கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நள்ளிரவு கடக்கும் நேரம் "உறங்கப் போகிறேன்" என்கிறாய் குறுந்தகவல் வழியாக..! "கனவில் ஒரு நடை வந்து விட்டுப் போ..!" என்கிறேன். நிஜத்திற்கு ஆசைப்படும் நீயோ கனவில் வர மறுத்து சிணுங்குகிறாய்..! மயிலிறகால் வருடும் உன் நினைவுகளின் கூட்டம் மலையாய் கனக்கிறது..! நீ வந்து சேரும் வேளை மலைக்கும் நினைவுகள் மேகக்கூட்டமாய் மிதக்கிறது..! புயல் கடக்கும் போது பெய்யும் பெருமழையைப் போல தென்றல் தீண்டும் வேளை பொழிகிறது காதல் மழை..! ஆண் பெண் என்னும் வண்ணங்கள் கரைகிறது. அன்பை உடுத்திக் கொள்கின்றன நிர்வாணங்கள்..! ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மறுக்கப்பட்ட கனியை மன்மதன் திருடிச் செல்கின்றான்..! காதலிக்கப் படாமல் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்…
-
- 0 replies
- 411 views
-
-
(யாழ். முஸ்லிம்கள் பலவந்தமாக - துப்பாக்கிச் சனியன் மூலம் தமது பூர்வீக மண்ணிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு - இன்றுடன் ஆண்டுகள் இருபத்தியேழு! அதனை நினைவுகூர்ந்து - சமர்ப்பணமாக இக்கவிதை)-மீலாத் கீரன்-இரு மணிநேர அவகாசத்தில் - துரத்தியே விட்டார்கள்பெட்டி படுக்கையின்றி... பால்மா பால்போத்தலின்றிபாலகர் பசியார ஒருதுண்டுப் பாணுமின்றி.. .கால்களில் செருப்பு மாட்டக்கூடகால அவகாசந் தராமல்அக்கால நகரப் பொறுப்பாளன்ஆஞ்சநேயர் மேற்பார்வையில்துப்பாக்கிகளின் குழாய்முனையில்குப்பைகளாய் கூளங்களாய் யாழ். ஜின்னா மைதானத்தில்கூட்டிச் சேர்க்கப்பட்ட சருகுகளானோம். .பலவகைப் பொதுக்கூட்டங்களுக்கு களம் பல தந்து -தடகளப் போட்டிகளாலும் தடையறா கால்பந்து போட்டிகளாலும் வெற்றிகள் பல கண்ட…
-
- 5 replies
- 1.5k views
-
-
துரத்துகிறேன்...என்னைத்தான்* நிஜத்தைத் தொட நிழலின் வாலைப் பிடிக்கிறேன். நான் திருப்பித் தீண்டிட நிழலும் திருப்பிக்கொள்கிறதே? கற்பனைக்கு எல்லை குறிக்கிறேன் - அது என்னை மீறி எங்கோ சஞ்சரிக்கிறது... சுடும் நெருப்பை அறிந்த பிறகும் - அதுவே சுகமென - என் சுட்டு விரலை கரித்துக்கொள்கிறேன். கொடுங்காயங்கள் நிச்சயமென அறிந்தும், விபரீதத்தோடு - நான் விளையாடுகிறேன்! ஆற்றுபெறா ரணங்கள் பெற்றுத் தந்த பாடங்களை புரிந்து கொள்ள - நான் துரத்துகிறேன்... விடாது... என்னைத்தான். - சூர்யா
-
- 2 replies
- 1.3k views
-
-
நிகழ்காலம்,எதிர்காலம் என எல்லாமே... நமக்கு... இறந்தகாலமாய்த்தான் இருந்தது! ஆறுதலுக்காய் ஆதரிக்க யாரும் அருகிருக்கவில்லை! அரவணைக்கக் கூட ... தம் அனுகூலம் பார்த்தார்கள்!! அனாதை நாய்களைவிட... அநியாயமாய் அழிந்தோம் நாம்!! எங்களுக்காய் குரல்கொடுக்க யாருமில்லையே!? என்ற... ஏக்கத்தவிப்பின் துர்ப்பாக்கிய முடிவாய்த்தான், துப்பாக்கியையும் சுமையாய்ச் சுமந்தோம்!!! துப்பாக்கி வேட்டுக்கள் எமைக் கொன்றுபோட்டபோதெல்லாம்... அதுக்கான அதே சத்தத்துடன் அடங்கின பல பொழுதுகள்!!! "ஆயுதம்" என்பதும் தற்காத்துக்கொள்ளவென காத்துக்கிடந்த காலம்போய், பேராயுதங்கள் போராயுதத்தினால்... நம்மைத் தின்றபோது... உயிராயுதங்களும் உணர்வோடு மெளனித்துப் போயின போல்!? கரிகாலன் தாங்கிய…
