கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
ஒரு ஜீவாத்மாவின் கவிதை ----------------- என்னை அவர்கள் மதிக்கவில்லை...... என்று கோபப்படாமல்...... அவர்கள் மதிக்கும்படி........ நான் மாறவில்லை என்று ...... கவலைப்படு - காரணத்தை..... தேடு மதிக்கப்படுவாய்.......!!! பாராட்டும் போது...... துள்ளி குதிக்கும் மனம் ....... விமர்சிக்கும் போது....... துவண்டு விழுகிறாய்....... அப்போ உன் மனத்தை ...... கடிவாளம் போட்டு .... வழிநடத்துகிறாய்.......... கடிவாளத்தை கழற்று ...... சவாரிசெய் நிச்சயம் விழுவாய்...... காயப்படுவாய்....... ஆனால் வாழ்க்கையில் ...... வெற்றி பெறுவாய்,............!!! கரையில் நின்று கடலை ...... பார்த்தால் தப்புக்கடலும்.…
-
- 1 reply
- 811 views
-
-
செந்தமிழ்த்தாயி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ…
-
- 0 replies
- 810 views
-
-
ரத்தக்காட்டேறி ராஜபக்ஷே! கவிதை, குரல் - பா.விஜய் இசை - தாஜ்நூர் கோர்வை - கார்த்திகேயன் ஆக்கம் - வா.கௌதமன்
-
- 0 replies
- 809 views
-
-
சத்தம் ... உற்றுக் கேட்டால் உனக்கும் எனக்கும் புரியும்... உலகம் முழுவதும் இடையறாது ஒலிக்கும் .... ஓம் எனும் சத்தம் .....! இதனை இயற்கையின் இரைச்சல் என்கிறார் சிலர் ....!-மற்றும் சிலரோ ஓம்கார மந்திரம் என்றனர்....! சத்தமில்லா உலகமும் இல்லை- மனித உள்ளமும் இல்லை....! நித்தமும் ஒரு சத்த யுத்தம் மனங்களுக்குள் சத்தமின்றியே நடக்கும்...! வாய் திறந்தால் சத்தமும் -திறக்காத போது மௌன யுத்தமும் நடக்கிறது...! மலர்கள் அசையும் போதும் - பட்டாம் பூச்சி பறக்கும் போதும் சத்தம் வருகிறது - மலர்களின் அசைவிற்கு ஒலி அளவுண்டு, விஞ்ஞானம் சொல்கிறது...! மனிதன் தான் கேட்பதில்லை மலர்கள் பேசும் போது ...! நம் வாழ்க்கையில் .. மனிதன் அழுவது சத்தம் ! அவன் சிரிப்பது சத்தம்...! பேசுவது சத்தம்!…
-
- 1 reply
- 808 views
-
-
இழவுச் சங்கம் ! ஆர்.மணிகண்டன் ஆலமுண்ட சிவன் சூலத்தால் குத்திக் கொண்டு செத்துப் போனான் போதி மரத்தில் மேலங்கி சுற்றித் தூக்கிட்டுக் கொண்டான் சித்தார்த்தன் சிலுவையில் தொங்கிய தேவகுமாரனும் எழுந்திருக்கவில்லை உள்ளுக்குள் அழுததாய் ஊருக்காய்ப் பிதற்றியவனின் ஆசனவாய் ஆபத்து நீங்கிய இரண்டொரு பகலில் நான்காம் முறையாக இழவுச் சங்கம் இசைத்தார்கள் முத்துக்குமரனின் ஆவி அறிவு தப்பி அரற்றும் தென்வனத்தில் வலைப் பூக்களில் நெளியும் விரல்புழுக்களுக்கு இரையாகிறது எம் இரத்தம். 1/28/2010 5:04:57 PM நன்றி - பொங்குதமிழ் இணையம்
-
- 0 replies
- 807 views
-
-
காதலனே ...இதயத்தை செல்லமாக ....கிள்பவனே....நெஞ்சத்தை கிள்ளி ....எறிந்து விடாதே ....என் ராசா ....!!!$நீ தாண்டா ....இதயத்தின் ஊமைக்காயம் ..மெதுவாகவும் கனமாகவும்வலியை தருகிறாய் ..!!!$நான் ...நன்றாக அழுகிறேன் ....அப்போதுதான் -என் இதயம் கழுவுப்படும் ..என்றாய்....காதல் என்றால் என்ன ...?என்றும் புரியும் என்றாய் ....!!!$........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ......................கவி நாட்டியரசர்.............................கவிப்புயல் இனியவன் ............................யாழ்ப்பாணம் ....................
