கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
நிஐம்!!! காற்றும் ஒருகணம் வீசமறந்தது கடலும் ஒருநொடி அமைதியாய்... போனது... தேற்றுவாறின்றி நம தேசம் தேம்பி நிற்குது தேசத்து உறவுகள் எல்லாம் ஊரூராய் அலையுது அம்மி மிதித்து அருந்ததி பார்த்து........ சோடிசேர்ந்த சோடிக் குயில்களின்....... மகிழ்ச்சிகள் எல்லாம். இன்று முட்கம்பி வேலிக்குள்... முடங்கிக் கிடந்திட நான்கு சுவற்றுக்குள் நடப்பவை எல்லாம் கந்தல் துணியால் கட்டிய முகாமில்..... வேட்டை நாய்களுக்கு நடுவில் வேதனையுடன் நடக்குது....... குளவி முதல் கிளவிவரை.... மாற்ற ஒர் உடையில்லை... அன்றொரு நாள் நம் இளசுகள் காத்திருந்து காதல்செய்த வீதிகள் எல்லாம் வேதனை தாங்கி விம்மியே நிற்கின்றன..... தண்ணீர் ஊற்றி நாம் வளர்த்த நந்தவன மரம…
-
- 21 replies
- 3.5k views
-
-
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்: மனுஷ்ய புத்திரன் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் சதா முணுமுணுத்துக்கொண்டு எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு எதையாவது சுத்தம் செய்துகொண்டு யாரையாவது சபித்துக்கொண்டு எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு கண்ணாடியின் முன் சுயமைதுனம் செய்துகொண்டு …
-
- 4 replies
- 3.5k views
-
-
[size=5]மண்ணின் வாசனை,[/size] [size=5]மனதை நெருடுகின்றது![/size] [size=5]நினைவுகள் பின்னிப் பிணைந்து,[/size] [size=5]கண்ணாமூச்சி விளையாடுகின்றன![/size] [size=5]உப்புக் கலந்த காற்றின் நினைவில்,[/size] [size=5]நாசித் துவாரங்களின் அடைப்புக்களும்,[/size] [size=5]விலகி வழி விடுகின்றன![/size] [size=5]ஏனிந்தப் பிணைப்பு என்பதை,[/size] [size=5]அறிய மனது துடிக்கிறது?[/size] [size=5]அந்த மண்ணின் நினைவில்,[/size] [size=5]உடம்பின் உழைவுகள் கூட,[/size] [size=5]ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன![/size] [size=5]காலைப் பொழுதின் புதுமையில்,,[/size] [size=5]கெக்கலித்துச் சிரிக்கும் பறவைகளே![/size] [size=5]உங்கள் கீதங்களில் உயிர்ப்பு இல்லை![/size] [size=5]எங்கள் குயில…
-
- 40 replies
- 3.5k views
-
-
உட்புகுந்து உயிர் அரிக்கும் வித்தை கற்க வேண்டும் காக்க காக்க என்று கல் மண் புழுதியிலும், பனி உறையும் பாதையிலும் வீசு புயல் மழையினிலும், வேதனையைச் சொன்னபடி, குப்பைக் காடுகள்போல் அந்நியக் கண்கள் சீண்டும் அவமானம் தின்றபடி, வேர் கிழித்த வலி விளம்பி, விம்மி, வெந்துருகி அறியாத தெருவெல்லாம் அலைமோதிக் கிடந்தோமே எவர் வந்து கேட்டார்கள்? எவர் வந்து பார்த்தார்கள்? எவர்தான் எதிரியென்று எமக்குப் புரியவில்லை யார்தான் துரோகியென்று யதார்த்தம் விளங்கவில்லை சிதறுண்டு போனோம் சிதையுண்டும் போனோம் விதை அழுகிப் போனதெனும் இழிநிலை ஆனதைய்யோ... இனம் முடை நாத்தத்தில் உட்கார்ந்து கொண்டதையோ... தாங்க முட…
-
- 22 replies
- 3.5k views
- 1 follower
-
-
நண்பி..... நண்பி......... நட்பு.... சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு உன்னை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன் அன்பை எண்ணி வியந்து போகிறேன்.... நண்பி......... மொழிகளோ.... தூரங்களோ........ வயதோ....... மற்ற எதுவுமே - நட்பை எதிர் பார்ப்பதில்லை... உன்னாலே புரிந்து கொண்டேன்.. என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால் உன் நட்பைப்போல் எதுவும் மலர்ந்து மணம் வீசவில்லை கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில் நண்பி.............தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........?
