கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
என்னை விட்டு நீங்கிய என் சுவாசமே .. உன்னை விட்டு நான் நீங்க வில்லை.. உன்னைவிட்டு நான் நீங்கினால் .. என்னை விட்டு நீங்கிவிடும் எந்தன் உயிர் தென்றலுக்கு தெரியும் வாசனை மீது மலர் கொண்ட நேசம் கடல் நுரைக்கு தெரியும் கடல் மீது அலை கொண்ட நேசம் முகிலுக்கு தெரியும் மேகம் மீது வானவில் கொண்ட நேசம் என் கவிதைக்கு தெரியும் நான் உன் மீது கொண்ட நேசம் - அனால் உனக்கு மட்டும் என் நேசம் புரியாமல் போனதேன் என் விழியன் பார்வையில் கலந்தவள் நீ என் இதயத்தின் துடிப்பில் உறைந்தவள் நீ என் உடலின் உயிரோடு சேர்ந்தவள் நீ என் நாடி நரம்புகளில் உணர்ச்சியாய் வந்தவள் நீ என் சுவாசமாக என்னுள் நுளைபவள் நீ என் பாதங்கள் செல்லும் பாதையாய் தொடர்பவள் நீ என் நிழலாக என்னோடு …
-
- 17 replies
- 11.1k views
-
-
வான வில்லின் வர்ணங்கள் வளைத்து எண்ணம் என்னும் வண்ணம் எடுத்து கற்பனைத்தேன் கலந்து காரிகை உனைக் கிறுக்க தூரிகை நான் எடுத்தேன் காவியம் பேசும்- அவள் கண்கள் வரைய கரு முகிலை தூதுவிட்டு கருவிழியாக்கினேன் சிறகடிக்கும் சிட்டுக்குருவியின் இறகை- அவள் இமைக்கு மடலாக்கினேன் வளர்ந்து வரும் வளர் பிறையை வளைத்து-அவள் வதனத்தில் வைத்தேன் இளம் தளிர்-அவள் இதழ் வைக்க இதழோடு-பூ இதழ் வைத்தேன் கார் காலத்து கரும் இருளை காதல்-கள்ளியின் கூந்தலாக்கினேன் தேன் நிலவு தேவியை தேடி-பிடித்து திருமகளின்-திரு திலகமாக்கினேன்.
-
- 17 replies
- 2.4k views
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
என்னதான் பெரிதாய் .. ஒப்புக்கு ஜனநாயகம் பேசு........ என்னமோ பெரிதாய் ஊரோடு ...... சண்டைக்கு வா.! என்னதான் பெரிதா... ஏதும் வேசம் போட்டாலும்....... தென்னை ஓலையில் வளர்த்திய...... உன் தங்கை உடல் பார்த்து அழுவாய்.....அழுதே ஆவாய்..! கன்னமது சுட்டு கொண்டு ஓடி ........ உன் கரங்களில் பட்டு தெறிக்கும்....... கண்ணீரில்....... எழுத்துக்கள் வாசி........! குளிர் காய நினைத்து...... வீட்டை எரித்தாய்....... குப்பி விளக்கை அணைத்துக்கொண்டு...... கூரைமீது படுத்தாய்..! பற்றி எரிகிறது பார் - இப்போ....... நீ சுமந்த பாவம் ........ உன்னை கொல்லும்......! நாம் நேசிக்கும் பூமி....... நாமிருக்கும் வரை- என்றும் உன்னை வெல்லும்! 8)
-
- 9 replies
- 1.8k views
-
-
உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும் உன் கரையில் மணலையள்ளி வருடியபடி வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்! கடல் மீண்டும் கரைதொடும்... நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன், வெற்று வானத்தை பார்த்தபடி... சுடுமணலில் நான்!