-
- 1 reply
- 807 views
-
-
என் உயிர் உறவுகளே செத்துக் கொண்டு இருக்கும் தேசத்தில் இருந்து ஒரு குரல் நான் துள்ளித் திரிந்த தெருக்களில் குருதி ஆறு கொப்பளித்துக் கொண்டு இருக்கிறது - எம் தேகத்தின் தோல்கள் உரிக்கப் பட்டு வத்தலுக்காய் வாட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் கன்னியர்கள் ஆடைகள் களையப்பட்டு சூறையாடப் படுகிறது அவர்கள் கற்புக்கள் - எம் கண்களில் இருந்த கண்ணிர் வற்றி நடைப் பிணமாய் நாம் இப்போ........ ஜயகோ....! தமிழ்ச் சமுகமே தட்டிக்கேழுங்கள் செத்துக் கொண்டிருக்கும் தேசத்துக்கு - ஓர் சத்துணவு திட்டமாவது தரும் படி ஏன், எதற்கு எப்படி யானோம் -? நாம் இப்படி ................? கேளுங்கள் ஒவ்வொருவரிடமும் கேளுங்கள் - பதில் வராவிடின் தேடுங்கள் - அதற்கான பதிலைத் தேடு…
-
- 1 reply
- 807 views
-
-
அம்மா, இனி நீ இறந்து விடு.. பயமும் பட்டினியும் நோயும் என இன்னமும் எத்தனை காலத்திற்கு நீ செத்துக் கொண்டேயிருக்கப் போகிறாய் ? ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்கும் ஒரு நகரிலிருந்து இன்னொரு நகரிற்கும் ஒரு காட்டிலிருந்து இன்னொரு காட்டிற்கும் ஒரு நோயிலிருந்து இன்னொரு நோயிற்கும் ஒரு பசியிலிருந்து இன்னொரு பசியிற்குமென ஒரு பொதியையும் காவிக்கொண்டு இன்னமும்எத்தனை காலத்திற்கு அலையப் போகிறாய்? உன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கழுகுகள் காவிக்கொண்டு செல்வதையும் கண்டுவிட்டுத்தான் மடிவேன் என ஏன் அடம்பிடிக்கிறாய்? அம்மா, இனி நீ இறந்து விடு... அனைத்தும் பயனற்றுப் போய்விட்டது என்பதை அறிந்த பின்தான் போகவேண்டும் என நீ அட…
-
- 1 reply
- 807 views
-
-
தமிழனத் தலைவனவர் தமிழகத்தில் தானின்று அமிழ்தெனுந் தமிழுக்கே அவப்பெயரை தந்ததுமேன்? பாரே யொரு பதிலை பார்த்துக் கண்பூத்திருக்க யாரோ சொன்னதென உபவாசம் திறந்திருந்தார் பாரிலுள்ள பைந்தமிழர் பாரிய பேரணிகள் உரியமுறை உணவருந்தா உபவாசம் உறுத்தியே மருவிநிற்கு வுலகினையே கருப்பொருளைக் கேட்டுநின்று இருபத்தோர் நாளாய் இழைத்துக் கிடக்கையிலே கண்டனமும் எச்சரிப்பும் களிகூர்ந்த பேச்சுக்களும் ஆண்டபேர் நாடுகளும் ஆற்றுவது புதுமையிலை இயலான கவிநடையில் இயற்றுகின்ற வசனமதால் அயலாகும் நாடாகி அழித்தொழிக்க அரவணைக்கும் நடுவண் ணரசபையின் பொய்வார்த்தை புரியாமல் கூடும்குடும்பத்தார் குதூகலிக்க கைவிட்டீர் பெருமிதமாய் கூக…
-
- 0 replies
- 806 views
-
-
