கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை எதானால் இவரை அழைத்தாய் எங்கள் இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய் மனதில் உரமும் செழிக்கும்வேளை மரணம்தந்தே மயங்கச்செய்தாய் கனவில்மட்டும் நிம்மதி என்று காலமெல்லாம் கலங்கச் செய்தாய் உரையைக்கேட்க இதயம் மகிழும் உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும் வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து வழியில் செல்ல இருளைத் தந்தாய் இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும் என்றா இவரை கொண்டாய் சதியை பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய் பிழையை செய்தாய் பேசற்கரிய தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம் தர…
-
- 1 reply
- 626 views
-
-
தேசத்தின் குரல் பாலா அண்ணா புலிகளின் குகையில் வாழ்ந்த ஒருசிங்கம் பேராசான் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அழுகுரல் ?#8220;யவில்லை உலகம் எங்கும் அண்ணாவின் பிரிவினைத் தாங்கவில்லை நெஞ்சம் தனக்கென வாழாத தியாக உள்ளம் தமிழ்மண் வாழவேண்டும் என்பதே எண்ணம் இனத்தின்மேல் எப்போதும் அளவற்ற பாசம் இதனால்தான் தவிக்கின்றார் தேசமெல்லாம் சோகம் தேசத்தின் தியாகிகளை துதிக்கின்ற நாளில் திரள்திரளாய் தேடியே வந்திடுவார் கூடம் தேசத்தின்குரல் பேச்சில் வேடிக்கை இருக்கும் தேசியத்தின் கொள்கைகளும் கடமைகளும் நிறைக்கும் கற்றதினால் கூறிவைத்தார் கலாநிதி என்று மற்றவர்கள் கூறிவைத்தார் மதியுரைஞர் என்று சுற்றமெல்லாம் கூறுகின்றார் பிதாமகன் என்று பற்றுவைத்தோர் கூறுகின்றார் அவதா…
-
- 4 replies
- 1.5k views
-
-
தேசத்தின் புன்னகை - இன்குலாப் மறுகரையில் தேற்றுதலின் தணியாத விசும்பல் கேட்கும் மரத்துப் போகாத செவிகளில். மாவீரர் விரும்பாத ஒப்பாரி காலம் காலமாய் மக்களின் மனசிலிருக்கிறது. இன்றென் சொல்லும் கண்ணீரில் நனையட்டும்! பகைநடந்ததற்குச் சாட்சியங்களான கருகிய பனை தென்னை ஊடாக நாங்களும் நடந்திருந்தோம். சிதைந்து கிடந்த டாங்கியும் சிதறிக் கிடந்த ராக்கெட் கூடுளும் பிணமாய் மிதக்கும் எதிரியின் கப்பலும் முடிந்த யுத்தத்தின் மிச்சங்களாகுமோ? கண்ணி வெடிகளுக்குப் பக்கத்திலேயே புதைந்து கிடக்கும் விதைகள் பசுமையாய் முளைவிடும் என்ற எல்லோருக்குமான எனது நம்பிக்கையும் துளிர்க்குமோ? கருகுமோ? உப்பு மிளகாய் அரிசி மருந்துகூட ஆயுதமாய்த் தடைப்பட்ட …
-
- 0 replies
- 989 views
-
-
