Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் மகளே செங்கொடி....! *செங்கொடி* நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து மானிட விடுதலையை வென்றிருக்க வேண்டிய வித்து நீ. ஏனடி பெண்ணே…? எரிந்தாய் நெருப்பில்….? அவசரப்பட்டு விட்டாய் மகளே..…! அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற வலியல்லவா உனது தீ….! நீ வாழ்ந்திருக்க வேண்டியவள் வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ. ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….? உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள் இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..! மாற்றங்கள் நிகழ உன்போன்ற மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….! அரசியல் புலிகளும் நரிகளும் உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்ன…

    • 4 replies
    • 1.4k views
  2. Started by மோகன்,

    இன்றைய மது வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது வேறு ஒருவன் காத்திருப்பான். நிச்சயம் இல்லை நமக்கு நாளைய மது அல்லது நாளை. எனக்காக இன்று சூரியனை ஏற்றி வைத்தவனுக்கு நன்றி. அது என் கண் அசையும் திசைகளில் சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது. மயக்கும் இரவுகளில் நிலாவுக்காக ஓரம்போகிற சூரியனே உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா. கள்ளு நிலா வெறிக்கின்ற இரவுகள்தோறும் ஏவாளும் நானும் கலகம் செய்தோம். ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே கடவுளையு…

    • 5 replies
    • 1.2k views
  3. "பல்கலைக்கழக வாழ்வின் நினைவுகள்" [பாடல் 02] [பல்கலைக்கழக நினைவு இதழில் வெளியானது / பேராதனை, இலங்கை ] "தேடிய இன்பம், ஆடிய நையாண்டி மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் வாடிய இதயம், பூக்குது மீண்டும் கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" "ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது ஆண்டு மூன்று துணிந்து நின்றது ஆண்டு நான்கு அறிவால் மலர்ந்தது" "நிறைந்த படிப்பு, இடையில் காதல் குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது" "நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம் சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும…

  4. Started by yaal_ahaththiyan,

    உன் அமைதியான வேண்டுதலால் பொறுமையை இழந்திருப்பாள் பூமாதேவி * நீ சுற்றி வந்ததால் சனிஸ்வரனுக்கு பிடித்தது தேவதை தோசம் * நீ முருகனைச் சுற்றுகையில் முருகன் மீது சந்தேகப் படுகிறார்கள் வள்ளியும் தெய்வானையும் * அழகானவள் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாரும் உன்னைக் கண்டதும் தேவதை கிடைக்க வேண்டும் என்கிறார்கள் * கடைசியில் எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது பக்தர்கள் உன்னைச் சுற்றுகிறார்களா? கோயிலைச் சுற்றுகிறார்களா? -யாழ்_அகத்தியன்

  5. மாவீரர் நினைவில் கவிஞர் காசி ஆனந்தன்.. ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1.2k views
  6. கருகாத பூக்கள் .....!!!-------எம் .....மண்ணில் தான் ....கறுப்பு பூக்கள் அழகழகாய் ....பூத்தது - பூத்த பூக்கள் ....வாடிவிட்டதே - நினைக்காதீர் ....எம் மனதில் என்றும் வாடாமலர் ....உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!எம் மண்ணில்தான் கடலில் ....நீலபூக்கள் பூத்தன ....பூத்த பூக்களை அலை ....அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!கறுப்பு எண்ணங்களாலும் ....கருப்பு ஜூலையாலும் ....கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....கறுப்பு சிந்தனைகளால் ....கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....கருகாத பூக்கள் .....!!!

