கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
-
- 6 replies
- 961 views
-
-
வள்ளுவன் காதல் - 2 காம்பரிந்த மலர் சொரிந்த மஞ்சம் - அங்கே கட்டழகி வாசுகிக்கோ காதல் நெஞ்சம். தாம்பத்ய சுகம் தேடிச் செந் நாப்போதன் தாவுகிறான் மருவுதற்கு அவள் மறுத்தாள். தேம்புகிறாள் "சீ! தூரப் போம்!" என்கின்றாள் திகைத்தவனோ "ஏனடி நீ பிணங்குகின்றாய்? நான் புரிந்த கொடுமையென்ன? சொல்!" என்கின்றான் நங்கையவள் "தும்மிய(து) ஏன்?" என்று கேட்டாள். "தும்முதற்கும் விம்முதற்கும் தொடர்புண்டோடி? துரோகமென்ன நான் புரிந்தேன்?" என்றான் காளை. "உம் மனதில் என்னைவிட யாரோ உள்ளார், உதனாற்தான் அவள் நினைவாற் தும்மல்." என்றாள். "வழுத்தினாள் தும்மினேனாக - அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீரென்று (திருக்குறள்-காமம்)" "அடி போடி பைத்தியமே! எனக்கு உன்றன் அழகைவிட …
-
- 1 reply
- 961 views
-
-
மகளீர் நிகழ்ச்சி படபிடிப்பு மகளீருக்கு மட்டும் அனுமதி தொலைகாட்சியில் ஒளிபரப்பு ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ கவிப்புயல் இனியவன் சுவாமி தரிசனம் நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர் ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ கவிப்புயல் இனியவன்
-
- 0 replies
- 960 views
-
-
கவிதைகளால் மலர் தொடுத்துன் கழுத்தினிலே மாலையிட்டேன் கனிவான வார்த்தைகளாலுன் காதுகளில் இசை படித்தேன் காதல் மேவ காரிகையுன் கனியிதழில் இதழ் பதித்தேன் காலமெல்லாம் நீயே என்றுன் கரம் பற்றி நான் இருந்தேன் செந்தமிழில் செல்லமா யுனை செல்லக் கண்ணம்மா என்றேன் உந்தன் செல்லக் குறும் பையெல்லாம் உயிரோ டணைத்து உவகை கொண்டேன் உந்தன் தூக்க சந்தம் கேட்டு எந்தன் தூக்கம் நா னடைந்தேன் ஜென்ம மெத்தனை யெடுத்தாலுமினி உன் னோடு தான் வாழ்ந்திடுவேன்
-
- 8 replies
- 959 views
-
-
வலிகளை தந்தவனே வரவேற்கும் இழிவுடன் வாசல்களை கடக்குமொரு கணத்தில் செத்து சூடடங்கிய பின்னும் புணரதுடித்தலைந்த மிருகங்கள், அம்மணமாக்கியெம் உறவுகளை கொன்றழித்த நாய்கள், பிஞ்சென்றும் பாராது தம்வெறி தீர்க்கஅலையும் தப்பாய்பிறந்த பேய்கள், வாசலில் கூடியிருக்க , எக்காளமிட்டு கொன்றவன் _எந்தை சோதரியின் கற்பை தின்றவன் முக்காலமும் முன்னிருக்க _சிந்தை யடக்கி தலைகுனிந்து செல்வதென்பது ....................... நினைவிடமிச்சங்களை , காவியநாயகர்களின் கல்லறை எச்சங்களை , சிதைக்கப்பட்ட காவல்தெய்வங்களின் சிலையுருவ மிகுதிகளை , குண்டுகளால் சிதைந்துபோன குடியிருந்த வீட்டை , கடந்துபோகையிலும் நேர்கொண்டு பாராமல் போவதென்பது ................ நேற்று…
-
- 6 replies
- 958 views
-
-
