கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வணக்கம் உறவுகளே இது ஒரு புதிய முயற்சி. இம் முயற்சிக்கு அனைவரது ஒத்திழைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இரண்டு வாரத்தில் ஒரு நிகழ்ச்சியாக தொடர்வதற்கான ஏற்பாடுகளில் களமிறங்கியுள்ளோம். யாழ்களத்தில நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நல்ல வாய்ப்பாக இப்போட்டி நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இப் போட்டி நிகழ்ச்சியானது முற்றும்முழுதாக இளங்கவிஞர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முயற்சியே என்பதை பெருமையுடன் அறியத் தருகிறோம். இதற்காக எமது இளங்கவிஞர்களின் ஆக்கங்களை இப்பகுதியில் எதிர்பார்க்கின்றோம்...! சரி நிபந்தனைக்கு வருவோம். அதவாவது இரண்டு கிழமைக்கு ஒருக்கா இங்கு ஒரு படம் அல்லது தலைப்பு தரப்படும். அத் தலைப்புக்…
-
- 105 replies
- 37.7k views
-
-
நன்றி முகநூல். நன்றி முகநூல். (படத்தில் அழுத்தி.. பெரிதாக்கியும் வாசிக்கலாம்.)
-
- 0 replies
- 2k views
-
-
இனி என்னிடம் கவிதைக்கான எந்த ஒரு இலக்கிய வார்த்தையும் மிச்சம் இல்லை என் வார்த்தைகள் பிண வாடையுடன் தான் இனி வரும் *************** எனது மகன் mc donalds MC chicken கேட்கின்றான் அவனது சகோதரங்கள் அரைவாசி எரிந்த உடலுடன் கிடக்கின்றார்கள் என்பதை அவன் அறிய நான் விடவில்லை தமிழ் குழந்தைகளின் இரத்தம் இனியது என்கின்றான் என் சிங்கள நண்பன் அவை உப்பு கரிப்பது இல்லையாம் நேற்றும் எதிரியின் பரம்பரை தமிழ் குழந்தையின் பிஞ்சு போன சதையின் வழி ஊறிய இரத்தத்தை குடித்த பின் சொன்னார்களாம் தமிழ் குழந்தையின் இரத்தம் அதிக யுத்த போதை ஊற்றும் என்று *************** என் மகன் pizza கேட்கின்றான் அவன் அறிய நான் விடவில்லை அவனின் அதே …
-
- 5 replies
- 1.4k views
-
-
எல்லாம் இனிதே நடக்கிறது. இன்னும் சில மணிகளில் முற்றிலும் மயானமாகிவிடும் புகை மண்டலத்தினுள்ளிருந்து சிங்கக் கொடி உயரும் நிலத்தில் வீழ்ந்து இறந்துகொண்டிருப்பவர்கள் ஏலவே இறந்துபோனவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
-
- 4 replies
- 1.2k views
-
-
வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம் மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக் கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் இன்றி ஆர்ப்பரித்தே எழுந்திடாமல் கூப்பாடு போட்டு இங்கே கும்ம…
-
- 2 replies
- 751 views
-
-
அன்பே அவசரமாய் உனக்கோர் கடிதம்.... இது காதலர் தினத்துக்கானதல்ல உன்னவள் உயிரோடு இருப்பதை உனக்கு தெரியப்படுத்துவதற்காக... உயிர் குடிக்கும் வெடிகுண்டுக்கும் ஓயாது ஒலிக்கும் மரண ஓலங்களுக்கும் இடையில் நடைப்பிணமாய் நான்... எனக்காக நீ தந்த காதல் சின்னங்களும் தினமும் முகம் பார்க்க நீ தந்த புகைப்படமும் இடம் விட்டு இடம் ஓடியதில் தொலைந்து போயின... இன்று உன்னைப்பற்றிய கனவுகளும் உன்மேல் நான் கொண்ட ஆழமான காதலும் மட்டுமே என் உடைமைகளாக என்னுடன்... நான் இங்கு உயிர் சுமந்தலையும் வெறுங் கூடாய் என்றும் உன் நினைவுகளுடன்...
