கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
____________________$$$$___$$$ $ __________________$$$$$$$_$$$$ $$ _________$$$$$$$$$$$$$$$$$__$$ $$ _____$$$$$$$$$$$$$$$$$$$$$$__$ $$$ ____$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$ ___$$$_$$_$$$$$$$$$$$$$$$$_$$$ $$ __$$$$$_$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ __$$$_$$_$$$$$$$$$$$$$$$$$$$$$ __$$$_$$_$$$$$$$$___________$$ $$ _$$$$$_$$$$$$$$$$$___________$ $$ _$$$_$$_$$$$$$$$$$ _$$$_$$_$$$$$$$$$$ _$$$_$$_$$$$$$$$$$$ $_$$$$$$__$$$$$$$$$ $_$$$$$$___$$$$$$$$ _$$$$$$$$$__$$$$$$$ $_$$$$$$$$___$$$$$$ $$_$$$$$$$$___$$$$$ $$$_$$$$$$$$__$$$$$$ _$$$_$$$$$$$$$_$$$$$ $$$$$ __$$$$$$$$_$$$$ $$$$$$$ __$$$$$$$$$__$ $_$_$$$$$__$$$$$$$$$_$$$$ $$$__$$$$$__$$_$$$$$$$_$$$…
-
- 2 replies
- 928 views
-
-
கட்டியவனோ காலமாகி விட்டான் ! பெற்றவனோ கைகழுவி விட்டான் ! இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ? அது வரையும் உழைத்தே உண்ணுவேன் ! முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே ! .......................................................... எனக்கில்லை! வாழும்வரை தன்னம்பிக்கையோடு .... (எங்கேயோ பார்த்ததில் மனதை ...)
-
- 10 replies
- 1.7k views
-
-
வாழையை மட்டுமில்ல....... கன்றையும் சேர்த்து ....... கழுத்து அறுவிட்டு ........... தமிழன் என்பதால்.. குருதி....... தன் தலையில் தெளித்து ....... கொண்டாடி மகிழுது சிங்களம்! அந்தி வானம் சூரியனை காவு கொள்ள...... இருட்டு பூமியை - எல்லாம் எனதென்று கொள்ளையடிக்க- அம்மா பயமாய் இருக்கு என்றிருப்பாய் ..... ஐயோ ஏன்டா........ நானிருக்கன் எல்லோ ....... அவளும் சொல்லியிருப்பாள்! பிஞ்சு விரல்கள் குளிருமென்று ....... ஊர் விசேசத்து உடுத்த .......... புடவை கொண்டு - உன் பஞ்சு கால்கள்... நடுங்காது - பாதம் வரை மூடி இருப்பாள்! அண்ணா உதைக்கிறான் ...... என்றே சிணுங்கி இருப்பாய்...... தள்ளி படுடா என்று சொல்லிட்டு...... உன் தகப்பனும் உறங்கியிருப…
-
- 9 replies
- 1.9k views
-
-
கருணாநிதியே கவிதை நதியே உலகம் தூற்றும் உயர்ந்த பதியே தமிழன் தலையைக் கவிழ்த்த உன் கடிதப் பொதிகள் டெல்லியின்வீதிகளில் கடலை சுத்துவதும் விதியே நீவிர் செய்தது உமக்கே சரியா ஒன்றல்ல மூன்றாமே உமக்கு நாம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது நாளை உமது காற்றடைத்த உடல் நாறும் போது இத்தாலி திரவியம் உம் உறவுகளையும் நாற வைக்கும் வாழ்க உம் கடிதக் கவிகள் வாத்தியார் *********
-
- 17 replies
- 1.6k views
-
-
