Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இருண்டு போய்க் கிடந்த, அமாவாசை இரவொன்றில், வெளிச்சத்தின் தேவை கருதி, வந்துதித்த நிலவு நீ! வானத்தின் சந்திரன் கூட, விடுமுறையில் செல்வதுண்டு, இரவும் பகலும், உறங்காத விழிகள் உன்னுடையவை! நான் பிறந்த தேசத்தின், அழகைப் போலவே, நீயும் வித்தியாசமானவள்! அதனால் தானோ என்னவோ, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது! வானுயர்ந்த மலைகளோ, வளம் கொழிக்கும் நதிகளோ, வெண்பனி பொழியும், தண்மை காவிய மேகங்களோ, அங்கிருக்கவில்லை! வாடைக்காற்றும், வியாபாரக் காற்றுக்களும், காவி வருகின்ற மேகங்கள், கருக்கட்டினால் மட்டும், மழை பெறுகின்ற தேசம்! இருந்தாலும், வானுயர்ந்த பனைகளும், வளம் கொழிக்கும் வயல்களும், அந்தத் தூவானத்திலும், பிறப்பெடுத்து வாழ்ந்தன! வானம் வஞ்சித்து வ…

  2. புதியவள் ஒருத்தி என் அறையில் என்னோடு.. நடு நிசியை நோக்கி நேரம் ஆகிறது.. படுக்கைக்குப் போக.. விளக்கை அணைக்கவா இல்லை விடவா.. உள்ளம் தடுமாறுகிறது...! உள்ளூர ஒரு பயம் என்னை அணுகுவாளா உயர நகர்வாளா பின் என் உடல் மீது பாய்வாளா.. அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??! அனுபவமின்றியவன் நான் சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்... அவளோ என் அறைக்குள் துணிவோடு.. அனுமதி இன்றி நுழைந்தவளாய் சுவரோடு ஒட்டியவளாய் நகர்வின்றி... என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள் அதை அழைப்பு என்பதா எச்சரிக்கை என்பதா..??! சிந்தனை குழம்புகிறது..!! போனால் போகுது எனியும்.. விடுவதில்லை இவளை..! விட்டால் என் நித்திரை இன்றி இரவுகளுக்கு யார் பதில் சொல்வது..??! நொடிகளை வீணாக்காமல் …

  3. நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்.. பொல்லாதார்..யார் பொய்யரையார் யார்-இனம் கண்டு கொண்டேன்.. சிலர் மாசற்ற நட்பென்பார் காசென்றால் விற்றிடுவார் சிலர் காசுக்காய் நட்புறுவார் செல்வம் போக சென்றிடுவார் உள்ளத்தூய்மையில்லா மனதறிந்த ஊமையாய் இருக்கிறேன்.. பொய் பொய்யாய் உரைப்பார்..மற்றவரின் புத்திஎடை குறைப்பார்.. சிரிப்பாய் இருந்தாலும்.. சிந்திக்க வைத்துவிடுவார்.. நட்பாய் பழகு நம்பிப் பழகாதே.. அன்பாய் பழகு ஆதரவாய் நினைக்காதே.. தோள் கொடுக்கும் தோழமை தொலைந்த தேசத்தில்..முதுகில் வாள் ஏறும்வரை கைகட்டி நிற்காதே..

  4. இளகுமா அந்த கல் நெஞ்சு? சுதந்திரமாய் திரிந்த எனக்கு எங்கிருந்து தான் வந்ததோ இந்த காதல்! உன்னை பார்த்தவுடன் வரவில்லை நிச்சயமாக பழகிய பின்பே வந்தது வயது தான் நமக்கு பிரச்சனையோ? அன்புக்கு வயது ஏது தடை - இல்லை உன் அன்னை தான் நமக்கு எதிரியோ? அன்னையிடம் என்னை பற்றி சொல்லவில்லையா அன்பே! உன் கொள்கை தான் முட்டுக்கட்டையோ? நாம் உருவக்கியது தானே இந்த கொள்கை - விட்டு விடு இல்லை இந்த சமூகம் தான் உன் கவலையோ? - வா நாம் வேறோர் உலகத்துக்கு போவோம் அன்புக்கு இலக்கனமாய் இருந்தாய் நட்புக்கு உதாரணமாய் இருந்தாய் தொழிழுக்கு நாணயமாய் இருந்தாய் காதலுக்கு மட்டும் ஏன் எதிரியானாய்? உன்னை காதலித்ததுக்கு பதிலாக மரணத்தை காதலித்திருக்கலாம் அது நம்பிக்…

