கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
சேரனின் காடாற்று கவிதை தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக கனத்த அட்டையுடன் அழகான புத்தகமாக வெளிவந்திருக்கின்றது. அதிலிருந்து இரு கவிதைகள் . நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு தற்கொலை. காவற்பரணில் ஒரு கண்ணிழந்த போராளி.
-
- 8 replies
- 1.2k views
-
-
பொய்யும் புரட்டும் ... சிரட்டையும் கையுமாம் .. என் அப்பத்தா அடிகடி .. முணுமுணுக்கும் சொல் .. வழி கேட்டா சொல்லார் பின் .. வக்கனையா விடுப்பு கேட்பார் .. எதுக்கு போறிங்க என்னத்துக்கு என்று .. கேள்வி மேல் கேள்வி வைப்பார் .. உள்ளதை உள்ளபடி சொல்லார் பொய்யர் .. சுற்றி வளைத்து சுழல விட்டு .. கெட்டித்தனம் என தமக்குள்ள எண்ணி .. அத்தனை முட்டாள் தனம் செய்யும் ... இவர்கள் வாய் திறந்தாள் வானவெடி .. மனிதனுள் மனிதனை விற்கும் .. வித்தை அறிந்தவர்கள் பொய்யர்கள் .. கேட்டால் வாழ வழி என்பார் ... வேறு நல்வழி தேடார் பொய்யர் .. நடுநிலை ..கரைநிலை என்று காரணம் வேறு .. கண்ணை பார்த்து மூக்கு என்று சொல்பவர் .. இல்லை என நீ சொன்னால் கொள்கைவாதி .. …
-
- 4 replies
- 1.2k views
-
-
அலைகள் தொடும் கரையினிலே கரை தொடும் அலையினை ரசித்தபடி கற்பனை அலைகளை மனமெனும் கரையினில் மோத விட்டு காத்திருந்தாள் அவனுக்காய்... ஒருதலைக்காதலாய் வளர்த்திட்ட அவள் முடிவை அவனிடம் சொல்லிட அழைத்திட்டாள் அவனை அழைப்பை ஏற்ற அவனுக்காய் காத்திருந்தாள் கடற்கரையினிலே....... எதிர்கால வாழக்கையினை ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும் என்றெண்ணியவளாய் திரும்பினாள் எதிரினிலே அவன் நின்றான்..... அவனை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து நின்றாள் ஆவலுடன் அவன் நலம் அறிந்து அமரும்படி அழைத்திட்டாள்...... இடைவெளியுடன் இருவரும் இரு கல்லில் அமர்ந்திட - அவன் இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட இவள் பார்வை அவனை நோக்கி ஏக்கத்துடன்.... ஆறு வருடங்க…
-
- 12 replies
- 1.2k views
-
-
அவர் வருவாரா எனது உடைந்து போன நாட்டை ஒட்ட வைக்க அவர் வருவாரா பள்ளத்தில் உள்ள என் ரட்ட(நாடு) சர்வதேசத்தில் உடட்ட(மேலே)வர அவர் வருவாரா தொப்பியை கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் என் அமைச்சர் உன் அமைச்சர் சண்டை பிடிக்கும் அரசியலில் இது பரம்பரை பழக்கம் ஸ்டிவாய் யிருக்கும் அவர் மூஞ்சி ஸ்மூத்தாய் செய்வார் சாணாக்கியம் என்னை விட அவருக்கே என் நாட்டில் அதிக நாட்டம் ஆகவே அவர் வருவார் போகப் போக பார் இன்னும் புயல் அடிக்கும் அவர் வந்து போன பின் வட மாகாண சபை இருக்காது மாகாணசபை பொலிஸ் பிடிக்காது தமிழனையே பிடிக்காது அவர் வருவார் பூமி மீது நான் பிறந்ததற்க்கு பொருளிருக்கு பொருளிருக்கு......
