கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அதிகாலைப் பொழுதின், இருள் பிரியாத நேரத்தில், ஆயிரம் பயணங்களில், அதுவும் ஒரு பயணமாகியது! அப்பாவின் பனித்த கண்களும், அம்மாவின் அன்புத் தழுவலும், அந்தத் தேங்காய் உடைத்தலில், அமிழ்ந்து போனது! கலட்டிப் பிள்ளையாரின், கடவாயின் தந்தங்கள், கொஞ்சமாய் அசைந்த பிரமையில், சஞ்சலப் பட்டது மனம்! விரியும் கனவுகளில், வருங்காலக் கேள்விக்குறி, விரிந்து வளைந்து, பெருங் கோடாகியது! தூரத்தில் தெரிந்த நீரலைகள், கானல் நீரின் கோடுகளாய், ஈரம் காய்ந்து போயின! கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும், காற்றாடியாகியது பயணம்! புலம்பெயரும் புள்ளினங்களே!, போன பயணம் முடித்ததும், போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு! போகுமிடமெல்லாம் கூடு கட்டும், பயணமாகியது, எனத…
-
- 17 replies
- 1.9k views
-
-
-
நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது குறியீடுகளால் குறியிடமுடியாத ஒன்றிணைவு. காலம் கரங்களை தரும். கரங்களுள் காணமல் போவது மனதின் சுரங்களை பொறுத்தது. நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது வரலாறுகளால் வரையப்படாத அனுபவக்கீறல். இடங்கள் நெருக்கங்களை தரும். நெருக்கங்களுள் நெகிழ்ந்து போவது நேசிப்பின் வேர்களை பொறுத்தது. ஒரு நண்பன் ஒரு பறவையைப்போல ஒரு மழையைப்போல ஒரு புலர்வைப்போல ஒரு நல்ல வாசனையைப்போல நெருங்க வேண்டும். அவனின் நட்பு மாலையாக இருக்கவேண்டும் கழுத்தில் நீண்ட மனவெளிகளை.... நீண்ட மௌனங்களை......... பயமுறுத்தும் சில பொழுதுகளை........ ஒதுக்கும் சில சடங்குகளை..... கடக்க உதவியும், முயன்றும் பாருங்கள் நண்பனின் கரம் பற்றி. எப்போதும், நல்ல நண்பன…
-
- 10 replies
- 909 views
-
-
இதன் கேள்வி வடிவிலான உள்ளடக்கம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் ஏனையவர்களும் படித்து ரசிக்க இங்கு இணைக்கிறேன். அனுராதபுரத்தில் உயிர்க்கொடை தந்து உலகதிரத் தமிழர் தலைநிமிரச் செய்த தற்கொடை வீரர்களின் தாக்கத்தில் உதித்ததாய் இருக்கலாம் இக்கவிதை... என்றே நான் நினைக்கிறேன். முட்கள் அ.பாலமனோகரன் முட்கள் எப்போது தோன்றின? முதலில் தோன்றியவை முட்கள்தானா? இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. ஏதோ ஒன்றைப் பாதுகாக்க வேண்டியே முட்கள் முதலில் தோன்றியிருக்க வேண்டும். தன்னைப் பாதுகாக்க இயலாத உயிர்க் கலம் ஒன்று தான் தாக்கப்படுகையில் ஏதோவோர் வகையில் எதிர்க்கவே செய்யும். இறக்குமட்டிலும் இந்த எதிர்ப்பு இருக்கவே செய்யும். இந்த எதிர் முனைப்பு …
-
- 1 reply
- 921 views
-
-
-
-
முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வ…
-
- 1 reply
- 1k views
-
-
முதன் முதலாய் அம்மாவுக்கு... ஆயிரந்தான் கவிசொன்னேன் அழகழகாப் பொய் சொன்னேன் பெத்தவளே ஒம்பெரு(மை)ம ஒத்தவரி சொல்லலையே! காத்தெல்லாம் மகன்பாட்டு காயிதத்தில் அவன் எழுத்து ஊரெல்லாம் மகன் பேச்சு ஒங்கீர்த்தி எழுதலையே! எழுதவோ படிக்கவோ ஏலாத தாய்பத்தி எழுதிஎன்ன லாபமின்னு எழுதாமாப் போனேனோ? பொன்னையாத் தேவன் பெத்த பொன்னே! குலமகளே! என்னைப் புறந்தள்ள இடுப்புல்வலி பொறுத்தவளே! வைரமுத்து பிறப்பான்னு வயித்தில்நீ சுமந்ததில்ல வயித்தில்நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு கண்ணுகாது மூக்கோட கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கெடக்கையில என்னென்ன நெனச்சிருப்ப? கத்தி எடுப்பவனோ? களவாணப் பிறந்தவனோ? தரணிஆள வந…