உன் - வாழ்க்கைப் பயணம் துவங்கட்டும்..! வெறும் வெளிச்சத்தை நோக்கி அல்ல விடியலை நோக்கி ======================= பதவி - இதன்மேல் நீ அமர் உன்மேல் - பதவியை அமரவிடாதே ========================= உதவி - எல்லோரிடத்தும் கேட்காதே! உதவி செய்பவர்களைத் தேர்ந்தெடு.. ========================== மரணத்தின் கர்ப்பப்பையில் கலைந்து போனவனே ! நீ செத்திருந்தால் ஊர் அழுதிருக்கும் சாகவில்லை நீயே அழுகிறாய் கைக்குட்டை இந்தா கண்களைத் துடை உயிரின் உன்னதம் தெரியுமா உனக்கு? மனிதராசியின் மகத்துவம் தெரியுமா? உயிர் என்பது ஒருதுளி விந்தின் பிரயாணம் இல்லையப்பா அது பிரபஞ்சத்தின் சுருக்கம் உன்னை அழித்தால் பிரபஞ்சத்தின் பிரதியை அழிக்கிறாய் பிரபஞ்சத்தை அழிக்க …
-
- 1 reply
- 806 views
-
-
எங்கோ ஒளிந்திருக்கிறாய் உனது தேவை என்ன சூடான ஒரு கண்ணீர்த்துளியா ? மரங்களின் மௌனத்தால் பறவைகள் அழுகின்றன யாருக்கு யார் மெல்லியதாக பரவுகிறது ஒரு கேவல் ஒலி என்ன நிகழ்ந்திருக்கும்.. ஒரு பகிரமுடியாத மரணம் ஒரு விபத்து காமம் தீராத ஒரு கலவி குறைந்த பட்சம் இன்னொரு காதல் தோல்வி.. மெல்ல காற்று குளிர்கிறது வானம் அழக் காத்திருகிறது நனையக் காத்திருக்கிறேன் மழையில் கண்ணீரில்
-
- 3 replies
- 806 views
-
-
வீதியின் ஓரம் நின்று வேடிக்கை பார்.. தமிழர் படை அலைகடல் என..பொங்கி பீறிட்டு எழுந்து குபு..குபுவென்று வருவதை! *************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* பாதியிலே போர் முடிந்தாலும் நீதி கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும்.. நெருப்புக்குள் இருந்து பீனிக்ஸ் பறவைகள்போல் பிரளயமாகப் புறப்பட்டு வருவோம்..! நாங்கள் வெறியர் களடா.. .. சாதி வெறியர்கள் அல்ல.. மத வெறியர்கள் அல்ல.. மொழி வெறியர் களடா .. தமிழ் மொழி.. வெறியர் களடா..! எம்மோடு அணிவகுத்து வர இன்னும் நீ துணியவில்லை என்றால்.. சும்மா வீதியின் ஓரம் நின்று வேடிக்கை பார்.. தமிழர் படை அலைகடல் என.. பொங்கி பீறிட்டு எழுந்து குபு....குபு வெ…
-
- 1 reply
- 806 views
-
-
திக்குத்தெரியாத காட்டினிலே திசை தேடி அலைகின்றோம் திறக்காத கதவுகளை தினம் தினம் தட்டுகின்றோம் கருணையில்லா உள்ளங்களை கருணை காட்டச் சொல்கின்றோம் முட்டுகின்றோம் மோதுகின்றோம் முழிக்கின்றோம் செய்வதறியாது ஏனிந்த வாழ்வென்று ஏங்குகின்றோம் நாள்தோறும் தமிழினத்தின் தலையெழுத்தை தயவின்றி எழுதிவிட்டான் இறைவனவன் காலங்கள் சென்ற போதும் கோலங்கள் மாறவில்லை, எங்கள் அவலங்கள் முடியவில்லை திக்குத்தெரியாத காட்டினிலே திசை தேடி அலைகின்றோம்....
