Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெருமழைக்கான பிரார்த்தனைகளுடன்... -எஸ். ஹமீத் *இன்னும் எரிகிறது நெருப்பு... போதாதைக்குப் பெருங் காற்று வேறு; தீக் கங்குகள் எட்டுத் திசைகளிலும் எழுந்து பறக்கின்றன *பற்ற வைத்தவன் தூரத்தில் பத்திரமாய் ஒரு மாளிகைக்குள்; பாழும் நெருப்புக்கது தெரிந்துதான் பற்றி எரிகிறது...! *தொடங்கியவன் அவன் தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் உதவியது காற்று! *எல்லாவற்றையும் எரித்துவிடும் பொல்லாத ஆவேசம் நெருப்புக்கு; காற்று நன்றாகவே போட்டுக் கொடுத்தது..! *பைத்தியக்கார நெருப்புக்குப் பச்சை மரங்கள் கூடப் பலியாகிக் கொண்டிருக்கின்றன நேற்றந்தப் பசுங் கிளைகளைத் தழுவிய அதே காற்றின் உபயத்தில்..! *காட்டிக் கொடுத்தலே தொழிலாயான பின்னர் காற்றுக்கு வளர்ந்த மரமென்ன…

  2. அவளும் அலரி மாளிகை விருந்தும்...! -எஸ்.ஹமீத்- பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை சுதந்திரப் பசியெழுந்தது பெரிதாய்...! ***** அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால் ஆயுதங்களுடன் உறவாடி- ஆவேசத்துடன் போராடி- இரத்தத்தில் நீராடி- எதிரிகளைப் பந்தாடி ஈற்றில்... இலட்சியக் கோட்டை இடிந்துவிழ- தோற்றுத் துவண்டு சரணடைந்து- இன்றோர் மொட்டைத் திரியாய்- பட்ட கொடியாய் கெட்ட குடியாய்- ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு...! ***** சீராட்டி வளர்த்த சின்னக்கா, சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த சினேகிதிகள், அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார் அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள் இன்னும்... உற்றார் உறவினர் ஊராரென அத்தனை பேரும் விட…

  3. ரூபன் சிரித்திரன் 5ஆண்டு நினைவில்...! கையசைத்துப் போனவெங்கள் காலம் தந்த வீரங்களே ! கனவுடனே வானேறி கொழும்பு சென்ற கரு வேங்கைகளே ! காற்றினிலே கைவீசி முல்லைக் கடற்கரையும் காத்திருக்க கனல் மூட்டிச் சென்ற எங்கள் காவிய தீபங்களே ! அனலெறியும் தீப்பொறியாய் விழி கனலெறியத் தணலாகித் தமிழ் மானம் மீட்டுவரப் போனவெங்கள் தம்பிகளே ! மீளத்திரும்பா உறுதியோடு மீளும் தேச நினைவோடு போனவரே மீளாத்துயர் கொண்டெங்கள் மனசெங்கும் துயரலைகள் ! ஆண்டுகள் 5 தாண்டி உங்கள் ஆன்மக்கனவுகளைத் தாங்கியவெங்கள் பயணம் உங்கள் நினைவுகளோடு தொடர்கிறது.....! 20.02.2014

    • 6 replies
    • 813 views
  4. இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்...! -எஸ். ஹமீத்- *செந்தாமரைகள் சிலிர்த்துப் பூக்க வேண்டிய அந்த சேற்று நிலத்தில், பெண் தாமரையே உன்னைப் பிடித்துத் தள்ளியது யார்...? *மானமும் கானமும் வாழ்வெனக் கொண்ட மாதரசியே, உன் துகிலைக் கிழித்துத் துப்பிய அந்தத் துச்சாதனர்கள் யார்...? *வெறி பிடித்த நாய்களின் நடுவே- தாயே நீ, தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியாய்... விஷம் கொண்ட பாம்புகள் நடுவே- அம்மா நீ ஆதரவற்ற அணிற் குஞ்சாய்...! *நீ அசைத்து வந்த வெள்ளைக் கொடியா அது...? அது, உன்னுடையதாகத்தானிருக்கும்! இல்லாவிட்டால், அந்த நேரத்தில் அவர்களுக்கேது அந்தத் துணி...??? *சரணடையச் சென்ற வேளையுந்தன் சமாதானக் கொடியைப் பறித்து வைத்துவிட்டு-தம் பாவக் கரங்களால்-கோர நகங்களால் அவ…

