கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
போதுமினி எல்லாள போர் முகம் கொள்க.... 'சுதந்திர தினம்' ஐரோப்பியச் சாபம் நீங்கிய விமோசனம் நிரம்பிய நாளாய் 1948 இலங்கையின் இறைமையும் உரிமையும் இறையழித்த வரமான உரிமைகள் தினம். பிரிவினை வேண்டாம் - உடன் பிறப்புகள் நாங்கள் பிரிகிலோம் என்றும் புத்தரும் சிவனும் அல்லாவும் யேசுவும் எமக்கென்றுமே பொதுவென உரைத்தவர் எங்கே ? தோண்டுக அவர் புதை குழிகளை.... சிங்களன் தமிழன் உயிர் எடுத்திடும் பகைவன் என்றதை போய்ச் சொல்க. பாழுயுயிர் தொலைந்து ஐக்கிய இலங்கைக்குள் ஆழுவோம் என்றவர் ஆவிகள் மீளப் பிறந்தெம் அவலம் புரிய.... அவர்களைத் தோண்டுங்கள்...! வரலாற்று எச்சங்களாய் - எம் வாழ்வைச் சிங்களன் கையில் வைத்துச் சென்ற வஞ்சகர் …
-
- 3 replies
- 2.1k views
-
-
எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன் என்னை அவர்கள் பைத்தியம் என்றார்கள் இப்போது அவர்களைப் பார்த்து நான் சிரித்துக்கொண்டேன் பாவம் அவர்கள் பைத்தியம் என்று! :D
-
- 6 replies
- 972 views
-
-
*என் கனவு....* என் இரவுகளை நீ சிறை பிடித்ததால் என் கனவுகள் களவாடப்பட்டு விட்டன !!!... விடுதலைக்கு இன்றும் என்விழிகள் சாட்சி கூண்டில் ... *என் ஆசைகள் ...* அழகாய் இருக்கிறதடி உன் வாசல் கோலங்கள்... புள்ளிகளாய் நீயும் என் ஆசைகளை வைப்பதாலோ !!!... நசுங்கித்தான் போனதடி அதுவும் உன் வீட்டு நாய்குட்டி முதல் பால்காரன் வரை பாதங்கள் பட்டு !!!.. *என் நினைவுகள் ....* மறந்துவிடு எனச்சொல்லி நீ எறிந்த கல்லில் உடைந்து விட்டது ... கண்ணாடியாய் !!!... ஓராயிரம் உன் பிம்பங்கள் உடைந்த துண்டுகளில் உட்கார்ந்து கொண்டு இன்றும் கீறுகின்றன... என் இதயத்தை !!!... *என் சிரிப்பு ...* அதை எட…
-
- 1 reply
- 992 views
-
-
பைத்தியா் நாமெல்லோ...? சாவீடு வந்த பார்ப்பன் தான் திண்ண கேட்கிறான் பச்சை அரிசி அள்ளியேனோ பைய்யினிலே போடுறான்....? சோம்பேறி பார்பானுக்கு சுக போகம் நல்லாயிருக்கு பெரியாராய் இவரை எண்ணி பெரும் கடன்கள் செய்யிறாங்க.. தன்னை தான் வருத்தி தான் உண்ண மாட்டாங்க குருவாய் இவரை எண்ணி குரு தெட்சனை கொடுப்பாங்க.. மாட்டு சானகத்தை மடையன் சாமியென்றான்- இதை கேட்டு நாமிருந்தால் கேணையா் நாமெல்லோ...? http://www.kalakam.com/forum/viewtopic.php?t=660
-
- 1 reply
- 1.4k views
-
-
பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! போர் பெய்த மழையினிலே ஊர் விட்டுப்போனவரே! பாரெங்கும் பரந்திருக்கும் பாசப் பிணைப்புகளே! ஆரெவரோ என்றுங்கள் அகம் மூடி நடிக்காமல் பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! முண்டமாய் உடலும் - சதைப் பிண்டமாய் உறுப்புகளும் கண்ட கண்ட இடமெல்லாம் அழுகிய பிணங்களாக ஆர் பெற்ற பிள்ளைகளோ? அண்டை அயலொடு அவனியிலே பேர் பெற்ற அமைதிப் பெருநாடுகளும் கண்டாரோ? கருத்தில் கொண்டாரோ? ஈழத் தமிழினத்தின் இன்னல் நிலை. செப்ப ஒரு நாவிருந்தும் செப்பாத செந்தமிழா! உற்றாரும், உறவுகளும் ஊரோடு எரிகையிலே ஒப்பாரிப் பாட்டுக்கூட உனக்கெடுக்கத் தெரியலையோ? முத்துமணி ரத்தினமும் மெத்தையொடு மெல்லிடையும் சுத்திவரும் சுகம் தரவா சொந்தத…