தேசத்தின் புயல் மாதவன். பச்சை வயல் நிறைந்த தென்மராட்சி மண்ணில் மாதவமாய் வந்துதித்த மனோரஞ்சன். தொண்ணூறுகளின் தொடக்கம்...., யாரெவனோ என்றிவனை ஊர் போற்றும் வீரனாய் புலி வேங்கையாய் போர்க்காலமொன்றில் யாழ் மண்ணில் பணிசெய்ய வந்தான். 'மாதவன்' மறக்க முடியாத நினைவுகளில் அவன் புன்னகையும் ஆழுமையும் ஆற்றலின் பன்முகமும் அழியாச்சுடர் அவன்.....! நெருப்பைச் சுமந்தான் சிரிப்பில் மட்டும் இனிப்பாய் கரைந்தான். இனிமையான போராளியாய் இதயங்களில் நிறைந்தான்....! இசையூடக வழியே பாடகனாய் திரையூடக வழியே நடிகனாய் கவியூடக வழியே கவிஞனாய் கலையின் மொத்த வடிவம் - மாதவன் கலைபண்பாட்டுக்கழகத்தில் இவனொரு வரலாறு. இவனின்றிய வரலாறொன்று இருந்தறியாத நாட்களில் கலைகடந்து கனரகம் சுமந்து களம் கண்ட ப…
-
- 1 reply
- 855 views
-
-
என் தேசத்து உறவுகளே நாசமாகி கொண்டிருக்கும் -ஒரு நகரத்தின் குரல் இது இப்போ பேரம் பேசப் படுவது - அங்கே உயிர்களும் உடல்களும் நாடு விட்டு நாடு வந்து கூடு இழந்தவர் நாம் -பெரும் பாடு பட்டு நாம் வளர்த்த -நல் தேசியத்தில் பிறந்தவர் நாம் காடு வெட்டி களனி ஆக்கி -நெற் சுடு அடித்து வாழ்ந்தவர் நாம் -இப்போ அநாதியற்று இப்புமியிலே அனாதைகளாகி விட்டோம் - நம் தேசம் ஒன்றின் விடிவிக்காய் பாசங்களை தொலைத்தவர் நாம் கூடு இழந்த குருவிகள் போல் - இத் தெரு கோடியிலே கதறுகிறோம் காப்பரும் ஒபாமாவும் என்ன மகிந்கவின் கைப் பொம்மைகளா...? சிங்களவன் மகிந்கனுக்கு சின்ன வீடா எங்கள் மண் அடிக்கடி அங்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாயிருந்தும் கண்ணிருந்தும் -…
-
- 0 replies
- 766 views
-
-
உனக்கும் எனக்குமான இறுமாப்பு ஏகாந்த வெளிதனில் எல்லைகளற்று விரிந்திருந்தது அதுவே இன்று நிட்சயம் அற்றதாய் நம்பிக்கையற்றதாய் நாளும் நடுவானில் நூலறுந்த பட்டமாய் நரகமாகிக் கொண்டிருக்கிறது எந்நேரமும் உச்சரிக்கும் இரகசிய மந்திரமாய் மனம் ஏக்கங்கள் கண்டு இன்றும் வாழ்கிறது ஏதிலியாய் எதுவுமற்று வாழ்தலற்ற வகையின்றி வரம்புகள் கடந்தோம் தான் வகை தெரியா மூடர்களாய் வெற்று வெளியில் நாமின்று வேலிகள் எதுவும் இன்றி விழுதுகள் கூட இன்றி வேடர்களின் வில்லாய் நாம் வசமானோம் வரப்புகள் இன்றி விதியின் சதிதானா வீழ்ந்தது மதியின் தவறிய கணக்காய் மனிதம் தொலைத்த மனம் மிச்சத்தின் எச்சங்களாக எங்கும் எண்ணக் கணக்குகள் தவற எதிரிகள் எண்ணற்றுப் போக எதுமற்றவர்களாய் நாங்கள்…
-
- 5 replies
- 607 views
-
-
தேசிய கீதம் ஆனைவாய்க் கரும்போ? அனலிடைப்பட்ட புழுவோ? சட்டியிலிருந்து சற்றே சறுக்கி; அடுப்பினில் விழுந்த மனிதர் நாம் தாவார மில்லான், தனக்கொரு வீடில்லான், தேவாரம் மோதுதல் ஏதுக்கடி? தேசிய மேயில்லார்க்கு தேசிய கீதமொரு பொல்லாப் போடி? பொறுமையிழந்தவர் தம்மைப் போற்றி இசைப்பர் இன்னும் கோடி, இறைவனுண்டென்றால் சேருமொரு புது வாழ்வு தேடி. -அறியாதவன் http://www.valampurii.com/online/viewnews.php?ID=13381
