Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கவலை எதற்கு இவர்களுக்கு? என்றோ ஒரு நாள் கீறிவிட்ட உடலாலும் அன்றே திணிக்கப்பட்ட ஒரு விதையாலும் மனம் கோளாறுகள் நோண்ட வீதியில் திரிகிறேன் என் கண்களுக்குத் தெரிவது ஒரு குழந்தையின் ஐஸ் குச்சியும் அவள் கையிலிருக்கும் பலூனும் என்னைச் சுற்றி மடையர்களாய் நிற்கும் இந்தக் கூட்டங்களைக் கேவலமாக மதிக்கிறேன் இந்த தெருவே என் வீடு சாக்கடைகள் என் குளியலறை குப்பைத் தொட்டி என் சாதஅறை நினைவுகளின் பிணைப்புகளினால் என் மேனியில் படர்ந்து கொண்டிருக்கும் செயற்கைத் தோல்களை அங்கங்கே கிழிக்கிறேன். என் வீட்டில் குழந்தையைத் தவிர கூட்டத்திற்கு குறைவில்லை பெளர்ணமியின் வேதனையை முழுமையாக ரசிக்கிறார்கள் பூலோகக் காவியர்கள் கலைந்து ப…

    • 11 replies
    • 1.6k views
  2. கவிதையைக் கேட்க... +++ அப்பால் தமிழ் இணையத்தளத்தில் "பரதேசிகளின் பாடல்கள்" கவிதைத் தொகுப்பு பற்றி எழுதப்பட்ட கருத்துத்தான் மேற்காண்பது. +++ இக்கவிதைத் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் "அப்பால் தமிழ்" இணையத்தளத்தோடு தொடர்பு கொள்ளலாம். kipian [at] appaal-tamil [dot] com +++ இக்கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை நித்தியா குரல்வடிவில் செய்திருக்கிறார். கேட்டுப்பாருங்கள். இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. கவிதையைக் கேட்க...

    • 4 replies
    • 1.4k views
  3. அழவேண்டும் ஒரேயொரு முறை ஓங்கி அழவேண்டும். அழுகை அடையாளமாகவோ அவதானமாகவோ இருந்துவிடக் கூடாது. அழுகை மீதான குறிப்புக்கள் இன்னொருவரால் கடத்தப்படுமாகையால் அழுகைக்கு காரணமாகிவிடவும் கூடாது. தலைகோதவும் விரல்களைகளை வருடவும் மடி சாய்த்து கன்னம் தடவவும் அணைத்து முதுகை நெகிழ்க்கவும் ஒருவரும் இருக்கவும் கூடாது. என் அழுகை இறுதியானதாகவும் இயல்பானதாகவும் உண்மையானதாகவும் இருக்க உதவுங்கள். எப்போது அழுதேன். சுயநலத்தால் குரலெடுத்து கண்ணீர்விட்டுத் தொலைத்ததையெல்லாம் அழுகைக்குள் எப்படியடக்குவது. ஒலியில்லாமல் கண்ணீரில்லாமல் ஒடுங்கி தளர்ந்து நின்றதையெல்லாம் எதில் அடக்குவது? அழவேண்டும் ஓங்கி அழவேண்டும் அது நான்…

  4. எழுதுங்கள் என் கல்லறையில் இதயத்தை முத்தமிட்ட உன் அழகிய உதடுகள் விஷம் செறிந்த தேன் துளிகள் விழியாலே மொழிபேசும் கிளிமொழியாலே என் விழி பிதுங்கிட வைத்த பைங்கிளியே மை எழுதும் கண்ணாலே தினம் தினம் பொய்யெழுதி பொய்மைக்கு முன்னுரை உரைத்தவளே போதும் போதும் இந்த பொல்லாத உலகமிதில் பெண்ணொன்று வேண்டாம் இனி எனக்கு பெண்ணை நம்மாதே பேயாய் அலைந்திடுவாய் நம்பியவன் கதி நாயாய் நடைப்பிணமாய் நடுச்சாமத்திலும் தலையணை நனைத்திடும் நரகப் பொழுதிலும் புலம்புகின்றேன் அவள் பெயரை மூச்சிலே சுமக்கின்ற அவள் நாமம் அதுவே என்னை வாசகம் செய்கின்ற என் காயத்திரி மந்திரம் எழுதுங்கள் என் கல்லறையில் அவள் பெயரை தழுவும் அவள் வாசம் என் கல்லறையின் வாசகமாய்