  5. ராமன் தேடும் சீதை....... கவிதை..... மலர்களின் மணம்வீசும் இளவேனிற் காலத்தில் இனிய மாலைப் பொழுதொன்றில் நண்பனின் திருமண அழைப்பிற்கு தனிமையில் செல்கின்றேன்..... அழகான மண்டபத்தில் மிக அழகான சோடினைகள்..... என் மனதின் மகிழ்ச்சிக்கு இயற்கையின் அழகுடன் செயற்கையும் அழகுசேர்க்க காதலெனும் நினைவு என் கண்களால் வெளிவந்து என் பார்வைக்கு இறகுகள் பலமாக முழைத்துவிட.... தேடினேன் என் சீதையை...! கண்டு கொண்டேன் ஓர் அழகை என் அந்தபுற(ர)த்தில்...! ஆகா..! என்ன ஆச்சரியம்.. அம் மானின் அழகில் மயங்கிவிட்டு அம் மானை எனதாக்க விழி அம்பை தொடுத்ததும்... பதிலுக்கு ஓர் அம்பு பாய்ந்து வருகுறது..! என் பார்வை…

  6. அரைக்கிலோ அரிசியில் கூட அரசியலாம் ஆணுறைகளின் விற்பனை அதிகரிப்பாம் உலகமயமாக்கல் பிராந்திய நலன் என்று புரியாத வார்த்தைகளாய் அடிபடுகின்றன‌ பனையால் விழுந்த ஓலைகளைச் சப்பித்துப்பி விட்டுப் போகின்றன மாடுகள் வேலியடைக்கவும் வேலி தாண்டவும் முடியாமல் பாவம் ஓலைகள் இன்னும் எத்தனை மாடுகள் பசியாறப் போகிறதோ காட்சிகள் முடியும்முன்னர் சாட்சிகள் கலைக்கப்படுகின்றன‌ நாளை கண்ணகி காவியமாம் காத்தவராயன் கோயிலில் அண்ணனின் துவசம் முடிவதற்குள் அய்யனாருக்காய் அறுக்கப்படும் ஆடுகள் அண்ணனும் ஆடுகளும் பலியெடுக்கப்படுகின்றன தர்மத்தின் பெயரில் கூடின்றி வாழும் குருவிகளுக்கு கோபுரத்தின் உச்சியில் கூட‌ குந்தவிடாது ஆணி அடிக்கப் படுகிறது சாவுக்கும் வாழ்வுக்குமிடையே குருவிகள…

  7. Started by இலக்கியன்,

    தீபங்கள் வரிசையாக ஏற்றி தீமைகள் நீங்கிய நன் நாளாம் ஈழத்தின் அவலங்கள் நீங்கி ஈர இரத்த ஆறுகள் அடங்கி ஈன சிங்கள் அரக்கன் வீழ்ந்து ஈழம் மலரும் நன்நாள்-எம் ஈழத்தமிழருக்கு தலைத்தீபாவளி

  8. என் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு, ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்? அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! என் வலிகளை ரசிப்பாய் என அப்பொழுதே தெரிந்திருந்தால், பூக்களை வெறுக்கும் வண்ணத்து பூச்சியாய் வாழ்ந்திருப்பேன்! வண்ணத்தில் மயங்கி... வாசத்தில் கிறங்கி... வலிகளை வாங்கிய கஷ்டம் எனக்கிருந்திருக்காது. காலங்கடந்த ஞானம் எனக்குள் -இப்போது! என் மெளன மொழிகளில் கெஞ்சிக் கேட்கிறேன், அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! -இல்லையேல், என் முறிந்த சிறகுகள் கூட, உன்னைக் காயப்படுத்தலாம்!!!