  7. உலகம் அழிந்தால்.... கவிஞர் வைரமுத்து ''48மணிநேரத்தில் உலகப்பந்து கிழியப்போகிறது. ஏறுவோர் ஏறுக, என்சிறகில். இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன். இரண்டே இரண்டு நிபந்தனைகள்: எழுவர் மட்டுமே ஏறலாம்.உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும் உடன்கொண்டு வரலாம்". திடீரென்று... ... மேகங்கள் கூடிப் புதைத்தன வானை. ஒரே திசையில் வீசலாயிற்று உலகக் காற்று. பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய் உருண்டது பூமி. மருண்டது மானுடம் அப்போதுதான் அதுவும் நிகழ்ந்தது. வான்வெளியில் ஒரு வைரக்கோடு. கோடு வளர்ந்து வெளிச்சமானது. வெளிச்சம் விரிந்து சிறகு முளைத்த தேவதையானது. சிறகு நடுங்க தேவதை சொன்னது: ''48 மணி நேரத்தில் உலகப்பந்து கிழியப் போகிறது. ஏறுவோர் ஏறுக என்சிறகில் இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன் …

  8. புத்தன் போய் விட்டான்! போதி மரத்துப் புத்தன் ஏதோ மோதி எழுந்தான்! கூவி வந்த குண்டொன்றின் சன்னம் தன் தேகம் கீறி இரத்தம் வரக் கண்டான்! தேடி ஒரு பிக்குவைப் பிடித்து நடப்பதென்ன என்று அறியக் கேட்டான் ஆதி முதல் அத்தனையும் உரைத்த பிக்கு... அவசரமாய் போக வேண்டும் என்று ஓடிப் போனான்! புரியாத புத்தன் அவனைத் தொடர்ந்து போனான்... என்ன ஒரு முரண்பாடு...! "புத்தனைத் தொடர்ந்து பிக்குகள் போவதிருக்க பிக்குவைத் தொடர்ந்து புத்தன் போவதா...?" என்ற தத்துவ விசாரணை விடுத்து நடப்பதைக் கவனிக்க... ஓடிப் போன அந்தப் பிக்கு போருக்கு ஆதரவாய் கோஷம் போட்ட கூட்டத்தோடு சேர்ந்து தானும் கோஷம் போட்டான்...! சாந்தம் தவழவேண்டிய முகத்தில்... ஒ…

  9. எனக்குள் நானே சிரித்துக்கொண்டேன் என்னை அவர்கள் பைத்தியம் என்றார்கள் இப்போது அவர்களைப் பார்த்து நான் சிரித்துக்கொண்டேன் பாவம் அவர்கள் பைத்தியம் என்று! :D

    • 6 replies
    • 969 views
  10. தனித்த பெருவெளியில் வீரிட்டு அழுகின்றது வேலைக்காரனின் குழந்தைகள் அள்ளி அணைக்க முற்பட்டு தோற்றுப் போகின்றது புதையுண்ட கைகள் எலும்புகளில் இருந்து சதைகள் கரைந்து நரம்புகள் கரைந்து இத்து மக்கிவிட்டது கண்காணிகளே வாருங்கள் என் சடலக் குழிமேல் முருங்கை மரத்தை நடுங்கள் செழித்து வளர நான் உரமாக இருக்கின்றேன் காய்களை தின்று முறுகித் திரியுங்கள் முடியாது யாராவது பயிரிட்டு காய்களை மட்டும் அனுப்புங்கள் பணம் தருகின்றோம் யாரும் இல்லை இங்கே பறவாயில்லை நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் உங்களால் எழுந்து வந்து வாங்கித் தர முடியுமா? வேலை செய்ய விருப்பந்தான் ஆனால் முடியாது எலும்புகளும் இத்துப்போகும் நிலமைக்கு வந்துவிட்டது. …

