Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் தாய் ஈன்ற வீரர் தமிழீழம் தாங்கிய வீரர். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழுக்காய் தமிழ் மண்ணுக்காய் தம் சுகபோகங்களை துறந்து காவியம் படைத்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தம் இனம் தரணியில் தன்மானத்துடன் வாழ்வதற்காய்’ தம் உயிரைத் தியாகம் செய்தவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள். தமிழர்கள் அடிமைப்படுவதையும் தம் தாயகம் பறிபோவதையும்-கண்டு வீறுடன் துடித் தெழுந்தவர்கள். அவர்கள் தான் எம் மாவீரர்கள். தானைத் தலைவன் வழியில் தடைகள் பல தகர்த்து தரை கடல் வான் படைகளாகவும் கரும்புலிகளுமாகி காவியமானவர்கள் அவர்கள் தான் எம் மாவீரர்கள் மறத் தமிழனாய் வாழ்ந்து காலன் வருகின்றான் என்று பின்வாங்காது களமாடி காவிய நாயகர்கள் ஆனவர்…

    • 0 replies
    • 661 views
  2. 'காதலுக்குப் போராடுகிறேன்' "தாலி கட்டி பொட்டு இட்டு தாரம் என்று ஊருக்கு கூறி தானும் தன் சுகத்திற்கு மட்டும் தாகம் தீரத் உடல் தீண்டுகிறான்!" "காதல் இல்லை கனிவும் இல்லை காத்தரமான ஒரு வாழ்வும் இல்லை காலம் முழுதும் நான் பணிசெய்து காமம் தணிக்கும் உடல் மட்டுமே!" "அன்பு வேண்டி உள்ளம் போராடுகிறது அணைப்புத் தேடி உடல் போராடுகிறது அயர்ந்து தூங்க கண் போராடுகிறது அலுப்புத் தட்டி உயிர் போராடுகிறது!" "குடும்ப கண்ணியத்தை மனதில் நிறுத்தி குழந்தை குட்டிகளை கவனத்தில் எடுத்து குதூகலம் மறந்து மௌனமாய் சஞ்சரித்து குற்றுயிராய் இன்று …

  3. ஆலாபனையொன்றின் சிதைவுகளிலிருந்து எழுகின்றது சீரான முனகல் ஒலியொன்று இன்றைய பொழுதுகளில், கரிய இருளூடு அந்தரித்தலையும் மெல்லிய வெண்மையொன்றை போல, நீண்ட அமைதிகளை ஊடறுத்து ஒலித்தோயும் தெருநாயொன்றின் ஊளையைப்போல, வைகறையொன்றை நோக்கி தவமிருக்கும் ஒரு பறவையின் பசியைப்போல, நிகழ்த்திப்போகிறது உணர்த்தமுடியாத எதோ ஒன்றை, மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில் எழும் அச்சங்களை தொலைக்கும் அபயகரமொன்றின் ஓங்கார ஒலியை தடுக்கமுடியாத ஊனங்களை கடக்கும் யாதார்த்த கணங்களில் தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை, எதிர்பார்த்து கிடக்கிறது ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள். இருந்தபோதும்.................... ஆலாபனைகளூடான நீடிக்கும் அந்த ஒலிமட்டும் ஒலித்துக்கொண்டே …

  4. அறுபது மாதங்களாய் ஆறாத் துயர் கடந்து ஆற்றமுடியா வடுக்கள் சுமந்து ஆற்றாமையுடன் காத்திருக்கின்றனர் அடிமைகள் ஆக்கப்பட்ட எம்மக்கள் கருகிய பூமியில் கால் பதிக்க இடமின்றி கசங்கக் கிடக்கிறது கந்தகம் சுமந்த பூமி கொடும் கனல் குருதி தோய்ந்து கோரங்கள் சுமந்த நந்திக்கடல் கேட்பார் ஏதுமற்றுக் கேவலுடன் கிடக்கிறது வீறுநடை போட்ட வெற்றிகள் கொய்த தேசம் ஏறுபோல் எழுந்து எதிகள் வீந்த தேசம் எதிரி கைபட்டு எள்ளி நகைபுரியும் எத்தர்களின் கைகளில் ஏக்கம் சுமந்து ஏதுமற்று ஏற்றமிழந்து கிடக்கிறது வந்தவரை வரவேற்று வயிறார வழிசெய்து வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள் வாய்க்கரிசி கூட இன்றி வக்கற்று கருணையற்ற கயவனிடம் கையேந்தும் கடை நிலையில் கண்ணிழந்து நிற்கின்றார் மானத் தமிழரென மார்தட்டி வாழ்ந்த…

