Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by shanthy,

    என்றும் போல.... நிலவுக் கதிர்களை விழுங்கிச் செல்கிறது மழைக்கால வானம். மாவீரம் சொன்னபடி மழைத்துளிகள் நிலம் நனைக்க கருவறை வாசம் நினைவேற்று நித்திரை அறுகிறது..... ஒளிக்காட்சியொரு பொழுதில் உயிர் அதிர்த்த ஞாபகத்தில் விழிக்காட்டிக்குள்ளிருந்து துளித்துளியாய் சொட்டுக்கள்..... சென்று வருவதாய் சொல்லிப் போனவனின் கடைசிக் கடிதத்தின் சொற்கள் கசங்சி மங்கலாகி பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப் பாடமான பின்னாலும்.... அவனைக் காணும் அவசரம் என்றும் போல..... இரவுக் கரி திரட்டி ஒளியின் விழி தன் உயிரில் திரிமூட்டி ஊரதிர உயிர்க்காற்று பேரதிர்வாய் நிறைகிறது. சொல்லாமல் கொள்ளாமல் சென்றவனின் சிரித்த முகம் கொல்லாமல் கொல்…

    • 2 replies
    • 1.1k views
  2. Started by Sembagan,

    மானின் விழி கண்டு மருண்டு நான் நின்றபோது அன்ன மொன்று வந்து அவள் நடையைக் காட்டியதே.

    • 3 replies
    • 1.3k views
  3. சர்வதேசமே கண் திறவாயோ ? தரணியிலே தலைநிமிர துடிக்கின்ற இனம்! இனிமையான மொழியோடு இரக்கமுள்ள மனம்! வந்தாரை வரவேற்க வாசலில் காத்திருந்து அன்பைப் பரிமாற ஆசையுள்ள சனம் பச்சைக் கிளிகள் பசுமையான வயல்கள் பண்பாடும் குயில்கள் பணியாத பனைமரங்கள் கலை கலாச்சாரம் கனிவான பண்பாடு தளராத துணிவுதான் தமிழரின் அடையாளம் உங்களோடு இணைகிற நாடுகள் உருகிட உலகத்தின் செவிகளில் எங்களின் பூபாளம் உரிமைக்குரல் ஒலிக்க வீதியிலே ஊர்வலம் முட்களை விழுங்கி சிறகடிக்கும் பறவைகள் சாவிலும் வாழ்வோம் நிகழ்வே உணர்த்தும் நாங்கள் விடுதலை சுமந்த எரிமலைகள் மூன்று தசாப்த்தங்கள் மூச்சுவிடாத போராட்டம் எங்கள் குஞ்சுகள் குருதியில் கரைகிறது …

  4. யாழில் கலவரம் நீ யாரென நினைத்தால் யானென்ன செய்வேன் நீ உரைத்தே குரைத்தால்- நானென்ன உறங்கியா போவேன்?? நீ நினைத்ததை திணிக்கின்ற நினைப்பதை மறந்திடு கருத்து சுதந்திர கன்னியம் காத்திடு. தலைமேலே ஆணவம் தலைமேலே அமர்ந்தால் தடக்கியே விழுவாய் தடமது அழிவாய்... யாழது நிலவரம் யாழினில் என்றால் அன்னியன் நீயுமே- உனை அடித்தே உதைப்போம்.... தட்டியே கேட்காமல் தவறதை விட்டால் வருந்தியே அழுகின்ற வம்சமாய் ஆவோம்.. காத்த பொறுமைகள் காற்றோடு பறக்கட்டும் இனியும் பொறுத்தால் இமயங்கள் தகரும்... சுதந்திர ஊடக சுதந்திரம் மிதித்தால் - உனை சுடுகாடு அனுப்பாது விடுவது முறையோ...??? - வன்னி மைந்தன் -

