Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by இனியவள்,

    யாரோ உன் கவிதைக்கு கை தட்டுவது எனக்கும் கேக்கிறது ஆமாம் ; அது உன் காதல் கவிதை என்பதால் இனியவள்

  2. யாழ்கள உறவுகளுக்காக மீண்டும் காதல் மொழி இசைத்தொகுப்பில் இருந்து ஓர் புதிய பாடல் உங்களுக்காக... http://vaseeharan.blogspot.com/ இங்கே அழுத்துங்கள் பாடலைக் கேட்கலாம் பல்லவி பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு காலையிலும் தினம் மாலையிலும் நீ காதல் மொழியைப் பேசு (2) மலர்களின் மேலே மனம் மோதும் மௌனம் கூட கவிபாடும் பேசு பேசு பேசு நீ காதல் மொழியை பேசு இதயக் காதல் மொழியில் கொஞ்சம் கொஞ்சும் இசை கலந்தால் நெஞ்சம் குளிருமடி உலகம் இனிக்குமடி சரணம் 1 காதல் மொழியைப் பேசும் இதயம் கோடி முறை பிறக்கும் உள்ளத்தின் கூட்டில் உலகத்தை சேர்த்து புத்தம் புது உயிர் வளர்க்கும்(2) எழுத்தின் வடிவம் உணரும் முன்பே எழுந்தது காதல் மொழி …

    • 22 replies
    • 2.8k views
  3. எல்லாரும் ஊருக்கு போகினம்..!!! நாங்கள் எப்ப ஊருக்கு போறது? எல்லாருக்கும் இருக்கும் ஆசை எங்களுக்கும் இருக்கு..! கோயில் திருவிழா தங்கையின் சாமத்திய வீடு அண்ணாவின் கலியாணம் எல்லாரும் போகினம் நாங்கள் எப்ப போறது? எங்கட கடற்கரை வெண்மணல் புட்டி கரைவலை மீன் ஒடியல் புட்டு லுமாலா சைக்கிள் எல்லாருக்கும் இருக்கும் ஆசை எங்களுக்கும் இ்ருக்கும் தானே..! நெஞ்சு கனக்கும் நினைக்கும் போது மனசு வலிக்கும். எல்லாரும் ஊருக்கு போகினம் நாங்கள் எப்ப போறது? தமிழ்ப்பொடியன் 4/06/2013

    • 22 replies
    • 1.9k views
  4. Started by துளசி,

    காதலிக்கிறேன் என்றாய்... பல பல பொய்கள் புனைந்து புகழின் விளிம்பில் இட்டு சென்றாய்... காதலில் இது சகஜம் என நினைத்தேன்... இன்று நீ... அதையே வேறோருவளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாய்.... சற்றும் மாறாமல்.....

  5. Started by Mayuran,

    அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம். அம்மா!!! 2008ம் ஆண்டு அன்னையர்நாளின் போது தமிழ்க் காற்று வானொலியூடாக ஒலிபரப்பப்பட்டது. 2010 அன்னையர் நாளின்போது லங்காசிறீ இணையத்தளமூடாகப் பிரசுரிக்கப்பட்ட கவிதை. http://inuvaijurmayu...rch/label/கவிதை http://www.poems.lan...567&pidp=202577

    • 22 replies
    • 1.5k views
  6. வளர்ந்து விட்ட தென்னை வாடியது-தன் உடலைப்பார்த்து! தான் இழந்துவிட்ட ஓலைகள் எத்தனை... எண்ணிப் பார்த்தது வடுக்களை... கீழே வீழ்ந்து விட்ட ஓலையொன்று ஆறுதல் சொன்னது! வந்து போகும் சொந்தம் யாவும் நிலைப்பதில்லை எனது வீழ்ச்சியிலும் உனக்கு வளர்ச்சியுண்டு! இழப்பின் வடுவை-நீ பாராதே.... தவித்திருக்கும்-மானிடர்கு இளனீர் கொடு...! உன் பிறப்பின் நோக்கை அறிந்துவிடு... அதனால் வடுவை பாராதே வானை நோக்கி-இன்னும் வளர்ந்து விடு..!

