கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
யாழ் இணைய நண்பர்களுக்கு... கவலைகள் சுமக்கும் கவிகளே கண்ணீர் நிறைந்த கண்களை திறந்து கண்ணென்று தெரியும் உங்கள் உள்ளத்தை பாருங்கள் நீங்கள் சில நொடி வாழும் வீட்டில் பூச்சியும் வீறு கொண்டு வாழும் போது நல் வழி உண்டு நீங்களும் வாழ மனபலம் எனும் வாளை எடுங்கள் தடுக்கும் பாறைகளை வெட்டியெறியுங்கள் நடுக்கடலில் விழுந்தாலும் மூச்சுள்ள வரை நீந்தப் பழகுங்கள் இருட்டில் ஓவியம் வரைவதை நிறுத்துங்கள் வெளிச்சத்தில் கோடு போட பழகிக்கொள்ளுங்கள் கோடுகள் ஏணிகள் ஆகட்டும்... ஏணிகளில் உங்கள் பயணம் தொடங்கட்டும் மனதை விரிவாக்குங்கள் விண் மீனை தொட முயற்சி செய்யுங்கள் தோல்வி என்பதும் ஒருவகை பலம் தான் இறுதி வரை போராடுபவர்களுக்கு...
-
- 16 replies
- 2.2k views
-
-
செருக்களத்துப் புலியொடுக்க தரணியெங்கும் முறுக்கெடுத்து தருக்குடனே தடைபோட்ட தனவான் தேசங்களே! கல்லுறங்கும் மாவீரர் எங்கள் உள்ளிருக்கும்வரை வில்கொண்ட கணைகளுக்கு வீதித்தடை என் செய்யும்?
-
- 6 replies
- 1.9k views
-
-
உன் மகன் தமிழீழ விடுதலைப் புலி வீரன்….. பார் முழுவதும் இவளைப் பார்ப்பதால் பார்வதியானாளா..? ஐயாயிரம் ஆண்டு தமிழன் வாழ்வை அழித்தெழுதிய ஆற்றல் வீரன் பிரபாகரனைப் பெற்றதால் பார்போற்ற நின்றாளா..? வீரத்தமிழன் வரலாறு செத்துப்போகா தியாகத்தை எழுதிய புலிகள் பாய்ந்தெழுந்த தாய் நிலமானதால் புகழ்பெற நின்றாளா… ? அன்று.. தாயிறந்த செய்தி கேட்டு துறவியாய் தொலைந்த பட்டினத்தாரே துடிதுடித்து ஓடிவந்தார் தாய் படுத்த சுடலைக்கு.. நீ பெற்ற பிள்ளை.. மானமுள்ள தமிழனுக்கெல்லாம் நீயே தாயென்று போற்றி.. இன்று உன் பிள்ளைகள் உலக முழுதும் உன் சவக்கட்டில் ஏந்தி ஊர்வலமாய் போகக் கண்டான் போய் வா தாயே.. தன்மானம் குலையா தலைமகன் வேலுப்பிள்ள…
-
- 0 replies
- 819 views
-
-
எந்த வெள்ளை புறா நடந்து சென்ற பாத சுவடுகள் இந்த நட்சத்திரங்கள்?! வானம் இரவு நேரங்களில் போர்த்திக் கொள்ளும் பொத்தல் நிறைந்த போர்வையா இந்த நட்சத்திரங்கள்?! பால் நிலா தோட்டத்தில் பூத்திருக்கும் தேன் மல்லிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! வானம் சுத்தம் செய்யப்படுவதற்காய் தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா இந்த நட்சத்திரங்கள்?! மேக தேவதைகளின் உறக்கத்திற்காய் வான் மெத்தை மேல் தூவப்பட்ட வெள்ளிப் பூக்களா இந்த நட்சத்திரங்கள்?! நிலாவிற்கு வர்ணம் பூசினப்போது சிந்தின துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! விதியினை எழுதும் எழுதுகோலில் மை உள்ளதா என்று இறைவன் உதறிப் பார்த்த துளிகளா இந்த நட்சத்திரங்கள்?! வானம் …
-
- 6 replies
- 1.7k views
-
-
தியாகத்தாயே! சரித்திரம் தன்னில் பேரெழுதிச் சென்ற சத்தியத் தாயே பூபதியே! நித்தமும் நின்னை நினைக்கின்றோம் உனக்காய் கண்ணீர் வடிக்கின்றோம்! அரக்கரினத்தின் கொடுமையினை எதிர்க்கத் தாயே பூபதியே! அஹிம்சை வழியில் நின்றாயே! அகிலத்தை நீ வென்றாயே! விதியின் வழியில் சாகாமல் ஈந்தாய் அம்மா உன் உயிரை தமிழரினத்தின் தன் மானத்திற்கு எழுதிச் சென்றாய் முன்னுரையை உந்தன் தியாகம் உலகறியும் நம்மை சூழ்ந்த பகையும் உடனகலும் வேகும் தீயில் யாகம் செய்யும் வேங்கை வழியில் பகை முடியும்! நாடே அறியும் வகையில் நீ இருந்தாய் விரதம் உண்ணாமல்! ஈழத் தாயே!! எம் பூபதியே! விடியும் நேரம் மிக விரைவில்!.. பறக்கும் புலிக்கொடி ஈழமண்ணில்!. நன்றி..