-
- 4 replies
- 1.7k views
-
-
கவிதைகளால் மலர் தொடுத்துன் கழுத்தினிலே மாலையிட்டேன் கனிவான வார்த்தைகளாலுன் காதுகளில் இசை படித்தேன் காதல் மேவ காரிகையுன் கனியிதழில் இதழ் பதித்தேன் காலமெல்லாம் நீயே என்றுன் கரம் பற்றி நான் இருந்தேன் செந்தமிழில் செல்லமா யுனை செல்லக் கண்ணம்மா என்றேன் உந்தன் செல்லக் குறும் பையெல்லாம் உயிரோ டணைத்து உவகை கொண்டேன் உந்தன் தூக்க சந்தம் கேட்டு எந்தன் தூக்கம் நா னடைந்தேன் ஜென்ம மெத்தனை யெடுத்தாலுமினி உன் னோடு தான் வாழ்ந்திடுவேன்
-
- 8 replies
- 952 views
-
-
உன்போல் ஆயிரமாயிரம் தங்கைகளை அக்காக்களை தின்னக் கொடுத்துவிட்டு அக்கிரமம் இறுதியில் பெண்ணுடலையே தின்னும் ஆதிக்கம் அதற்கு நீயும் விலக்கில்லாமல் ஆழ்கடல் நுனிமட்டும் அலைகிறதுன் ஆத்ம ஓலம்…… கண்ணுக்குள் நிறைந்த சிரிப்பும் கதைசொல்லும் பொன்முகமும் பூவினும் இனியதாய் பொலிந்த உன் பெண்மையும் நாயினும் கடையதாய் உனக்கு நடந்தவைகள்…… நெஞ்சமெல்லாம் நெருப்புப்பற்ற நீ சிரிக்கும் கொள்ளையழகின் தூய்மை அலங்கோலமாய் அணுவணுவாய் படம்பிடித்து மகிழும் காட்சியாய் நினைக்க நினைக்க மூழும் தீயின் எச்சம் நெஞ்சுக்குள் மட்டுமே புதைகிறது…… தீயெரித்த கண்ணகியின் கோபத்தை கதைகளில் தான் படித்தோம். ஆனால் எங்கள் சக்திகள் உங்களின் சாதனைகளை சமகாலத்தில்…
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 16 replies
- 2.9k views
-
-
தமிழனத் தலைவனவர் தமிழகத்தில் தானின்று அமிழ்தெனுந் தமிழுக்கே அவப்பெயரை தந்ததுமேன்? பாரே யொரு பதிலை பார்த்துக் கண்பூத்திருக்க யாரோ சொன்னதென உபவாசம் திறந்திருந்தார் பாரிலுள்ள பைந்தமிழர் பாரிய பேரணிகள் உரியமுறை உணவருந்தா உபவாசம் உறுத்தியே மருவிநிற்கு வுலகினையே கருப்பொருளைக் கேட்டுநின்று இருபத்தோர் நாளாய் இழைத்துக் கிடக்கையிலே கண்டனமும் எச்சரிப்பும் களிகூர்ந்த பேச்சுக்களும் ஆண்டபேர் நாடுகளும் ஆற்றுவது புதுமையிலை இயலான கவிநடையில் இயற்றுகின்ற வசனமதால் அயலாகும் நாடாகி அழித்தொழிக்க அரவணைக்கும் நடுவண் ணரசபையின் பொய்வார்த்தை புரியாமல் கூடும்குடும்பத்தார் குதூகலிக்க கைவிட்டீர் பெருமிதமாய் கூக…
-
- 0 replies
- 799 views
-
-
உமிழ்ந்தது தப்பு... குடு குடுப்பை காறனவன் குழிக்காதே எண்கிறான் பர பரப்பில் வந்துயவன் பகுத்தறிவு என்கிறான்... மூடர்கள் நீர் போலும் முளையில் ஏதுமில்லை ஏனென்று கேளாது ஏற்றீரோ நீரும்..? ஆலயங்கள் தோறும் ஏறி ஆண்டவனை வணயங்கியவன் இன்று வந்தேனோ இல்லை சாமி என்றானோ...?? காலயிலே நீராடி காசிக்கு மாலையிட்டு ஊச்சி மலையேறி உண்ணா நோன்பிருந்தான்.. பின்னாளில் வந்தேனொ பிதற்றல்கள் செய்தான்..? இன'னாளு வரைக்கும் இதையென் சொல்லலயோ...?? தாசி மகளுக்கு தரணியிலே விலை வைத்தான் இத்தனை இழியாரையோ இன்று பெரியார் என்பீர்...?? கட்டி தளுவி கலவியதை நீயாடு பிள்ளையதை வேண்டாமென்று பிதற்றிய செம்மலிவர்... இன்னாரின் இலட்சியத்தை ஏ…
