கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இதைப் பார்க்கும்போது வன்னியில் வாடிக்கொண்டிருக்கும் எம் குழந்தைகளின் நினைவுகள் வந்துபோயின...பின் ஒருகணம் வெளிநாட்டில் எம் உறவுகளின் பிள்ளைகளையும் நினைத்தேன்...கண்ணீர்களுக்குள் என்னால் கவிதைகளை தேடிக்கண்டுபிடிக்க இயலவில்லை..ஆற்றாமையில் மனம் துடிக்கிறது... இந்தப்படம் உங்கள் மனங்களுக்குள் தூண்டிவிடும் உணர்வுகளை கவிதை ஆக்குங்கள்...
-
- 1 reply
- 1.1k views
-
-
செருப்புகளும் மதங்களும் விற்பனை சந்தையில் நிறைய குவிந்து கிடக்கின்றன செருப்புகள் போல் மதங்களும் தங்களுக்குள் விவாதித்து விவாதித்து தாங்களாகவே அடித்துக் கொள்வதிலும் சளைத்தவையில்லை ஒன்றையொன்று அளவுகளிலும் அழகுகளிலும் தான் வெவ்வேறாக இருக்கின்றன சில அறுந்தும் சில தேய்ந்தும் செருப்புகளை போலவே பல வேளைகளில் செருப்புகள் உயர்வானவைதான் மனிதயினத்தை காவுகள் கேட்கும் மதங்களைவிடவும் kavimathi.com
-
- 1 reply
- 827 views
-
-
குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது மகிந்தாவின் அநியாத்தால் குண்டு மழையும் வான்பிதாவின் புண்ணியத்தால் மாமழையும் பொழிகிறது ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும் இழுத்துப் போனது வெள்ளம் இனியென்ன செய்வது? முன்னேறி வரத்துடிக்கும் எதிரிகளின் காலடிச் சத்தம் முன்னரங்க முறியடிப்பில் பிள்ளைகளின் யுத்தத்தால் தொலைகிறது ஆயிரம் அர்பணிப்புகள் அடைமழை போல் புரட்சிகள் ஆடு நனையுது என்று ஓநாய்களும் அழுகிறது தூக்கிப் போக முடியாத சொத்தாக நிமிர்ந்து நின்ற தென்னையும் பனையும்கூட சரிந்துபோய்க் கிடக்கிறது எத்தனை முறை இடம்பெயர்ந்தாலும் …
-
- 1 reply
- 962 views
-
-
""""குழி வெட்டும் மகிந்தா..."""" ஏய்... மகிந்தா ஏன் நீ மரணத்தை கண்டு மிரண்டோடுகிறாய்....??? உயிர் மீது உனக்கித்தனை ஆசையா...??? பாவி உயிர்களை பகலிரவாய் பறித்தாயே அது மறந்தா நீ பதுங்கு குழி வெட்டுகின்றாய்...?? வெட்டு நல்லாய் வெட்டு ஆழ கிடங்கெடுத்து அழகாய் நீ கட்டு.... அட முட்டாளே உனக்கு தெரியாதா அது தானே உனக்கு புதை குழி... இப்போ எங்கு ஓடுவாய்...??? - வன்னி மைந்தன் -
-
- 1 reply
- 936 views
-
-
காவல் தெய்வங்களே சாவை தழுவி சந்தண மாலை சூடியோரே இமைக்கும் பொழுதினில் எரிமலையாய் வெடித்தீரோ ஈழத்தின் விடியலிற்காய் எமக்காய் எரிந்தீரோ எங்கே சென்று மறைந்தீரோ கடலில் கரைந்தீரோ களத்தில் எரிந்தீரோ விண்ணேறி விடியல் தேடி சென்றீரோ கண் முன்னே வாரும் கனவு தேசம் நாளை கைகொட்டி மகிழ்வோம் கனவு சுமந்து களம் வென்றவரே கடலெல்லை காத்து மீண்டவரே எங்கே சென்றீரோ எப்போது வருவீரோ விழியில் ஓளி ஏற்றி உம் விரல் தொடுகைக்காய் விரதம் இருக்கின்றோம் எம் ஈழத்தின் அரசிற்காய் உம் இதயத்தில் இடம் தந்தீரோ தாயை காப்பதற்காய் தவிப்பெல்லாம் எமக்களித்தீரோ புலியாகி சென்றீரே எம் புகழதை வென்றீரோ வெற்றிக் கிண்ணம் நம்கையில் கொட்டி மகிழ்வோம் ஒடி வாரு…
