கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
2011 புதுவருட வாழ்த்தும் கனவும் மோகன் அண்ணாவுக்கு அமைதி கிடைக்கணும் அதைப்புரிந்து எம்மவர் களத்தில் எழுதணும் இணையவனுக்கு சொந்த வீடு கிடைக்கணும் நிழலிக்கு இயலினி புதுவீட்டோடு அவருக்கான தொழில் கிடைக்கணும் ஜீவாத்தம்பி கோப்பை கரண்டியுடனான போர் நிறுத்தி நெஞ்சில் பேனை மாட்டணும் சேரன் தம்பிக்கு திருமணம் நடக்கணும் மகளாகவோ மருமகளாகவோ அவரின் அம்மா வரணும் யாயினி பிள்ளை எம்முன்னே ஓடித்திரியணும் நிலாமதியக்கா வகுப்பில் மீண்டும் வலம் வரணும் குமாரசாமியார் கள்ளுக்குடி மறக்கணும் எம்மை அகதியென்றால் அனாதையென்றால் சாட்டை தூக்கணும் இசைக்கு முதல் ஓட்டையுடன் தொடர்ந்து போட வசதி கிடைக்கணும் சிறித்தம்பி கைத்தொலைபேசி வாங்கணும் அதிலிருந்தும் படங்களை எமக்கு …
-
- 45 replies
- 5.6k views
-
-
சூதிலும் சூழ்ச்சியிலும் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள் நாங்கள் தெரிகின்றதா எங்களை ?? மகசீன் சிறை என்றும் காலி சிறை என்றும் வருடங்கள் காறித் துப்பியதே எங்களை!! தெரிகின்றதா எங்களை ?? சிறையில் இருக்கும் நாங்கள் வாழக்கூடாதாம் என்று ஒருகூட்டம் , வாழவேண்டும் என்று இன்னுமொருகூட்டம் !! தெரிகின்கிறதா எங்களை ?? சிங்களம் அடித்த அடி வலிக்கவில்லை உங்கள் அடியின் வலி......... குப்பிக்கடியின் வலியைவிட கொடுமை ஐயா!! கொட்டும் மழையும் பாம்புக் கடியும் பயிற்சிக் கடுமையும் ஒருநாள் இனித்தது எங்களுக்கு, எங்களைப் போல் பலர் களத்தில் பகைவருடன் பொருதி நின்றபொழுது அடித்த விசில்களால் குளம்பித்தான் போனோம்....... எல்லா மக்களும் எங்களுடன் தான் என்று, …
-
- 98 replies
- 5.6k views
-
-
போருக்கு பின் எனது கிராமத்துக்கு ஒரு முறை செல்ல முடிந்தது உடைந்த சட்டி பானைகளும்..... விளக்குமாறு தும்புத்தடிகளும்... அகப்பை காம்புகளுமே - அம்மாவினது அடையாளமாக மிஞ்சியிருந்தது. அப்பாவின் இருப்பு சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்... பழைய முடிச்சு பொட்டாளியிலும்.... புலப்படுத்தப்பட்டது. வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து புதைந்து கிடக்கிறது எனது பழைய காற்ச்சட்டை ஓரிரு நாட்களேனும் தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம். உரலும் அம்மியும் முற்றத்தில் சிதறிக்கிடந்தது. ஊரார்கள் தூக்க முடியாமல் விட்டு விட்டார்கள் போல...... தங்கச்சியினது - எந்த அடையாளங்களும் அங்கே காணப்படவில்லை... எதிரிகளால் அவள் கொலை செய்யப்பட்டிரு…
-
- 20 replies
- 5.6k views
-
-
-
- 27 replies
- 5.5k views
-
-
-
காதலை தருகின்றேன் இரண்டாண்டுகளுக்கு முன் இதயத்தில் உதித்த காதலை இன்று என்னிடம் சொல்லிய இளங்காளையே நீ நலமா? இன்று எனை சந்தித்த போது உன் கைவிரல்கள் நடுங்கியதேனோ பேச்சுக்கள் தடுமாறியதுமேனோ வியர்வைத்துளிகள் பூத்ததுமேனோ "எந்தன் குரல் கேட்டு உந்தன் பேச்சதனை மறந்தனையோ என் கண்களைப் பார்த்து உன் தூக்கத்தையும் தொலைத்தனையோ" ஓ...! இதைச் சொல்லத்தானோ இவ்வளவு தயக்கங்களா இருப்பினும்... நீ சொல்லிய காதலை உடன் ஏற்க மறுத்த என்னில் கோவங்கள் சிறிதுமின்றி சோகமான சிரிப்போடு நாளை என் பிறந்ததினம் நீ கட்டாயம் வரணும் என என் தலையில் கைவைத்து சத்தியம் செய்து சென்றவனே உன் பிறந்தநாள் பரிசாக என் காதலை உன்னிடம் தருகின்றேன்
-
- 46 replies
- 5.5k views
-
-
பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?! (முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.) சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை.. பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா? சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா? பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்.. சோழியான்: சரி.. பாடும்.. பாரதியார்: தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை (தீராத) தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி த…
-
- 46 replies
- 5.5k views
-
-
-
- 15 replies
- 5.5k views
-
-
பள்ளி காதலை நினைத்துப் பார்க்கிறேன் அமைதியான ஒடையின் - சிறு அலையெழுப்பும் சத்தங்களாய் என் மனதில் சிறு சலனங்கள். ஆரம்ப கல்வியின் பின் அடுத்ததாய் ஆறாம் வகுப்பு முதல் சில நாட்களில் முன் அறியா பல முகங்கள் பல்வேறு திசையிருந்தும் பாடசாலையை மொய்த்திருக்க என் வகுப்பிலே பளிச்சென்று ஒர் முகம் பட்டாம் பூச்சிபோல் என்கண்களில் ! பயமொரு பக்கம் மீண்டும் பார்க்க துடித்தது என் முகம் காரணம் புரியவில்லை அவளை பட்டாம் பூச்சியென்பதா பால் நிலவு என்பதா பயமறியாது துள்ளி ஓடும் மான்குட்டி என்பதா? அவளின் பார்வையொன்று என்மேல் விழுவதற்கு கண்களை மூடிக்கொன்று கணபதிக்கு கற்பூர நேத்தி வைக்கிறேன் மூடிய கண்களை மறுபடியும் திறப்பதற்குள் உணர்கிறேன…
-
- 7 replies
- 5.5k views
-
-
"என்னதான் நகைச்”வை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்''... என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு... 30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு... இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க.. கமல் படம். மன்மதன் அம்பு. மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு வந்து விட்@டா@மா என்கிற அளவிற்கு ஒரே கமலஹாஸன் களும்! கமல ஹாஸிகளும்! அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில் பதுங்கிக் கொண்டு நூல்தனம் காட்டும் அவரை பரமக்குடி பையன் என்றும் பெரியாரின் பிள்ளை என்றும் பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள் இந்த அம்பு... இராம பக்தர்களின் கைகளிலிருந்து …
-
- 34 replies
- 5.4k views
-
-
எச்சரிக்கை மடல் மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும், தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும் தயவு செய்து மேற்கொண்டு, இக்கவியின் இரத்த ஓடையை இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்! ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது. நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது. உந்தும் வலு உறுதியாக வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம் வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது. பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால் எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும். வலியின்றி வளர்ச்சி இல்லை. வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும். வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு…
-
- 20 replies
- 5.4k views
-
-
uary 8, 2020 - Editor · இலக்கியம் / கவிதை பாய் பெஸ்டி என்பவன் கனவுகளால் ஆனவனல்ல கண்ணீரால் ஆனவன் ஒரு பாய் பெஸ்டி பாதி மிருகமாகவும் பாதி மனிதனாகவும் வாழ்பவனல்ல; அவன் வாழ்வது பாதிக் கணவனாக பாதிக் காதலனாக ஒரு பாய் பெஸ்டி ஒரு பெண் உடுக்கை இழக்கும் ஒரு கணத்திற்காக இடுக்கண் களைய அவள் அருகிலேயே காத்திருக்கிறான் ஒரு நிழலாக அதுகூட அல்ல ஒரு நிழலின் நிழலாக ஒரு பாய் பெஸ்டிக்கு ஒரு பெண்ணின் கணவனின் முன் எவ்வளவு அன்னியனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும் அதே …
