Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நிலவின் வருகை: ஒரு இரவின் இடையில் உயிரின் கலசம் உடைந்தது உணர்வுகளின் ஆர்ப்பரிப்பின் உச்சத்தில் அவளை இறுகத் தழுவினேன் இறுக்கி அணைத்தேன் முத்தமிடா இடங்களை காதலின் உச்ச வரிகள் நிரப்பிச் சென்றன யுகங்களுக்கு அப்பால் இருந்து கால பைரவன் உயிரின் துளிகளை சுமந்து என்னிடம் தந்தான் என் தேவதையின் காதல் இடைவெளியை அந்த உயிர் துளிகளால் நிரப்பினேன் ஒரு மொட்டின் அசைவை தன்னில் என் தேவதை எனக்குச் சொன்னாள் ஆயிரம் கலவிகள் கடந்த வீரத்தையும் தன் நீந்தலையும் என்னுள் என் ஆண்மை தன்னைப் பற்றி வாய் வலிக்கச் சொன்னது 2 அந்த அறை எனக்கு கருவறை அந்த அறையில் ஒரு உயிரின் வருகைக்காய் காத்திருந்தேன் என் தாய…

  2. நீ வரும் வேளை வரை ! (போராளி அம்புலி எழுதிய கவிதை. மாவீரர் வாரத்தை முன்னிட்ட மீள்பதிவு இது.) 10வருடங்கள் முன்னர் ஒலிபரப்பான கவிதை. 10வருடம் கழித்து மீண்டும் இன்றைய காலத்திற்கு எற்ப இக்கவிதையானது வருகிறது. http://www.youtube.com/watch?v=kEyzd1Whmwk

    • 0 replies
    • 583 views
  3. தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் மாவீரர் ஈழத்துக்காக மாவீரர் தம் உயிர் தந்தார் மாவீரர் தமிழீழம் வாழ தம் இனம் வாழ பினமாகினர் அவர் நினைவு அது நம் இன நிமிர்வு களம் கண்ட அவர் சிரம் சாயவில்லை அவர் உடல் மட்டும் மண்ணுக்கு தமிழீழ உரமானது அவர் தந்த கொடி இது அவர் உயிர் தந்து பறந்த கொடி இது தமிழ் மானம் காத்த கொடி அவர் நினைவு உரமாக்கி புலிக்கொடி நாட்டி தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2014/11/tamileelam.html

    • 0 replies
    • 3.3k views
  4. அந்த ஆண்டவனும் ஊனம் தான் வழமையானது என் பிராத்தனைகளை அவன் கேட்பதை, நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், காது கேளாதவன். என் கேள்விகளுகெல்லாம் அவன் அமைதியாய் சொல்லும் பதில்களை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், வாய் பேச முடியாதவன். என் செயல்களில் உள்ள நல்ல வற்றை அவன் பார்ப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், பார்வை அற்றவன். என் பிரச்சனைகளை தீர்த்துவெய்க்க ஒவ்வொறு முறையும் அவன் கைகொடுப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், கைகள் இல்லாதவன். என் தனிமையான பயணங்களில் என் தோழனாய் என்னுடன் அவன் நடப்பதை நான் உணராவிட்டால், அந்த ஆண்டவன், கால்கள் இல்லாதவன். நாம் உணராவிட்டால், அந்த ஆண்டவனே ஊனமாகி விடுகிறான்!!! நம் ஊனமுற்ற நண்பர்களின் கெதி? ஆதரிப்போம் நம் உணர்வுகளால்!!!…

  5. என்ன பார்க்கிறீர்கள்? மஞ்சள் குளித்து மரமொன்று நின்றது பச்சைப்பசேலென பார்ப்பதற்கு குளிர்ச்சியாய் நிழல் தந்து நின்றது இப்படி மாறிவிட்டதே! பார்த்து நின்றேன். என்ன விகைப்பாய்ப் பார்க்கிறீர்கள்? நாங்கள் பருவ காலத்துக்கேற்ப கோலத்தை மாற்றி வாழுகிறோம். உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களோ நேரத்துக்கு நேரம் பணத்துக்காகவும் பதவிக்காகவும் குணமும் மாறுகிறார்கள் கொள்கையும் மாறுகிறார்கள் அவர்களைப் பார்க்காமல் என்னை ஏன் பார்க்கிறீர்கள்? வாயடைத்து தலைகுனிந்து வந்தேன். செண்பகன் 18.10.14