    • 22 replies
    • 3.4k views
  7. என் திருமணம் கூடக் காதல் திருமணம் தான். கணவர் காதலராய் இருந்தபோது வெளிநாடு சென்றுவிட்டார். அப்போது நான் கொண்ட தவிப்பை இன்று நினைத்துப் பார்த்தேன். இக்கவிதை வந்தது. காதலர் தினம் எனக்குப் பழசாக இருக்கலாம். கவிதை புதிது. கற்பனையில் எண்ணியவை உன்னிடம் கண்டதனால் காதல் கொண்டேனடா காலமெல்லாம் காத்திருந்து உன்னைக் கண்டேனடா கண்ணிமை மூடினும் என்முன்னே நின்று காதல் செய்கிறாய் காதினிக்க வந்து காதல் மொழி பேசுகிறாய் கயவனே உன்னைக் காணாதிருந்திருந்தால் காலமெல்லாம் நான் கற்பனையில் வாழ்ந்திருப்பேன் கண்டதனால் நிதம் என் உயிர் துடிக்க நினைவு நிதம் வதைக்க நேர காலம் தெரியாது நெகிழ்ந்து போய் கிடக்கிறேன். நெருப்பாய் இருந்தவள் நெக்குருகி நிற்கிறேன் நெஞ்சம்…

  8. மருத்துவரின் மனச்சாட்சி...... இளங்கவி - கவிதை குண்டு மழையில் நின்று..... குருதி ஆறு பாயக்கண்டு..... தம் தூக்கம் தனை கலைத்து பல உயிர் காத்தவர்கள்...... இன்று அவர் பின்னால்...... தலையை குறிபார்க்கும் துப்பாக்கி..... நீயும் புலியா?.... எனும் கேள்விக்கணை..... இப்படிச் சொல்லெனும் பயமுறுத்தல்...... இல்லையேல் கொலையின் அச்சுறுத்தல்...... இப்படி அனைத்தும் நிற்க,..... அதிகாரமோ மிரட்டி நிற்க..... அவர் எப்படி உண்மை சொல்வார்...! தம் உறவுகளின் உயிரைகொல்வார்...! இறுதிவரை தமிழுக்காய் சேவைசெய்த அற்புதர்கள்...... இன்று எதிரியின் கைகளிலே சிக்குண்ட நம் காப்பரண்கள்..... இன்னும் பல உயிர்காக்கும் சேவைகொண்ட மருத்துவர்கள்..... …

  9. அந்நியர் வந்து பாத்திடும்போது அதிசயம் தானே பூத்ததடா! கவி சொன்னவர் பலர் பார்த்திடும் போது ஆகாயம் தானே பார்த்ததடா புலி ஆகாயம் தானே பாய்ந்ததடா வென்றிடும் களம் நாடிச்சென்றதில்லை அங்கே குன்றிடும் மனம் என்றும் இருந்ததில்லை சென்றிடும் வீரர் கொன்றிடும் வரையிலும் ஓய்ந்ததில்லை களம் என்றிடும் வீட்டினில் கண் தூங்கவில்லை வெடித்திடும் குண்டும் பயம் கொடுக்கவில்லை பாயும் துப்பாக்கிச்சன்னமும் கூட துளைக்கவில்லை சாயும் வேங்கைகள் என்றுமே நமைவிட்டுப் போகவில்லை பாயும் கரும்புலிகூட சிரிக்கத் தவறவில்லை சென்றிடும் போதும் சிரித்திடும் முகம் பகை கொன்றிடும் போது கலங்குது மனம் என்றிவர் மனமாறுமோ, களம் தீருமோ …

    • 22 replies
    • 4.3k views
  10. கொலைக் களத்தில் கோல மயில்..... கவிதை - இளங்கவி.... மாஞ்சோலை ஒன்றிலே மாமர நிழலின் கீழ் மன்னவனின் மடியிலே மயிலொன்று படுத்திருக்கு..... மாங்கனிகள் பாரத்தில் கிளைகள் எல்லாம் நிலம் தடவ.... மயக்கும் விரல் கணையால் மடி கிடந்த பொன்மயிலின் மென் ஸ்பரிசம் அவன் தடவ... ச்சீ.. வேணான்டா.... கையை எடு.... நான் வீட்டை போப்போறன்.... இல்லை..இல்லை நாளைக்கு வயல் வேலை நான் வர மாட்டேன்டி.. அதனாலே இன்று உன்னை தொட்டுவிடப் போறேன்டி..... இல்லையடா... செல்லம் இது வேண்டான்டா... இப்போ நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால் நாம் வீட்டைபோவோம் இப்போ... சரியடி போவோம்.... காலையிலே எனக்கு என்ன சாப்பாடு கொண்டருவாய் நான் மண்வெட்டி பிடிக்கம…

