கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
இந்த இனைப்பை கொஞ்சம் பாருங்களேன் http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=2335 நன்றி சிவராஜா
-
- 6 replies
- 1.4k views
-
-
என்னடா நீ நாலுக்கு ஐந்தடி அறையில் கொண்டாட்டம் ஏதுவுமின்றி கொல்கின்றாய் நிமிடங்களை! வெளிநாடு வந்துமென்ன கண்டாய் இங்கே? ஒருநாடு உனக்கில்லாது குளிர்நாடு வந்து குமைகின்றாய் உள்ளே! காலைச் சூரியன் பார்த்ததுண்டா? கடலலை கால் நனைக்க மகிழ்ந்து சிரித்ததுண்டா? போடா... போ... சூரியனுக்கு முன்னெழுந்து நடுங்கும் குளிரில் வீதியில் நடைபயின்று வேலைக்குப் போனால் நடுநிசியில் வீடு திரும்பி மீண்டும் மறுநாள் அதே செக்குமாட்டு வாழ்க்கை...! கேட்டால் நாளை சந்தோசத்திற்கென்பாய்! உனை கேலியாய் பார்த்துச் சிரிக்கும் சமகாலத்தைக் கவனி... கண்களில் மின்னும் தங்கையின் கல்யாணக் கனவு... கஸ்டத்தில் ஆடும் குடும்பத்தின் வாழ்க…
-
- 5 replies
- 1.4k views
-
-
[size=3] [size=4]கருணாநிதி ஆட்சியில் இருக்கையில் அவர் புகழும் இப்போது அம்மா புகழும் பாடும் கவிஞர் வாலி அவர்களுக்கு அவர் ஸ்டைலில் ஒரு கவிதை பதில். இந்த பதிவை இட காரணமாக அமைந்தது அவர் அண்மையில் ரங்கத்து நாயகியாய் அம்மாவை புகழ்ந்து பாடிய துதி.[/size] [size=4]ஒரு கவிஞராக பாடலாசிரியராக அவர் வரிகளின் மேல் எனக்கு காதல் ஆனால் அவர் படித்த துதியால் இங்கே மோதுகின்றேன். மன்னிக்கணும் பெரியவரே அதுக்காக மனதில் பட்டத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை.[/size] [size=4]காவியக்கவிஞனே![/size] [size=4]உன் கவிவரிகளின் மேல் எனக்கு காதல்[/size] [size=4]நீ படித்த துதிகளினால் நமக்குள் மோதல்[/size] [size=4]தமிழன் குணம் எப்போதும் அடுத்தவனுக்கு ஈதல்[/size] [size=4]தங்கள் குணம…
-
- 0 replies
- 689 views
-
-
இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. லட்டு மாதிரி இருப்பது காலையில் வேலைக்குக் கிளம்புகையில் இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி ‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள். ‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று சொல்லிவிட்டு வரும் வழியில், பருத்த உடலா, மஞ்சள் சட்டையா என் கொஞ்சல் பேச்சா லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி, லட்டுகள் உருளும் சாலையில் ஓடி லட்டைக் குடித்து லட்டை உண்டு, லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்…
-
- 13 replies
- 1.6k views
-
-
புலவரின் சாபம் பொய்க்காது...... http://sphotos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/c126.0.403.403/p403x403/404322_545401095474745_294603601_n.jpg தமிழ் தேசியத்தின் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜீவ் காந்திக்கு ராஜீவ் உயிரோடு இருக்கும் போதே அறம் பாடினார். அவர் விட்ட சாபம் அடுத்த இரண்டாண்டுகளில் பலித்தது. புலவர் வாக்கு பொய்க்காது என நிரூபித்தவர் பெருஞ்சித்திரனார். எவ்வாறு ராஜீவ் சாக வேண்டும் என்று அறம் பாடினாரோ அவ்வாறே செத்து மடிந்தார் ராஜீவ் காந்தி. ஆனாலும் புலவரின் சாபம் இன்னும் மிச்சமிருக்கிறது. பாடலை நீங்களே படியுங்கள். ---------------------------------------------------------- சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும் வெங்கண…
