Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by அஞ்சரன்,

    கேட்டலும் படித்தாலும் அரைகுறை பார்த்தாலும் தெரிதலும் அரைகுறை விளக்கமும் தெளிவும் அரைகுறை கன்னியும் கவர்ச்சியும் அரைகுறை படமும் பாட்டும் அரைகுறை பேச்சும் செயலும் அரைகுறை வெட்டியும் பந்தாவும் அரைகுறை வரலாறும் வாழ்கையும் அரைகுறை நம்ம வாழ்க்கையும் அரைகுறை மற்றவன் செயலை விமர்சனம் அரைகுறை என்னை நான் தேடினேன் அரைகுறை நான் முழுமை பெறும் நாள் எப்போ அப்போ நான் மனிதன் ஆகிறேன் .

  2. முகவரி இடப்படாத கடிதம் முகவரி இடப்படாத கடிதம் இது முடிந்தால் எவராவது உரியவரிடம் சேர்ப்பிப்பீர்களா? ஓலமிட்டு அழுகின்றோம் ஓடி ஓடி நீதி கேட்கின்றோம் ஆனால் எந்த விழிகளிலும் மனித நேயத்தை காணமுடியவில்லையே. மார்ச் எட்டு என்றவுடன் உலகமெங்கும் அனைத்துலக பெண்கள் நாள் ஆடம்பரமாக கொண்டாடப்படும். ஆனால் ஒடுக்கப்பட்டோர் எம் குரல் கேட்க உலகில் எவருக்கும் நேரமில்லை. காணாமல் போகடிக்கப்பட்டவர்கள் எங்கள் உறவுகள். கணவன்,மகன்,தந்தை என நாங்கள் எங்கள் உறவுகளைத் தேடுகின்றோம் ஆறு ஆண்டுகளாக உளவலிகளால் அலைந்து உலைந்து கொணடிருக்கின்றோம் அழுது அரற்றுகின்றோம். எந்த நாட்டுப் பிரதிநிதி வந்தாலும் ஓடி ஓடி அவர்களிடம் எங்கள் நிலைமையை எடுத்தரைத்து எவராவது எம் உறவுகளைத் தேடித்தர உதவ மாட்டார்களா என…

  3. Started by sathiri,

    Tuesday, September 20, 2005 அவள் அவள் வீட்டு கதவு தானே திறக்கும் உள்ளே அணைப்பதற் கென்றே ஏற்றப்பட்ட விளக்கெளியில் உரிவதற்காய் உடுத்திய சேலையில் கலைப்பதற்கென்றே செய்த ஒப்பனையில் கசக்குவதற்காக சில மலர்களை காதேரம் வைத்து அழிப்பதற்காக வைத்த அகன்ற அழகிய பொட்டுடன் காத்திருக்கிறாள். உடம்பில் எங்கும் உணர்சியில்லை வயிற்றைதவிர என்வாயிற்று இன்று ஆணினமே அழிந்துவிட்டதா சுனாமி வந்து சுத்திக்கொண்டுபோய்வட்டதா படுக்கைவிரிப்பு பத்திரமாய் இருக்கிறதே வைத்தபொட்டு வைத்தபடியே இருக்கிறதே அதுஅழியா விட்டால் அவளிற்கு அமங்கலமல்லவா செல்லாத இராத்திரி சிறுகச் சிறுக விடியும்பகல் ஜயோ..பட்டினிப்பகலா?? எங்கோ ஒருகட்சி தலைவன் …

