கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இழப்போமா இல்லைப் பலி கொடுப்போமா....? (11.02.09 அன்று வன்னியில் எறிகணைக்குப் பலியான உறவின் நினைவில் ஒரு கவிதை) பாயுமில்லைப் படுத்துறங்க வீடுமின்றிப் பதுங்குளி வாசலிலும் பாதையோரச் சகதியிலும் உழன்ற பொழுதுகளில் உனக்கும் சாவுவரும் என்றெண்ணியிருப்பாயா ? நம்பிக்கையறுந்த வாழ்வு நாளையுனக்கு இல்லையென்று எப்போதாவது எண்ணியிருந்தாயா ? எங்களைப்போல உனது மகளும் மனைவியும் அம்மாவும் அக்காவும் மருமக்களும் பற்றித்தானே மனசுக்குள் அழுதிருப்பாய் ? சாவரும் நாளின் முன்னிரவு உனக்குச் சாவு நாளையென்று சகுனம் ஏதும் அறிந்திருந்தாயா ? போரின் கொடிய வாய்க்குள் போய்விடும் சலனம் ஏதும் தெரிந்ததா ? பாழும் பொஸ்பரஸ் குண்டுகள் உன்மேல் …
-
- 12 replies
- 2.5k views
-
-
எத்தனை ஆயிரம் கனவுகளைச் சுமந்து எந்தவித எதிர்பார்ப்புக்களுமே இன்றி... எமக்காக வீரகாவியமான வேங்கைகளே_உங்களுக்காய் என்னால் எதையுமே செய்யமுடியவில்லை_அதனால்... என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே! மரணத்திற்கு நாள்க் குறித்து மரணத்தையே முத்தமிட்ட... மாவீரர் பிறந்த மண்ணில் பிறந்தேன் என்று பெருமை கொள்ளும் என் மனது.. மாண்ட உங்களின் கனவான_தாய் மண் விடுதலைக்காய் உழைக்காது... வெற்றுவீரம் பேசும் சுயநலவாதிநான்_அதனால் என்னை மன்னித்து விடுங்கள் மாவீரர்களே! ஆயிரமாயிரம் ஆசைகள் கொண்ட சராசரி மனிதர்கள் தான் நீர் ஆயினும் அன்னை மண் தனைக் காத்திட ... அத்தனை ஆசைகளையும் துறந்த அதிசய பிறவிகள் நீர் தாயகக் கனவுக்காய் ஆயிரமாயிரம் உயிர்களை... …
-
- 12 replies
- 2.6k views
-
-
தாயகத்தில் ஓர் அன்புறவு என் தாயகத்தில் ஒர் அன்புறவு நான் இங்கு வந்தேன் அவளைத் துறந்து என் மனம் முழுதும் அவளின் இருப்பு நான் பாடுகிறேன் என்னை மறந்து. குங்குமப் பூப்போல் செவ்விதழும் - அதில் பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பும் பல கவிதைகள் பேசும் கயல் விழியும் - என்னை வாட்டுதம்மா அவை இன்றளவும். வானம்பாடிபோல் பாடுகிறாள் - அவள் தோகை மயில் போல் ஆடுகிறாள் - தென்றல் காற்று போல் என்னைத் தழுவுகிறாள் - நம் பிரிவினால் தினம் வாடுகிறாள். வானில் ஒளி விடும் விண்மீனாய் - என் மனதில் இனிக்கிறாள் செந்தேனாய் உடல் வாடிப் போனது ஒரு சருகாய் - நான் காலம் கழிக்கின்றேன் அவள் நினைவாய்.
-
- 12 replies
- 2.2k views
-
-
உலகைப் பார்த்து ரசிக்க வேண்டிய இவர்கள் தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள் ஆச்சரியத்தோடு.. வியப்புக்குறிகள் கூட விரல்களின் தொடுகையில்.. விடியலின் நிறம் கூட விடியாத நம் மனம் போல.. வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்.. விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம் இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..