-
- 3 replies
- 663 views
-
-
ஞாபகம் வந்த நாள்முதலாய் உன்னை எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது ஏனென்றும் எதகேன்றும் தெரியவில்லை எங்கள் நெஞ்சில் இந்தவலி எங்களின் வலி ஈழத்திற்கும் தெரியாது இவர்களின் காதலுக்கு எல்லையில்லை உன்கரம் புடிக்க இழந்தவை பல தரையில் தரைப்புலியாயை கடலில் கடற்புலியாயை வானில் வான்புலியாயை வருணிக்க வார்த்தையில்லை கரும்புலியாயை மண்ட மாவீரரும் மரணித்த மக்களும் போதும் போதும் ஈழமே எத்தனை எத்தனை வலிகள் எமக்குள் நாம் நேசித்த ஈழமே எம்மை நேசிக்க மறந்தாயோ
-
- 0 replies
- 816 views
-
-
தமிழீழத்தை காதல் செய்து ஈகத்தால் உயர்ந்துவிட்ட ஈகியரை வணங்குதற்காய் வருகின்ற நாட்களிலே அவர் விட்டுச் சென்ற கடமைக்காய் நாமெல்லாம் கரம்கோர்த்து ஒன்றானால் தமிழீழ மண் விடியும் தரணியெங்கும் கொடி பறக்கும் தமிழினத்தின் தலை நிமிரும் தமிழரது தாகமென்ற தாயகத்தைக் காத்து நின்ற தாயகத்து நாயகரை வணக்குமிந்தக் காலத்திலே ஓரணியாய் ஒன்றிணைந்தே வாருங்கள் அணி அணியாய் ஓடிடுவான் எதிரியவன் ஒன்றிணைந்தே சேருங்கள்!
-
- 0 replies
- 568 views
-
-
உயிர் அழுகின்ற போது ஒசைகள் கேட்பதில்லை... ஒசைகளை மவுனித்த நாங்கள் ஊமைகள் அல்ல... மவுனமாய் எமக்குள் பேசிக் கொள்ளும் மொழிகள் உங்களுக்கு புரிய போவதில்லை... சப்த நாடியும் உறையச் செய்யும் எங்களின் உயிரின் ஒசைகள் வெளிப்படும் நாளின் தோன்றலுக்காய் இந்த மவுனமான நாட்கள் மெல்ல எம்மைவிட்டு கடவதாக.....! # 18-05-2013
-
- 10 replies
- 1.9k views
-
-
அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கை இவையெல்லாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறவு ஆனால் நீ அப்படி இல்லையடா எனக்காக நான் தேர்ந்தெடுத்த உறவு உன்னை ரசித்து உன் குணத்தைப் புரிந்து நீ எனக்கானவன் என நானே முடிவு செய்து எனக்கு என நானே சொந்தமாக்கிய உறவு உன்னை எவருக்காகவும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எப்பொழுதும் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்
-
- 2 replies
- 6.1k views
-
-
மண்ணுக்கு வித்தாகிப் போன மாவீரர்களே! விண்ணிலும் கடலிலும் காற்றிலும் நெருப்பிலும் கரைந்து போன புலி வீரர்களே! இன்று மாவீரர் நினைவு நாள்! ஒரு கணம் கண்திறந்து எம்மைப் பாருங்கள்! பெற்ற தாய்தனை சேய் மறந்தாலும் சேய் தனைத் தாய் மறந்தாலும் உற்ற உடலை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்ணை இமை காக்க மறந்தாலும் பிறந்த மண்ணின் விடுதலைக்காய் தங்கள் தங்க நிற மேனியை விடுதலை வேள்வியில் ஆகுதி யாக்கிய எங்கள் மாவீரர்களை கைதொழ மறப்போமா? தங்கள் இளமைக் கனவுகளை தொலைத்து மண்ணின் விடுதலையை நெஞ்சிலே சுமந்து தங்கள் குருதியால் தமிழ்மண்ணைச் சிவப்பாக்கி மண்ணின் வ…
-
- 0 replies
- 457 views
-
-