-
- 44 replies
- 13.8k views
-
-
முதன்முதலாய் அம்மாவுக்கு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதையை இணைக்கிறேன் ஆயிரம்தான் கவிசொன்னேன் அழகழகாய்ப் பொய்சொன்னேன் பெத்தவளே உன்பெருமை ஒத்தைவரி சொல்லலையே காத்தெல்லாம் அவன்பாட்டு காகிதத்தில் அவனெழுத்து ஊரெல்லாம் அவன்பேச்சு உன்கீர்த்தி எழுதலையே எழுதவோ படிக்கவோ இயலாத தாய்பற்றி எழுதியென்ன லாபமென்று எழுதாமல் விட்டேனோ பொன்னையாதேவன் பெற்ற பொன்னே குலமகளே என்னைப் புறந்தள்ள இடுப்புவலி பொறுத்தவளே வயிரமுத்து பிறப்பான்னு வயிற்றில்நீ சுமந்ததில்லை வயிற்றில்நீ சுமந்தஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு கண்ணுகாது மூக்கோடை கறுப்பா ஒருபிண்டம் இடப்பக்கம் கிடக்கையிலை என்னென்ன நினைச்சிருப்ப கத்தி எடுப்பவனோ களவாடப் பிறந்தவனோ …
-
- 4 replies
- 2.5k views
-
-
நான் உச்சரித்த முதன்முதற் கவிதை... ஒரேயொரு வார்த்தையில் " அம்மா " என்பதுதான்! இன்னும் எத்தனை கவிதை எழுதினாலும்... அத்தனை அழகு இதில் மட்டுந்தான்!
-
- 4 replies
- 1.3k views
-
-
முதற் காதல் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் பஸ் வரும் வீதியில் தடைக…
-
- 28 replies
- 5.7k views
-
-
ONE OF MY OLD POEM 1985 முதற் காதல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் ப…
-
- 7 replies
- 852 views
-
-
Windows வழியே பார்வை Walls இன் மேலால் பேச்சு உன் கண்கள் எனும் Icons Double click இல் திறக்கும் என் மன file. Snail-mail எனும் கடிதம் Encryption பலவும் கொண்டு Firewalls சிலதைத் தாண்டி அடையும் என்னவள் Inbox இதயம் எனும் Hard-Drive இல் Hidden-File போல் அழியாமல் அப்பப்போ pop-up செய்யும் Dynamic web-Page முதற்காதல்
-
- 1 reply
- 526 views
-
-
மரம் செடி இலைகள் போல மண் வாழும் உயிர்கள் போல மூச்சுவிடத் தெரிந்த முதலை நீருக்குள் எதற்காய் போச்சு? கூடுகள் குகைகள் இன்றி நீரடியில் உறங்கலாச்சு நரிக் குகையில் சிங்கம்போகும்; குயில் முட்டை காக்கை கூட்டில்; காக்கைகள் மனிதர் வீட்டில்; புற்று மண் எறும்பு கட்ட, பாம்புக்கு அதுவே கட்டில்; உன்சுவர் எனது வீட்டில் என் கலப்பை உனது வரப்பில் அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும் எண்ணமே முதலைக் கில்லை நீரடி எல்லாம் இங்கே பூமித் தாய் கருப்பை போல எல்லைகள் இல்லா தேசம் திசைகூட அழியும் ஆங்கே மனிதர்கள் பிரித்துப் போட்ட நிலம் பார்த்து சோகத்தோடு அழுவதே முதலைக் கண்ணீர் தெரிந்தபின் குறை சொல்லாதீர் நன்றி : பாலகுமாரன் http://tnmurali.bl…
-
- 0 replies
- 678 views
-
-