  5. கரைந்து ஓடும் காலங்களின் கரை சேரா நாட்களுடன் கனவுகளைச் சுமந்து கால்கடுக்க நடக்கின்றனர் கண்களை மூடியபடியே காரணம் அற்றவர்கள் காற்றும் சென்றிடமுடியா கனதியான வெளிகளினூடே கர்ப்பம் சுமக்க முடியாதவராய் கருகிப் போனவர் முன்னே கபடு நிறைந்த முகங்களுடன் கல்லறை தேடுகின்றனர் கிரகிக்க முடியாத கணக்குகளை கிஞ்சித்தும் காணமுடியாது கிளர்ந்தெழும் கீற்றுக்களாய் கீழ்ப்படிய மறுப்போர்க்கான கடைநிலைக் கருவறுப்பாய் காகங்களின் கரைதல்கள் கோரமுகங்கள் உருமாற கொடுவினையின் உருவங்களாய் கொள்கைகள் அற்றவராய் கூற்றுக்கள் குதிர்களாக கும்மாளத்துடன் அலைகின்றன காற்றின் கடும் வீச்சில் கலைந்தே குலைந்துபோகும் கனமற்ற கடதாசிக் குருவிகள்

  6. தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்! சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ…

    • 0 replies
    • 812 views
  7. Started by கஜந்தி,

    காவியக்காதல் முதல் கலியுக காதல்வரை இதிகாசம் முதல் இலக்கியம் வரை கனவுமுதல் கற்பனைவரை அப்பப்பா பெண்கள்பாடே பெரும் பாடு எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள் ஆதிமுதல் அந்தம்வரை அத்தனையும் உங்கள் கற்பனைக்குள் ஆனால் இவர்கள் கோலங்கள் தான் இங்கே அழங்கோலமானது எதற்காய் இத்தனை பரிகாசம் யார் இவர்கள் பொம்மைகளா? மாற்றங்களே இல்லாது வாழ்வதற்கு இல்லை அதிசய பிறவிகளா? இல்லை உணர்ச்சியற்ற ஜடங்களா? எதற்காக இவர்கள் மீது இத்த வெறுப்பு இதை புரியாது தவிக்கின்றது இந்த வெள்ளை ரோஜா

  8. கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்

    • 45 replies
    • 7.7k views
  9. ஈழக் கவிஞனின், உள்ளத்தின் ஈரமும்.. இனத்தின் வலியின் ஆழமும்... புரியும், இக் கவியை கேளுங்கள். ஈழக் கவிஞர் கு.வீரா.

  10. "நாளைய உலகம்" / "Tomorrow's World" "பொத்தானை அழுத்தி, மறு கரையில் காதலிப்போம் ஜன்னளை திறந்து, புதியவானம் காண்போம் கண்ணே? உலகம் சுருங்குதோ, எண்ணம் அப்படி தோன்றுதோ தொழில் நுட்பம், அப்படி மாற்றுதோ கண்ணே?" "நாளாந்த வாழ்வில், பல பல மாற்றங்கள் ஒன்றாய் அனுபவிப்போம், ஆனால் எந்த இழப்பில் கண்ணே? ஆண்டாண்டு மாசுபடுத்தி, சூழலை கெடுத்து விட்டோம் நெருக்கடி வந்தபின்பே, மாற்றுவழி தேடுகிறோம் கண்ணே?" "மதிநுட்ப சிந்தனையாளனா, நாம் மரத்துப்போனவனா இன்றைய நிலையை எப்போது சிந்திப்போம் கண்ணே? கண்மூடித்தனமாக அழிவை நோக்கி பயணிக்கிறோமா [அல்லது] தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கி…

  11. எஞ்சியுள்ள நாட்களுக்குள் எங்கள் போராட்டமும் வாழ்வும் பற்றி எழுத உட்க்கார்ந்தால் துக்க தினமாகும். உள்ளமும் உயிரும் சோர்ந்து போகிறது. 2009 மே 19ல் இருந்து முயன்று ஆறு மாதங்களாக எழுத முயன்று இறுதியில் 2009 டிசம்பரில்தான் என்னால் “தோற்றுப் போனவர்களின் பாடல்” அஞ்சலியை எழுத முடிந்தது. மே 19 என்னைபோலவே பல லட்சம் மக்களை ஆழுமைகளை உடைத்து நிரந்தர விரக்தியுள் முடக்கிய கரிநாளாகும். இருக்கிற கொஞ்ச நாட்களில் நான் சில விடயங்களை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லவேண்டும் என நினைக்கும்போதெல்லாம் விரக்தியில் மனசு நொருங்கிப்போகிறது. வெளியில் இருந்து பார்கிறவர்கள் நினைக்கிறதுபோல வன்னியில் விவாதங்களேயற்ற சொல்வதைச் செய் என்கிற சூழல் எல்லா மட்டங்களிலும் நிலவியது என்பது உண்மையில்லை. முஸ்லிம்கள்…