'' அஞ்சி வாழேன்..'' சிங்கள கூட்டு வைத்து சில காலம் வாழ வந்து சேர்த்து வைத்த பணமதையும் தெருவில் போட்ட கதை காணய்.... மாடாக இங்குழைத்து மாளிகைகள் வேண்டிவிட்டு தான் வாழ முடியாமல் தவிக்கின்ற நிலை பாராய்..... பகலிரவு தான் பாரா பட்டினிகள் தான்கிடந்து ஊன் உருகி உழைத்த பணம் யாருக்கு போகுது காண்... காட்டி கொடுப்பவர்கள் கரியாராய் இவராக்கி- இவர் வாய்க்கரிசியிட்டு - அவர் வாழ்கின்ற காலம் காண்... கொழும்பினில் வாழ்வதாய் கொழுப்பாக பேசிநின்ற எம் தமிழர் வாழ்வியலில் எறி வந்த இன்னல் கேள்... ஏறி வந்து வீதியிலே ஏற்றமுடன் உலவிடதான் முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கிய நிலை காணாய்.. முக மூடியணிந்தவர்கள் முன்னாடி தலையாட்டி …
-
- 1 reply
- 1.1k views
-
-
விழிகளின் பயணம் அவள் விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன் விழிகள் கண்டதும் கண்களில்- சிறைசெய்து கொண்டால்- வென்றான் சுகந்திரம்- உயிர் குடுத்து வெல்லா போர். 2விழிகளின் பசி அவள் விழிகள் பட- இவன் விழிகள் விரைந்தோடும்-தெரு பரந்து கிடக்கும்-காடு ஒழிந்திருக்கும்-பொந்து சென்றெட்டா-கடல் கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும் மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த. நன்றி
-
- 2 replies
- 1.2k views
-
-
துருவத்து வடலிகள் தாய்மடி தேடும் கன்றினைப்போல் தாய் மொழி தேடி அலைகின்றேன். ஏண்டியம்மா கருப்பாயி எனக்கு மட்டும் இந்த நிலை பட்டாம் பூச்சியாய் பறந்து திரிஞ்ச என்னை ஆட்டு மந்தையாய் இண்டைக்கு அங்கும் இங்கும் அலைய வைச்சாய் ஆத்தா மடியிலே அன்புச் சூட்டில் உறங்கியவன் பனிபடிஞ்ச தேசத்திலை பட்டினியிலை கிடக்கிறன் தாய்மொழியை காதலிச்சு தனி மரமாய் வாடுகிறன் அம்மாவை காதலிச்சா அகதிதான் பெயரெண்டால் பூமியிலை எல்லாமே பொய்யான வாழ்க்கையன்றோ ? விழிதிறந்து பார்க்க முன்னம் மொழிகேட்டு மகிழ்ந்தவன் விழிமூடிக் கிடந்தாலும் கனவில் மொழித்தாகம் வாட்டுதடி வளரும்............
-
- 1 reply
- 840 views
-
-
அம்மா, இனி நீ இறந்து விடு.. பயமும் பட்டினியும் நோயும் என இன்னமும் எத்தனை காலத்திற்கு நீ செத்துக் கொண்டேயிருக்கப் போகிறாய் ? ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும் ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும் ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும் ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென ஒரு பொதியையும் காவிக்கொண்டு இன்னமும்எத்தனை காலத்திற்கு அலையப் போகிறாய்? உன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கழுகுகள் காவிக்கொண்டு செல்வதையும் கண்டுவிட்டுத்தான் மடிவேன் என ஏன் அடம்பிடிக்கிறாய்? அம்மா, இனி நீ இறந்து விடு... அனைத்தும் பயனற்றுப் போய்விட்டது என்பதை அறிந்த பின்தான் போகவேண்டும் என நீ அட…
-
- 1 reply
- 807 views
-
-
பெண்ணே நீ.. மலரல்ல வாட... மானல்ல இரையாக... கண்ணல்ல கரைய.. நிலவல்ல எட்ட வைக்க... தேனல்ல எறும்பு மொய்க்க.. வண்டல்ல ஏமாற..! பெண்ணே நீ மதுவல்ல மயங்க... தண்ணியல்ல அடிக்க.. மஞ்சமல்ல தூங்க.. தங்கமல்ல கிண்ட... புதையலல்ல தோண்ட... மாவல்ல பிசைய... "குவிட்" அல்ல போர்த்திக்க.. பொன்னல்ல பதுக்கி வைக்க தேசமல்ல கட்டிக் காக்க...! பெண்ணே நீ புயலல்ல வீச.. எரிமலையல்ல வெடிக்க.. பறவையல்ல பறக்க.. கூண்டுக் கிளியல்ல விடுவிக்க.. ஈழமல்ல சுதந்திரம் வாங்க..! பெண்ணே நீ சரக்கல்ல திருட... சக்கரையல்ல ருசிக்க.. பிகரல்ல மாட்ட... பாடமல்ல படிக்க.. முத்தல்ல மூழ்கித் தேட சிப்பியல்ல திறக்க..! …
