கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இசை ஞானி காலத்தை வென்றவர்..! தயை கூர்ந்து இசை ஞானி அவர்களை ஈழ விசயத்தில் இழுக்காதீர்கள்..? அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல..! அவர் ஒன்றும் திராவிட/ ஆதி திராவிட அரசியலுக்கு மாற்று அல்ல..! அவரை ஏன் இழுக்க வேண்டும்..? ஈழ அரசியலில்..! கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு இவர் எப்படியும் பொறுப்பாளர் என்ற அவசியப் பொருள் முத்திரை ஏன்..? தடுமாற்றம் கொள்கிறார்களோ..? காலம் பெருவெளி சூனியம் அந்திவெளி வண்ணங்களில் தோன்றும் ராக ஓசைகள் இவை மிஞ்சியவை அல்ல அனைத்தும் என்று தெரியுமா உங்களுக்கு..? பழந் தமிழனின் கொடுந் துயரமோ இசை ஞானி அவர்கள்..? சங்கிலிக்கருப்பு
-
- 3 replies
- 828 views
-
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் ம…
-
- 3 replies
- 1k views
-
-
போதுமினி எல்லாள போர் முகம் கொள்க.... 'சுதந்திர தினம்' ஐரோப்பியச் சாபம் நீங்கிய விமோசனம் நிரம்பிய நாளாய் 1948 இலங்கையின் இறைமையும் உரிமையும் இறையழித்த வரமான உரிமைகள் தினம். பிரிவினை வேண்டாம் - உடன் பிறப்புகள் நாங்கள் பிரிகிலோம் என்றும் புத்தரும் சிவனும் அல்லாவும் யேசுவும் எமக்கென்றுமே பொதுவென உரைத்தவர் எங்கே ? தோண்டுக அவர் புதை குழிகளை.... சிங்களன் தமிழன் உயிர் எடுத்திடும் பகைவன் என்றதை போய்ச் சொல்க. பாழுயுயிர் தொலைந்து ஐக்கிய இலங்கைக்குள் ஆழுவோம் என்றவர் ஆவிகள் மீளப் பிறந்தெம் அவலம் புரிய.... அவர்களைத் தோண்டுங்கள்...! வரலாற்று எச்சங்களாய் - எம் வாழ்வைச் சிங்களன் கையில் வைத்துச் சென்ற வஞ்சகர் …
-
- 3 replies
- 2.1k views
-
-
இன்னுமா போர் அபாயம்? இலங்கைத் தமிழன்! இதோ, இந்தியக் கடற்கரைக்கு வருகிறான்... நண்பனாக அல்ல, நாடோடியாக! ஒவ்வொரு நாளும் உயிரைப் பிடித்துக்கொண்டு கரையொதுங்குகிறான்... தனியாக அல்ல, குடும்பம் குடும்பமாக! கச்சத் தீவருகே, கல்லெறி தூரத்திலே, தமிழனின் கல்லறை ஓலம் கேட்கிறது... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! தனுஷ்கோடி கடற்பகுதியிலே, தப்பியோடி வந்த தமிழனின் பிணங்கள் மிதக்கின்றன... இன்று நேற்றல்ல, தினம்தோறும்! இத்தனைக்குப் பிறகும், இதையெல்லாம் பார்த்துக் கொண்டு, "இலங்கையில் போர்மூளும் அபாயம்!" என்று சர்வ சாதாரணமாக, சர்வ சதாகாலமாக, ஊடகங்களெல்லாம் உளறிக்கொண்டிருக்கின்றன... வேதனையாக இருக்கிறது... போர் மூண்டு எத்தனையோ காலங்கள் …
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=4]கடவுளுக்கு தெரியும் என் கண்ணீரின் வலி ஆறுதல் சொல்ல வரவில்லை தினகுறிபிற்கு தெரியும் என் மனதின் வலி ஒரு வார்த்தை கூட பேசவில்லை தோழிக்கு தெரியும் என் தனிமையின் வலி பகிர்ந்து கொள்ள அவள் அருகில் இல்லை நிலவிற்கு தெரியும் என் எதிர்பார்ப்பின் வலி வெளிச்சத்தை இன்னும் தரவில்லை [/size][size=1] [size=4]மரணத்திற்கு தெரியும் என் வாழ்கையின் வலி ஏனோ இன்னும் என்னை நெருங்கவில்லை அடுத்த ஜென்மத்திலாவது பிறக்க வேண்டும் நான் நானாக அல்ல கல்லறைக்கு அருகிலே காத்திருக்கும் ஓர் கல்லறை பூவாக...[/size][/size]