  5. பாதச் சுவடுகளால் கலைந்திருந்த அழகிய முற்றத்தில்.. நிசப்தங்கள் நிறைந்துகிடக்கும்.. முல்லையும் பூவரசும் கருமை பூண்டு கனத்து நிற்கும் ஓணான்களும் அறணைகள் அமைதிக்குள் நகரும்.. குயில்களும் புலுனிக் குருவிகளும் அரைவிழியில் உறங்கிக் கிடக்கும்.. முழுதும் முழுதும் வற்றிப் போயிருக்கும், நேற்று நீ இருந்த முற்றம்... நேர காலமின்றி வரவுகளால் நிறைந்திருந்த முற்றம் அது.. தூணிலும் கதவிலும் படிந்த கருமை நிழல்களை தோற்றுவிக்கும் யாருக்காவது இப்போது... நீ பிரிந்தபின் மொழியின் இனிமை தொலைந்து போனது விழியின் வெளிச்சம் கலைந்து போனது வெளித்தெரியாத இறப்பொன்றுடன் கைகோர்த்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என் நினைவுகளும் கனவுகளும்... அந்த ம…

  6. திருக்கேதீஸ்வரத்து எலும்புகளுடன் ஓர் இதயம்...! எஸ். ஹமீத். **மன்னார் குடாவை மரணக் குழியாய் மாற்றிய மா பாதகர் யார்...? **மாந்தை வயல்களில் மனிதர்களை விதைத்த மனசாட்சியற்றோர் யார்..? **சிவ தலத்தை சவ தளமாய் ஆக்கிய சண்டாளர் யார்..? **அது ஒரு காலம்... **தோண்டத் தோண்ட மாணிக்கங்களும் இரத்தினங்களும் மரகதங்களும் வைரங்களுமாய். **இப்போதெல்லாம்... பல்லாங்குழியாடப் பள்ளம் தோண்டினாலும் பல்லிளித்தபடித் தெரிகின்றன மனிதக் கூடுகள்...! **உச்சக்கட்டத்தில் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நிகழ்கின்றன... **மருத்துவத்தில்-தொழில் நுட்பத்தில் விண்வெளியில்-விவசாயத்தில் தொடர்பாடலில்-இடர் முகாமையில் பிரயாணங்களில்-ப…

  7. கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்! என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்! வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்! என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்! மீண்டுமொரு புயல் வருதா? உயிரோடு சாகடிக்க! இன்னுமொரு முறை வருதா? காதலித்துப் பேதலிக்க! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல நொந்த மனசுக்கு ஒரு காதல்! தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல, நல்ல அனுபவங்களையும்தான்!! காதலித்துத்தான் கட்டுறாங்கள்...! பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?! காதலித்தபோது இருந்ததெல்லாம், கல்யாணத்தோடு காணாமல் போச்சா?! அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது 'அவளே தேவையில்லை' என்கிறான்! இவளே என் வாழ்வென்றவன் - இனி வாழ வழியில்லையென பிரிகின்றான்! காதல் எங்கே போச்சுது? அதுக்கு என்ன ஆச்சுது? காத…