[size=4]உயிரொன்று கரைகிறது...[/size] [size=3]கவிதை - இளங்கவி[/size] பெயரில் சிவந்தன் - அவன் தமிழீழத்தின் சிவந்தமண்... தன் இனம் சிறிது சிறிதாய் அழிவதைப் பார்க்கமுடியாமல் தம் உயிரையே உருக்கி நம் உரிமையை உரக்கச் சொல்லத் துணிந்தவன்..... அன்று... ஆயிரம் மைல்கள் நடந்தான் அவன் உடலிலன்று வலுவிருந்தது.... இன்று.... உணவையும் நீரையும் மட்டும் கொண்டு இயங்கும் உயிர்க் கோளத்தையே உருக்கத்துணிந்து விட்டான் அதை உயிரின் எல்லைவரை உருக்கியும் விட்டான்... பெற்றோரை மறந்து... மணம் கொண்ட மனையாளை மறந்து.... தன் உயிரணுவில் உதித்த பிள்ளையையும் மறந்து...... உரிமையை இழந்து தவிக்கும் உனக்கும் எனக்குமாய் திலீபன் வழினின்று த…
-
- 12 replies
- 958 views
-
-
எஞ்சி இருக்கும் உடலங்களையும் அரிக்கத்தொடங்கிவிட்டது வார்த்தைகளால் வளைத்த கூட்டம், புதிய ஏற்பாடு என்றும், மீள்ந்தெழல் என்றும், அறையப்பட்ட ஆணிகளை அறைந்தவர்களை கொண்டே அகற்றுவோம் என்றும் செவியை வழியாக்கி இதயத்துள் இறங்கினர். நச்சுக்காற்றும் பிணவாடைகளும் முகத்திலறைய, மண்டையோடுகளையும் சிதைந்த கூடுகளையும் தரவைகளிலும் உப்பங்களிகளிலும் எழும் அவல ஓலங்களையும் கடந்து, நம்பிக்கைகள் தொலைந்த நிலத்தில் குருதியுண்டு செழித்த அடம்பன் கொடிகளையும் இறந்தவர்களின் உறுதிகளால் இறுகிப்போன விண்ணாங்கு மரங்களையும் அலகுதுடைத்த ஊனுண்ணிகளின் ஏவறைகளையும் கடந்து, எக்களிப்புடன் வனப்புடல் பார்த்து குறிகசக்கி பல்லிழிப்பவனையும், சுடுகருவிகொண்டு படு என்றழைப்பவனையும் கடந்து, த…
-
- 13 replies
- 958 views
-
-
மீட்பரினாலும் மீட்கப்படாமல்போன ஈராயிரத்து ஒன்பது வருடங்கள் கழித்து... ஒரு இனத்தையே ஒட்டுமொத்தமாய் சிலுவையில் அறைந்தது சர்வதேசம்! அன்றுதான்... ஈழத்தின் கிழக்குக்கரை வாய்க்காலில் செந்நிறநீர்... ஆறாய் ஓடியது! பரலோகத்தில் இருந்த எங்கள் பிதாவுக்கு காது செவிடானதும் அன்றைக்குத்தான்!! ஒரு கல்வாரிப் பயணத்தை முப்பது வருடங்களாய் சுமந்து களைத்த மீட்பர், அன்றுதான் காணாமல்போனார்! பல யூதாஸ்கள் தோன்றினார்கள்!! ஆட்டுமந்தைகள் எல்லாம் பட்டியில் அடைக்கப்பட்டன! காணாமல் போன பல ஆடுகளை புலிதான் வேட்டையாடியதாய் ஊருக்குள் கதைப்பதாக உலகச் சந்தியின் மதவடியில் உட்கார்ந்து, பரமசிவமும் பான்கீமூனும் பம்பலாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்! ஆனால் அதேநேரம்... எல்லாம் புரிந்தும்…
-
- 9 replies
- 957 views
-
-
கடந்துவிட முடிந்தாலும் தொடர்கின்றன ஒருபகல் நிலவைப்போல இறந்துபோன நேசிப்புகளும் காயங்களும், சப்தங்களை பிரிந்த சங்குகளாய் வெதும்புகின்றன இன்றைய பொழுதுகளில் - இந்த இதயத்தின் துடிப்புக்கள்.. விழிகரைந்துருகி விடை கொடுத்தும், கரைந்துமழிந்திடாத நதிக்கரை படுக்கைகளாய் உள்நிறைந்து போகிறது நேசிப்புக்கள். நல்ல நிலக்காலங்களிலும், சில அதிகாலைகளிலும், தேவதைகள் இறங்கிஅலங்கரிக்கின்றனர் நேசிப்பு மீதான கனவுகளை, நேசிப்பின் கொடிமரங்களில் அலங்கரிக்கப்பட்ட கனவுகள் அறைந்துகொள்கின்றன தங்களை, நிதர்சனங்களின் வலிகளை சுமந்து மௌனமாக, இந்த மௌனங்கள் திரண்டொரு பெரும் ஒலிக்குறிப்பாய் எழும்! அது ஒரு, நேசிப்புக்கான மரணத்தை உங்கள் முகங்களில் அறையும்.