-
- 7 replies
- 1.4k views
-
-
நியூயோர்க் ஜம்பரில் (NYjumper) லண்டன் ஸ்ரைலில் (style) அரைப் பென்ரர் (pender) தெரிய டெலிம் (denim) போட்டு.. பி.எஸ் 3 (ps3) வாங்க பிளாசா (plaza) போனேன்..! அங்கே.. பிற்சா கட் (pizza hut) பிற்சாவோடு (pizza) ஸ்ரைலா நிற்கையில் லப் ரொப் (laptop) அடக்கமாய் நீ இருந்தாய். திறி டி விசனில் (3D vision) உன்னைக் காண ஐ.ஆர் (IR) கொண்டு ஸ்கான் (scan) செய்தேன் எக்ஸ் பொக்ஸ் கேம் (XBox game)போல திறில்லாய் (thrill) இருந்தாய்..! உடனே.. புளூருத் (bluetooth) சிக்னலாய் என்னைத் தந்தேன் பதிலுக்கு.. மொபைல் போன் (mobile phone) கமராவாய் (camera) நீ என்னைப் பார்த்தாய். அதுதான் சாட்டென்று.. ஐபொட்(iPod) ஒன்று வாங்கியே அருகில் வந்தேன் எம்பி…
-
- 23 replies
- 3.5k views
-
-
இது தான் இறுதி தாக்குதல்.....[/color] நேற்று தான் உன் வீட்டில் வெடித்தது குண்டு சிதறின உன் உடலில் பல துண்டு... ஓடிய குருதி காய முன்னே ஓடி வருவாயா எல்லையில் நீ என்ன...??? வேதனை தான் உனக்கு அதற்க்காய் ஏன் புலம்புகின்றாய் பொன்சேகா...??? வாகரை என்ன உன் வாசல் படியா....??? எங்கள் வீட்டுக்கு ஏறி நீ வருவாயா வா... பந்தி வைக்கின்றோம் உனக்கு நீ முந்தி வா.... முறிந்து விழுந்த உன் முதுகெலும்பு எங்கே..?? சிதறிய உன் சதை துண்டெங்கே...?? தேடி எடுக்க இங்கு வாராயா வா.... சுற்று மதில் காவலுற்குள் சுற்றி நீ இருக்க சுற்றி வந்துன்னை சுழன்றடித்தோம் அதற்குள் மறந்தாயோ...??? அகந்தை கொண்டாயோ...??…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
-
[size=1]இது தான் காதலா ..........[/size] [size=4]மணமேடையில் சமய முறைப்படி கட்டிய தாலி கழற்றி எறியும் உலகிலே கணவன் இறந்ததும் உண்டியலில் போட்டு அடுத்த கணவனை தேடிபோகும் காலம் இங்கே இருப்பினும் இது போன்ற காதலும் வாழ்கிறது நாட்டிலே [/size] [size=1]படமும் பகிர்வும் [/size]
-
- 9 replies
- 1.1k views
-
-
இது துக்கமான விடயமல்ல என்றாலும் அறிந்திடுங்கள்... செம்மனி சுடலை என்றால் பேய்களும் வெருண்டிடும்... பக்கதிலேயே ஒட்டிக்கொண்டு சித்துபாத்தி சுடலை வேறு... யாழ்வரவில் பங்கர் வெட்டி தூங்குவதெல்லாம் செம்மனிக்குள்ளதான்... பார்சலில சோறு வரும் சாப்பிடுவதும் செம்மனிக்குள்ளதான்... பாடசாலை விட்ட பிறகு விளையாடுவதும் செம்மனிக்குள்ளதான்... காணாமல் போன எனது நண்பன் சேரன் உறங்குவதும் செம்மனிக்குள்ளதான்... நான் இந்திய ஆமியிடம் வாங்கிய அடி அதுவும் இந்த செம்மனிக்குள்ளதான்... நண்பா நீ உறங்கும் சுடுகாடு இப்போ சுடுகாடு இல்லையடா... ஈழமே சுடுகாடாகி நாள் ரொம்ப ஆச்சுதுடா... விடுதலைக்கான தேதி இன்னமும் கிடைக்கவில்லை... வீண்கதை பேசும் கூட்டமு…
-
- 11 replies
- 1.9k views
-
-