-
- 0 replies
- 805 views
-
-
அம்மா,, நான் உன் கருவறையில் உதைத்தது உன்னை நோகடிக்க அல்ல,, என்னை சுமக்கும் அன்பானவள் உன்னைக்கானவே.. பிஞ்சு வயதில் நான் கெஞ்சலாக அழுதது பசியினால் அல்ல,, பால் குடிக்கும் சாட்டில் உன் இதயத்தை முத்தமிட.. பள்ளிக்கு செல்லும் போதும் அழுதேன் அம்மா படிக்கும் கள்ளத்தால் அல்ல சில மணிநேரம் உன்னை பிரிகிரேனே என்ற துடிப்பால்.. திருமணத்தில் நான் அழுதேன் காதலில் தோற்றுப்போய் அல்ல,, கல்யாணம் உன்னிடத்தில் இருந்து என்னை பிரிக்குமோ என்ற பயத்தால்.. வெளிநாடு போகும்போதும் அம்மா நான் அழுதேன் உன்னை பிரிவதால் அல்ல பசியால் நான் அழுதபோது நீ பசிகிடந்து உன் கண்ணீர் மறைத்து என்னை காத்த தெய்வமே உன்னை நான் காக்கும் காலம் இதுவென்ற…
-
- 0 replies
- 805 views
-
-
உங்கள் வீடுகளில் 3 மணி நேர மின்வெட்டாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் தெருக்களில் உள்ள குழாய்களில் நல்ல குடிநீர் வருவதில்லையாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் கிராமங்களில் உள்ள தெருக்கள் குன்றும் குழியுமாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! உங்கள் நகரங்களில் வாகன நெரிசல் அதிகமாமே! எமக்கு அந்த பிரச்சினை இல்லை! மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக 50 ரூபாய் எரியவைக்கும் ஒரு தீப்பெட்டிக்கும் , ஆறடி ஆழத்தில் தோண்டிய பின் கிடைக்கும் அரைச்சொட்டு தண்ணீருக்கும், பதுங்கு குழி அமைப்பதற்கு வேறிடமில்லாமல் கைவைக்கும் மண் பாதை ஹைவேக்களுக்கும் சைக்கிள்களையும், செல்ல நாய்க்குட்டிகளையும் ஏற்றிச்செல்லவதற்காகவாவது, இடம் தரு…
-
- 0 replies
- 805 views
-
-
முதுபெருந் தலைவர்கள் முன்னைநாள் முதல்வர்கள் வெட்டிப் பேச்சளக்கும் அரசியல் கனவான்கள் கோணங்கிகள் கோமளிகள் என்று வேற்று நாட்டவனிடமே சாட்டையடி வாங்கிய பழுத்த அரசியல் மேதைகள் களங் காணும் தருணம் இது... "பாதணிகள் கழிவு விலை *கொசு வலைகள் மலிவு விலை" விளம்பரங்கள் தூள் கிளப்பும் பிரசாரப் புறநகர்கள். கிட்ட நின்று பேசினால் எச்சிலால் உமிழலாம் என்ற பயத்தினால் பந்தல் வைத்து பக்கத்தில் வர மறுக்கும் பெருந்தலைமைக் கூட்டங்கள்.... மேடையேறும் நாடகங்கள் மீண்டும் தெருக்கள் தோறும். செருப்பால் எறிவார்கள் என்ற பயத்தினால் *கொசு வலையின் பின்புறத்தில் கூச்சலிடும் தலைமைகளே பதில் சொல்வீர் "நாளை பாதணிகள் போட்டுவந்தால் பாயுமா? உங்கள…
-
- 0 replies
- 805 views
-
-
-
எல்லா துன்பமும் கடந்து போய் இனிதே மலர்க இனி வரம் ஆண்டு.அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Happy New Year .🙏 மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா பா.உதயன் ——————————————————————————— மார்கழி மாதமடி கண்ணம்மா மழை சிந்தும் நேரமடி பொழுது புலர்ந்ததடி பூத்திருக்கு காலையடி கண்ணம்மா பாவை இன்னும் துயிலுவியோ பரம்தாமன் புகழ் பாடல்லையோ மார்கழி மாதமடி மலரவன் மேனியிலே மழை சிந்தும் நேரமடி மங்கை உன் கூந்தலை போல் கங்கை அணிந்தவனை காதல் செய்யல்லையோ கண்ணம்மா கன்னி நீயும் துயிலுவியோ கடும் குளிர் காலையடி காலைக் கதிரவனும் கண் விழிக்கும் நேரமடி காலைப் பூ சூடலையோ கண்ணம்மா கண் இமைகள் பாடல்லையோ காலை …
-
- 4 replies
- 804 views
-
-
ஈழம் என்றொரு நாடு -தந்த தலைவனை இன்று நீ பாடு துள்ளியே வந்து தென்றலே ஆடு அள்ளியே வந்து புமாலை போடு.... புயலே வந்தொரு முரசதை கொட்டு புரட்சி நாயகன் புகழது பாடு அண்ணணிண் அகவை ஜம்பத்திரண்டு ஜயனே வாழணும் நீயே பல்லாண்டு..... செய்யணும் தமிழுக்கு நீயே தொண்டு நீயே எங்களின் நம்பிக்கை மன்று உரிமை போரதில் நீயே வென்று தரணும் ஈழத்தை நீயே ஈன்று.... அடிமை ஒழிந்தது தமிழன் நிமிந்தது உந்தன் ஜெனனத்திலே என்றும் நீ.. வாழிய..வாழியவே... -வன்னி மைந்தன் -
