கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பிரிவில் வறளும் காதலர்போல் விழுந்து கரைந்த சருகுகளைக் காணாது தனித்துக்கிடக்கும் மரத்தடி அவள் உதட்டின் முறுவல் போல் அரும்பும் குருத்துகள் காலத்தைக் காதலித்து பொழுதோடு காமுற தாவணி மறைவில் ஓரக்கண்ணால் உசுப்பிவிடும் அவள் பார்வை போல் வசந்த கால வாசல் கதவுகள் மெல்லத் திறக்கின்றது இத்தனைகாலம் சூட்டின் இதத்துக்காய் போர்த்திய அங்கிகள் புணர்வின் தேவைபோல் ஒவ்வொன்றாய் கழன்று விழ அமைதியான அவள் முதல் முத்தச் சம்மதம்போல் பொழுதின் வெண்ணொளி மேனியை சிலிர்ப்பூட்ட முதல் அணைப்பின் பட படப்பில் இரவும் பகலாக்கும் ஏக்கம்போல் மெல்ல மெல்ல பொழுது ஓளியில் கரைய காமத்தில் கரையும் ஊடலைப்போல் சிலகாலம் ப…
-
- 2 replies
- 649 views
-
-
-
மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 1.7k views
-
-
ஒன்றென எழுவோம் வாடா! ஈழம் விடுதலை பெறும் வரை வேறு சிந்தனை எனக்கில்லை! சூழும் கலி யாவுமே மாளும்! "ஈழம்" மீளுமே!. பாழும் பிரிவினை கொண்டதால் எம் இனம் பட்ட பாடுகள் போதுமே! இனி! வீழும் துன்பம்" சொல்லியே இணைவோம் வா என் தோழனே! கொத்துக்கொத்தாய் உன் இனம் செத்து மடிதல் கண்டுமே! வேறு திசை நீ பார்க்கின்றாய் வரலாற்றில் ஏன் பழி ஏற்கிறாய்?!! தனி ஒரு மனிதனுக்கிங்கே உணவில்லை என்று கொண்டால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான்" அந்த பாரதி எங்கே சென்றான்?! உணவில்லை, உடையில்லை உறையுளும் நிலையில்லை! தினம் தினம் பொழிகின்ற குண்டுக்குள் எம் உயிர்!!. இனம் என் தமிழினம் வோரொடு அழிக்கினம் இதைக் கண்டுமா சோதரா கண் மூடிக்கிடக்கினம்?! விடு விடு பகைமைகள் …
-
- 2 replies
- 961 views
-
-
ஊமையோ? குருடோ நீ?!!! செத்தொழியட்டும் தமிழ் இரத்தம் என்று கொத்தணிக் குண்டுபோட்டு கொடுமைகள் செய்கின்ற எத்தரின் நிலைகண்டும் கண்மூடி கிடக்கிறாயே உலகமே?!!! தடை செய்த குண்டுகளைத் தமிழர் மீது போடலாம் என்பது தான் உலக நீதியா?!! வேட்டுச்சத்தங்கள் எங்களுக்குப் புதிதல்ல! வெந்து நொந்து வேதனைப்படுவது எமக்கு அழகல்ல சொந்தம் இழந்தாலும் சொத்து சுகம் அத்தனையும் துறந்தாலும் எங்கள் மண் வாழ எம் உயிர் கொடுக்கும் எம்மை அடக்க நினைக்கிறாயே?!! இதுதான் நியாயமா?!! "ஈழம்" என்பது சிங்களத்தின் தேசமாம் வாய் கூசாமல் பொய்யுரைக்கும் புத்தரின் பரம்பரை வரலாறும் தெரியவில்லை தாங்கள் வந்தவழி அறியவில்லை! "பாடம் புகட்டுவோம்" என்ற எங்களின் வீரத்தைக் கண்டு கொதி…
-
- 2 replies
- 891 views
-
-
உலகமே அஞ்சும்.... ஏடெடுத்து கவியெழுத எழுகவடி பெண்ணே- நீ அடிமையில்லை யென்றுரைக்க அகிலம் எழு பெண்ணே... தீயோடு சண்டையிட்டாய் திரூதடி பெண்ணே- நீ தீயாகி எழுந்து பாரில் தீயை வை பெண்ணே.. செக்கிழுத்த மாடாகி-சமையல் செக்கிழுத்தாய் போதுமடி புதிய உலக விதிமுறையில் புரட்சி பெண்ணாய் எழுகவடி ... பிரசவத்து இயந்திரமாய் பரிதவித்தாய் போதும்- இந்த பீத்தலிற்கு தையலிட்டு- கணை பிரிதிவியாய் பாயடி.. அடக்கு முறை உனக்கு இனி அகிலமதில் இல்லையடி- நீ அகல விழி திறந்தெழுந்தால் அவையே உனக்கு அஞ்சுமடி... விழுந்தழுதாய் போதுமடி வெகுண்டே இன்று எழுகவடி எழுந்து விட்டால் போதுமடி ஏழ் உலகும் அஞ்சுமடி..! வன்னி மைந்தன்.////…