-
- 6 replies
- 1.4k views
-
-
காதலி வார்த்தைகளுக்கு வாள் வீசக் கற்றுக் கொடுத்தாய்! என் இதயச் சுவரில் எத்தனை கீறல்கள்... கீறல்கள் மேல் இதழ் தேடல்கள் நடத்து... என் வாலிப வானம் விடியட்டும்! குரலில் எதைக் குழைத்தாய்...? என் இதய நாளங்களில் குளுக்கோஸ் ஏறுகிறதே...! விழிகளில் சொருகிய வேல்களைக் கழற்று எத்தனை தடவை நான் இறப்பது?
-
- 5 replies
- 1.4k views
-
-
இருமை - வ.ஐ.ச.ஜெயபாலன் நான் சிறுசாய் இருக்கையில் உலகம் தட்டையாய் இருந்தது. எங்க பாட்டிக்குத் தெரிந்த ஒர் அரக்கன் ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி ஒளித்து விட்டானாம். அப்போதெல்லாம் பகல்தொறும் பகல்தொறும் ஏழு வண்ணக் குதிரைத் தேரில் சூரியன் வருகிற வழி பார்த்திருந்து பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன். ஒரு நாள் வகுப்பறையில் என் அழகான ஆசிரியை உலகை உருண்டையாய் வனைந்து பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள். சூரியனை தேரினால் இறக்கி பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள். பின்னர் கல்லூரியிலோ ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள் கோடி கோடி சூரியன் வைத்தார். இப்படியாக என் பாட்டியின் மானச உலகில் வாழ்வு மனசிலாகியது. கற்ற உலகிலோ எனது அறிவு கவசம் …
-
- 15 replies
- 2.2k views
-
-
கடல் வெள்ளம் போல் புகுந்து கனவுகளை வளர்த்தவளே காந்தப் பார்வையாலே கண்களுக்குள் இனித்தவளே தவறு நான் செய்யவில்லை தண்டனை நீ தருகின்றாய் சிறைக்குள் நான் துடிதுடிக்க சிரித்து நீ போகின்றாய் ஊமைக் குயிலடி நான் உள்ளுக்குள் அழுகின்றேன் ஓரிரு வார்த்தைளோ மெல்ல மெல்ல கொல்லுதடி என் உதிரத்தால் எழுதி வைக்கும் உண்மையடி பெண்ணே நீ போகுமிடமெங்கும் பாதி உயிரோடும் என் பயணம் தொடரும் புத்தகப் பையுக்குள்ளே பாவத்தை சுமப்பவளே இறந்து நான் போன பின்னே என் இதயத்தை அறுத்துப்பார் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் உன் பெயர் அப்போதாவது நீ என்னைக் காதலி...