  11. நான் துரோகி! நீயும் துரோகி! என்னையும் உன்னையும் பெற்ற பெற்றோர் துரோகி! பெற்றவரைப் பெற்ற பேரன்,பூட்டன் முப்பாட்டனாரும் துரோகி! அவன் துரோகி! இவன் துரோகி! அவனைத் தெரிந்த அவள் துரோகி! அவளுக்கு தெரியாமல் தெரிந்த அதுவும் துரோகி! கடல் துரோகி! காற்று துரோகி! கடலையும் காற்றையும் இணைக்கின்ற கதிரவன் துரோகி! கதிரவனை சுற்றிவருகின்ற பூமியும் துரோகி! கடவுள் துரோகி! கடவுளுக்கு கோயில்கட்டிய பக்தன் துரோகி! பக்தனுக்கு சோறுபோட்ட பக்தை துரோகி! பக்தையுக்கு பின்னால் அலைந்த பித்தனும் துரோகி! புத்தனும் துரோகி! பறவைகள் பல்லி பாம்பு பூச்சி புழுக்கள் அனைத்தும் துரோகி! நினைத்துப்பார்க்க நினைவில் வருகின்ற நினைப்பும் துரோகி! நினைப்பைத் தூண்டுகின்ற நரம்பு துரோகி!…

  12. இதே... சிவந்த‌ மண்ணில், புலியின்... ஒரு வெடிக்கு பயந்தோடிய... நாதாரிகள், இன்று... "இடுப்பில் கை வைத்து அதிகாரம்," பண்ணுகின்றார்கள். பொறடா... பொறு, உனக்கு... வட்டி, குட்டியுடன்... தர, ஒருவன் வருவானடா... அந்தச் செய்தியைக் கேட்ட பின் தான்... என் மூச்சடுங்கும்.

  13. என் மேனி விரல் நுனி கொண்டு உன் மேனி தடவ நாழிகையோடு - அது சூடாகி இதமாக நீ சிணுங்கும் ஒலியதில் உன்னாசை நானுணர்ந்து மெல்லத்தட்டி... வரிகளில் நான் பேச வாக்கியங்கள் நீ அமைப்பாய். ஆண்டுகள் நாலு நமக்குள் இந்த ரகசிய உறவு நாம் பேசியவை பரகசியமாக.. ரசிக்கவும் விமர்சிக்கவும் நாலு நல்லவரும் உறவுகளும் உண்டு வையகத்தில்..! எம்முறவு கண்டு எம் பேச்சில் குருதி அழுத்தம் கூடியோரும் சினங்கொண்டு திட்டியோரும் நிறையவே உண்டு. அசிங்கம்.. பப்பிளிக்கில.. இப்படியுமா.. ஆற்றாப் போக்கில் பேசியோரும் உண்டு..! என் விரல்களின் நளினம் நீயறிய உன் சிணுங்களின் தேவை நான் உணர நீயும் நர்த்தனமாடி சதா மகிழ்விக்கிறாய் ஒலியாய்.. ஒளியாய் வரியாய் வசனமாய் யாழெனும் மங்கையின் சேலையி…

  14. சீமைக் கிளுவைக்குள் சீவியம் செய்தவள் சீமைக்குப் புறப்பட்டாள் சீறி எழுந்த சிறீலங்கன் எயார் லைன்ஸில்..! கூலி கொடுத்து தாலி வாங்கி வேலி போட்டனள் நாணி நின்றவள் கூனி நிற்பாள் என்று..! மாதம் பத்து சும்மா இருந்தவள் சுமந்தனள் சுமைகளோடு சுதந்திரக் கனவு..! தாலி பிரித்து வேலி தாண்டி நடப்பது பகற் கனவு கண்டனள் ஏங்கினள்.. படிதாண்டிப் பத்தினியும் பரத்தையானதில்..! சீமையில் சீதனம் சீர் தனம் சீ சீ.. என்பதில் சிந்திக்க இருக்கு சில சுயநலம்.. அதில் அடங்கி இருக்கு பலவீனம்.. பண வீக்கம்..! சீமைச் சிறப்புக்குள் சீரழியும் இயற்கைக்குள் சீமைக்கிளுவைகள் சீர் பெறுமா..??! விடை தேட ஆணும் பெண்ணும் எங்கே..??! கலந்தடி…