-
- 1 reply
- 775 views
-
-
மீண்டும் உயிர் பெறும் மாவீரம் மீண்டும் உயிர் பெறும் மாவீரம் “”””””””””””””””,,,”””””””””””””””” உறங்கிக் கிடந்த உறவுகளே உங்கள் வீரம் ஓய்ந்து போகவில்லை உயிர்பெறத் துடிக்கின்றது “”” எங்கள் கண்மணிகள் கல்லறை எங்கும் பகைவன் பாதங்களின் சிதைவு கண்டு முட்புதர்கள் கூட மூடிக்கொண்டது ” கல்லறை எங்கோ ஓரமாய் விழியிளந்து விசும்பும் சத்தங்கள் உறவுகளின் உள்மனதை உரமூட்டியதோ,, வீரம் மெருகேறிய கைகளில் வீச்சருவாள், புனிதம் கொள்கின்றது மாவீரர் துயிலும் இல்லம் ” இன்று மிளிரும் மாவீரர் நாள் மிடுக்குடன் எழுந்து கொள்ளட்டும் ” கார்த்திகை 27 கண்மணிகளின் புனித நாள் ” மாற…
-
- 1 reply
- 3.5k views
-
-
இனி எம் கல்லறைகளுடன் பேசுக! எம் இருதயத்தை பிளந்த யுத்தக் கல்லை பார்த்ததுபோதும் எமை கொன்று வீசிவிட்டு வெற்றிக் கூச்சலிடும் உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும் எம் தேசமழித்து அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே ஒற்றை நாடென நடனமாடும் வரைபட கல்லைப் பார்த்ததுபோதும். எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு வருகவெம் சிங்களச் சகோதரர்களே! வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும் நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும் மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன் போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும் மாண்டவர்களின் துயில் கலைத்து உறங்க இடமறுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
கார்த்திகைப் பூச்சுமந்து கல்லறை நோக்கி நடப்போம் ஈழ காவியம் எழுத தம் உயிர் தந்த கண்மணிகள் நினைவு சுமந்து போரியல் வரலாற்றில் புதிய சரிதம் எழுதி பூமிப் பந்தில் தமிழீpழம் வரைய புயலெனக் களமாடி மண்ணுள் புதைந்த மா வீரர்களே! உங்கள் மலரடி தொழுதோம் இக் கார்;த்திகை நாளிலே
-
- 1 reply
- 908 views
-
-
சிட்டு 15ம் வருட நினைவுகளோடு ‘சிட்டு’ சிரிப்பு நிறைந்த மகிழ்ச்சியின் உறைவிடம் நீ. நீயழைந்த காற்றும் நீ நடந்த நிலமும் நினது நினைவுகள் நிறைந்து மௌனித்துக் கிடக்கிறது. கனவுகளோடும் கலையாத நினைவுகளோடும் நீ நிறைந்த இசையும் பாடல்களும் உயிர்ப்பின் இருப்பாய் ஈரமாய்…… இசை நிறையும் திசையெல்லாம் உன்னை ஏந்தியிருக்கிறது ஒலிக்கதிர்கள்….. தீயின் சுவடுகள் மீதேறிய உனது கால்களும் மூச்சும் 01.08.1997அன்று ஓய்வெடுத்து உறங்கிய நாள் கடந்து இன்றுன் நினைவுகள் 15ம் ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆற்ற முடியாச் சோகத்தை இந்த நூற்றாண்டு தந்துவிட்டுச் சலனமின்றி நகர்கிற இந்நாட்கள் பற்றிச் சொல்வதானால்…….???? நீயுறங்கிய நிலம் மீது பேயுலவித் திரிகிறது….. அம…
