கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
விழியோரங்கள் அரும்பிய நீர் துடைத்து கயிற்று நிரைகளுக்குள் அடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் நடுவிருந்து கண்கள் அவனையே நோக்குகின்றன..! பின்புலத்தில் சீறிப் பாயும் புலியா யாழ் இந்துவின் உண்மைப் புதல்வனா தாய் தமிழீழத்தின் செல்லப் பிள்ளையா மக்கள் விடுதலையின் ஒற்றைக் குரலா... கேள்விகள் அவன் கோலம் கண்டெழுகின்றன..! சின்னஞ்சிறுசுகளின் மாமா.. எங்கள் அண்ணா உங்கள் தம்பி பலரின் பிள்ளை சிலரின் எதிரி சிந்தனை ஒன்றை வைத்து உண்ணா நோன்பிருந்து மக்களை துயில் எழுப்பிக் கொண்டிருந்தான்..!! கனவுகள் அவன் தனக்காக கண்டதில்லை..! சனத்துக்காக தன் சாவிலும் கூட மேலிருந்து விடுதலையை காண்பேன் என்றே மொழிந்தவன்... தேகத்தையே தேசத்தில் பிள்ளைகள் படிக்க கொடுத்தவன…
-
- 9 replies
- 944 views
-
-
கட்டு இளகி மொட்டவிழ்ந்த புன்னகைப் பூ இதுவோ சிட்டு அவள் இதழ் கவிழ்ந்த-தேன் கிண்ணம்தான் இதுவோ முத்தாக மின்னுகின்ற-பல் மாதுளைதான் அதுவோ கண்களின் கருமையது கருவண்டுதான்அதுவோ தென்றலிலே தவள்ந்துவரும் தெம்மாங்குதான் அவளோ சத்தமிட்டு எனை முத்தமிட்ட-தமிழ்க் கவிதான் அவளோ
-
- 3 replies
- 944 views
-
-
காற்றும் வறண்டு கிடக்கும் இதுபோன்ற ஒரு கோடையில் தான் உனை பிரிந்தேன். உனைப்பிரிந்த அந்த காலம் புல் நுனிகள் கருகிய அந்த காலம் காலமாகிப் போய்விடாமல் கிடக்கிறது. அன்று, உயிப்பூவிதழ்களின் சாயங்களை வெளுறவைத்த பெரும் கோடையின் கோபம் நரம்புகளின் பச்சையத்தை தீண்டவே இல்லை........ இன்று, விழிப்பூவிதழ்களில் எழுகின்ற வாசம் தளம்பல்களை தந்தாலும் கோடைக்கு முன்னான அந்த இளவேனிற்காலத்தின் படிமங்களை மீட்டுகின்றன.......... வற்றிய குளத்தின் நிலப்பொருக்கிடைகளில் மக்கிக் கிடக்கும் சிறுவெண் நண்டுக்கூடுகளாய் காதல் உனக்குள்ளும் இருக்க கூடும் இன்னும், எனக்குத்தெரியும் இருந்தவரை நல்ல காதலியாக இருந்தவள் நீ. எனக்குத்தெரியும் பிரியும்வரை அன்பை பொழிந்தவள் நீ …
-
- 8 replies
- 944 views
-
-
இனிய வணக்கங்கள், வடலிபதிப்பகம் மூலம் வாங்கிய வசீகரனின் 'தமிழர் திருநாள்' புத்தகத்தை வாசித்தேன். வாசிச்ச அரைவாசியில... உணவு அருந்தச்சென்றபோது சுமார் பத்துவருசங்களின் முன்னர் நான் 'பகிடிவதை' எனும் தலைப்பில எழுதின கவிதை ஒன்று திடீரெண்டு நினைவில வந்திச்சிது. அதை உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன். பகிடிவதை ஆவென்ற ஆகாசம் வாயினுற் போய்ப்புத்தி பாவென்று பன்னீரால் கால்கழுவிக் கலையாட பூவொன்று தோன்றி புத்தாடை தான்கேட்கச் சோவென்று பெய்தமழை சொக்கிப்போய் நின்றது! நீர்கண்டு மாங்கன்று கிளைவிட்டுப் பழஞ்சொரிய ஊர்நண்டு உயில்காட்டி வேரினுள் இடம்தேட பார்வண்டுப் பிள்ளைகளும் விதையுள் விளையாட சீர்கொண்டு வந்தகன்று கண்ணீர் விடுகிறது! வாழா வெட்டியிவன்! வாடிய மட…
-
- 0 replies
- 944 views
-
-