    • 0 replies
    • 782 views
  12. Started by uthayakumar,

    • 0 replies
    • 735 views
  13. காலத்தின் சாட்சியாய் துடிக்கிற கவிதைமனத்துள் செட்டை அடிக்கும் நினைவின் பிரளயம் மாக்ஸ்சின் தத்துவம் கண்முன் விரிவதை கட்டவிழ்த்து சுடுவதெல்லாம் ஒளிப்பதுபோல் எதிர்பார்ப்பற்ற இரங்களில் பேர்ரொன்றிடம் வரம்பெற்ற கைகளை அரிக்கின்றது உயிர்கொண்டு அணைபோட்ட நேரத்தில் அவர்கள் கருக்கிவிட்ட விருப்பங்களின் விதைள் விருட்சமானதில் நிழல் குளித்த தருணங்கள் ஆகாய வெளியைப்போல் இன்னும் நீள ஆணிவேர் போல் நினைவு காவும் உள்ளம் கண்ணீர் பனிக்கும் தருணங்கள் படிமமாய் பரம்பரைக்கு கைமாற தீயாகங்கள் உயிர்பெறும் இலட்சியக் காவிகளாய் நிழள் குளித்தவன் பொய்யில் மறைத்த வாழ்க்கை கோறையாய் உறுமாற ஒரு விளக்கு எரியும் விடுதலையின் ஒளியாய் இரவை …

  14. தம்பி ராஜாவும்... அண்ணன் டவாலியும்..! எதை பற்றி பேச வேண்டும் அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் வியாபாரம் என்ன என்று சொல்லுங்கள் இடம் வாங்க வேண்டுமா அதற்கும் எங்களிடம் நபர்கள் இருக்கிறார்கள் அணைத்து வியாபாரமும் இணைய தளம் மூலம் வைத்துக் கொள்வோம் கவிதை எழுத்து பதிவுகள் பிண்ணூட்டங்கள் இவை அனைத்தையும் எரித்து விடுவோம் அல்லது எறிந்து விடுவோம் பத்தாயிரம் அல்ல சில பத்தும்... பத்தும் போதுமானவை..? கியாரண்டி கொடுக்கப்பட்டு விட்டன..! மரணம் நிகழ்கிறது கொண்டு போய் எறிப்பீர்களா மண்ணுக்குள் செம்முவீர்களா..? ஆனாலும் ஏதோ ஒன்று மீன் முள் குத்தியதைப் போல நல்ல விருந்து உண்டு வாந்தி எடுத்ததைப் போல …

  15. மரணத்தின் முதல் படியில்...... தூக்கம்......... மரணமெனும் வீட்டின் கனவு எனும் ஜன்னல் கொண்ட கவலை மறந்து களைப்பு ஆறும் தங்குமிட விடுதி......! உள்ளே செல்வதற்கு அனுமதி உனக்கு மட்டும் தான்.... உன் எந்த உறவும் உன்னுடன் செல்வதற்கு அங்கே அனுமதி மறுப்பு...... தனிமையிலே இனிமை காணும் மாய மண்டபம்...... ஒவ்வொரு நாட்களும் உனக்கு அங்கிருக்க அனுமதி சிலமணி நேரம் சில வேளைகளில் வெளியே வரும் கதவுகள் மூடப்பட்டால் உன் ஜன்னல்களும் சாத்தப்படும் அன்றுடன் உன் வெளியுலகத் தொடர்புகள் அனைத்தும் துண்டிப்பு உனக்கும் நிரந்தர விடுமுறை அதுதான் உன் மரணம்..... வாழ் நாளில் பெருமளவை சிலர் இங்கே கழித்திடு…

