியால் போட வந்தவேளை மீண்டுமொருமுறை எங்கள் பூஞ்சோலை உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள் ஏவியோன் கழுத்தில் மாலையை ஏற்றினோம் சிதைதலின் வலி எத்தகையதென்பதின் நினைவூட்டல் அது, அதன் பின் காலம் சுழன்று நிழலின் பின்னே நிசமாய் அரசு நிகழ்ந்தது எத்தனை உயிர்களின் …

    • 1 reply
    • 869 views
  18. இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாண…

    • 0 replies
    • 1.1k views
  19. Mohamed Nizousபற்ற வைக்கின்றபைத்தியகாரனுக்கும் தெரியாது.எரிகின்ற கடையுடன்எத்தனை மனிதர்களின்எதிர்காலமும் எதிர்பார்ப்பும்எரிகின்றது என்பது.கல்லை எறிகின்றகாவாலிக்குத் தெரியாது.கண்ணாடியுடன் சேர்த்துதன்னாட்டின் பெயரும்உடைந்து போய்உலகளவில் நொறுங்குவது.பள்ளியை உடைக்கும்மொள்ளமாரிக்குத் தெரியாது.அள்ளாஹ்வின் வீட்டில்அத்து மீறி நுழைந்துஅட்டகாசம் செய்தவன்பட்டழிந்து போன செய்தி.வீடுடைத்து எரிக்கும்காடையனுக்குத் தெரியாது.பிறந்து வளர்ந்துபறந்து வாழ்ந்த வீடுஉடைந்து போகும் போதுஉள்ளே எழும் வலிஉடைக்கின்ற காடையனைஒரு நாள் வதைக்கும்.ஐம்பதாயிரம் தருவதாகஅறிவித்தல் கொடுக்கும்அரசுக்குப் புரியாது.தருகின்ற பணம்கருகிய இடத்தின்கறுப்பைப் போக்கவும்காணாது என்று.பாட்டுக் கேட்க கோல் எடுக்கும்பாத்திமாக்களுக்…

    • 0 replies
    • 1.1k views
  20. குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன் . மாடு தழுவி மாளாது தினவு என யானை தழுவ மழைக்காடு சென்றவரே மழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க ஆர்வக்கோளாற்றால் இறங்கிவந்த சூரியனே நீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில் கண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே பெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய் குரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே மேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள் காலமெல்லாம் வாழ்வர் மலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய் புல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய் வனதேவதைகளாய் பல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.

    • 2 replies
    • 1k views
  21. முஸ்லிம் நண்பா!உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!முடியவில்லை என்னால்;காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான் உடும்பனில்அவற்றை நீ வெட்டிவிட்டாயே!நீ மறந்திருப்பாய்.என்னால் மறக்கமுடியவில்லை.காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!நினைவிருக்கிறதா உனக்கு..நீ மறந்திருப்பாய்.நீ கொலைவெறியோடு விரட்டும் போது;ஒரு கையில் குழந்தையும்இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம் வீரமுனை, திராய்க்கேணியில்.நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்உனக்காய் அழமாட்டமா?ஆனால்;மன்னித்துவிடு சகோதரா...இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!நீ சிங்கள இனதாண்டவத்தில் தான் தத்தழிக்கிறாய்நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!நாளை…

    • 0 replies
    • 1.1k views
  22. கலோ புத்தா.. கவ் ஆர் யூ கலோ அல்கா கவ் ஆர் யூ.. புட்டும் தேங்காய்வும் புழுத்து மணக்குது புத்தனும் அல்காவும் குத்துப்படுவமே... பார்வைக்குத் தான் இது வெளிக் குத்து உள்ள இருக்கு நல்ல உள் குத்து..!! முள்ளிவாய்க்கால் இரத்த சகதியில் பால்சோறு பொங்கினம்.. ஐநா சபையேறி புத்தனின் கோரப் பற்களை கழுவியும் விட்டம்.. பாகிஸ்தான் வரை பறந்து மல்டி பரலும் டபக்கென்று அனுப்பச் சொன்னம்.. நாடு முழுதும் காட்டிக் கொடுப்பில் காலமும் கழித்தம்.. கூட்டு அழிப்பில் கூலிப் படைகளை தந்தும் வந்தம்.. ஊர்காவல்..ஜிகாத் என்று கூடவும் அலைஞ்சம்.. …

  23. உருப்பெற்று உருப்பெற்று வார்த்தைகள் வரிசைகட்டி நிற்கின்றன பேறுகாலநிலை; பேரவஸ்தை! ஞாபகங்களின் தொடர்பறுந்து விடாமல், கண்ணாடிக் குவளையை கை பற்றுதல்போல் தாள்களில் பிரசவிக்கும் கணம்வரை கவனம் வேண்டியிருக்கிறது! கைதவறி வைத்துவிட்ட கைத்தொலைபேசி, மருமகள் மீதான அம்மாவின் வசைபாடல், மூன்றுநாள் காய்ச்சலோடு மூத்தவளின் முனகல், அடுக்களைக்கும் அறைகளுக்குமாய் அந்தரித்து திரியும் மனையாள்…. கவனத்தை சிதைத்த காலைநேர களேபரங்களோடு கருக்கொண்ட கவிவரிகளும் கட்டறுந்து விடுகின்றன. அடிக்கடி சிணுங்கும் அலுவலக தொலைபேசிகள், கணினிக்குள் தொலைந்துபோன கணக்கியல் பதிவுகள், முகாமையாளரின் மேலாண்மை சிடுசிடுப்புக்கள் கூட்டங்கள் கொதிநிலை …

  24. தேர்த் திருவிழா ----------------- நினைத்து பார்க்கிறேன்.... கோயில் திருவிழாவை.... பத்து நாள் திருவிழாவில்.... படாத பாடு பட்டத்தை ...! முதல் நாள் திருவிழாவிற்கு.... குளித்து திருநீறணிந்து.... பக்திப்பழமாய் சென்றேன்... பார்ப்பவர்கள்..... கண் படுமளவிற்கு....! இரண்டாம் நாள் திருவிழாவில்... நண்பர்களுடன் கோயில் வீதி..... முழுவதும் ஓடித்திரிவதே வேலை..... பார்ப்பவர்கள் எல்லோரும்..... திட்டும் வரை ....! மூன்றாம் நாள் திருவிழாவில்.... நண்பர்கள்மத்தியில் .... மூண்டது சண்டை ..... கூட்டத்துக்குள்..... மறைந்து விளையாட்டு ....! நாளாம் நாள் திருவிழாவில்.... நாலாதிசையும் காரணமில்லாது.... அலைந்து திரிவேன் ...! ஐந்தாம் நாள் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.