கடல் நுழையும் மணற் பதுங்குகுழி ஒரு பக்கத்து வானத்தில் பெருந்துயர் மிகு சொற்கள் எல்லாருக்குமான பாவங்களைச் சுமக்கும் சனங்களின் குருதி மிதக்கும் துண்டுக் கடலில் கறுப்பு இரவு திரிகிறது. எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து கழித்து ஓ.. என்ற பெரும் மூச்சை மணல்வெளியில் புதைத்தாய் வானம் தாறுமாறாய் கிழிந்தது. சப்பாத்துகள் நெருக்கி கடலில் தள்ளிவிடத்துடிக்கும் ஒரு துண்டு நிலத்தில் எச்சரிக்கப்பட்டிருக்கும் வாழ்வு மணல் போல உருந்துபோகிறது. எல்லாவற்றையும் இழந்து ஒடிவரும் இரவு சிக்கியது மிருகத்தின் வாயில் எறிகனை கடித்த காயத்திலிருந்து கொட்டும…
-
- 1 reply
- 943 views
-
-
மேலும் ஒரு முயற்சி தமிழ் நிலவன் - கைக்கூ கவிதைகள் புத்தர் சிலைக்கு நடுக்கல் நடாதீர்கள் நாம் கீழே புதைந்து கிடக்கிறோம்.. -----முள்ளிவாய்க்கால் புதையுண்ட குழந்தைகள் ------------------------ மாவீரர் கல்லறைக்கென்று பெருமைப்பட்டோமே நாம் இன்று அங்கே ஆடுகள் உறங்க்குகிறதே...! ------கார்த்திகைப்பூ ----------------------- புதைந்த உடல்களுக்கருகில் எங்களால் உறங்கமுடியவில்லை எமை சிறைமீட்க வாருங்கள்....! ------துப்பாக்கிகள் தமிழ் நிலவன்....
-
- 0 replies
- 943 views
-
-
கலோ புத்தா.. கவ் ஆர் யூ கலோ அல்கா கவ் ஆர் யூ.. புட்டும் தேங்காய்வும் புழுத்து மணக்குது புத்தனும் அல்காவும் குத்துப்படுவமே... பார்வைக்குத் தான் இது வெளிக் குத்து உள்ள இருக்கு நல்ல உள் குத்து..!! முள்ளிவாய்க்கால் இரத்த சகதியில் பால்சோறு பொங்கினம்.. ஐநா சபையேறி புத்தனின் கோரப் பற்களை கழுவியும் விட்டம்.. பாகிஸ்தான் வரை பறந்து மல்டி பரலும் டபக்கென்று அனுப்பச் சொன்னம்.. நாடு முழுதும் காட்டிக் கொடுப்பில் காலமும் கழித்தம்.. கூட்டு அழிப்பில் கூலிப் படைகளை தந்தும் வந்தம்.. ஊர்காவல்..ஜிகாத் என்று கூடவும் அலைஞ்சம்.. …
-
- 0 replies
- 943 views
-
-
தூத்துக்குடி முத்தே தென்பாண்டி துறைமுத்தே ஆத்தூர் கொழுவநல்லூர் ஆண்மை தமிழ் மகனே காத்து தமிழ் இந்தக் காசினியில் நிமிர வைக்கத் தீய்த்து வதை தீயில் சிதைந்து துடித்து இறந்தாய் சோத்தி உதிரிகளும் துணிந்தேழுந்தோம் மறவர்களாய் கோத்து கைமோதி குவலயத்தில் தமிழ் அரசு பூத்திடவே வைப்போம் புலியே முத்துகுமரா ஏத்தி தொழும் ஈழம் என்றும் ஒளிக் கோபுரம் நீ தமிழோசைக்காக கணியன் நன்றி www.Tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...7&Itemid=68
-
- 0 replies
- 943 views
-
-
அன்புக்கொரு அடைக்கலமாய் அண்ணான்னு அழைத்திடும் மழலை மொழியாள் செந்தமிழாள் அஞ்சரன் அவன் தங்கை. வெந்தனள் போகினள் பூமகள் வெறுமையின் வெளிக்குள் அண்ணனை தள்ளி. ஆற்றுதற்கு வார்த்தைகள் இல்லை இவ்வுலகில்..! கேடும் தீதும் கொண்டு மனிதர் தாம் வருவதில்லை இவ்வையம்.. வந்த இடத்தில் கற்றுக்கொடுக்கிறார் அதை..! பாசத்தை நேசத்தை மனிதத்தை தொலைத்த மிருகங்களாய் சக மனிதர் தம் உணர்வுகள் சாகடிக்கும் நிலையில்.. தங்கமடா அவள் கை என்றே பற்றித் திரிந்த தங்கை ஒன்றை எப்படிக் காப்பான் இவ்வுலகில் ஓர் அன்பு அண்ணன்...?!