-
- 0 replies
- 659 views
-
-
வடக்கால உள்ள காணியை அடகுக்கு விட்டு ஊர் சாகட்டும் நீ பத்திரமா.. வடக்கை விட்டு ஓடு என்று ஆத்தா விரட்டி அடிக்க.. ஓடி வந்து.. சிங்களக் குகையினில் சிங்கிள் றூமில.. பதுங்கிக் கிடந்து.. எனக்கு முதலாவே செல்லடிக்க முதலே 83 யூலையோட.. வசதியா தாம் வாழ என்று இருந்த இரண்டு மாடி வீட்டை வித்துப் போட்டு.. மேற்கால ஓடி வந்த குடும்பத்தில வந்த ஒருத்தனை செற்றப் பண்ணி.. நானும் மங்கை என்று வந்து செற்றிலாகி இப்ப நாலு குழந்தை பெத்து அதுகளும் குழந்தை பெறும் நிலைக்கு வந்திட்டுதுகள்..! ஒரு நாள் தற்செயலா.. கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க.. தலைமுடி ஓரமா டை பூசாமல் விட்டதால தெரிஞ்ச அந்த நரைக்கும் வெள்ளை முடிகள்... ஊரில.. வெத்தில…
-
- 48 replies
- 6.6k views
-
-
மூடிய கனவை இமையா பறிக்கும் சூரியப் பகலை முகிலா மறைக்கும் ஆடிய தெருவை சுவடா மறக்கும் ஆணவம் அதனை அறிவா மதிக்கும் நேரிய வழியை நிழலா தடுக்கும் நித்தியா தாமரையின் நிஜமா பொறுக்கும் மூழ்கிய படகை கரையான் அரிக்கும் முற்றிய பகையை மனமா சலிக்கும் நம்மை நாமே பழுது பார்க்கலாம் நாளை உண்டு சபதம் ஏற்கலாம் முகநூல்
-
- 1 reply
- 760 views
-
-
எங்கிருந்தோ ஒரு பட்சி வந்து சொன்னது மங்குவது போலிருக்கும் யாவும் மங்குவது கிடையாதென்று! எத்திசையும் எக்காளச் சிரிப்பு... சுற்றி வரப் பகைவனின் இருப்பு... வீழ்ந்துவிட்டோம் என்று இவர் நினைப்பு விழ விழ எழுந்த கதை பல இருக்கு! அப்போது தெளியும் மகிந்தனின் கிறுக்கு! கால காலமாய் நாமிருந்த மண் வேழம் போல் பொருதும் வீரம் நிறைந்த மண் நாணல் போல் விழுவதும் நேரம் பார்த்து எழுவதும் கூனல் வீரம் கொண்ட பகைவனுக்குப் புரியாது! புரியும் போது அவனுடலில் உயிர் தரியாது! அப்பாவிகள் பலர் இப்ப ஆவிகள்! புலி வேட்டையென்ற பெயரில் ஹெலியில் கூட வந்து குண்டு போடுகின்றீர் ஹெகலிய ரம்புக்வல்லவிற்கு தீனி போடுகின்றீர்! …
-
- 0 replies
- 738 views
-
-
நம் தலைவனின் கனவு நிஜமாக..... கவிதை - இளங்கவி..... அடிமை வாழ்வில் குப்பையாய் கிடந்தோம் கூட்டுவார் இன்றி காற்றுக்கும் பறந்தோம் ஏய் தமிழா...! உன் தேச மண்ணில் குப்பையாய் கிடக்கின்றாய் கூனிக் கிடந்து கூன் விழுந்திட்டாய் ; என்று இந்தக் குப்பை மேட்டிலே ஓர் பொறியாக விழுந்தாய் சிறுதணல் மூட்டினாய் சிறிதாகவும் புகைந்தாய்; ;பின் செந்தணல் ஆகி விடுதலை தீயை மூட்டினாய் இன்றோ கோடி தமிழனின் மனங்களில் கொழுந்து விட்டெரிந்து விடுதலைத் தீயாய் வீறுகொண்டு எரிகிறாய்......! வேதனை வாழ்விலும் வீரியம் தந்தவன்..... எங்களின் வாழ்வுக்காய் தன் வாழ்வையும் மறந்தவன்...... இருபதில் தொடங்கி இருபதினாயிரம் கண்டாய்...... இன்னமும் காண்பாய் இற…
-
- 6 replies
- 1.4k views
-
-
எங்கோ மின்சார முள்வேலிக்குள் யாரோ முகமற்றவர்கள் வதைபடட்டும். அதி புத்திசாலிகளின் முன்னெடுப்பில் ஆடல், பாடல், கொண்டாட்டங்களை, மண்ணுக்காய் மடிந்தவர்களின் வணக்க அரங்கின் பெயரால் வகைப்படுத்திக் கொள்வோம். தெருவெளிகளில் நின்று சிறுகச் சிறுகச் சொல்லிக் கதறிய இனத்தின் வேதனையை ஆழக்குழி தோண்டிப் புதைப்போம். மீள மீள வசதிக்கேற்ப வரலாற்றுப் பிழைகளை நியாயப்படுத்திக் கொள்வோம். வாதையில் உறவுகள் வருந்திக் கிடந்தாலும் வரும் வசந்த விழாக்களுக்கு நாமே வழிகாட்டிகள் ஆவோம். நாங்கள் புலம்பெயரிகள். புண்ணாக்குத் தின்றாலும் விண்ணாணம் பார்ப்போம். விளக்கங்கள் கொடுப்போம்.