  5. இந்த வானவில்,முன்பொரு பொழுதில் வண்ணங்களற்றுப்போய் வெறுமனே நீண்டு போய் கிடந்தது. என் தூரத்துக் காதலியின்,அள்ளமுடியாக் காதலை தான் வாங்கி வந்து தருவதாய் சொல்லி போன வானவில்,என் மீதான அவளின் காதலை பெற்றதும்,அழகிய வண்ணங்களை கொண்டதாய் மாறிற்று. என் மீதான அவளின் காதலை சுமக்க முடியாமல்,வளைந்தும் போயிற்று. என்னிடம் எனக்குரிய காதலை சேர்ப்பதற்க்கு முன்னரே இவ்வனர்த்தங்கள் நிகழ்ந்து விட்டதால்,அவளுக்கு மிகப்பிடித்த மழைப்பொழுதுகளில் மட்டும் தலை காட்டி,என்னிடம் அவளின் காதலை சேர்ப்பதாய் சொல்லி, நான் காணுமுன்னரே ஒழிந்து மறைந்து விடுகிறது

  6. சாலை ஒரத்து குப்பைத்தொட்டிக்குள் துர் நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. போபவர்கள் வருபவர்கள் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டும்….; எச்சிலைத் துப்பிக் கொண்டும்…. சுயநலமாக நகர்கிறார்கள். ஒருவரேனும் நின்று நிதானித்துப் போவதாய் நான் அவதானிக்கவில்லை…நாற்றம் என் மூக்கையும் தைத்தது. நாக்கையும் பிய்த்தது. வாடிய வாழை இலையில் சுற்றப்பட்ட … எலும்புகள் தெரியும் படியான… போசாக்கு குறைந்து போனதான…ஒரு பிஞ்சுக் குழந்தையின் நிர்வாணமான காய்ந்த சடலம். தொப்பிள் கொடியின் துவாரத்திலும்…… உதடுகளின் ஈரத்திலும்…பால் உறுப்பிலும்… மல வாசலிலும்…ஈக்கள் இரை திரட்டிக் கொண்டிருந்தன. இரக்கமில்லாமல் ஏன் தானோ..? குழந்தை குப்பைத்த…

  7. மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூ ஓழுக்கும் மெய்யா யளிக்கும் வெறுக்கையிலார் வையத்து பல்கிளையும்வாட பணையணைதோள் சேய்ந்திரங்க நல்லறமும் பேணாது நின்றே யார்ப்பரிக்க திரைகடலும் ஓடியங்கே தம்முயிரைப் பேண விரண்டவர்க் கெல்லாம் எங்கனம் ஆவலுண்டு கருமையின் மேனியர் எனவசைமொழி கூற கருமயிர் தன்னை நரையிராக்கி கவலையுமறந்து மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களுள் பற்றிய செய்கையும் பரப்பிடு கொள்கையும் கற்றிட நம்மவர் காரணி யாதெனில் மற்றவர் புகழ்ந்திட முழுதுமே தழுவி தரணியில் தமிழினம் பொய்தழிவெய்தி காரணியின்றிக் கண்ணீர்க் கோலமாய் பூரணவாழ்வு புரிந்திட்ட வகையில் தாய்த்தமிழீழம் தறுகண் மிலேச்சரால் மாய்த்திடலறியா மாற்றலர் தொழும்பராய் தாய்பிறர் கைப்பட சகிப்பவனாகி…

  8. உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள் ஈழத்தில் எம்மக்கள் ஏதிலிகளாய் ஏனென்று கேட்க ஒரு நாதியில்லை என் இனம் அழிக்கும் சிங்களமே கோர்வு கொண்ட சில நாடுகளே சோர்வு கொண்ட ஐ நாவே உன்னை சுட்டெரிக்கும் என் வலிகள்