-
- 2 replies
- 943 views
-
-
சிங்களமே உனக்கு சொல்கிறேன் நீ எங்கள் சொந்தமில்லை வன்னி முற்றமும் உன் சொந்தமில்லை விட்டு போய்விடு உன் வீட்டுக்கு வைப்போம் உன் தலைகனத்திற்கு வேட்டு குடும்ப அரசியலுக்கு குத்து விளக்கு ஏற்றாதே சிங்களமே பின்பு உன் குடும்பம் அகதியாகிவிடும் ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடும் பொன்சேக பொடியாகிவிடுவான் கோத்தபாய உன் வீரம் நிலத்தடி சுரங்கத்திலா பொன்சேகா வீட்டு கோடிபுரத்திலா மகிந்தவின் வாடகை வீட்டிலா உன் வீரம் காட்ட வாங்கய்யா பிரபு வன்னிக்கு தமிழச்சி உனக்கு சீதனமா .. நாயே எண்ணாதே பேய்த்தனமய்..வெறீ நாயே தருகிறோம் உனக்கு காலக்கெடு எண்ணி எண்ணி சாவையெடு
-
- 0 replies
- 942 views
-
-
""""குழி வெட்டும் மகிந்தா..."""" ஏய்... மகிந்தா ஏன் நீ மரணத்தை கண்டு மிரண்டோடுகிறாய்....??? உயிர் மீது உனக்கித்தனை ஆசையா...??? பாவி உயிர்களை பகலிரவாய் பறித்தாயே அது மறந்தா நீ பதுங்கு குழி வெட்டுகின்றாய்...?? வெட்டு நல்லாய் வெட்டு ஆழ கிடங்கெடுத்து அழகாய் நீ கட்டு.... அட முட்டாளே உனக்கு தெரியாதா அது தானே உனக்கு புதை குழி... இப்போ எங்கு ஓடுவாய்...??? - வன்னி மைந்தன் -
-
- 1 reply
- 942 views
-
-
அப்படிப் பார்க்காதே மகளே! - கவிதை திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் - ஓவியங்கள்: ரமணன் நுரைத்தப் பழங்கஞ்சியாய்ப் புளிப்பேறிய வயோதிகத்தின் இரவு ஒரு பாராங்கல்லாய் மார்மீது படுத்துறங்குகிறது எப்படி இறங்கச் சொல்ல... எப்படி இறக்கிவிட? பாதரசம்போன கண்ணாடி எனது முகத்தைக் காட்டி இன்றோடு இருபது வருடங்கள் ஆகிவிட்டன மகளே. கறையான் அரித்த நமது குடும்பப் புகைப்படத்திலும் நீ பார்த்திருக்கக்கூடும் துருவேறிய எனது மிருகக் கண்களை மட்டும். `இடுப்புல ஆறு மாசம் வயித்துல மூணு மாசம் பப்பாளி, எள்ளு, அன்னாசிக்கு தப்பித் தளச்சவடி நீ' என்ற கதையைக் கேட்கும்போது என்னென்ன நினைத்திருப்பாய் மகளே? அப்படி என் வயிற்றைப் பார்க்காதே மயானத்துப் புழுக்க…
-
- 1 reply
- 942 views
-
-
உன்னை எழுதுவதைவிட உன்னை வாசிப்பதில்தான் அதிக ஆர்வம் எனக்கு * உனக்காய் கவி எழுத கற்பனைக் குதிரையை தட்டிவிட்டேன் அது உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது * என் கண்கள் காட்டிக் கொடுத்ததில் துரோகமில்லாத ஒன்று என்றால் அது உன்னைக் காட்டிக் கொடுத்தது மட்டும்தான் * நீ குளிக்கையில் தண்ணீரோடு நானும் குளிக்கிறேன் * உன்னைக் கவிதையாய் வெளியிட விரும்பி இன்றுவரை உன் கண்களை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 942 views
-
-