வாழ்க மா. . . வீரர் மெழுகுவர்த்தி கண்டால் எனக்கு என்றும் உங்கள் ஞாபகமே உயிரை உருக்கி விடிவைத் தருவீர் எண்ணக் கண்ணில் நீர் வருமே நூறு வருடம் வாழவேண்டும் ஆசையுண்டு எங்களுக்கு மூன்றே நிமிடம் வாழ்ந்தால்க் கூட அர்த்தம் வேண்டும் உங்களுக்கு முருக்கை முள்ளு காலில் ஏற உயிரும் எங்கோ போய் வருமே நாளை நாங்கள் போறோம் என்று எப்படி ஐயா சிரிக்கின்றீர் ஈழப்போரைக் கருவறைக்குள்ளே கதையாய் கரைத்துக் குடித்தனீரோ மடிந்த பின்பும் மறுபடி எழுந்து தமிழ்த்தாய் வயிற்றில் பிறக்கிறீரோ மில்லர் முதற்கொண்டு இன்னாள் வரையிலே எத்தனை எத்தனை கரும்புலிகள் எண்ணிப் பார்க்கிறேன் கண்களின் ஓரமாய் சிறிதாய்த் துளிர்க்குது நீர்த்துளிகள் எங்கள் உறவுகள் உங்களை நினைக்க உடம்பு மெல்லச்…
-
- 6 replies
- 962 views
-
-
வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! ஆற்றலுடை தொழில் வளமும், அறிவியல் துறை வளர்வும், மாற்றமுறாப் பண்பு நிறை மாட்சிமைகொள் ஆட்சிசெய்தும், ஏற்றமுடன் தமை ஈந்த சரித்திரத்து நாயகரை சாற்றிவைத்து கூற்றியம்ப சத்தான புலமை செய்தும், வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! காடுகளும், கழனிகளும் கலை கொழிக்கும் கூத்துகளும், களங்கள் பல கண்ட – வீரக் கதைகள் சொல்லும் ஆவணமும், வேழமொத்த பகை விரட்ட வெகுண்டெழுந்த வேங்கையமும், வீரமுடன் பாடிப் பாடி வெற்றி வாகை சூடியே வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழர் இழந்த உரிமையைத் தரணி அதிர கேப்பவனே! தமிழர் தங்கள் வரலாற்றைத் தமிழர் அறியச் செய்தவனே! தமிழர் என்று சொல்வதிலே தனக்குப் பெருமை என்றவனே! தமிழை உலக அரங்கத்தில் தாங்கி நிற்கும் தலைமகனே! ஈழம் என்னும் தமிழ்ச்சொல்லை ஈன்றாய் எனக்குத் தமிழானாய்! வேழம் உனக்கு நிகரில்லை! வேங்கை குலத்து முதல்பிள்ளை! சோழ புலியின் அடையாளம் சூடும் தமிழர் அடையாளம்! வாழும் நாளில் மானத்தை மறவா நீயே மலையாகும்! பிறப்போம் இறப்போம் என்பதற்கே பிறப்போர் பலபேர்! இவ்வுலகில், பிறக்கும் போதே புலிபோலப் பிறந்த பின்னே உன்போலே இறவா திருக்கும்…
-
- 0 replies
- 664 views
-
-
வாழ்கை போல் வசந்த காலத்தின் துடிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல கண்களில் இருந்து மறைக்கிறது . சுயனலம் அற்ற போர்வீரர்கள் போல் இலைகள் மண்ணில் குவிந்து கிடக்கின்றது ஏகாந்தம் பேணிக்கொண்டு இறக்கையின் துடிப்பில் உலகை அளக்கும் தனித்த பறவைபோல் மெல்லிய குளிரின் வருகை அணைப்புகளற்ற வாழ்கையின் ஏக்கத்தை நினைவுபடுத்துகிறது வருடம் ஒருமுறை மாறிவரும் பருவத்தின் புதுமை முதுமையின் நீளம்போல் சோர்ந்து கிடக்கின்றது பிரிந்த நாள் முதலாய் ஊர்நினைவு வருமானமின்றிக் கட்டமுடியாத வட்டிக் கடனைப்போல் உள்ளுக்குள் பெருக்கி கொண்டே இருக்கின்றது
-
- 3 replies
- 3.6k views
-
-
வாழ்க் ஈழத் தமிழகம், வாழ்க இனிது வாழ்கவே மலை நிகர்த்திவ்வுலகில் என்றும் தலை நிமிர்ந்து வாழ்கவே முடிப்புகள் அமிழ்தை வென்ற மொழியினள் அருள் கனிந்த விழியினள் அரிய பண்பு நிதியினள் அவனி மெச்சும் மதியினள் மமதை கொண்ட பகைவரும் வணங்கும் அன்பு விதியினள் மக்கள் கொண்ட பதியினள் ... வாழ்க வானம் பாடி போல்மீன் கானம் பாடும் வாவிகள் மலர்க் கனி க்ய்லுங்கிடும் எழில் மிகுந்த சோலைகள் தேனும் பாலும் பாய்ந்திடச் செந்நெல் பொலியும் கழனிகள் உய்வ ளிக்கும் மாநிலம் ... வாழ்க பட்டிப் பளை, மகாவலி, பயில் அருவிமுத் தாறுகள் பல வனங்கள் பொலியவே எழில் நடஞ்செய் துலவிடும் மட்ட களப்பு, யாழ்நகர், மாந்தை, வன்னி, திருமலை, …