    • 4 replies
    • 816 views
  4. ஞாபகம் வந்த நாள்முதலாய் உன்னை எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது ஏனென்றும் எதகேன்றும் தெரியவில்லை எங்கள் நெஞ்சில் இந்தவலி எங்களின் வலி ஈழத்திற்கும் தெரியாது இவர்களின் காதலுக்கு எல்லையில்லை உன்கரம் புடிக்க இழந்தவை பல தரையில் தரைப்புலியாயை கடலில் கடற்புலியாயை வானில் வான்புலியாயை வருணிக்க வார்த்தையில்லை கரும்புலியாயை மண்ட மாவீரரும் மரணித்த மக்களும் போதும் போதும் ஈழமே எத்தனை எத்தனை வலிகள் எமக்குள் நாம் நேசித்த ஈழமே எம்மை நேசிக்க மறந்தாயோ

  5. உங்களை நீங்கள் மன்னிப்பீர்களா?...... உலக நாடுகளே............... உறுதியாகச் சொல்கின்றோம் உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் ஒதுங்கி எதிரி போல் நிற்கும் தமிழர்களே........ ஒட்டுக்குழுக்களே............... ஒருபோதும் உங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் ஐநாவே.................. ஐயம் இன்றிச் சொல்கின்றோம் உன்னை நாங்கள் என்றும் மன்னிக்க மாட்டோம் பாரதமே..............மகாத்மாவா.?!!!!!!!!!!! யாரவர்...? என்பது போல் நடக்கின்றாயே பார்த்திரு உன்னை இந்த பாருள்ள வரை (பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு?????) மன்னிக்க மாட்டோம் கடவுளரே...........கருணையின்றி கல்லாய் நீரிருந்தால் உங்களையும் தான் நாங்கள் மன்னிக்க மாட்டோம் முதல் உங்களை நீங்கள…

  6. சிந்தனையில் தீ வை...!!! தமிழகம் என் தாய் வழி உறவடா...!!! தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் தொப்புள்கொடி உறவடா...!! வேண்டாம் இந்த தீக்குளிப்பு போதும் இதுவரை கண்ட இழப்பு இனியும் தாங்கமுடியாது இனியொரு உரியிழப்பு..!! முத்துக்குமார் இட்ட தீயை - உன் நெஞ்சினில் ஏந்து உன் மேனியில் அல்ல..!!! உன் மேனியில் இட்ட தீ ஒரு வீரத்தமிழனை அழிக்கும்... உன் கண்களில் தீயை வை உன் நெஞ்சினில் விடுதலை தீயை பற்ற வை -அது ஆயிரம் தமிழனை வாழவைக்கும். உயிரை விடாதே உன் உணர்வை தா...!!! என் சகோதரா தீக்குளிக்க வேண்டியவன் நீயல்ல...!!! நில் சிந்தனையில் தீ வை...!!! உனக்கே புரியும் எரிக்க வேண்டியது உன்னையல்ல...!!! தமிழ்ப்பொடியன் 23.03.20…

    • 3 replies
    • 816 views
  7. நிழல்கள் தீண்டிய மனவறை நியங்களின் தாண்டவத்தால் நிசப்தமாகி கிடக்கிறது நிரூபனமாகிவிட்ட சில நிறுவல்கள் நியத்தை தாண்டி நிகழ்காலத்தை கூறுகின்றன இறக்க போகும் என் எதிர்காலம் நடப்புக்காலத்தால் ஆழப்படுகிறது இறந்த காலத்தின் வடுக்களும் வரும் காலத்தின் ஏக்கமும் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது தலைவிரி கோலமாய் எழுந்து எதிர்காலம் அச்சமூட்டுகிறது பிணைத்திருக்கும் பிணம் தின்னும் கழுகுகளின் கர வலிமையை எண்ணி திராணியற்று போகிறது எதிரியின் நெஞ்சம் பாட…