-
- 1 reply
- 551 views
-
-
" உனக்கென இருப்பேன்" என்னை விட்டுச்செல்லாதே எந்தன் பூமி சுற்றாதே உன்னை நீங்கிப்போனாலே உயிரும் என்னில் தங்காதே! காணும் காட்சி உன்னோடு! கவிதைச்சொல்லும் உன்னோடு! வாழும் காலம் எல்லாமே அன்பே நானுன் நெஞ்சோடு! இருளைக்கிழித்த சூரியனாய் எனக்குள் வந்து கதிர் விரித்தாய்! எழும்பி நடக்க நீதானே அன்பே உந்தன் விரல் தந்தாய்! எனக்கே எனக்கென புது உலகம் உன்னால்தானே உண்டாச்சு?! உன்னைச் சேர்ந்த பின்னால்தான் வாழ்வே அர்த்தம் என்றாச்சு?! காதல் என்றெ சொல்லுக்கே உந்தன் பெயரே பொருளாச்சு! இருக்கும் காலம் வரையிலுமே உனக்கே எந்தன் உயிர்மூச்சு! உயிரில் வந்து கலந்தவனே என் உணர்வாய் என்றும் நிறைந்தவனே! இமைபோல் காக்கும் க…
-
- 1 reply
- 808 views
-
-
தலைநிமிர்வோம்! --------------------------- மனிதம் தொலைந்த முதற்பொழுதொன்றிலே சிங்களக் காடைகள் காவலரானதால் தமிழர் உடல்கள் தெருவில் சாய்ந்தன ! பெண்ணோ குழந்தையோ தமிழராய் இருந்தால் புத்தரின் புத்திரர்க்குக் கொல்வதே வேதம்! நான்கு தசாப்தங்கள் நடந்து முடிந்து இன்றும் தொடரும் இனப்படுகொலை ஓயவில்லையே! ஓயவேண்டுமெனில் தமிழீழம் அமைவதே சாலச் சிறந்தது! தமிழாராச்சியே சிங்களத்துக்குச் சினமென்றால் நாடமைப்பதை சிரித்து ஏற்குமா! வீழ்ந்தவர் மீதிலே உறுதியெடுப்போம் தாயகம் மீட்டுத் தலை நிமிர்வோமென! தலைகள் நிமிரக் கரங்களை இணைப்போம்!
-
- 1 reply
- 625 views
-
-
என்ன பார்க்கிறீர்கள்? மஞ்சள் குளித்து மரமொன்று நின்றது பச்சைப்பசேலென பார்ப்பதற்கு குளிர்ச்சியாய் நிழல் தந்து நின்றது இப்படி மாறிவிட்டதே! பார்த்து நின்றேன். என்ன விகைப்பாய்ப் பார்க்கிறீர்கள்? நாங்கள் பருவ காலத்துக்கேற்ப கோலத்தை மாற்றி வாழுகிறோம். உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களோ நேரத்துக்கு நேரம் பணத்துக்காகவும் பதவிக்காகவும் குணமும் மாறுகிறார்கள் கொள்கையும் மாறுகிறார்கள் அவர்களைப் பார்க்காமல் என்னை ஏன் பார்க்கிறீர்கள்? வாயடைத்து தலைகுனிந்து வந்தேன். செண்பகன் 18.10.14
-
- 1 reply
- 948 views
-
-
காதலனே ...இதயத்தை செல்லமாக ....கிள்பவனே....நெஞ்சத்தை கிள்ளி ....எறிந்து விடாதே ....என் ராசா ....!!!$நீ தாண்டா ....இதயத்தின் ஊமைக்காயம் ..மெதுவாகவும் கனமாகவும்வலியை தருகிறாய் ..!!!$நான் ...நன்றாக அழுகிறேன் ....அப்போதுதான் -என் இதயம் கழுவுப்படும் ..என்றாய்....காதல் என்றால் என்ன ...?என்றும் புரியும் என்றாய் ....!!!$........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ......................கவி நாட்டியரசர்.............................கவிப்புயல் இனியவன் ............................யாழ்ப்பாணம் ....................