  9. இன்று உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இதேவேளையில் உதைபந்தாட்டம் பற்றிய எனது கவிதையொன்றை இணைப்பதில் மகிழ்கிறேன். பாடசாலை நாட்களின் நினைவுகளோடு மற்றவைகளையும் சேர்த்து சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதையினை கள உறவுகளுக்காக இணைக்கின்றேன். உதைபந்தாட்டம் பசும்புற்றரை செய்து பக்குவமாய் அதைவெட்டி கசங்காத கம்பளமாய் ஆக்கிடுவார் - அதனிடையே நெடுவெண் கோடுகளும் நீள்சதுரம் வட்டமும் நடுவினிலும் இடுவார் பொட்டு. உருண்டையான ஒருபந்தை ஓடிஓடிப் பதினொருவர் உருட்டி இருபுறமும் அடித்திடுவார் - இருதடிக்குள் வைத்த இடத்திருந்தும் விளையாட்டின் திறன்கொண்டும் புகுத்திவிட்டால் பெறுவார் புகழ். கூச்சலிடுவார் கூத்துமிடுவார்…

    • 20 replies
    • 4.1k views
  10. குருவி ஒன்று தான் வாழ தேடியது ஒரு தோப்பு வந்தது மாந்தோப்பு வரவினில் கண்டது ஓர் மலர் மலரிடை மலர்ந்தது வாழ்வெனும் வசந்தம் மலரதும் குருவியதும் படைக்குது ஒரு காவியம் அது... மாநிலத்தில் மானிடர் தாம் கண்டிடாத புனித காவியம். தோப்பருகே ஒரு குடிசை அங்கும் வாழுது ஒரு கூட்டம்..! வஞ்சகமும் பொறாமையும் அவர்தம் மனங்களில் கறுவும் மனதை அடக்க முடியா கலங்கி நிற்குது அவர் சித்தம்..! கற்பனையில் கூட அடுத்தவன் வீழ்ச்சியில் அகம் மகிழவே துடிக்குது..! பாவம் அவர் அறிவிருந்தும் அறியாமையில்...! தோப்பிருந்த குருவியது மனமிரங்கி மலருடனிணைந்து பாவப்பட்டவர் மீது ரட்சிக்கிறது மானிடா.... மனமதில் அமைதி கொள் வாழ்வதில் சிறப்பாய் மாற்றா…

    • 20 replies
    • 4.4k views
  11. ஓடுகின்ற கால்கள் ஓய்வெடுக்கும் போது நான் எடுத்துக்கொண்ட பயணம் முடிந்திருக்க வேண்டும்! வாழ்ந்த நாட்களை திரும்பிப் பார்க்கும் போது என் பெயரை சிலர் உச்சரிக்க வேண்டும்! கோபுரங்களின் அழகை அத்திவாரங்கள் தாங்குவது போல் நான் பிறந்ததின் பயனை ஊரறியச் செய்வேன்

  12. எச்சரிக்கை மடல் மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும், தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும் தயவு செய்து மேற்கொண்டு, இக்கவியின் இரத்த ஓடையை இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்! ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது. நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது. உந்தும் வலு உறுதியாக வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம் வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது. பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால் எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும். வலியின்றி வளர்ச்சி இல்லை. வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும். வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு…

  13. புத்தாடை கட்டி ஊரில் புதுப்பானை வைத்து கோலம் போட்டு மாவிலை கட்டி திருச்சி வானொலியை திருகிவிட்டு கவியரங்கம் கேட்டு அப்பா அம்மா அம்மாச்சி சின்னன் பொன்னன் ஆளடுக்கு புடை சூழப் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிய காலமும் உண்டு..... இடையில், கதிரவனுடன் என்வானில் புதிதாய் எட்டிபார்த்த இயந்திரப்பறைவைகள் பறந்து வட்டமிட்டு என் பொங்கலை வேவு பார்த்து எச்சங்களாய் உலோகக் குண்டுகளை உமிழ்ந்து விட பொங்கலோ பொங்கல் என்றிருந்த என்வாழ்வும் மங்கலாகிப் போனதும் உண்டு..... இன்று, விடிந்தும் விடியாத பனிப் புகாரில் என் நினைவுகள் கண்ணாம் மூஞ்சி காட்ட வேலைக்குப் போகும் அவதியில் என் உதடு பொங்கலோ பொங்கல் என்று இயந்திரத் தனமாய் முணுமுணுக்கும்........