-
- 7 replies
- 2.3k views
-
-
விழுந்தவனைத் தான் இங்கு மாடும் ஏறி மிதிக்குது நொந்தவன் புண்ணில் அம்பு வந்து குத்துதூ சுமைதாங்கி மீதுதான் இடியும் வந்து விழுகிது கட்டிய மனக் கோட்டை எல்லாம் சுக்கு நூறாய்போகுது பரதேசி போலத்தான் இந்த உயிரும் சுத்துது கால்கள் போன போக்கிலே இந்த உயிர் போகுது வாழ்க்கை என்பதே அர்த்த்ம்யின்றி வீணாகப்போகுது முடிவு உள்ள வாழ்கையில் முன்னேற மனம் துடிக்குது பரந்து பட்ட உலகத்தில் இறக்கை இன்றி பறக்கத்துடிக்குது கிடைததே போதும் என்று மனமும் தடுக்குது
-
- 4 replies
- 1.7k views
-
-
வாழ்க்கை .................. தம்பிக்குக் கிரிக்கெட்மீது பைத்தியம் தனக்குப்பிடித்த நாடகத்தை தியாகம் செய்வாள் அக்கா ................. மகள் முள்ளை எடுக்கச் சிரமப்படுவாள் தலையை தான் எடுத்துவிட்டு வால் பகுதியை மகளுக்கு விட்டு வைப்பார் அப்பா ................... வளருகிற பெடியனுக்குச் சத்துத் தேவை கறியில் இருக்கும் தனக்குப்பிடித்த மீன் சினைகளை மகனுக்கு தெரிந்து எடுத்துக்கொடுப்பாள் அம்மா ........................... தங்கைக்குக் கல்யாணம் முடியட்டும் தன் காதலை கட்டுப்படுத்திக்கொள்வான் அண்ணன் .......................... அக்கா சொகுசாய் வாழவேண்டும் கடன்காரனாகிப்போவான் தம்பி ........................ அவள் நீண்டநாள…
-
- 6 replies
- 1.9k views
-
-
வா மச்சான் வா மச்சான் உனக்கு கவலை எதுக்குடா காதல் என்பது மூன்று எழுத்து வாழ்க்கை என்பது நான்கு எழுத்து காதலை விட வாழ்க்கைதான்டா பெருசுட நிம்மதி உனக்கு நிச்சயம் கிடைக்கும்ட தோல்வியும் நமக்கு தோழன்ட வருந்தாதே நண்பா நினைச்சவங்க கிடைச்ச காதலிட இல்லை என்றால் வாழ்க்கை காதலிட காதல் தோல்வி மரணம் வேண்டாம்ட லட்சிய வெற்றிய குறி வைச்சட நிச்சயம் நமக்கு இருக்குட வரலாறு வாழ்க்கை என்றும் உந்தன் கையில்ட...
-
- 2 replies
- 784 views
-
-
[size=4]வாழ்க்கை ஒரு போராட்டம் போராடும் வரை லட்சக்கணக்கான விந்தணுக்களுடன் சண்டையிட்டு போராடி தான் பிறக்கின்றோம் போராட்டத்தில் பிறந்து போராட்டத்தில் வளர்ந்து போராட்டத்தில் மடிவது தான் நம் வாழ்க்கை பிறப்பதற்கே லட்சக்கணக்கான அணுக்களை வென்ற நம்மால் வாழ்வதற்கான போராட்டத்தில் வெல்ல முடியாதா என்ன?!!! வாழ்ந்து தான் பார் நண்பா...[/size]
-
- 5 replies
- 10.2k views
-
-
பூமி சூரியனைச் சுற்றினால் வருஷம்! தேர் ஊரைச் சுற்றினால் திருவிழா! தீ திரியைச் சுற்றினால் வெளிச்சம்! காற்று உடலுக்குள் சுற்றினால் உயிர்! உயிர் உயிரைச் சுற்றினால் காதல்! நீ என்னையும் நான் உன்னையும் சுற்றுவதே வாழ்க்கை! தாய்ச் அவர்களின் ஒரு கவிதை சிங்களம் தமிழைச் சுத்தினால் மங்களம்!!