இதுவரை நான் எந்தக் கவிதையையும் சுட்டதில்லை உன் பெயரைத் தவிர * என் கற்பனைகள்தான் அதிகமாய் வாசகர்களுக்கு காட்டிக் கொடுக்கிறது உன்னை நான் கவிதையாய் காதலிப்பதை * உன் சேலை நழுவுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது விழுந்து விடுவேனோ என்று * நீ எனை காதலிக்கிறாய் என்பதை கேக்க காத்திருக்கவில்லை நீ என்னை காதலிக்கவில்லை என்பதையாவது கேக்கத்தான் காத்திருக்கிறேன் * நீ எது கேட்டாலும் சொல்வேன் உன் அழகுகளில் எந்த அழகு பிடிக்கும் என்று கேட்டால் மட்டும் சொல்லமாட்டேன் சொன்னால்... உன் எல்லா அழகுகளின் கோவத்துக்கும் ஆளாகிவிடுவேன் காதல்பித்தன் -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 942 views
-
-
1 மாலை நேரக்காற்று முன்னிற்க மணநாளில் பவ்யமாய் விடை பெறுகிறாள் மணப்பெண் அவளது பர்தாவுக்குள் முகம் புதைத்தபடி மலர்களின் வாசனையோடிணைந்த புணர்ச்சியைப் போதிக்கிறாள் தமக்கை. தானே அறிந்திராத தடித்த புத்தகத்தின் பக்கங்களை துரிதகதியில் புரட்டுகிறாள் எந்த நாளில் புணர்ந்து கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும் ஹராமாக்கப்பட்டதெனவும்* கூடவே புணர்ச்சிக்குப் பிந்தைய சுத்த பத்தங்களையும் தன் குள்ள உருவத்திற்கேற்ற குற்றக் கண்களில் குறுக்கிடுகிற வாழ்வின் சுகவீனங்களையும் நைந்து போன புணர்ச்சியின் வெற்றுச் சூத்திரங்களையும் தனக்குள்ளாக ஒளித்தபடி அவ்வப்போது வெட்கத்தில் துவண்டு விழுகிற வார்த்தைகளை சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையு…
-
- 1 reply
- 942 views
-
-
எழுந்தோடு....... ஏனடா வருகிறாய் ஏறியே சிங்களா எங்களின் எல்லையில் உனக்கென்ன வேலடா....??? சத்திய வேள்வியில் செத்து மடிந்திட்ட வேங்கைகள் எத்தனை... இத்தனை இழந்தோம் விருட்சமயானோம் தேசத்தை என்ன விட்டிட்டு ஓடவா....??? எரிமலை ஆகியே எழுகிறோம் நாங்களே இனி -தீயினில் பொசுங்குமே உங்களின் அரண்களே... எங்களின் வீரரை என்னென்று நினைத்தாய்...?? கோழையர் என்றா கொக்கரித்து சிரித்தாய்... இந்தோ வருகிறோம் இறப்புனக்கெழுதவே இனியும் நிற்காதே எழுந்தின்று ஓடடா... எத்தனை காலங்கள் எம் மண்ணை ஆழ்வாய்...??? இனியும் பார்த்திட நாமென்ன பைத்தியகாறறா....??? அந்நியா எமக்கு அடிமை சாசனம் எழுதவா முனைந்தய் எழுந்தே ஓடடா... …
-
- 2 replies
- 941 views
-
-
இயல்பினைக் கடந்த திடத்துடன், இயற்கையை வென்றவர்கள்...! எப்பொழுதும் இறப்பதில்லை!!! அறத்தினை மீறிய உலகிற்கு, வீரமறவர் எனத் தமைக் காட்டியோர்...! தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்!!! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள், புலத்தினில் புதிதாய் கதைகள்...! உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்??? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும், எம் பரம்பரை உம்மைத் தொடரும்...! உம் இலட்சியம்............. அடையும் வரை!!! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்! on Saturday, 27 November 2010 at 02:57 [ 2010 இல் எழுதியது ]
-
- 1 reply
- 941 views
-
-