  14. குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...(http://www.yarl.com/...pic=101771&st=0) . பிரிந்து பறக்கும் வலி... அன்பே உனக்கும் எனக்குமான உறவுகள் எந்தக் கவிஞ்ஞனும் இதுவரை புனைந்துவிடாத வார்த்தைகளின் வனப்புகளைத் தாண்டி வரையப்பட்ட கவிதைகளடி... நாம் பழகிய அழகிய நாட்களின் நினைவுகள் எந்த ஓவியனது தூரிகையிலும் இதுவரை சிக்கிவிடாத அற்புதமான ஓவியங்களடி... உன் வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த அந்த மிகமெல்லிய முதலாவது குளிர்நாளில் நீ பேசிய ஒவ்வொரு வரிகளையும் என் நினைவுப் பெட்டகத்தில் எடுத்துச் செல்கிறேன்.. பழைய சில முத்திரைகளையும் பட்டாம்பூச்சிகளின் இறகுகளையும் பொன் வண்டு முட…

  15. உறங்கிய காதல் பார்த்ததும் உன்மேல் பூத்தது காதல் என்னில் பழகாமலே ருசித்தேன் விலகியே நடந்தேன் விண்ணில் இருந்தே மண்ணில் இருக்குமுனை தொட நினைத்து நீட்டினேன் கைகளை முடியாமல் தவித்தேன் சிட்டாக மாறியுனை கட்டியணைக்க எண்ணி சட்டென வந்தேன் மண்மீது அருகிருந்தே உனை நான் அளந்தேன் பார்வைகளால் இதமாக இருந்த போதிலும் இமைகள் படபடத்தன பயத்தில் பூவான நான் காதலை இயம்ப புயலாக நீ மாறி எனை காயமாக்கி அனலான பார்வையால் எனை தகனம் செய்துவிடுவாய் என்று சொல்ல நினைத்த காதலை சொல்லாமலே புதைத்தேன் இன்றுதான் தெரிந்துகொண்டேன் அன்று நீயும் எனைபோலவே..... ம்ம்ம்ம்ம்...! உன்மீதான என் காதலும் என்மீதான உன் காதலும் உச்சரிக்கப்படாம…

    • 20 replies
    • 4k views
  16. நல்ல பழங்களை ..... தட்டில் அடுக்கி வைத்து ..... நலிந்த பழங்களை....... கொடையாய் கொடுக்கும் ..... கலியுக தர்மவான்கள்.......!!! பகட்டுக்கு பிறந்தநாள் ..... பலவிதமான அறுசுவை ..... உணவுகள் - நாலுபேர் ....... புகழாரம் ....... விடிந்த பின் பழைய சாதம் ..... ஏழைகளுக்கு அள்ளி.... கொடுக்கும் ....... கலியுக தர்மவான்கள்.......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்

  17. அழகா அழகா வான் மதிதான் அழகா பூமியில் பெண்மதி அவள்தான் அழகா வானத்து விண்மீன்கள் ஒளிதான் அழகா மங்கை அவள் கண் சிமிட்டல்தான் அழகா மேகத்தில் தோன்றுகின்ற வானவில்தான் அழகா மங்கை அவள் தாவணியின் வர்னங்கள்தான் அழகா கீழ்வானம் சிவக்கின்ற சூரியன் தான் அழகா வெக்கத்தால் சிவக்கின்ற அவள் கன்னங்கள்தான் அழகா பூமியை நனைக்கின்ற மழைத்துளிகள்தான் அழகா க்ண்களைக் கழுவும் அவள் குறும்பு அழுகைதான் அழகா கூவுகின்ற குயிலின் குரல்தான் அழகா அவள் பேசுகின்ற தமிழ்தான் அழகா

