Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by s.kumaar,

    தீயன தீய தீயும் தீயும் தூயன தூய தூய்மை தூயும் வேயன வேய வேயும் வேங்களம் பாயென புலி பாயும் பாரில் ஓயாத அலையாகி ஓங்காரமாய் ஒலிக்கும். திளைந்திருக்க தினவெடுக்கும் விளைந்திருக்க வினையெடுக்கும் முளைத்திருக்க மனமிருக்கும் உழைத்திருக்க உரமெடுக்கும். களைத்திருக்கும் பகையிருக்கும்.புலி நிலைத்திருக்க களம் விழைத்திருக்கும் வகை புலி இருக்க வாகை கிழக்கிருக்கும் நகை முகிழ்த்திருக்க நாமாய் நெகிழ்ந்திருப்போம். பிரபஞ்சம் பிரமித்து ஏற்ற பிரபாகரம் கொண்ட சாரம், பஞ்ச பூதம் வாழும் வரையும் தஞ்சமாக தரணியில் வாழும். ஏந்திய கொடி சிலிர்க்கும்,எல்லாள மண் துளிர்க்கும் சீந்திய குருதியெல்லாம் குவளயமாய் குதூகலிக்கும். தீயினை தீய்த்த தீரம்,தூய்வினை ஏற்றி ஏந…

    • 2 replies
    • 718 views
  2. கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளைக் கனவுகள்.. ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் கண்ணீர் தொய்ந்த வாசமாகவும் எம் கனவுகள் இத் துரோக மண்ணில் காய்ந்துப் போவதின்னும் எவ்வுயிர் பிரிந்து மிஞ்சும் கடைசி பொழுது வரைக்குமோ.. அறியோம்; அறியோம்; இறக்கை முறித்து - உயிர் உதிர்த்து - உடல் முடைந…

  3. Started by கார் முகிலன்,

    அலங்கரித்த தலைமுடியலில் ஆயிரம் கவிதைகள் நெகிழ்கிறது கண்டேன் அந்த கருவிழிகள் இடது பக்கமாக திரும்பி ... என் இதயத்தை குத்திய பொழுது.... கமல மேனியில் கள்ளச் சரிரிப்பு கொண்ட அதன் இதழ்கள் சுவைக்க அழைக்குது உன் இமைகள் என்னை தண்டிக்க காத்திருக்கிறது அம்பு போல் (எதிர்ப்பு) சிவந்த மேனியில் பொண்ணும் மங்கிப்போகிறது... கைவிரல்கள் நளினமாக பற்றிய இடம் யாவும் சிலையாய் போகிறது மெய்சிலிர்த்து கல்லும் சிதறுகிறது குமுதச் சிரிப்பில் கவர்ந்த கள்ளி குங்குமமும் நிறம் குறைவோ உன் இதழ் அழகிற்கு... பஞ்சு மேனி பவளப்பாறை என் இதயத்தை உடைத்து உன் அழகை சேகரிக்கிறது.... விலை மதிப்பில்லாமல் உயர்கிறது உன் அழகு என் இதயத்தில்... …

  4. Started by akootha,

    செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் - மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் - சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் - முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே திருப்பி அடிபானெனில் - திருப்பி அடித்தவனை திருப்பி அடிக்கும் வரை அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே; செத்தவன் செத்தவளெல்லாம் வெறும் சுப்பனும் குப்பனுமல்ல; எம் விடுதலையை 'உயிர்விடும் வரை காத்த வீரர்கள் - அவர் உறைந்த மண்ணில் மீண்டும் புடைச…

    • 0 replies
    • 718 views
  5. நன்றாகவே தலையாட்ட பழகிக்கொண்டு விட்டனர் அல்லது, பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர். எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன எங்கள் பிரச்சனைகள் தீர்க்க முடியாதவையல்ல தீர்க்கப்பட விரும்பாதவை. இன்றைய கால முதற்பிரச்சனை தலையாட்டல், எந்தப்பக்கம் எந்தக்கணத்தில் எதற்காக தலையாட்டுகிறார்கள் என்பதை எந்தப்பக்கம் இந்தக்கணத்தில் அந்த தலையாட்டாலால் பிழைத்துப்போகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முயன்று தோற்றுப்போவதில் ஆரம்பிக்கிறது இன்றைய பிரச்சனை. எங்களது பிரச்சனைகள் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை தலையாட்டுபவர்களுக்கு. எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன.... நீர் நிலம் வளம் என ஒவ்வொன்றிலும், இனம் மொழி பரம்பல் என ஒவ்வொன்றிலும், கொடூரமாக கொல்லப்பட…