-
- 7 replies
- 1.5k views
-
-
[size=4]வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதும் இம்முறைதான்... எதையும் இழக்காத இதயங்களும் இல்லை ஏமாற்றம் பெறாத எதிர்பார்ப்புகளும் இல்லை உன்னுடைய நட்பு இன்னொருவரின் இழப்பு அடைகின்ற மகிழ்ச்சியில் அறியாதொருவரின் சோகம் பெறுகின்ற வெற்றியின் பின்புலமாயிரம் வடுக்கள் வேதனைகள் இல்லாத சோதனைகள் இல்லை சோதனைகள் இல்லாத சாதனைகளும் இல்லை வீழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தாழ்ச்சிகள் இல்லை வாழ்ந்து பார் வடுக்களும் வசந்தங்களாகும் வாழ்க்கை ஒருமுறைதான் வாழ்வதும் இம்முறைதான்...[/size]
-
- 4 replies
- 995 views
-
-
வாழ்க்கை என்பது என்ன வாழ்வின் அர்த்தம் என்ன வாழாதிருந்தால் என்ன வாழ்வை அனுபவிப்பதென்பதென்ன அழகான பெண்ணை மணப்பதாலா அழகாக உடலை அமைப்பதாலா பகட்டாக வாழ்வதாலா "சத்தான" உணவுண்டு ஆயுளை பெருக்குவதாலா பிள்ளை குட்டி பெற்று பெருவாழ்வு வாழ்வதாலா.. தினம் தினம் ஏக்கங்கள் வயிற்றுப்பசி உடல்பசி பொருள்பசி ஓ.... பலவாயிரம் ஆண்டுகள் மனிதம் இப்படித்தானே கழிந்தது, உனக்கென்ன அர்த்தம் தேவை... "சும்மா" வாழ்ந்துவிட்டு போ.. உன் மூதாதயரை வாழ்ந்துவிட்டுப் போ... மூதாதயர் வாழ்ந்தது தான் வாழ்வா "சமயம்" பல வழி கூறும் பிரிவுகளை மேலும் பெருக்கி உள குளப்பத்தை தான் தூண்டும் பொய்யான, "நம்பிக்கை" தான் வாழ்க்கை என்று விளங்காமல் ஏற்கச் சொல்லும் கிறிஸ்து…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரசவ வலி இருட்டு உலகத்திலிருந்து விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம் கருவறையின் சுகமான வேதனை - தாய்க்கு பிரசவம் உயிரின் வரவிற்காய் உயிரைப் பணயம் வைத்து உயிர்கள் நடத்தும் போராட்டம் குழந்தை இருட்டுச் சிறையிலிருந்து வெளிச்சச் சிறைக்கு இடம்மாறும் கைதி சிறுவயது வண்ணாத்துப் பூச்சியைப்போல வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்கான கற்றலின் ஆரம்பம் வாலிபம் ஆலோசனைகளை அலட்டல்களாக்கி அசட்டுத்துணிச்சலில் தனித்து எதையும் எதிர்கொள்ளத் துணியும் பருவம் காதல் ஓமோன்களின் காட்சிமாற்றம் எதிர்ப்பாலினரில் ஏற்படும் ஒ…
-
- 14 replies
- 1.2k views
-
-
வாழ்க்கையைக் கண்டு பயந்தேன்!! அதன் வசந்தத்தை அனுபவிக்காத வரை!! அன்பைக் கண்டு பயந்தேன்!! அது என் இதயத்தில் இருள் போன்ற கருமையை நீக்கி, நிகரில்லா வெளிச்சத்தை வீசும் வரை!! வெறுப்பைக் கண்டு பயந்தேன்!! அது அறியாமை என்று அறியும் வரை!! ஏளனங்களைக் கண்டு பயந்தேன்!! எனக்குள் சிரிக்கத் தெரியாதவரை!! தனிமையைக் கண்டு பயந்தேன்! நான் தனியாக இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!! தோல்விகளை கண்டு பயந்தேன்!! தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்று உணரும் வரை!! வெற்றிகளை கண்டு பயந்தேன்!! வெற்றியே வாழ்க்கையின் சந்தோஷம் என்று அறியும் வரை!! மற்றவர்களின் விமர்சனங்களுக்கு பயந்தேன்!! அவர்களுக்கும் என்ன…