-
- 3 replies
- 1k views
-
-
(16-04-2007) எஸ்போஸ் எனப்படும் சந்திரபோஸ் சுதாகர் சிங்களம் பேசிய ஆயுததாரிகளால் வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கவிஞராகவும், பத்திரிகையாளராகவும், இலக்கியவாதியாகவும் அறியப்பட்டவர். கவிதைகளுடன், சிறுகதைகளையும், விமர்சனக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். புத்தக வடிவமைப்பிலும் ஈடுபட்டு வந்தார்.ஈழநாதம், வெளிச்சம், ஈழநாடு, நிலம், காலச்சுவடு, வீரகேசரி, சரிநிகர், மூன்றாவது மனிதன், தமிழ் உலகம், இன்னொரு காலடி ஆகிய இதழ்களில் இவருடைய படைப்புகள் வந்திருக்கின்றன.வெளிச்சம், ஈழநாதம், ஈழநாடு, வீரகேசரி ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். நிலம் என்ற கவிதைக்கான இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார்.லண்டனிலிருந்து வெளியிடப்பட்ட 'தமிழ் உலகம்' என்ற இதழிற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ... சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது .. மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் .. டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி .. ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே .. எல்லாம் மாமன் மச்சான் சித்தப்பன் .. நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் .. எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது .. கணக்கும் இல்லை வழக்கும் இல்லை .. கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் .. பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல .. சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் .. சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் .. சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் .. சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் .. சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில்…
-
- 3 replies
- 815 views
-
-
பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்பவன் போரிலே செந்தமிழைப் பேசுபவன்- அ…
-
- 3 replies
- 1.3k views
-
-
அன்னியத்து சிங்களங்கள் அரியாசனம் ஏறி விட்டு எம் தமிழை அழிக்கின்ற இன்னலதை காணலயோ...??? வந்தேறு குடிகளென்று- பகை வாய் விட்டு சொல்லையிலே எங்களது தமிழ் நாடு ஏனென்று கேட்கலயே.... உண்மையதை கண்ட பின்னும் ஊமையாகி நிற்கையிலே தன் மானம் உள்ளயவன் தலை நிமிர்தி கேட்கையிலே... குற்ற வாளி யென்றவனை கூண்டிலேற்ற முனையலாமோ...?? சட்டங்கள் என்று வந்து சங்கடங்கள் கொட்டலாமோ....?? கதிரையது ஏறிவிட கட்சி மாறும் கூட்டங்களே மனு நீதி விற்று விட்டு மன்றிலேறி என்ன செயவீர்....?? கொல்லர்கள் ஆழ்கின்ற கோட்டையது போலும்...??- அங்கு தமிழர்கள் அழிகையிலே தம்பட்டம் அடிக்கின்றீர்.... ''பாரதத்தின் மந்திரிக்கு பாதையிலே அடித்தவனை தூக்கி வைத்து தாளாட…
-
- 3 replies
- 1.4k views
-
-
தரணியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - அறம் தருமத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு ஞாலத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெய் ஞானத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு அவனியில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - மெத்த அறிவினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு உலகினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - விருந்து உபசாரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு வையத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உண்மை வீரத்தில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு புவியினிற் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - கவிப் புலமையில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு பாரினில் சிறந்த நாடு எம் தமிழீழ நாடு - உயர் பண்பிலே சிறந்த நாடு எம் தமிழீழ நாடு http://gkanthan.wordpress.com/i…
-
- 3 replies
- 970 views
-
-
-
தமிழர் தலைவனுக்கு அகவை 63! தூங்கிக் கிடந்த தமிழர்களை ! துயிலெழுப்பிய குயிலே! துடிக்கக் துடிக்க அழித்த பகைவரை! துரத்தி அடித்த புலியே! கூறுபட்டுக் கிடந்த தமிழரை! வீறுகொண்டு எழுப்பிய வீரனே! விடுதலை! விடுதலை!! விடுதலை!!!-அதற்கு! கொடு! தலை என்றே!குமுறிய வேங்கையே! காலம் கடந்து போகும்-நம்காலம் நமக்காய் மாறும்!புலிக்கொடி! உலகில் மீண்டும்' ஏறும்!!நீ மூட்டிய விடுதலைத் தீ! என்றும் அணையாது!! நீறு பூத்த நெருப்பாய் ! எம் நெஞ்சில் !என்றும் ! கனலாய் தகிக்கும்!! வலரற்றை படைத்த தலைவா! வாழ்த்துகிறோம் !!கன்னித்தமிழ்போல்…
-
- 3 replies
- 1.4k views
- 2 followers
-
-
அநியாய மங்கரியே ஆனந்த மானஎம் தமிழரின் வாழ்வினை அழித்திடக் கங்கணம் கட்டியே நிக்கிற அநியாய சங்கலார் உன்னையே கேட்கிறேன் அடுக்குமோ உன்செயல் அவனியில் சொல்லுவாய் தந்தையின் வியர்வையில் தோன்றிய கட்சியில் மந்தியைச் சேர்த்தவன் யாரெனக் கேட்கிறேன் பந்தியில் சேர்த்திட வொண்ணாப் பாதகன் நொந்துமே மூடுவன் கண்களைச் சீக்கிரம் சுந்தரப் பெண்களைச் சுவைத்திடத் துடித்தவன் சுதந்திரம் பற்றியும் பேசுதல் நீதியோ தமிழரின் உரிமைகள் பற்றியே பேசிட தறுதலை உந்தனுக் கேதுமே தகமையாம் ஈழமண் காத்திட உயிர்தரும் பலரிடை இழியனாய் இருந்துநீ இழிசெயல் செய்கிறாய் தரித்திரம் பிடித்தவுன் முகத்தினைத் துரோகியாய் சரித்திரம் அழுத்தமாய்ப் பதிவினில் வைத்திடும் அன்றொரு நாளுனை அழு…
-
- 3 replies
- 1.5k views
-
-
மீண்டும் மீண்டும்........ இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! பூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால் எங்கே?....... ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தி…
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=4]நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு.. நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்.. உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ.. துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ.. என் உயிரை நீ அழிக்கலாம், உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...[/size]