-
- 1 reply
- 709 views
-
-
ஸ்ரீலங்கா தேசிய கீதம் தமிழில் பாடுவது தடை செய்யப்பட்டு விட்டது. இனி அங்கு வாழும் சிங்களம் தெரியாத தமிழர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பாடுவதற்கு ஒரு தேசிய கீதம் வேண்டாமா? அவர்களுக்காக எனது சிறிய முயற்சி: --------------------------------------------- ஸ்ரீலங்கா பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே தமிழரின் தலை கொண்டு புதைகுழிகள் யாவும் நிறைப்பாய் வெறி லங்கா ஞாலம் இகழ இனவெறி மதவெறி கொலை வெறி தமிழ் இரத்தம் கொள் லங்கா தமிழரின் கொலைக்களம் என ஒளிர்வாய் நமதருமை பேயே எக்கடன் பட்டும் கொலை தொடர்வோமே நமோ நமோ நமோ பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே http://gkanthan.wordpress.com/index/anthem/
-
- 1 reply
- 855 views
-
-
தேசியக் கவிதைகளும் விசுவாசமற்ற சொற்களும் யவனிகா ஸ்ரீராம் சங்கம் வளர்த்த தமிழ்க்கவிதை மரபுகள், அதன் இறைச்சி, ரசனை அதனுடன் இயைந்த மொழி விரிவு போன்றவற்றையெல்லாம் பல்கலைக்கழக அடைவுகளுக்குள் தேர்வுகளுக்கான காப்சூல்களாக்கிய பின்பு இன்றைய தமிழனின் வெறும் கவிதா தாகத்தைத் திரைப்படப் பாடல்களே தீர்த்து வைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லலாம். புதிய, பழைய திரைப்பாடல்களை குறுந்தகடுகளில் பெற்றுக்கொண்டு, பேச்சுவழக்கில் அதன் சிலாகிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதில் கவிதைக்கணங்கள் முடிந்துபோய்க் கொண்டிருக்கிறது. இதில் தவறொன்றுமில்லை. ஒரு காலத்தில் சங்க இலக்கியம் தொடர்ந்து தனிப்பாடல்கள், கதைப்பாடல்கள் வழியே உருக்கொண்ட பாரதியின் கவிதைகள் சமூக, அரசியல், பின்னணிகளோடும், புதிய கர…
-
- 2 replies
- 1.1k views
-
-
தேசியத்தலைவர் மேதகுவைப் பற்றிய சிங்களக் கவிதை. வட்ஸ்அப்பில் எனக்கு ஒரு அன்பர் பகிர்ந்ததை யாழ்க்கள உறவுகளோடு பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி
-
-
- 2 replies
- 430 views
-
-
தேடல் உனக்காக நானும் எனக்காக நீயும் எம் மழலைகளுக்காக நாமும் எத்தனை இரவுகள் தூக்கத்தைத் தொலைத்தோம் ஆனாலும் நீ நிரந்தரமாய் தூங்கிய அந்த இரவில் மட்டும் நான் நிரந்தரமாய்த் தொலைத்தது என் தூக்கத்தை மட்டுமா? நிரந்தர இருளுக்குள் நித்தமும் தேடுகின்றேன் உன்னை மட்டுமல்ல என்னையும் தான்
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 3.8k views
-
-