-
- 7 replies
- 957 views
-
-
காட்டுவழி பயணம்... கஸ்டப்படுறோம்.... கட்டைவண்டிதான்.... துடுப்பும் படகும்...!! சலங்கைகளை ... கழற்றிவிட்டு தூரம் போகலாம்.... யானை மிதித்து .......... இழுத்தவர் இறக்கலாம்... இன்னொருவன் ........... நானே அடுத்து என்று.... தானாய் செத்துபோக ... எம்மவர் தவம் கிடக்கலாம்! புரிகிறோமா? இழப்புகளின் மேடையில்.. "கதை" கச்சேரி ஏற்பாடு....! பாடகனே கிடைக்கவில்லை... இதில் பல்லவி சரணம் தகராறு!
-
- 1 reply
- 957 views
-
-
விண்ணை தாண்டி விழிக்க வைக்கிறாய் உன் விழிகளாலே அன்பை காட்டி அரவணைக்கிறாய் உன் அழகாலே காதல் என்று சொன்ன போது மட்டும் ஏனடி அண்ணா என்று சொல்லி என்னை புதைத்து விட்டாய் மண்ணுக்குள்ளே...
-
- 2 replies
- 957 views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். அன்னை எனது ஜனனத்திற்காக பல முறை மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ உன் விரல்களை பற்றிக் கொண்டு - தான் நடை பழகினேன் - இன்று உனக்கு முன்பாகச் செல்வதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் அசைவுகளைக் கண்டு பேசத் துவங்கியவன்!! இன்று உன்னை விடவும் பேசுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் விரல்களைக் கொண்டு எழுதப் பழகியவன்-இன்று உன்னை விடவும் எழுதுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! எத்தனை இரவுகள் உன் தூக்கம் தொலைத்திருப்பாய்...! வலிகளை மட்டும் கற்றுத் தந்தவன் நான்.... என் வலி கண்டதும்.... - நீ ஏன் துடிதுடித்துப் போகிறாய்? தாய் என்பதாலா...?
-
- 2 replies
- 956 views
-
-
[size=5]ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்[/size] [size=5] [/size] [size=5][/size] [size=5]தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம் தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம் தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம் தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.[/size] [size=5] தமக்கென வாழாது நமக்கென மாண்டவர்கள் தன்னலம் பாராது சமராடிய தாண்டவர்கள் தமிழ்த்தாய் மீது அழியாப்பாசம் பூண்டவர்கள் தரணியிதில் மாவீரரென்று பேர்கொண்ட ஆண்டவர்கள்.[/size] [size=5]மங்காத வீரமுகம் தன்னை கொண்டவர்கள் மகிழ்வாக தலைவன் அடியொற்றி [/size]நின்றவர்கள் [size=5]மண்டியிட்டு மாற்றான்பாதம் தொழுதிடா மன்னவர்கள் மறப்பரோ அவர்தம் மாண்புகள…
-
- 11 replies
- 956 views
-
-
என்ன பார்க்கிறீர்கள்? மஞ்சள் குளித்து மரமொன்று நின்றது பச்சைப்பசேலென பார்ப்பதற்கு குளிர்ச்சியாய் நிழல் தந்து நின்றது இப்படி மாறிவிட்டதே! பார்த்து நின்றேன். என்ன விகைப்பாய்ப் பார்க்கிறீர்கள்? நாங்கள் பருவ காலத்துக்கேற்ப கோலத்தை மாற்றி வாழுகிறோம். உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களோ நேரத்துக்கு நேரம் பணத்துக்காகவும் பதவிக்காகவும் குணமும் மாறுகிறார்கள் கொள்கையும் மாறுகிறார்கள் அவர்களைப் பார்க்காமல் என்னை ஏன் பார்க்கிறீர்கள்? வாயடைத்து தலைகுனிந்து வந்தேன். செண்பகன் 18.10.14
-
- 1 reply
- 956 views
-
-