  9. எழுந்து வா என்னோடு கை கோர் நீ எழுமுன்னே உன் கால்களை உடைக்க காத்திருக்கும் பகைவர் கரங்களை உடைத்து-நீ எழுந்து வா என்னோடு கை கோர் சிதறிப்போனது உன் உறவுகள் அல்லவா உன் கண்கள் இன்னும் கசியவில்லையா? தினம் தினம் கேட்கும் மரண ஓலங்கள் உன் காதில் விழவில்லையா? பலாத்காரம் செய்யபட்டவள் உன் சகோத்ரி அல்லவா உன் இர்த்தம் இன்னும் கொதிக்கவில்லையா? உன் இனத்தின் இறுதி மூச்சு ஊசலாடுதே இன்னும் அதை நீ உண்ரவில்லையா? எழுந்து வா என்னோடு கை கோர் நீ எழுமுன்னே உன் கால்களை உடைக்க காத்திருக்கும் பகைவர் கரங்களை உடைத்து-நீ எழுந்து வா என்னோடு கை கோர் கை இழ்ந்து கால் இழந்து காண சகிக்காது உடல் சிதைந்து ஒவ்வொருவராய் உயிர் துறக்க உலகையே எதிர்த்து உயிரை துச்சமென நி…

  10. போயகலும் பொல்லாப் பொழுது விடுதலைப் போரில் விழுந்த உறவுகளே! மண் பட்ட வேதனையை மாற்றத் துடித்தெழுந்து புண்பட்டு மண்ணில் பூவாய் உதிர்ந்தோரே! நெஞ்சுருகி உங்கள் நினைவைச் சுமக்கின்றோம் அஞ்சாத நெஞ்சோடு அந்நியர் தமைத் துரத்த வெஞ்சமர்கள் செய்தீர் வெற்றி பல கண்டீர் ஆனாலு மந்தோ! அடைந்த பல வெற்றியெல்லாம் போனதென்ன மண்ணாய் புகழழிந்து தோற்றதென்ன? எங்கள் சரித்திரத்தை எழுதிடவே உங்களது செங்குருதி தன்னையன்றோ தீந்தையாய்த் தந்தீர்கள் சிதைந்த உடல்களன்றோ சித்திரங்களாயிற்று நீர்மேலெழுத்தாகி நிலைகுலைந்து உங்கள் புகழ் பார்மீதில் இன்று பழங்கதையாயப் போவதனை விட்டு விடலாமோ! வீணே எமையழித்த துட்டர்களெம் முன்னே தோளுயர்த்தி நிற்பதுவோ! தோற்றான் தமிழன் இனித் தொல்லையழிந்ததென்று ம…

    • 0 replies
    • 660 views
  11. என்ன தேசமோ .......... செந்நீரால் ஒரு தேசம் , எழுதப்பட்டு கொண்டு இருக்கிறது . கால மாற்றத்தின் தண்ணீர் வெள்ளம் காலன் மகிந்து ஏவும் ,கொத்துக்குண்டு, கிளஸ்டர் அகோரம் , தாயை இழந்த பிள்ளை ,தலை சிதறிய தந்தை , பங்கருக்குள் அம்மம்மா ஐயோ என்னும் அவலக்குரல் கால் வயிறுககும் கஞ்சி இல்லை கை குழந்தையை தவறவிட்ட தாய் தாயும் மூன்று மாத குழந்தையும் , ஒரு பக்கம் தந்தை மண் மீட்க அக்காவை இழந்த தம்பி , ஊரை உறவை தொலைத்த சொந்தங்கள். இப்படி உங்கள் வாழ்வில் கேட்டதுண்டா ? தலை சிதறி ,தசை துண்டங்களாக வீதி யோரம் , உருக்குலைந்து , அடையாளமற்று , இறந்தவனை புதைக்க , இப்படி ஒரு அவலம் கண்ட தேசம் உண்டா? கிளியை பிடித்தோம் முல்லையை பிடித்தோம் , ஆன…