  6. பெரும்பாலும் கவிதை என எங்காவது தென்பட்டால், தலைதெறிக்க எதிர்புறம் ஓடும் வழக்கம் எனக்கு..! தற்செயலாக தினசரியில் படித்த இந்தக் க... வி... தை.... யை படித்தவுடன் குற்ற உணர்வால் மனம் சலனப்பட்டது. உங்களுக்காக இதோ..! யாரிடம் கொடுப்பது… மனு? கொல்லாமையை வலியுறுத்தி கொள்கைகள் பேசும் உங்கள் நாக்குகளால் – நான் வாரந்தோறும் புசிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. ஐந்தறிவு கொண்ட ஆடுகளைக் காட்டிலும் ஒரறிவு குறைவான என் இனத்தை அதிகமாக பலியிடுவது ஏன்? சுவையும் மிகுதி - விலையும் குறைவு ~ சுயநலம்தான் காரணம். நெற்பயிரை கொத்தவரும்போது என்னை நித்தமும் துரத்தியடிக்கும் மனிதர்களே… என் முட்டைகளைத் திருடும்போது மட்டும் உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? …

    • 3 replies
    • 652 views
  7. நாளைய உதயம் அதிகாலை வேளை அதன் கண்கள் இந்தக் குளிர்காற்றில் அழகாய் தெரிந்தன ஆழகிய வண்ணமாய் சிவப்பு,கறுப்பு,மஞ்சள் இயல்பாய் வந்து பதுங்கு குழியில் அரை குறை தூக்கத்தில் விழித்து இருக்கும் என் தாய்த்து வைக்கப்பட்ட துப்பாக்கி முனையில் அமர்ந்து சிறகசைத்து……………… அதன் வண்ணம் கொள்ளை அழகு என்னை என் குழந்தை பருவத்தையும் என் குடும்பத்தையும் கண்முன்னே கொண்டுவந்தது இன்னும் சூரியன் சுட்டெரிக்கவில்லை காய்ந்து போன புளுதி பூமியில் இன்னும் பனிச்சிவலைகள்;……………. நேற்றைய சண்டையில் என் தோழன் ஒருவன் வயிற்று காயத்துடன் கள மருத்துவமனையில் இன்னும் அந்த இரத்தம் புளுதியை கல்லாக்கி இருந்தது எங்களின் மனதை போல……………… தூரத்தே ஒரு முழக்கம்-நான் தளர்த்த…

  8. காலம் உலர்த்த மறந்த நீர் விரல்களில் ஒட்டிக் கொண்டது தன்னிலை பகிராமல்.. வலிந்த வெப்ப இழப்பினை உருவாக்கி, திரட்டத் தொடங்கியது ஆதிச் சிதைவுகளை, ஈமத்தாழிகளையும் வண்டல் படுகைகளையும் கிளறி, சூரிய நட்சத்திரங்களுடனும் கனியாத கருமேகங்களுடனும் உறவாடி, காற்றில் நெருப்பில் உப்பு நீரில் நுகர்ந்தும் எரிந்தும் மூழ்கியும், இழந்துபோன ஈரலிப்பை தேடி அலைந்தது.. வழியெங்கும்.. வர்ணக் கலவைகளாலும் நறுமணப் பூச்சுகளாலும் தரவேற்றிக் கலையாடிக்கொண்டிருந்தன சில. அதீத மோகத்துடன் காலத்தை கலவி செய்து கொண்டிருந்தன சில. ஆதியின் அன்புப் போர்வைக்குள் சிக்கிப் பிணமாய் கிடந்தன சில. இன்னும் சில கௌரவ வெற்றிடங்களில் எதிரோலியோடு மோதிச் சாவடைந்து கிடந்தன. …

  9. முகநூலிலிருந்து...