-
- 12 replies
- 7.8k views
-
-
நாசாவுக்கு (NASA) வயது 50 தீண்டாக் கனிமமாய் திட்டுக்களில் கிடந்த போதும் தீண்டித் தீட்டி திடமாய் இலக்கு வைத்த போதும் தீயில் தவிழ்ந்து உருப்பெற்ற போதும்.. தீராத வேட்கை விடுதலைத் தாகம் எனக்குள். தீர்வுகள் தேடும் அக்னிக் குஞ்சாய் வானில் பறக்கிறேன் அண்டம் திறந்து தேடித் தருவேன் இருளுக்குள் என்ன..??! விடை. வானத்து மின்மினிக்குள் மிண்ணுவதென்ன வைரமா..??! வட்ட நிலவுக்குள் வாழ்வதென்ன வாலைக் குமரியா..??! செக்கச் சிவந்த செவ்வாய்க்குள் சிவப்பு என்ன தோஷத்தின் கோபமா..??! வளையங்கள் தாங்கும் சனிக்குள் சூத்திரம் என்ன சாத்திரமா..??! அருந்ததிக்குள் வாழ்வதென்ன ஆகாய நங்கையா..??! தேடப் போகிறேன் எட்டாத் தீர்வுகள்..! வானில் எப்…
-
- 12 replies
- 1.8k views
-
-
எண்ணுவது எல்லாமே எனக்கு தவறென்று புரிந்தும் என் எண்ணங்களை அப்பால் எறிந்து விட முடியவில்லை நினைப்பவை யாவுமே நினைவாகவே போய்விடுமோ - என் நினைவுகளுக்கு சமாதி கட்ட நிஜமாகவே முடியவில்லை மறக்க நினைப்பவை மறைக்க நினைப்பவை மனதை விட்டு என்றும் மறைய மறுக்கின்றன கல்லான என் மனம் கனியாமல் இருந்ததேடா கண்ணில் இருந்த காந்தம் கொண்டு அன்று கவர்ந்து விட்டயே என்னை இன்று
-
- 12 replies
- 2.1k views
-
-
-
தண்ணீர் தேசம் -I கவிஞர் வைரமுத்து கடல்... உலகின் முதல் அதிசயம். சத்தமிடும் ரகசியம். காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப் பள்ளம். வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்றுசெரித்து நின்றுசிரிக்கும் நிஜம். கடல்... ஒருவகையில் நம்பிக்கை. ஒருவகையில் எச்சரிக்கை. கடல்குடித்துக் கொண்டிருந்த கலைவண்ணன் மடியில்கிடந்த தமிழ்ரோஜாவை மறந்துபோனான். அவள் அழகின் நவீனம். சிறகுகளைந்து சுடிதார்கொண்ட சொப்பனதேவதை. ரத்தஓட்டம் பாயும் தங்கம் அவள் தேகம். பொறுக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித் தொடுத்த நேர்த்தியான சித்திரம். குமரி வயதுகொண்ட குமரி அவள். அவன் அழகன். இளைய அறிஞன். காதலிக்கும்போதும் கம்பீரம் குறையாதவன். என்ன யோசனை? என்றா…
-
- 12 replies
- 2.8k views
-
-
கணவன் இந்திய இராணுவத்தால் அல்லது கூட இருந்தவரால் காணாமல் போனவர் தம்பி கடற்தொழிலில் கடற்பீரங்கி சத்ததிற்கு பின் காணாமல் போனவன் மூத்தவன் செம்மனிக்காலத்தில் காணாமல் போனவன் இளையவன் முள்ளிவாய்க்காலுக்குப்பின் சரணடைந்து காணாமல் போனவன் மருமகளும்,பேரக்குஞ்சுகளும் அவுஸ்ரேலியாவிற்கான கடற்பயணத்தில் காணாமல் போனவர் இவள் வானத்தையும் கடலையும் மாறி மாறி பார்க்கிறாள்