  5. வட்ட..... வட்ட .... வெண்ணிலாவே... தொட்டு தொட்டு பேச வாவேன்..! நெட்டநெடு வானதிலே தன்னம் தனியாக நீ என்னை... என்னை சுற்றி வாறாய் இதை நிறுத்தாயா...? உன்னை...... உன்னை.... நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்.. நிம்மதியாய்... நித்தியமாய் இரண்டு வார்த்தை கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம் கீழ் இறங்கி வராயோ..? நீல நீள வானத்திலே நீ வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி..... அதைக் காணும் போது உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை ஆனால் ....முடியவில்லை..என்னால்.. கதிரவன்... கண்ணுறங்கும்நேரத்தில்... நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே.... எப்படித் தான் நன்றி சொல்வேன்.. நான் உனக்கு... மல்லிகை மொட்டவிழும் மாலை நேர…

  6. தமிழினத்தை உலகறிய ..... உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... உத்தம மனிதர்களில் ஒருவர் ..... மேன்மை தங்கிய தமிழ் .... விஞ்ஞான தந்தையே கலாமே ...! உங்கள் பங்கும் வற்றாத நதி அய்யனே .....!!! அடுத்த வேளை உணவுக்கு .... அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... தளராமல் விடாமல் முன் செல் ... வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... வாழ்துகாட்டிய எம் தந்தையே ... அய்யனே .....!!! எப்போது எதிர்காலம் உங்கள் ... கையில் இளைஞர்களே மாணவர்களே .....! உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! அய்யனே ..... நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... மரமாகும்... தோப்பாகும் …

  7. Started by pakee,

    இமையம் தொடுவது சாதனை இல்லை அன்பானவர்களின் இதயம் தொடுவது தான் சாதனை...

    • 0 replies
    • 685 views
  8. இறுதியாய் ஒரு யுத்தம் இறுதியாய் ஒரு யுத்தம் இனமானம் காக்க ஈனர்களை விரட்ட இழந்தவை யாவும் மீட்ட இனிவரும் பிள்ளைக்கு சுதந்திரத்தின் சுகம் காட்ட இறுதியாய் ஒரு யுத்தம். அடிமைகளாய் , அகதிகளாய் அவமான வாழ்வு போதும் ஏதிலியாய் எங்கேயோ அழுகிச் சாகும் நிலை போதும் அடியோடு வீழ்ந்தாலும் அன்னை பூமிக்கே, உரமாகும் மரணமேற்போம்... மாக்களுக்கு மனமஞ்சி மறைந்தொளியும் மானக்கேடு மண்ணோடு மண்ணாக்கி ஈழன்னை புகழ் தாங்கி புலிக்கொடியால் புயல் கிளப்பி புறப்படுவோம் பெரும் படையாய்.. நாய்கள் தான் வாழும் நரிகளுக்கு பயந்தொதுங்கி நாடாண்ட குடிகள் நாம் நடுக்கிடுவோம்.. படை நடத்தி. கோடிப்பேர் வரட்டுமே !! கூலிக்கு மாரடிக்கும் கூர்மையற்ற கூ…

    • 1 reply
    • 832 views
  9. இன்னும் வடுவாக நெஞ்சில்.... முகம் நிமிர்த்திச் சிரித்திட முடியாமல் முட்டி நிறைந்த துயரச் சுமையோடு அன்றாடம் ஆகிவிட்ட அந்தரப் பொழுதுகள் இவை.... ஆமியும் அதிரும் வெடியுமென அடிக்கொரு நொடி வரும் செய்தியில் எவர் எவரோ எண்ணங்களில் வந்தமர்ந்து போக வழிகிறது கண்ணீர்த் துளிகள். ஊருக்குள் உறவாடிய தோழரும் தோழியரும் யாருக்கும் தெரியாமல் பற்றைக்காட்டுக்குள் பார்க்கவும் முடியாச் சிறைக்கதவுக்குள்ளென செவி சேர்ந்த கதைகள் பல சொல்லாத சோகங்கள். ஊர்காக்கும் போரில் ஒன்றாய் படித்தவ(னு)ளும் கடுங்குளிரும் கொடு வெயிலும் சுடுவதில்லையெமக்கு என்றெழுதிய வரிகளில் விழுந்து கிடந்த விழிகளை மீட்டு வெளிநாடு வந்த சுயநலம் வலிக்கி…