இல்லாதவனுக்கு வயிறு நிறைந்தவனுக்கு மூளை கனத்தவனுக்கு ஆன்மா தேடும் இடம் மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தனிமையும் ஒரு பறவையும் தூக்கம் தொலைந்த ஓர் அகாலம் அடர்ந்து படர்ந்திருந்தது இரவின் கரிய கூந்தல் தனிமைக் குகையின் நினைவுப் பாதையில் படுத்துக் கிடக்கிறேன் விழித்தவாறு மென்மையான நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வன்மையாக ஒலிக்கிறது ஒரு பறவையின் கதறல் எப்போதும் கேட்டிராத பெயர் தெரியாத ஒரு பறவையின் குரல் அது தன் தனிமை தவிர்க்க விட்டு விட்டு விடாது கத்துகிறது கரைந்து புதைந்த அந்தப் பறவையின் குரல் ஆழ்ந்த மௌனத்திலிருந்து எழுந்து ஒலிக்கிறது அதன் வலியோடு பின்னாளில் என் தூக்கம் தொலைந்த அகாலங்களில் எல்லாம் நட்சத்திர ஒளி இந்த ஒளி ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
வரண்டுபோனதொரு பூமி வானத்தை பார்த்து மழைக்காய் தேடல் கொண்டு தேகம் வாடி நிற்கிறது! பசியென்ற ஒன்று இருப்பதால்தான் உழைப்பின் தேடல் தொடர்கிறது.... பருவம் என்ற ஒன்று இருப்பதால்தான் காதல் என்ற ஒன்று இன்னும் காணாமல் போய்விடாமல் தவிக்கிறது! பகுத்தறிவென்ற ஐந்தோடு சேர்ந்த ஓரறிவு வாழ்வதானாலே அநியாயங்களை காண்கையில் உள்ளம் ஆக்ரோசம் என்ற தேடல் கொள்கிறது! இறப்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இறைவனை இடைக்கிடையாவது நினைக்கும் தேடல் வாழ்கிறது! எதிர்காலம் பற்றிய பயம் எம்மோடு இருப்பதானால்தான் சேமிப்பு என்ற தேடல் உயிர்கொள்கிறது! தேசியம் என்ற ஒன்று நிமிர்ந்து நிற்பதால்தான் -இனமானம் பற்றிய தேடல் இன்னும் உன்னுள் இருக்கிறது! தெரியாதவனிடம் எல்லாம் அடிவாங்கும் …
-
- 5 replies
- 2.3k views
-
-
[size=3]தேடல்கள் நீண்டாலும்[/size] [size=3]தீர்க்கமாய் முடிவெடுத்து[/size] [size=3]தேடு பொருளை சரியாய் தெரிந்து [/size] [size=3]திசைதனையும் ஆய்ந்து[/size] [size=3]தேடலை மேற்கொண்டால்[/size] [size=3]திருப்திதான் திருப்பதி தேடுபொருள் கிடைக்கும் திடமாகத் தான் நம்பு தொலைத்தவை நிறையத்தான் தமிழன் தேடத்தான் வேண்டும் தேடு தொலைத்தது ஒன்றும் தொலைவிலில்லை தேடத்தான் வேண்டும் தேடு ஒற்றை காலில் நிற்கும் கொக்கு கூட தேடித்தான் நிற்கிறது ஒற்றுமையாய் தேடிப்பார் [/size] [size=3]தேடுபொருள் நிச்சயம் கிடைக்கும்[/size] வல்வையூரான்
-
- 4 replies
- 740 views
-
-
தேடல்கள்----------------- என் தேடல்களை உனக்குள்ளும் காதலுக்குமாய் வீணாக்கியதன் பிற்பாடு ஏதோ ஒரு ராத்திரியின் மௌனத்தை கனமான இதயத்தோடு ஏற்றுக்கொண்டது மனசு. என் இரவுகளை- நீ வெறுமையாக்கிய போதும் என் இதயத்தை போலவே கனக்கிறது மௌனம். என் மௌனங்களின் பிரிய காதலியே பிரிவு எனக்கும் உனக்கும் தான் காதலுக்கல்ல.....!!!!