-
- 3 replies
- 608 views
-
-
[size=1] சும்மா இருந்தாலும்[/size][size=1] இருக்க முடிவதில்லை[/size][size=1] இணையம்.[/size]
-
- 3 replies
- 531 views
-
-
மே 18!!! குற்றுயிராய் ஒரு உயிர் குடல் கிழிந்து ஒரு உயிர் பாதி எரிந்தபடி ஒரு உயிர் உருக்குலைந்து ஒரு உயிர் அழுகுரலோடு ஒரு உயிர் அனாதையாய் ஒரு உயிர் நஞ்சுண்டபடி ஒரு உயிர் கடந்து ஓடினோம் உணர்வும் செத்து உயிரும் செத்து முள்ளிவாய்க்கால் வரை!!! எல்லாம் தின்று ஏப்பம் விட்டு நந்திக்கடலில் கறை படிந்த கை கழுவி ஒன்றுமில்லை என்றான் புத்தன்!! மே மாதம் நினைவழியா மாதம் இன்றும் பிண்வாடையும் கந்தகவாசமும் நாசில் அரிக்கும் மாதம்... சூட்சிகள் செய்து மனட்சாட்சிகள் இல்லா கொலைக்களம் சாட்சிகள் ஆனவர் நாக்குகள் அறுத்து ஊமைகள் ஆன சோகம் செங்குரிதி ஓடி வெந்தணல் ஆன எம்மவர் நினைவுகள் அழியா மாதம் இது ஊழிக்கூத்து நிகழ்ந்த மாதம்! அடி மனதோடு…
-
- 3 replies
- 838 views
-
-
அவலத்தில் இருந்து ஒரு குரல் ஈழத்தமிழராக பிறந்த நாங்கள்அழிவை மட்டும் கண்டு நிற்கும் ஏதிலிகள். நின்மதியாய் வாழ ஏங்கும் அகதி அற்ற வாழ்வுக்கு ஏங்கும் மானிடத்தின் பகுதி நாங்கள்.பிறந்தவர்க்கு இறப்பு நிஜம் எங்களின் முற்றத்தில் நித்தமும் நிஜம். இரத்தவாடை எங்கள் வீட்டில் இன்றும் கந்தகப்புகைஎங்கள் மண்ணில். துன்பம் மட்டும் மீதிவாழ்வில் சற்றும் இன்பம் இல்லை சமாதானம் வந்ததுண்டு ஆனால் எந்த பயணும் தந்ததில்லை. பேச்சுக்கள் பல நடந்ததுண்டு உடன்பாடு கண்டதில்லை. பேச வந்த நாடு எல்லாம் புலிகளாகி போன பின்பு தனியனாக நாங்கள் இங்கு. சுற்றி நின்ற சொந்தமில்லை இறந்து கொஞ்சம் அழிந்து போச்சு பறந்து கொஞ்சம் தூரப்போச்சு. வேர்வை விட்டு கட்டி வைத்து அழகுபார்த்த வீட்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
எனக்குத் தெரியாத தமிழ்மீதான என் கோபம் இன்னும் குறையவில்லை ஏனெனில் எப்பொழுதெல்லாம் அதை தெரிந்த கொள்ள் நினைக்கிறேனோ அப்பொழுதெல்லாம் தனி அறைகளில் சில கவியரசுகளிடம் மட்டும் மனம்விட்டு பேசிக் கொண்டிருக்கும் தமிழே நீயும் வசதியானவர்களின் வர்க்கம்தான் அதனால்தான் என்னைப் போண்ற ஏழைக் கிறுக்கன்களை உன் கண்களுக்கு தெரிவதே இல்லை -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 730 views
-
-
யாரைத் தேடுகிறாய்? நான் யேசுவைத் தேடுகிறேன். எனக்கு நடை பழக்கிய யேசுவைத் தேடுகிறேன். கள்ள முதலாளிகளை சாட்டையால் சவட்டிய அந்த மனிதரைத் தேடுகிறேன். ஏதற்கு? நடுவழியில் என்னை தொலைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார். எனது கையில் துவக்கைத் தந்து தனது மந்தைகளை மேய்ச்சல் தறையில் விடும்படி பணித்து அவர் மட்டும் தலைமறைவாகி விட்டார். இப்போ அவரது சிலுவைகளையும் நானே சுமக்கிறேன். மந்தைகள் என்னவாயிற்று? அவை அந்த மனிதரின் கோத்திரத்தாருக்கு உணவாயிற்று. இப்போ எதற்கு யேசுவைத் தேடுகிறாய்? இந்தச் சிலுவைகளில் இரண்டை அவர் தோளில் சுமத்த. -தமயந்தி http://www.piraththiyaal.com/
-
- 3 replies
- 1.1k views
-
-