  12. மறுக்கப்படுதல் நான் அழுவேன் உங்களுக்காக உங்களது துயரங்களை காயங்களை வலிகளை எனது மொழியால் சுமப்பேன் உங்கள் குருதி கண்டு எனக்கு உயிரலையும் எல்லாமே சிவந்த குருதி துயரப்பட்டவர்களின் குருதி கையாலாகதவர்களின் குருதி என்பார்கள் அவர்கள் நீங்கள் என்னை ஒதுக்குவீர்கள் உங்களுக்காய் ஒரு கண்ணீர் விழுவதை விரும்பமாட்டீர்கள் எங்களது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவீர்கள் ஏன் எப்படி எதற்கென்ற கேள்வியெழும் உங்களிடம் எப்படியும் இருந்து விட்டுப்போகலாம் உயிரில்லா பிணங்கள் முன் கூச்சலிடுவதை விரும்புகிறவள் நானில்லை உங்களை போல தான் எங்களுக்கும் அழுவதற்கு கூட சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது அந்நாட்களில் இருந்தும் நான் ஒரு உணர்வுள்ள மனுஷி என்பதாலே நான் அழுவேன் உங்களு…

    • 0 replies
    • 660 views
  13. பாரதியே! உனக்கு பெண் சுதந்திரத்தில் நம்ம்பிக்கை இல்லை போலும்! 'புதுமைப் பெண் ' படைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாய் ! வீட்டில் ஒடுங்கிக் கிடந்தவளை தன் மகிழ்ச்சியை தியாகம் செய்தவளை ஆணின் கட்டுக்கடங்கியிருந்தவளை குடும்பத்தில் அடிமையாயிருந்தவளை உன் கவிச் சாட்டையால் உசுப்பேற்றினாய் ! அதை எதிர்ப்பவர்களை சுட்டுப் பொசுக்கினாய்! சேவல் கூவும் வேளையில் எழுந்து எறும்பாய் தினமுழைத்து மாடாய் குடும்பபாரத்தை இழுத்து கால் செருப்பாய் ஓரத்தில் கிடந்தது படிப்பு வாசனையில்லாமல் வாழ்ந்து பிள்ளை பெறும் இயந்திரமாய் இருந்து சிறைப் பறவையாய் அடைபட்டுக்கிடந்தவளை பாரதியே! உன் கவிச் சாவியால் தானே சிறையினைத் திறந்தாய்! சுதந்திரப் பறவையாய் பறக்க வழி செய்தாய்! கோலங்கள் போட அவள் தான் சுடுநீர் சாப்பா…

    • 0 replies
    • 659 views
  14. ஆட்டம் காண்கிறதா சிறி லங்கா-பா.உதயன் அன்னியச் செலாவணி கையில இல்லையாம் அத்தியாவசிய பொருளும் வாங்கவும் முடியாதாம் எல்லாப் பொருளும் இப்போ தங்கத்தின் விலையாம் பண வீக்கம் கூடி பாணுக்கும் பாலுக்கும் பஞ்சமாம் நாட்டில ரோட்டில நிற்கினம் சனங்கள் இப்போ சரியான பொருளாதாரக் கொள்கையும் இல்லை நாட்டில இப்போ கால் ஊண்டிப் போட்டான் சீனாக் காரான் சிறி லங்காவில அரைவாசியை வேண்டியும் போட்டான் இவன் வட்டிகள் எல்லாம் குட்டி போட்டு கடனைக் கட்டவும் காசும் இல்லை லங்காவிடம் எடுத்த கடனும் இப்போ கூடிப் போச்சு இனி எடுக்கவும் முடியாது கொடுக்கவும் முடியாது மத்திய வங்கியும் சொல்லியும் போட்டுது கையில இப்போ…

  15. Started by nunavilan,

    ஊர் நேற்றெம் ஊரிருந்த காற்றில் இதமான குளிரும் நேர்த்தியான சுகமுமிருந்தது சாணிமெழுகிய தலை வாசலில் சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது. வாசலிறங்கக் கோலமிருந்தது. வயலில் நம்பிக்கை விளைந்தது. வெளியே அறியப்படாத எத்தனையோ உள்ளே வெளிச்சம் நல்கின. அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும் குறுக்காகக் கட்டிய மாராப்பிலும் நிறையும் மனமிருந்தது. மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில் இருளெனும் எழிலிருந்தது. அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது. ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில் தேவ நிலை சித்தித்தது. ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும், கூத்துப் பாட்டும், நாதஸ்வர மங்கலமும் தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு எங்கே துரத்திப் பிடியென்பதாய் ப…