    • 3 replies
    • 1.1k views
  11. Started by nochchi,

    ஆடிப்பிறப்பு விடுதலையைத் தேடி... ... எத்தனையோ ஆடிகளை கடந்து போயிற்று என் வாழ்க்கை. இன்னமும் நானும் சேர்ந்துபாடிய பாட்டின் மகிழ்ச்சிக்குள் இருந்த விடுதலையை நான் அனுபவித்ததேயில்லை. நாளைகள் கடந்து நிரம்ப நாட்களாயிற்று. இப்போ என் தோழர்களுமில்லை. ஆனந்தமுமில்லை. கொழுக்கட்டையும்..கூழும்.. கனவாகிப் போன வாழ்க்கைகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது மனசு. இப்போதும்.. பற்கள் விழுந்து போன என் தாய்.. என்னையும் நினைத்தபடி தன் சுருக்கம் விழுந்த கைவிரல்களால் கொழுக்கட்டைக்கு பற்கள் பதித்துக் கொண்டிருப்பாள். எமது கனவுகளைப் போலவே குமிழிகளாய் வந்து வந்து வெடித்து வெடித்துப் போகிற கொதிக்கும் தண்ணீருக்குள் கூழுக்காக மா உருண்டைக…

    • 3 replies
    • 2.9k views
  12. இன்று யாழ்ப்பாணம் பரியோவான் - மத்திய கல்லு}ரிகளுக்கிடையில் நிகழும் துடுப்பெடுத்தாட்டத்தை எண்ணியதும் நான் முன்னார் எழுதிய இக்கவிதை நினைவுக்கு வந்தது. படித்துப்பாருங்கள். துடுப்பெடுத்தாட்டம் ஒருமரத்தின் உடலெடுத்து உரித்துப் பதனுமிட்டு ஒத்தடம்போல் எண்ணெய் தேய்த்து - அதற்கு "கிரிக்கட்" மட்டையென பெயருமிட்டு துடுப்பு எனசொல்வார் தமிழில். பத்துப்பேர் சுற்றிநிற்க பந்தை ஒருவர்வீச தத்திவரும் தோல்ப்பந்தை மட்டை கொண்டடிக்க - நிலத்தில் பட்டுவிடாமல் பிடித்தால் அகல்வார் வெளியே முக்கி முக்கி அடித்தவர். கையை மடிக்காது வீசவேண்டும் அதனை கைகொண்ட மட்டையால் தடுக்கவேண்டும் - இல்லையெனில் தகர்க்கும் தடிமூன்றும் தன்காலை முன்வைத்தால் …

    • 11 replies
    • 1.2k views
  13. இலை உதிர்காலத்தின் சாலையில் செல்கின்றேன் பச்சையான மரங்கள் மஞ்சளாகிக்கொண்டிருக்கின்றது நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இலைகள் உதிர்ந்துகொண்டிரக்கின்றது உணவின்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்த ஒருவன் நினைவுக்கு வந்தான் குளிர்காலம் முடிந்ததும் இந்த மரங்கள் மீண்டும் துளிர்விடும் உயிர் உதிர்ந்த மரத்தை கொத்தி விறகாக்கி சோறாக்கி தின்று தேசீயம் என்று ஒரு ஏவறை விட்ட ஞாபகங்கள் வந்துபோயின. கால்களுக்குள் இலை உதிர்காலத்து சருகுகள் கேவலமாகப் பார்த்தபடி காற்றில் சலசலத்துச் சென்றது மண்ணோடு மக்கி மீண்டும் மரத்தில் துளிர் விடுவேன் என்ற என்னிடம் இல்லாத உண்மை அதனிடம் இருந்தது. இயற்கையின் விதிவிலக்குகளில் நானும் ஒருவன் என்ற பெருமூச்சு என் காதுகளுக்கு கேட்காதபடி சருகுகள…

  14. தேநீர் கவிதை: உனக்கு என்ன அர்த்தம்? உன் பிறப்புச் சான்றிதழ் உன் பெற்றோர் வாங்குவர். உன் இறப்புச் சான்றிதழ் உனக்குப் பின்னால் இருப்பவர் வாங்குவர். நீ என்ன வாங்குவாய்? **** பகல் வந்துபோனதற்கு நட்சத்திரங்கள் அடையாளம் இரவு வந்து போனதற்கு விடியலே அடையாளம் நீ வந்து போனதற்கு என்ன அடையாளம்? **** அகராதியில் ஒரு புழுக்கூட இடம் பெற்றிருக்கும் அதற்கு…