-
- 9 replies
- 2.1k views
-
-
தேடிக்கொண்டிருக்கிறேன்! --------------------------------------- என்னைத் துடைத்து அழகு பார்த்தவன் இன்னொருவனுக்கு பரிசாய்க் கொடுத்துப் புதைந்து போனான்! விதையென்றானதாய் விழி துடைத்தவள் என்னைத் தாங்கினாள் வீறுடன் நடந்தாள் பேருடன் வந்தாள்! பெரும் பேறினைப் பெற்றவள் தானென கருமையில் கலந்தாள் கடமை முடித்தாள்! மீண்டும் தோள்களில் மிடுக்குடனிருந்தேன் நாட்கள் கழிந்தன! வங்கத்திலாடிய வஞ்சகர் கூட்டம் நஞ்செடுத்தாடி நாயகர் சாய்ந்தனர் நானுமிப்போ தமிழீழ மக்களைப்போல அனாதையாய் சாய்தேன் யாருமிப்போ தீண்டுவதில்லை யார்வருவாரோ தேடிக்கொண்டிருக்கிறேன்!
-
- 6 replies
- 1.2k views
-
-
தேடித் பார்க்கின்றேன் இன்னமும் பெரிதாக எதுவும் இங்கு மாறிவிடவில்லை எல்லாம் அப்படியே இருக்கின்றன இயல்பாகவே மண்ணில் இருக்கும் செங்குருதியின் நிறம் தோட்டத்தின் நடுவே இழுத்து போடப்பட்டு உருண்டு போய் பந்தாக காவிளாச்செடிகள் பச்சையாக வெட்டி சூடு மிதிக்கப்பட்ட பனை ஓலைகளும் மூரி மட்டைகளும் வேலிக்கரையில் வளர்ந்து ஆழமாக வேர் விட்ட அறுக்கம்புல் வேலியில் படந்து காய்த்து தொங்கும் பாவல்காய் முன்னர் பாட்டி வைத்த இடத்திலேயே அடுப்பு எரிக்க இப்போதும் பனையின் மட்டைகளும் கொக்காரைகளும் அதே சாணி மெழுகிய நிலம் தாத்தாவின் கயித்து கட்டில் கொடியில் படபடக்கும் தோய்த்த நாலுமுழ வேட்டி துலா கயிற்று கிணறு தாவாரத்தில் தொங்கும் தென்னோல…
-
- 4 replies
- 1.8k views
-
-
இருட்டின் அறையில், விளக்கின் ஒளியில், எனது ஒளிமயமான வாழ்வைத் தேடுகின்றேன்...
-
- 7 replies
- 1.4k views
-
-
மோசமான நாட்கள் உக்கிரமடைந்த போர் வேட்டையில் கலைக்கப்படும் மிருகத்தைப்போல ஓடுகின்றோம் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இரத்த ஓடைகள், பிணக்குவியல்கள் மனிதப்பேரவலம்! உலகம் சொல்லிற்று காப்பாற்றுவார் யாருமில்லை! கோழியின் இறகுக்குள் பதுங்கும் குஞ்சுகள் போல பிள்ளைகள் உயிரைக்காக்கும் இறுதி முயற்சியில் பதுங்குகுழிகள்! அவையே சவக்குழியாகும் அவலம்! இறுதியில் ஆக்கிரமிப்பாளனிடமே போக வேண்டிய துர்ப்பாக்கியநிலை! நீரேரி வழியாக வெளியேற நிர்ப்பந்தம்! நெஞ்சளவு தண்ணீர் நடக்கமுடியாத அம்மா! எப்படி கொண்டு செல்வது நடக்கக்கூட ஜீவனில்லை! பெற்றெடுத்து தோளில் சுமந்தவள் கூலிவேலை செய்து என்னை வளர்த்தெடுத்தவள்! மொட்டுவிடும் பருவத்தில் பேரப்பிள்ளைகள்! திரிசங்கு நிலையில் நான், யாருக்கும் வரக்கூடாத…