-
- 12 replies
- 809 views
-
-
மவுனித்துப் போன குரலில், மனிதம் புன்னகைக்கின்றது! மண்ணுள் புதைந்த மனிதத்தின், கீறல்கள் விழுந்த உடலில், கோரப் பற்கள் கீறிய கோடுகள்! சீரற்ற மூச்சுக் காற்றுச், சேடமாய் இழுக்கையில். கோரைப் புற்கள் அசைகின்றன! பேரழிவின் பெரும் பசியில். ஆவிகள் கரைந்து போய். ஆயிரம் நாட்களாகி விட்டன! பறக்கும் பருந்துகள் மட்டுமா, பக்கத்திலிருந்த புறாக்கள் கூட. பங்கு கேட்கின்றன! பாவமென்ற வார்த்தைகளால் மட்டும், பசியாறிக் கொண்டிருக்கிறது மனிதம்! கோவில்கள் நிமிர்கையில், , கோபுரங்கள் வளர்கையில், காவியுடை தரித்தவர் கண்களில், கனலாய் எரிகிறது நெருப்பு! கழிந்து போகும் நாட்களில், அழிந்து போகின்றன தடயங்கள்! ஆனாலும் மனிதம் சிரிக்கின்றது. ஆழ்ந்த இருட்டின் …
-
- 12 replies
- 1.4k views
-
-
எங்கோ மின்சார முள்வேலிக்குள் யாரோ முகமற்றவர்கள் வதைபடட்டும். அதி புத்திசாலிகளின் முன்னெடுப்பில் ஆடல், பாடல், கொண்டாட்டங்களை, மண்ணுக்காய் மடிந்தவர்களின் வணக்க அரங்கின் பெயரால் வகைப்படுத்திக் கொள்வோம். தெருவெளிகளில் நின்று சிறுகச் சிறுகச் சொல்லிக் கதறிய இனத்தின் வேதனையை ஆழக்குழி தோண்டிப் புதைப்போம். மீள மீள வசதிக்கேற்ப வரலாற்றுப் பிழைகளை நியாயப்படுத்திக் கொள்வோம். வாதையில் உறவுகள் வருந்திக் கிடந்தாலும் வரும் வசந்த விழாக்களுக்கு நாமே வழிகாட்டிகள் ஆவோம். நாங்கள் புலம்பெயரிகள். புண்ணாக்குத் தின்றாலும் விண்ணாணம் பார்ப்போம். விளக்கங்கள் கொடுப்போம்.
-
- 12 replies
- 1.8k views
-
-
- சீமை வாழ்கை : அன்னம்மக்கா ... பொன்னம்மக்கா... கச்சிதமாக சீமை வாழ்கையை சித்தரிக்கும் கவிதைத்தன்மை நிறைந்த நல்ல பாட்டு, நல்ல அமைதியான இசையமைப்பு ...!! யார் எங்கே பாடினாரோ தெரியாது ? தெரிந்தால் சொல்லுங்கோ ... யாழ் களத்தில் தொலைஏற்றவோ இணைக்கவோ முடியவில்லை ... !? http://xa.yimg.com/kq/groups/13723470/1689555141/name/Anammakka அன்னம்மக்கா ...பொன்னம்மக்கா வை தொலை எற்றிய jaffna_centr, yahoo group - விஜயநாதனிற்கு நன்றி -
-
- 12 replies
- 2.9k views
-
-
மன்னிப்பாயா...மறுப்பாயா உன் தூக்கம் எனக்கு விளையாட்டு இல்லை நீ தரும் அன்பும் எனக்கு விளையாட்டு இல்லை இதை நீ தவறாக புரிந்தது ஏனோ??? உன்னிடம் நான் என்றும் பாசமாவே இருப்பேன் என்று சொல்வது எல்லாம் கவிதைகளில் மட்டும் தான் என்று நினைத்துவிட்டாயோ நீ பாடு பட்டு வேலை செய்வதும் நான் அறிவேன் தூக்கமின்றி உழைப்பதும் நான் அறிவேன்...ஆனால் உன் தூக்கத்தை நான் கெடுக்க நினைத்ததுமில்லை நினைக்க போவதுமில்லை... தவறாய் ஒருபோதும் எண்ணவே வேண்டாம் நான் ஒன்றும் நீ தரும் இடத்தை விளையாட்டாக நினைத்ததில்லையடா... ஏன் இப்படி எல்லாம் சொல்லி நோகடிக்கின்றாய்...உன்னில் நான் வைத்திருப்பது ஆயுள் வரை யார் மறுத்தாலும் மாறாத மாற்ற முடியாத …