  18. வெள்ளைக் கடற்கரையில்... வெள்ளைப் புற்றடி விநாயகரை வணங்கியே நாம் செல்ல மண்கும்பான் கும்பி மணல் மலையழகு காட்டும். மணலிடையே பனைமரங்கள் நுங்குதாங்கி நிற்கும் இதைப் பாhத்து நடக்கையிலே சோமர் கிணறு தெரியும் சுகமான குளிப்பென்று - அது எம்மை அழைக்கும். தெங்குகள் இடையினிலே பள்ளிவாசல் மிளிரும் தெவிட்டாத நீர் இங்கேயென சாட்டி வழி சொல்லும். மாதாவின் திருத்தலத்தின் மணி ஓசை கேட்கும்; மனத்திலே அதன் ஒலி அருள் நினைவு சுரக்கும் மேல் வானில் செங்கதிர்கள் அழகுக் கோலம் தெளிக்கும் அதன் கீழே பறவை இனம் வரிக் கோலம் போடும். கீழ்வானம் தேடியெங்கும் படகுகள் பாய் இழுக்கும் அதைப் பாhர்த்துச் சிறையாக்கள் பாய்ந் தழகு கொடுக்கும் இதைப் பார்த்து நிற்கை…

  19. விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா? ஆணதாய், பெண்ணதாய் பிம்பங்கூட பேரன்பில் மாய்ந்ததாய் மனதில் தோன்றி ஊரதும், உலகதும் உறைந்தே போக – உன் உறவது மட்டுமே உயிர் மேவுமோ? தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன் தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன் வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக் கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன? நேற்றுவரை மோகித்த கனவு எல்லாம் நெடுந்துயர் தந்ததன்றி வேறு இல்லை ஆற்ற வா…. அன்பே! அருகே நீதான் – அன்றில் ஆற்றாத துயரோடு……. உயிர் போகுமோ? எதையுமே கேட்டதில்லை உன்னிடத்திலே என்னையும் தந்ததில்லை உன் கரத்திலே பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப் பேதையின் நெஞ்சம் செய…

  20. நீயிருந்த கருவறையில் நானும் இருந்தேன் பெருமை அண்ணா.... கல்லறையில் நீ உறங்க கண்ணீரில் நானும் இங்கே தாய் மண் காத்திடவே தலைவரின் வழியில் நின்றாய் தாய் தந்தை வாழ்வுக்காய் அகதியாக நானும் இங்கே கல்லறையில் நீயும் அன்பே நிம்மதி உறக்கமா அண்ணா??? நாலுசுவர் வீட்டினிலே இங்கே நரகப்பட்ட வாழ்க்கையடா நானும் வந்து இணைந்திடவே நாளங்கள் துடிக்குதடா நான் வந்து உனைக்கான காத்திருந்த வேளை அண்ணா..... வீரச்சாவு செய்தி கேட்டு என்னை நான் இழந்தேன என் குரல் கேட்காமல் எப்படி நீயும் உறங்குகின்றாய்? உன் இனிய குரல் ஓலி இன்னும் என் காதில் ஒலித்து ..... என் கண்களில் நீராய் கரையுது அண்ணா........ என்…

  21. My paypal is : visjayapalan@gmail,com இதுவே இறுதி வார்த்தை. இனி சொல்ல ஒன்றுமில்லை. நான் தோற்று போய்விட்டேன். 3000 பேர்வரை என்னுடைய நம்பிக்கை அடிப்படையிலான கலை கடனாக பாலை இசைத் தொகுப்பை தரவிறக்கம் செய்துள்ளனர். REMOVED BY POET தரவிறக்கம் செய்த அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். -வ.ஐ.ச.ஜெயபாலன் (நமக்குத் தொழில் கவிதை ******************************************************************************** * இதற்ககுமேல் எழுதி ஆகப்போவதொன்றுமில்லை. எனினும் கலை இரசிகர்கள்மீது நான் வைத்த நம்பிக்கையை இழக்க விருப்பமில்லை. முதலில் கடனாக தரவிறக்கம் செய்யுங்கள் பாடல்கள் பிடித்துப் பதிவுசெய்துகொண்டால் கடனை செலுத்துங்கள் என்கிற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய விரும்பினே…