-
- 2 replies
- 970 views
-
-
என் கண்களே எனக்குப் பிடித்த ஒளிப்பதிவுக் கருவி காரணம் அதற்கு உன்னை மட்டுமே பிடிக்கத் தெரியும் * என் பல முத்தங்களுக்கு சில முத்தங்களையே திருப்பித் தந்திருக்கிறாய் நீ உன்னை என்னிடம் இழப்பதற்காகவா முத்தக் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய் * கவிதை என்று யார் கேட்டாலும் உன் பெயர் சொல்வேன் உன் பெயர் என்னவென்று எவர் கேட்டாலும் நான் எழுதாத காவியம் என்பேன் * என்னை எழுத வைத்தவள் நீ என்றாலும் நான் கவிஞனானது உன்னை அழைத்து அழைத்துத்தான் * உன்னைப் பற்றி எழுத நினைத்தபோதெல்லாம் எழுதிக் கொண்டேயிருந்தேன் உன்னை விட எழுத நினைத்தேன் எழுதுவதையே மறந்துவிட்…
-
- 2 replies
- 933 views
-
-
உயிரடங்கிய சிறு பறவை - நல்ல சமாரியனின் நாட்குறிப்பு - கவிதைகள் உயிரடங்கிய சிறு பறவை கவிதை: பாப்பனப்பட்டு வ.முருகன், ஓவியங்கள்: ரமணன் அதிகாலை நடைப்பயிற்சியில் நெடுஞ்சாலையோரம் காணக்கிடைத்தது விரைந்த வாகனம் மோதி விழுந்துகிடந்த சிறு பறவையொன்று. இதயம் படபடக்க இரு கைகளிலும் அதை ஏந்திக்கொண்டேன். அதற்காகவே காத்திருந்ததைப்போல் அடங்கிப்போனது அதன் உயிர். கனத்த மனதோடு கைவிரல்களால் மண்பறித்து போதுமான அளவில் அகழ்ந்தெடுத்த குழிக்குள் அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பினேன். செந்நிறப் பிசுபிசுப்புப் போக கைகளை நீரால் அலசிய பின் மென்சோகத்தையும் நுண்வலியையும் கடந்து வரவென்று சிவப்பு மசிப் பேனாவால் கவிதையொன்றை எழுதி முட…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாயாடியாய் இருந்தும் அமைதியாய் வந்தமரும் புதிய மாணவிபோல் வந்தமர்ந்தாய் என் இதய வகுப்பறையில் நீ. * என் முதல் வரி நீ காதலித்தையும் மறுவரி நீ கைவிட்டதையும் எப்படியாவது காட்டிக் கொடுத்துவிடுகிறது என் கவிதைகள் * பலரோடு இருக்கையிலும் தனிமையே உணர்கிறேன் நீ இல்லாததால் * உனை மாதத்தில் மூன்று நாட்களில் என் மடியில் தாலாட்டியதுதான் ஞாபகம் வருகிறது தாய்மார்களை காணுகையில் * வானவில்லாய் நீ வந்து போனாலும் வானமாய் காத்திருக்கும் என் கவிதைகள் எப்போதும் உனக்காக -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.6k views
-
-
பல்லவி உயிராய் என்னை வளர்த்தவள் நீ கருவில் என்னை சுமந்தவள் நீ நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன் கனவுகள் சுமந்தே வாழுகின்றேன் பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய் பூவாய்த் தானனே எனை வளர்த்தாய் அம்மா...அம்மா...அம்மா...அம்மா... இடையிசை ராப் பாடல் குரல்: சையின் சுதாஸ் (நோர்வே) சரணம் 1 கடவுளை கண்முன் பார்த்தது இல்லை உன் வடிவில் நான் பார்த்தேன் உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை உன் விழியில் நான் பார்த்தேன் உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ ஆயிரம் உறவின் வாசல் நீ அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன் நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான் உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான் உயிராய் என்னை வளர்த்தவள் நீ …