-
- 12 replies
- 3.6k views
-
-
ஊருக்கு நான் போகவேணும் ஊருக்கு நான் போகவேணும் என்ர கடலில காலை நனைக்கவேணும் வெள்ளை மணலில படுத்து கிடக்கவேணும் அம்மான்ர மடியில நித்திரை கொள்ளவேணும் தம்பியை தோளில தூக்கவேணும் தங்கச்சியை கைபிடிச்சு நடக்கவேணும் மாமியின்ர வீட்டையும் போகவேணும் என்ர மச்சாளையும் ஒருக்கா பாக்கவேணும் முருகன் கோயிலுக்கு திருவிழா செய்யவேணும் கடலைக்கொட்டை சோளம் வாங்கி தின்னவேணும் சைக்கிள்ள சுத்தி திரியவேணும் ஊரில கனபேரை சந்திக்கோணும் எங்கட பொடியளோட கும்மாளம் அடிக்கவேணும் எங்கினையும் அவங்களை கூட்டிக்கொண்டும் போகவேணும் பள்ளிக்கூடத்துக்கும் ஒருக்கா போகவேணும் எனக்கு படிப்பிச்ச ரீச்சரையும் சந்திக்கோணும் கொக்குப்பட்டம் கட்டி ஏத்தவேணும் நார் க…
-
- 12 replies
- 1.2k views
-
-
வன்னிக் குழந்தைகளின் கதறல்கள் தாய் நாட்டில் உதவி வேண்டி நிற்கும் உறவுகளுக்காய்...... அனைத்துலகம் எங்கிருக்கும் எம் அனைத்துலக உறவுகளே ! எங்கள் வன்னியின் அவலங்களை இன்று உலகமெங்கும் அறிவீர்கள் வாழ்விழந்து போன எங்கள் நிலைமையையும் அறிவீர்கள் இன்று மரங்கள்தான் நம் வீடு மணல்தரை தான் நம் படுக்கை காட்டு மிருகங்கள் தான் நம் உறவு குண்டுபோடும் கழுகுகள்தான் நம் எதிரி. எமக்கு வீடு இருந்தும் எம் வாழ்வை காட்டில்தான் வாழ்கின்றோம் காரணம் புரியவில்லை கண்டபடி ஓடுகின்றோம். காலையில் எழுந்தபின்னர் தண்ணீர் தான் நம் உணவு அதன் பின்னர் பசிக்காய் அழுவதுதான் நம் கவலை. பசியின் கொடுமையினால் பழைய உணவை உண்டுவிட்டு புசித்த பின்னர் சிலவேளை …
-
- 12 replies
- 1.7k views
-
-
அன்பே விழியாக நான் இருக்க இமைகளாக நீ வர வேண்டும் மலராக நான் இருக்க மணமாக நீ வர வேண்டும் கடலாக நான் இருக்க புயலாக நீ வர வேண்டும் ஒவியமா நான் இருக்க ஒவியனாய் நீ வர வேண்டும் மேகம்களாய் நன் இருக்க மழயாக நீ வர வேண்டும் வானவில்லாய் நான் இருக்க நிறங்களாய் நீ வர வேண்டும் உன் நினைவகா நான் இருக்க உயிராக நீ வர வேண்டும் சுஜி நண்பி எழுதினது
-
- 12 replies
- 2k views
-
-