-
- 14 replies
- 2.2k views
-
-
துருவத்து வடலிகள் தாய்மடி தேடும் கன்றினைப்போல் தாய் மொழி தேடி அலைகின்றேன். ஏண்டியம்மா கருப்பாயி எனக்கு மட்டும் இந்த நிலை பட்டாம் பூச்சியாய் பறந்து திரிஞ்ச என்னை ஆட்டு மந்தையாய் இண்டைக்கு அங்கும் இங்கும் அலைய வைச்சாய் ஆத்தா மடியிலே அன்புச் சூட்டில் உறங்கியவன் பனிபடிஞ்ச தேசத்திலை பட்டினியிலை கிடக்கிறன் தாய்மொழியை காதலிச்சு தனி மரமாய் வாடுகிறன் அம்மாவை காதலிச்சா அகதிதான் பெயரெண்டால் பூமியிலை எல்லாமே பொய்யான வாழ்க்கையன்றோ ? விழிதிறந்து பார்க்க முன்னம் மொழிகேட்டு மகிழ்ந்தவன் விழிமூடிக் கிடந்தாலும் கனவில் மொழித்தாகம் வாட்டுதடி வளரும்............
-
- 1 reply
- 840 views
-
-
துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…? புனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவன் நீ. அடர்வனப் புதர்களோடும் ஆயுதங்களோடும் ஆறாத்தவம் செய்த அற்புதம் நீ. பெயர்கள் யாருக்கோ பதியப்பட நீ பெயரின்றிப் புகழின்றிக் கடமையை மட்டும் கவனித்த களமாண்ட கடவுள் நீ. ஆயிரங்களாய் புதிய புதிய அவதாரங்களைச் சிருஸ்டித்த சிற்பி நீ. ஆயுதங்கள் மெளனித்து அனைத்தும் ஒரு கனவின் கணங்கள் போல காய்ந்து போனது களவாசம். நீ இன்னும் கனவுகளுக்காகக் கரைந்து கொண்டிருக்கிறாய். உன்னைத் தேடும் முகங்களுக்குள் நீ மூழ்கடிக்கப்படுகிறாய். உனது மனிதம் மிக்க இதயத்தை அவர்கள் மிருகத்தனமாய் மிதிப்பதைக் கூடப் புரிந்து கொள்ளாத ஒரு குழந்தையின் இதயம் உனக்குப் படைக்கப்பட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
துரோகத்தின் தருணம் by ஃபெய்ஸ் அஹ்மத்ஃபெய்ஸ் இன்னும் சிறிது நேரத்தில் கூரைகளின் மீது தன் ஒளியை வாரி இறைத்துவிடும் தன்னுள் இருந்த பிம்பங்கள் மறைய கண்ணாடிகளுக்கு தாகம் எடுக்கும் தூசிபடிந்த தாரகை சொர்க்கத்தின் கண்ணீராய் கீழே விழும் சிலர் தங்கள் பாழடைந்த அறைகளில் தனிமையை போர்த்திக் கொள்வார் வேறுசிலர் விரக்தியை போர்த்தி இருப்பார் இது நீசத்தனமான துரோகத்தின் தருணம் அனைத்து கருணையும் முடிவுக்கு வரும் தருணம் அனைவருக்கும் சுயநலமே நோக்கமாக மாறும் தருணம் எங்கே செல்வாய் நீ என் ஊர் சுற்றி நெஞ்சமே உன்னிடம் யார் சினேகம் கொள்வார் இன்னும் கொஞ்சம் காத்திரு விடியலின் அம்பு பாய்ந்து குருட்டுக் கண்களுக்கு பார்வைகிட்டும் வரை அன்னியோன்னியமான முகங்களுக்கு காத்திரு …
-
- 8 replies
- 1.1k views
-
-
துரோகம் என்மீது பிரியம் உள்ளவன் போல நடித்த... பிரியமில்லாதவனுக்கு... இதயம் நொருங்கியவளின்... இரங்கற்பா ! எனக்கு எதையெல்லாமோ கற்றுக்கொடுத்தாய்! ஏழையாய் வாழ... கவிதை எழுத... அவமானப்பட... அதற்கு குருதட்சணையாகத்தான் என் காதலை பறித்துக்கொண்டாயோ மௌனம் சம்மதத்தின் அறிகுறி! ஆனால் உன் மௌனமோ என்... காதலின் சவக்குழி! நீ என்றேனும் இந்த கவிதையை பார்க்க நேர்ந்தால்... பதில் அனுப்பு எனக்கு துரோகம் செய்த காரணத்தை...