முதல் இரவின் சங்கமத்தில்....... நம் காலைப்பொழுது இவர்களுக்கு முதலிரவு எங்கே தெரியுமா ! கோடி கண்கள் பார்த்திருக்கும் ஓர் வெட்ட வெளியில் ! அவளின் வருகைக்காய் நீண்ட நேரம் காத்திருந்தான் ? நேரமும் நெருங்கியது காத்திருந்து காத்திருந்து கலங்கிவிட்டான் - காரணம் இவர்கள் பொருத்தமில்லா யோடிகள் நிறத்திலும் ஏன் குணத்திலும் தான் ! இவளோ பால் வெள்ளை அவனோ கறுப்பின் மறு உருவம் அவளும் வந்துவிட பறவைகளின் இன்னிசை பூச்சிகளின் ரீங்காரம் மரத்தின் இலைகளின் சல சலப்பு கடல் நீரின் அலையோசை இத்தனையும் சேர்ந்தொலிக்க இணைகிறது முதலிரவில் இவர்களின் உடல் இரண்டும் ! இவளின் ஆதீக்கம் அவனை அடியோடு மறைத்துவிட பார்த்தோர்கள் பர…
-
- 8 replies
- 2.5k views
-
-
இதுவரை கணக்குகளை மட்டும் விளங்கபடுத்த என் கையோடு கூடிய பேனா முதல் முறை உனக்கு கவி எழுத என் கையோடு கூட்டியதில் வந்த கழித்தல்கள் இவை தயவு செய்து சிரித்துவிடாதே கலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள் இன்னும் கலைந்துவிடும் பல கோடி கவிதைகளை கண்டபின்னும் பசியாறவில்லை இன்னும் காதலுக்கு எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி சிலையின் கையில் கொடுக்கப்பட்ட பேனாபோல் அசையாமல் மிதக்கிறேன் கற்பனைக்கடலில் எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி எண்ணில் விட்டதில்லை எழுத்துக்களில் விடுவதுண்டு பிழை எப்படி எழுதப்போகிறேனோ உனக்கொரு கவி உனக்காய் கவி எழுத விடிய விடிய யோசித்ததில் இரவுகளின் நீளத்தை என்னால் இப்படித்தான் அளக்க முடிந்தது ந…
-
- 5 replies
- 1.7k views
-
-
கண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல். காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதும் உண்டு. களிப்பு பொங்கும் வாலிப வயதில் வரும் பாலினக் கவர்ச்சியாக அற்பாயுசில் முடிவதுமுண்டு. அப்படிப்பட்ட காதல் கூடாவிட்டாலும், கல்லறை வரை அதைப் பொக்கிஷமாய் வைத்திருப்பவர்களும் உண்டு. “அன்று, நான் அவள் மனதிலும், அவள் என் மனதிலுமாய் எங்கள் காதலை வளர்த்தோம் கம்மங்காட்டின் கடைசியிலும் காளியம்மன் கோயிலிலும் சோளக்காட்டின் சந்தினிலும் செம்மண் புழுதியிலும். கதிராய், காவியமாய், செங்கரும்பாய், செந்தாமரையாய் செழித்து வளர்ந்த காதல் சூழ்நிலைச் சூறாவளியால் சொந்தமின்றி போனது. இன்று, அவள் அவளின் வீட்டில் கணவனுடன் நான் என் வீட்ட…
-
- 1 reply
- 862 views
-
-
நான் அவனுக்கு கடிதம் எழுதினேன் அது அவனிடம் போய் சேர வில்லை முட்டி அலை மோதி என்னிடம் வந்தது அவனின் முகவரி சரியாய் தெரியததால்
-
- 8 replies
- 1.6k views
-
-
இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரலை துடைத்தாலும் .... உரலில் ஓரத்தில் ..... துவல்கள் ஒட்டி இருப்பது .... போலவே ...... முதல் காதல் நினைவும் .... இதயத்தின் ஒரு ஓரத்தில் ..... ஒட்டியே இருக்கும் .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒரு நாள் உன்னை விட்டு பிரிந்து வந்ததற்கே எப்படி பிரிய முடிந்ததென்றா கேக்கிறாய் எங்கே உன் இதயத்தை திறந்து பார் பிரிவுக் கவிதை எழுதிக்கொண்டிருப்பேன் நீயே சொல் .. என் நம்பிக்கை நீயென்ற பின் நம்பிக்கை இல்லாமல் நீ தள்ளியே நின்றால் விழுந்திட மாட்டெனோ உன் முதல் சந்திப்பும் உன் முதல் பிரிவும் சில நாட்களுக்குள் நடந்தேறியிருந்தாலும் உன் பிரிவு மட்டும் இன்னும் என்னை வாட்டுகிறது உனக்கும் இரவில் உலாப் போக பிடிக்குமா சரி வா போய் வருவோம் அதற்க்கு முன் நிலாவிடம் சொல்லிவிட்டு வா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரும்படி உன்னை நான் பார்க்க வரும் போது மட்டும்தான் ஏறும் பேருந்தையும் இறங்கும் தரிபிடத்தையும் பக்கத்தில் இரு…