பனித்துளியை சூடாக்கும் கண்ணீர்த்துளிகள்.... மாவீரர் அஞ்சலிக் கவிதை..... கவிதை - இளங்கவி.... காலச சுவடுகளில் என்றும் கால் பதித்து விட்ட கார்த்திகை வந்ததுமே... கடும் பனியும் மறந்துபோச்சு.... காலகளை மூடிவிடும் கடும் மழையும் மறந்து போச்சு..... கனவுகளை ஆட்சி செய்யும் காதலும் மறந்து போச்சு..... கவலைகளைத் துறந்து.... காதலை மறந்து... காடு மேடெல்லாம் திரிந்து கடும் பசியும் தாங்கி - தமிழரின் கனவுகளை நினைவாக்க கஸ்ரங்கள் மட்டுமே அனுபவித்த காவிய நாயகர்தாம் என் நினைவில்...... கடலிலும் வெடித்தான்.... கட்டாம் தரையிலும் வெடித்தான்.... கடல் நீர் அருந்தி மட்டும் காவியங்கள் பல முடித்தான்..... காரிருளில் நடைபயின்று -எதரி…
-
- 12 replies
- 1.5k views
-
-
பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள் o தீபச்செல்வன் ------------------------------------------------------------------ (இன்னுமின்னும் அறியாத சேதிகள் அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன) நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குளிலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சகோதரியே! உன்னை உரித்து சிதைத்தவர்களின் கைளிலிருந்து எங்கள் காலம் நீண்டுகொண்டிருக்கிறது. கண்டெடுக்கப்படாவர்களின் சடலங்களுக்கு என்ன நேர்ந்திருக்குமென்று தலைகளை இடித்தழும் தாய்மார்களுக்கு இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம் எண்ணிக்கையற்ற முனைகளில் நடந்த கதைகளை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. …
-
- 12 replies
- 3.2k views
-
-
சேர் , உங்கள் zoom அழைப்பு கிடைத்தது ஆனால் passcode தான் கிடைக்கவில்லை. பணம் கட்டினால் தான் அது கிடைக்குமாமே, பகலுணவுக்கு வழியில்லை பாதை வியாபாரம் செய்யும் அப்பா பாதுகாவலனுக்கும் பயந்து பயந்து மறைந்து மறைந்து செய்யும் வியாபாரம் ஒரு வேளை உணவுக்கே போதாதாம் சேர். ஆயிரம் ரூபா தேட பாதையில் பல பாயிரம் ஓத வேண்டுமாம். ஒரு நாளில் அதை உங்களுக்கு வைப்பிலிட ஒரு கிழமை எமது அடுப்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமே சேர். நான்கு சகோதரர்கள் நாம் டேட்டா போடுவதற்கே எமது அப்பாவின் பல பாட்டாக்க…
-
- 12 replies
- 1.3k views
-
-
சமத்துவ உறவொப்பந்தம் ----------------------------------------------------------- வாசுதேவன். பெண்ணே, உன்னில் எத்தனை விழுக்காடு ஆணுண்டென்பதையும் என்னில் எத்தனை விழுக்காடு பெண்ணுன்டென்பதையும் அளவிடுவதற்கு இன்னமும் உயிரியற் கருவிகளேதும் கண்டுபிடிக்கப்படவில்லையென்
-
- 12 replies
- 2.4k views
-
-