    • 4 replies
    • 1.2k views
  10. வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே..! ******************************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* எரிமலையின் தீப் பிளம்பை எமது உறவுகளின் கண்களில் கண்டேன்.. கல்லூரி மாணவர்களா இவர்கள்..? இல்லை வல்லூறாம் சிங்களவரை விரட்ட வந்த நம்மூரின் நாயகர்கள்..தமிழ்ச் சொல்லூறும் எம்மினத்தின் போர்க் குயில்கள்! சின்னத் தளிருடல் வாடுதையா-உங்கள் சோர்வில் எம்மீழம் தோன்றுமையா..! உண்ணா விடுதலை நோன்பில் உங்களை ஆகுதி ஆக்கிக்கொண்ட எங்கள் திலீபர்களே..! வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே.. நாளை மலரும் எம்மீழ வரலாற்று நூலில் தோளை நிமிர்த்தி நிர்ப்பீர்கள் ...திண்ணம் இது!…

    • 3 replies
    • 826 views
  11. kavithaiஆகுதி போதாதோ?................... பாரடா தமிழா பாரினில் உன் நிலமை உலக நாடுகள் வாய்மூடி, கண் பொத்தி உணர்வின்றி ஊமையாய் வீற்றிருக்க உடல் சிதறி உறுப்பிழந்து உதிரத்தில் நீ தோய்ந்திருக்க உதவிடவோ யாரும் இல்லை உணவும் தான் உனக்கு இல்லை உணவின்றி மடிகின்றாய் உறக்கத்தில் மடிகின்றாய் முதலுதவி இல்லாமல் மடிகின்றாய் முப்பொழுதும் நீ மடிகின்றாய். காந்திதேசம் இன்று எம்மவரை காவுகொள்ள உதவுகிறது மூடர்கள் கையில் ஆட்சி மூர்க்கத்தனமான கொலைவெறி கடற்கரையில் வெட்டவெளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை ஏன் இந்த அவலம்? ஏங்குதடா இதயம். பூமாதேவி பொறுமை காப்பதேன்? பூக்களைக் கோடரியால் சாய்க்க விடுவதேன்? கோபம் கொண்டு பொங்கி எழுந்து போர…

  12. Started by tamilarasu,

    வாக்காளனே! இன்னுமா நீ விழித்துக் கொள்ள வில்லை? உன் விழிகளில் வெளிச்சத்தை ஏற்றி உன்னெதிரே நிற்கும் இம் மனிதனைப் பார்! ஏன்? அடையாளம் தெரியவில்லையா? பாவம் ஐந்தாண்டு இடைவெளியல்லவா? நீ மறந்து போயி(விட்டாய்)ருப்பாய்! ஆனால் உனக்கு வணக்கம் கூறும் இம்மனிதன்தான் ஐந்தாண்டுகளுக்குமுன் உனக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு தன் ஓட்டைப்பெற்று உன்னை – மறவாமல் வந்திருக்கிறான்! உனக்கு ஞாபகமிருக்காது ஏனென்றால் ஐந்தாண்டு இடைவெளியல்லவா? உனக்கு ஞாபகமில்லையென்றாலும் இதோ இந்த அரசியல்வாதிக்கு உன்னைமட்டுமல்ல பதினெட…

    • 0 replies
    • 497 views
  13. உன் கல்லூரி நண்பி மனிதக் கூடுகளைச் சுமந்தலையும் உயிர்களுக்கு மத்தியில் ‘மனிதம்’ காட்டி என்னை மயங்க வைத்த தோழனே ! உன்னைப் பிரிவதற்கு என் மனம் ஒப்பவில்லை நண்பா. வார்த்தையில் வர்ணஜாலங்களை வாரி இறைத்த என் கல்லூரிக் கலைஞனே என் உயிரை அழுத்திப் பெருவலியெடுக்க, உன்னைப் பிரிவதை எண்ணி நான் துடித்துப் போகிறேன். காயமற்ற இடங்களில் கூட உன் பிரிவு வலியைத் தருகிறது தோழா ! உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட சிறு தீவின் குமுறலாய் துயரெடுத்துப் புலம்புகிறது என் இதயம். என் உயிர் நண்பனே ! உன் கைப்பேசியில் என் எண்ணை அழுத்தி அடிக்கொரு ஒரு ‘குறுஞ் செய்தி’ அனுப்…