-
- 8 replies
- 1.7k views
-
-
வாழ்க்கையின் வெறுமை என் இளமைப்புத்தகத்தின் இரவுப்பக்கங்கள் வெறுமையாய் கிடக்கின்றன இன்னும் எழுதப்படாத ஓர் கவிதையை எண்ணி.... எனது வானம்... இருள் மூடிக்கிடக்கிறது இதுவரை காணாத அந்தப் பௌர்ணமிக்காக... மெல்ல மெல்ல காலத்திருடனிடம் களவு போகின்றன-என் நந்தவனப் பூக்களின் நறுமணமும்-நான் சேர்த்துவைத்த கனவுகளின் ஒளிநிறமும்.... நிசப்தம் விழுங்கிய நீண்ட இரவொன்றில்... நிமிர்ந்து பார்க்கிறேன் மழை இருள்மூடிய காரிருள் வானில் பளிச்செனத் தெரிந்தது தனிமை மூடிய-எனது வாழ்க்கையின் வெறுமை. -ஈழநேசன்- கள உறவான ஈழநேசனின் கவிதையை களைகள் களைந்து அவர் கேட்டுக்கொண்டதன்படி இங்கே களமேற்றியிருக்கிறேன்.
-
- 16 replies
- 6.1k views
-
-
நாள்கள் நெருங்கிறது .. நினைவெல்லாம் நாட்டை நோக்கி .. சிறகுகள் இருந்தும் பறக்க முடியா .. பறவைகள் எல்லாம் கூட்டில் .. அமைதியா வேடிக்கை பார்க்கிறது .. தன் எஞ்சிய குஞ்சுகளை காப்பதா ... இல்லை இழந்த குஞ்சுக்கு ஒளி ஏற்றவா .. சிறகுடைந்த குஞ்சுக்கு உணவு தேடவா .. என்ன செய்வேன் சிறு கூட்டில் நான் ... உணவு தேடி போன என்னவன் வரும்வரை .. கொஞ்சம் கீச்சிட்டாலும் பக்கத்தில் உள்ளவர் ... கூண்டோடு பிடிங்கி எறிவர் அல்லவா ... எனக்கு ஏது நிரந்தர கூடு இவ்மண்ணில் .. பாலையில் ...வீரையில் ..பனையில் என்று ... மாறி மாறி தங்கிய களைப்பு இன்னும் போகவில்லை .. மீண்டும் ஒரு கூடு பின்னும் எண்ண இல்லை .. இருக்கும் கூண்டில் இருப்பவரை வளர்த்து விட்டால் .. தனிமரத்தில் நான் மட்டும் உற…
-
- 0 replies
- 714 views
-
-
வாழ்தல் - வ.ஐ.ச.ஜெயபாலன் தொடுவானில் கை அசைக்கும் மணக்கோலச் சூரியன். பின்னே படுக்கை அறை வாசலின் நீலத் திரை அசைந்தபடி. எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம் பறவைகளாக உதிர்ந்து ஆர்ப்பரித்துச் சிதறிய வானம் இனி வீதியோரப் பசுமரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முழைக்குமா நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா இந்த மாரி இரவு. கண் சிந்தும் பிரிவுகளில் நிறைகிறது வாழ்வு. ஒவ்வொரு தோழதோழியர் செல்கிறபோதும் காதலியர் வசைபாடி அகல்கையிலும் நாளை விடியாதென உடைந்தேன். இனி முடிந்ததென்கிற போதெல்லாம் பிழைத்துக் கொள்கிறது தாய் வீழ்ந்த அடியில் குட்டிவாழை பூக்கிற உலகு. ஒப்ப மறுக்கினும…
-
- 6 replies
- 1.7k views
-
-
திருமணவாழ்த்து, அரங்கேற்ற விழா வாழ்த்து எங்காவது தமிழில் வாழத்து மடலாக எடுக்க முடியுமா? யாழ் இணைய கவிஞர்களே தமிழில் பொதுவான திருமணவாழ்த்துப்பா எழுதி இணையுங்களேன் இணைப்பவர்களுக்கு நன்றி.