-
- 12 replies
- 881 views
-
-
தேடுகிறேன் என் செந்தமிழை தேசம் விட்டு தேசம் வந்து தேடுகிறேன் என் செந்தமிழை செல்லுகின்ற தெருவெல்லாம் கேட்பதெல்லாம் செந்தமிழா...? என்னுடன் படிப்பவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? தமிழ் வகுப்பு மாணவர்கள் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? குழந்தை இன்று தாய்தன்னை அழைப்பதுதான் செந்தமிழா...? நம்மவர் கடை என்று நாம் சென்றால் அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? நம்மை விட மூத்தவர் கதைக்கிறார் செந்தமிழா...? அன்றவர் எம்மண்ணில் ஆங்கிலேயம் அடிமை வந்த எம் இரத்தம் இன்று என்ன சும்மாவா விட்டு வைக்கும் ...? உடம்பெல்லாம் ஓடுது எம்மவர்கள் உடம்பெல்லாம்!! அம்மாவும் கதைக்கி…
-
- 10 replies
- 2.2k views
-
-
உயர்ந்த மரம் அடியோடு -சாய குஞ்சுக் காகம் தொடர்ந்து -கரைய தோகை மயில் அழகாய்- ஆட ஆனால் இந்த ரோஜா மலரே எப்போது பூப் பூத்தது ? ரோஜாக்குள் அந்த முள் - அந்த முள்ளுக்குள் - நீ உனக்குள் நான் எதற்குள் நாம் ?
-
- 19 replies
- 2.2k views
-
-
தமிழீழம் ஓர் தனியரசு இதைத் தடுப்பவன் தலைதெறிக்கும் இதைத்தாண்ட முனைந்தவை புலிகளின் குண்டுக்கு மண்ணாய் மாறிவிடும்,,,,,,,,,,,,,,,, போராளி ந. சுதன் 1994 பின்குறிப்பு:நன்றி இக்கவிதையை எனக்கு அனுப்பியவருக்கு :P
-
- 2 replies
- 1.4k views
-
-
தேநீர் கவிதை: அம்மாவின் கைராட்டை ஓவியம்: முத்து சிம்னி விளக்கொளியில் இரவும் பகலுமாய் அம்மா சுற்றிய கைராட்டை உறங்கவிடாமல் சுற்றிக் கொண்டேயிருக்கிறது என் கவிதைகளில். அறுந்து புனைந்த நூல்கண்டுகளில் முடிச்சு முடிச்சாய் அவிழ்த்தெறிய முடியாத அவள் ஞாபகங்கள். தனக்கு மட்டும் கேட்கும்படி அவள் பாடிக்கொண்டே நூற்றுக் கொண்டிருந்த பொழுதுகள், சோடி முடிந்த நாட்கள் எல்லாத் திசைகளில் இருந்தும் எதிரொலிக்கிறது எனக்குள். எவருக்கும் தெரியாமல் அவள் அழுத கண்ணீரின் …
-
- 0 replies
- 1k views
-
-
தேநீர் கவிதை: அலைகள் மாறுவதில்லை! மு.மேத்தா காகிதம் பணம் ஆனது... பணம் மீண்டும் காகிதமாகிவிட்டது! பணத்தை என்ன செய்வதென்ற கவலை - அதிபர்களுக்கும் அதிகாரங்களுக்கும்! பணத்திற்கு என்ன செய்வதென்ற கவலை - அப்பாவிகளுக்கும் அபலைகளுக்கும்! கொள்ளை நோட்டுகளும் கள்ள நோட்டுகளும் குளிர் சாதன அறைகளில் கூடிப்பேசுகின்றன... பாவம் - நல்ல நோட்டுகள்தான் அலைகின்றன நடுத்தெருவில்! வங்கி வங்கியாய் …
-
- 1 reply
- 722 views
-