தமக்கென்றோர் மொழி தமக்கென்றோர் கலாச்சாரம் தமக்கென்றோர் வாழ்வு முறை தன்னை வடிவமைத்து தன் போக்கில் வாழ்கின்ற இனக் குழுமம் ஒன்றை இடையிட்டுப் பெருகிவந்த இன்னோர் இனம் வந்து இடித்துத் தன் காலுள் கண் முன்னே போட்டுக் கதறக் கொழுத்தையிலே அமுக்கம் தாளாமல் அதை எதிர்க்க அவ்வினத்தின் உள்ளே இருந்தொருவன் எழுதல் உலக விதி அவனின் பின் முழு இனம் திரண்டு மூச்சைக் கொடுத்திடுதல் எழப் போகும் ஓரினத்தின் இருப்பின் வரலாறு நீண்ட போராட்ட நெடு வெளியில் மண்ணுக்காய் மாண்ட வீரர்கள் மன வலிமை ஓர்மத்தை தூண்ட, துவளாமல் தொடர்கையிலே அவன் பற்றி இடைவெளியில் மனம் சோர்ந்து இடிந்தோர் விதையற்று வடிக்கின்ற விமர்சனங்கள் வாய் நா…
-
- 1 reply
- 598 views
-
-
கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த நிழல் படிந்து மறையும், வெயில் பட்டு தேகம் சிலிக்கும், மெல்லிய கூதல் காற்றில் பரவும். மாலை சரிகையில் _அந்தரத்தில் மழைப்பூச்சிகள் உலாவும் பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். நீர் மோதும் வரப்புகளில், கொக்குகளும் நாரைகளும் நடைபோடும் இரை தேடி, சிலநேரம் இடம் மாறும். வத்தாக்கிணறு மேவிக்கிடக்கும் வெள்ளம் மிதப்பவற்றில் எல்லாம் எரியெறும்புகள் ஏறித்தவிக்கும். காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள் நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில் விதைக்காத சில நிலத்தில் அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். பச்சைபிடித்து, அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில் அடங்கி இருக…
-
- 16 replies
- 1.4k views
-
-
காலமோ கண்ணீரோ வலிகளை போக்கவில்லை _மாறாக தாங்கவியலா வெறுமைகளை விதைத்துவிட்டது .... உருவான தேசத்தை உருக்குலைத்த உலகஒழுக்கு, உருவாக்கிய வரலாற்றை இரத்தக்கறைசுமந்தவதன் பக்கங்களை ஏதுமறியா அப்பாவிகளின் உயிர்எழுத்துக்களால் நிரப்பிக்கொண்டது ! குளங்களும் வாய்க்கால்களும் நெல்லாடும் வயல்களும் நெடுவென எழுந்த மரங்களும் புள்ளிக்குயில்களும் மயில்களும் புல்லினங்களும் இன்றில்லாமல்போக_ வன்னிமண் சுமந்துநிற்கிறது செத்தழிந்த செந்தமிழன் மேனியை ! வடுக்களை தடவிகொள்கிறோம்.......! அடுக்கடுக்காய் விழுந்த எறிகணைகளை, அடுத்தடுத்து விழுந்த உறவுகளை, அங்கங்கள் அறுந்துதொங்க அவலக்குரல்எழுப்பி மடியில் உயிர்நீத்த மகவுகளை, மீட்பென்று சொல்லிவந்…
-
- 1 reply
- 839 views
-
-
1 பேச வாயற்று போன இடத்திலிருந்தே வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன; விழுகின்ற வார்த்தையினால் கொதிக்கும் ரத்தத்தில் தான் - மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!! ----------------------------------------------------------------- 2 நாம் அணியும் ஒவ்வொரு சட்டைக்குள்ளும் நம்மை காக்கும் - மானமும் இருக்குமெனில் அதற்குள் - விடுதலையும் இருக்கும்!! ----------------------------------------------------------------- 3 வெள்ளைக் கொடியில் விடுதலை எல்லாம் - இனி வெற்று வாய்க்கு மெல்ல வெற்றிலை போல்; உடல் கீறி ஒழுகும் ரத்தம் நனைத்தேனும் சிவக்கட்டும் - இனி வெள்ளைக்கொடி!! ----------------------------------------------------------------…