-
- 0 replies
- 804 views
-
-
[size=5]கவிதையின் கவிதைகள் .[/size] வாழ நினைக்கும்போது வாடவைக்கும்! வாழ்வதற்காய் வாழ்வை தேடவைக்கும்! மணித்துளிகளில் நகரும் வாழ்வு, துளித்துளியாய் வளரும் நினைவு, கணப்பொழுதில் தோன்றி மறையும்... மின்னல்போல் மின்னி மறையும்! அனுபவங்கள் புரியவைக்கும் வாழ்வில், எல்லாமே ஒரு போராட்டம்! போராடி வெல்லும்போது... வாழ்வின் எல்லை முன்னால் நிற்கும்! பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் நடக்கும் போரில்... கடந்து போகும்வரை கலக்கங்கள் சூழ்ந்தாலும், கலங்காத மானிடம் மட்டும் வெற்றிகொள்ளும் வாழ்வுதனை!
-
- 0 replies
- 803 views
-
-
இலங்கையில் புதையல் .. தமிழ் குழந்தைகளின் இளம் கைகள் கிடைத்தன ... ................................................................. காட்டுக்குள் கடுமையான போர் ... பறவைகள் பத்திரமாய் உள்ளன நல்லவேளை அவைகள் தமிழ் பேசவில்லை ...
-
- 1 reply
- 803 views
-
-
-
வீச மனமின்றி வைத்திருந்த உருப்படாத பழைய கவிதை ஒன்றை எடுத்து மீழப் புனைந்துள்ளேன். எப்படி இருக்கு? * கிறிஸ்மஸ் விடுமுறை நாள் வ.ஐ.ச.ஜெயபாலன் * விடுமுறைத் தூக்கத்தைமதியப் பசி கலைக்கசோம்பேறி நான் எழுந்தேன்.வீடு சா அமைதியில். * மூலையில் மினுக் மினுக்கென தனித்த கிறிஸ்மஸ் மரம் ஒளிரும். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. குளிர்ப்பெட்டி நிறையப் பழசிருக்கு சூடாக்கித் தின்னலாம். வெளியே வெண்பனிப் பெயலின் இரைச்சல் அமுக்கி ஓங்குதே என் பசிமறந்த பிள்ளைகளின் கும்மாளம். * சன்னலுக்கு வந்த…
-
- 3 replies
- 802 views
-
-
[size=5] கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்[/size] [size=5] [/size] [size=5]தாயின் வயிறு விட்டு தரணிக்கு வந்த தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள் தலைவன் அணி சேர்ந்து தன்னையே தந்து தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள் விண்ணிலும் வென்று மீண்டு விளையாட்டாய் சமராடி வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள் கடலிலும் காவியம் படைத்து கலங்களையும் வென்று கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்[/size] [size=5]தரைவழி வந்த பகைக்கு தலையிடி கொடுத்து தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள் கார்த்திகை மாதங்களில் வந்து கண்விழித்துக் காட்டி கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள். பாடல்களி…
-
- 13 replies
- 802 views
-
-
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள் எதுவுமே நடக்கவில்லை...! வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...! வாங்க வந்தார்கள்!! தேவதைகளுக்கும் தேவை அதிகம் தேவையில்லாமல் தேடி வந்தார்கள்! அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்! வந்துபோனபின்... எம்மிடம் மிச்சம் மீதியாய் இருந்ததையும் அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!! வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு காட்சிதரும் தேவதைகளே! பாவம் நாங்கள்... சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!! போர் என்றும் சமாதானமென்றும் போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும் தீர்வென்றும் தீர்மானமென்றும் எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்! எதுவுமே நடக்கவில்லை! சாவின் விளிம்பில் நின்று கதறியபோது சாப்பிட ஏதுமின்றி திணறியபோது செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறி…
-
- 6 replies
- 801 views
-