கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
முள்ளிவாய்க்கால் ஓரத்திலே விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவை சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களை சுமக்கிறது கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் - ஓவியா- முற்காலத்தில் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூன்யமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து …
-
- 6 replies
- 10.8k views
-
-
MULLIVAIKKAL REMEMBRANCE DAY- POET'S VOW முள்ளிவாய்க்கால் நினைவு - ஒரு கவிஞனின் பிரதிக்ஞை, . Please perform it as songs, rap songs, and dance. No permission needed. பிடித்த வரிகளை பாடல் ஆடலாக நிகழ்த்த வேண்டுகிறேன். அனுமதி வேண்டியதில்லை. . தோற்றுப் போனவர்களின் பாடல். வ.ஐ.ச.ஜெயபாலன் . எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழப்படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. . எரிந்த மேச்சல் நில…
-
- 2 replies
- 837 views
-
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்… தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி "(வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள்." 1. பசி (வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள். நாம் உருண்ட முற்றத்தை உழுது புரட்டினார்கள். அங்கே எங்கள் வானத்தையும் அல்லவா உடைத்துப்போட்டார்கள். புலவுகளும் பொழுதுகளும் கலவரமாயிற்று. எப்படி மனசு வரும்? அவ்வளவு இலகுவில் சொந்தம் விட்டுப்போக. குட்டி ஈன்ற பூனையாக மனசு அந்த மண்ணையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. லாந்தர் வெளிச்சத்திலும் பொருள் நகர்த்தினோம். பயணப்பட்ட…
-
- 3 replies
- 768 views
-
-
முள்ளிவாய்க்கால் பரணி! 01 கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமெ…
-
- 0 replies
- 911 views
-
-
முள்ளிவாய்க்கால் பரணி! கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து ஒருநாள் கேட்கையில் நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென ஒருவரும் கொல்லப்படவில்லையென யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்பென அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாமென யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோமென பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனரென பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோமென இறுதியில் சொல்லினர் யுத்தம் போராளிகளுக்கு எதிரானதென எமை மீட்கும் யுத்தமென்றனர் மீட்பு என்பது இருதயங்களை கிழித்தலா? மனிதாபிமான யுத்தமென்றனர் …
-
- 0 replies
- 598 views
-
-
கால்கள் எதுவுமற்ற என் மகள் தன் கால்களைக் குறித்து கேட்கும்போது நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர் யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு எதிராக நடக்கவில்லையென்று ஒருவரும் கொல்லப்படவில்லை என்றனர் யுத்தமென்றால் ஆட்கள் இறப்பது இயல்புதானே என்றனர் அவர்கள் கூறினர் ஒரு ஐயாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று யுத்தத்தில் நிறையப் பேர் இறந்தை ஒப்புக்கொள்கிறோம் என்றனர் பின்னர் கூறினர் போராளிகளே மக்களைக் கொன்றனர் என்று பின்னர் கூறினர் படைகளால் சனங்கள் கொல்லப்பட்டதை ஏற்கிறோம் என்று இறுதியில் யுத்தம் போராளிகளுக்கு எதிரானது என்றனர் நிகழ்த்திய எல்லாவற்றையும் மறுத்துக்கொண்டு மேலும் அதை தொடர்ந்தபடி எல்லாவற்றையும் மறப்போம் என்றனர் எதையும் பகிராமல் …
-
- 0 replies
- 855 views
-
-