  15. உன்னை மறப்பதும் .... இறப்பதும் ஒன்றே ...!!! தோப்பில் இருந்த ... மரங்கள் வெட்டப்பட்டு ... தனிமரம் நிற்பதுபோல் .... உன்னை இழந்து தனியே .... நிற்கிறேன் .....!!! காதலில் தோற்ற .... ஒவ்வொரு இதயம் தீயில் கருகிய இதயம் ... மீண்டும் துடிக்க விரும்பாது .....!!! ^ காதல் தோல்வி கவிதைகள் ------------ மறுத்தால் மன்னித்துவிடுவேன் மறந்தால் மரினித்து விடுவேன் ------------ கவிப்புயல் இனியவன்

  16. ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்.. ---------------------------- பூக்களைப்பிய்த்தெறிந்த காற்றுக்கு தெரியப்போவதில்லை பூக்கள் மென்மையானவை அழகானவை அன்பை பரப்புபவை என்று... ஆற்றாமையுடன் துவண்டுவிழும் இதயமொன்றின் பாடல்களைகேட்கும் பொறுமையும் அதற்கு இல்லை.. ஆயினும்... இதயத்தின்பாடல்களை கிழிந்து தொங்கும் இதழ்களின் ஓவியத்தை ஒடிந்த பல இறக்கைகள் சுமந்துகொண்டுதான் செல்லும்.. அவற்றில் ஒன்றாய் என் கவிதைகளும் பயணிக்கலாம்.. என் நேற்றைவரை எழுதி முடித்த விதிக்கிழவன் மார்பை பார்த்து என் மலர் மனதை பிய்த்தெறிய காற்றை ஏவிவிட்ட கதைக்கு நீதி கேட்க, அவன் எழுப்பிய ஆயிரமாயிரம் சிலுவைகளில் அறையப்பட்டு கனவழிந்து கண்ணீராய் செத்துப்போன காதல்களின் மொழியாய் பேச பூத்திருக்கலாம் என்கவித…

  17. சின்னதாய் ஒரு சிந்தனை பசிக்காக உண்டு வாழ் உணவு கிடைக்கபெறாதவர்கள் அதிகம் உண்மையாய் உழை வேலை இல்லாதவர்கள் ஏராளம் திறமையுடன் செயலாற்று வாய்ப்பு கிடைகாதவர்கள் ஏராளம் முயற்சி செய் வெற்றி பெற்றவர்கள் அதிகம் நம்பிக்கையுடன் வாழ் சாதித்தவர்கள் அவர்களே!!!

    • 22 replies
    • 4.9k views
  18. போய்வா காதலா போய்வா !!! என்னை பிடித்த என் காதலா..... என்னை சீண்டுவதிலே என்ன இன்பம் உனக்கு?? உள்ளம் குமுறியே ஊமையான நான் , பாடுவேன் என்று ஏன் நினைக்கின்றாய்?? உன் பார்வையில் நான் ஒரு கொடுமைக்காரி.... அப்படியே இருப்பேன் நான் உனக்கு. வார்த்தை ஊசியால் என் மனதை குத்துவதை விட்டுவிடு... என் மனம் பாறையாகி நாளாச்சு என்காதலா . எங்கள் காதல் வளரும் என்று எனக்குத் தெரியவில்லை ... என் கை பிடிக்க முதலே என் கண்ணீல் நீர் வருவது உனக்கு இன்பம்....... உன் நினைவை மறக்க நான் நினைக்கின்றேன் போய்வா காதலா போய்வா... நாம் நடந்த கடற்கரையில் என்கால் ஒற்றைத்தடம் பதிக்கும் ........ போய்வா காதலா போய்வா!!!! மைத்திரேயி 23 02 2013

  19. ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! http://www.worldtamilnews.com/ - Kural vadivam ingee. Kavithai Kelungal (new)-20.10.2008 உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! தொப்புள் கொடியில் பலமுறை தீப்பிடிக்கும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா? உங்கள் அரசியல் விளையாட்டில் எங்களைத் தோற்கடிக்காதீர்கள்! எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான் சொந்த இனத்தவனைக் நீங்கள் காத்திட …

  20. Started by ஜீவா,

    அந்த ஒற்றை மரம் பரந்துவிரிந்த கிளைகளுடன் விருட்சமாயிற்று பலருக்கு பலவாறு பிரயோசனப் பட்டது கூடுகட்டிக் குருவிகள் வசித்தது மரம் முழுக்க மந்திகள் இருந்தது மரங்கொத்தி பறவையும் மறைப்பில் குருவிச்சை கூட குசியாய் இருந்தது எமக்கோ இளைப்பாற நிழல் கொடுத்தது உண்ணக் கனி கொடுத்தது உறங்கப் பாய் கொடுத்தது ஏன் பலசமயம் தன்னையே விறகாய் எரித்தது ஆனால் சிலசமயம் கொப்புமுறிந்து கொலை செய்யவும் துணிந்தது கல்லடி பட்ட மரத்துக்கு தானே காயத்தின் வலிதெரியும் சின்ன மரங்களுக்கெல்லாம் கோவம் இந்த மரத்தை மட்டும் எத்தனை பேர் வழிபடுகிறார்கள் என்று எட்டி நின்று வெட்டிப் பார்த்தன‌ காயம் வந்தது ஆனால் அது களைப்படையவில்லை தனிய முடியாதெனக் கூட்டிச் சேர்ந்த சின்ன மரங்களுக்கு…