  8. அன்றாட நிகழ்வுகள் என்னை அழ வைத்துக் கொண்டிருக்கின்றன. கூண்டோடு மாண்டு போவதாய் கனவு கண்டேன்; அது கொஞ்சம் பலித்தது போலும். அடுப்படியில் அம்மாவும், அரை உடலாய் அப்பாவும், அக்காவை காணவில்லை, அண்ணனாக யாருமில்லை. ஆனாலும் நான் தனியாகி விட்டேனா? - அதுவுமில்லை! ஊரில் என்னைப் போல் பல்லாயிரம் பேர் உண்டாம். எண்ணைக் கொள்ளைக்காக என்னை, மண்ணைத் தின்னச் செய்தார்கள் இந்த மாயாவிகள். உயிரியல் ஆயுதம் மறைத்து வைத்தோம் எனக் கூறி என் உடன் பிறப்புகளை அனுதினமும் உயிரோடு புதைத்து விட்டார்கள் இந்த கொடுங்கோலர்கள். பழமொழிகள் பலவற்றை உண்மை என்றிருந்தேன். "அழுத பிள்ளைக்கு பால்" என்றான். நான் அழாமலே அன்று என் தாய் தந்தாள். இன்று நான் அழுகின்றேன். இந்த அன்னியர…

  9. கடமையைச் செய்ய.... மேனி ஒடுங்கி மெல்லிய நடையொடு ஒரு கையிலே துணிப் பையொன்று மறு கையிலே நெய்ப் பந்தமொன்று திருநகரிலிருந்து கனகபுரம் நோக்கி அன்னையவர்கள் நடந்துகொண்டிருந்தாள்! இது அவனுக்காய் விளக்கேற்றும் பன்னிரெண்டாவது ஆண்டு விடுமுறை கிடைத்தால் ஓடி வருவான் அவனுக்காகவே சமைக்கத் தோன்றும் சேர்ந்து உண்டு மகிழ்வான் அவன் வெளிநாட்டில் இருந்து பணம் தருவார்கள் மனம் தருவது அவன் மட்டுமே குடிசையைக் கூட கோவிலாக்குவான்! இரு குழைந்தைகளுக்கு அப்பா அவன் தாய்வீடு வந்தால் அவனே குழந்தை விடைபெறும் நேரம் விழிகொண்டு பாரான் தொடர்ந்து சென்று வாசலில் நின்றால் திரும்பிப் பார்த்து கவனம் என்பான்! அவன் உடலை தொட்டு அழவும் கொடுப…

    • 2 replies
    • 815 views
  10. Started by காவல்துறை,

    காதல் உன்னைக் காகிதத்தில் எழுதி எழுதி தொலைத்து விட்டேன் Posted by கஜந்தி at 9:04 AM காதலன் ஐயோ! பாவம் என் காதலன் அழகழகாய் உடுத்தி என்னோடு திரிந்தவன் பணத்திற்கு ஆசைப்பட்டு பக்கத்து வீட்டுப் பணக்காரப் பெண்ணைக் காதலித்து இப்படி வேலைக்காரன் ஆகி விட்டானே... Posted by கஜந்தி at 9:15 AM கணவன் இப்படி அழகழகாய் உடுத்தி உடுத்தி என் காசையெல்லாம் தண்ணியாய் கரைக்கிறாள் இவள்... ஏனடி என்றால் அவள் அழகாயில்லை என்று தானே என்னிடம் வந்தீர்கள் சின்னவீட்டு தத்துவம் புரியாதா உங்களுக்கு என்கின்றாள்.. Posted by கஜந்தி at 6:07 AM புரியவில்லை... படிப்பது அக்காவா பிள்ளையா என்று …

  11. இறைவா எனக்கு ஒரு வரம் தா ..? காதல் உணர்வை என்னில் இருந்து தயவு செய்து எடுத்துவிடு ....! அவனை உயிர் நண்பனாகவோ உயிர் காலம் வரை நினைக்க .......... விரும்புகிறேன் இடைக்கிடையே பாழாய்ப்போன மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....! நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்...... அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை இறைவா ....... என் காதல் நரம்பை துண்டித்து விடு ...! & கவிப்புயல் இனியவன் நட்பும் காதலும் கவிதை