-
- 1 reply
- 802 views
-
-
ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலேஉள்ளம் பதை பதைக்கும்எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்ஓலைச்சுவடி முதல்ஊர்களின் வரலாறும் தொன்மையும்சொல்லும் அத்தனை நூலும்...குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரைஎண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்தென்னாசியாவிலை பெரிய நூலகம்இதுவெண்டு எல்லாரும்புழுகமாச் சொல்லிச் சொல்லிசெருக்குப் படுறவையாம்கல்வி அறிவிலை உலக அறிவிலைதமிழன் கொடி கட்டிப் பறக்கஇதுதான் காரணமெண்டதைஎல்லாரும் அறிஞ்சதாலைஎப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்கல்வி அறிவைச் சிதைச்சால்கண்டபடி தமிழனாலை வளரேலாதுஎண்டு கற்பனை கட்டின சிங்களம்இரவோடு இரவா வந்து உயிரோடைகொள்ளி வைச்சுப் போனதாம்அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தைஅழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரைஅறிவுத் தேடலை அழிக்க முடி…
-
- 1 reply
- 1.1k views
-
-
தேநீர் கவிதை: அலைகள் மாறுவதில்லை! மு.மேத்தா காகிதம் பணம் ஆனது... பணம் மீண்டும் காகிதமாகிவிட்டது! பணத்தை என்ன செய்வதென்ற கவலை - அதிபர்களுக்கும் அதிகாரங்களுக்கும்! பணத்திற்கு என்ன செய்வதென்ற கவலை - அப்பாவிகளுக்கும் அபலைகளுக்கும்! கொள்ளை நோட்டுகளும் கள்ள நோட்டுகளும் குளிர் சாதன அறைகளில் கூடிப்பேசுகின்றன... பாவம் - நல்ல நோட்டுகள்தான் அலைகின்றன நடுத்தெருவில்! வங்கி வங்கியாய் …
-
- 1 reply
- 716 views
-
-
பிஞ்சுப் பருவத்தில் பாலுக்காய்க் காத்திருந்தேன் பள்ளி நாட்களில் விடுமுறைக்காய்க் காத்திருந்தேன் கொட்டும் மழையிலே வெயிலுக்காய் காத்திருந்தேன் கொளுத்தும் வெயிலிலே வான்மழைக்காய்க் காத்திருந்தேன் கல்லூரிக் காலத்தில் காதலிக்காய்க் காத்திருந்தேன் கடமைகள் வந்ததும் காசுக்காய்க் காத்திருந்தேன் காத்திருப்பே வாழ்க்கையாய் காலமெல்லாம் தொடர்கையில் காத்திருப்பற்ற வாழ்க்கையொன்றைக் கண்டறியக் காத்திருக்கிறேன் http://gkanthan.wordpress.com/index/waiting/
-
- 1 reply
- 728 views
-
-
நட்பெனப்படுவது யாதெனில்.... 3 ஆகஸ்டு 2014 இல் 11:53 AM தவறுகளைத் தைரியமாய்த் தவறென்று சுட்டிக் காட்டி அறிவைச் சுற்றிக் காட்டித் தட்டிக் கொடுக்கும், பெரிதாக ஒன்றுமே செய்யாமலே அரிதான விருது கொடுப்பது போலப் புகழும் , மூச்சு விட்டு முன்னுக்கு வர முன்னுதாரணம் காட்டிப் போட்டு பேச்சு மூச்சின்றி அடக்கமாக பின்னுக்கு நிற்கும், தெரிந்த நாலு தகவலை என் போலத் தெரியாத நாலு பேருக்கு தெளிவாகத் தெளித்துக் கொண்டிருக்கும்.. முன்னர் முதுகு சொரிஞ்சு விட்ட