Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by கவிதை,

    "நியாயம்" என்பது இன்னும்... கேள்விக்குறியாகவே... தொடர்கின்றது! தவறினை சுட்டிக்காட்டுவது கூட, தவறாக பார்க்கப்படுகின்றனவோ??? அணைக்கப்பட்ட திரிகளில்... சுடர்விட்டெரிந்து கரியாகி...சாம்பலாவது, "நியாயம்" என்பதும்தான்!!!!! மனச்சாட்சி உள்ளவர்கள் மட்டும்.... புரிந்து கொள்ளட்டும்!

  2. Started by yaal_ahaththiyan,

    முதல் முதலாக நீ என்னை எழுத்துக்கூட்டி வாசித்து முடித்தபோது எல்லாக் கவிதைகளைப் போலவும் நானும் உன் வாழ்த்துக்காய் காத்திருக்க முன்னமே "என்றும் நீ எனக்குப் பிடித்த கவிதையாக இருந்துவிட முடியாது ஏனெனில் எழுத்துப் பிழைகள் அதிகம் நிறைந்த கிறுக்கலாய் இருக்கிறாய்" என நீ கூறிவிட்டு என்னை கசக்கி எறிந்த இடம் இன்றும் என்னை கண்ணீரால் கவி எழுத வைக்கிறது -யாழ்_அகத்தியன்

  3. இத்தனை அழகாய் இருப்பிடம் வேறெங்கும் இருக்குமா தெரியவில்லை. வேளைக்கு உணவு; நோய் காணும் முன்னே மருந்து; யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள். விரட்டி உயிர் பறிக்கும் வேட்டையன் இல்லை. மட்டற்ற கலவிக்கு சாஸ்த்திரமும் வேண்டியதில்லை. ஜாலத்தில் கிளர்கிறது வர்ணங்களால் வடிவம் கொண்ட உலகு. உயிர் வாழ்வதுக்குண்டான அனைத்து உத்தரவாதமும் உனக்குண்டு. இத்தனைக்கும் எதிர்மாறாய் சேறும் சகதியுமாக நிலையாமையில் கட்டமைக்கப்பட்டதென் அழுக்காறு உலகு. இரையில் பொறி வைத்து உயிர் பறிக்கும் குரூரம். நெளியும் புழுவில் ஒழியும் முள் குரல் வளை கிழிக்கும். உணவுக்குள் மரணம் ஒளிந்திருக்கும் சாபம். உயிர் காவும் வேட்டையன்…

    • 0 replies
    • 1.9k views
  4. கப்டன். மொறிஸ் [செப்டம்பர் 12, 1969 - மே 1, 1989 ] சின்னஞ்சிறு பாலகனாய்... முற்றும் அறியாத பிஞ்சாய் நான், நஞ்சு தரித்த எம் வீரரை... நட்புடனே பார்த்து நின்றேன்! கிழமைகளில் சில நாளில் இனிமையாய் அவர்களுடன், எங்கள் வீட்டில் உணவுண்டு நன்றி சொல்லிச் செல்லும் வீரர்... மறுமுறை வரும்போது ஒருவரேனும் குறைவார்... தேடுவேன்!! "மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்! அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்! வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு, அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன! ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!! தலைவன் வழியில் நின்றவன்... தமிழருக்கு காவலன்! இந்தப் பாலகன் கவிதைக்கும் அவன்தான் நாயகன்! அவன் கருங்குழல் ஆயுதந்தனை …

  5. தமிழீழம் எங்கள் தாய் மூச்சு. தாயை நாம் எப்படி நேசிக்கிறோமோ அப்படி தான் ஒவொரு தமிழனும். நாம் கண்ட முதல் உலகம் நம் நாடு. நாம் விட்ட முதல் மூச்சு நம் நாட்டில். நாம் படித்த முதல் எழுத்து நம் நாட்டில். அது போல் நாம் தலை சாயும் கடைசி நாளும் எம் நாட்டில் தான். நம் தலை சாய்ந்தாலும் எம் போராட்டம் உடையாது. நம் மூச்சு நின்றாலும் எம் உலகம் என்றும் எம் கையில்.