-
- 19 replies
- 1.2k views
-
-
நேற்றைய மனிதர்கள் கனவில் வந்தனர் மீண்டும் உருப்பெறாத கனவுகள் இரவின் நடு நிசியையும் தாண்டி வருகின்றன கைகள் முளைத்த பல கனவுகள் கழுத்தையும், குரல்வளையும் நெரித்து கொல்கின்றன என் கனவுகளுக்கு மொழிகள் இருப்பதில்லை நிறங்கள் இருப்பதில்லை சத்தம் இருப்பதில்லை மெளனம் நிறைந்த கனவில் நேற்றைய மனிதர்கள் வந்துபோயினர் அவர்களின் கேள்விகள் அவர்களின் ஏமாற்றங்கள் அவர்களின் துயரங்கள் அவர்கள் சொல்லும் உண்மைகள் எதற்கும் ஒலியிருப்பதில்லை ஆயினும் உயிர் துளைத்து ஓராயிரம் யுகங்களைக் கடக்கும் வலிகளைச் சொல்லிச் செல்கின்றனர் வலிய கனவொன்று இரவு கடக்கும் ஒவ்வொரு நாளிலும் நான் அச்சமுறுகின்றேன் கண்கள் மேல் படர்ந்த கனவின் சுமையில் பகலின் பொ…
-
- 7 replies
- 1.2k views
-
-
அண்ணா...! நானும் உன் சொந்தங்களும் நலம் என்று சொல்ல இங்கு தான் எமக்கு ஏதுமேயில்லையே??! தொலைந்து போன பொருட்கள் யாவும் கையில் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் இன்றுவரை வாழ்கிறாள் உனது அம்மா...! தொலை தூரம் நீ இன்று சென்றிட்ட போதிலுமே நாளை எமை தேடி வருவாய்... எங்கள் நம்பிக்கைகள் இன்னும் தகர்த்தெறியப்படவில்லை! நீ சென்ற நாள் முதலாய் புதினங்கள் பலப்பல நடக்குது நாள் தோறும். பக்கத்துக்கு வீடுக்காரன் புதுசா ஒரு எல்லைபிரச்சனைய தொடங்கியிருக்கான் என் வீட்டுக் காணியும் உன் தோட்டம் துரவெல்லாம் அளவெடுத்துக்கொண்டு போயினம்... எங்களூர் சுடலையில் வெறிதாய் கிடந்த வெற்றுக்காணியில் அயலூர் வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=5]" ஈழ மரத்தடித் தேனீ "[/size] [size=5][/size] வாடி விழுந்த பூவுக்குள் சிறுதேனீ தேன்குடிக்க முயல்கிறது! தேடி வைத்த தேன்கூடு ஏதுமன்றி தனிமையில் காய்கிறது! செத்து விழுந்த சருகுகளுக்குள் சில காலூன்றி எழும்பி விழுகிறது! பறக்க முனைந்து பாதி சிறகுகளை வலிய விரித்து தவழ்கிறது! பல்லிகளுக்கும் ஓணான்களுக்கும் அழையா விருந்து நடக்கிறது! ஆடிப்பாடி பறந்து திரிந்த கூட்டம்… சிறுகச் சிறுக வருடங்களாய் சேர்த்து வளர்த்த தேன்வதை… ரீங்காரத்தோடு நிமிர்ந்து நின்ற கூடு… யாருடைய அகங்காரத்தால் வதைபட்டு அழிந்ததுவோ…? நன்றி : கவிதையின் கவிதைகள்
-
- 16 replies
- 1.2k views
-
-
தளபதி பால்ராஜ் ஈழப்போர் வரலாற்றின் மாதண்டநாயக்கன் ஜெனரல் என கொண்டாடப்பட வேண்டிய மாவீரனாவார். அவரது மரணச் செய்தி கேட்டவுடன் எழுதிய அஞ்சலியை இப்போ மீழ செம்மைப் படுத்தி எடிற் பணி பதிவு செய்கிறேன் பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா எங்கள் விடுதலைபோரின் மாதண்ட நாயக்கா நீ மீட்ட ஆனையிறவுக் கடற் கழியில் தரை இறங்கும் செங்கால் நாரைகளாய் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. *என கவிதையிலே நீ வாழ ஈழம் கதறியழும் நியாய ம…
-
- 7 replies
- 1.2k views
-
-
அன்புக் கரம் நாடும் அகதிகள் இறைவன் படைப்பால் தமிழர் ஆனோம் தமித்தாய் வயிற்றுப் பாவி ஆனோம் தாய் நாட்டில் அகதி ஆனோம் தவமது இருந்தோம் பசியது தாங்கினோம் ஆண்டுகள் பல ஓடியும் ஆதரிப்பார் யாருமின்றி அந்நியர் நாட்டில் அகதிகள் ஆனோம் அன்புக்கரம் நீட்டி ஆதிரித்தான் அந்நியன் அந்நியன் உணர்வுகள் நமக்கு இல்லையே? நம்மவர் உணர்வுகள் உறங்குவது ஏனோ ? அகதிக்கு அகதி நாம் நம் நாட்டில் அகதியாம்! எம்மவர் காத்திட அன்புக்கரம் நீட்டுவோம் வாரீர்..? வரிகள் : வசீகரன் அச்சில் : 12.03.93 நன்றி : தமிழன் (பத்திரிகை)
-
- 2 replies
- 1.2k views
-
-
அன்பு செய் அல்லல் தீரும் உண்மை சொல் உயர்வு உண்டு தொண்டு செய் தொண்டனவாய் நன்மை செய் நாடு போற்றும் கருணை செய் காதலோடு பொறுமை கொள் பூமியாழ்வாய் உரிமை சொல் உனது நாடு வற்மை தீர் வாழ்வு ஓங்கும்..