முள்ளிவாய்க்கால் பாடல் – தீபச்செல்வன்… May 18, 2019 நிலத்தைக் கிளர்ந்து உருவியெடுத்த நிறம் வெளுத்த ஆடையினை உடுத்தி உக்கிக் கரையாத எலும்புக்கூடுகளுடன் பேசுமொரு தாயின் உடைந்த விரல்களில் பட்டன தடித்துறைந்த இறுதிச் சொற்கள் சொற்களை அடுக்கினாள் மலைபோல் கையசைத்து விடைபெற்றுக் களம் புகு நாளில் வெகுதூரம் சென்றுவிட்ட பிறகும் படலையிற் கிடந்து பார்த்திருந்தது போல் பறவைகளின் சிறகுகள் அஞ்சலி மலராய் சிதறிய மணல்வெளியிற்தான் இன்னமும் புரண்டு கிடக்கிறாள் இதே கரையிருந்தே சீருடைகளை களைந்து, கடல் வெளியில் போட்டான் கடலில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் அதை அணிந்து கீழே செல்ல வாயிற்குளிரு…
-
- 0 replies
- 1k views
-
-
- சோதியா
-
- 7 replies
- 1.7k views
-
-
சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு. முள்ளிவாய்க்கால் பேராவலம்முடிவில்லா ஓர் அவலம்பன் நாட்டுப்படை புகுந்துபல்லாயிரம் உயிர் தின்றுசொல்லாத கதை கோடிசுமந்து கிடக்கும் மண்ணதுவில்லாண்ட இனம் ஒன்றுவீறுகொண்டு போர் கண்டுவிடுதலைக்காய் வேள்வியொன்றைவிருப்புடனே நடத்தியதையைகண் காணச் சகிக்காதகாடையர்கள் கூட்டிணைவில்இனம் ஒன்று அழிந்ததுவேஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமேபல தேசம் வாழ்ந்தோம்பார் எங்கும வீதி வழி குவிந்தோம்பலனேதும் கிடைக்காமல்பரிதவித்து பைத்தியமானோம்இனப்படுகொலை ஒன்றைஇரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறிஇந்தியப் பெருங்கடலும…
-
- 2 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் தனில் அழித்திட்டோம் புலிக் குகை கலைத்திட்டம் தமிழ்க்குடி.. எக்காளமிட்டது துட்டகைமுனு வம்சம்..! கலைத்திட்டது தமிழ் குடியல்ல தேன்கூடு.. தமிழ் உலகெங்கும் - அது கட்டுது வதைவதையாய் பெரும் கூடு..! தேடி வந்து அழித்த பகை திகைத்து நிற்கும் தருணங்கள் பல காத்திருக்குது..! வெற்றி முழக்கமிட்ட சிங்களம் விழி பிதுங்க முழங்குது விடுதலைக் கோசம் தமிழ் மாணவர் பாசறையெங்கும்..! செம்மொழியாம் தமிழ் மொழியில் தாய் நிலமாம் தமிழகத்தில் மையம் கொண்டு....! வீழ்த்திவிட்டோம் சோழப் பெருங்கொடியாம் புலிக்கொடி..! மமதையில் நின்ற மகிந்த கூட்டம் முன்னிலையில் பறக்குது மீண்டும் புலிக்கொடி சர்வதேசம் எங்கும்..! உச்சரிக்கக் கூட முடியாது.. பிரிவினை…
-
- 4 replies
- 1.2k views
-
-
மேமாதம் எங்களின் சா மாதமாய்..... முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவுகளோடு ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.
-
- 0 replies
- 833 views
-
-
மலர்போல் வந்து ....முள்ளாய் போன காதலும் உண்டு....!!!முள்போல் வந்து ....மலராய் மலர்ந்த ...காதலும் உண்டு....!!!காதலை காதலால் ...காதல் செய்தால் ...முள்ளும் ஒருநாள் ...மலராகும் ....!!!^முள்ளும் ஒரு நாள் மலரும் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
[Wednesday, 2011-06-15 21:36:15] முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சிறிலங்கா அரசு:செனல்-4 வினால் அல்ஜெஸீராவிடம் மாட்டிக் கொண்ட ரஜீவ் விஜயசிங்க எம்.பி அறிவிப்பாளரைக் கேள்வி கேட்கவிடாமல் கதையளக்கும் காணொளி.. http://youtu.be/sdrCR-X4iH0 http://www.seithy.com/breifNews.php?newsID=44922&category=TamilNews
-
- 0 replies
- 974 views
-
-