  10. இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ... கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் .. சன்னங்கள போகும் உயரம் அளத்தவர்கள் ... கந்தக பொதி சுமந்து வந்தோருக்கு பாதை காட்டியவர்கள் .. ஓடும் பாதையில் இருக்கும் தடைகள் அறிந்தவர்கள் ... கம்பி வேலியின் எண்ணிக்கை தெரிந்தவர்கள் ... பலமான இடத்தில் பலவீனம் தேடியவர்கள் .. தலைவன் சொல்லும் பாதையை எடுப்பவர்கள் .. வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ... தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ... குண்டை கழட்டி தன்னுடன் அணைத்தவர் ... எதிரி நெருக்கி திருப்ப எமனாகி போனவர்கள் .. தங்களின் பணியை தரவுடன் தந்தவர்கள் ... தலைவன் சொல்லுக்கு தலைசாய்த்து நின்றவர்கள் .. தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ... வெற்றி களிப்பிலும் இணையாது …

  11. என் தொப்பியையும், துப்பாக்கியையும் தொலைத்துவிட்டு... சட்டைப் பையில் மீதமாய் இருப்பது, என் வியர்வையின் ஈரம் ஊறிய பாண் துண்டு மட்டுமே... இங்கே அறைகள் சுத்தமாகவும், சுவர்கள் கதகதப்பாகவும் இருக்கின்றன நான் தேநீர் குடிக்கின்றேன், என் வாய் யாரையும் சபிக்கவில்லை கொஞ்சம் புகை பிடிக்கின்றேன் ஆம், இப்படித்தான் ஒருமுறை இருந்தது..... „நான் என் பயத்தை தொலைத்துவிட்டேன் இங்குள்ள தாங்க முடியாத வெக்கையால் எழும் பயம், ஒவ்வொரு குளிகாலப் பயத்தை நினைவுபடுத்திச் செல்கிறது அங்கே எங்கோ ஓர் இடத்தில் தொலைத்த என் பயத்தை நான் தேடவில்லை.... வயிறு நிறைய உண்டபின் உறங்க விரும்புபவர்கள் போல மரணத்தைக் காதலித்து வீழ்ந்துகிடந்த என் நண்பர்களைக் கடந்து செல்கின்றேன் ஆம்…

  12. நந்திக் கடலும், கிளாலி நீரேரியும், வற்றிப் போகாமல், வாழ்வழிந்த உறவுகளின் கண்ணீர், வடிந்தோடி நிறைத்திருக்க, வடக்கிலும், கிழக்கிலும். வசந்தம் தேடியவர்களின், வாடிப் போன முகங்களில், கோடுகள் மட்டும் விழுகின்றன! அரேபியாவின் பாலைவனங்களை, அழகு படுத்தும் 'பிரமிட்டுக்களாக'; அரைக் காசுக்கும் பயனில்லாத, அபிவிருத்தித் திட்டங்கள் ஆயிரமாய் அரங்கேறுகின்றன! அந்தக் காலத்து வாழ்வில், ஆடம்பரங்கள் இல்லை! அரை வயிற்றுக் கஞ்சியும், ஆனையிறவின் அசைவில்! ஆனாலும் வாழ்வில், அர்த்தம் இருந்தது! வளவைச் சுற்றி வர, வேலிகள் இருந்தன! விடி வெள்ளி கூட. அருகில் நெருங்கியது! யாருக்குத் தெரியும்? விட்டில் பூச்சிகளுக்கு, விளக்கு வைக்கப் பட்டிருகிறதென்று! …

  13. புதைத்த‌ இட‌த்தினிலே புழுதி அட‌ங்க‌வில்லை விதைத்த‌ வித்துட‌லில் குருதி காய‌வில்லை அத‌ற்குள் சிதைத்த‌ க‌ல்ல‌றையில் சிலிர்த்து நிற்குமெங்க‌ள் ஆவி ஈழ‌ம் மீட்டெடுத்து த‌மிழ் இன‌த்தின் மான‌ம் காக்க‌வென‌ மார்த‌ட்டி வா த‌மிழா எம் க‌ல்ல‌றையில் ச‌த்திய‌ம் தா தமிழா.. http://www.tnrf.co.uk/2010/11/05/%E0%AE%95%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E2%80%8C%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D/