-
- 2 replies
- 1.6k views
-
-
அழுகின்ற பிள்ளைக்கு கொடுக்க உணவில்லை.. குளிரைத் தாங்கிட போதிய உடுப்பில்லை.. விழுகின்ற குண்டுகளின் வேகத்தை பொறுத்தே, அடுத்த நிமிடங்கள் உயிர்வாழ்கிற நிலை.. எங்கெல்லாம் குண்டுகள் விழுகின்றனவோ அங்கெல்லாம் அழுதபடி தமிழ்த் தாய்மார்கள்... இங்கெல்லாம் நடக்கிற இன்னல்கள் கண்டும் இனிக்குமா நமக்கு புத்தாண்டும் பொங்கலும்? காந்தியம் பேசிவிட்டு களவாணித் தனமாக "இந்தி"யன் அளித்த ஆயுதங்கள் கொண்டு, சிங்கள வெறியன் தொடுக்கிறப் போரில் "இந்தி"யர் என்பதால் நமக்கும் பங்குண்டு..! கொல்லாதே என்று கூக்குரல் எழுப்பினால் தேசத் துரோகமாம் இந்தியம் சொல்கிறது... கொலைகார "இந்தி"யனாய் வாழ்ந்து தொலைப்பதைவிட தமிழனாய் தேசத் துரோக…
-
- 4 replies
- 2.4k views
-
-
பொங்க வேண்டும் .......... பொங்க வேண்டும் பொங்கல் வயிற்றுக்கு உணவாகும் வெறும் அரிசி பொங்கல் அல்ல .உள்ளத்து உனார்வுடன் , வீர விடுதலை வேட்கையுடன் , பொங்கி எழ வேண்டும் புலம் பெயர் உறவுகள் , உணர்வுகள் பங்களிப்புடன் பொங்கி எழ வேண்டும் வேடுவ சாதி வெடி கொழுத்தி பொங்கி மகிழ்கிறான். என் இனம் வேதனை தீ ,வெறுமை தீ விரக்தி இரத்த ஆற்றில் பொங்கி எழுகிறது. அவனுக்கு ஆயிரம் ஆயிரம் பேர்,உதவிப் பொங்கல் .நம் மானத் தமிழனுக்கு தமிழ் உதவி , உறவுகளின் கை நீட்சி தான் பொங்கல். இன்னும் கரையாத நெஞ்சமுண்டோ , என் சமுதாயமே , பொருளாக பொங்குக உணர்வுகாளால் பொங்்குங்கள் பரப்புரைகளால் போங்குங்கள் கொக்கரிக்கும் கூட்டம் பெட்டி பாம்பாய் ஒரு வேளை அடங்க…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன் மேதினிதழைக்க வேர்வை சிந்தி- ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட - வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள- பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு! சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி- சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை! இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை! நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்! நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்! ஊர்மனையாவிலும் பால் …
-
- 7 replies
- 2.5k views
-
-