-
- 2 replies
- 1.4k views
-
-
நினைவுப்படிமங்களிலிருந்து எழும் ஓலக்குரல்கள் ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது யாருக்கும் கேளாமல், மனக்காயங்களிலிருந்து கசியும்நிணநீர் கோடுகளாய் உறைந்து வடுக்களாய் வதைக்கின்றன , யாருக்கும் தெரியாமல் , வலுவிருந்து சில கணம் சோர்ந்து ஓய்கிறது_ உடல் கனமாய் விழுகிறது . துரோகியா நான் ? ஓரத்தால் விலத்திவந்து _இங்கு வீரக்கதைகள் பேசவில்லை செத்தவர்கள் மீதேறியென்று _அந்த சரித்திரம் பாடவில்லை , நெருப்பில் நீராடிய மறவர்களின் தேகவாசமிது _ என்று தேவாரம் இயற்றவில்லை . குண்டுவிழும் தேசத்து தெருக்களில் ஆற்றாமையுடன் அலைந்த அதே கணவிளைவுகளே இங்கும் துரோகியா நான் ?
-
- 6 replies
- 1.8k views
-
-
வேர்முடிச்சுக்களில் ஒளிந்துகொண்டவனை தின்றுவிட தயாராகிறது பெரும் பூதமொன்று.. முதலில் ஒற்றைத்துளியாகத்தான் விழுந்தது. வெப்பத்தாலோ காற்றாலோ ஆவியாகிவிடாமல் அடையாளமாகிப் பூத்துக் கிடந்த அந்த முதல் துளி வெறுமையை உடைத்து அலங்கரித்துக்கொண்டது தன்னை.. பின்னொரு பொழுதில் நீண்ட பாலைநிலங்கடந்த வெப்பத்தோடு இறங்கத்தொடங்கியது நிலைகொள்ளாமல் இறகுகளை களைந்துவிட்டு அடைக்கலமாக அடம்பிடிக்க ஆரம்பித்து சிதைவுகளால் ஊடுருவி வேர்களால் பினைக்கத்தொடங்கியது. மேகத்திலிருந்து இறந்துபோன நட்சத்திரங்களின் ஆசைகளுடன் பூதங்கள் இறங்கத்தொடங்கின.. ஒளிந்து கொண்டேன் வேர் முடிச்சுக்களில்,
-
- 0 replies
- 458 views
-
-
அமாவாசை இரவுகளில்.. அவளோடு புறப்பட்டால்.. நிலவை மறந்து விடுகிறேன்... பனித்துளிகள் படர்வதனால்... நான் ஏக்கப்பட்டும் பூக்களைப் பறிப்பதில்லை.. சலங்கைகள்.. அடிபட்டுக்கொள்வதை.. தலையாட்டி ரசிப்பவன்.. விமர்சகன்.. மழைத்துளி விழுந்து வழிந்து.. ஓடாவிட்டால்.... நதிகள் பாவம்.. இரவில் மட்டும் பெருமையடிக்கும்.. மின்மினிப்பூச்சிகளுக்கு.. அருந்ததி..நகர்வது.. தெரிவதில்லை.. என் திருவிழா நாட்கள்.. என் செல்வத்தைக் கரைப்பதில்லை.. இதயத்தை.. தந்தை சொன்னது போல்.. நண்பர்கள்..துன்பத்தில்.. உதவிட வரவில்லை உயிர் விட வந்தார்கள்.. கசக்கிய காகிதத்தைப் பார்த்து பேனா சிரிக்கிறது.. அதன்..மை முடிவது தெரியாமல்.