  14. கார்த்திகை ஒளிர்கிறது மலரும் மலர்கிறது கண்ணீர் அரும்பிட கண்களில் படர்ந்தவர் நினைவுகள் மனதில் பெருகிட… மரணம் மண்டியிட மண்ணில் வீழ்ந்தோம் அன்னை மடிமீது அந்நிய ஆதிக்கம்… உயிர் மூச்சு நெருப்பாக்கி உற்ற கடமை செய்தோம்..! உறவுகள் எமக்கு உலகெங்கும்.. உணர்வுகள் எமக்குள்ளும் உயிர் வாழ… உங்கள் உரிமைக்காய் உயிர் கொடுத்தோம்…! உறங்கும் நாள் குறித்தோம் எங்கள் வாழ்வுக்காய் அல்ல… உங்கள் பிஞ்சுகள் உரிமை கொண்டாட தமிழன் நான் "தனித்துவமானவன்" எண்ணங்கள் காத்திடுங்கள்…! இன்னும்… உற்ற அன்னை உள்ளுக்குள் அழுகிறாள்... உருவில்லை என்றாலும் எங்கள் மூச்சுகள் உணருது..! உங்கள் மூச்சொடு இறுதி இலட்சியம் வென்றிடுங்கள் வீணடிக்காது விரைந்து வீர வரலாறு இறுதி அத்தியாயம் எழுத…

  15. Started by மாறன்,

  16. ஹலோவின் ஞாபகங்கள்..... சிவப்பும் மஞ்சளுமாய் காய்ந்து சிதறிக் கிடக்கிறது மேபிள் மரம் சொரிந்த உதிர்வுகளும் சருகுகளும் மழை விட்ட பின்னும் இலை சொட்டும் நீராய் ஞாபகத் தாலாட்டில் சாரல் அடிக்கிறது நினைவுத் தூறல்கள் சாளரத்தில் வழிகிறது கம்பிகளாய் மழைத்துளிகள் இதழ்கள் சிலிர்க்கின்றன ஈரமான ரோஜாக்கள் பேய் அலங்காரத்துடன் பிரியமாய் வாசல்களில் விதவிதமாய் மழலைகள் புத்தகப் பைகளுக்கு பதில் இன்று சொக்கிலட் பை இனிப்புப் பொதியுடன் இல்லம் திரும்பி வரவேற்பறையில் கடை விரித்து வகை வகையாய் பிரித்து பத்திரப் படுத்திய தம்பியைப் பார்த்து பெருமூச்சு விட்டான் பல்கலைக் கழகம் படிக்கும் அண்ணன் இன்னுமொரு முறை இப்படி இனிப்பு வாங்கி மகிழ மீண்டும் வருமா பள்ளிக் காலம்?

  17. அங்கோர் கூட்டம் தன்னில் அன்றொருநாள் பேசுகையில் ‘ஹல்துமுல்லை’ என்றாலும் ‘அழுத மலை’ இது என்றேன்.. ‘’கூனியடிச்ச மலை கோப்பிக் கன்னு போட்ட மலை அண்ணனை தோத்த மலை அந்தா தெரியுது பார்…’’ என்று அழுதமலை இதுவென்றேன். இன்று அழுதழுதே எழுதுகின்றேன்…. இன்னல் செய்ய பலருண்டு இன்செய்ய யாருமில்லை வன் செயல்கள் பல கண்டு நாம் வாடிய நாள் பலவுண்டு செயற் கைதானே எங்களை சீண்டி வந்தது இயற்கையே நீயுமா இன்று ஏம்மீது விழுந்தது.. வன்முறைகளலால் தானே பன்முறைகள் காவுகொண்டோம் இம்முறை இயற்கையும் கூட எங்களை விட்டுவைக்கவில்லையே.. ஏனிந்த விந்தை எதனால் இந்த சோதனை மலையே…! உன்னை உரமாக்கி, உரமாக்கி உயர்த்திய அண்ணனை.. உன்மீது வலம் வந்தே நிறம் மாறிய எங்கள் அன்னையை.. அள்ளிக் கொண்டு போக அத்தனை …