-
- 2 replies
- 1.3k views
-
-
எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நண்பி ஒருவர் இமெயிலில் அனுப்பிய கவிதை ஒன்றை யாழ்களத்தில் பகிர்கின்றேன். ஈழமுரசு "நகைச்சுவை இரவு" நிகழ்வில்(06.08.2011) வாசிக்கப்பட்ட கவிதை ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெர…
-
- 2 replies
- 847 views
-
-
நவம்பர் மாத கணையாழி இதழில் வெளியாகியுள்ள எனது "ஒருவழிப் போக்குவரத்து" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! ஒரு வழிப் போக்குவரத்து ----------------------------------------------- நடுத்தெருவில் நிற்கும் பிழைப்பு அவருக்கு. உச்சி வெய்யிலில் புகை தூசுக்கள் இடையில் ஆயிரம் கவலைகளை மனதின் மூலையில் தள்ளி நம்மை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறார். சிவப்பு விளக்கு கண்டல்ல, சீருடைக் காவலர் சீறுவாரென்றே விதிகளை மதிக்கப் பழகியிருக்கிறோம் நாம். அவருக்குள்ளும் கவிதை இருந்திருக்கும், கோடையின் வெப்பத்தில் உருகி ஓடியிருக்கும். …
-
- 2 replies
- 978 views
-
-
____________________$$$$___$$$ $ __________________$$$$$$$_$$$$ $$ _________$$$$$$$$$$$$$$$$$__$$ $$ _____$$$$$$$$$$$$$$$$$$$$$$__$ $$$ ____$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$ ___$$$_$$_$$$$$$$$$$$$$$$$_$$$ $$ __$$$$$_$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ __$$$_$$_$$$$$$$$$$$$$$$$$$$$$ __$$$_$$_$$$$$$$$___________$$ $$ _$$$$$_$$$$$$$$$$$___________$ $$ _$$$_$$_$$$$$$$$$$ _$$$_$$_$$$$$$$$$$ _$$$_$$_$$$$$$$$$$$ $_$$$$$$__$$$$$$$$$ $_$$$$$$___$$$$$$$$ _$$$$$$$$$__$$$$$$$ $_$$$$$$$$___$$$$$$ $$_$$$$$$$$___$$$$$ $$$_$$$$$$$$__$$$$$$ _$$$_$$$$$$$$$_$$$$$ $$$$$ __$$$$$$$$_$$$$ $$$$$$$ __$$$$$$$$$__$ $_$_$$$$$__$$$$$$$$$_$$$$ $$$__$$$$$__$$_$$$$$$$_$$$…
-
- 2 replies
- 929 views
-
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் துரோகி கருணாய்நிதிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடு ஊரில் நச்சுமரம் காய்த்தென் பயன். வாழ்கின்றபோதே நீ பிணமானவன். உன்னை பெற்றவளும் பாவியே கருவில் உன்னைக் கலைக்காததால் சகுனி உன் செயலால் நல்லவனான்இளவலுக்கு முடிசூட்ட பலியான உன் இனம் எத்தனை எத்தனை கேடு கெட்டவனே வெள்ளைத் தோலில் உனை மறந்த காமுகனே அந்நய மோகத்தில் உனை மறந்தாயோ? காத்திருக்கின்றோம் புதிய தீபாவளிக்காய் இரணியன் மறைந்ததிற்கு தீபாவளி நீ இறக்கபபோகும் நாள் எமக்கு இன்னோர் தீபாவளி இந்த எட்டிமரம் பழுத்தாலென்ன இல்லாவிட்டால் என்ன
-
- 2 replies
- 931 views
-
-
உள்ளம் பேதலிக்க... எண்ணம் கொடு! என் வாழ்விலும்... வண்ணக் கோலமிடு! எல்லை மீறும்போது... என்னைத் தடு! "கொஞ்சக்" கனவிலேனும்... என்னை விடு!