-
- 18 replies
- 2.4k views
-
-
பிரிவு பூக்கள் உதிரும்போது காம்புகள் அநாதையாகின்றன... ஒய்வு ஒவ்வொரு இறகையும் கோதிவிடுகையில் உதிர்ந்து போகிறது பறவையின் களைப்பு... கவலை துரத்தில் மைதானத்தில் புள்ளி புள்ளியாய் கால்பந்தாடும் சிறுவர்கள் யன்னலோரம் கவலைகளில் இளமையைத் தொலைத்துவிட்டு நான்.. மதம் எல்லா வீதிகளும் தொலைந்து போகின்றன நெடுஞ்சாலையில்... மரணம் ஒவ்வொரு மரணத்திலும் முற்றுப்பெறுகிறது காலம் எழுதிமுடித்த ஏதோ ஒரு அத்தியாயம்.. முயற்ச்சி மின்மினிகள் போராடுகின்றன இரவை எரித்துவிட.. மௌனம் காற்றின் சலனங்களில் கலைந்து போகிறது மரங்களின் மௌனம்..
-
- 2 replies
- 602 views
-
-
என்னை கைப் பிடித்தவன் மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை அதேபோல் நானும் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்னை அவன் இயக்கினான் நானும் இயங்கினேன் தோளில் சுமந்தான் நானும் அழகாக தூங்குவேன் நண்பனுக்கு அறிமுகம் செய்தான் அவன் என்னை பார்த்து வியந்தான் ஒரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை எதிரி என்றான் இன்னோரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை துரோகி என்றான் மற்றொருநாள் இவன் வீழ்ந்தான் நானும் வீழ்ந்தேன்,முனகினான் மற்றொருவன் ஒடி வந்தான் என்னை தூக்கினான் நிறுத்தினான் அவன் முனகளை இனியோரு நாள் இவனும் வீழ்வான் நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன் ஆனால் என்னை இயக்குபவன் .......
-
- 14 replies
- 1.7k views
-
-
துவேச துவசத்தின் திவசம்! ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ? பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் ! தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது ! பச்சிளம் குழந்தை தாயின் பிணத்தினிலே பால் தேடி புழுவோடு போட்டி போட்ட அந்த கேவலத்தை கண்டோமே ! பிறக்காத குழந்தைதனை வயிற்றை பிளந்து கொன்று இனவெறியின் கொடுமை அதை கொதித்தபடி பார்த்தோமே ! எத்தனை கொடுமை அதை என்னால் எழுத பலமில்லை ! இன்னும் என் இமைக்குள்ளே உறுதியாய் பதிந்த படம் ! தூக்கமும் வாராமல் கண் முழித்து வலையில் தேடி பார்த்தேன் எதாவது ஒரு "பதில்" செய்தி, அதை இன்றுவரை தேடுகிறேன் ! முள்ளிவாய்காலில் பாய்ந்து ஓடிய தமிழ் இனத்தின் ரத்தம் கடலோடு கலந்ததுவோ? இல்லை! உலக…
-
- 3 replies
- 1k views
-
-
பிரேமினி அமீரசிங்க எழுதிய ஒரு சிங்களக் கவிதையின் தமிழாக்கம் இது துவேஷம் தனது முகத்தைக்காட்டி பல்லிளித்ததில்லை பாடசாலை நாட்கள் இரட்டைச்சடைகள் பறக்க நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன் பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது ஷாரினா இவ்வுலகில் எதற்கும் கவலைப்பட்டதில்லை அவளது தந்தைக்கொரு சொந்தக்கடையிருந்தது திருமணஞ்செய்வதே அவளது ஒரேயொரு விருப்பாயிருந்தது அதைவிட வேறொன்றுமில்லை நெலியா அவளது ஐரிஷ் தந்தையை அறிந்தவளில்லை அடர்த்தியான கறுப்புக்கற்றைகள், மாதுளம்பழமான கன்னங்கள் எல்லாப் பெடியங்களும் விரும்பக்கூடிய அழகானவளாயிருந்தாள் லட்சுமி நானிதுவரை பார்த்திராத தடித்த கண்ண…