    • 7 replies
    • 4.2k views
  14. உனைத் தொடர்ந்த எனைப் பிறர் தொடராதிருக்க, எங்கள் தடங்களை என் கூந்தலால் மறைத்தேன். எங்கள் கட்டில் தீவில் சூரியன் அஸ்த்தமித்தது, எதிரொலிகளை உண்டபடி இரவு எழுந்தது. கடலில் மிதக்கும் மரக்கட்டைகளைப் போல் கிடந்த நம் முதுகளோடு மெழுகுவர்த்த்தி மின்னி மறைந்து இரகசியம் பேசியது. எங்கள் தீவில் எங்கள் கடற்கரையில் நாங்கள் பின்னிப் பிணைந்து கிடந்தோம். எனக்கு மேல் உந்தன் விழிகள் கடைப்பிடித்துவிடுவேனோ எனத் தோன்றிய எனது வாக்குறுதிகள் பற்றிய பயத்தோடு, நாங்கள் பகிர்ந்து கொண்ட மெய்களைக் காட்டிலும், உரைக்கத்தவறிய பொய்களிற்காக அதிகம் வருந்திக்கொண்டு, நான் ஆழமாய்ச் சென்றேன். உனக்காக இறந்த காலத்தோடு போர் புரிய, நான் ஆழஆழமாய்ச் சென்றேன். இப்போ எங்கள் இருவரிற்கும் த…

    • 3 replies
    • 1.2k views
  15. அலை கடலாய் ஆர்பரிக்கும் அப்பப்போ அமைதி கொள்ளும் எட்டாத எல்லையெல்லாம் எப்படியோ கடந்துவிடும் ஏட்டிக்குப் போட்டியாக எதுவும் செய்துவிடும் ஏக்கம் கொண்டு பின்னர் எதை எதையோ எண்ணிவிடும் மார்க்கம் கண்டபின்னர் மட்டிலா மகிழ்ச்சி கொள்ளும் முந்தை வினைப்பயனை முழுதுமாய் நம்பிவிடும் அன்பு கொண்டு ஆட்படும் அகந்தை கொன்று அகப்படும் சிந்தை நிறைந்து சிரிக்கவைக்கும் செம்மை கொண்டு சிலிர்க்கும் சொந்தங்கள் தேடி சொர்கங்கள் கூட சந்தங்களாகி சத்தங்கள் ஓய நித்தமும் ஓய்வின்றி நித்தியக் கடனாகி நினைவின்றி ஓடும் மனம்

    • 1 reply
    • 581 views
  16. தமிழா உனக்கு ஏனிந்த நிலை...??? என்ன செய்தாய் என்ன செய்தாய் என் தமிழா என்ன செய்தாய்..?? ஏன் உனக்கு இந்த நிலை....??? கண்ணீராலே முகம் கழுவி உன் காலை ஏன் விடிகிறது....??? கொட்டும் மழை செல்களிலே உன் குடில் ஏன் நனைகிறது...??? விடிகாலை ஒவ்வொன்றும் ஏன் உனக்கு ஓலத்தை அழிக்கிறது...??? நின்மதி தொலைத்து உன்னை ஏன் நிர்கதியாய் அலைக்கிறது...??? சுடு காடு மட்டும் உன்னை ஏன் சுதந்திரமாய் அழைக்கிறது...??? நிகழ் காலம் ஒவ்வொன்றும் உனக்கு இறந்த காலமாய் ஏன்...?? யுத்த தேசத்தில் சிறை கைதியாய் நீ மட்டும் ஏன்...?? விட்டில் புச்சியாய் உன் ஆயுள் முடிகிறதே ஏன் …