  8. அங்கே மழை பெய்கிறது! எங்கோ ஒரு நிலத்தில் புதைக்கப்பட்ட பிணங்கள் புரண்டு படுக்கின்றன அப்பிணங்களைத் தீண்டுகிறது நிலத்தில் இறங்கிய மழையின் நீர்க்கால் ஒன்று புதையுடல்கள் துயில் கலைந்தனபோல் உடல் முறித்து எழ முயல்கின்றன அவற்றின் உதடுகளில் இன்னும் பதியப்படாத சொற்களும் உலக மனசாட்சியின் மீது வாள்செருகும் வினாக்களும் தொற்றியிருக்கின்றன தாம் சவமாகும் முன்பே புதைபட்டதைத் தம்மைக் கடந்திறங்கும் வேர்த்தளிர்களிடம் கூறியிருக்கின்றன அவை தாம் இறக்கவில்லை தலை பிளந்து கொல்லப்பட்டோம் என்பதை மண்புழுக்களிடம் தெரிவித்திருக்கின்றன மழைத்துளியிடம் எமது மைந்தர்கள் மீது இதே குளுமையுடனும் கருணையுடனும் பருவந்தவறாது பயின்றிடு என்று மன்றாடுகின்றன ! -- மகுடேசுவரன்

  9. Started by கவிதை,

    காதலை வரமாகக் கொடுத்தான் இறைவன் ! அதனை சாபமாக மாற்றிக்கொண்டான் மனிதன் !! காதல் எப்பொழுதும் தோற்பதில்லை ! காதலர்கள்தான் தாமே தோற்றுப்போகிறார்கள் !! காதலைக் காதலியுங்கள்...! காதலும் உங்களைக் காதலிக்கும்...!! வாழும் வாழ்வினை இனிதாய் வாழவைக்கும்...!!! அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

  10. Started by லியோ,

    அம்மா இருந்த உணவை பகிர்ந்து எம் வயிறு நிரப்பி நீரை மட்டும் நீ குடித்து சிரித்தபடி எமை வளர்த்தாய் வளர்ந்தால் உன்னை பார்ப்பார் என்றோ படித்து பெரியவர் ஆவார் என்றோ நீ கனவு கண்டிருப்பாய் எதுவும் நடக்கவில்லை யாருக்கும் உதவும் உன்மனம் பிள்ளைகளோடு பிறந்ததால் பிள்ளைகள் உன்னோடு இல்லை ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய் உன் இறுதிசடங்கில் கூட உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று அம்மா நீ விரும்புவாயோ இல்லையோ அடுத்த பிறப்பிலும் நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்

  11. மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு .. மயங்காத மங்கை மனதை உடைக்க முன் .. மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ... கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ... என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே .. எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ... நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா .. சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே .. உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் .. உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் .. உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி .. காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் .. என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் .. என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான் நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே .. ஜா…

    • 11 replies
    • 1.2k views
  12. வானம் வஞ்சகமின்றி வெள்ளைப் பூக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றது! நானும் இந்த கடுங்குளிர் தேசத்தில் என் மவுனச் சாளரங்களினூடே அந்த அழகியை ரசித்துக் கொண்டிருக்கின்றேன்! அவளும் மெல்ல என்னை நோக்கித் தன் காதல் தேசத்தின் பாரிய படையெடுப்பொன்றை தன் மலர்விழிகளால் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கின்றாள்! என் இதயக் கோட்டையின் மதில்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் சரிந்து விழுந்துகொண்டிருக்கின்றன! இன்னும் சில நொடிகளுக்குள் அவை முற்றாகவே தகர்ந்து விழுந்துவிடப் போகின்றன! நான் தோற்றுவிடுவேனோவென்று மெல்லக்கூறி பட்சி நகைத்துக் கொண்டிருக்கின்றது! இல்லை நடுங்கிக்கொண்டிருக்கின்றது! தோற்றேதான் போய்விட்டேன்!!! இப்போது என் இதயப் பேரரசின் முடிசூடா ராணி அவள்!!!!!! என் மனைவியின் …

  13. பங்குனி விடியலின் அதிகாலைத் தக்பீர் முழக்கம் அவள்! சித்திரை வசந்தத்தின் முக்காடு போட்ட முதலாம்பிறை அவள்! கார்த்திகை நிலவின் காயம்படாத உமர்கயாமின் கவிதை அவள்! மார்கழித் திங்களின் சல்வார் போட்ட ரம்சான் அவள்!