-
- 19 replies
- 5.4k views
-
-
முன் சிரித்து உள்ளத்தில் ஒன்றை வைத்து உண்மையில்லா வார்த்தைகளை பேசுகின்ற மனிதர்களோ நாமெல்லாம் ஓரே இனம் ஆனால் என் குலம் தான் உயர்ந்தது நாமேல்லாம் இறைவனின் பிள்ளைகள் ஆனால் எங்கள் கடவுள் உயர்ந்தவர் அன்பென்றும் பண்பென்றும் செல்லிக்கொண்டு வேஷம் போடும் சுயநலவாதிகளோ எது உண்மை ? எது பொய்? இதைவிட எது நன்மை என்று பார்க்கும் மனிதர்களோ துன்பங்களையும் , துரோகங்களையும் அவமானங்களையும் கண்டு வாடிப்போகாதே மனமே
-
- 21 replies
- 5.4k views
-
-
இன்னும் ஈரமாய் இதயத்தில்....! பூவரசம் இலையில் பீப்பி ஊதி.. லக்ஸ்பிறே பேணியில் மேளம் கொட்டி.. வாழைநாரில் தாலி கட்டி.. மண்சோறில் விருந்துவைத்து... ஆடிக்களித்த நாட்கள் அச்சச்சோ அழகே அழகு...! தேனீர் குவளையில் ஒலிபெருக்கி செய்து... பப்பாசி குழலில் ஒலிவாங்கி கட்டி... ஊர்முழுக்க கேட்குமென்று நினைத்து... உரத்து உரத்து பாடினது நினைச்சாலே.. இனிக்குது நெஞ்சை விட்டு போக மறுக்குது...! மாங்காய் சம்பல் போட்டதும்.. நெல்லிக்காய் பொறுக்கி தின்றதும்.. பொன்வண்டு பிடித்து தீ பெட்டியில் அடைத்து... குஞ்சு பொரித்திட்டுதா என்றே... நிமிடத்துக்கு ஒருதரம் பார்த்து பார்த்து... இருந்த காலம் கொல்லுதே மனசை கொல்லுதே..! தீ பெட்டியில் தொலைபேசி பேசி ம…
-
- 37 replies
- 5.4k views
-
-
நட்பு உலகின் தோற்றத்திலிருந்து .....படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....!காவியங்கள் காப்பியங்கள் கதைகள் ....இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் ....மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா ....நான் சொல்லிவிடப்போகிறேன் ....?எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!!புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....?புனித பைபிளில் சொல்லாத நட்பா ....?மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....?இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...?நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...?சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை ....விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...?முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....?பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!!மனைவியிடம் எதையும் மறைக்காமல் .....பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று ....புரிந்…
-
- 3 replies
- 5.4k views
-
-
ஆளும் கட்சிக்கு வரி மீது ஆசை எதிர்க்கட்சிக்கு கரி மீது ஆசை மக்களுக்கு மானியம் மீது ஆசை தாத்தாவுக்கு முதல் போக ஆசை பாட்டிக்கு மகனோடு வாழ ஆசை மகனுக்கு - அம்மாவின் பென்சன் மீது ஆசை மருமகளுக்கு ஒரு சமையல் ஆசை கணவனுக்கு உழைக்க ஆசை மனைவிக்கு புருசன் வீட்டிலிருக்க ஆசை பிள்ளைக்கு அப்பா அம்மா வெளியில் போக ஆசை வாடிக்கையாளருக்கு வங்கிக்காட் மீது ஆசை வங்கிக்கு வட்டிமீது ஆசை விற்பவனுக்கு விலைமீது ஆசை வாடிக்கையாளனுக்கு கழிவு மீது ஆசை வாகன ஓட்டிக்கு வேகம் மீது ஆசை புகை பிடிப்பவனுக்கு- நூறு ஆயுள் மீது ஆசை இந்துவுக்கு இந்தியாவை ஆள ஆசை இசுலாமியருக்கு உலகை ஆள ஆசை கத்தோலிக்கருக்கு காசால் ஆள ஆசை வாலிபருக்கு திருமண ஆசை …
-
- 47 replies
- 5.4k views
-
-
-
-
ஓ... காலனே, இந்த வேசம் போடாத வெண்பஞ்சு முடிபேசும் கதைகள் கொஞ்சமல்ல அவற்றைப் பேசி முடித்தபின்னால் ஓலை அனுப்புகிறேன் அதுவரைக்கும்....