    • 6 replies
    • 1.2k views
  17. முரண்பாடுகள்!!! இரவும் பகலும் சிகப்புச் சிங்கமாய் இறுமிய எனகுள்ளே ஏதோ சில முரண்பாடுகள் தமக்குள்ளே அடிபட்டுக்கொள்கிறது என் மனதில் அய்யரை பேசி கோயிலை திட்டி சாத்திரங்களை எரித்து..வேதாந்தம் பல பேசிய பல பேரில் நானும் ஓருவன்! வீரமகன்! சிகப்புச்சிங்கம்! திருமணம் என்கிற பந்தம் வந்ததோ வந்தது! மாமாவின் புற்றுநோய்க்கு என் மனைவி கதிர்காம கந்தனிடம் வைத்த நேர்த்திக்கு நேரம் பார்த்து போய் வந்தோம்! மாமிக்கு வயசாகி கண் மங்கலாய்த் தெரிய என் மனைவி கனடா ஐயப்பனுக்கு நேர்த்தி வைத்தாள் "ஐயப்பனே என் அம்மாவின் கண்கள் சரியாக வர என் கணவர் இந்த முறை மாலை போடுவார்" நண்டு உயிரோடு இருந்தா…

    • 11 replies
    • 1.7k views
  18. '' போராட புறப்பட்டது பிழையா....???'' கட்டிவைத்த என் வீட்டை கயவன் வந்து இடிக்கின்றான்.... அவனை தட்டிகேட்க துணிவின்றி கை கட்டி நிற்கின்றேன்... துப்பாக்கி முன் நிற்க துணிவு வரும் எப்படி....??? தட்டி கேட்க நிற்பேனா...?? தப்பிக்க நிற்பேனா....??? முரண்டு பிடித்தால் முண்டமாய் நான் கிடப்பேன்.... அடங்கித்தானே போக வேண்டும் சிறு பாண்மை என்ன செய்யும்....??? சீற வா முடியும்..?? சினக்கவா முடியும்..??? இன்றிங்கு இப்படித்தான் நடக்கிறது.... யார் தட்டி கேட்டார்...?? யாரால் முடியும்....??? தட்டி கேட்டால் பதில் என்ன வரும் - நீ பலியாய் போவாய்.... இது என்ன...?? இது தானே அடக்கு முறை... இப்போ சொல் உலகே ந…

  19. இந்த அமாவாசை உன் பௌர்ணமிக்காக ஏங்குகிறது - உன் இரத்தத்தினால் நெய்யப்பட்ட என் இதயம் உன் பெயர் சொல்லித்தான் துடிக்கின்றது - நான் சுவாசிப்பதே நீ விட்டுச் சென்ற மூச்சுக் காற்றினால் தான்... என் கண்கள் உன்னைக் காண்பதற்காக தான் இரவில் விழி மூடுகின்றது... உன் விரல்கள் பிடித்து நடக்காததால் - என் கை விரல்கள் நடக்கும் போது விரிய மறுக்கின்றன... நீ இல்லாது - நான் தனித்துப் போவேனென்று தெரிந்திருந்தால் உன் கருவிலேயே உன்னுடன் கலந்திருப்பேன்..!! நீ எனக்கு காட்ட வேண்டிய நம் உறவுகள் எல்லாம் உன்னை எனக்குக் காட்டுகின்றார்கள் - என் தவிப்புக்கள் உனக்குத் தெரியவில்லையா....? என் முதன் முதற் காதலியே......…

  20. கவிதைக்குள் எழுத வரவில்லை ஏன் என்று தெரியவில்லை அதனால் தான் இதனுடாக அனுப்புகின்றேன் காதல் காதல் புனிதமானது அற்புதமானது முறையாக உண்மையாக காதலிக்கும் போதுஃ ஆனால் தற்போது காதல் மலிந்து முறை கெட்டு விட்டது அதுவும் வெளிநாடுகளில் காதல் சீர்குலைந்து விட்டது காதலர்கள் சோடி மாறியது அல்ல அதிசயம் கணவன் மனைவி குழந்தைகளை அநாதையாக்கி சோடி மாறுவதுதான் ஆச்சரியம் வேதனை அதுமட்டுமா தாயகத்தில் நிச்சயிக்கப்பட்டு ஏன் திருமணமும் செய்து கொண்டு வெளிநாடு வந்து அவர்களை ஏமாற்றி விடுவது கொடுமையல்லவா அதுவும் இப்பொழுது நடக்கின்றது ஒருவர் காதலித்து விட்டு அல்லது திருமணம் செய்துவிட்டது அதை உதறி எறிந்து விட்டு இன்னொருவரை காதலிப்பதாக அவர்…