  15. திலீபன் புன்னகைக்கும் இதயம் கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும் அழத் தோன்றும் முகத் தோற்றம் நேசத்தை யாசிக்கும் யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! திலீபன் ! காற்றில் உதித்தவன் ! நெஞ்சங்களில் அநேகமானவற்றை விட்டுச் சென்ற முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில் ஒரு ‘கமா’வாக மறைந்த விலைமதிப்பற்ற யௌவனத்தை கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த நேர்மையான புன்னகையும் தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன் அன்றிலிருந்து இன்று வரை கண்ணீர் ருசிக்கும் அன்னையர் கைகளிலில்லா ஐவிரல்களையும் தேடியலையும் தந்தையர் ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும் புதல்வர்களின் சடலங்களின் மீது ஓலமிட்டழுபவர்கள் எல்லா இடங்களிலிலும் இரு…

    • 19 replies
    • 1.9k views
  16. சின்னவனா இருக்கேக்க சூழ்ந்திடுவார் முதியவர்கள் ஆண்டு சில உருண்டோட பிரிந்து அவரும் சென்றனரே போகுதுபார் வாழ்நாளும் புயல் போன வேகத்திலை ஏறிடிச்சு என் வயதும் நானும் இப்போ கிழவனப்பா மூட்டுப் பிடிப்பிருக்கு மருந்தெடுக்க போகணுமே முட்டுக் கொடுத்தா தான் மூணு அடி நான் மிதிப்பேன் கால் நடக்க முடியாட்டா பாடை கட்ட முந்திடுவார் ஏக்கம் தாளாமை போக்கத்து நிக்கிறனே பங்கைப் பிரிக்காட்டி பால் வார்க்க மாட்டாராம் நான் சேத்த சொத்துக்கு எட்டுக்கால் வாரிசுகள் நாலெழுத்து படிக்காமை நாசமாய் போனதுகள் வீட்டையும் புடுங்கிட்டு நாட்டுக்கு அனுப்புதுகள் இண்டைக்கோ நாளைக்கோ போற உயிர் இது தானே நன்றியுள்ள நாய் இருந்தா-என் கஷ்டத்தை அது கேக்கும் பணத…

  17. தோழனே....!!! நீ எனக்கு நண்பனாக கிடைக்க நான் ஏது தவம் செய்தேனோ? கலகலவென நகைக்கும் வயதில் சலனமில்லாமல் இவ்வளவு சோகமா? உனக்குள் இருக்கும் சோகத்தை எனக்குள் இன்றே புதைத்துவிட்டு கள்ளமின்றிச் சிரித்திட உல்லாச வானில் பறந்திடு உன் இலட்சியங்களை நிறைவேற்ற என்றும் உனக்கு துணையாவேன் இன்றே விரைந்து புறப்படு நன்றே நடக்கும் உன்வாழ்வில் பழையனவற்றை மறந்திடு புதியதை தேடி விரைந்திடு சோகத்தை தூக்கி எறிந்திடு தோழி என் தோளில் தலை சாய்த்திடு ஆயிரம் உறவுகள் தோன்றியும் அன்பில்லையே என சலிக்காதே நட்பைவிட வேறேது இன்பம் நானிருப்பேன் கலங்காதே

    • 98 replies
    • 15.9k views
  18. Started by marumakan,

    அடிக்கடி இனிப்பு வாங்கித்தந்த யமுனா அக்கா அண்ணனுக்கு அண்ணியானதால் என்னைக்கண்டுக்கிறதே இல்லை. (பி.கு: இந்த யமுனாஅக்காவும், யாழ் கள யமுனாவும் ஒருவரல்ல. இல்லை இருவரும் ஒருவர்தான் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.)