  14. எங்கள் தேசத்தில் கறுப்புக்கொடி! உங்கள் விடுதலைக்கும் உழைத்தோம் எங்களை அடிமையாக்கினீர்கள் எங்களை பல்லக்குகளில் சுமந்தபோது ஒன்றாய் வாழ்தல் இனிது என்று கனவு கண்டோம். எங்கள் மெழியை புறகண்ணித்தீர்கள் எங்கள் அடையாளங்களை அழித்தீர்கள் எங்கள் உரிமையை பறித்தீர்கள் துரத்தினீர்கள் உங்கள் நிலத்திலிருந்து வேட்டையாடீனீர்கள் உங்கள் நகரங்களில் வைத்து ஒடுக்கி உரிமை மறுத்தபோது நாங்களொரு கனவு வளர்த்தோம். எங்களை நீங்கள் அடிமை செய்தபோதும் உங்களை நாங்கள் ஏதும் செய்யவில்லை எங்களை நாங்கள் ஆழ்கிறோம் எங்கள் மண்ணில் கண்ணீர் வேண்டாம் எங்கள் மண்ணில் துயரம் வேண்டாம் எங்கள் மண்ணில் இரத்தம் வேண்டாம் எங்களை நீங்கள் கொல்ல வேண்டாம் சிங்கள தேசத்தில் சிங்கக்கொடி தமிழர் தேசத்தில் கறுப்பு…

  15. மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்.....!!!! ------------------------------------------ ஜெனிவாவில நடக்கப்போதாம் மாநாடு அது முடிஞ்சதும் அவங்கள் தருவாங்களாம் தமிழனுக்கு தனி நாடு! அமெரிக்கா கொண்டுவருமாம் தீர்மானம் அவன் இலங்கையை பிரிச்சுத்தருவான் சரிசமானம் இந்தியாவும் ஆதரிக்குமாம் தீர்மானம் பிறகு "என்பலப்பில" மடிச்சுத்தருவாங்களாம் தமிழீழம்!!! முப்பது வருசம் கழிச்சுத்தான் தெரியுது "இன அழிப்பு" எண்டு! அஞ்சு வருசம் கழிச்சுத்தான் தெரியுது "போர்க்குற்றம்" எண்டு! இன்னும் அம்பது வருசம் கழிச்சு வரும் "தீர்ப்பு" இருங்கோ பாத்துக் கொண்டு...!!! மன்னாரில தோண்டுறாங்கள் "மண்டை ஓடுகள்" சனத்தை அடிச்சு சாக்கொன்றவனே அதற்கு காவலும் கண்காணிப்பும்..!…

    • 2 replies
    • 994 views
  16. எங்கோ ஒளிந்திருக்கிறாய் உனது தேவை என்ன சூடான ஒரு கண்ணீர்த்துளியா ? மரங்களின் மௌனத்தால் பறவைகள் அழுகின்றன யாருக்கு யார் மெல்லியதாக பரவுகிறது ஒரு கேவல் ஒலி என்ன நிகழ்ந்திருக்கும்.. ஒரு பகிரமுடியாத மரணம் ஒரு விபத்து காமம் தீராத ஒரு கலவி குறைந்த பட்சம் இன்னொரு காதல் தோல்வி.. மெல்ல காற்று குளிர்கிறது வானம் அழக் காத்திருகிறது நனையக் காத்திருக்கிறேன் மழையில் கண்ணீரில்

  17. ஆணைப் படைத்தான்...! பெண்ணையும் படைத்தான்...!! இயற்கையை படைத்து... அவர்களை இயங்கவும் வைத்தான் !! அந்த வித்தைகாரன் பெயர்தான் - கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான், அது 'கணவன்' ! பெண்ணுக்கு பெயரிட்டான், அது 'மனைவி' ! இருவரையும்.... சேர்த்து வைக்க திட்டமிட்டான் அது 'திருமணம்' !! அத்தோடு விட்டானா....?!! 'காமம்' என்றும்... 'காதல்' என்றும்... எதிரும் புதிருமாய், எதையெதையோ வைத்தான் ... அதன் இடையில்!!! 'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' அப்படியொரு பழமொழியை... எவன் வைத்தான்... தெரியவில்லை!? தொண்ணூறு நாளின் பின்தான், பெரும்பாலும்... தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!! எல்லையில்லா அன்பென்றார்...!? தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!! பிரியமாக இருந்தோரெல்…