-
- 1 reply
- 689 views
-
-
அழகு மலர்களின் மெளன மொழியில் காதல் கொண்டு.. விரியும் இதழ்களின் காந்தக் கவர்ச்சியில் கவர்ந்து..கள்ளுண்டு கலவி கண்டு கருத்தரிக்க உதவுகிறான் காதல் தூதுவன் இவன்..! அந்த விசயத்தில் இவன் ஒரு "பிளே பாய்"..! மானுட உலகம் மாற்றி அமைத்திட்ட இயற்கையின் நியதியில் கருத்தடை மாத்திரைகள் கருப்பைகளுக்கு விடுமுறை தர யோனிகளுக்கோ ஓய்வில்லாத உரசல்கள்..! உராய்வு நீக்கிகளுக்குக் கூட அங்கு பஞ்சம்.. கிழியும் அந்த உறைகளின் வியாபாரமோ இன்று உச்சியில்..! நிமிட நேர உள்ளக் களிப்பில் போதை கண்டு.. உடலில் சேரும் அந்த மாத்திரை நஞ்சுகளின் தாக்க அறிதல் இன்றி கூடிக் களித்திருக்குது மானுட சமூகம்..! பாவம் இவன் அதே.. மானுட உலகின் அரக்கச் சிந்தனையில் பூச்சி கொல்லி…
-
- 5 replies
- 1k views
-
-
* காதலும் வாழைபோல் வெட்ட வெட்ட வளரும். **திருமணம் நாணயங்களால் தீர்மானிக்கப்படுவதால் நாணயமான காதல்கூட செல்லாதகாசாகி விடுகிறது. ***நேற்று மலைமேல் கண்களால் பேசினோம் மறுநாள் மாதா கோவிலில் மனங்களால் பேசினோம் பின்பு கடற்கரை மணலில் கைகோர்த்து பேசினோம் இன்று தனித்தனியாய் வாழ்கிறோம் ஊமைகளாய். இதுதான் காதலா?
-
- 12 replies
- 1.7k views
-
-
-
- 23 replies
- 3.9k views
-
-
இதுவா உங்கள் நியாயம்? ------------------------- உண்மையற்ற பொய்மையுலகே உன்னிடம் நேர்மையிருந்தால் எங்கள் உறவுகள் அழிந்திருப்பார்களா? அழிக்கப்படுமிந்த நிலையிது சரியா? எண்ணெயிருப்பதால் போராளிகள் எதுவுமற்றதால் பயங்கரவாதிகள் என்னதானோ உங்கள் நியாயம்! திரிப்பொலி வீழ்ந்தது போராட்டமாம் ஈழம் மீட்பது பயங்கரவாதமாம் நியாயமற்ற உலகிடமல்லவா துடியாய் துடித்து நீதியைக் கோரி எங்கள் தமிழினம் உலகிலலைந்தது எங்கள் அலைவுகள் என்றோ ஒருநாள் உங்களைக்கூடச் சுட்டெரிக்கலாம் அப்போதுகூடச் சுரண்டலைப் பற்றியே உங்கள் சிந்தனை அளக்க முனையலாம் ஆதிக்க சக்திகள் நிலைப்பதுமில்லை அன்னியராதிக்கம் நிற்பதுமில்லை அதுவரை நாங்கள் ஓய்வதுமில்லை. ஓய்வொன்றுவரலாம் உலகமழிந்திடில் …
-
- 7 replies
- 1.2k views
-
-