-
- 0 replies
- 1.2k views
-
-
உனைத் தொடர்ந்த எனைப் பிறர் தொடராதிருக்க, எங்கள் தடங்களை என் கூந்தலால் மறைத்தேன். எங்கள் கட்டில் தீவில் சூரியன் அஸ்த்தமித்தது, எதிரொலிகளை உண்டபடி இரவு எழுந்தது. கடலில் மிதக்கும் மரக்கட்டைகளைப் போல் கிடந்த நம் முதுகளோடு மெழுகுவர்த்த்தி மின்னி மறைந்து இரகசியம் பேசியது. எங்கள் தீவில் எங்கள் கடற்கரையில் நாங்கள் பின்னிப் பிணைந்து கிடந்தோம். எனக்கு மேல் உந்தன் விழிகள் கடைப்பிடித்துவிடுவேனோ எனத் தோன்றிய எனது வாக்குறுதிகள் பற்றிய பயத்தோடு, நாங்கள் பகிர்ந்து கொண்ட மெய்களைக் காட்டிலும், உரைக்கத்தவறிய பொய்களிற்காக அதிகம் வருந்திக்கொண்டு, நான் ஆழமாய்ச் சென்றேன். உனக்காக இறந்த காலத்தோடு போர் புரிய, நான் ஆழஆழமாய்ச் சென்றேன். இப்போ எங்கள் இருவரிற்கும் த…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழர்நாம் உரிமை பெற்று தரணியில் நிமிர்ந்தே வாழ தனியொரு நாடு வேண்டும் - ஆனால் தடைபல உண்டு உண்மை தடைகளைத் தகர்த்து வீச தாயக மண்ணில் வீரர் தமதுயிர் துச்சம் என்றே தளர்வின்றிப் பணியில் உள்ளார் களத்திலே நிற்கும் அந்தக் காளையர் உடன் பொருதக் கடினமே அதை அறிந்த கயவரின் கொடுமை கேளும் மனிதரின் உரிமை என்று மற்றவர் போற்றும் சட்டம் மஹிந்தவின் ஆட்சி தன்னில் மரணமாய்ப் போன தன்றோ? கடத்தலும் பணப் பறிப்பும் கைதியாய் அடைத்து வைப்பும் கொலைகளும் செய்து நிற்கும்; கொடியவர் செயல் உரைப்போம் மனிதனை மிதிக்கும் அந்த மந்திகள் செயலை இந்த மாநிலம் அறியும் வண்ணம் மன்றிலே உரைத்து நிற்போம் பொங்கிடும் தமிழர் நாளில் பொலிவுடன் நாமும் கூடி …
-
- 5 replies
- 1.2k views
-
-
பாட்டியின் கைகளால் சுடப்படும் அப்பம் ... அம்மாவின் சேலையால் தலை துவட்டும் போது.. அப்பாவின் தோளில் ஏறி இருந்த பொழுதுகள் .. அண்ணனின் கைகளால் முதல் வாங்கிய அடி .. அக்காவின் கை பிடித்து கோயில் போன காலம் .. தங்கையை வெருட்டி அழவைத்த நேரம் . தம்பி என்னை கண்டால் ஓடி ஒழிந்த நிமிடம் .. ஒரு ரொட்டியை எட்டா பிரித்த சமயம் .. விலகி போன உறவு கதறி அழும் கணம் காதல் என்னை கலங்கடித்த கணப்பொழுது .. முதலில் அவளை தாவணியில் பார்த்த படம் .. கோயிலின் வடக்கு வீதி மேளசமா இனிமை ... சாண்டிலியன் கடல்புறா வர்ணனனை .. மெருவிரலால் தடவி மட்டி எடுத்த கடல் .. இசையில் மயங்கி ஒன்றிப்போன சங்கீதம் .. முதல் சினிமாவில் இருட்டில் தடவிய கதிரை ... எல்லாம் நினைவிருக்கு எனக்கு ஆனால் .. உ…
-
- 7 replies
- 1.2k views
-
-
தோணியிலே ஏறும் போது சொன்னார்கள் துறைமுகத்தில் இறங்குவதாய்.. பாதிவழி போகையிலே .. பாவிகளோ தோணிக்குத் துளையிட்டார்கள் தண்ணியேறித் தாழும் நிலை .. தோணிக்கின்று ! பாவிகளே .. பாவிகளே .. தாழுவது தோணிமட்டுமல்ல நீங்களும் தான் ! புரிந்து கொள்ளுங்கள் !