  6. கைது செய்யப்பட்ட தாயின் சரணடைந்த குழந்தை நந்திக்கடலில் விழுந்திருந்தன நிறைய முகங்கள் சயனட் குப்பிகளில் குழந்தைகள் பால் குடித்தனர். தாய்மார்கள் துவக்குகளை வைத்திருந்தபடி குழந்தைகளை சுமந்து சென்றனர். முள்ளி வாய்க்காலின் கிடங்குகள் எல்லாம் மூடுண்டு விடுகிறது. கிடங்குகளிலிருந்து எழும்பி வருகின்றனர் பிணங்களும் அதன் குழந்தைகளும். கடல் வீழ்ந்துவிட மணல் பெயர்ந்து கடலில் அள்ளுண்டு செல்லுகிறது. முள்ளுக் கம்பிகள் வரவேற்கின்றன ஒற்றை தேச முகங்களை அணிந்தபடி. விடுவிக்கப்பட்ட பகுதி மரணத்தின் குளிர் அறைகளாக மாறிவிட சித்திரவதையின் பாடல்களில் இரவு அதிர்ந்துகொண்டேயிருக்கிறது. பெருநிலம் மயானமாக மாற அகதிமுகாம்கள் நெருங்குகி…

    • 0 replies
    • 637 views
  7. இயலாமையின் மடிப்புகளில்.. ஒரு புழுவினும் கீழாய் என்னை நிறுத்தி நகர்கின்றது காலம் எனது நிலங்களை பேய்கள் அபகரிக்கும் செய்திகளிலெல்லாம் வந்தமருகின்றது என் இயலாமையின் தருணங்கள் முகம் எங்கும் அப்பி கிடக்கிறது போராட சென்ற தோழர்களின் சாவு. அங்கு அவர்கள் சாகும் பொழுதுகளிலும் குளிருகின்ற இரவில் மனைவியுடன் கலவி கொண்டு களித்து இருந்தேன் நானிங்கு வீட்டின் முன் இலைகளற்றும் மண்ணின் பிடிப்புடன் நிமிர்ந்து நிற்கின்றது ஒரு மரம் மண்ணற்ற என்னை பார்பதும் இல்லை தன் கிளையில் வந்தமரும் குருவியிடம் சொல்லி வைத்திருந்தது என்னிடம் பேச வேண்டாமென துணிவற்றவனுடன் கதையெதுக்கு என்று கேட்டது அது வீட்டிற்குள் சென்று உடலினை…

    • 20 replies
    • 2.8k views
  8. வாசல்களில் மரணத்தின் வரவுகளை கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை . முன்பெல்லாம் உறவுகள்கூடி உடலம் சுமந்து மயானம் செல்வோம், ஊரே மயானமாகிப்போக இறுதிக்கடன் மட்டுமல்ல இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் உடலங்களை கடந்த தினங்கள் அவை. எங்காவது எமக்காய் எம் குழந்தைகளுக்காய் எம் உறவுகளுக்காய் ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம். காற்றும் கடலும் வானும் எண்திசைகளும் எரிந்தன எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும், உடலங்களை கண்ட நாய்களும் நரிகளும் இன்னபிற விலங்குகளும் அஞ்சியோடின, அப்போதும் வலிகளோடு ஏங்கித்தான்கிடந்தோம். எதிலியாகி நடந்தோம். அறிந்தவன் நீ எரிந்துபோனாய். தோழனே முத்துக்குமார் !!!! நீ மூட்டியது…

  9. 30.11.16 ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மாநகரத்தின் அகதிகள் தேசத்தின் வல்லசுரக் கனவினால் தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு மாநகரத்தின் அகதிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள் வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு. அங்குள்ள வங்கிக் கணக்கையும் அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள். கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும் அதில் …