முஸ்லிம் நண்பா!உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!முடியவில்லை என்னால்;காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான் உடும்பனில்அவற்றை நீ வெட்டிவிட்டாயே!நீ மறந்திருப்பாய்.என்னால் மறக்கமுடியவில்லை.காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!நினைவிருக்கிறதா உனக்கு..நீ மறந்திருப்பாய்.நீ கொலைவெறியோடு விரட்டும் போது;ஒரு கையில் குழந்தையும்இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம் வீரமுனை, திராய்க்கேணியில்.நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்உனக்காய் அழமாட்டமா?ஆனால்;மன்னித்துவிடு சகோதரா...இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!நீ சிங்கள இனதாண்டவத்தில் தான் தத்தழிக்கிறாய்நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!நாளை…
-
- 0 replies
- 1.1k views
-
-
நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்? காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! மூதூரில் சிறுமிகளை வன்புணர்வு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தினேர்கள் நீங்கள் தமிழர் இல்லை -முஸ்லிம்கள். கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால…
-
- 2 replies
- 1.8k views
-
-
மூக்கறையனிசம். முன்னுரை: தேசம் என்றான் ஒருவன் தேசியம் ஒரு கற்பிதம் என்றான் இன்னொருவன் தேவையில்லை இவையெல்லாம் மாயையென்றான் மூன்றாமவன் முதலாமவனுரை: என்னிடம் தேசமில்லை தேசம் எனக்குத் தேவையில்லாதிருந்தது இருப்பினும் தேசம் உள்ளவர்கள் என்னுரிமைகளை மறுத்தார்கள் என்னுரிமைகளை மீட்டெடுத்து உயிர் கொடுக்க எனக்குமோர் தேசம் தேவையென தங்களையறியாமலே எனக்கு அறிவுறுத்தினார்கள் தமக்கெனத் தேசமிருந்ததால் என்னை ஒடுக்கியவர்கள் தேசியத்தை அவர்கள் என்மீது திணித்தார்கள் தேசம் என்பது என் இருத்தலின் தேவை தேசம் இன்றி என்னால் தப்பி வாழமுடியாது ஆகையினால் நான் தேசம் வேண்டிப் போராடுகிறேன். யாருக்கெனவும் ஒரு தேசமின்றி உலகம் முழுவதும்…
-
- 4 replies
- 2.3k views
-
-
மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஆறானதோ? எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து சாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? இரசாயன நெருப்புக்குள் வெந்து கருகி மடிந்தும் பச்சிளங்குழந்தைகள் பாழும் குண்டுகளால் பரிதவித்து இறந்தும் ஆண்டுகள் ஆறானதோ? சதிவலை பின்னியநாடுகளை இறுதிவரை நம்பி காத்திருந்து உயிர் பறிக்கப்பட்டு ஆண்டுகள் ஆறானதோ? பதுங்குகுழிகள் வெட்டி உயிரை பாதுகாக்க முடியாத வலயத்துள் பல நூறாயிரம் எறிகணைகள் வீழ்ந்து பதைபதைத்து எம் உறவுகள் துடிதுடித்துசாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? நம்பிக்கை வைத்த நாடுகள் தான் கூடிச் சதி புரிந்தது தெரியாமலும் அயல்நாட்டு அரசின் பக்கபலத்துடன்தான் இனவாத சிங்கள அரசு இனப்படுகொலை செய்கின்றது என்பதை அறியாமலும் அன்று எம்உ…
-
- 1 reply
- 639 views
-
-
மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஐந்தாகிப் போனதுவோ- எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதோ இரசாயன நெருப்புக்குள் உறவுகள் வெந்து துடித்து கருகி மடிந்த போது இங்கிருந்து நாம் கதறி அழுதோம் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் ஆண்டுகள் ஐந்தானதோ இன்று பாழும் குண்டு மழைக்குள் எங்கள் பச்சிளங்குழந்தைகள் பதைபதைத்து துடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதுவோ சதிவலைகள் பின்னிய நாடுகள் என்று தெரியாமல் அந்த நாடுகள் ஓடிவந்து உதவாதோ என்று இறுதிவரை நம்பிக்கையோடு காத்திருந்து அன்று எங்கள் உறவுகள் உயிர்கள் ஊமையாய் அடங்கிப்போயின. அதனை எண்ணி எண்ணி நாம் அழுது அரற்ற ஆரம்பித்து ஆண்டுகள் ஐந்து ஓடியே போனது பதுங்குகுழிகள் வெட்…
-
- 9 replies
- 1k views
-
-