-
- 4 replies
- 1.2k views
-
-
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் குறித்து முதல்வர் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார். கருணாநிதியின் பிரதீபா பாட்டீல் கவிதை .. நூறு கோடியைத் தாண்டுகிற மக்கள் வெள்ளத்தில் வீறு கொண்ட ஆடவர் எண்ணிக்கை சரி பாதியாகும்! சீறுகின்ற பாம்புகள் முன்னே சிறு தவளைக் கூட்டம் போல்- ஆறுவது சினம் படித்து அடங்கிடும் பெண் குலமோ மறு பாதியாகும் நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி; நானம், அச்சம், மடம், பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி; அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல் அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு -என்று அனலிடை அவளைக் கருக்கி …
-
- 2 replies
- 1.2k views
-
-
யன்னலால் எட்டிப்பார்த்து எக்கத்தொடு மெல்ல திரும்புமோ நிலவொளி, நிசப்தத்தால் நிலைகுலைந்து வெதும்பி வெளியேறுமோ மலர்தடவிய தென்றல், நிழல்கரங்களால் நிலம் தடவித் தவிக்குமோ தளர்ந்து கொம்பாய் கிடக்குமோ செம்பருத்தி, மேட்டுக்குள் கடக்கும் எலிகள் இறங்கி உலாவுமோ, மேசை லாச்சிகளில் குட்டிகளை ஈனுமோ, என்னதான் நிகழும் எனது அறையில் !! சுவரில் மாட்டிய அழகியின் படத்தில் கூடுகட்டிய வண்டு ஆணியடித்த தடத்தில் உறங்கிக்கிடக்கும் ஆடை கொழுவியில் அமைதியாய் கிடக்கும் வலைபின்னி சிலந்தி, கதவில் ஒட்டிய படம் மக்கிப்போயிருக்கும் -அந்த கதவும் கொஞ்சம் இறங்கிப் போயிருக்கும். மேசையும் கதிரையும் புத்தகங்களும் தூசுகளில் கிடக்கும். மையிறுகி பேனையும், தோல்வெடித்துக் காலணியும், சக்குப்பிடித்து எண்ணைப் போத்…
-
- 12 replies
- 1.2k views
-
-
சயனைட் குப்பி...... கவிதை...... எங்கள் கோவில்களில் தெய்வமாய் வணங்குதற்கு தாராள தகுதிபெற்ற தனியொரு ஆயுதம் நீர்..... எதிரியிடம் பிடிபட்டு சிதைவழிந்து சாகாமல் கெளரவமாய் மரணத்தை வளங்கும் கொடை வள்ளல்..... காற்றாக உள் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் மூச்சை நிறுத்திவிடும் உன்னதப் படைப்பு நீங்கள்.... குட்டி எமன்களாக - வீரர் கழுத்திலே தொங்கிடுவீர் பாசத்தின் கயிற்றினாலே மரணத்தை மறுக்காமல் தந்திடுவீர்.... வீரர்களின் மனத்திடத்தை உரைத்து நிற்கும் உன்னதமாய் அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்யும் செங்கோல் நீர்..... உன் தொழில் அழித்தல் மட்டுமல்ல ஆக்கும் கடமை உண்டு இரசாயனவியல் துறையில் உனக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