    • 5 replies
    • 658 views
  16. வானம் உனக்கு வாழ்த்துச் சொல்லும், விடியலும் வரும் காற்றும் உனக்குத் துணை நிற்கும், சுதந்திரம் நிட்சயம் கிடைக்கும். தலைவா! நீ அரசியல் வாழ்வில் நுளையவில்லை, சுயநலவாதிகளிடம் அகப்படவில்லை, நீ தனிப்படை வீரன் தலைவா! உன்னை நம்பினால் வாழ்வு அர்த்தமாகும், உனக்குச் சொந்தங்கள் உண்டு, உலகத் தமிழனம் உன் உறவு முறை, உயிர் கொடுக்கும் தோழர்கள் உன் உடன் பிறப்புக்கள் தலைவா! நீ தமிழ் வீரம் காத்த மாபெரும் தமிழன், உனக்கு யார் ஈடு இணை, நேர் நிகர், காயங்களைக் கண்டு அஞ்சமாட்டாய், மீண்டும் எழுவாய், தமிழீழம் காண்பாய். தலைவா! வெல்வோம் இது உறுதி எமக்கேது தோல்வி. உன்னை வாழ்த்துகிறேன் மீண்டும் எழுவாய் தலைவா! புனைந்தவர் - கு. அன்பரசு – சுபாங் ஜெயா…

  17. நட்புக்கு எடுத்துகாட்டாய் -என் நண்பன் ....!!! காதல் ஒருவர் மீது வரும் ... ஒருவகை ஈர்ப்பு ... நட்பு எல்லோர் மீதும் ... பூக்கும் அழகான பூ ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

  18. சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகின்றாள் நித்திரை விட்டு விரைவினில் எழுந்திடுவோம்... மருத்துநீர் தலை தடவி வெந்நீரில் குளித்திடுவோம் நெற்றியில் நீறணிந்து நெறிப்படி வணங்கிடுவோம் பெரியோர் தாள் பணிந்து கையுறை பெற்றிடுவோம்... எப்போதும் போலவே அந்த நினைவுகள் வந்தெம் மனத்திரைஊசலாடுகின்றன... முகமில்லா உருவங்களுக்கும் நிசப்தமான வார்த்தைகளுக்கும் உரிமை கொண்டாடியபடி நீண்டு கொண்டிருக்கிறது எம் இரவுகள்... நாய்களின் குரைப்பொலிகள் ஊமத்தங் கூவைகளின் உறுமல் ஓசைகள் ஊரடங்கு இராத்திரிகளின் சுதந்திர ராகங்களாக... பதற்றமின்றி பட்டாசு வெடிக்க ஈர்க்குவானம் விட்டு இராத்திரிகள் களிக்க மாக்கோல…

    • 0 replies
    • 658 views
  19. விழிமூடிய அந்த செந்தமிழ் வீரர்கள் By திலீபன் on May 23, 2015No Comment ஆண்ட தமிழினத்தின் இழிவு நிலை கண்டு மீண்டும் தமிழர் நிலை இவ்வுலகில் உயரவெனக் களமாடத் தானைத் தலைவனின் வழி சென்று எங்கள் தலைவனின் எண்ணமதை நிறைவேற்ற மகிழ்வோடு புன்னகைத்து தம்முயிரை தந்து விழி மூடியவர்களே அந்தச் செந்தமிழ் வீரர்கள்! எம் செந்தமிழ் வீரர்கள் விழிமூடிய மண்ணிலே நரிகளும் பேய்களும் ஆட்சி புரிகையிலே அவர்கள் கல்லறைகளைக் கூடக் காணமுடியாத அவல நிலைக்குள்ளே எம் தேசம் அழுகின்ற சூழலை எண்ணுகையில் என் இதயம் வெடிக்கிறது இணைந்தெழுவோம் நாமிங்கு தேசம் மீட்பதற்காய்! நாம் மடிந்தாலும் எமது புலம்பெயர் உறவுகள் எம் விடுதலைப் பணியை முன்னெடுப்பாரென்றே விழி மூடினார்களே அந்தச் செந்தமிழ் வீரர்கள் அவர்களின் கனவை ந…

    • 0 replies
    • 658 views
  20. Started by nunavilan,

    இவ்வார ஆனந்தவிகடன்(aug 9th) இதழில் வெளிவந்த கவிதை ''கள்ளத்தோணி"