  6. நீ செத்துவிட்டதாய் அறிந்தபோது நம் தோழிகளில் ஆயிரக்கணக்கான ஒருத்தி இறந்துவிட்டாள் என்றிருந்தது நீ படுகொலை செய்யப்பட்டாய் என்றறிந்தபோது படையினரிடம் சரணடைந்தபின் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழிகளில் நீயும் ஒருத்தியாகிவிட்டாய் என்று வேதனையாய் இருந்தது. ஆனால் இன்று..... நீயேகூட நினைத்துப் பார்த்திருக்க முடியாத அரசபடையின் கோரமுகத்தை நேரில் கண்டவள் நீயாகி உலக மனச்சாட்சிகளை உலுக்கும் பேரொலியாகிவிட்டாய். உன் வெற்றுடம்பில் சூடுகண்ட பிசாசுகளையும் அதன் பின்னணியில் இருக்கும் மனிதமுகம் போர்த்திய அரக்கர்களின் முகமூடிகளையும் கிழித்தெறியும் சக்தி உன் அம்மணத்திற்கும் இருக்கிறது. கதிர்காம அழகி மன்னம்பெரியை அவமானப்படுத்துவதாய் எண்ணிய சிங்களவர்கள் தம்மீது அழிக்க ம…

    • 2 replies
    • 717 views
  7. கூடு சேருவோம்

    • 0 replies
    • 717 views
  8. Started by pakee,

    வானம் நீயானால் - நான் மேகமாக வரம் வேண்டும் விழிகள் நீயானால் - நான் இமைகளாக வரம் வேண்டும் தூக்கம் நீயானால் - நான் கனவாக வரம் வேண்டும் கவிதை நீயானால் - நான் நல்ல வரிகளாக வரம் வேண்டும் நிலம் நீயானால் - நான் உன்னுள் புதையும் பிணமாக வரம் வேண்டும்...

    • 2 replies
    • 717 views
  9. ஈழத்தின் கரவெட்டியில் இருபத்தேழு ஆண்டுகள் முன் இன்னுயிராய் வந்துதித்தான் ஈழமகன் முருகதாசனவன் பத்து மாதம் பக்குவமாய் பாதுகாத்துப் பெற்றுன்னை பட்டங்கள் பெறவைத்து பார்புகழ வைத்தார் உன் பெர்றோர் வன்னியிலே வஞ்சகர் வதைகளில் சிக்கி வாழ்விழந்து எம்மினம் வீழ்தல் கண்டு வெந்தழலாய் உன்மனது கோபம் கொண்டதனால் கொடியவர் கொட்டம் அடக்கிட ஐநா முற்றலிலே உன் உடல் எரித்து உயிர் நீக்கி உறங்கச் சென்றனையோ? உயிருக்காய் உடலுக்காய் உணவுக்காய் உறவுக்காய் உயிர் காக்கவென உழைத்திடுவோர் மத்தியிலே உன் தாயைத் தந்தையை ஓடிவிளையாடிய தங்கையை தம்பியை நீ மறந்து துடித்த எம் இனத்துக்காய் தீயினில் குளித்ததை எம் அகக் கண்ணால் கண்டு நாமும் துடிக்கிறோம் உன்னைப் போல் ஒருவனின் உத்தமனி…