  18. Started by Ahasthiyan,

    வெண்ணிற பனி படலம் போர்த்தியஆடையுடனும், தலையில் மல்லிகை பூ வைத்து அலங்காரத்துடன் பவனி வரும் எங்களை தத்தெடுத்த இங்கிலாந்து தாய் கன மழை என்னும் கண்ணீரால் நனைவதேன். இயற்கை தனது பாதையில் சீராக நடக்கிறது நாம் மனிதர்கள் தான் சீரற்ற நடவடிக்கைகளால் இந்த பூமியை அழித்து கொண்டு இருக்கின்றோம் மனிதர்களே சிந்தியுங்கள் இந்த பூமி தாயை காப்போம்

  19. யாழ் இணையத்துக்கு எஸ் ஹமீத் இனால் எழுதி பிரசுரிக்குமாறு கேட்டு அனுப்பப்பட்ட கவிதை இது. -நிழலி ---------------------------------------------------------------------------- விடாது கொத்தும் பாம்பிலிருந்து விடுதலை பெற ஒரு வேண்டுகோள்...! -எஸ். ஹமீத். ஓர் ஊழின் உக்கிரத்தில்... நரகத்தின் மையத்திலிருந்து பீறி எழுந்து அக்கினி மழையாய்க் குமுறித் தலை வீழும் செங்கங்குகளில்... சூரியனுருகி வழிந்த ஈயத் தரையினில் பாதம் எரிந்து கருகும் கொடிய கொடூரத்தின் கோரங்களில்... ஏதுமறியா இளம் பிஞ்சுக் குழந்தை; எடுத்தொரு நிழலில் கிடத்திட.... யாருமில்லை...! ***** சுற்றி நின்று பேய்கள் அலறும் க…

  20. வேணாம் மச்சான் வேண்டாம்.....!!! ----------------------------------------------- ஊரில் இருக்கும் மச்சான் சுகமாடா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் எண்டு கேள்விப்பட்டன்!!! உன் முடிவில் "நியாயம்" இருக்கிறது இருந்தாலும் "யாதார்த்தம்" வேறு மச்சான் கோதாரி விழுந்த காசுதான் எங்களின் சந்தோசங்களை முடிவுசெய்கிறது அதுதான் எங்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறது கிட்டடியில அவுஸ்திரேலியா வந்த பக்கத்து வீட்டு சேகர் அனுப்பும் காசில்.. "மாபிள்" பதிச்சு வீடு எழும்புது "ஏசியும் கலர் கலரா பெயின்றும்" வீடு பழபழக்குது..!! "ஐபோனும் கீறோ கொண்டாவும்" கனவில வந்து சாவடிக்குது என்ன இழவுக்கு இங்க கிடந்து சாவான் என உன் மனம் அலைக்கழியுது கொப்பர் அடிக்கடி புறு…

  21. பச்சை மண்ணாய் பால் குடியாய் யாழ் வந்த போது தமிழோ வா வா என்ற தமிழர்கள் சிலர்.. இது தமிழா இவன் எல்லாம் உருப்படுவானா என்று மொழிய.. தத்தெடுப்பின் அடையாளமாகி அவை அமைய.. இணையத் தமிழ் கொண்டு அரவணைத்த யாழ் இணைய சொந்தங்களே.. பச்சை பச்சையாய் திட்டினும் யதார்த்தமாய் ஏசினும் வாயாரப் புகழினும் வாஞ்சையோடு வருடினும் வஞ்சகமில்லா எம் மொழியை கண்டறிந்திட்டு சொந்தம் கொண்ட... உறவுகளே. காலத்தால் தனித்துவிட்ட போதும் கலங்கரை விளக்கமாக கூட நின்ற சொந்தங்களே.. அன்னை இன்றி தந்தை இன்றி உற்ற சகோதரங்கள் கூட இன்றி அரவணைக்க உறவுகள் இன்றி அந்நிய தேசத்தில் கண்கண்ட நேரத்துக்கு மட்டும்.. கூடி மகிழும் நண்பரைக் காட்டிலும் கூட வந்த உறவுகளாய் அன்னையாய் தந்தையாய் சகோதரனாய்…