நீயும் நானும் எதிரியடா- உனை நீண்டு வளர விட மாட்டேண்டா அல்லும் பகலும் அறுப்பேண்டா- உன் அத்தி வாரம் உடைப்பேண்டா... பாட்டன் ஆண்ட தேசமதை பறிக்க நீயும் வந்தாயோ...?? வெட்டி பயல்கள் நாமோட - உன்னை வெட்டி எறியாமல் விடுவேமோ...?? இல்லை நெஞ்சில் துணிவென்றோ எண்ணியே நீயும் வந்தாயோ அன்னியா உன்னை ஆண்டிடவே அகில தமிழர் விடுவாரோ...?? கொள்ளி கட்டை ஏந்தியே- எங்கள் கோட்டையை எரிக்க வந்தாயோ...?? இத்தனை துணிவு உனக்கென்றால் இனியும் உன்னை விடுவோமோ...?? - வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.2k views
-
-
அவன் வருவான் வருவான் என காத்து இருந்தன் ஆனால் வந்தது அவன் இல்லை அவன் திருமண கடிதம்
-
- 5 replies
- 1.2k views
-
-
இன்னுமா போர் அபாயம்? இலங்கைத் தமிழன்! இதோ, இந்தியக் கடற்கரைக்கு வருகிறான்... நண்பனாக அல்ல, நாடோடியாக! ஒவ்வொரு நாளும் உயிரைப் பிடித்துக்கொண்டு கரையொதுங்குகிறான்... தனியாக அல்ல, குடும்பம் குடும்பமாக! கச்சத் தீவருகே, கல்லெறி தூரத்திலே, தமிழனின் கல்லறை ஓலம் கேட்கிறது... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! தனுஷ்கோடி கடற்பகுதியிலே, தப்பியோடி வந்த தமிழனின் பிணங்கள் மிதக்கின்றன... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! இத்தனைக்குப் பிறகும், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, "இலங்கையில் போர்மூளும் அபாயம்!" என்று சர்வ சாதாரணமாக, சர்வ சதாகாலமாக, ஊடகங்களெல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றன... வேதனையாக இருக்கிறது... போர் மூண்டு எத்தனையோ காலங்கள் …
-
- 3 replies
- 1.1k views
-
-
வாழ்த்துக்கள்...! இது தான் நம் நாடு கலந்து கொள்ளாத கடைசி மாநாடு....! அடுத்தமுறை ஒன்பதாம் நாடாக கண்டிப்பாய் எம்மை வரவேற்பீர்....! அங்கே: இன்று நீங்கள் செய்வது போல் குடும்பக்கதை பேசோம்...! தொழில்நுட்பம் உரைத்து - உமை வியப்பில் ஆழ்த்துவோம்....! தீவிரவாதத்துக்கு - உண்மை இலகணம் சமைப்போம்....! நாம்நாட்டின் வளம் கொண்டு நாம் வாழும் இரகசியம் உங்களுடன் பகிர்ந்தே மகிழ்திருப்போம்....! முடியும் என்பாதே நம் தாரக மந்திரமாய் ஆங்கு உரத்தே ஒலிக்கும்....! வேண்டும் என்றால் இருந்து பாரும் நடக்க இருப்பதை உரைப்பது தான் நம் பரம்பரைப் பழக்கம்....!