  10. பொங்கலுக்கு தேவையான பொருட்களெல்லாம் வாங்கிவிட்டேன்.. பொங்கலிட முற்றமதை எங்கே போய் வாங்குவேன் .. சிங்களனின் பாசறையாம் என் வீடு அவனாடும் மைதானம் என் முற்றம் . எங்க போய் பொங்கலிட ??? ««««««««««««°»»»»»»»»»»»»»» "பொங்கலிட முற்றமில்லை.. சொந்தமென யாருமில்லை .. வெந்தமனம் நொந்துதினம் வாடுகையில்.. எங்குபோய் இவர் பொங்கலிட தைத்திங்களதில் ? தை பிறந்தால் வழிபிறக்கும்.., பொய்யானால் மனம் சலிக்கும்.., இருபத்தைந்தாண்டுகள் ஆண்டுகள் நொந்தகதை யாரறிவார்? போர் ஓய்ந்து ஏழாண்டு.., பொய்மட்டும் ஒளியாண்டு... …

  11. "ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில…

  12. மாதந்தை வேலுப் பிள்ளை மரணித்தார் என்றதுமே வேதனை தாங்கவில்லை வெம்பியழ இடமுமில்லை சோதனைகள் மத்தியிலே சோர்ந்தவர் மடிந்தாரோ பாதகர்கள் கொடுமையினால் புனிதரவர் இறந்தாரோ சாதனைகள் புரிந்தவொரு தமிழ்த்தலைவன் கருகொடுத்து மாதரசன் மணியாட்சி மகிழவொரு காலத்தே அதனழகைப் பார்க்காமல் உயிர்விடுத்தல் தகுமாமோ? சீதாவின் நிலையுறுத்தி சீரன்னை பார்வதியும் சேதியொன்று மறியாது சித்தங்கலங்கி நிற்க பேதையென வாடியங்கே புலம்புவது சரிதானோ? ஆதரிக்குந் தமிழரணி அணியணியாச் சிதறுதற்கு போதனைக்கு ஒருபெரியோன் இல்லாத குறையன்றோ வேதமொழி தாயகமாய் கொண்டவரால் நீதியங்கே அணிவகுத்த காலத்தை அழித்தங்கே அரக்கருடன் தாயகத்துக் கனவுகளை தகர்த்தெறியும் ஆட்சிவெறி தமிழ்மானம்…

  13. மரணமே நெருங்காதே கண்ணீர் மழையால் உம்மை தொழுகிறேன் மரணமே நெருங்காதே கிடைத்தற்கரிய பரிசாய் எனக்கும் கிடைத்தான்....என்னை நனைத்தான் என்னுள் நனைந்தான் கடந்த கால நினைவுகளை காயங்களாக கொண்டவனின் காயம் போக்க காதல் செய்ய வரம் கிட்டியது என் பேறு தொலைவில் இருந்தாலும் காதலால் தீண்டுகிறான் தேன் துளியாய் அவன் நினைவுகள் தித்திக்க வார்த்தைகள் தெவிட்டுகிறதே அவன் அன்பை வருணிக்க..... அன்னாகரீனா, நாஸ்தென்காவை காதலிகளாக கொண்டவன் என்னையும் காதலியாக ஏற்றான் அவன் அன்பிற்கும் மட்டுமல்ல அறிவிற்கும் நிகரில்லா என்னை ஆயுள் வரை அவனோடு பயணிக்க எதற்காக தேர்ந்தெடுத்தான் என்னில் எதை வியந்தான்....? உள்ளூர் அரசியலே தெரியாத என்னிடம் உலக அரசியல் பே…

  14. [size=5]மலர் உதிரும் ஓசையொன்றால் குலைந்து போனவன் தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான். தேர்ந்த ஓரிடத்தில் நிறங்களை ஒதுக்கி மௌனப்பாறைகளால் சுவர்களையும், நிர்வாணத்தை நிகழ்த்தி தனிமையால் புதர்களையும் உருவாக்கினான் முதலில். இருளடர்ந்த சுவருக்குள் வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன் கிளைகளின் ஈரலிப்பில் பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில் மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான். கல்லறையின் வாசலில் இறகொன்று கிடந்தது பறத்தல் பற்றிய கனவோடு....[/size]

    • 7 replies
    • 716 views
  15. தன்னைக் கொன்றவனின் வாக்குமூலம் ஆராய்தலின் பின் தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது. அங்கு, தன்னைக் கொன்றவனின் வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள் வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு எப்படிப் புரிந்திருக்கும் ? தன்னைக் கொல்லுதல் மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம். மை கரைவது போலவும் இருக்கலாம். ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம். தன்னைக்கொன்றவனின் கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை, அவன் சுமந்திருந்த தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை. அவன் உருவாக்கிய வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை, ஆனாலும், தன்னைக்கொன்றவனைத் தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல, அவனுக்கு அந்த நேரத்தில் தேவையாக…

    • 8 replies
    • 716 views
  16. பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! மறுபடியும் பிறந்தார் மரித்தார் உயிர்த்தார்!! எனக்கோ பிறந்தான் காணவில்லை ஐயா..!!