நாங்கள் பொங்குவோம் பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... கல்லு மூண்டு வச்ச அடுப்பில கனதியான புது மண் பானை வச்சு முக்குறிகளை முழுசா அதற்கு வச்சு பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு புது நெல்லு மணி விளக்கி பசும்பாலும் நெய்யும் மனமா விட்டு பக்குவமா சக்கரை கலந்து பதமாக வெந்து வர முந்திரி வத்தலும் முந்திரிப்பருப்பும் ஏலத்தூளும் தூவி பொங்கல் பொங்கி வர வெடி சுட்டு பொங்கலோ பொங்கல் எண்டு பாட்டி குலவையிட பக்கத்துக்கு வீட்டிலும் முன் வீட்டிலும் கூட வெடியோசை வானைப் பிளத்தது பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்... இது முன்பொரு காலம். ஆனால் இப்ப முன் வீட்டு குடும்பம் இன்னும் முகாம்ல இருந்து வரயில்ல முள்ளு கம்பிக்குள்ள முழுசா அடைபட்டு இருக்கினம்…
-
- 0 replies
- 1.5k views
-
-
புத்தாடை கட்டி ஊரில் புதுப்பானை வைத்து கோலம் போட்டு மாவிலை கட்டி திருச்சி வானொலியை திருகிவிட்டு கவியரங்கம் கேட்டு அப்பா அம்மா அம்மாச்சி சின்னன் பொன்னன் ஆளடுக்கு புடை சூழப் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிய காலமும் உண்டு..... இடையில், கதிரவனுடன் என்வானில் புதிதாய் எட்டிபார்த்த இயந்திரப்பறைவைகள் பறந்து வட்டமிட்டு என் பொங்கலை வேவு பார்த்து எச்சங்களாய் உலோகக் குண்டுகளை உமிழ்ந்து விட பொங்கலோ பொங்கல் என்றிருந்த என்வாழ்வும் மங்கலாகிப் போனதும் உண்டு..... இன்று, விடிந்தும் விடியாத பனிப் புகாரில் என் நினைவுகள் கண்ணாம் மூஞ்சி காட்ட வேலைக்குப் போகும் அவதியில் என் உதடு பொங்கலோ பொங்கல் என்று இயந்திரத் தனமாய் முணுமுணுக்கும்........
-
- 20 replies
- 2k views
-
-
உன் பொங்கல் கவிதை தித்திப்பதற்காகவே சேர்த்தாயா உன் சக்கைரைப் பெயரை இப்படி இனிக்கிறதே * தினம் நீ முறித்து தரும் கரும்பின் சுவை அலுத்துவிட்டது எங்கே கரும்பொன்றை கடித்துவிட்டு தா உன் இதழ் தொட்ட சுவை அறிய வேண்டும் நான் * நீ கண் மூடி வழிபட வழிபட தன் நெற்றிக் கண்ணையும் திறந்து பிரகாசிக்கிறான் சூரியபகவான் * சூரியபகவானுக்காய் நீ போடும் நட்சத்திரக் கோலத்தோடு உன்னை பார்க்கும்போது நிலாக்கோலம்தான் ஞாபகம் வந்தது எனக்கு * எல்லாரும் கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நீ பாடிய தேவாரத்தை நான் மட்டும் கண்திறந்து கவனித்துக் கொண்டிருந்தேன் எப்போ பிரியும் உன் இமைகள் என்று -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 922 views
-
-
-
ஏங்கும் மனதாலும் தாங்கும் செயலாலும் தூங்கும் நிலை மறந்து தூயதான விடியலிற்காய் தூய்மைகள் அங்கே வியூகமாய் பொங்கும் நாள் தேடி பூம்புனல் தானாகி எங்கும் மங்களமாய் எங்கள் மண் எமதாக்க துய்ப்பதற்காய் சுதந்திரத்தை தூயவர் அவர் படைக்க,கங்குலாகியவர் களம் காண நோக்குகையில், புலம் பெயர்ந்து நிலம் நோக்கும் பலம் வேர்க்க உளம் நோகும் இங்கெவர்க்கு பொங்கல் இதமாக இனித்திருக்கும் இனம் நோக இதனை நீ இயல்பாக நோக்காதே ஈழ மலரங்கு, ஈகையாய் முரசொலிக்க மண்வாசம் நமதாக மனமெல்லாம் நிறைவாக இனியவர்களுடன் இழைந்திருந்து இயல்பாக பொங்குதலே இமயமான , இங்கிதமான இணையிலாப் பொங்கலாகும்.