-
- 3 replies
- 7.2k views
-
-
வரவும் வாழ்த்தும் மலர்வும் விதிப்படி உணர்வோம் ஈழமென்போர்க்கு மலரும் நாளை எதிர்பார்க்கும் சூழலாம் தமிழர்க்கு மகிழ்வு கிட்டும் -பிரபாகரனை நெஞ்சில் நினைப்பார்க்கு நினைப்பது கைகூடும் தம்வாழ்வு சிறப்போங்க வாழ்த்தும் அவரை. தமிழர் இடர் தீர சமரும் புரிந்த தமிழர் தலைவனடி நெஞ்சே வாழ்த்து தமிழர்க்கு என்றும் தனிநாடு உண்டு தாழ்ந்தவர் மேலோர் பேதங்கள் நீங்கி சிந்தையியில் என்றும் குறிக்கோள் ஒன்றாய் முந்தையோர் நினைவில் மூழ்கிடும் உறவால் தந்தையாய் வேலுப் பிள்ளையின் கருவால் வந்தவ தரித்தார் பிரபா கரனும் ஆழ்வது கடமை அதையறிந் தவரும் பாழ்படு சிங்களம் எதிர்த்தவர் சமர்க்களம் புகுந்தவர் படைகள் முழங்கிய போரால் எதிரிகள் பலரும் எதிர்க்களம் மாண்டது …
-
- 1 reply
- 760 views
-
-
இந்த உலகம் உனக்கு சிறையல்ல நீதான் கைதியாய் வாழ்கிறாய் * நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் ஆனால் ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது * வியர்வை சிந்தாத உன்னாலும் மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது * தடை தாண்டி ஓடிக் கொண்டிருப்பவனுக்கு தடைகள் கண்ணுக்குத் தெரியாது நீ நினைப்பது போல வாழ்க்கை ஒன்றும் மரதன் ஓட்டமல்ல அது தடைதாண்டும் ஒட்டாமே * பெருமை என்பது உன்னைவிட திறமைசாலிக்கு நீ கைதட்டுவதில் அல்ல அவனையும் உனக்காக கைதட்ட வைப்பதுதான் * இந்த உலகம் பூந்தோட்டமல்ல நீ வளர தண்ணிர் ஊற்ற இந்த உலகம் பெருங்காடு நீயாத்தான் வளரவேண்டும் * உனக்கு நண்பன் இருக்கிறானோ இல்லையோ உ…
-
- 1 reply
- 820 views
-
-
மாட்சிமை பொருந்திய பெருநரகம் யாரிவார். நாட்களின் சிதைவுகளில் நாற்றம். கனவின் மீதியெங்கே எதைத் துணைகொள்வது நாய் கட்டையை சுற்றி கறிக்கு அலையும் நாய். எறும்புகள் புற்றை நீங்குகின்றன. வாயில் இரை. இனி எப்பாம்பு அங்கு நிலை கொள்ளுமோ? வெளிச்சத்தில் கடவுள் தலைகுனிந்திருந்தார். கேள்விகளில்லை. சந்தனம் குங்குமம் பன்னீர் கலந்த வாசனையும் இல்லை ஓவியன் வரைந்திருந்த சிறு புன்னைகை கூட இல்லை. சிவந்த உதடுகளை முத்தமிட நெருங்கினேன். ஓ கடவுளே மரணித்துவிட்டாயா ? யாரிடமிருந்து பகலை திருடமுடியும் தானாய் விடிந்த ஒரு பகல். கால்களில் இடறுகிறது கிழிந்துபோன நேற்றைய பகல். இருளின் முடிவில் நல்நிமித்தங்கள்…
-
- 1 reply
- 1.7k views
-