    • 2 replies
    • 716 views
  17. அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள் அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான். யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான். நான் இப்பொழுதும் கேட்கிறேன் அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும் குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று. என் அன்பு மிகுந்த சனங்களே! எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள். எங்கள் கோரிக்கைகளும் அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும் நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன. துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும் எங்கள் தந்தையே! ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடைய…

  18. சில கவிதைகள் திரைப்படத்துறையில் இருந்து

    • 1 reply
    • 715 views
  19. இன்று மீண்டும் அகதி முகாமில் கருணாகரன் அலைக்கழிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட அந்தக் காலை நேரத்தில் கொண்டுவந்து இறக்கப்பட்டோம் இலக்கங்களாக எதுவும் தெரியாது அடுத்துவரும் கணங்கள் எப்படியென நீண்டவரிசை வழங்கப்பட்ட இலக்கங்கள் அவரவரக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அவரவர் அவரவர்க்கருகில் நகராப் பொழுதுகளோடு பிணைக்கப்பட்ட படுக்கை படுக்கையைச் சுற்றி முள்வலைகள் முப்பத்தி ஆறாவது தடவையும் இன்னொரு ஒப்பனை புதிய இடத்தில் பழைய அகதி அகதிகளின் நிழலைக் கண்காணிக்கும் முள்ளரண்கள் பழைய அகதிக்கு புதிய இலக்கங்கள் பழைய இலக்கங்களுக்கும் புதிய இலக்கங்களுக்குமிடையில் முடிவுறாத குழப்பங்களுடன் தூங்கும் கண்களில் துடித்துக்கொண்டிருக்கு…

  20. கல்லறைமேனியர் காத்திருப்பர் இன்று விழிதிறந்தெதிர் பார்த்திருப்பர் போகும் வழி தெரியல்லையே அங்கொரு தீபம் ஏற்றிட வழியில்லையே வலிசுமந்து எழுகின்றோம் மாவீரரே உங்கள் திசை கண்டு தொழுகின்றோம். உற்றவர் யாருமின்றி பிள்ளைகள் உறங்கிட பகை தின்ற நிலத்தில் கோவில்கள் கலைந்திட காற்றெழுந்து முகம் பார்த்திடுமோ கார்த்திகை மேகம் சிந்திடுமோ யாருமின்றி நீர் எழுந்து நிற்கையிலே கத்தும் கடல் அழுதிடுமே எங்கள் ரத்தம் காய்கிறதைய்யா இங்கு விழிகள் தோய்கிறதைய்யா திசைகள் தாண்டி நீண்டிடும் நினைவு கரங் கொண்டு சேர்த்திடும் மான உணர்வு தூயவர் உறவுகள் இனி சேர்ந்திட தாயவள் நிலை இனி மாறிடும் தாரகைகள் தாமிறங்கி தொழுதிட வான் வளைந்து மாலை சூடிடும் நீரெழுந்து மலர்த்திட ஒளி கூடிடும் தேசத்தின் விடி…

  21. Started by kanithan,

    இது எம் காலம்.. காலம் கனிந்தது.-கார்த்திகை மலர்ந்தது - மனங்கொள்வோம் எம் உயிர் உரையும் மாவீரர் மலர் குடில் கொள்ளும் காலம் மனதார பாவிசைப்போம் -அவர்தம் புகழ் இசை கொன்டு..... நெஞசுருகிப்போவோம் நேசங்களின் வழியுணர்ந்து....... தேசம் பல கண்ட தமிழரே நிஜ தேசிய தினம் - உமக்கிது.... நம் தேசம் தந்த வேந்தர் புகழ் தேசம் எங்கும் உரைப்போம்- வாரும் உயிரில் உணர்வோம் உயிரீந்த- எம் உறவை