-
- 0 replies
- 739 views
-
-
தை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை
-
- 6 replies
- 22.5k views
-
-
எனது தலைமையில் நடந்த பொங்கல் தினச் சிறப்புக் கவியரங்கம் நன்றி -தியா-
-
- 8 replies
- 973 views
-
-
தைத்திருநாள் இல்லம் எல்லாம் தழைத்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் கூவியழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள்
-
- 10 replies
- 3.1k views
-
-
பல வருடங்களுக்கு முன்னம் வாசுகி பாடுவதற்க்காக எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல் . பொங்கல் வாழ்த்துப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பூமியில் என்றும் அகதிகள் என்று புழுதி மண் போல சுழலுவதோ தாயகம் மீண்டு துயர்களை வென்று தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ * பொங்கல் …
-
- 3 replies
- 1k views
-
-
வருசாவருடம் பொங்கல் வருகிறது பொங்கலும் நடக்கிறது ஏதோ குறைவது போல்....... என்ன இல்லை புலத்தில் அரிசி சக்கரை கரும்பு அவல் பொங்கிட அவள்... எல்லாம் உண்டு... இருந்தாலும் இனிப்பில்லை .......... பொங்கலாம் புத்தாடை உடுத்தலாம் உற்றார் உறவினர் அயலவர் வீட்டுக்கும் போய்வரலாம் இருந்தாலும் ஒட்டுதில்லை............. என்ன குறை??? அந்த மண் இல்லை அது எங்களிடமில்லை அது வரும் நாளே மனம் பொங்கி பொங்கலிட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாக தமிழன் தை நோக்கி நடக்கும் நாள்..............
-
- 6 replies
- 706 views
-
-
:roll: பொங்கி எழடா.... எழடா எழடா தமிழா எழடா எழந்தே தமிழீழம் தனை நீ அடையடா... அடிமை விலங்கதை அறிதே;தே எறியடா.... உடைத்தே தமிழீழம் தனை நீ அடையடா.... தலைகள் குனிந்தது போதும் நிறுத்தடா.... ஆண்டுகள் ஆயிரம் அடிமையாய் ஏனடா....?? சொந்தங்கள் பிரிந்த சோகம் ஏனடா...?? உன் மண்ணில் உனக்கின்று அவலம் ஏனடா....?? கண்ணீர் கவலைகள் கருணையாய் ஏனடா....?? கரிகாலன் தமிழா உனக்கின்று ஏனடா....?? பொறுத்தது போதும் இனி பொங்கியே எழடா......!!! -வன்னி மைந்தன்-
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழர்நாம் உரிமை பெற்று தரணியில் நிமிர்ந்தே வாழ தனியொரு நாடு வேண்டும் - ஆனால் தடைபல உண்டு உண்மை தடைகளைத் தகர்த்து வீச தாயக மண்ணில் வீரர் தமதுயிர் துச்சம் என்றே தளர்வின்றிப் பணியில் உள்ளார் களத்திலே நிற்கும் அந்தக் காளையர் உடன் பொருதக் கடினமே அதை அறிந்த கயவரின் கொடுமை கேளும் மனிதரின் உரிமை என்று மற்றவர் போற்றும் சட்டம் மஹிந்தவின் ஆட்சி தன்னில் மரணமாய்ப் போன தன்றோ? கடத்தலும் பணப் பறிப்பும் கைதியாய் அடைத்து வைப்பும் கொலைகளும் செய்து நிற்கும்; கொடியவர் செயல் உரைப்போம் மனிதனை மிதிக்கும் அந்த மந்திகள் செயலை இந்த மாநிலம் அறியும் வண்ணம் மன்றிலே உரைத்து நிற்போம் பொங்கிடும் தமிழர் நாளில் பொலிவுடன் நாமும் கூடி …
-
- 5 replies
- 1.2k views
-
-
நல்லெண்ணெய் வழிய வைத்து ..ஊரில் நல்லதண்ணி கிணறு தேடி போய்..வயலில் அள்ளி முழுக்காட்டி விட்டா என் ..அக்காள் அறுகம் புல்லு பிடுங்க போகையில்...தரைவைக்கு மணியத்தின் லாரி வரும் கொழும்பில் ...இருந்து மாமாக்கள் வாங்கி அனுப்பிய சீனவெடி ..கொண்டு சிங்காரமா புது சட்டை போட்டு ..தலைசீவி பொங்கல் பொங்கும் அம்மாக்கு ...உதவி கட்டித்தரும் பொங்கல் கொண்டு மாமி ..வீடு போகும்போது மனதில் வரும் வெட்கம் ..மச்சாள் இங்கேரு மாப்பிள்ளை வாறாரு என்று சொல்லும் ..மாமா வீட்டுக்கு வந்த உறவுகள் எல்லாம் ..கூடி முற்றத்தில் தொடங்குவர் விளையாட்டு ..கிளி சின்னவர் எங்களை தங்கள் காலுக்குள் ..வைத்து தள்ளி விடுகையில் விழும் அடி முதுகில் ...உறைக்க நினைவுகள் மட்டும் இப்பொழுதும் ...மனதில் மீண…