-
- 4 replies
- 1.3k views
-
-
உயிரின் வலி அறிவாயோ மானிடா ஊனுருக்கி உடல் கருக்கி உள்ளனவெல்லாம் மறக்கும் உயிரின் வலி அறிவாயோ உள்ளக் கருவறுத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிர் வதைத்து உணர்வு கொல்லும் உயிரின் வலி அறிவாயோ எதுவுமற்று ஏதுமற்று எங்கெங்கோ மனம் அலைத்து ஏக்கங்கள் கொள்ளவைக்கும் உயிரின் வலி அறியாயோ எதிரியாய் எமை வதைத்து எட்டி நின்றே வகுத்து எல்லையில்லா துன்பம் தரும் உயிரின் வலி அறியாயோ எண்ணத்தை எதிரிகளாக்கி எல்லையற்று ஓடவைத்து என்புகள் மட்டுமே ஆனதாய் என் உயிரின் வலி அறியாயோ சரணடைந்து சரணடைந்து சர்வமும் இழக்க வைத்து சக்தியெல்லாம் துறந்து நிற்கும் உயிரின் வலி அறியாயோ மானிடா உயிரின் வலி அறிவாயோ
-
- 2 replies
- 634 views
-
-
உயிருடன் இறந்து விட்டேன் ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!!sms கவிதை ///////சின்ன சின்ன வலி வார்த்தைகள் பழகிவிட்டேன் வலியை தாங்க sms கவிதை சந்தோசம் நீ நினைக்கும் இடத்தில் இல்லை..நீ இருக்கும் இடத்தில் உண்டும் +sms கவிதை காதல்எல்லோருக்கும் வரும்எனக்கு போய்விட்டது +sms கவிதை பூக்கள் வாசனைக்காக பூக்கவில்லை தன் வாழ்க்கைக்காக பூக்கிறது - காதலும் அப்படித்தான் ....!!!+sms கவிதை நீ காதலிக்காதுவிட்டாலும் எனக்குகாதல் வந்திருக்கும்உன்னை பற்றிய கவிதை ...!!!+sms கவிதை கவிதைக்கு கற்பனை.....வேண்டும் -உன்னை....நினைத்தால் கற்பனை.....வரமுன் கண்ணீர் ....வருகிறது ....!!!+sms கவிதை
-
- 0 replies
- 518 views
-
-
நீ ஒருமுறை கண் சிமிட்டினால் ஓராயிரம் கவிதை எழுதும் நான் - ஒரு நொடி பேசாது இருந்தால் ஆயிரம் முறை இறந்து பிறக்கிறேன் ....!!! உயிரே மௌனத்தால் கொல்லாதே ...!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் *********************** உன் வீட்டு முககண்ணாடியாய் இருந்திருக்க வேண்டும் உன் அத்தனை அழகையும் ரசிக்கும் பாக்கியத்தை பெற்றிருப்பேன் ...!!! உன் உதடு பூசும் மையாக இருந்திருந்தால் ஒயாத முத்தம் தந்திருப்பேன் .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் *********************** காற்றுக்கு வாசனை இல்லை ஆனால் நீ வரும் போது உணர்கிறேன் காற்றில் வாசனையை ....!!! நீருக்கு நிறம் இல்லை நீ நீராடும் போது பார்கிறேன் அதன் நிறத்தை .....!!! உயிரே உன் நினைவால் துடிக்கிறேன் ************************…
-
- 0 replies
- 3.9k views
-
-