-
- 2 replies
- 1.1k views
-
-
நாமொன்று நினைக்க தெய்வம் தானொன்று நினைக்கிறது !! எமக்கும், தமிழ் இனத்துக்கும் தலைவனாக தாயாக நண்பனாக சிறந்த வழிகாட்டியாக இருந்த உத்தமனே உலகத்தமிழரின் சூரியப்புதல்வனே எமை விட்டு எங்கு சென்றாய் ? உனக்கு நிகர் இவ்வுலகில் யாருமே இல்லார் என்று எண்ணியோ உலகமே திரண்டு உன்னை கொன்றோளித்ததொவோ ! மாவீரர் அழிவதில்லை, அவர்கள் காலத்தால் அழியாதவர்கள் என்று எமக்கு கற்று தந்தவன் நீ வருடந்தோறும் நவம்பர் 27 இல் அவர்களுக்கு நீ சுடர் ஏற்றிய பின்பே நாமும் எமது அக வணக்கத்தை செலுத்தினோம் இன்று எமை விட்டு பெரும் பயணம் ஏன் தொடர்ந்தாய்? நீ இன்னமும் எம்முடன் வாழ்வதனாலோ நீ சாகா வரம் பெற்றவன் ஆம் நீ ஒவ்வொருவரினதும் உள்ளத்திலும் அவரவர் இல்லத்தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
தீயினை கண்களில் கொழுத்து உன் மேனியில் அல்ல...!!! --------------------------------------- ”மக்கள் புரட்சி வெடிக்கும் சுதந்திர தமிழீழம் மலரும்” அண்ணன் திலீபன் உயிர் கருகும் போது சொன்ன வார்த்தை... இன்று தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் நேரம் மாணவர் புரட்சி வெடிக்கும் தருணம்... தொப்புள்கொடி உறவுகள் தோள் கொடுக்கும். எப்போதும் உங்களை எங்களின் இரத்த உறவுகளாய்த்தான் பார்க்கிறோம் எப்போதும் உங்களின் மேல் வைத்த நம்பிக்கையையும் விட்டதில்லை. தம்பிகளா உங்களின் எழுச்சி ...!! தங்கைகளே உங்களின் கோபங்களின் வீரியம்..!! தம்பிகளா உங்களின் ஒற்றுமை..!! தங்கைகளே உங்களின் கொள்கையின் நம்பிக்கை..!! இதில் எதுவுமே சோரம் போகாத யாருக்கும் அடிபணியாத எவனுக்கும் விலைபோகாத உற…
-
- 10 replies
- 1.1k views
-
-
சாக்கடையில் சந்தன மலர்கள்........ கவிதை - இளங்கவி....... வேலிப் பூவரசு வெண்மஞ்சல் பூப்பூத்து வாசலில் போவோரை வா வாவென்று வரவளைக்கும்..... முன்வைத்த காலை பின் வைய் என்று சொல்லி எங்கள் மொட்டைவால் நாய்க்குட்டி முன் வந்து குரைத்து நிற்கும்..... மொத்த அரசியலை ஒரு பத்திரிகையில் உள்வாங்கி எங்கள் பொக்குவாய் தாத்தா பொழுதுகள் போக்கிடுவார்.... ஆட்டிறைச்சிக் குழம்புவைக்க அயலட்டம் எல்லாம் மணக்க அந்த வாசக் குழம்புடனே வயிறாறச் சாப்பிட்ட நம் சந்தன மலர்களெல்லாம் இன்று சாக்கடைச் சகதிக்குள்....! அன்று திருவிழாக் காலத்திலே சிறிதாக வலம் வந்தோம்...... இன்றோ திண்ட மலம் கழிப்பதற்கும் நீண்டதாய் வரிசை நிற்போம்.... என்னையா கொடுமைகள்…
-
- 6 replies
- 1.1k views
-
-
நேற்று என் தோழனும் தோழியும் கடத்தப்பட்ட பின்.. காதலர்களாய் மடிந்தனர் இன்று அவர்களுக்காக காதலர் தினம் வேற்று நாட்டில் அவனும் விம்மிய படி அவளும் விதி செய்த சதியால் பிரிந்திருக்க இன்று இவர்களுக்காக காதலர் தினம் கூற்றுகள் தவறியதால் காதல் கும்மாளம் போட்டவரும் குறுகிய காலத்தில் பிரிந்தனர்... இன்று அவர்களுக்காக காதலர் தினம் நாற்றுக்களுக்கு நடுவே நல்லதாய் காதல் செய்தவர் நேற்றிந்த சிங்களன் போட்டகுண்டில் நொடியினில் மடிந்து போயினர் இன்று இவர்களுக்காய் காதலர் தினம் ஏற்று தலைவன் ஆணை அணி வகுத்தார் புலியாய் வாட்டும் பகை கொன்று வந்தார் மீட்டும் காதலது நெஞ்சில் கொண்டார் கொள்கையால் கதலரானார் -இவர் கொள்கைக்காய் மாண்டார்... …
-
- 2 replies
- 1.1k views
-