ஓவியங்கள் செந்-தமிழ் ஓலைக்காவியங்கள் உள்ளத்து உணர்வுகளின் உன்னதக் கோலங்கள் கண்கண்ட கவிதைகளை கவர்ந்திடும் வண்ணமிட்டு கலை நயம் கலந்து காட்சியாக விரியவிடும் எண்ணற்ற சிந்தனையை-மன எண்ணத்தில் தீட்டி விடும் மாசற்ற புதுமை மொழி மண்ணுலகில் மகிமை வரி பட்டறிந்த பண்டிதனும் பாரறியா பாமரனும் பார்த்து அறியும்-இனிய பன்னாட்டு தொடர்பு மொழி எதுகை மோனையில்லை எடுகோள் எதுவுமில்லை தூரிகை தூவிவிடும் தூய்மையான கவிதை
-
- 12 replies
- 9.9k views
-
-
நான் நானாக இல்லை இரவும் பகலும் மல்லுக்கட்டி முகம் சிவந்த வேளையில் உனைநான் கண்டேன் பைங்கிளி உனைநான் கண்டேன் . செவ்வரியோடிய உன் கயல் விழிப் பார்வையில் கலங்கித்தான் போனேனடி..... குவிவடிவாய் உன் புருவத்திலும் குழிவிழும் உன் கன்னக் கதுப்பிலும் , சின்னஞ்சிறு உதட்டு வெடிப்பிலும், பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கியே போனதடி .... நால்வகைப் பெண்ணும் ஓர் உருவமாய் வந்தாய் சிந்தை குழம்பியே சீர்கெட்டுப் போனேன் அடி பைங்கிளியே ..... உன் குதலை மொழி எப்போ கேட்பேன் ? உன்னிதழை என்னிதழ் பற்றுவதெப்போ ?? மொத்தத்தில் , நான் நானாக இல்லை........... கோமகன்
-
- 12 replies
- 1.3k views
-
-
குள்ளமானவர்களே.. குறுக்கு வழியிற் செல்பவர்களே... கதிரவனை நெஞ்சில் சுமந்து விண்ணில் பயணிக்கும் என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனக்கு சுற்றி வளைத்து பேசத் தெரியாது... என்னால் உள்ளொன்று வைத்து புறமொன்று சொல்லவும் முடியாது.. நான் நடக்கும் பாதை நேர்கோடு... வானுயர்ந்த சோலை... நீண்ட தென்னை, பனைகமுகு... தொடுவானம்... இவை எந்தன் விம்பங்கள்! கண்களில் ஒளி.. கைகளில் உறுதி... நான் நெடுக்காலபோவான் வந்திருக்கின்றேன்!
-
- 12 replies
- 2.1k views
-
-
வானை தொட்டு விடத் துடிக்கும் தென்னை மரங்கள் தென்னையுடன் போட்டியாக பனைமரங்கள் குச்சொழுங்கையை எட்டிப் பார்க்கும் வேப்ப மரங்கள் குச்சொழுங்கையின் இரு மருங்கும் கோலம் இடும் அறுகம் புற்கள் மெல்லத் தடவி வரும் இளம் தென்றலுக்கு நாணி அசைந்தாடும் கோரைப் புற்கள் மொத்ததில் பச்சை சேலை உடுத்த அழகு தேவதை எமது ஈழம் இன்று மெல்ல மெல்ல வனப்பு.. இழந்து சுடுகாடு ஆகிறது! துளசி
-
- 12 replies
- 2.1k views
-
-
* காதலும் வாழைபோல் வெட்ட வெட்ட வளரும். **திருமணம் நாணயங்களால் தீர்மானிக்கப்படுவதால் நாணயமான காதல்கூட செல்லாதகாசாகி விடுகிறது. ***நேற்று மலைமேல் கண்களால் பேசினோம் மறுநாள் மாதா கோவிலில் மனங்களால் பேசினோம் பின்பு கடற்கரை மணலில் கைகோர்த்து பேசினோம் இன்று தனித்தனியாய் வாழ்கிறோம் ஊமைகளாய். இதுதான் காதலா?
-
- 12 replies
- 1.7k views
-