  22. இரணைமடுத்தாயே ஏனம்மா? ------------------------------------------------- ஏனம்மா தாயே நீரோடு ஏனின்று நிலம் பிரிந்து நிற்கிறது யாரோடு யாருக்குப் புரிதலற்ற புதிதான புயலொன்றை உருவாக்கி யாழென்றும் வன்னியென்றும் ஏனையா கதைக்கின்றீர் போதாதா பெற்ற வலி தீராத துயரமுடன் மாறாத எங்கள் நிலை மாற்றிடத்தான் வேண்டாமோ! தேசியமாய் ஒன்றிணைந்து தாயகமாய் வாழ்ந்தோரை நீர்கொண்டு பிரிக்கின்ற நிலைமைதனை உணராமல் வாதங்கள் புரிந்திங்கு வளர்க்கின்றார் வேற்றுமையை யாரையா அது யாரையா! தமிழினத்தின் குருதியாற்றில் குளிர்காய நினைப்போரை சரியாக இனங்கண்டு எம் சந்ததிகள் தழைத்தோங்கச் சிந்திக்க வேண்டமோ! மோடையன் என்று சொல்லி விண்ணனர்கள் அடிபட்டு பலகூறாய் நின்பதொன்றே சிங்களத்தின் பெருவெற்றி சிரிப்பினிலே தெரிகிறது வேண்டா…

  23. மடிகளை உள்ளிழுத்த மாடுகள் காலவெற்றிடத்தில் உறுமத் தொடங்கி நாணயக்கயிற்றுக்குள் வளைந்து உடல் சிலுப்பி நிலம் விறாண்டி மூச்செறியவும் செய்தன.. புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும் வலியேதுமில்லாமல் வழிந்த வீணீர்களையும் முகர்ந்த உண்ணிகள் தாமும் கூட உறுமமுயன்று உருத்திரதாண்டவமாடின... எரிந்து கிடக்கும் நிலத்தின் எச்சங்களை தின்றும், உறைந்துபோன மனங்களின் மர்மங்களை கொன்றும், ஈரமிழந்த வேர்களிலாலும் உயிர்ப்பை சுமக்கும் புனிதர்கள் தோள்கள் மீதேறியும், இன்னலற்ற சுவரோரம் முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும் ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும் மடிகளை மறைத்து உறுமத்தொடங்கின கறவைமாடுகள்.. மேச்சல்நிலம் கொண்ட மாடுகளின் ஏவறைகளுக்கும் ஓய்வுநேர அசைபோடலுக்கும் அர்த்தமாயிரம் க…

  24. Started by கவிதை,

    சொந்த நாட்டு வீட்டுக்கு... எப்பத்தான் நான் போவேன்? என் சொந்தக்காரர் நாலுபேரை... அப்பத்தான் நான் பாப்பேன்! வந்த நாட்டை எண்டைக்கும்... எந்தன் நாடாய் ஆக்கமாட்டேன்! சொந்த நாட்டை மீட்குமட்டும் நிம்மதியா தூங்கமாட்டேன்...!??? வல்லைவெளிக் காற்றாக.... மனம் எல்லைதாண்டிப் பறக்கிறது! நெல்லுவயல் கதிர் பார்க்க.... தினம் எண்ணமெல்லாம் துடிக்கிறது! முல்லை நில கடலோரம்.... அலை ஓயாமல் அடிக்கிறது! ஓயாத அலை ஞாபகங்கள்.... மீண்டும் நெஞ்சில் வந்து துளிர்க்கிறது! ஓடக்கரை அப்பம் தோசை... வாங்கி நல்லா தின்ன ஆசை! பருத்தித்துறை வடையோட... பங்குனிக் கள் அடிக்க ஆசை! வல்வெட்டிதுறை எள்ளுப்பா... வாய் இனிக்க கடிக்க ஆசை! தப்பி ஓடி வந்த பாவியாகி... தஞ்சம் தேடி வந்த அகதியாகி... செல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.