-
- 14 replies
- 3.5k views
-
-
புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ திட்டம் போட்டு அறுந்த விழ…
-
- 10 replies
- 3.5k views
-
-
அம்மா தடுத்தாள்! சின்னப் பிள்ளைகள் தீக்குச்சிகளை கையில் எடுக்கக் கூடாதாம்! அம்மா, உனக்கு தெரியாதா?! எனைப் போல ஒரு பிஞ்சுக்கரம்தானே இவைகளையெல்லாம் அடுக்கியது என்று! நகரத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால் திட்டு விழும்! கிராமத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால்தான் சோறே விழும்! குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே! ஒரு தெய்வம் ஓட்டலில் துடைக்கிறது! ஒரு தெய்வம் தீக்குச்சி அடுக்குகிறது! ஒரு தெய்வம் ஸ்பேனரால் அடிவாங்குகிறது! ஒரு தெய்வம் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறது ஆம்! கீழே தெய்வங்கள் குழந்தைகளாய் வேலை செய்துகொண்டிருக்கின்றன! மேலே குழந்தைகள் தெய்வங்களாய் பார்த்துக்கொண்டிருக்கின்றன!!
-
- 17 replies
- 3.5k views
-
-
வரலாற்றில் புதையுண்டு போன நிலங்களில் இருந்து மீண்டும் குதிரைகள் வெளிக் கிளம்பும்.. நூற்றாண்டுகளாக சாம்பல் மூடிய வீதிகளில் அந்நிய பாதச் சுவடுகளை மேவி தம் கால்கள் பதிக்கும். இருண்ட கானகங்களில் மழையின் பின் மரங்கள் பொந்துகளுக்குள் பொத்தி வைத்த நீரை வாரி இறைக்க நுதல் வழி வழியும் நீர் படர்ந்து காய்ந்த மண்ணின் துகள்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து எழும். எம் கடற்கரைகளில் எங்கள் கூழைக்கிடாக்கள் சேர்த்து வைத்திருந்த மீன் குஞ்சுகளின் ஆரவாரங்களில் கடலின் மெளன வெளிகளில் தாண்டு போயிருந்த எம் படகுகள் மீண்டும் எம் கடல்களில் வலம் வரும் கால அசைவியக்க காற்றில் எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை எப்போதும் வானம் …
-
- 38 replies
- 3.5k views
-
-
இன்னுமா உறக்கம்?...... இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! புூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால்எங்கே? ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தின்னிகளே! போர்த்திக்கொண்டு உறங்குங்கள்! ம…
-
- 28 replies
- 3.5k views
-
-
கல்வாரி வலிசுமந்த எம் மீட்பரே...! மறுமுறையும் எம் மண்மீது வருவீரோ...? எம் தமிழ் கருவறைகள் உமக்காய்க் காத்திருக்கின்றன...! யாருமில்லையாம் இனிமேல்...எமக்காய்!! உள்ளம் பதைக்கிறது.... எதிர்காலம் என்றொன்று, இல்லாத காலத்தை நினைத்து!!! ஏக்கங்கள் மட்டும் எம்மை வாட்டுகின்றதே! ஏமாற்றங்கள் மட்டும் எம்மைத் துரத்துகின்றதே!! எங்கு ஒளித்துவைத்தீர்... எம் விடுதலையை? உங்கள் புதிர்கள் இன்னும் புரியாத... பதர்களாய்த்தான் ... இன்னும் நாங்கள்!! மீட்பர் வருவார்... உயிர்த்தெழுவார்... இதெல்லாம் வெறும் நம்பிக்கையாய்ப் போய்விடலாம்... பரவாயில்லை! ஆனால் உம் உன்னத தியாகங்கள் தோற்றதாய்... வரலாறு எழுதத் துடிக்கின்ற பாவிகளுக்கும் மேலாய் நாம்! 'இயலாமை' என்றொன்று…
-
- 24 replies
- 3.5k views
-
-
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆண்டு இங்கு எட்டாச்சு...!! எப்போ நீ பிறப்பே என்று தான் இங்கு ஒரே பேச்சு...!! இதயத்து அறைகளிலே இளம்பிஞ்சே உன்முகம் தான்... என் கந்தகக் கருப்பையில் ஃபீனிக்ஸாய் எழுவாயா??? விரதமும் வேண்டுதலும் - உன் வரவைச் சொல்லலையே...!! வாடகைத்தாய் வாங்கக்கூட காசுபணம் எனக்கிலையே...!! சோதனைக்குழாய் முறைக்கும் - முதல் சோதனையிங்கு பணத்திலாமே?? சொச்ச ரொக்கமில்லையினா சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!! உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என் உயிரே தவிக்குதிங்கே...!! நஞ்சுரைக்கும் வல்லூறால் - என் நெஞ்சு மருகி விம்முதிங்கே...!! ஆண்டுபல போனாலும் - உன் வரவு கனவில் தான் நிஜமாச்சு...!! 'ம்மா'-னு நீ…