  21. கடல் வெள்ளம் போல் புகுந்து கனவுகளை வளர்த்தவளே காந்தப் பார்வையாலே கண்களுக்குள் இனித்தவளே தவறு நான் செய்யவில்லை தண்டனை நீ தருகின்றாய் சிறைக்குள் நான் துடிதுடிக்க சிரித்து நீ போகின்றாய் ஊமைக் குயிலடி நான் உள்ளுக்குள் அழுகின்றேன் ஓரிரு வார்த்தைளோ மெல்ல மெல்ல கொல்லுதடி என் உதிரத்தால் எழுதி வைக்கும் உண்மையடி பெண்ணே நீ போகுமிடமெங்கும் பாதி உயிரோடும் என் பயணம் தொடரும் புத்தகப் பையுக்குள்ளே பாவத்தை சுமப்பவளே இறந்து நான் போன பின்னே என் இதயத்தை அறுத்துப்பார் இதயச் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் உன் பெயர் அப்போதாவது நீ என்னைக் காதலி...

    • 0 replies
    • 658 views
  22. பெரும்பாலும் கவிதை என எங்காவது தென்பட்டால், தலைதெறிக்க எதிர்புறம் ஓடும் வழக்கம் எனக்கு..! தற்செயலாக தினசரியில் படித்த இந்தக் க... வி... தை.... யை படித்தவுடன் குற்ற உணர்வால் மனம் சலனப்பட்டது. உங்களுக்காக இதோ..! யாரிடம் கொடுப்பது… மனு? கொல்லாமையை வலியுறுத்தி கொள்கைகள் பேசும் உங்கள் நாக்குகளால் – நான் வாரந்தோறும் புசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. ஐந்தறிவு கொண்ட ஆடுகளைக் காட்டிலும் ஒரறிவு குறைவான என் இனத்தை அதிகமாக பலியிடுவது ஏன்? சுவையும் மிகுதி - விலையும் குறைவு ~ சுயநலம்தான் காரணம். நெற்பயிரை கொத்தவரும்போது என்னை நித்தமும் துரத்தியடிக்கும் மனிதர்களே… என் முட்டைகளைத் திருடும்போது மட்டும் உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? …

    • 3 replies
    • 657 views
  23. ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! அந்த நாட்கள் தீயின் நாக்குகளால் தின்னப்பட்ட தீராத்துயர் எங்கள் வீரத்தின் விலாசங்களை வெ(கொ)ன்ற நாட்கள். வெற்றிகள் தந்தெங்கள் விடுதலைச் சுவடுகளில் வீரம் எழுதிய மகனாரும் , மகளாளும் இறுதிச் சமர் புரிந்து எரிந்து கரைந்த 5ம் ஆண்டு நினைவில் ஆனந்தபுரம் அழியாத நினைவாக....! பூக்களின் வாசனை கலந்த பொன்னிதழ் விரியும் புன்னகை முகங்கள் பொசுங்கிக் கிடந்த நாளை வசந்த கால மலர்வாசம் தரும் ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! இழப்பின் கதைசொல்லும் என்றைக்கும் இதயம் நிரம்பிய துயர் தருமாதம் நஞ்சு கலந்து எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட நிலத்தின் கதைசொல்லும் நீங்காத…

  24. அவன் ..... இல்லாவிட்டால் .... நான் இல்லை ... நான் இல்லாவிட்டால் .... அவனுமில்லை .... நாங்கள் இரட்டை .... பிறவிகள் இல்லை .... அப்போ நாங்கள் .... யார் ...................? & & & & & விடை ; உடலும் உயிரும் ...!!! ^ சிறுவர்களுக்கான கவிதை கவிப்புயல் இனியவன்

  25. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி. வழி காட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி' கல்லறை முன்நின்று மனிதர்கள் கரையும் மாவீரர் தினம். சுயத்தின் அடியளித்த புனிதர்களைப் போற்றும் நினைவேந்தும் நாளிது. புதைக்கவில்லை விதைத்தோமென்கிற உட்பொருள் உணர்ந்து விளக்கேற்றும் நினைவெழுச்சி நாளிது. தமிழின வீரவரலாற்றின் சாட்சிப் பதிவுகள், கல்லறையாகிக் காட்சிதரும் துயிலுமில்லங்கள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த 22 ஆயிரத்திற்கு மேற்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.