  22. எங்கள் தலைவிதியை நாமே சிங்கமும் கருநாகங்களும் குள்ளநரிகளும் ஒருபுறம், பொல்லாத மலைப்பாம்புகளுடன் இன்னுமொரு சிங்கம் மறுபுறம், என்ன செய்வோம் நாம்? எங்கள் குரல்வளையை நெரிக்க, எங்கள் விழிகளை குத்திக்கிழிக்க, எங்கள் வாழ்விடங்களை பறித்தெடுக்க இந்த கொடிய மிருகங்களில் ஒன்றை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். தெரிவு செய்ய நாங்கள் செல்லாவிடில் எமக்காக அதையும் அந்த குரூர விலங்குகளே செய்துவிடும். இந்த அவலத்திலிருந்து மீட்க, எவருமே எமக்காக இல்லை. எங்கள் விதியை நாங்கள் தீர்மானிக்க முடியாதாம். இந்த உள்நாட்டு விலங்குகளும் வெளிஉலக வல்லூறுகளும் ஓநாய்க் கூட்டங்களும்; தான் எங்கள் வாழ்வை பற்றி தீர்மானம் எடுப்பார்களாம் அப்படியானால் நாம் யார்? எமக்காக பேச எவருமில்லையென்றால் எங்களை…

  23. காதல் ... வெற்றி பெற இதய... பரிமாற்றம் போதாது இதயமாக .... மாறவேண்டும்.....!!! ^ காதல் துளிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

  24. இன்றைய நாள், ஈழத் தமிழர்களின் வரலாற்று பாதையில் கால(க்) கடவுளர்களை நினைவு கூரும் கண்ணீர் கலந்த நாள்! எங்கே அவர்கள் என ஏன் தேடுகின்றீர்கள்? அட கல்லறைகள் எங்கே எனவுமா தேடுகின்றீர்கள்? எங்கள் உள்ள(க்) கோயிலினுள் உறவுகள் வாழ்வதற்காய் உயிர் கொடுத்த உத்தமர்கள் தூங்குவதை அறியாது தேடுவது மடமை அல்லவா? நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் அவர் தம் நினைவுகள் பறந்து வந்து மேனியில் ஒட்டி சிலிர்ப்பை தருகின்றதே! நீங்கள் உணரவில்லையா? உங்கள் கண்களை ஒரு கணம் மூடி மீண்டும் திறவுங்கள்! இதோ கல்லறைகள் சிகப்பு மஞ்சள் கொடி கொண்டு அலங்கரிக்கப்பட்டு கண்ணீரால் கழுவப்படுகின்ற காட்சியினை(க்) காண்பீர்களே! சற்று(த்) …

  25. அவள் 1 மண்ணும் விண்ணும் மட்டுமல்ல மனசும் பூச்சூடிய ஒரு இரவின் பாடல். அதை எப்படி ஆரம்பிப்பது? யார் எடுத்துத் தந்த அடியிலிருந்து? இல்லை எடுத்துச் செல்லுங்கள் உங்கள் அதீதக் கற்பனைகளை. மதுவும் விந்தும் ஊறிய சொற்களை. கனவுவரை மண் தோய அவள் இட்ட அடிகளில் உள்ளதே கவிதை. அவள் பி.ஏ. முடிக்கவில்லை என்றார்கள். அவள் காட்டில் என்றார்கள். மேலும் அவள் ஒரு கெரிலா போராளி என்றார்கள். நானோ அவளை கொழும்பு நகரத் தெருவில் பார்த்தேன். நான் உறைந்தது அச்சத்திலா ஆச்சரியத்திலா அல்லது அவள் மீதான மதிப்பினிலா. கோப்பிக் கடை மேசையுள் மறைத்தேன் நடுங்கும் என் கால்களை. அவள் அதே அமைதி ததும்பும் முகமும் குருத்துச் சிரிப்புமாய் முகவரி கேட்காதீர்கள் என்றாள். வாழ்வு புதிர்கள் போன்…

    • 4 replies
    • 712 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.