-
- 9 replies
- 945 views
-
-
தமிழீழமே தமிழர் தாயகம் தமிழீழமே புலிகளின் தாகம் தமிழீழமே தலைவன் இலட்சியம் தமிழீழமே மாவீரர் மூச்சு தமிழீழமே வீழ்ந்த எம் மக்கள் கனவு தமிழீழமே எங்கள் தாய் மடி தமிழீழமே எங்கள் விளை நிலம் தமிழீழமே எங்கள் எதிர்காலம் தமிழீழமே எங்கள் வாழ்வு தமிழீழமே தமிழர் எங்கள் ஒளி..! தலைவன் வழியில் தங்கத் தமிழீழம் விடிந்திட பொங்குவோம் எழுவோம் தகர்ப்போம் தடைகள்..! தாங்குவோம் புலிக்கொடி வாங்குவோம் சர்வதேச அங்கீகாரம்..! அதுவரை.. சீறுவோம் பாய்வோம் வீறு கொண்ட புலிகளாய் வாருங்கள் மக்களே கோருங்கள் கைகளே..! பெற்றது : http://kuruvikal.wordpress.com/
-
- 0 replies
- 879 views
-
-
பொதிகை மலை திமிர்த்த சிறு முனி அகத்திய மாமுனி எழுதிய தமிழ் குமரி தொடு தமிழ் மண் குளிர் தென்றல் சுமந்த மூவேந்தர் வளர் தென் பெண்ணை பாலாறு தொடு நதி பெருகும் வைகைப் பெரு நதி தமிழ் மணக்கும் காவிரிப் பூம் புனல் அத்தனை சிறப்பும் பெற்று அகமகிழ்நதிருந்த தமிழணங்கு இடிமிசை அரன்று இனி தமிழ் அகன்று போகும் இழி நிலை அரங்கேறும் இது நிலையாகுமோ வெனும் அறி நிலையறியா உயிர் நிலை துடிக்கும் இது நிலையோ பொதி நிலை சுமக்கும்தமிழா இதுவொரு நிலையோ -இது விடை கீழ் நிலையெது வரினும் ஏற்பது எம் நிலையே :unsure:
-
- 0 replies
- 702 views
-
-
சொல்லடுக்குகளில் பின்னிக்கிடக்கும் எது நீயென்று அறியமுடியவில்லை எப்படி நிராகரிப்பது. அலையும் நரம்புகளில் எந்த நரம்பில் நீ எப்படித்தான் நிறுத்துவது. சகி இந்தக் கவிதையில் எந்த இடத்தில் நிறைகிறாய். எந்த வார்த்தைகளில் வெளியேறுகிறாய் புரியவில்லை. முகிலிடை வெட்டும் மின்னல் மிதந்தலைந்துவரும் வாசம் பெருந்துயரொன்றின் மெல்லிய நீட்சி எதிர்பாராமல் மனதுக்குள் அவிழும் பாடலின் மெட்டு எழுதென்று கலைக்குமுணர்வு மீறி நிற்கும் சோம்பல் நீயும் இவைப்போல அல்லது இவையும் உன்னைப்போல. பேரன்பே, யுகஅழிவின் இறுதிக் கணத்தில் கிடைத்த பேழை நீ. ஆதியிலிருந்து சுமந்திருந்த பிரியத்தை இறக்கிவைத்து இளைப்பாறுகிறாய். வா ஓய்வெடு. யுகமீட்சியின் பரிபூரணத்துவம் அன்பாலே நிகழு…
-
- 8 replies
- 1.2k views
-
-
[size=4]பொப் டிலானின் “When the Deal Goes Down” என்ற கவிதை. எப்போது கவிதை எழுத போனாலும், இப்படி சில கவிதைகள் ஞாபகத்துக்கு வந்து “ஏன் உனக்கு வேண்டாத வேலை?” என்று ஏசும். படிமம் தான். வாசிக்கும்போது முகத்தில் பளாரெண்டு அடிக்கும் படிமம். நீங்களும் வாங்குங்களேன்.[/size] [size=3] [/size] [size=4] The moon gives light and it shines by night Well, I scarcely feel the glow We learn to live and then we forgive O’er the road we’re bound to go More frailer than the flowers, these precious hours That keep us so tightly bound You come to my eyes like a vision from the skies And I’ll be with you when the deal goes down [/size] [size=4]கேதாவின் கவித…
-
- 1 reply
- 588 views
-