-
- 9 replies
- 5.3k views
-
-
உதிக்கையிலே மெல்லெனச்சிரித்தது உச்சியிலே சுள்ளென முறைக்கும் சாய்ந்தாடும் மரஞ்செடியும் சலனமின்றி விறைக்கும். ஊரெல்லாம் புழுங்கும் உடல்களெல்லாம் வியர்வை வெள்ளம்விழுங்கும். அடர்மர முற்றமதில் சுற்றமொன்றாய்க்கூடும் சிறுசுகளும் பெருசுகளும் விசிறிகொண்டு வீசும் நாசியிலே புழுதிமணம் புதுச்சேதி ஒன்றுபேசும். காய்ந்த புல்லை மேய்ந்தபசு தாகசாந்தி தேடும் நட்டுவைத்த பயிர்களெல்லாம் தலைகுனிந்தே வாடும். வாய்பிளந்த பூமியது நீலவானை நோக்கும் பொறுமையன்றோ உனது பண்பு என்று வானம் கேட்கும். தூரவான இடியோசை காற்றின் சிறை உடைக்கும் சில்லென்றதென்றல் வந்து புதிய யுகம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந் தென்றலில் சுட்டெரிக்கப் பட்ட எங்கள் சோலைகளின் எச்சங்களில் பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று குயில்கள் பாடுகின்றன பாதைகளில் கால் மிதிக்க உயிர் கிழிகிறது. குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து …
-
- 7 replies
- 1.7k views
-
-
ஈழப்போர் முறிந்தபின் வந்த 2010 வசந்த காலத்தில் கண்ணீரோடு எழுதிய கவிதை. * முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் * சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந்…
-
- 0 replies
- 621 views
-
-
முத்துப் போன்ற தீர்மானம்-நம் முதல்வர் காத்தார் தன்மானம் ஒத்துப் போக அனைவருமே-நல் ஒற்றுமை காட்டி தமிழினமே சத்தாம் வழிவகை வடித்தாரே-புகழ் சரித்திர முடிவு எடுத்தாரே பத்தொடு ஒன்றா ?இதுவல்ல-இந்த பாட்டில் முழுவதும் நான்சொல்ல அருளாதாரம் அணு அளவும்-என்றும் அறியா பக்சே உள்ளளவும பொருளாதார தடை ஒன்றே-சிங்களர் போக்கினில் மாற்றம் தருமென்றே ஒருநாள் கூட எண்ணாதீர்-வந்த ஒற்றுமை கெடவே பண்ணாதீர் திருநாள் காணின் தனிஈழம்-எட்டுத் திசையும் தமிழினப் புகழ்பாடும் ஒன்றே செய்யினும் நன்றாமே-அதை உடனே செய்தீர் இன்றாமே குன்றே எதிரே மறித்தாலும-கை குறுக்கே குழியே பறித்தாலும நின்றே முதல்வர் ஆய்வீரா-ஈழம் ந…
-
- 1 reply
- 636 views
-
-
கால்கள் போகும் திசையில் நடக்கின்றேன். கால வெய்யிலில் காய்ந்து விட்ட உடலோடு! கால்கள் மூன்றாகி நடக்கையில், மனம் மட்டும், அங்கும் இங்குமாய், மரம் விட்டு மரம் தாவும் குரங்காகின்றது! காலம் தான் எவ்வளவு குறுகியது! கிளித்தட்டு மறித்த கோவில் வீதிகளில், யாரோ பந்து விளையாடுகின்றார்கள்! களிப்போடு அவர்கள் எழுப்பும் குரல்கள், காதுக்கு இனிமையாய் இருக்கின்றன! கிட்டப் போய் விளையாட ஆசை வருகின்றது! அப்பு என்று யாரோ அழைப்பது கேட்கையில், ஆசை முளையிலேயே உயிர் விடுகின்றது! முதுமை என்பது, முந்திய அனுபவங்களின் இரை மீட்புக் காலம் போலும்! பழைய அனுபவங்கள் படமாக ஓடுகின்றன! இழந்து போன சந்தர்ப்பங்கள், எக்காளமிட்டுச் சிரிப்பது போல பிரமை! இமை வெட்டும் நேரத்தி…
-
- 34 replies
- 12.4k views
-