  18. என் ஆக்கங்களை எல்லாம் ஒரு புளொக்கில் இணைப்பம் என்று கூகிள் ஆண்டவரின் உதவியுடன் தேடும் பொழுது நான் எழுதி சரிநிகரில் வெளிவந்த கவிதை ஒன்று கண்ணில் பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியில் எழுதிய கவிதை இது இக் கவிதையை யாழில் இதுவரைக்கும் இணைக்கவில்லை என்று நினைக்கின்றேன் (சில பழைய கவிதைகளை முன்னர் இணைத்து இருந்தேன்). நூலகம் தளத்தில் இருந்து PDF வடிவில் இருப்பதால் அதனை படமாக மாற்றி இணைத்துள்ளேன். பழைய கவிதை என்பதால் 'இதெல்லாம் கவிதையா' என்று கோபிக்க கூடாது ------------

  19. உன் இருளுக்குள் என்னை இழுத்தெடுக்கிறாய்...! மூச்சு முட்டும்வரை... என்னை இழுத்தணைக்கிறது உன் வெறி...!! உன் பசிக்காக... என்னைப் பிய்த்துத் தின்னுகிறாய்! என்னை வெறியேற்றி... உன் வெறியை தீர்த்துக்கொள்ள முனைகிறாய்!!! அந்த ஆரவாரத்துக்குள்ளே.... என் அவலக்குரலும் அடங்கிப்போய்விடுகிறது! சத்தமின்றித் தொடங்கி... பேரொலியோடு ஆர்ப்பரித்து, சத்தமின்றியே அடங்கிப்போகும் சத்தங்கள்.... அப்படியே காணாமல் போய்விடுகின்றன...!!! அது மயக்கமா....? அல்லது மரணமா....?? புரியவில்லை... புரிந்துகொள்ள அனுமதியுமில்லை!!! எச்சங்கள் மிச்சங்களை கொஞ்சங் கொஞ்சமாய்... சத்தமின்றி அழித்துவிட்டு, மீண்டுமொரு இரவுக்காய் அலையும்... இராக்கால ராட்சசியே! உன் சிற்றின்பத்துக்காய், என் குருதி குடிப்பதை... எப…

  20. மழையை என்றால் குடையும் கூடவே .. வானம் என்றால் முகிலும் கூடவே ... மரம் என்றால் காற்றும் கூடவே .. நிலா என்றால் நட்சத்திரம் கூடவே .. ஒன்றை விட்டு இன்னொன்று தேடலில் .. என்னை விட்டு உன்னை தேடலில் .. உன் கண் கண்டபின் காதல் தேடலில் .. இருவரும் சேர்கையில் காமம் தேடலில் .. எல்லோரும் போல் உன்னை ரசிக்க .. எல்லோரும் போல் உனக்கு பொய் சொல்ல .. எல்லோரும் போல் உன்னை வர்ணிக்க ... எல்லோரும் போல் நான் புலவன் இல்லை .. என்னுள் மறைந்து இருந்து பார்க்கும் .. என்னுள் என்னை தேடும் காதல் .. உன்னில் மட்டும் வராமால் போகுமோ .. எம்மை நாம் ஆக்கும் காலம் வரும் .. அதுவரை நம் காதல் கவிதையில் .. வாழட்டும் ரசனையில் இருக்கட்டும் .. எம் குடில் நாம் அமைக்கு…