நீ வரும்வரை என்னை எவரும் கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில் கவனிக்காததென்று எதுவும் இல்லை அதற்காகவாவது உன்னோடு கூட வரலாம் நான் * உன்னோடு பார்க்கவேண்டிய உலக அதிசயங்கள் எல்லாமே எங்கே என் அதிசயம் என்று கேக்கிறது அதற்கு எப்படித் தெரியும் உன்னை நான் சுற்றிச் சுற்றி ரசிப்பது * தினம் நீ சாய்ந்து தூங்கும் என் தோல்களை தடவித் தடவித்தான் என்னையே நான் தூங்க வைக்கிறேன் * உன்னை நிற்க வைத்து யார் புகைப்படம் எடுத்தது அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கல்லவா கால் வலிக்கிறது * நீங்க தூங்கவே மாட்டிங்களா என்கிறாய் நான் தூங்கினால் என்னை உன் மடியில் இருந்து தூக்கிவிடுவாயே -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 956 views
-
-
மே 18....!!! எங்கள் தேசம் எரிந்து போனது.. எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்.. எங்கள் கனவுகள் கலைந்து போயின... எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது. எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்! எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்! எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்! எத்தனை நாட்கள் கதறி அழுதோம்! துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா குண்டு துளைத்து குடல் கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறி அழுதாலும் கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும் நின்று துயர் தீர்க்க நேரம் இன்றி உயிரை மட்டும் கையில் கொண்டு ஓடினோமே!!! முலையில் பால் வற்றி குருதி வடியும் அதையும் பசியால் பிஞ்சு குடிக்க வலியால்…
-
- 2 replies
- 956 views
-
-
போதும் என்ற மனமே........? -------- குடியிருக்க குடிசையுண்டு.... கூடிவாழ குடும்பமுண்டு...... தூங்கியெழ திண்ணையுண்டு.... அதிகாரம் செய்ய உறவுகளுண்டு.... இதற்கு மேல் என்னவேண்டும் ...? பாசத்தை காட்ட பெற்றோர்.... வேசத்தை காட்ட பதவி .... மோகத்தை காட்ட மனைவி .... பாவத்தை போக்க கோயில்.... இதற்கு மேல் என்னவேண்டும் ...? கொள்ளிவைக்க ஆண்குழந்தை கொஞ்சி விளையாட பெண்குழந்தை ... தட்டிக்கேட்க உடன்பிறப்புகள் ....... கொட்டி கொடுக்க மாமன் சொத்து .... இதற்கு மேல் என்னவேண்டும் ...? குடித்து கும்மாலம் போட நண்பன் .... ஊர்கதை பேச ஆலமரத்தடி...... பஞ்சாயத்து தீர்ப்பு சொல்ல தலைவர்.... பகட்டாக திரிய ஒரு வாகனம் .... இதற்கு மேல் என்னவேண்டும் ...? …
-
- 0 replies
- 955 views
-
-
குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி - தீபச்செல்வன் பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடியவில்லை எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை சூழ நிறுத்திவிட்டு காட்ட முடியாதிருந்தோம் ஒளியிருக்கும் திசையை ஈற்றில் வழங்கியிருக்கிறோம் ஆண்குறிகளை அடையாளம் காட்டுமொரு காலத்தை. 0 …
-
- 1 reply
- 955 views
-
-
மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத…
-
- 0 replies
- 955 views
-
-
முன்னாள் பெண் புலியின் கண்ணீர் கதை http://www.munainews.com/news/index.php?option=com_content&view=article&id=2676%3A2011-06-22-23-46-22&catid=59%3A2011-04-09-15-25-47&Itemid=107 இடம் பெயர்ந்த பின்னர் இடிந்து போன துயிலுமில்லமொன்றின் அருகிருந்து கைவிடப்பட்ட நிலையிலிருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை(க்) கண்டெடுத்தேன் துயிலுமில்லமருகே இருந்த மகிமையோ என்னவோ இன்று வரை துருப்பிடிக்காதிருந்தது சைக்கிள் வேகமும், அதற்கே ஊரிய வீரியமும் சிறிதளவு குன்றாது உந்தி மிதிக்க உருண்டோடி, இவ் உலகின் மேர்சிடேஸ் காரின் மோகத்திற்கு நிகரான சுகத்தை அது எனக்குத் தந்தது! முதன்மைச் சாலையென முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்ட கிளி நொச்சி…