  16. அடுத்த கணம் நோக்கி எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும் அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து தப்பிக்கொள்ள முடியவில்லை சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே எண்ணங்கள் காணாமல் போயின துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள் உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள் மரண ஓலங்கள் அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள் பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன பயங்கரத்தைத் தவிர இங்கிருப்பது மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும் ஒரே அன்பான தோழன் மரணமே அவனும் …

    • 2 replies
    • 544 views
  17. "அலைமுறியும் கடற்காற்றில்" நான் கவிதைகளை எழுத ஆரம்பித்த காலங்களில் எனக்கு முந்தைய தலைமுறையில் எழுதியவர்களில் நட்சத்திரன் செவ்விந்தியனை மட்டும் தான் முக்கியமானவராக கருதினேன், இன்றும் அப்படித் தான் . சேரன்,வ .ஐ. ச ஜெயபாலன் , ஊர்வசி, சிவரமணி எல்லாம் ஏதோவொரு புள்ளியில் வேறு விதமான அனுபவங்களைத் தருபவர்களாக இருந்தார்கள். நட்சத்திரன் செவ்விந்தியன் செவ்விந்தியனின் "வசந்தம் 91" தமிழில் வந்த முதல் தொகுப்புகளில் முக்கியமானதொன்று. அதன் மொழியமைப்பு மிகவும் சரளமான , நதியின் மேல் எறியும் கல்லைப் போன்று தாவிச் சென்று மறைவது. * ரமணன் அண்ணாவின் வீடு தான் எனக்கு ஏராளம் புத்தகங்களைக் காட்டித் தந்த வீடு . குறைந்தது ஆயிரம் புத்தகங்கள் ,ஆயிரமும் தேர்ந்தெ…

  18. பாலைவனத்தில் பந்தாடும் சிறுத்தைகளுக்கு... (05.06.2012 அன்று தமிழீழ தேசிய உதைபந்தாட்டஅணி முதன் முதலாக பாலைவனத்தில் பந்தாடியபோது வெளியிடப்பட்டது.) பாலைவன தேசத்தில் எங்கள் சிறுத்தைகளின் பந்தாட்டம் பக்கம் இருந்து பார்க்கின்ற கொடுப்பனவு எமக்கில்லை எட்ட நின்றாலும் பக்கம் வந்து உணர்வாலே உம்மை பாடி வைக்க தமிழ்தாய் வரம் தந்ததால் பாடுகின்றேன் உம்மை வெற்றித்திலகமிட்டு வாழ்த்துகின்றோம் வீரரே ! வென்று வாரும். சாவினிற்க்கு அஞ்சாதோர் மீது சாற்றிய கொடியொடு சென்றுள்ளீர் நிச்சயம் வென்றுதான் வருவீர்!!! குண்டடிபட்ட எம் தேசக்கொடி பந்தடிக்கும் வீரரே! உம்மால் பாரினில் பறக்குது இன்று காணொளியில் கண்டதுமே கை கூப்பித் தொழுகின்றோம் கதிரவன் உதிக்கும் திசை நோக்கி எத்தனை ஆயிரம் வீர…

    • 10 replies
    • 726 views
  19. கயல் விழியாள்... பயல் மனசைப் பறிக்க, வயல் வழியால் ஏதோ புயல் வருதே! காதலும் வேண்டாம்... கூடலும் வேண்டாமென... ஒதுங்கிப் போனவனின் மனம், பதுங்கிப் பாய்கிறதே! செதுக்கிய சிற்பங்களின் பார்வையில் வழுக்கிய இதயம் இடறி... வாய்க்காலோரமாய் விழுகிறதே! மனத்தடைகளைத் தகர்த்து... உடலுடைகளை அவிழ்த்து... தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி! கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!! கோவலனாகி கோணலாய்... கேவலமாகி நாணலாய்... மாறும்வரை மாற்றுகிறாள்! முத்து முத்தாய் முத்தங்கள்... ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்... தூறும் மழைச் சாரலைப்போல், மெதுமெதுவாய் நனைக்கிறாள்! நனைந்தவன் மேனியில், புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்! சிதைந்தவனின் சிந்தையில்... புதைந்தவனின் விந்தையில்... இணைந்தவள்,…