  10. வீதியின் ஓரம் நின்று வேடிக்கை பார்.. தமிழர் படை அலைகடல் என..பொங்கி பீறிட்டு எழுந்து குபு..குபுவென்று வருவதை! *************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* பாதியிலே போர் முடிந்தாலும் நீதி கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும்.. நெருப்புக்குள் இருந்து பீனிக்ஸ் பறவைகள்போல் பிரளயமாகப் புறப்பட்டு வருவோம்..! நாங்கள் வெறியர் களடா.. .. சாதி வெறியர்கள் அல்ல.. மத வெறியர்கள் அல்ல.. மொழி வெறியர் களடா .. தமிழ் மொழி.. வெறியர் களடா..! எம்மோடு அணிவகுத்து வர இன்னும் நீ துணியவில்லை என்றால்.. சும்மா வீதியின் ஓரம் நின்று வேடிக்கை பார்.. தமிழர் படை அலைகடல் என.. பொங்கி பீறிட்டு எழுந்து குபு....குபு வெ…

    • 1 reply
    • 804 views
  11. யுத்தம் தந்த பட்டம் - விதவை! சொந்தம் தந்த பட்டம் - தனிமை! கணவர் தந்த பட்டம் - கௌரவம்! குழந்தை தந்த பட்டம் - சொர்க்கம்! சமூகம் தந்த பட்டம் - சகுனம்! இனம் தந்த பட்டம் - பரிதாபம்! வரலாறு தந்த பட்டம் - அவலம்! வாழ்க்கை தந்த பட்டம் - வறுமை! தனிமை தந்தது - தயக்கம்! ஏக்கம் தந்தது - தாயகம்! நான் பெறாத பட்டம் - களங்கம்!

  12. ____________________ பொருட்களை எந்த நேரத்திலும் தூக்கிச் செல்லுவதற்கு ஏற்றபடி தயாராகவே வைத்திருக்கிறேன். எதிர்பாராத பின்னேரமாகவே நாங்கள் அழைக்கப்பட்டோம். எண்ணிக்கையற்ற பிரகாசமும் மகிழ்ச்சியும் எல்லாவற்றையும் மறைத்து முன்னால் நின்றுகொண்டிருந்தன. எங்கள் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்படுவதாக ஏற்றிக்கொண்டு சென்ற பேரூந்தில் பொருத்திய ஒலிபெருக்கி அறிவித்தது. பார்க்க முடியாதபடி நிலம் முழுவதும் அழிந்துபோயிருப்பதை கண்டேன். கடந்த வாரம் அதுவும் ஒரு மாலை நேரமாய் நிதிலேகாவையும் குழந்தையையும் மீளக்குடியிருத்த ஏற்றிச் சென்றார்கள். தான் விட்டுச் செல்லும் பொருட்களை எல்லாம் அவள் எனக்கே தந்திருந்தாள். என்னுடன் மிகவும் பிரியமாயிருந்த அவளது குழந்தையை நான்…

  13. தோழிகளின் கிண்டல் பேச்சில் "வெட்கித்து தலைகுனிந்திருந்த" தருணங்களவை.... எதிர்வரும் பேய்களின் கண்ணிற்க்கு "விருந்தாகி நாணிக்குறுகியிருந்த" தருணங்களவை.... தலைவனின் தழுவலில் "பெண்மையில் சிலாகித்திருந்த" தருணங்களவை.... குழந்தையின் அரவணைப்பில் "தாய்மையில் திளைத்திருந்த" தருணங்களவை.... கண்ணாடியின் பிம்பங்களில் வழிந்த "வனப்புகளில் பெருமித்திருந்த" தருணங்களவை.... . . . அவ்வாறு இருக்க கூடாதென "கடவுளை வேண்டியிருந்த" தருணங்களவை.... அப்படியேயென கும்பிட்ட "கடவுள் கைவிட்ட" தருணங்களவை... தனக்கு மட்டும் ஏன்? இப்படியென "ஆற்றாமையில் அழுதிருந்த" தருணங்களவை.... "கற்சிலைக்கேன் இத்துணை கலைநயமென" கண்கள் பூத்திருந்த தருணங்களவை ... "கடன்பட்டு புலம்பெயர்த்…