    • 16 replies
    • 4.8k views
  21. திசைகள் புணர்ந்த இடத்திலிருந்து திரும்பத்தொடங்குகிறேன். நான் நீ இனி முத்தமிட்டுக்கொள்ளலாம். முன்னைய முத்தத்தின் நினைவுகள் கூடாதவகையில் முத்தமிடு. இனியொருபோதும் நிகழமுடியாத சந்திப்பின் இறுதி முத்தமென்று நினைவில்கொள் முத்தமிடு. சாம இரவுகளில் வெற்றுத்திடல்களில் சுடரும் ஒளியிறக்கி முத்தமிடும் மின்மினிகளைப் பார். பேரண்டத்தின் மூர்க்கம் கொண்ட மூலையில் இருந்து எடுத்துவை முத்தத்தை. இதழ் ஊறும் காமம் தீண்டி உயிர்க்கும் விரல்கள் இறந்துபோன காலமொன்றினை கடந்துவரட்டும். மேனிகுழல் வாய்முத்தம் இசைக்கின்றன துவாரங்கள் கனப்பொழுதொன்றில் வித்துறை உடைந்து நிலம் கிழித்து எழுகிறது முளையம், அன்பு. ஒற்றைப் பார்வைக்கும் மற்றைச்சொல்லுக்கும் ஒத்திவைக்கும் …

  22. Started by putthan,

    ஆதிமூலத்தில் அந்தணண் பக்தி வேலி இட்டான் ஆலயத்தில் அயலவர்கள் சாதி வேலியிட்டனர் அலுவலகத்தில் அதிகாரிகள் அதிகார வேலியிட்டனர் பாடசாலையில் ஆசிர்யர்கள் கல்வியால் வேலியிட்டனர் காதலர்கள் அன்பால் வேலியிட்டனர் கணவன்,மனைவி தாம்பத்திய வேலியிட்டனர் பேரினதவாதம் பயங்கராவாத வேலியிட்டது விடுதலை போராளிகள் விடுதலை வேலியிட்டனர் தம் உயிர் தியாகத்தால்!

  23. இருக்கும் இருத்தலை நேசிக்காத இருத்தல் முரண் _இருந்தும் இருந்துகொண்டிருக்கும் இருப்பை இழந்துவிடும் துணிவுமில்லை , இருப்பதால் நுகரப்படுவது இருப்பின் மீதான வெறுப்பாக இருந்துகொண்டேயிருக்க , இருக்கிறேன் என்றே இயல்பாக இயம்புதல் வழக்காயிற்று . இப்படி இருத்தல் இருத்தலுகாகாது என்று அன்பில் இருக்கும் எல்லோரும் சொல்லியும் இருத்தல் அப்படியே .................! இருக்கிறது இன்னும் இருந்துவிடலாம் என்ற அவா . என்ன, இவர்களைப்போல் எப்படியும் இருந்திட துணிந்திடில் இருந்திடலாம் _உள் இருந்தொரு குரல் யாருக்கும்கேளாமல் , யார்சொல்லியும் கேளாமல், இருந்து மிரட்டுகிறது _இந்த இருப்பெல்லாம் இருப்பா என்று ?

  24. பசுமை தளிர்த்து கனியும் கிடைத்து நிலைக்கும் என நினைக்கையில் இலைகள் உதிர்ந்து காம்பும் கறுத்துப் பட்டதாய் நின்றது பின் பனியுந்தூற, பட்டை பிளந்து பஞ்சாய்ப்போனதுபோல் பழ மரம் பருத்திச் செடியாய்க் காட்சியளித்தது. புதிதாய்த் தூவிக்கிடந்தது பனி அதில் புதிதாய் ஏதோ பிராணியின் தடம் இதுவரை எதுவும் நடக்காத கிரகத்தின் முதற்சுவடுகள்... மனதுள் பிரமை நிஜமாய்த் தெரிந்தது. ஜக்கட்டுக்குள் நுளைந்து குளிரோடு பொருதும் பிறவும் பூண்டு பின்வளவுக் காட்சி மனதில் இருக்க முன்கதவால் இறங்கித் தெருவில் நடந்தேன். கோடையில் எனது போதியாய் விளங்கும் காட்டுக்குள் புகுந்தேன் பட்டனவாய் நின்ற நெடிதுயர்ந்த விருட்சங்கள் மூச்சின்றி நிமிர்ந்து நின்றன. கிளையாய்ப் பிரிந்தது பாதை இரண…

  25. Started by pakee,

    மாலையில் மரணம் என்று தெரிந்தும் கூட காலையில் கண்ணீர் வடிப்பதில்லை பூக்கள்...

    • 7 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.