  12. அழகிய தமிழ்மகன்..... பிறந்த நாள் வாழ்த்து மடல்..... தமிழரின் வாழ்வு மீட்க உலகில் தமிழனின் புகழ்பரப்ப ஜம்பத்தினான்கு வருடங்கள் முன் வட கடலெல்லாம் ஓசைதர கடல்பறவையும் இசைபாட மணற்காட்டு மண்ணெல்லாம் மலர்போல மண்தூவ அழகிய தமிழ்மகனாய் அழுதபடி அவதரித்தான் சூரியன்போல் ஒர் குழந்தை.... அவனின் முதல் அழுகை அன்னையின் பாலுக்கு வேண்டியல்ல அடிமை மண்ணின் சுவாசத்தை அந்தக் கணம் சுவாசித்ததற்காய்... அவன் என் நாளும் வளர்கிறான்..... தன் வாழ்வின் சரித்திரத்தை அவன் நாளொன்றாய் அறிகிறான்.... அடிமைச் சரித்திரத்தை அவனன்று அறிந்ததுமே வீரனாய் அன்று வீறுகொண்டு எழுகிறான்.... தன் இளமையின் சுகமிழந்து தமிழனின்…

  13. இனவாதச் சிங்கள அரசின் - தமிழ் இனப் படுகொலைப் பாதிப்பால் ஐ.நா.சபையில் நீதி தேவதை தற்கொலை மரணவிசாரணை மட்டும் தொடர்கிறது.

  14. " உனக்கென இருப்பேன்" என்னை விட்டுச்செல்லாதே எந்தன் பூமி சுற்றாதே உன்னை நீங்கிப்போனாலே உயிரும் என்னில் தங்காதே! காணும் காட்சி உன்னோடு! கவிதைச்சொல்லும் உன்னோடு! வாழும் காலம் எல்லாமே அன்பே நானுன் நெஞ்சோடு! இருளைக்கிழித்த சூரியனாய் எனக்குள் வந்து கதிர் விரித்தாய்! எழும்பி நடக்க நீதானே அன்பே உந்தன் விரல் தந்தாய்! எனக்கே எனக்கென புது உலகம் உன்னால்தானே உண்டாச்சு?! உன்னைச் சேர்ந்த பின்னால்தான் வாழ்வே அர்த்தம் என்றாச்சு?! காதல் என்றெ சொல்லுக்கே உந்தன் பெயரே பொருளாச்சு! இருக்கும் காலம் வரையிலுமே உனக்கே எந்தன் உயிர்மூச்சு! உயிரில் வந்து கலந்தவனே என் உணர்வாய் என்றும் நிறைந்தவனே! இமைபோல் காக்கும் க…

  15. தந்தையர் தின வாழ்த்துக்கள் சுயத்தை விற்று உழைப்பை இரைத்து உதிரம் வறண்டு குடும்பத்தை கரையேற்றும் கட்டு மரம் ! தன்னம்பிக்கை தைரியம் தெளிவு- இவை தோய்ந்த மூன்றெழுத்து மந்திரம் தந்தை ! கண்டிப்பு காட்டிடும் கண்கள் - முள்ளாய் அன்பு வழிய அக்கறை கொஞ்சும் அழகு மனம் - மலராய் ! அப்பா ! உந்தன் வியர்வை நாற்றத்தில் உழைப்பு மணக்குது ! நேர்மை மணக்குது ! புகழும் மணக்குது ! ரேகைகள் தேய்ந்து மரத்துப் போன விரல்களின் ஸ்பரிசத்தில் வாழ்வின் சோதனைகளை சொல்லாமல் உணரவைத்தாய் !