நட்பு உலகின் தோற்றத்திலிருந்து .....படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....!காவியங்கள் காப்பியங்கள் கதைகள் ....இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் ....மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா ....நான் சொல்லிவிடப்போகிறேன் ....?எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!!புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....?புனித பைபிளில் சொல்லாத நட்பா ....?மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....?இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...?நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...?சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை ....விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...?முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....?பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!!மனைவியிடம் எதையும் மறைக்காமல் .....பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று ....புரிந்…
-
- 3 replies
- 5.3k views
-
-
சிறீ லங்கா தாயே நம் சிறீ லங்கா நமோ நமோ நமோ தாயே தமிழரின் தலை கொண்டு புதைகுழிகள் யாவும் நிறை வான் மணி லங்கா ஞாலம் இகழ இனவெறி மதவெறி கொலை வெறி தமிழ் இரத்தம் கொள் லங்கா தமிழரின் கொலைக்களம் என ஒளிர்வாய் நமதருமை தாயே எக்கடன் பட்டும் கொலை தொடர்வோமே நமோ நமோ தாயே நம் சிறீ லங்கா நமோ நமோ நமோ தாயே http://gkanthan.wordpress.com/index/anthem/
-
- 3 replies
- 1.6k views
-
-
Dedicated to the farmers of India 🇮🇳 எங்கள் துயர் நீங்க வேண்டும்-பா.உதயன் எம் துயர் நீங்குமோ எம் துன்பம் நீங்குமோ எங்கள் நிலம் வாழ அந்த மழை தூவுமோ இப்போ உன் பசி தீரவில்லை உதவுவார் யாருமில்லை பச்சை போல் வயல்வெளியில் உன் பாடல் இசைக்கவில்லை வானம் இன்னும் இரங்கவில்லை வந்து மழை நனைக்கவில்லை தேனருவி பாயவில்லை பேச ஒன்றும் வார்த்தையில்லை உழுதுண்ட உன் வாழ்வு தொழுதுண்டு போவதுவோ உனையே நம்பி வாழும் உயிர்கள் எங்கு போவதுவோ காலம் எல்லாம் மாற வேண்டும் கடந்து இது போகவேண்டும் எங்கள் கண்ணீர் மழையாய் தூவ வேண்டும் வானம் பொழிய வேண்டும் வயல்கள் சிரிக்க வேண்டும் விதைகள் முளைக்க வேண்டும் இனி விடிவு பிற…
-
- 3 replies
- 1.2k views
-
-
முஸ்லீம் மக்கள் சிங்கள தமிழ் போரில் தேவையான போதெல்லாம் சிங்களத்திற்கு முண்டு தந்தனர் சிங்களனின் புலனாய்வில் முதுகெழும்பாய் இருந்தனர் கிழக்கு தேர்தலிலும் சிங்களத்துடன் கூட்டாகி தமிழரை தோற்கடித்தனர் ஜெனிவாவிலும் சிங்களத்திற்கு தோள் கொடுத்தனர் தமிழ் இலக்கியத்திலும் சிங்களத்திட்காய் பேசினர் கூட இருந்து குழிபறித்தனர் தமிழர்கள் விழும்போதெல்லாம் ஏறி உலக்க தவறவேயில்லை பண்டமாற்றாய் பணம் சிங்கள குடியேற்றம் போல் முஸ்லீம் குடியேற்றத்திற்கும் குறைவில்லை சிங்களம் முகத்தில் குத்த முஸ்லீம் முதுகில் குத்தினர் இன்று சிங்களம் பள்ளிவாசல்களை உடைக்கிறது வாழும் சுதந்திரத்தை பறிக்கிறது தமிழன் மட்டுமல்ல நீயும் அடிமை என்கிறது நாம் குரல் கொடுப…
-
- 3 replies
- 583 views
-