  21. உட்புகுந்து உயிர் அரிக்கும் வித்தை கற்க வேண்டும் காக்க காக்க என்று கல் மண் புழுதியிலும், பனி உறையும் பாதையிலும் வீசு புயல் மழையினிலும், வேதனையைச் சொன்னபடி, குப்பைக் காடுகள்போல் அந்நியக் கண்கள் சீண்டும் அவமானம் தின்றபடி, வேர் கிழித்த வலி விளம்பி, விம்மி, வெந்துருகி அறியாத தெருவெல்லாம் அலைமோதிக் கிடந்தோமே எவர் வந்து கேட்டார்கள்? எவர் வந்து பார்த்தார்கள்? எவர்தான் எதிரியென்று எமக்குப் புரியவில்லை யார்தான் துரோகியென்று யதார்த்தம் விளங்கவில்லை சிதறுண்டு போனோம் சிதையுண்டும் போனோம் விதை அழுகிப் போனதெனும் இழிநிலை ஆனதைய்யோ... இனம் முடை நாத்தத்தில் உட்கார்ந்து கொண்டதையோ... தாங்க முட…

  22. நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்... நங்கை அவளிடம்.. ஆணுக்கும் பெண்ணுக்கும்.. காதலும்.. காமமும்தான் பாலம் போடுமா.. இல்லை... நட்புப்பாலத்தில்.. நானும் அவளும்.. அவள் என் வாழ்வுக்கு ஒளி தந்த வெண்ணிலவு.. என் தாயைப்போல.. அவள்..என் துயருக்கு தோள் தந்த தோழி.. என் மனைவி போல.. அவள் என் சிரிப்புக்கு சேதி சொன்ன சினேகிதி ஆருயிரைப்போல.. அவள் என் துயிலுக்கு மடி தந்த நாயகி நான் மழலை போல... அவள் என் சோர்வுக்கு விடை தந்த தாதி என் தந்தை போல... அவள் கண்ணீரால்.. என்னைக் காயப்படுத்தியிருக்கிறாள்... என் கண்ணீரால் நான் அவளைக்குணப்படுத்தியிருக்கி

  23. தமிழ்ச்செல்வனையும் போராளிகளை இழந்த துயர்ப் பொழுதில் ஈழத் தமிழருக்கு ஆறுதலான கலைஞருக்கு நன்றி. கலைஞருக்கு வாழ்த்து -வ.ஐ.ச.ஜெயபாலன் காலத்தில் சோழனுக்கு நீர் ஏந்திக் கல்லணை நிழலேந்திக் கோவில். சேரனுக்கோ சிலம்பேந்தி வந்த தமிழிச்சி. பாண்டடியற்கோ சங்கம். அடையா நெடுங்கதவும் ஆஞ்சல் எனும் சொல்லுமாய் எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு? கலைஞா உனக்கு காலச் சுவடாக விலங்கொடித்தால் ஈழம் இருக்கும் ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய் visjayapalan@gmail.com

  24. Started by Snegethy,

    உனக்குப் பிடித்த பாடல்களாலும் உன்னை படித்த நாட்களாலும் உன்னை வடித்த வரிகளாலும் திமிருற்ற எந்தன் ஏட்டை அழித்து விட்டு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன நம் காதல் கலைந்து விட்டதென்று காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால் உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன் இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன் சில்லென்று மெய் நனைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன ஆனாலும் உன்னை மறந்து விட்டேன் உட்கொள்ளுமோர் பருக்கையிலும் நிராசையாகிப்போன நம் ஆசைகள் நளினத்தோடு எள்ளி நகையாடின என்றாலும் நாம் பிரிந்து விட்டோம் பார்வையில் பாசையில் தூண்டலில் துலங்கலில் நிறத்தில் மணத்தில் சுவையில் தூக்கத்த…

    • 21 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.