  14. ஆச்சி எடன அரிவாளை.. எதுக்கடா பேராண்டி பொங்கலுக்கு புதுக்கதிர் எடுக்கவோ..?! இல்லையன ஆச்சி இனமானப் போரில் பொட்டிழந்து பொலிவிழந்து.. குளிக்கும் உன்னைக் கூட கணக்குப் பண்ணும் சிங்கள **களை போட்டுத்தள்ள...! விடுடா அது அவன் பிறவிக் குணம்.. இல்லையன ஆச்சி தமிழர் நாங்கள் புலியாய் பாய பயந்தோடிய தெருநாய்கள் உலக உருண்டையின் பொய் நயத்தால் வெற்றிக் கோசம் சேர்த்து எம் தேசம் மேய்கின்றன. இன்னும் என்னை சும்மா இருக்கச் சொல்லுறியோ..??! தம்பி ராசா.. பொங்கிய இரத்தம் போதும் செத்து வீழ்ந்ததும் போதும் வீரம் விவேகம் விளையாடினதும் போதும் எனிக் கொஞ்சம் இராஜதந்திரம் படிக்கட்டும் எம் இனம் சும்மா கிடவடா..! என்னன ஆச்சி சொல்லுறா கண் முன்னால அநியாயம் கண்டும்...…

  15. கொடூர முகங்கள் கவிதை - இளங்கவி புலியாய் பாய்ந்தவள் பிணமாகிய பின்னும் அவளின் அம்மணத்தை ரசிக்கும் கொடூர முகங்கள்..... தமிழ் மானம் காக்க தன்னுயிர் தர நினைத்தவள் என்றோ நினைத்திருப்பாள் தன் உயிர்தான் முதலில் போகுமென்று.... உயிர் போனபின்னும் பிணம் தின்னிக் கழுகுகள் சுற்றி நின்று தன் பிணத்திலும் பெண்மையை ரசிக்கும் கூட்டத்தின் நடுவே தன் குருதி ஈழமண்ணை நனைக்க கருகிய பூக்களாய் கிடப்பாளென்று கனவிலும் நினைத்திருக்காள்......! மாவீரர் கல்லறையில் மரியாதையாய் துயில்கொள்ள நினைத்தவளுக்கு மானமில்லா கொடூர முகங்களின் கையடக்க தொலைபேசியில் புகைப்படமாய் கிடப்பாளென்று நினைத்திருக்கவே மாட்டாள் தான்....... பூப்படைந்த நாள…

  16. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு... எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று... எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்... பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும் அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும் வயிரெரிந்து இதோ விடுகிறேன்.. கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! குறள் நெறியில் வளர்ந்து அறநெறியில் வாழ்ந்தவள் …

    • 5 replies
    • 1.8k views
  17. கத்தலோனியா மூதாட்டி தங்க நகரமெங்கும் இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில் புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி, முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள். 'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகையில் பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன் துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி 'மகனே! நமது கூழாங்கற்களை திருடி ருசிப்பட்டவர்கள் சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!'…