-
- 27 replies
- 5.7k views
-
-
நீ என்னைக் காதலிக்கவில்லை என்ற சொல்லை எறிந்தால் பதிலுக்கு உனக்கு மட்டும் கவிதைகளை தந்து கொண்டே இருக்கும் மரம் நான் * நான் மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்காததில் கவலைப்பட்டது என்றால் அது உனக்கு கவிதை எழுத துடித்த போது மட்டும்தான் * நல்ல வேளை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை அப்படி எழுதியிருந்தால் உன்னை விட அழகான கவிதையை என்னால் எழுதியிருக்க முடியாது * நீ கட்டி அணைத்தால் தூங்காது தலையணை நான் கட்டிப்பிடித்தால் தூங்காது பேனா * உன்னைப் பார்த்து யார் யாரெல்லாம் பொறாமைப் படுகிறார்களோ தயவு செய்து அவர்களைப் பார்த்து நீ கோவித்து விடாதே அவர்கள்தான் என் கவிதை…
-
- 2 replies
- 995 views
-
-
- சோதியா
-
- 7 replies
- 1.7k views
-
-
அடிக்கடி நீ இமைசிமிட்டுவதால் என் விழிகள் வலிக்கிறது விம்பம் தெரியாத கண்ணாடியில் உன் உருவம் ஓடி மறைகிறது ஒரு நொடி உன்னைப் பாராவிட்டால் மறுநொடியே என்னுள் ஆயிரம் கனவுகள் படர்கிறது...
-
- 0 replies
- 591 views
-
-
என் தாயே ...உன் பாத திருவடியே ...உலகில் அத்தனை ஆலயங்களின் ...திறவு கதவு ....!!!என் தாயே ....உன் கருணை கொண்ட பார்வையே ....நான் வணங்கும் இறைவனின் ...கருணை பார்வை ....!!!என் தாயே ....என்னை விட்டு நீங்கள் இறை ...பயணம் சென்றாலும் ....உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...தான் நான் வணங்கும் இறைவன் ...!!!+கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )
-
- 2 replies
- 2.6k views
-
-
தாயே அன்று உந்தன் மடியில் மறந்து போன என் எல்லா சோகமும் ஒன்று சேர்ந்து என்னைக் கொல்கிறது எனைத் தூங்க வைக்க தூரத்தில் நீ என்பதால் * இந்த உலகில் எந்த மூலையிலும் கிடைக்கவில்லை உந்தன் கருவறையில் கிடைத்த எனக்கான பாதுகாப்பு * என் மேலான உந்தன் கவனத்துக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் குழந்தையாய் பிறக்கலாம் உனக்கு நான் * எந்தப் பாசப்படியைக் கொண்டு நிறுத்தாயோ தெரியவில்லை உன் எல்லா குழந்தைக்கும் ஒரே அளவிலான அன்பையே காட்டுகிறாயே * என் தாரத்தின் மறுபிறவியில் உணர்ந்து கொண்டேன் நான் பிறக்க நீ தாங்கிய பிரசவ வலியை * உன்னில் தடுக்கி நான் விழுந்தபோதும்…
-
- 8 replies
- 1.5k views
-
-
மலர் ஒன்று மலர்களுக்கு விளக்குப் பிடிக்கிறது.. காதலுக்கு காவலுக்கு அல்ல.. காவாலிகள் அவற்றை சிதைத்திடக் கூடாதின்னு. !!! (அப்பப்ப இங்கால சில கிறுக்கல்களோடு வந்து போவம்... நீங்களும் வந்து பார்த்து ரசிச்சுப் போங்க. ) வெண்ணிற மேகங்களுக்கு சிவப்பு வர்ணம் தீட்டும் மலர்கள்.. தமக்குள் பேசிக் கொள்வது தீட்டுன்னு இதை உலகம் வெறுக்கக் கூடாதுன்னு..! பெண்ணுக்குள் நிலவை புதைக்கும் உலகம் தன்னை முழுக்காட்ட நினைத்தது மறந்து நிலவு மூழ்கி எழுகிறது என்ன கொடுமை இதுன்னு...!