கடிதங்கள் எழுதுவதில் ஒரு இன்பம். வாழ்த்துமடல் வாங்கி அனுப்புவதிலும் ஆர்வம். பி யோனை எதிர்பார்ப்பதில் ஒரு சுகம். தந்தி வந்தால் ஒரு ஏக்கமும் பட படப்பும். கள்ளமாங்காயின் ருசிக்கு இன்னொரு உணவா? கள்ள இளனி ஒரு தேனாமிர்தம். கள்ள மரவெள்ளி சுட்டால் தனி இன்பம். புத்தகத்தினுள் சினிமா எக்ஸ்பிரஸ் படிப்பது. பள்ளிக்கூடம் கட் அடித்த சினிமா. ஊரின் தெருக்கள் கூட்ட பெல்பொட்டம். சோடாபெட்டி கூனிங்கிளாஸ் போட்டகாலம். 20 இஞ்சிக்குமேல் கீல்ஸ் போட்டு விழுந்தகாலம். கிப்பிதலைமயிர் வளர்த்து சடையுடன் திரிந்த காலம். நாவற்பழம் பெறுக்க ஒரு கூட்டம். படிப்பதில் போட்டி போட்ட காலங்கள். சுழட்டலுக்கு ஒவ்வொரு குழுக்களாய் செல்வது. பீடிக்கொம்பனி தொழிலில் ஒரு ஆர்வம். நெசவுசாலை பெண்களுக்கு என ஒரு …
-
- 1 reply
- 941 views
-
-
எல்லா காலங்களினது உழைப்பையும் ஒன்று திரட்டி சேகரித்த விதைகளை பயிரிடும் சற்றுமுன் தீர்ந்துபோன விதைப்புக் காலத்தின் கடைசி பின்மாலைப் பொழுதில் அஸ்தமன சூரியனின் இளஞ்சூட்டில் நெளிவெடுத்து வருடும் காற்றில் தலையசைத்து சிரிக்கும் நெற்பயிருக்கு தீங்கொன்றும் நேரா வண்ணம் வழிநெடுகிலும் கையில் உள்ளதை சிந்திச் சிதறியபடி செலகிறேன் பசித்திருக்கும் பறவையின் கூடுவரை.., நகரத்தின் பல்லிடைச் சக்கரத்தில் சக்கையாய் சிதறுண்ட வாழ்க்கையின் எஞ்சிய சிறுதுரும்பின் உயிர்நீட்சிக்காய் கனவுச் சிறகுகளை களைந்துவிட்டு மீண்டுமொரு விதைப்பு காலத்திற்காக தேடல் துவங்குகிறது..... ~ராஜன் விஷ்வா
-
- 9 replies
- 941 views
-
-
எல்லாம் உயிர்பெறும் ச.ச.முத்து எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். எங்கே அந்தக் கவிஞன்? இங்கேதான் நின்றானே.-யாரும் பார்த்தால் மெல்ல என்னிடம் காதருகில் சொல்லுங்களேன். வன்னிமண்ணின் மொத்தஅழகும் நந்திக்கடலின் அலைவடிவும் அழகான என் தேசத்து எழில்அனைத்தும் அவன் இல்லாமல் எப்படியாய் உறைந்து கிடக்குது பாருங்கள்.-கால் படர்ந்த கல் எழுந்து அகலிகை ஆனதுபோல் அந்தக் கவிஞன் எழுதி என் தேசம் எழுந்து வரட்டுமே. மூச்சும் பேச்சும் இன்றி ஒரு மூலையில் கிடந்துவி;ட்டு போய்விடலாம்.-ஆனால் அவன் பாட்டும் சந்தக் கவியும் இன்றி எப்படியாய் காலம் இனிக் கரையும்.? எதிரிராணுவத்தில் சின்னஓய்வுப்பொழுதில் …
-
- 2 replies
- 940 views
-
-
அன்பின் நண்பனே... பட்டாம்பூச்சி பெண் என்னை விழிகளுக்குள் சிறைபடுத்தி கொண்டாய் ... எப்போது விடுவிக்கப் போகிறாய்... உன் நெஞ்சை மஞ்சமாக்கி துயில் கொள்ள என் நெஞ்சம் கெஞ்சுகின்றதே... எப்போது என்னருகில் வரப்போகிறாய்... விழி மூடி தூங்க முயற்சித்தால் இமைகளுக்குள் வந்து இம்சிக்கிறாய்... எப்போது தூக்கம் தரப்போகிறாய்... மயக்கும் சிரிப்பிலும் வசீகர குரலிலும் உயிரை வசியம் செய்தவனே... எப்போது என்னுயிரை திருப்பி தரப்போகிறாய்... சிரிக்க வைத்து ரசிக்க வைத்த என் நண்பனே எப்போது என்னுள் நுழைந்தாய் காதலனாக... நண்பன் காதலனான கதை இருக்கட்டும் அன்புக்காதலா எப்போது மீண்டும் என் நண்பனாகப் போகிறாய்... அறுசுவை.- அனுதீபா
-
- 0 replies
- 940 views
-
-