    • 0 replies
    • 1.2k views
  18. பிரபாகரன் இறைவன் ஆனான்… ஆறுமுகன் இறந்து போனான்.!! ஆசியாக் கண்டத்தின்உச்சத்தில் உதித்தஈழத்துச் சூரியன்!அச்சத்தில் மூழ்கியஅப்பாவித் தமிழரின்விலங்கினை உடைத்துஉலகின் உச்சத்தில் வைத்தஉன்னதத் தலைவன் இவன்!பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்தமிழனை சிங்களக் கொள்ளையன்அடிமைப் படுத்தி ஆண்ட போது…இலங்கைத் தலையின் மூளையில்வல்வைத் தாயின்…வீரத் திரு வயிற்றில்உலகத் தமிழர்களின்…ஒட்டு மொத்த மூளையாகஉயிராகி… உருவாகினான்..!கார்கால மழையில் – ஓர்கார்த்திகை நாளில்இருட்டியது ஊரு…இருபத்தி ஆறு நன்னாளில்எடுத்தது வீரத்தாய்க்கு வலி!பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!அன்று – உருவானதுதமிழர்களுக்கான புதிய வழி!!இலங்கைத் தலையில் பிறந்துதமிழர்களின் மூளையானன்!ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…மூலையில் முடங்…

  19. Started by Thulasi_ca,

    குழந்தை அன்பு செய்யும் மனம் குழந்தை மனம் ஆடிப் பாடும் மனம் குழந்தை மனம் குற்றம் மறக்கும் மனம் குழந்தை மனம் குறும்பு செய்யும் மனம் குழந்தை மனம் கள்ளம் அற்ற மனம் குழந்தை மனம் கவலை அற்ற மனம் குழந்தை மனம் குழந்தை மனம் என்றும் வேண்டும் துளசி www.thamilsky.com

    • 11 replies
    • 5.4k views
  20. கவி எழுதும் ஆசை பட்டப்பகல் அன்று மணியோ பன்னிரண்டு கொட்டும் மழையில்லை கீழ்வானம் சிவக்கவில்லை நட்டுவைத்த நடுவளவு உயர்வேம்பின் கீழ்நிழலில் நாற்காலி ஒன்றுபோட்டு நானும் அமர்ந்திருந்தேன் பொட்டுவைத்த பெண் பிரம்மாவின் நாயகியை தொட்டு மனத்திலே தேவாரம் ஒன்றுசொல்லி சொட்டச் சொட்டத்தமிழ் சுவையான கவிபடைக்க எட்டாத கற்பனையை எட்டிவிட முயன்றிருந்தேன் கட்டான என்மனையாள் கடைத்தெரு சென்றுவந்து சுட்டிப்பயல் தன்னைத் து}க்கத்திற் கனுப்பிவிட்டு வெட்டிக் கறிவைத்த விளைமீனின் வாசனையை எட்டநின்றே நாமீது நீரூற நனைந்திருந்தேன் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்திடவா? பட்டப்பகலில் அது பலிக்காது என்றெண்ணி கொட்டாவியோடு கொடும் பசியும் குரல்வளையை எட்டிப் பிடித்திடவே மொய்த்…

    • 15 replies
    • 2.6k views
  21. Started by slgirl,

    சில நேரம்... சில நேரங்களில் சில அழகான விசயங்கள் நம்மை கேக்காமலே நம் கண்முன் நிக்கலாம் மாலை நேர மழை துளிகள் ஏழை குழந்தையின் வெள்ளை சிரிப்பு அழகான நாய்க்குட்டி... இயற்கை எப்போதுமே அர்த்தம் நிறைந்தது சில சம்யங்களில் நண்பர்களும் அப்படியே அமையலாம்...

    • 2 replies
    • 1.1k views
  22. Started by Kaviipriyai(Ziya),

    கொடுமை வெடிக்கிறதே வெடிக்கிறதே கண்ட இடமெல்லாம் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கின்றதே மாறிக்கொண்டிருக்கிறதே மாறிக்கொண்டிருக்கிறதே தமிழ் ஈழம் இரத்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறதே தொலைகிறதே தொலைகிறதே தமிழர்கள் காணாமல் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறார்களே வதைகிறார்களே வதைப்படுகிறார்களே உன் இனத்தால் நம் அப்பாவித் தமிழர்கள் சித்திரைவதைப் பட்டுக்கொண்டிருக்கிறார்களே சிந்தித்துப்பாரேன் சிந்தித்துப்பாரேன் நீ அரசமரத்திற்கு கொடுக்கும் மரியாதையைக்கூட நம் இன உயிர்களுக்கு கொடுக்கத் தவறிவிட்டாயே என்று கொஞ்சம் சிந்தித்துப்பாரேன் வேண்டாமே வேண்டாமே இந்த மனித வேட்டை இனியும் வேண்டாமே