-
- 2 replies
- 873 views
-
-
படைப்போம் படைப்போம் புரட்சிகள் படைப்போம் உடைப்போம் உடைப்போம் இயலாமை உடைப்போம் எடுப்போம் எடுப்போம் அறிவாயுதம் எடுப்போம் தவிர்ப்போம் தவிர்ப்போம் அறியாமை தவிர்ப்போம் துறப்போம் துறப்போம் சுயநலம் துறப்போம் தடுப்போம் தடுப்போம் இருளினை தடுப்போம் மறப்போம் மறப்போம் வேற்றுமை மறப்போம் நிறைப்போம் நிறைப்போம் ஒற்றுமை நிறைப்போம் மறுப்போம் மறுப்போம் புறங்களை மறுப்போம் தெரியோம் தெரியோம் கறைகளாய்த் தெரியோம் அறிவோம் அறிவோம் தன்பலம் அறிவோம் புனைவோம் புனைவோம் புதியன புனைவோம் அழிப்போம் அழிப்போம் மடமையை அழிப்போம் வளர்ப்போம் வளர்ப்போம் இனமானம் வளர்ப்போம் பயில்வோம் பயில்வோம் சரித்திரம் பயில்வோம் முயல்வோம் முயல்வோம் …
-
- 2 replies
- 792 views
-
-
''எங்கு போய் ஒழிந்தான் சொல்கேம்....???'' எறிகணைகள் ஏவி பகை ஏழ் பத்து உயிர்களையே... கதிரவெளியினிலே இன்று காவு கொண்டதங்கே.... எண் கணக்கில் நூறு தாண்டி வேறு பிறர் காயமங்கே.... கொலை வெறியன் மகிந்தன் அங்கே.... கொல்லுகிறான் நாளும் அங்கே.... எம் தமிழர் உறவு அங்கே.... நித்தம் கண்ணீர் கொட்டுதங்கே.... இத்தனையும் வந்து பார்க்கா ஒழிந்தான் இன்று - எரிக் சொல்கேம் எங்கே.....??? வன்னி மைந்தன் - :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
-
- 2 replies
- 976 views
-
-
வல்ல தமிழீழமென்னும் வலிமைகொண்ட யாழ்மண்ணில் வெல்லவொரு வேங்கை தந்த வேலுப்பிள்ளை யண்ணல் கருச்சுமந்த யன்னையாம் பார்வதி வயிற்றினிலே அருகேகிப் பழமென்று சூரியனை பிடித்தவெங்கள் மாருதியின் பலபொருந்த அவதாரமெடுத்த வொரு சுயபல மிகுத்தவொரு சுந்தரக் கரிகாலன் மருவுபெயர் தாங்கியவன் மாயா வுலகினிலே மண்ணுமொத்துச் சீராட்ட மறத்தமிழன் தமிழ்மணக்க எங்களுயிர் கலந்திருந்து எடுத்தநல் சேனையுடன் வீரத்தின் வித்தகனாய் உலகத்தமிழ் நெஞ்சமதில் மனமுருகி இன்றுனக்கு வாழத்துகின்ற வேளையிலே வாடாத பாமாலை அணிவதற்கு விளைகின்றேன் தமிழீழப் பெருஞ்சுவையாய் வற்றாத கனவோடு எண்ணமதில் பிறந்த மண்ணின் விடிவுக்காய் ஈரெட்டு வயதினிலே எடுத்தவுன் சுதந்திரத்தின் மூச்சாகி உன்னை யுருக்கி வீரர்களை யுருவ…
-
- 2 replies
- 2.3k views
-
-
என்னா நான் உனக்கு ஆன்ட்டி இந்தியன்னா
-
- 2 replies
- 1.8k views
-
-
உன் மீது நான் கொண்ட காதலை இறைவனிடம் கொண்டிருந்தால் எப்போதோ எனக்கு மோச்சம் கிடைத்திருக்கும் உனக்காய் எழுதிய கவிதைகளை அச்சடித்திருந்தால் புதிய காவியம் ஒன்று கிடைத்திருக்கும் நீயோ.... காதலால் எனக்கு அழகானாய் கவிதையால் எனக்கு நிலவானாய் ஆனாலும் நீ நினைத்த மாதிரியே என் இதயத்தை ஒத்திகை மேடையாக்கி உன் காதல் அபிநயங்களை அழகாய் பழகிச் சென்று விட்டாய் இதில் என்ன ஆச்சரியம் என்றால் கொஞ்ச காலமெடுத்தாலும் ஆசிரியர் இல்லமாலே நீ நீயாவே நடன ஆசிரியையானதுதான் திருவிழா நெரிசல்களில் தொலைத்துவிட்டாலும் தேரில் பவனி வந்து எனக்குத் தரிசனம் தருவது உன் நினைவு மட்டும்தான் மறப்பதா..? உன்னையா...? நானா..? பேசாமல் என்னை நீ செத்துப்போ…
-
- 2 replies
- 1.1k views
-
-