-
- 11 replies
- 1.2k views
-
-
ஒரு வேளை எனக்கு முன்... என் மனைவி இறந்தால்... அவளுக்காக உலகிலையே ... கோயில் ஒன்றைக்கட்டுவேன் .... .இதுவே மனைவிக்கு கட்டிய .... மனைவி மஹாலாகஇருக்கும்... அந்த கோயிலை நான் தான்... நான் தான் அதன் அமைப்பை வடிவமைப்பேன்...! நான் தான் கல் உடைப்பேன் ... நான் தான் மண் சுமப்பேன் ... நான்தான் கட்டி முடிப்பேன்... நானே அழகு பார்ப்பேன்... அந்த கோவிலில் என்குடும்ப... உறுப்பினரை யாரையும் ... வணங்க விடமாட்டேன் ....!!! அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் ... நான் கடவுளாக பார்க்கிறேன் ... !!!! என் மீதிக்காலத்தை அங்கேயே .. உண்ணா நோன்பிருந்து ...... இறந்து விடுவேன் ... !!! ^ மனைவிக்கு ஒரு கவிதை கவிப்புயல் இனியவன் அன்னையை ....நினைக…
-
- 0 replies
- 4.3k views
-
-
நீர்ப்பறவையின் கேலிக் கோடு - அஞ்சலிக் கவிதை! தீபச்செல்வன் மீன்களை தரையில் எறிவதைப்போல தொலைதூரம் வீசியெறிந்து உன்னையும் நாம்தான் கொன்றோம் புலத்தில் தந்தையர் நிலத்தில் குழந்தையர் வழிகளில் ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும் காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும் கீவ் நகரை கடந்தவனைக் காணாது ஊசியிலை காடுகளும் துடித்தன போலாந்து எல்லையில் வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர் துயரப்பிக் கிடக்கின்றன உன் கேலியின் கோடுகள் கூடுகள் பறிபோயிருக்கலாம் இரையற்று பசியில் மரிக்கலாம் எல்லாப் ப…
-
- 0 replies
- 999 views
-
-
அகதி கனத்த இதயத்தை கையில் பிடித்து மூச்சு முறிய முண்டியடித்து இழப்புகளுக்குள் இறுகி முன்னுக்கு நிற்கும் முந்நூறு பேரையும் முந்தியதாக நீண்டு நிற்கின்றன கைகள்……… துடிப்பின் துருவங்களுக்கு சென்றிருக்கும் எம் தேசத்தில் பூஜ்ஜியப் பெறுமானம் எனச்சொல்லப்படும் உயிருக்கு உணவையும் ஒலி வரட்சியடைந்து ஒய்ந்து போயிருக்கும் தொண்டைக்கு பருக தண்ணீரையும் பன்னீராய் நாடி…… நீட்டப்பட்ட கைகள் சாமானிய நிலையடையும் அன்றாவது சமாதானம் சாத்தியப்படுமா? அகதி வாழ்கை முற்றுப் பெறுமா? எம்.எஸ்.எம்.சறூக் சம்மாந்துறை. நன்றி - லங்காசிறி இணையம்
-
- 0 replies
- 708 views
-
-
கரும் புலிகளின் சாம்பலில் இருந்து உயிர்தெழுவோம்!!!!!!!!!!!! கரும்புலிகள் எங்கள் கவசங்கள்! கந்தகத்தைச் சுமந்து சென்று களமதிர வெடிப்பவர்கள்! வந்த பகை முடித்து வாழ்க்கை தனைக் கொடுத்தவர்கள்! சந்தன மரமாக தம் தேகம் எரிப்பவர்கள்! எந்த இடம் என்றாலும் எதிரிகளை எரித்தவர்கள்! சந்ததம் தங்கள் தலைவனையே நினைத்தவர்கள்! சொந்த பந்தமெல்லாம் தூர வைத்துவிட்டு-தாயகத்தில் குந்த வந்த எதிரிக்கு குலைப்பனைக் கொடுத்தவர்கள்! தமிழீழத்தின் தடை நீக்கிகள்! தலைவன் கண்டு பிடித்த அணுக்குண்டுகள். ஈழத்தமிழனின் இறுதி ஆயுதங்கள்! ஆம் நிலம் வீழலாம்!-எங்கள் நெஞ்சம் வீழாது! களம் மாறலாம்-எங்கள் உளம் மாறாது! எல்லாம் முடிந்தது என்று இறுமாந்திருக்காதே பகைய…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-