  23. 'போர் இன்னும் ஓயவில்லை' மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒன்றைப் பகிர்ந்துகொள்ள தயக்கமாக இருக்கிறது நண்பா இப்போதும் நினைவி்ருக்கிறது போர் முடிந்து அடுத்த நாளாயிருக்க வேண்டும் அவர்கள் கொல்லப்பட்ட லட்சம் சனங்களின் சடலங்களை ரசாயன பதார்த்தம் கொண்டு மறைவாக அழித்து முடித்திருக்கக்கூடவில்லை காயப்பட்டவர்களின் புண்களிலிருந்து புழுக்கள் கொட்டித் தீரவில்லை திரைப்படமொன்றைப் பார்த்து முடித்து தொலைக்காட்சிப் பெட்டியொன்றை மூடியதைப்போல எல்லாம் முடிந்துவிட்டது இனி உனக்குச் செப்பனிடப்பட்ட காபெற் வீதிகளும் வெள்ளைய…

    • 0 replies
    • 1.2k views
  24. கவிபேரரசின் ""வைகறை மேகங்கள்"" கவிதை தொகுப்புக்கள்-"(தொடராய் வருகிறது....படியுங்கள்) ஒளிப்புக்கள்.... பூந்துகில் உடுத்த புதுமதி யழகி நீந்தியே திரியும் நீலப் பட்டில் வைத்துப் பின்னி வண்ணங் கூட்டித் தைத்துத் தொடுத்த தங்க சிமிழ்கள்... சற்றேதெறித்த சரச்சிரிப்பாக உற்று பார்க்கும் ஒளியின் பூக்கள் திரும்பிச் சிரித்துத் தேன்விழி அசைத்து விரும்பி அழைக்கும் வேசியர் கூட்டம்... சித்திரப் பூக்கள் செம்பலா ஈக்கள் நித்தில வீதியில் நிலவுக் கன்னி அறுத்துப் போட்ட ஆரச் சிதறல் வறுமை வானம் வடித்த கண்ணீர்... உறைந்து தங்கிய ஒளியின் துளிகள் விரந்து முறிந்த மின்னல் துண்டுகள் இன்ப இரவில் இருட்டின் விழிகள் விண்ணில் காணும் வெளிச்சக் கனவுகள்... …

  25. எழு..எழு..தமிழா எழு...எழு..- எங்கள் விடுதலை காண எழு..எழு.... அடிமையாய் தினம் வாழ்கிறாய் அட தமிழா அதை உடை எழு..எழு... போர்களம்..ஏறி..புகு...புகு... எங்கள் புலி படை கூட எழு..எழு.. விடுதலை காண எழு..எழு... எங்கள் விடியலை தேட..எழு..எழு.. இதுவரை நீ உறங்கினாய் போதும் இனி..இனி..எழு..எழு... விடுதலை காண எழு...எழு... தமிழா விரைந்து நீ எழு..எழு... அந்நியன் வந்து எம்மைஆழ்வாத அவன் காலிலே நீ வீழ்வதா....?? முந்தையர் ஆண்ட குடிதனில் இந்தையர் வந்து ஆழ்வதா...?? அட வீரம் கொண்ட தமிழா -நீ விடுதலை காண எழு..எழு... இதுவரை நீ அடிமையாய் இருந்தது போதும் இனி..எழு..எழு.... விடியலை தேடியே எழு...எழு.. இனி விரந்தே தமிழா எழு...எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.