    • 20 replies
    • 4.3k views
  22. பெட்டி நிறைய பணம் இருந்தும் பெருமூச்சு விட்டு காத்திருக்கிறாள் அக்கா.. அழகும் அறிவும் இருந்தும் கண்ணீரோடு காத்திருக்கிறாள் பக்கத்து வீட்டு தோழி.. 'தோசம்' எனும் மூடநம்பிக்கையும் 'சீதனம்' எனும் சம்பிரதாயமும் அழியும் வரை வீட்டுச் சிறையில் காத்திருக்கும் கன்னிப் பறவைகளாக பெண்கள்... http://pirashathas.blogspot.fr/

  23. நீ என் தோழியா..? இல்லை காதலியா...? கவிதை........ உன்னுடன் நட்புக்காய் உனைச் சுற்றும் பக்தனானேன்..... உன் நட்பை பெறுவதற்காய் என் நாட்கள் பல தொலைத்தேன்....! என் நீண்ட போராட்டத்தில் மெது மெதுவாய் என் நண்பியானாய் அதன் பின் என் நேரங்களில் பல மணிகளைத் தின்றாய் எனை நடு சாமத்தில் எழும்ப வைத்தாய் நடு வீதியிலும் நடக்க வைத்தாய்..... எனை தெரு நாய்கள் பார்த்து தினம் தினம் குரைக்க வைத்தாய்...... நீ என்னை நெகிழ வைத்த நண்பியாய்...! என் இதயத்தின் இடங்களெல்லாம் முழுதாக வல்வளைத்தாய்...! நாம் சந்திக்கும் பொழுதுகளில்... அந்த சந்தோச வேளைகளில்.... உன் சிரிப்புக்காய் சொல்லும் …

  24. நானும் அப்பா எனும் ஆணும் 01 திமிர் ஏறிக் களைத்த நரம்புகளுக்கிடையே இன்னும் மிச்சமிருக்கின்றது அப்பாவுக்காக அழும் சில கண்ணீர் துளிகள் வெப்பேறிய உணர்வுகளுக்கிடையே அப்பாவின் விரல் பற்றி இன்னொரு பயணம் செல்ல காத்து தவிக்கின்றன என் விரல்கள் அப்பா பற்றிய நினைவுகளில் எல்லாம் குரோதம் படரவிட்ட ஒரு மாலைப்பொழுதில் தான் அவரை இழந்திருந்தேன் ************************* 2. ஆண் உணர்வு புடைத்து நிமிர்ந்து தலை தெறிக்க ஓடும் போது அறுந்த முதல் முதல் நாடி என் அப்பாவுடனான நேசம் அவரது ஒவ்வொரு சொல்லிற்கும் எதிராக நீண்டு முழங்கி ஓங்காரமாக அறைந்தது என் ஆண் மெளனம் என் மெளனத்திற்கு பதில் சொன்ன அவரது ஒவ்வொரு விடைகளிலும்…

    • 20 replies
    • 2.2k views
  25. இந்த அமாவாசை உன் பௌர்ணமிக்காக ஏங்குகிறது - உன் இரத்தத்தினால் நெய்யப்பட்ட என் இதயம் உன் பெயர் சொல்லித்தான் துடிக்கின்றது - நான் சுவாசிப்பதே நீ விட்டுச் சென்ற மூச்சுக் காற்றினால் தான்... என் கண்கள் உன்னைக் காண்பதற்காக தான் இரவில் விழி மூடுகின்றது... உன் விரல்கள் பிடித்து நடக்காததால் - என் கை விரல்கள் நடக்கும் போது விரிய மறுக்கின்றன... நீ இல்லாது - நான் தனித்துப் போவேனென்று தெரிந்திருந்தால் உன் கருவிலேயே உன்னுடன் கலந்திருப்பேன்..!! நீ எனக்கு காட்ட வேண்டிய நம் உறவுகள் எல்லாம் உன்னை எனக்குக் காட்டுகின்றார்கள் - என் தவிப்புக்கள் உனக்குத் தெரியவில்லையா....? என் முதன் முதற் காதலியே......…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.