-
- 9 replies
- 3.5k views
-
-
கண்டதையும் கேட்டதையும் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன் பயணத்தில் பல பார்க்கிறேன் பட்ட பார்த்த அனுபவத்தை வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது என் மனதில் இரத்தம் வடியும் எழும் என் உணர்வை சமுதாய கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல் படும் குடும்பங்களை பார்ப்பேன் மனம் வருந்தும் பொருளாதார கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து கண்ணாலும் சைகையாலும் தன்னை ம…
-
- 0 replies
- 3.4k views
-
-
கோவம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி குதூகலப்படுத்துபவனே சபை நடுவே துணிவுடன் உலாவரும் சகலகலா வல்லவனே விடிய விடிய தூக்கமின்றி விருப்போடு பேசிப் பேசி சிரிப்புகளோடு கூடிய அரட்டையில் சிந்திக்கவும் சிறகடிக்கவும் வைப்பவனே தேடலின் நாயகனே வானொலியின் தலைவனே அரட்டையில் மன்னவனே எனதன்புத் தம்பியே அன்றொரு நாள் எனை நீ திடீரென சந்தித்த போது அடைமழை பெய்கையில் குடையின்றி நான் நனைந்ததையும் பெரியம்மா வீட்டு நாயை தைரியமாக களவாடியதை தெருவோரமாக ஒதுங்கி நின்று தெரியாமல் பார்த்த நீ சொல்லமாட்டேன் யாருக்கும் லொலிபொப் வாங்கித் தா என செல்லமாக கேட்டதும் செலவழிக்கின்றேன் இப்போதும் நான் ஆனால்... யாவற்றையும் யமுனாவாக …
-
- 12 replies
- 3.4k views
-
-
இரத்தினக் குவியலிலே - சில பித்தளைத் தகடுகள் இனிய கவிதையிலே - சில இலக்கணப் பிழைகள் மருத்துவ மனையிலே - சில மலேரியா நுளம்புகள் விருந்துப் பந்தியிலே - சில வேண்டாத கரப்பான்கள் நெல்விளை வயலிலே - சில நச்சுள்ள செடிகள் நல்லரிசி மூட்டையிலே - சில சுண்டெலிப் புழுக்கைகள் ஞானிகளின் சபையிலே - சில ஞான சூனியங்கள் சாமிகளின் சந்நிதியிலே - சில சாத்தான்களின் குஞ்சுகள் புலிகளின் காட்டிலே - சில பெருச்சாளிப் பீடைகள் தமிழரின் இனத்திலே - சில தரங்கெட்ட ஜென்மங்கள் http://gkanthan.wordpress.com/index/eelam/peruchaali/
-
- 7 replies
- 3.4k views
-
-
காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை கல்லறை அல்ல உயிர் உள்ளவர் பாசறை காலத்தால் தீபங்கள் அணையலாம் தீ அணைவதில்லை தேசத்தை காத்த உயிர் ஒய்ந்தொழிவதில்லை காலத்தால் குண்டு மழை நடுவினிலும் குருதி மழை நடுவினிலும் நின்று போர்களம் பார்த்தவன் உண்ட சோறு தொண்டை உள் நுழையு முன் நஞ்சை உண்டு தாய்மண் காத்தவன் இலையுதிர் காலத்தில் உதிர்ந்தாரா இல்லையவர் இளவேனில் நாளில் உதிர்ந்தார் தலை தந்து தமிழீழ மண் வாழ விலை தந்து மாவிரராய் நிமிர்ந்தார் இலையுதிர் காலத்தால் மாற்றார் சிதைத்தாலும் மாவீரர் கல்லறை மண்ணாய் நிலைக்குமையா ஆற்றல் மிகுந்த மாவீரர் கல்லறை மண்ணில் அனலே முளைக்குமையா மாற்றார் காலத்தால் தமிழீழ மாமண்ணில் என்றென்றும் புலி வீரர் நடந்த கால் தடமிருக்கும் தமிழ் மாந்தர் உள்ள…
-
- 3 replies
- 3.4k views
-
-
எது அழகு.. ஏகாந்தம்..இளவேனில்.. இல்லாத கடவுள்.. இருக்கின்ற கோவில் வாசப்பூக்கள்..வரண்ட வேர்கள்.. பழைய சிற்பம்..புதிய நுட்பம்.. மெல்லிய ஆடை.. மெல்லியல் ஆடல்.. பஞ்சுமேகம்..பிஞ்சுப்பாதம்.. நெடுஞ்சாலை..நீர்வீழ்ச்சி குண்டுகுழி..காடும்மேடும். பளபளமேனி..பட்டுஆடை.. வசீகரப்புன்னகை..வைரங்களில் நகை மிடுக்குநடை..சின்னஇடை அமுதப்பேச்சு..வண்ணப்பூச்சு.. வெளியில் தளுக்கு உள்ளே அழுக்கு சிந்தை நொந்து..சிந்தை நொந்து சின்னஅறிவைக் கேட்டு பார்த்தேன்.. எது மெய் அழகு...