-
- 12 replies
- 1.8k views
-
-
தியாகத்தின் சிகரங்கள்..! வீர யாகத்தின் அகரங்கள்...!! காற்றோடு கலந்தவர்கள்...! வீர காவியம் ஆனவர்கள்...!! நெருப்பாற்றில் குளித்தவர்கள்...! வரலாற்றில் நிலைத்தவர்கள்...!! மரணத்தை வென்ற மாவீரர்...! தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!! மாவீரச் செல்வங்களே...!!! உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் அழிக்கிறான்...!? உங்களின் நினைவுநாள் கூட எதிரிக்கு உறுத்தும்! அதனால்தானே... அனைத்தையும் தடுக்கிறான்...!? உங்களின் தியாகத் தீயில்தான்... இன்னும் நாம் குளிர்காய்கிறோம்! இவ்வளவு இழந்த பின்னும்... இன்னும் நாம் உயிர் வாழ்கிறோம்!! இனியும் நீங்கள் எங்களுக்காய் உங்கள் ஆத்மாக்களை எழுப்பாதீர்கள்! நிம்மதியாய் உறங்குங்கள்...! உங்கள் கனவு…
-
- 11 replies
- 1.7k views
-
-
இருண்ட கண்டத்தில் விரிந்த மலரே! வாழ்த்துக்கள். இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே! மேகங்களிடம் ‘முத்தங்களும்’ காற்றிடம் ‘மலர்ச்செண்டும்’ அனுப்பியுள்ளோம். பெற்றுக்கொள். ‘இதரைவாழைக்கன்றுகள்’ இரண்டை இனிவரும் கடலலைகளிடம் கொடுத்து விடுகின்றோம். கொடிமரத்துக்கருகில் பாத்தி கட்டி நாட்டிவிடு. அடிபெருகி எங்கள் அன்புக்குக் குலைதள்ளட்டும். நேற்றுவரை தென்னாபிரிக்கா என்றே உன்னை அழைத்தோம். இன்று ‘என் ஆபிரிக்கா’ என்றே இங்கே ஒவ்வொருவரும் உச்சரித்துக் கொள்கின்றோம். ‘வாஸ்கொடாமா’வுக்கு மட்டும்தான் நீ ‘நம்பிக்கைமுனை’யாக இருக்கவில்லை போராடும் எங்களுக்கும் அப்படித்தான் புலப்படுகின்றாய் நெல்சன் மண்டேலா! கறுப்புச் சிங்கமே! கையை நீட்டு. குலுக்கிக் கொள்ளுவோம். உன்னைக் கட்டித்தழு…
-
- 0 replies
- 838 views
-
-
பாதச் சுவடுகளால் கலைந்திருந்த அழகிய முற்றத்தில்.. நிசப்தங்கள் நிறைந்துகிடக்கும்.. முல்லையும் பூவரசும் கருமை பூண்டு கனத்து நிற்கும் ஓணான்களும் அறணைகள் அமைதிக்குள் நகரும்.. குயில்களும் புலுனிக் குருவிகளும் அரைவிழியில் உறங்கிக் கிடக்கும்.. முழுதும் முழுதும் வற்றிப் போயிருக்கும், நேற்று நீ இருந்த முற்றம்... நேர காலமின்றி வரவுகளால் நிறைந்திருந்த முற்றம் அது.. தூணிலும் கதவிலும் படிந்த கருமை நிழல்களை தோற்றுவிக்கும் யாருக்காவது இப்போது... நீ பிரிந்தபின் மொழியின் இனிமை தொலைந்து போனது விழியின் வெளிச்சம் கலைந்து போனது வெளித்தெரியாத இறப்பொன்றுடன் கைகோர்த்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என் நினைவுகளும் கனவுகளும்... அந்த ம…
-
- 1 reply
- 515 views
-
-