  20. அங்கே மழை பெய்கிறது! எங்கோ ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள் புரண்டு படுக்கின்றன அப்பிணங்களைத் தீண்டுகிறது நிலத்தில் இறங்கிய மழையின் நீர்க்கால் ஒன்று புதையுடல்கள் துயில் கலைந்தனபோல் உடல் முறித்து எழ முயல்கின்றன அவற்றின் உதடுகளில் இன்னும் பதியப்படாத சொற்களும் உலக மனசாட்சியின் மீது வாள்செருகும் வினாக்களும் தொற்றியிருக்கின்றன தாம் சவமாகும் முன்பே புதைபட்டதைத் தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம் கூறியிருக்கின்றன அவை தாம் இறக்கவில்லை தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன மழைத்துளியிடம் எமது மைந்தர்கள் மீது இதே குளுமையுடனும் கருணையுடனும் பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன ! -- மகுடேசுவரன்

  21. ரூபன் சிரித்திரன் 5ஆண்டு நினைவில்...! கையசைத்துப் போனவெங்கள் காலம் தந்த வீரங்களே ! கனவுடனே வானேறி கொழும்பு சென்ற கரு வேங்கைகளே ! காற்றினிலே கைவீசி முல்லைக் கடற்கரையும் காத்திருக்க கனல் மூட்டிச் சென்ற எங்கள் காவிய தீபங்களே ! அனலெறியும் தீப்பொறியாய் விழி கனலெறியத் தணலாகித் தமிழ் மானம் மீட்டுவரப் போனவெங்கள் தம்பிகளே ! மீளத்திரும்பா உறுதியோடு மீளும் தேச நினைவோடு போனவரே மீளாத்துயர் கொண்டெங்கள் மனசெங்கும் துயரலைகள் ! ஆண்டுகள் 5 தாண்டி உங்கள் ஆன்மக்கனவுகளைத் தாங்கியவெங்கள் பயணம் உங்கள் நினைவுகளோடு தொடர்கிறது.....! 20.02.2014

    • 6 replies
    • 813 views
  22. தலைப்பை சீர்செய்துள்ளேன் - யாழினி

  23. உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...! மூச்சு முட்டும்வரை... என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!! உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்! என்னை வெறியேற்றி... உன் வெறியை தீர்த்துக்கொள்ள முனைகிறாய்!!! அந்த ஆரவாரத்துக்குள்ளே.... என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது! சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து, சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்.... அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!! அது மயக்கமா....? அல்லது மரணமா....?? புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!! எச்சங்கள் மிச்சங்களை கொஞ்சங் கொஞ்சமாய்... சத்தமின்றி அழித்துவிட்டு, மீண்டுமொரு இரவுக்காய் அலையும்... இராக்கால ராட்சசியே! உன் சிற்றின்பத்துக்காய், என் குருதி குடிப்பதை... எப…

  24. போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல் சம்பூர் வதனரூபன் தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்.. தேசமாக்குவதற்கும் முடியாத போது உருவாக்குவதற்குமென அடிமைகள் எழுவர். அடிமைகள் என்பவர் எப்பொழுதும் அடிப்படையுரிமைகளுமில்லாத அப்பாவிகள் என்பதே உண்மை. ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும் அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும் அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும் அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில் அடிமைகள் போராளிகளாவதும் போராளிகளான அப்பாவிகள் பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும் பின்பு பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென.. இதற்கு நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு உலகமெங்…

  25. யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைப்பதையொட்டிய சிறப்பு நிகழ்வு! ***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 01*** தலைப்பு: "தூ!" வெனத் துரோகிகளின் தலையில் காறித் துப்பிவிடு! கவியரங்கின் நடுவர்கள் விகடகவி நோர்வேஜியன் வன்னிமைந்தன் குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்! குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு! குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007 மாண…

    • 29 replies
    • 4.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.