-
- 12 replies
- 3.4k views
-
-
வேற ஒன்றை தேடும் போது இன்று நான் 1996 இல் 22 வயதில் எழுதிய ஒரு கவிதையை Google ஆண்டவர் கொண்டு வந்து காட்டினார்.
-
- 19 replies
- 3.4k views
-
-
இதமான முத்தம் இம்சையாகப் போனதேன் ? இனிமையான பொழுதுகள் இன்று இம்சையாகப் போனதேன் ? எத்தனை எதிர்ப்புகள் வந்தது எம்மை நோக்கி இலகுவாய் உடைத்தோமே ஒன்றாக நானும் நீயும் அப்போது இம்சை இல்லையே எம்மிடம் எதெற்கும் துணிந்த என்னை எண்ணையாக்கியவள் நீ இன்று சொல்லால் இறுக வைத்தாயே ஒருவேளை உன்னைக் கோர்க்க நான் தகுதி இல்லாத நூலோ ??????????????
-
- 36 replies
- 3.4k views
-
-
" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "-------" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "-------" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "-------"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "-------"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"-------" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "-------" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "-------" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "-------"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "-------"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "-------"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "----"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "-----"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "---…
-
- 1 reply
- 3.4k views
-
-
முன்னர் சகாறா அக்காவின் ஒரு திரியில் எனது கவிதைகளை காட்சிகளுடன் பகிர்ந்தேன்...ஆனால் அங்கு பகிர்ந்த ஒன்றையும் காணவில்லை..எல்லாம் தொலைந்துவிட்டன..அவற்றின் பிரதிகளும் என்னிடம் இல்லை...அதனால் அதன் பின்னர் எழுதியவற்றை இந்த புதிய திரியினூடு பகிர்கிறேன்... அலுப்பூட்டும் உரையாடல்களில் இருந்தும், மனிதச் சுமைகளில் இருந்தும் இலக்கியம்களும்,இயற்கையின் பாடல்களும், குழந்தைகளுமே மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன....மனதை அதன்வழியில் பேசவிட்டு வழிந்த மொழிகளை நெஞ்சுக்கு இனிமையை தந்த இந்த படங்களினூடு இங்கு பகிர்கிறேன்...மொழிக் குமிழிகள் உடைந்து சிந்திய என் கவிதைக்குழந்தையின் காலடித்தடங்களின் சுவடுகளை மீட்டிப்பார்க்கிறேன் இந்த திரியினூடு.. படித்துவிட்டு யாரோ சிந்தும் கண்ணீர்த் துளிக…
-
- 38 replies
- 3.4k views
-
-
யார் தீனி போடுகின்றார்களோ அவர்களுக்கு வாலாட்டிய நாய்கள் தீனியில் பங்கு கேட்ட நாய்களை கடித்துக்குதறியது. சுட்டிக்காட்டியவனை துரத்திக்கடித்தது சில நேரம் தன்பாட்டில் கடித்து எசமானிடம் நல்லபெயரை வாங்க முற்பட்டது வரலாறு முழுக்க வாலாட்டிப்பழகிய நாய்கள் மாறி மாறி எசமானர்களை சுற்றி வந்தநாய்கள் வரலாற்றுத் துயரத்தை சந்தித்தது!! "எசமானர்கள் நாய்களை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்" சில நாய்கள் எசமானர்களின் பின்னால் சென்றது அவர்கள் நாய்களுக்கு கப்பாத்துப் பண்ணி அழைத்துச் சென்றார்கள் எஞ்சிய நாய்களுக்கு புது எசமானர்கள் வந்தரர்கள் வந்தவுடன் அவர்களும் நாய்களுக்கு கப்பாத்து பண்ணிவிட்டார்கள் இது நாய்களின் அந்திம காலம் வேட்டையாடவும் தென்பில்லை செல்லப்பிர…