-
- 0 replies
- 954 views
-
-
மரத்திலிருந்து விழும் ... பழுத்த இலை சொன்னது ...!!! நான் எத்தனையோ முறை .. வானத்தை தோட முயற்சித்தேன் .. முடியவில்லை -என்றாலும் .. கலங்கவில்லை என் அடுத்த .. வாரிசு நிச்சயம் தொடும் ...!!! என் குழந்தை துளிர் .. நிச்சயம் எட்டுவான் ... தந்தை செய்து முடிக்காத .. நாற்காரியத்தை -மகன் நிறைவேற்றியே ..... ஆகவேண்டும் .....!!! & கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை
-
- 0 replies
- 954 views
-
-
பொம்மைகள் கொன்றெறியப்பட்டவெளியில்அழுகைப் பெருக்குப் படிந்த விழிககளுடன்காணாமல் போகச்செய்யப்பட்ட தந்தைக்காய்காத்திருக்கும் ஏதுமறியாச் சிறுமியேஉன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்துருவேறிய துப்பாக்கியைஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்அவர்களின் தேவைபிள்ளைகளைத் தேடும்எண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவேசிறையிலே முதுமையடையுமொரு மகனுக்காய்வீழ்ந்து புறளும் தாயேஉன் ஒடிந்த தேகத்தில்உடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியைஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்அவர்களின் தேவைஆட்களற்று இராணுவம் விதைக்கப்பட்டிருக்கும்ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்கஅகதிமுகாமொன்றில் தவமிருக்கும்மெலிந்துருகிய குழந்தையேஉன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியைஏனெனில், நம்மை அகதிமுகா…
-
- 0 replies
- 954 views
-
-
-
உவகை கொ(ல்)ள் மனம் உன்னை நினைத்து .. உயிரில் கலந்து நீரில் கலந்த உப்புபோல் .. என்னுள் என்றும் உறைத்து இருக்கும் பனி நீ .. என் வெப்பம் தாங்காமல் .. விலக கூடாது பெண்ணே .. யான் நேசிப்பது உன் இதய அறையில் ஒரு இடம் .. கிடைக்குமா என் கல்லறை கட்ட அங்கு என்றே .. இறுதிவரை உன் மூச்சுப்பட்டவது சிலவேளை நான் .. உயிர்தெழகூடும் உறங்கிய ஒரு சிறு விதையாய் .. நீ சிந்தும் கண்ணீரில் இருந்து நான் மெதுவா வளர ... உன்னுடன் வாழ்த்த காலத்தை நிழலா உனக்கு தர ... இருவரும் அடிக்கடி சந்தித்த குளத்தடி ஆலமரம் போல் .. நான் மட்டும் போரில் மரணிக்காமல் இருந்திருந்தால் .. காதல் வாழ்த்து இருக்கும் மங்கலமா .. நீனு ஏன் இப்பொழுது வாழவேண்டும் அமங்கலமா .. நல்லவர்கள் நாலுபேர் வாழ்த்த…
-
- 5 replies
- 952 views
-
-
TODAY IS MY LOVELY MOTHER'S 95TH BIRTH DAY. MISSING YOU AMMA. மறக்க வில்லை அம்மா நான் வண்டி இன்னும் வரவில்லை. மாறவும் இல்லை அம்மா நான் வளமைபோல் பயணக் காசோடு வாசலில் வந்து காத்திரம்மா 1 அம்மா * போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா தும்மினேன் அம்மா. அன்றி என்னை வடதுருவத்தில் மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ? அம்மா அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள் நம் முற்றத்து மரங்களில் மீண்டு வந்து பாடுதாம் உண்மையா? தம்பி எழுதினான். வலியது அம்மா நம்மண். கொலை பாதகரின் …
-
- 3 replies
- 952 views
-