எனது மண் முற்றத்து பலாக்கனிகள் முகம்மலர்ந்து வரவேற்க செம்பாட்டான் மாங்கனிகள் அசைந் தசைந்து தலையாட்ட தோடை எலுமிச்சை கிணற்றடியில் சுற்றிநிற்க தொங்கும் துலாவிற்கு முள்முருங்கை தோள்கொடுக்க வாழைகள் கூடி நின்று வம்சத்தை நினைவு சொல்ல வாசலில் தென்னைமரம் வாவென்று எனை அழைக்க மந்திகள் கூட்டமாக மாமரத்தில் விளையாட கொம்புத் தேனீக்கள் கூட்டமாய் அதைக் கலைக்க கொய்யாவும் மாதுளையும் குலுங்கிக் கூத்தாட உழுந்தும் பயறும் வயலெங்கும் படர்ந்து நிற்க நெல்மூடை வாசலிலே விருந்தினரை வரவேற்க மாலைக் கதிரொளிகள் மரத்தோப்பினில் ஊடுருவ கொத்திப் புரட்டிய கோடரி மண்வெட்டி கொல்லைப் புறத்தங்கே. தோள்சாய்த்து ஓய்வெடுக்க நானும் அமைதியாய் என் குடிலில் த…
-
- 2 replies
- 609 views
-
-
விடுதலையின் விளிம்பில் நாம்..... நம் தாயக மீட்பு வாசல் வரை வந்துவிட்டோம் விடுதலைக்காய் வழிதேடி கண்முன்னே தெரிகிறது காலையது உன் விடியலுக்காய் ! வந்த வழி பார்க்காதே வலி நிறைந்த வாழ்வு அது வடுக்களாலும் வலிகளாலும் நிரம்பி நின்ற சோகமது ! முயற்ச்சியினால் முன்னேறு முழு நிலவைத் தொடுவதற்கு முடிந்துவிட்டால் முழு வசந்தம் உனக்காக காத்திருக்கு ! வாள் நுனியில் நிற்கின்றாய் உன் வசந்தம் ஒரு பக்கம் ? அடிமை வாழ்வோ மறுபக்கம் ? வசந்தந்தான் உன் தேர்வு அடிமை வாழ்வை உன்மனம் தேடாது ! நீரில் மூழ்க மறுத்துவிட்டால் முத்துக்கள் உன் சொந்தமல்ல ! முயற்ச்சியற்று இருந்துவிட்டால் உன் தாய் நாடோ உன் மக்களின் சொந்தமல்…
-
- 2 replies
- 825 views
-
-
கல்லறைமேனியர் காத்திருப்பர் இன்று விழிதிறந்தெதிர் பார்த்திருப்பர் போகும் வழி தெரியல்லையே அங்கொரு தீபம் ஏற்றிட வழியில்லையே வலிசுமந்து எழுகின்றோம் மாவீரரே உங்கள் திசை கண்டு தொழுகின்றோம். உற்றவர் யாருமின்றி பிள்ளைகள் உறங்கிட பகை தின்ற நிலத்தில் கோவில்கள் கலைந்திட காற்றெழுந்து முகம் பார்த்திடுமோ கார்த்திகை மேகம் சிந்திடுமோ யாருமின்றி நீர் எழுந்து நிற்கையிலே கத்தும் கடல் அழுதிடுமே எங்கள் ரத்தம் காய்கிறதைய்யா இங்கு விழிகள் தோய்கிறதைய்யா திசைகள் தாண்டி நீண்டிடும் நினைவு கரங் கொண்டு சேர்த்திடும் மான உணர்வு தூயவர் உறவுகள் இனி சேர்ந்திட தாயவள் நிலை இனி மாறிடும் தாரகைகள் தாமிறங்கி தொழுதிட வான் வளைந்து மாலை சூடிடும் நீரெழுந்து மலர்த்திட ஒளி கூடிடும் தேசத்தின் விடி…
-
- 2 replies
- 708 views
-
-
“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய கருணாநிதி ஸ்ரீமச்சாசனம் ஊர்வச சிரோபபிஷசேகரி…” இச்செப்பேடு செப்புவது யாதெனில், “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!” என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு விடாது கடிதமெழுதியதோடு, அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட மணித்துளியில் அன்ன ஆகாரம் உண்ண மறுத்து, ஈழத்தமிழர் செத்த பின்பு போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன் கருணாநிதிச் சோழனின் மற்ற கைங்கர்யங்களாவன: சோழநாடு சோறுடைத்ததைப் பின்னுக்குத் தள்ளி ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்! பகை முடித்தார்! வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு, மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி, மகப்பேறு உதவித்தொகை… …