உயிரே என் உயிரே ஒரு வார்த்தை சொல்லாயோ உறவே என் உறவே ஓர் நாளில் மறந்தாயோ ........ மனசே என் மனசே அவள் மனதை சொல்லாயோ உணர்வே என் உணர்வே அவள் உணர்வை சொல்வாயோ உனை நான் பிரிந்தும் உடலால் இழந்தும் உனையே நினைத்தேன் உயிராய் தானே சுரங்கள் இல்லா கவிதையா இருந்தும் உனையே நினைத்தேன் இசையா தானே உயிரே என் உயிரே ...... ஒரு வார்த்தை சொல்லாயோ உறவே என் உறவே ........ ஓர் நாளில் மறந்தாயோ ........ music உன் உணர்வை நான் புரிந்தேன் என் உணர்வை ஏன் மறந்தாய் உனக்கென்று நான் பிறந்தேன் ஏன் இங்கு எனை மறந்தாய் சாலை ஓரம் தவிக்கின்றேன் பிணமாக நடக்கின்றேன் நீ போகும் இடமெல்லாம் தனியாக தவிக்கின்றேன் உய…
-
- 2 replies
- 1k views
-
-
அந்திமந்தாரை திரைப்படத்தில் வரும் உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல்: சகியே நீதான் துணையே! விழிமேல் அமர்ந்த இமையே" அந்த மெட்டுக்கு என் வரிகளில் ஒரு புது முயற்சி : உயிரே நீதான் உறவே என் உணர்வுக்குள் பூத்த காதலின் தாயே உயிரே நீதான் உறவே! (2) கனவுகளில் நீ காட்சிகளில் நீ காண்பது எங்கணும் நீதான் உறவே(2) வலிகளை தாங்கி சுகங்களைக் கொடுத்தாய் என் இதயத்தில் நீதான் என்றுமே துடிப்பாய்! இடர்களைக் களைந்து இனிமைகள் தந்தாய் உறவே உயர்வாய் எனக்குள்ளே நின்றாய்! (உயிரே நீதான் 2) கரைகளைத் தொடுகின்ற அலைகளைப்போலே உன் நினைவுகள் என்னை அணைப்பதினாலே உயிருக்குள் ஊறும் புது சுகம் கண்டேன் உன்னால் அன்பே காதலைக் கண்டேன் வேருக்கு வார்த்திடும் வான்முகில் போலே என் வாழ்வின் வளமாய் நீ வந்தாய…
-
- 10 replies
- 2.4k views
-
-
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! மாவீரர்கள்! யார் இவர்கள்? தன்னலம் கருதாத தியாகிகள்! தமிழ்நலம் கருதிய ஞானிகள்! எங்களுக்காக தங்கள் உயிரையே துறந்த துறவிகள்! தமிழர் இதயங்களில் என்றும் நிலைத்து வாழும் தெய்வங்கள்! கடலிலும் தரையிலும் காற்றிலும் கலந்து இருப்பவர்கள்! எங்கள் சுவாசத்தினூடக எம் உதிரத்தில் கலந்து எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்! விடுதலைத் தீ அணைந்து போகாமல் தம் உயிரை உருக்கி நெய்யாக வர்த்தவர்கள்! தாம் உருகி உலகத்திற்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்! கல்லறைக்குள் உறங்குகின்ற கார்த்திகைப் பூக்கள்! சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்! தூங்கிக் கொண்டிருந்த தமிழனின் துயில் எழுப்பி! துயிலும் இல்லங்களில் மீள…
-
- 33 replies
- 5k views
- 1 follower
-
-