நன்றியாக பின்னர் முதுகுக்குப் பின்னால் சொறிந்துவிடும், தேவைக்கு மட்டுமே சாம்பிராணி போட்டு ஒரு சாதாரண பிராணியை அசாதாரண அப்பிராணியாக்கும், …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆரியகுளத்து தாமரைப் பூவிற்கு அடித்தது யோகம்! பீக்குளத்து பூக்களும் பூசைக்கு போகும்! நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று.. இனி என்ன? “காமினி டீ றூம்” கதவுகள் திறக்கும்! சிட்டி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும்! புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும்! சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா? எழலாம். வெசாக் கால வெளிச்சக் கூட்டை எங்கே கட்டுவார்? ஏன் இடமாயில்லை? வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம், முனியப்பர் கோவில் முன்றலிலும் கட்டலாம், …
-
- 1 reply
- 489 views
-
-
மேய்ப்பன் தடியோடு நடக்கிறான். தடி, ஆடுகளைத் திருப்பும் என்றும் அதுவே தன் பலமென்றும் இன்னும் இன்னும் நினைத்திருக்கிறான். மேய்ப்பனை மேய்க்கும் மேய்ப்பன் மேய்ப்பனை நம்பியதாக என்றுமே சொல்லியதில்லை. தடியைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறான். பல ஓநாய்களிடம் இருந்து காலனியைப் பெற்ற மேய்ப்பன் ஆடுகளை நோக்கி எப்போதும் பேசியதுமில்லை பசி தீர்க்கும் வழியில் அழைத்துக் கொண்டு சென்றதுமில்லை. ஆடுகளின் குரலில் பேச மட்டும் கற்றுக்கொண்டான். தன்னை மேய்க்கும் மேய்ப்பனோடு இரவுப்போசனங்களில், ஆடுகளின் கருகிய தசைகளை மென்றுவிட்டு கனவுகளைத் துப்பி விடுவான். ஆடுகள் தங்கள் முன் கையளிக்கப்பட்ட தடியை மட்டுமே நம்பின.. நம்பிக்கொண்டு இருந்தன மேய்ப்பனை ஏறெடுத்…
-
- 1 reply
- 1k views
-
-
எங்கும் எதிலும் தமிழோசை லண்டன் எதிரொலிக்கும் அந்த மணியோசை பொங்கும் தமிழ்ப்பாட்டின் இன்னோசை மனம் பூரித்துப் பாடுதம்மா என்னாசை சங்கம் வளர்த்த தமிழ் உலகமெங்கும் இங்கு தனிநடை போடுதம்மா வீறுகொண்டு சங்கக்குலவிளக்கை தமிழ்த்தாயை இந்த தலைநகர் பாடுதம்மா ஆவல் கொண்டு முருகன் கழுத்துக்கொரு மணியாரம் அவன் முன்னின்று பாடுதற்கு தேவாரம் நிறுமித்த நெஞ்சினிற்குப் புகழாரம் இந்த நேரத்தில் நான் இசைக்கும் தமிழாரம் ஆக்கத்திரைக் கடலும் தமிழ் ஒலிக்கும் அதில் ஆடிடும் மீன்களெல்லாம் தமிழ்ப்படிக்கும் தீர்த்தக்கரையில் பெண்கள் குரல் ஒலிக்கும் அது திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும் எங்கும் எதிலும் தமிழோசை உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