இங்கே தொடராக இந்து மதத்தை இழிவு படுத்துவதன் நோக்கமாக திட்டமிட்டு இவர்களுடைய பரப்புரை தொடர்கிறது... இலங்கையில் உள்ள இந்து மதம் ஆட்சி செய்யவில்லை இந்துவாதம் ஆளவில்லை...இதனை தெளிவாக பலர் சுட்டி காட்டீயும் இந்த நாஸ்தீக வாதிகள் அல்லது அரைகுறை பண்டிதர்கள் புரிய முணையவில்லை... இந்தியா இந்துவாத அரசியலை இலங்கை அரசியலுடன் ஒப்பிடுவதானது ஏற்பபுடையதல்ல... எமது ஈழத்தமிர் ஆட்சியல் இந்துவாதம் தலை தூக்கவில்லை..ஆளவும் இல்லை... நீங்கள் மதங்களை இழியுங்கள் அது உங்கள் மடமை இந்த மதங்களை இழிப்வர்கள் அவர்களுடைய குடும்ப உறவுகள் எந்த மதத்தை சர்ந்திருக்கின்றன என்பதை புரிதல் வேண்டும்...ஒரு மதத்தில் உள்ள தவறுகளை சுட்டி கட்டுவது தவறல்ல மாறாக கடவுளே இல்லை மனிதனின் மேலொரு சக்த்தியி…
-
- 19 replies
- 2.9k views
-
-
இதுவும் ஒரு காதல் நானும் அவனும் சஞ்சரிக்கும் பொழுதுகளே கால நீட்சியாய் தொடர்கிறது. பிரம்மனே காணமுடியாத முடி அவன் அடி நான் ஈர்ப்பு என்பதை அறிமுகம் செய்தது நாங்கள் தான் நானும் அவனும் சஞ்சரிக்கும் பொழுதுகள் மணித்துளிகளாய் தொடங்கி மணிக்கணக்காய் மாறி யுகங்களாய் தொடர்கிறது. ஒரு மாலைப் பொழுது.. அவனைப்பார்த்தபடி நானும் என்னைப் பார்த்தபடி அவனும் பொழுது இரவை அழைக்க காற்று குளிரை நிறைக்க மரங்கள் இலைகளை உதிர்க்க அவன் என்னை நெருங்கி வருவதாய் உணர்ந்தேன் நெற்றி வியர்த்திட சத்தமிட்டுப் பல முத்தங்கள் பொழிந்தான் என் நிலவு காய்ந்த முற்றத்தில். குளிர்ந்து போய் நானும் ஒரு குட்டி நிலவ…
-
- 19 replies
- 2.7k views
-
-
-
- 1 reply
- 888 views
-
-
இதோ உங்கள் எல்லைகளில்.....! - சாந்தி ரமேஷ் வவுனியன் - வங்காலை அல்லைப்பிட்டி வரலாற்றில் புதுமையில்லை வழிவழியாய் தமிழரினம் வாழ்வழிந்த கதையிதுவே..... எண்ணுவதும் எழுதுவதும் அழுவதும் பின் எழுவதுமாய் தமிழர் கதை..... எத்தனையாண்டுச் சாபமிது.... குத்திக் குதறி குடலறுத்துக் கூரை முகட்டில் கயிறுகட்டி காட்சிப்படுத்திக் கலங்கடித்து நாளுக்கொரு பகுதி நம்மண்ணில் இந்த நாசக்காரர் கையில் நெஞ்சக் கூடறுந்து பிணமாக.... தடையிடுவோர் தலையெடுப்போர் தண்டனையென்போர் காதுகளில் இதுவெல்லாம் கேட்காத கிடைக்காத புரியாத செய்திகளாய்..... எல்லாம் புலியாக...... எங்கள் குழந்தைகளும் பலியாக.... குத்தியனின் கூட்டமொரு பக்கமதால் கொன்றொழிக்க..... மட்டுந…
-
- 5 replies
- 1.5k views
-
-
இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....! வெடிகுண்டுகளைச் சுமந்து சுமந்து மலடாகிப் போன மரண தேசத்தில் மறத்தமிழச்சியொருத்தியின் தாய்மை பறைசாற்றப்பட்டது அன்று.. "அக்கினி குண்டங்கள் மழையாய்ப் பொழிந்து எம் மக்கள் கூட்டம் மாண்டு மடியும் யுத்தக்களத்தில் ரத்தம் சிந்த இதோ ஓர் போராளி உதித்துவிட்டான்...! எம் குலப் பெண்களின் பெண்மையைக் கொன்ற ஆயுதம் ஏந்திய நாய்களின் சத்ருவாய் இதோ ஒர் போராளி உதித்துவிட்டான்....! போர்க்களத்தில் புதையுண்ட எம் இனத்தையும், மொழியையும் தோண்டியெடுத்து மகுடாபிஷேகம் செய்ய இதோ ஓர் போராளி உதித்துவிட்டான்......!" என பெருமிதிங் கொண்டவளாய் உணர்ச்சிப் பெருக்கில் தன் அறுபட்ட…
-
- 0 replies
- 1.4k views
-