-
- 3 replies
- 745 views
-
-
தூக்கத்தில் நடப்பவை தூக்கத்தில் கனவுகள் நிகழ்கின்றன கனவுகள் பெரும்பாலும் நினைவிலிருப்பதில்லை தூங்குவதுபோல் கனவு கண்டு விழிப்பவர்களுக்கு தூக்கமே கனவாகப் போய்விடுகிறது தூக்கத்தில் மரணங்கள் நிகழ்கின்றன தூக்கத்தில் சாவது நல்ல சாவென்று செத்தவனைத் தவிர்த்து எல்லோரும் சொல்லுவார்கள் தூக்கத்தில் விபத்துகள் நிகழ்கின்றன இறந்து போன பயணிகளும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததாக யூகங்களினடிப்படையில் ஊடகங்கள் தெரிவிக்கின்றன சாவதற்கு சற்றுமுன் அவர்கள் விழித்திருப்பதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன. தூக்கத்தில் நிகழ்கின்ற விபத்துகளில் பெண்களின் தூக்கத்தில் அதிகார்ப்பூர்வ கணவர்களால் நிகழ்த்தப்படும் விபத்துகள் சேர்க்கப்படக் கூடாதென உச்ச நீதிமன்றமே தீர்ப்ப…
-
- 0 replies
- 564 views
-
-
"""" தூக்கத்தை கலையுங்கள் புலிகளே..."""" உறங்கி கிடந்த புலிகளே நீங்கள் உறுமி இன்று எழுகவே.. கயவன் வந்து ஆடுறான்- எங்கள் தலையில் குண்டை போடுறான் களத்தில் உயிரை பறிக்கிறான் கதறி தமிழன் அழுகின்றான்... கண்ணீர் ஆறாய் ஓடுதே கடலெனவே பாயுதே குருதியிலே புலவுகளே குளியல் தினம் செய்யுதே... எங்கள் மனம் பதைக்கிறதே ஏக்கத்திலே தவிக்கிறதே சொந்த புமி அழிகையிலே எங்கள் வேங்கை தூங்குவதோ....??? காத்திருந்த போதும் இனி களத்தில் வித்தை காட்டுங்களேன் அன்னை மண்ணில் வாழும் - அந்த அந்நியரை கலையுங்களேன்..... தூங்கியது போதும் இனி - உங்கள் தூக்கங்களை கலையுங்களேன் துட்டமுனு படைவிரட்டி - எங்கள் ஈழமதை காணுங்களேன்....!!![/color] …
-
- 16 replies
- 2.7k views
-
-
வாழ்க்கை என்பது பாசக்கயிறு வாழ்க்கையின் முடிவில் எமனின்கயிறு கோழையே உனக்கு ஏன் இந்தக்கயிறு?
-
- 7 replies
- 1.8k views
-
-
தூக்கு காயிறு எனக்கேன்....??? நீதி மறந்தாய் நீதி மறந்தாய் நீதி சபையேன் நீதி மறந்தாய்....??? நீதியிழைத்து நின்னையேன் நீயும் இழித்தாய்....??? குற்றமேதும் புரியவில்லை குற்றவாளி நானும் இல்லை.... சட்ட மன்றம் முன்னாலே சாக்கடையில் நான் ஏன்...??? தப்பேதும் புரியவில்லை தண்டனை எனக்கேதுக்கு.....??? வழக்காடு வல்லுனரும் வழக்காடி வென்று விட்டார்..... பொய் சாட்சி அரங்கேற்றி பொல்லாதார் வென்றிட்டார்..... துரோகியாய் என்னை தூக்கிலிடப் போகிறார்கள்.... ஏன் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.... இதுவரைக்கும் யானிட்ட குற்றமென்ன தெரியவில்லை.... சந்தேகப் பேர்வளியாய் …
-
- 3 replies
- 1.1k views
-
-
என் தொண்டைக்குழியில் இறங்க மறுக்கும் சோறு - எனக்கு தூக்குக் கயிற்றை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றது! நீதி தேவதையின் கண்களை... இப்பொழுதாவது, திறந்து விடுங்களேன்!!!! இல்லையெனில், மூவரோடு நால்வராய்... அவளையும் சேர்த்துத் தூக்கில் போடுங்கள்! அன்று, கண்ணகியின் கோபம் மதுரையை எரித்ததாம்!? இன்னும் நம்புகின்றோம்...!!! அது உண்மையோ... இல்லையோ....!!!??? நிச்சயமாக மீண்டும் எரிக்கும்!!! நீதியின் கூக்குரலும்... அழுகுரலும்!!!