-
- 2 replies
- 1.4k views
-
-
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல் குறித்து முதல்வர் கருணாநிதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார். கருணாநிதியின் பிரதீபா பாட்டீல் கவிதை .. நூறு கோடியைத் தாண்டுகிற மக்கள் வெள்ளத்தில் வீறு கொண்ட ஆடவர் எண்ணிக்கை சரி பாதியாகும்! சீறுகின்ற பாம்புகள் முன்னே சிறு தவளைக் கூட்டம் போல்- ஆறுவது சினம் படித்து அடங்கிடும் பெண் குலமோ மறு பாதியாகும் நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி; நானம், அச்சம், மடம், பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி; அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல் அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு -என்று அனலிடை அவளைக் கருக்கி …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆரிடம் முறையிடுவோம்? ஆரிடம் முறையிடுவோம்? எவரை நம்புவோம்? அவனியிலே எம்மை அணைத்திட யாருளர்? போரியல் வாழ்வினைப் பழக்கத்திற் கொண்டோம் புதியவை யல்லஇத் துன்பங்கள் எமக்கு சூரியத் தலைவனங்கு எதிர்வு கூறுகின்றான் சாற்றும் நூறாண்டு நூறாண்டு காலம் நேரிய பாதையிற் பதிலடி கொடுத்திட நேரம் வந்ததெனத் திடமுரைக் கின்றான் மனிதநேயப் பணியாளர் தாமங்கு செயலாற்ற மிக்கவே அச்சுறுத்தல் நிறையிழி நாடென மனிதவுரிமை அமைப்பொடு ஐ நா சபையினரும் மட்டிலாக் கண்டனம் மனதாரக் கூறுகிறார். நனிவுயர் எம்மக்கள் நாடோறும் மடிதல் நன்றாக அறிந்துமிவர் எதுவுமே செய்திலர் கனியமுத வார்த்தையிற் சிங்களர் அவரைக் கட்டுக்குள் வீழ்த்தித் தம்பக்கம் சாய்க்கின்றார் அறிக்கைகள் விடுகி…
-
- 2 replies
- 1.1k views
-
-
முதல் விசா முடியும் பொழுது முதல் தங்கையின் திருமணம் முடிந்திருந்தது இரண்டாம் விசா முடியும் பொழுது இளைய தங்கைக்கு இருபது பவுன் சேர்க்க முடிந்திருந்தது மூன்றாம் விசா முடியும் பொழுது மூனு சென்ட் நிலத்தில் வீடு வாங்க முடிந்திருந்தது நான்காம் விசா எடுக்க தயாரான போது நரைத்திருந்தது திருமணமாகமலே எனக்கு “தலைமுடி” படித்ததில் பிடித்தது (முக நூல் )
-
- 2 replies
- 869 views
-
-
ஈழத்திலிருந்து, காலத்துக்குகேற்ப அற்புதமான கவிதை. - திரு ராஜேஸ்வரன்.-
-
- 2 replies
- 1.2k views
-
-
அகதித் துயர்வெளி 01. மழைநாளில் இடம்பெயரும் தெருவொன்றில் வெட்டப்பட்ட குழியைப்போலிருக்கும் கூடாரங்களுக்குள் பாலஸ்தீனக் குழந்தைகள் வந்து ஏன் ஒளிந்திருக்கின்றனர்? அகதிகளாக சனங்கள் வெற்றிக்கொள்ளப்பட்ட நாளில் உலகத்தின் எல்லா அகதிக் குழந்தைகளும் ஒரே மாதிரி அழுகின்றன சிறுவர்கள் துப்பாக்கிகள் பிடிக்கும் நாளில் தாய்மார்கள் பொதிகளை சுமந்தலையும் காடுகளின் வெளியில் எல்லோருமே ஏதோ ஒரு நடவடிக்கையில் துரத்தப்பட்டனர் வீடு அழித்துத் துடைக்கப்பட்டதையும் நகரம் சிதைத்து உரு மாற்றப்பட்டதையும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதையும் இந்த அகதிச் சனங்கள் தாங்க முற்படுவர் அகதிகளின் காலங்கள் அலைச்சலால் நிரம்பியிருக்கின்றன மீண்டும் மீண்டும் பொருட்களைக் தூக்கிக்கொண்டு …
-
- 2 replies
- 675 views
-