எட்டி உதை தருவீரா ?? தேனினும் இனிய தெள்ளு தமிழில் தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன் பாவிசைக்க வந்தாலும் பக்குவமாய் பாடுவேனா ?? தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!! ஏறுமுகமாய் இருந்தவேளை பருத்தி விற்றது என்நகரம் அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய் நிரைகட்டியது ஒருகாலம் சுவையான வடையும் என்நகரில் சுவைக்கவே ஓடிவருவர் அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு என்பெயர் மைத்திரேயி !! ஆவலாய் வந்தவளை அள்ளிக் கொள்வீரா ?? இல்லை..... எட்டியே நின்று எட்டி உதை தருவீரா ? மைத்திரேயி 02 / 01 / 2013 பி .கு :இது நான் முதல் எழுதி அரிச்சுவடியிலை போட்டனான் . வாசிக்காத ஆக்களுக்கு திருப்பி போட்டிருக்கிறன் .நிர்வாகம் இது பிழையெண்டால் எடுத்துவிடுங்கோ.
-
- 11 replies
- 940 views
-
-
அம்மாவுக்கு - வ,ஐ,ச,ஜெயபாலன் (1985) . அம்மா தங்கக் கனவுகளை இழந்த என் அம்மா. எனக்கென வரலாற்று நதியின் படுக்கையில் நீ கட்டிய அரண்மனை யாவும் நீருடன் போனது. . இன்று கோவில்கள் தோறும் கைகளைக் கூப்பி "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என இறைவனை வேண்டும் என்னுடைய அம்மா. .. யாழ்ப்பாணத்து செம்மண் தெருக்களில் வன்னிக் காட்டின் வயல்வெளிப் புறங்களில் கீழ் மாகாணத்து ஏரிக்கரைகளில் முகம் அழிந்த பாதி எரிந்த பிணங்களைப் புரட்டி தங்கள் தங்கள் பிள்ளையைத் தேடும் அன்னையர் நடுவில் . தமிழகத்தில் இன்றுநான் உயிருடன் இருப்பதை அறிந்து பாக்கியம் செய்தவள் என மனசு நிறையும் என்னுடைய அம்மா! . இப்படியுமொரு காலம் வந்ததே நம்முடைய மண்ணில் . இன்று உனக்கு நான் கதைகள் சொல்வேன் மரணம் பற்றிய கதை…
-
- 0 replies
- 940 views
-
-
மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள் தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது. மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது கூடவே மாயையும் கரைந்துபோனது நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம் எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல் தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன எங்கும் பரந்த முடிவற்ற வெளி ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒ…
-
- 6 replies
- 939 views
-
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் துரோகி கருணாய்நிதிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடு ஊரில் நச்சுமரம் காய்த்தென் பயன். வாழ்கின்றபோதே நீ பிணமானவன். உன்னை பெற்றவளும் பாவியே கருவில் உன்னைக் கலைக்காததால் சகுனி உன் செயலால் நல்லவனான்இளவலுக்கு முடிசூட்ட பலியான உன் இனம் எத்தனை எத்தனை கேடு கெட்டவனே வெள்ளைத் தோலில் உனை மறந்த காமுகனே அந்நய மோகத்தில் உனை மறந்தாயோ? காத்திருக்கின்றோம் புதிய தீபாவளிக்காய் இரணியன் மறைந்ததிற்கு தீபாவளி நீ இறக்கபபோகும் நாள் எமக்கு இன்னோர் தீபாவளி இந்த எட்டிமரம் பழுத்தாலென்ன இல்லாவிட்டால் என்ன
-
- 2 replies
- 939 views
-