-
- 4 replies
- 1.2k views
-
-
நிலவுக்கு விடைகொடுத்த பின்னும், தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்... கனவுகளும் வெறுங் கனவாகிப்போக, உன் நினைவுகளை மீட்டியபடி... வளர்ந்து தேயும் நிலவுகளோடு, அமாவாசையானது என் ஆசைகளும்!
-
- 14 replies
- 1.5k views
-
-
பல ஆண்டுகளுக்கு முன்பு வாசிக்கவும் எழுதவும் நேரமும் மன வெளியும் இருந்த காலங்களில், சில கிறுக்கல்களை நான் தாள்களில் பதிய, அவை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எழுதிய எதற்கும் மூலப்பிரதி என்னிடம் இல்லை. பிரசுரமான இதழ்களின் பிரதிகளும் பல்வேறு இடம்பெயர்வுகளின் போது ஒவ்வொன்றாகத் தொலைந்து போய் விட்டன. இவையெல்லாம் சிறு வயது மணல் வீடு ஞாபகங்கள் மாதிரி மனதில் மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கையில் அண்மையில் எனது பழைய கவிதை ஒன்றை யாரோ ஒரு நண்பர் முகநூல் வழியாக நினைவு படுத்தியிருந்தார். அக்கவிதையின் தடங்களைப் பின்பற்றித் தேடல் செய்த போது தான் நூலகம் என்ற அரிய தமிழ் நூல்/இதழ் ஆவணக்காப்பக இணையத் தளமொன்று இருப்பது தெரிய வந்தது (www.noolaham.org). இந்த இணைய…
-
- 7 replies
- 1.1k views
-
-
எந்தத் தூய கோவிலுள்ளும்தூசு நுழையும்ஆயினும் உள்ளெரியும் தீபம்பேசாதுஅதன் ஒளிர்வில் உள் நுழையும் தூசே தானொளிர்ந்து பேசும்...
-
- 1 reply
- 1.3k views
-
-
தொலைந்து போகும் அடையாளங்களை தூக்கிநிறுத்துவதற்கு புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும் மகிந்த வள்ளலானார் இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி…. செயலிறங்கத் துடிக்கும் புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட தூதுவராலயத்து தூதுவர்கள் அபிவிருத்திக் குச்சிகளோடு ஊரோடு உறவாட வருகிறார்கள் ஊர்சார் அமைப்புக்களே உசாராகுங்கள் குண்டுமணியளவேனும் எங்கள் சொந்தப்பலத்தில் நிகழட்டும் எங்கள் சொந்தநிலத்திற்கு சேரட்டும் புதிதாய் முளைக்கும் ஊர்ப்பற்றாளரிடம் விழிப்பாயிருங்கள் இயற்கைவளமே எங்கள் பலமென்று வாழ்ந்தவர் நாம் கடலும் வயலும் பனையும் தென்னையும் கனிதருமரங்களும் எங்கள் சொந்தம் எங்கள் நிலத்தில் மூச்சுவிட்டு இருக்கவிடு இராணுவ அரண…
-
- 1 reply
- 811 views
-
-
தூத்துக்குடியில் பூத்த முத்துக்குமரன் தொப்புள் கொடியில் உயிர்க் கொடி ஏற்றிய தோழா ஈழத் தமிழர்களின் முத்துக்குமரா! இணையத்திலே உன் அழகிய முகம் பார்த்தோம் இதயத்திலே கருகிப் போனது எங்கள் மனம்! எவ்வளவு இளகிய மனம் கொண்டவன் நீ எங்களுக்காய்... ஏன் கருகிப் போனாய்? தூத்துக்குடியில் முத்துக் குளித்தவன் நீ சாஸ்திரி பவனில் ஏனையா தீக்குளித்தாய்? குடம் குடமாய் நாங்கள் அழுது வடித்த எங்கள் கண்ணீரில் உன் முகமே பூக்கிறது! எம் தமிழ்மீது நீ கொண்ட பற்றுக்கு எல்லையே இல்லை என்பதை இப்படியா உணர்த்துவது! தமிழினத் தலைவர்கள் என்று சொல்லத் துடிக்கும் எங்கள் தலைவர்களின் நாக்கை அறுத்தாய் நீ! கையாலாகாத பரம்பரை என …
-
- 1 reply
- 1.2k views
-