  21. கண்ணெதிரே காண்பவை கானல் நீராய்த் தெரிகிறது மனிதமற்ற மனங்களின் ஆசைகளின் ஓலங்களில் அகப்படும் உயிர்கள் உன்னதம் இழந்து உயிர்வதை பட்டு உழல்வதே வாழ்வாகி உடைந்து நொறுங்கி ஓட்டமுடியாததான ஓர்மத்துடன் ........... நகர்வின் அபிநயங்களில் நல்லவராய் முகம் காட்டி புறத்தே புழுவாய் பேய் முகம் காட்டும் பேடியராய்ப் பலர் பித்தர்களாக்கி எமை பரிதவிக்க வைத்து பரவசம் கொண்டிடுவர் வடிவங்கள் பலவெடுத்து வக்கணையாய்ப் பேசி வஞ்சப் புகழ்ச்சியுடன் வாசனை அற்றவராய் வன்மம் புடைசூழ வஞ்சனையே அவராய் வலிந்த விதியினதாய் வடமிழுக்க முன்னிற்பர் வகை தெரியா மனமே வாழ்வைப் புரிந்திட வண்ணங்கள் அல்ல வாழ்வு ...... மேடுகள் காடுகள் பகை நிறைத்த மாந்தர் பகிர்தலற்ற பாள்மணம் மிகைப்பட அனைத்தும்…

  22. Started by sathiri,

    விரல் இடுக்கில் வீழ்ந்து கிடக்கிறது உயிரும் உலகமும் .. கடைசித் துளியினை இரசித்து விட்டு இறந்து போகலாம் நா . தேடுகிறது ... பொங்கி வழியும் சம்பெயின் விம்மி நிக்கும் நீ ..

    • 5 replies
    • 739 views
  23. ஆள் ஆரவாரமற்று கிடக்கிறது வேப்பங்கிளையில் தூளி.., ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில் கிளைநிரப்பிய கொய்யா.., யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன யாழும் குழலும்.., விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர் இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி.., புள்ளதாச்சி குழிகளின் சாபம் முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி.., மழைநீரால் ஒளிந்து கொள்ளும் பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி.., சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ.., விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர் முகவரி தொலைத்த விடுமுறைகாலம்.., மழைநீரை வெறித்தபடி கவலைகளில் மிதக்கின்றன சில காகிதங்கள்.., புதுவர்ண பூச்சு அலங்கோலம் தூரிகை மாயம் சுவற்றில்.., மதிப்பிழந்த சில்லறை காசுகள் அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்.…

  24. உதட்டில் வழுக்கியதைக் கூட்டி விரல்களில் ஏந்திக் காற்றில் மிதந்ததில் ஏத்தினேன். மிதந்தது சுமந்ததன் நிறைவேறாத கனவோடு புணரமுயன்றதில் உருமாறிக்கொண்டது. மாறியதால் விழுந்திட மோகங்கொண்ட நட்சத்திரம் உடன் கட்டை ஏறியது, துகில் போர்த்தி வானம் அழுதது. கண்ணீரோடு கலந்து வேர்களால் நுழைந்து மலரொன்றில் உறங்கிட விளைகையில் ஒட்டிக்கொண்ட வாசனையால் வியாபிக்கத்தொடங்கியது எங்கும், யாரோ சிலரின் உரையாடலில் இதழ்களாய் பிரிபட இசையாகியது. இன்னும், சிலரின் சினத்துப்பலால் இறுகி உறைந்துபோனது. இப்போது உங்களிடம் வந்திருக்கிறது என்ன செய்யப்போகிறீர்கள்? * இது ஒரு முயற்சி. என்னனவில் நான் தோற்றுபோயும் இருக்கலாம். உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நண்பர்களே..

  25. இனிய இளகிய காலை ஒன்றில் மனவெளியில் மட்டற்று மயக்கங்கள் நீண்டு தெரியும் நெடுமரங்களோடு நட்பாய் நடக்கையில் நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில் நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும் நிழல் தந்த இலைகள் நெஞ்சமதை நெகிழ்க்கின்றன உதிர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க் கூடியிருந்த புலுனிகள் கூட்டம் கூடி ஒன்றாய் புல்லமர்ந்து கொற்றித் தின்றன எதையோ பின் கூடி எழுந்து கோலமிட்டபடி கண்ணிமை மூடித் திறக்குமுன்னே காணாமலும் போயின மீண்டும் அவை வந்து போகலாம் மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து மாயங்கள் செய்யலாம் காலம் மாறிக் கடும்பனி போனபின் குனிந்த மரங்கள் மீண்டும் குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம் நாம் மட்டும் தொலைந்த எம் இருப்பை எண்ணி தொலைவிலும் தெரியா துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.