    • 3 replies
    • 1.2k views
  19. "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில்" "ஒட்டாவா வீதியில் காலை பொழுதில் ஓட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன் காட்டின் நடுவே கேம்ப் போட்டு காட்டாத வாழ்வை கனவு கண்டேன்" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது பாட்டா சொல்லி தேவதை வந்தது" "சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி பாட்டி கையை மெல்ல பிடித்து வட்ட மிட்டு வானத்தில் இருந்து கூட்டி வந்து இன்பம் பொழிந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க முட்டி மோதி நிமிர்ந்து நடந்து பொட்டக் குட்டி பாட்டி பெயரில் லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது" "கட்டு மரமாக வாழ்வில் மிதந்து ஆட்டி படைத்த நினைவுகளை எறிந்து குட்டி பாட்டி மழலையில் மகிழ்ந்து …

  20. யூலை 1983... படித்துக்கொண்டிருந்த என்னை தெருவில் ஓடத்துரத்தியநாள் இலங்கையனாக இருந்த என்னை தமிழனாக மாற்றியநாள் இலங்கை என் தாய்நாடு என்பதை வடக்கு கிழக்கு என்றநாள் தமிழன் என்று அடையாளமிட்டு கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்.. இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை நான் தரிசித்தநாள் அகப்பட்டிருந்தால் இன்று 31வது நினைவஞ்சலி நாள்............

  21. தமிழ்ச்செல்வனையும் போராளிகளை இழந்த துயர்ப் பொழுதில் ஈழத் தமிழருக்கு ஆறுதலான கலைஞருக்கு நன்றி. கலைஞருக்கு வாழ்த்து -வ.ஐ.ச.ஜெயபாலன் காலத்தில் சோழனுக்கு நீர் ஏந்திக் கல்லணை நிழலேந்திக் கோவில். சேரனுக்கோ சிலம்பேந்தி வந்த தமிழிச்சி. பாண்டடியற்கோ சங்கம். அடையா நெடுங்கதவும் ஆஞ்சல் எனும் சொல்லுமாய் எம் புகலான தமிழகத்தின் தலைவனுக்கு? கலைஞா உனக்கு காலச் சுவடாக விலங்கொடித்தால் ஈழம் இருக்கும் ஐயா நீ உலகுள்ள வரை வாழ்வாய் visjayapalan@gmail.com

  22. உன்னிடம் இல்லாதபோதும் நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு. உனது „கடன் பட்ட நெஞ்சு“ கலங்கிக் கரையும்போது உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே வெறித்துப் பார்ப்பதைத்தவிர உன்னால் என்ன செய்ய முடியும்? இருபது ஆண்டுக்கு முன் தங்கையின் „பட்டப்படிப்பு வெற்றிக்கு“ (ப்) பரிசு அளிக்க கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய், சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு! வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை! நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும் கரைந்து காணாமற் போச்சு! அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென… இப்போ, உனக்குக் கடன் தந்த …

    • 0 replies
    • 987 views
  23. தீபச்செல்வனின் அழகான கவிதை. தரப்பால்களின் கீழாய் கிடந்து அடங்குகிறது நமது எல்லா வழிகளும். துப்பாக்கியின் நுனியில் வடிகிற முகத்தில் எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள். எல்லாமே சட்டென தலைகீழாகிறது நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற துவக்கு சாம்பலை எதிராய் கிளம்புகிறது. சனங்களின் குருதி கடலில் குதித்து தப்பிச் செல்லுகிறது. வழியில் தற்கொலை செய்துகொள்ள துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு. ஒரு மாபெரும் அரசனின் ஒற்றை வாளில் முழுச் சுவரும் வெட்டுண்டுபோகிறது. பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின் கண்ணீரைத்தவிர குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை. மிகவும் கொடுமையான அனுபவங்களை வானத்திற்கு மேலால் கடல் நிரம்புகிறது. இப்பொழுது கடைச…

  24. Started by கறுப்பி,

    • 3 replies
    • 838 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.