உயிரை நெருப்பாகி உடலை வெடியாக்கி உதாரணமானோரே..! உயிரென மதித்த மண்ணின் உடனடித் தடைகள் நீங்க உருகி வீழ்ந்த கண்மணிகளே... பதவியும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் தாரமும் வேண்டாம் தராதரமும் வேண்டாம் விடுதலை ஒன்றே வேண்டும்.. கட்டளை கேட்டு துள்ளிக் குதித்து தேச எல்லையில் ஆக்கிரமிப்பாளனை ஆக்கிரமித்த வீரரே... தலைவனைக் காத்திடுங்கள் தாய் தேசத்தை மீட்டிடுங்கள் நாங்கள்.. சாவிலும் வானிருந்து நோக்குவோம் நட்சத்திர ஒளிகளாய் சுதந்திர தமிழீழத்தை ஒளிர்விப்போம் ஆசை வளர்த்துச் சென்ற ஆருயிர்களே.. இன்று நாம் கண்பது உங்கள் கனவினின்றும் உருமாறிய உண்மைகளையே..! உங்கள் உயிர் மூச்சிழுத்த தோழர்கள் சிலர் உருமாறித் தடம்மாறி உலாவர... உங்கள் காற்தடம் பற்…
-
- 6 replies
- 998 views
-
-
"சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து ரொம்ப நாளாச்சு! அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில் நிறையவே கொட்டிக் கிடக்குது! சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று... அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்..... ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை! ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்! - ஆனால், அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று, என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்! சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும், நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!! என்னை நேசிக்கும் நட்புக்காய் உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=4]உயிரொன்று கரைகிறது...[/size] [size=3]கவிதை - இளங்கவி[/size] பெயரில் சிவந்தன் - அவன் தமிழீழத்தின் சிவந்தமண்... தன் இனம் சிறிது சிறிதாய் அழிவதைப் பார்க்கமுடியாமல் தம் உயிரையே உருக்கி நம் உரிமையை உரக்கச் சொல்லத் துணிந்தவன்..... அன்று... ஆயிரம் மைல்கள் நடந்தான் அவன் உடலிலன்று வலுவிருந்தது.... இன்று.... உணவையும் நீரையும் மட்டும் கொண்டு இயங்கும் உயிர்க் கோளத்தையே உருக்கத்துணிந்து விட்டான் அதை உயிரின் எல்லைவரை உருக்கியும் விட்டான்... பெற்றோரை மறந்து... மணம் கொண்ட மனையாளை மறந்து.... தன் உயிரணுவில் உதித்த பிள்ளையையும் மறந்து...... உரிமையை இழந்து தவிக்கும் உனக்கும் எனக்குமாய் திலீபன் வழினின்று த…
-
- 12 replies
- 951 views
-
-
எனக்காக நான் கடவுளைக் கும்பிட்டதில்லை உனக்காக தான் என்பதை ஏன் நீ உணரவில்லை எனக்காக நான் அழுததில்லை உனக்காக தான் அழுதேன் என்பதை ஏன் நீ அறியவில்லை எதற்காக நான் பிறந்தேன் என்று தெரியவில்லை ஆனால் உன்னைக் காதலிப்பதால் தான் உயிரோடு ஊசலாடுகிறேன் என்று மட்டும் தெரிகிறது
-
- 1 reply
- 899 views
-
-
உயிர் அழுகின்ற போது ஒசைகள் கேட்பதில்லை... ஒசைகளை மவுனித்த நாங்கள் ஊமைகள் அல்ல... மவுனமாய் எமக்குள் பேசிக் கொள்ளும் மொழிகள் உங்களுக்கு புரிய போவதில்லை... சப்த நாடியும் உறையச் செய்யும் எங்களின் உயிரின் ஒசைகள் வெளிப்படும் நாளின் தோன்றலுக்காய் இந்த மவுனமான நாட்கள் மெல்ல எம்மைவிட்டு கடவதாக.....! # 18-05-2013
-
- 10 replies
- 1.9k views
-