அறம் -வ.ஐ.ச.ஜெயபாலன் கண்ணகி உயர்த்திய ஒற்றைச் சிலம்புக்கே மதுரையோடு மன்னனும் அழிந்தான். முள்ளிவாய்க்கால் ஊழியின்போது குருதி சிந்தச் சிந்த உயர்ந்த ஆயிரம் ஆயிரம் ஒற்றைச் சிலம்பால் கொடுங்கோல் மன்னனின் தோழ தோழியர்கள் முடியிழந்தின்று தெருவினில் அலைகிறார்.. சிலம்பே சிலம்பே ஒற்றைச் சிலம்பே இசைப்பிரியாவும் தோழ தோழியரும் உயர்த்திப் பிடித்தத தர்மச் சக்கரமே கடலில் வீழ்ந்த தமிழக மீனவன் கைகளில் உயரும் ஒற்றைச் சிலம்பே தமிழன் குருதியைச் செங்கம்பளமாய் இன்னும் எத்தனை நாட்கள் விரிப்பரோ தர்மம் நசியக் கொடுங்கோல் விருந்து இன்னும் எத்தனை நாட்க்கள் வருவரோ
-
- 6 replies
- 1.3k views
-
-
உறவுகளே தொடர்கதை போல் தொடர் கவிதையை இங்கு படைப்போமா? நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும். முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா? அந்த நாள் எந்த நாளோ? சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு புத்தகப்பையை அனணத்தபடி சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு :arrow:
-
- 54 replies
- 8.1k views
-
-
-
- 13 replies
- 2.1k views
-
-
மானத்தி அவள்; தமிழச்சி!! செய்தித் தொகுப்பாளர் இசை ப்ரியா! 1 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு; உயிரிருந்தும் உலவும் நாம் - அதை கண்டும் - சாகாத; இழி பிறப்பு!! ————————————————————– 2 மானத்தில் - தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் - பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் - தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் – சிங்களனுக்கு!! ————————————————————– 3 அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால் ஒன்று பார்த்தவரையெல்லாம் எரித்திருப்பாள், அல்லது – தன்னையாவது எரித்துக் கொண்டிருப்பாள்!! ————————————————————– 4 தப்பித் தவறி அவள் பிள்ளை இதை பார்த்திருந்தால்- எத்த…
-
- 2 replies
- 1.7k views
-
-
வலைப்பூவெனும் வலையால், இணையத்தின் துணையால், கடலலைபோல் எழுந்தேகி... எண்ணக்கடலின் கரை தேடலாம்! வண்ண வண்ண வடிவங்களாய்... எண்ணமெல்லாம் வடிக்கலாம்! சின்னச் சின்னச் சித்திரமாய்... எழுத்துக்களைச் செதுக்கலாம்! காகிதத்தில் எழுதி, கடிதங்களாய் அனுப்பி, காத்திருந்து காத்திருந்து... பார்த்திருக்கத் தேவையில்லை! இணையச் சுவரில் கிறுக்கிட... வலைப்பதிவொன்று போதுமே! உலகமெல்லாம் பகிர்ந்திட... வலைப்பூவுலகும் விரிந்திடுமே! விசைப்பலகை தடவி விரலால், வலைப்பூவில் தூவி வினாடிகளில்... உலகமெங்கும் மலர்ந்திடுமே - உங்கள் எண்ணங்கள் வண்ணங்களாய்...! எண்ணங்களை எழுத்துக்களாய்... படைப்பவனும் பிரம்மன்தான் ! வண்ணம் தரும் வார்த்தைகளை... வடிப்பவனும் ரவிவர்மன்தான் !! வலைப்பூவை உருவா…
-
- 2 replies
- 780 views
-
-