  16. அகவை பதினாறு காணும் யாழ் மகளே நீ வாழி . .கற்றோரும் மற்றோரும் கத்துக்குட்டிகளும் காளைகளும் கன்னியரும் .கற்றுத் தெளிந்தோரும்.. கற்க வருபவருக்கும் நீ கலைமகள். கண்ட நாள்முதல் மீண்டும் மீண்டும் காண வைத்தாய் .. அனைவரையும் அணைக்கும் ஆலமரம் நீ.. ஜாதி மத பேதமின்றி சகலருக்கும் சரி சமமாய் பிறப்பிலிருந்து இறப்பு வரை அறிவிக்கும் கருவியாய்.. ஊரிலிருந்து உலக செய்திவரை அத்தனயும் தரும் அமுத சுரபியாய் . .பருகத்தேவிட்டாத தேனாய் நாளும்பொழுதும் வளரும் யாழ் களமே நீ வாழி நான் மட்டும் மல்ல ஊரும் உலகும் என் பேரன் பேத்திகளும் கொள்ளுபேரன் பேத்திகளும் உன் பேர் சொல்ல வேண்டும். என்ன துயர் வரினும் எழுகவே யாழ் களமே

    • 10 replies
    • 813 views
  17. ரூபன் சிரித்திரன் 5ஆண்டு நினைவில்...! கையசைத்துப் போனவெங்கள் காலம் தந்த வீரங்களே ! கனவுடனே வானேறி கொழும்பு சென்ற கரு வேங்கைகளே ! காற்றினிலே கைவீசி முல்லைக் கடற்கரையும் காத்திருக்க கனல் மூட்டிச் சென்ற எங்கள் காவிய தீபங்களே ! அனலெறியும் தீப்பொறியாய் விழி கனலெறியத் தணலாகித் தமிழ் மானம் மீட்டுவரப் போனவெங்கள் தம்பிகளே ! மீளத்திரும்பா உறுதியோடு மீளும் தேச நினைவோடு போனவரே மீளாத்துயர் கொண்டெங்கள் மனசெங்கும் துயரலைகள் ! ஆண்டுகள் 5 தாண்டி உங்கள் ஆன்மக்கனவுகளைத் தாங்கியவெங்கள் பயணம் உங்கள் நினைவுகளோடு தொடர்கிறது.....! 20.02.2014

    • 6 replies
    • 813 views
  18. Started by poet,

    Dear Yarl, Please kindly remove this

    • 0 replies
    • 812 views
  19. என்ன தான் என்னவோ....??? குரங்குகளின் கைகளில் அகப்பட்ட பூமாலைகளைப் போல் எம் மண்ணில் பூக்கப்பட்ட எம் இன இளஞ்சிட்டுக்கள் முதல் தள்ளாடும் முதியோர்கள் வரை இவ் விசர் பிடித்த சிங்கள மடையர்களின் அடாவடித் தனங்களால் நித்தம் நித்தம் தம்மைக் காப்பாற்று என்று மரணதேவதையிடம் இரங்கல் பிரார்த்தனை செய்து கொண்டும் அல்லல்பட்டும் அவஷ்த்தைப் பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களே.... இதற்கு முற்றுப் புள்ளி என்ன தான் என்னவோ...????

  20. பெருமை கொள்ளும் செயல் வீரன் கப்டன் ஊரான் இன்பசோதி' பெயரோடு இணைந்த சோதிபோல் நீயும் ஒளிபொருந்தியவன். காற்றிலேறிக் கைவீசிச் செல்லும் வண்ணத்துப் பூச்சியாய் உனது குழந்தைக்கால மகிழ்ச்சியில் நீயொரு ராசகுமாரன். காலம் உனக்காய் கட்டியெழுப்பிய கோட்டையில் நீயே கடவுளாய் காலவிதியின் கதையாய்....! நிலவாய் நீல வானமாய் நீயுருவாக்கிய காலத்தின் கோலம் உனது எண்ணங்கள் போல வர்ணங்களாய்.....! காலச்சக்கரம் மரணப்பொழுதுகளை நுகரத் தொடங்கி உனது வர்ணங்களாலான உலகை இரத்தச் சிவப்பாக்கிய போது நீயே யாவற்றையும் விட்டு விடுதலையாகி தேச விடுதலை தேடி வீரப்புலியானாய்.....! ஊரான் உனது பெயர் போலவே ஊரைக்கவர்ந்த புலிவீரன் நீ. உன் போல உருவாக உன்போல உடையுடுக்க உன்போல …