-
- 27 replies
- 3.4k views
-
-
இன்னொரு பிரிவு வேண்டாமடா.... கிருஸ்ணமூர்த்திக்கு அஞ்சலிக் கவிதை...... நீ உன்னையே எரிக்கும் உரிமையை உனக்கு யார் தந்தது......... நம் தமிழ் தலைவனா.... இருக்கவே இருக்காது..... அவன் அக்கினிக் குஞ்சுவளர்த்து எதிரியையல்லவா எரிக்கச் சொன்னவன்...... ஆறுகோடி தமிழினம் தமிழ் நாட்டில் நீ தமிழுக்காக எரிந்து போ என்று அரசியல் வாதியா சொன்னான்..... ஆம் சொன்னாலும் சொல்லுவான்.... தான் வாழ எவனையும் எரிக்கத் தயங்காதவன்.... உன் தமிழ் பற்றா உன்னை நீயே எரிக்கத் தூண்டியது..... பற்றுள்ளவன் எரிந்து போனால் பற்றியெரியும் தமிழை யார் காப்பாற்றுவது? பற்றைக் காடெல்லாம் போட்டு உன் தொப்புள் கொடியுறவை பாழாய்ப் போனவன் எரிக்க நீயோ பற்றவைககும்…
-
- 16 replies
- 3.4k views
- 1 follower
-
-
வணக்கம் கள உறவுகளே , பிரபல்யமான கவிஞர்கள் பொதுவாகக் கருத்துக்களங்களை எட்டிப் பார்ப்பதில்லை என்ற மனக்குறை எனக்குப் பலகாலமாகவே உண்டு . விதிவிலக்காக ஈழத்தின் விலைமதிக்கமுடியாத கவிஞரான வா செ ஐ என்ற அழைக்கப்படும் பொயட் யாழ் இணையத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்வேன் . நான் வாசித்த பிரபல கவிஞர்களின் கவிதைகளில் என்னைப் பாதித்த ஒரு சில கவிதைகளை இந்த சுவைத்( தேன் ) பகுதியில் பதிவிடலாம் என நினைகின்றேன் . இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோமகன் ************************************************************************** 01 புத்தி தனக்குப் புத்தி நூறு என்றது மீன் - பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆ…
-
- 18 replies
- 3.4k views
-
-
வளர்ந்து விட்ட தென்னை வாடியது-தன் உடலைப்பார்த்து! தான் இழந்துவிட்ட ஓலைகள் எத்தனை... எண்ணிப் பார்த்தது வடுக்களை... கீழே வீழ்ந்து விட்ட ஓலையொன்று ஆறுதல் சொன்னது! வந்து போகும் சொந்தம் யாவும் நிலைப்பதில்லை எனது வீழ்ச்சியிலும் உனக்கு வளர்ச்சியுண்டு! இழப்பின் வடுவை-நீ பாராதே.... தவித்திருக்கும்-மானிடர்கு இளனீர் கொடு...! உன் பிறப்பின் நோக்கை அறிந்துவிடு... அதனால் வடுவை பாராதே வானை நோக்கி-இன்னும் வளர்ந்து விடு..!
-
- 22 replies
- 3.4k views
-
-
உனக்குப் பிடித்த பாடல்களாலும் உன்னை படித்த நாட்களாலும் உன்னை வடித்த வரிகளாலும் திமிருற்ற எந்தன் ஏட்டை அழித்து விட்டு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன நம் காதல் கலைந்து விட்டதென்று காலையில் தினமும் கண்சிமிட்டும் பகலவனால் உன் துளிர்ப்புன்னகைச் சேமிப்பெடுத்து இன்னமும் ரசிக்கிறேன் சிலிர்க்கிறேன் இருந்தும் உன்னை விட்டு விலகி விட்டேன் சில்லென்று மெய் நனைக்கும் ஒவ்வொரு நீர்த்துளியும் உன் ஸ்பரிசயமாய் படர்ந்தன ஆனாலும் உன்னை மறந்து விட்டேன் உட்கொள்ளுமோர் பருக்கையிலும் நிராசையாகிப்போன நம் ஆசைகள் நளினத்தோடு எள்ளி நகையாடின என்றாலும் நாம் பிரிந்து விட்டோம் பார்வையில் பாசையில் தூண்டலில் துலங்கலில் நிறத்தில் மணத்தில் சுவையில் தூக்கத்த…
-
- 21 replies
- 3.4k views
-