உயிர்கள் அற்ற உடல்களோடு உறங்கி இருக்கிறேன் பிணங்கள் எரியும் வெளிச்சத்தில் நிலாரொட்டி உண்டிருக்கிறேன் குண்டு மழைக்குள்ளும் குடையோடு இடம்பெயர்ந்திருக்கிறேன் அசைக்கமுடியாத ஆணிவேரின் உச்சியிலிருந்து சுனாமியால் தப்பியிருக்கிறேன் இருபத்தி நான்கு மாதங்கள் இருட்டறையில் சிவராத்திரி மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன் பெயர் தெரியாத பனிமலை தேசத்தில் பிணமாய் உருண்டிருக்கிறேன் கைப்பாசை உதவியோடு ஐந்துநாள் பட்டினியை பிச்சை எடுத்து முடித்திருக்கிறேன் விழுந்தால் மீனுக்கு நான் பாய்ந்தால் எனக்கு நான் தெரிந்தும் கப்பல்விட்டு கப்பல் பாய்ந்திருக்கிறேன் ஆனால்..... என்னை மூச்சுவிட்டுக் கொண்டே முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால் மூ…
-
- 3 replies
- 981 views
-
-
மூடிய சிறையில் கவிதை - இளங்கவி....... குடிசைக்குள் ஓர் கூடல்..... கொஞ்சும் நிலவின் ஒளியின் கீழ் மனதால் கூடி நிற்கும் ஓர் காதல்...... அவன் அடிக்கும் செல் இங்கேயும் வரப்போது இந்த நேரத்தில் இது தேவையா.... உனக்கு இப்போ இப்படியொரு ஆசையா..... அவன் தொடுதலில் கிறங்கி அவள் உதடுகள் புலம்ப....... அவள் புலம்பலில் மயங்கி அவன் உணர்வெல்லாம் மழுங்க...... சில்லென்ற குளிர் தாங்கும் சுகமான தென்றல்...... இருள் வானின் நட்சத்திரம்...... ஒளிந்து பார்க்கும் பிறை நிலவு.... ஆட்காட்டிச் குருவியின் ஆள் காட்டும் ஒலியோசை..... ஊளையிடும் நரியோசை... வியர்வையில் ஒட்டிய மேலாடை.... அதை ஓரங்கட்டும் அவனின் இரு கைகள்..... களி மண் தரையிலே …
-
- 0 replies
- 524 views
-
-
மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத…
-
- 0 replies
- 946 views
-
-
மூன்றாம் காதல் -------------------------------------------------------------------------------- - நெப்போலியன் பத்தாம் வகுப்பு படிக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்தவளுக்காய் எழுதிய காதல் கடிதத்தை அவன் அப்பாவை ? படிக்க வைத்துப் பார்த்த முதல் காதல் ! வேலைக்குச் செல்கையில் ரயில் வண்டியில் எதிர் இருக்கையில் இரண்டு வருடத்திற்கும் மேலாய் அடைகாத்து ? சொந்த வாகனம் உடையவன் அறிமுகம் கிடைத்ததும் பரிதவிக்க விட்டுப் பறந்துபோன இரண்டாம் காதல் ! மூத்தவன் வலது கையிலும் இளையவன் இடது கையிலும் என் விரல்களைக் கோர்த்தபடி நடந்துகொண்டிருக்க... கடைக்குட்டியை அவள் வயிற்றில் சுமந்தபடி முற்றுப்பெற்ற மூன்றாம் காதல். சுட்டது...இ…
-
- 0 replies
- 728 views
-
-
திசைகள் புணர்ந்த இடத்திலிருந்து திரும்பத்தொடங்குகிறேன். நான் நீ இனி முத்தமிட்டுக்கொள்ளலாம். முன்னைய முத்தத்தின் நினைவுகள் கூடாதவகையில் முத்தமிடு. இனியொருபோதும் நிகழமுடியாத சந்திப்பின் இறுதி முத்தமென்று நினைவில்கொள் முத்தமிடு. சாம இரவுகளில் வெற்றுத்திடல்களில் சுடரும் ஒளியிறக்கி முத்தமிடும் மின்மினிகளைப் பார். பேரண்டத்தின் மூர்க்கம் கொண்ட மூலையில் இருந்து எடுத்துவை முத்தத்தை. இதழ் ஊறும் காமம் தீண்டி உயிர்க்கும் விரல்கள் இறந்துபோன காலமொன்றினை கடந்துவரட்டும். மேனிகுழல் வாய்முத்தம் இசைக்கின்றன துவாரங்கள் கனப்பொழுதொன்றில் வித்துறை உடைந்து நிலம் கிழித்து எழுகிறது முளையம், அன்பு. ஒற்றைப் பார்வைக்கும் மற்றைச்சொல்லுக்கும் ஒத்திவைக்கும் …
-
- 10 replies
- 1.8k views
-
-
மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்ட கனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால் நச்சுப் பொறாமை வழியச் சிரித்திடுமே அந்த அருவருத்த பாம்பு அது எங்கே. உன் பிள்ளை ஒன்றுக்குப் பாம்புக் கழுத்து மற்றதற்ககுப் பாம்புக் கண் என்ற ஊர்வாய் மொழியைஒப்பவில்ல்லை …
-
- 0 replies
- 1.1k views
-