-
- 26 replies
- 5.3k views
-
-
உன்னை .... காதல் செய்த நாளே .... காதலில் கருத்தரித்த நாள் .... என்னை .... காதலித்த நாளே .... காதலின் பிறந்த நாள் ....!!!+உன்னை ..... மறக்கும் நாள் வரின் .... என்னை இழக்கும் நாள் .... தொடங்கும் ..... உன்னை .... இழக்கும் நாள் தோன்றின் .... என் ......... மரிக்கும் நாள் தோன்றும் ....!!!@கவிப்புயல் இனியவன் காதல் ஒன்று கவிதை இரண்டு
-
- 6 replies
- 5.3k views
-
-
வித்தியாசமாக இந்தத் திரி சின்னச்சின்னதாக கவிதைகளும் காட்சிகளும் பேசும் தொடர்
-
- 44 replies
- 5.3k views
-
-
தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப்பொங்கல் கூவி அழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள் கோலமிட்டு விளக்கேற்றிக் கும்பிடுவாள் அம்மா பாலெடுத்துப் பொங்கலுக்குப் பானை வைப்பார் அப்பா விரும்பிய மா வாழை பலா விதவிதமாய்க் கனிகள் கரும்பிளனீர் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள் வெண்ணிறப்பால் பொங்கி வர வெடி சுடுவோம் நாங்கள் இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்
-
- 1 reply
- 5.3k views
-
-
ஒன்பதாம் ஆண்டு.... சைவ சமய பரீட்சை குனிந்து கரிசனையோடு எழுதுகிறேன்..... என் கண்ணும் விடைத்தாளும் விளையாடிகொண்டிருக்கும் வேளை ஏதோ ஒன்று அந்நியமாய்... என் கண்ணில் இடர்ப்பட... என் மனதிலோ.. வெட்கம் பூரிப்பு...... ஓர் இனம் புரியாத மாற்றம்... இப்புவியை வென்றுவிட்ட நினைப்பு.. அது... என் மூக்கின் கீழோரம் ஆடவனின் வீரச்சின்னம் எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது.... பரீட்சை எழுதவில்லை... ரசித்திருந்தேன்.. அன்று தான் பிறந்திருந்த என் மீசையை..... வருவாயா வருவாயா என பார்த்து.. களைத்திருந்து... காத்திருந்து.. என் மூத்தோர்... மீசையை.... நான் பார்த்து அவாப்பட்டு.... இறுதியில் …
-
- 26 replies
- 5.3k views
-
-
கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு. உயிராய் முளைத்த அவர் காதலில்... பூவாய் மலர்ந்தேன் செடியாகும் கனவோடு..! கருவறை தந்தவள் கருணையே இன்றி பாதியில் பறித்தாளே சாய்த்தாளே என்னுயிர்.! கண்ணீர் கூட காணிக்கை இல்லை உரிமைகள் கூட எழுத்தில் இல்லை கருக்கலைப்பென்று வாழ்வை அழிப்பவரே ஒரு கணம்... எனக்காய் அழுவீரோ..??! இல்லை தொலைந்தது தரித்திரம் சரித்திரம் படைபீரோ..??! நீரும் ஓர் நாள் கருவோடு இருந்தீர் மறந்தீரே துணிந்தீரே பாதகரே..! கண நேர சுகத்துக்காய் ஏனென்னை பலியிட்டீர்... சிதைக்கின்றீர் தளிருடலை..! பிறந்ததும் கொஞ்சும் உறவு பிறக்க முன் பாடையில் போவது பாவமில்லையோ..??! தளைக்க மானுடம்..!!! கரு…
-
- 11 replies
- 5.3k views
-
-
ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை திறந்து பார் பிரிவுக் கவிதை எழுதிக்கொண்டிருப்பேன் நீயே சொல் .. என் நம்பிக்கை நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல் நீ தள்ளியே நின்றால் விழுந்திட மாட்டெனோ உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும் உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது உனக்கும் இரவில் உலாப் போக பிடிக்குமா சரி வா போய் வருவோம் அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரும்படி உன்னை நான் பார்க்க வரும் போது மட்டும்தான் ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில் இரு…
-
- 9 replies
- 5.3k views
-