    • 0 replies
    • 812 views
  21. தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்! சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ…

    • 0 replies
    • 812 views
  22. தொலைந்து போகும் அடையாளங்களை தூக்கிநிறுத்துவதற்கு புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும் மகிந்த வள்ளலானார் இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி…. செயலிறங்கத் துடிக்கும் புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட தூதுவராலயத்து தூதுவர்கள் அபிவிருத்திக் குச்சிகளோடு ஊரோடு உறவாட வருகிறார்கள் ஊர்சார் அமைப்புக்களே உசாராகுங்கள் குண்டுமணியளவேனும் எங்கள் சொந்தப்பலத்தில் நிகழட்டும் எங்கள் சொந்தநிலத்திற்கு சேரட்டும் புதிதாய் முளைக்கும் ஊர்ப்பற்றாளரிடம் விழிப்பாயிருங்கள் இயற்கைவளமே எங்கள் பலமென்று வாழ்ந்தவர் நாம் கடலும் வயலும் பனையும் தென்னையும் கனிதருமரங்களும் எங்கள் சொந்தம் எங்கள் நிலத்தில் மூச்சுவிட்டு இருக்கவிடு இராணுவ அரண…

  23. அவனும் இவனும்.. அவனும் கொலை செய்தான்.. இவனும் கொலை செய்தான்.. முன்னவனை தியாகி என்றனர்.. பின்னவனை துரோகி என்றனர்..

  24. Started by லியோ,

    அம்மா இருந்த உணவை பகிர்ந்து எம் வயிறு நிரப்பி நீரை மட்டும் நீ குடித்து சிரித்தபடி எமை வளர்த்தாய் வளர்ந்தால் உன்னை பார்ப்பார் என்றோ படித்து பெரியவர் ஆவார் என்றோ நீ கனவு கண்டிருப்பாய் எதுவும் நடக்கவில்லை யாருக்கும் உதவும் உன்மனம் பிள்ளைகளோடு பிறந்ததால் பிள்ளைகள் உன்னோடு இல்லை ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய் உன் இறுதிசடங்கில் கூட உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று அம்மா நீ விரும்புவாயோ இல்லையோ அடுத்த பிறப்பிலும் நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்

  25. Started by nunavilan,

    யாழ் நிலம் 0 தீபச்செல்வன் ---------------------------------------- 01 குடா நிலத்தின் யாழேசை காயமுற்றொலிக்கிறது நிலம் அள்ள வரும் கைகள் யாழை இழுத்து பிய்த்துடைக்கின்றன இந்த யாழ் உடைந்து போகட்டும்! அல்லது எரிந்து சாம்பலாகட்டும்!! என்று அறிவிக்கப்படாத பிரகடனங்களுடன் யார் யாரோ வந்திறங்கி யாழெடுத்து எறிகிறார்கள் வானத்தை பிளந்து எட்டி முகங்களை மறைக்கும் விளம்பரப்பலகைகளின் நிழலில் அடுக்கிவிடப்படட குளிரூட்டும் இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களின் கைகளிலுள்ள கிண்ணங்களில் யாழின் சாம்பலிருக்கின்றன யாழ் நகரில் வேறொரு பாடலை யாரோ ஏற்றிவிட்டு யாழோடு நிலத்தை யாரோ சாம்பலோடு கிண்ணகளில் போட்டுத் தின்று கொண்டிருக்கின்றனர் நகரெங்கும் நிலமெங்கும் …

    • 0 replies
    • 811 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.