அழகிய திருமுகம் பார்த்து சில நொடி சிரித்தேன் மறு நொடி இதயம் புகுந்தாய் …. தசைகள் சிரிக்க விடவில்லையோ? பெண்ணே நான் உன் இதயம் புகுந்தேன் என்று ஏற்க மறுக்கும் உன் பார்வை அர்த்தம் தெரியா அந்த ப்பார்வை. கற்பனைகளுக்குள் காலடி வைத்தது எந்தன் இதயம். …. ஒருநாள் பொறுக்க வைத்து மறுநாள் மலர்ந்த புன்னைகையில் இதய நாயகணாக வைத்தாய் கண்ணே. ….. தொலைதொடர்வில் பயத்தோடு கேட்டாய் சந்தோச என் அலர்ரலை. சில நொடியில் ராஜரீகம் ஏரினாய் என் ரானியாய். பல நெறி சொல்லி உன் உயிராக்கினாய் அழகிய ராஜ்யதியே ====================================================================== முதல் பார்வையில் வரும் காதல் பற்றி எழுத்து பிழைகளு…
-
- 1 reply
- 3.7k views
-
-
சற்று ஆறுதல்…! -------------------- கடந்த சில நாட்கள் கடப்பதே துயரமாய் கடந்து போனது கண்களில் நீருடன் திரண்ட தமிழகம் தீர்ப்பினை மாற்றென நீதியைக் கோரி நீண்டது தெருக்களில் தமிழகத் தாயோ தன்னால் முடிந்தததை அவையிலே செய்தார் அரியதோர் நகர்வாய் அமைந்தது கண்டோம்! மூவரின் உயிரை முழுதுமாய்க் காத்திட உலகம் எங்கும் வாழ்கின்ற தமிழரே உறுதியோடு குரல் கொடுப்பீரா? காப்பது என்ன மூவரின் உயிரா உயிருடன் இணைந்து நீதியுமல்லவா? நீதியை காத்திட நெருப்பென எழுகின்ற தமிழக உறவே பற்றிக் கொள்கிறோம் நன்றியுடனே! நாதியற்றவன் தமிழன் என்பதை நாளைய சந்ததி எதிர்கொள்ளலாமா? மீட்கும் வரைக்கும் நீதியைக் கேட்போம் நீதியை மறுத்தால் தமிழனுக்…
-
- 8 replies
- 1.2k views
-
-
காதலை தருகின்றேன் இரண்டாண்டுகளுக்கு முன் இதயத்தில் உதித்த காதலை இன்று என்னிடம் சொல்லிய இளங்காளையே நீ நலமா? இன்று எனை சந்தித்த போது உன் கைவிரல்கள் நடுங்கியதேனோ பேச்சுக்கள் தடுமாறியதுமேனோ வியர்வைத்துளிகள் பூத்ததுமேனோ "எந்தன் குரல் கேட்டு உந்தன் பேச்சதனை மறந்தனையோ என் கண்களைப் பார்த்து உன் தூக்கத்தையும் தொலைத்தனையோ" ஓ...! இதைச் சொல்லத்தானோ இவ்வளவு தயக்கங்களா இருப்பினும்... நீ சொல்லிய காதலை உடன் ஏற்க மறுத்த என்னில் கோவங்கள் சிறிதுமின்றி சோகமான சிரிப்போடு நாளை என் பிறந்ததினம் நீ கட்டாயம் வரணும் என என் தலையில் கைவைத்து சத்தியம் செய்து சென்றவனே உன் பிறந்தநாள் பரிசாக என் காதலை உன்னிடம் தருகின்றேன்
-
- 46 replies
- 5.5k views
-
-
நம் வாய்ச் சண்டைகளை எல்லாம் முடித்து வைக்கிறது நம் இதழ்கள் ஒன்று சேர்ந்து * பலர் என் மேல் படர்ந்தபோதும் என்னுள் முளைத்தது நீ மட்டும்தான் * நீ நடுங்கி நடுங்கி தந்த உன் முதல் முத்தத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை நிலா நடுக்கத்தில் பயந்து பயந்து வாங்கியதால் * நீ பூச் சூடி பொட்டு வைக்கும்போது முடித்து வைக்கிறேன் உனக்கான என் அன்றைய கவிதையை * அடிக்கடி நீ காணாமல் போகும் தருணங்களில்தான் உணர்கிறேன் நீ தேவதை என்பதை -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.1k views
-