எனது உலகம்... போரில் தொலைந்த நகரத்தைச் சுற்றிலும் சிதறிக்கிடக்கும் ஓலங்களால் என் உலகத்தை வனைந்துகொண்டு கண்ணீராய் அருவிகளில் வழிந்தோடும் எம் மக்களின் துயரங்களில் மூழ்கிக்கிடக்கிறது என் ஆன்மா என் மன நிலத்தில் சுழன்றடிக்கும் துயர்க்காற்றின் அணல் உடலெங்கும் பெருநெருப்பாய் எரிக்கிறது பசியால் வாடுமெங்கள் குழந்தைகளை நினைத்து முகில் உரசும் முகடுகளில் பெருங்குரலில் காற்று மோதி இரைகிறது வயல் நிலங்கள் நீளவும் எம் இனத்தின் துயரங்களை உதிர்த்தபடி பெயர் தெரியாத பறவைகள் பிணங்களைக் கட்டி இழுத்துக்கொண்டு கழுகுகளைச் சபித்தபடி செல்கின்றன மேகங்கள் எம் மக்களின் அவலங்களைக் காவிக்கொண்டு கோபமாய் அலைகின்றன நாய்கள் ஊளையி…
-
- 1 reply
- 1.5k views
-
-
நன்றும் தீதும் - 17-Nov-2014 11:11:06 AM ஊருச் சோற்றுக்கு நாக்கை நீட்டாதே ஊழல் செய்தே பொருளை ஈட்டாதே காரி உமிழ்வான் இனிவரும் பிள்ளை கவின்நிறை முகத்தை ‘தொட்டி’ ஆக்காதே ! பதவிப் பசிக்கு ஆடுகள் சாகலாம் கதவின் இடுக்கில் கண்ணகி ஏங்கலாம் உயர்வுக்கு உழைத்தவர் பாதியில் ஏகலாம் ஊர்ப்பணி செய்பவர் உறங்கிட ஏலுமோ? சாதியும் மதமும் சமத்துவம் நல்கா தீதிலா வாழ்க்கை திசைமாறிப் போகா பாடாற்ற வேண்டின் பண்பாட்டு அமைப்பில் பாடமும் பாதையும் ‘நாமாதல்’ வேண்டும் காலச் சூழ்நிலை கறையைப் பூசும் கண்ணியம் காப்போர் உள்ளம் கூசும் குற்றம் களைந்து சுற்றம் பேணடா குருடன்கைத் தடியாய் மாறிடப் பழகடா ! நன்றும் தீதும் பணியைப் பொறுத்ததே பண்பிலாச் செயலால் …
-
- 1 reply
- 694 views
-
-
நம்ப வைச்சு கழுத்தறுத்த குள்ள நரி ....நீ!! உலகத் தமிழினத் தலைவன்......நீ எமக்காய் உயிரைவிட துணிந்தவன்....நீ எமக்காய் பதவியை எறிந்திட துணிந்தவன்..... நீ உலகத் தமிழினமே நம்பினோம் ...... ஐயா தமிழனுக்கு விடிவுகாலம் பிறந்தது ......என்று சரத் பொன்சேகா சொன்னான் .....அன்று தமிழகத் தலைவர்கள் கோமாளிகள் ....என்று தமிழகமே கொதித்து எழுந்தது ...அன்று உங்களை நம்பினோர் எல்லோரும் கோமாளிகள் ...என்று தமிழர்களுக்கும் தமிழின உணர்வாளர்க்கும் புரிந்தது....இன்று நீங்கள் அன்று சொன்னது வெறும் கவிதை....என்று கேவலம் சிங்களவனுக்கு புரிந்தது கூட நமக்கு புரியவில்லையே....அன்று. உலகத் தமிழினத் துரோகி ....நீ …
-
- 1 reply
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்கால் ஒரு நீண்ட தவத்தை உடைத்தெறிந்து நெடிய பயணத்தின் முடிவுரை எழுதிய தீயினால் வேகாமல் பொய்யினால் வெந்த மண் ஆயிரம் ஆயிரம் கனவுகளை கருக்கியெறிந்த மண் அன்னிய சக்திகளின் பசிக்கு இரையாகி பட்டினியில் வெந்த மண் வேரோடு விழுதுகளையே வீசியெறிந்த மண் வரலாற்றில் தன்மீது கறை படித்த மண் எம் கனவெல்லாம் தன்னுள்ளே கரைத்தெறிநத மண்
-
- 1 reply
- 981 views
-