கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரு சொல்லில் கவிதை கேட்டாய் அசைந்தாடும் 'அலை'களென்றேன் பால்நிலவில் நனைந்திருந்தால் அலை அழகு கவி என்றாய். வானமகள் பானம்விடும் 'வானவில்'லைச்சொன்னேன் சாரல் மழை சேர்ந்தாலே-அது சந்தக்கவி என்றாய். தென்றலுக்கே தெரியாது திறந்து கொள்ளும் 'பூக்கள்' என்றேன் வண்டினம் வந்து பாடாமல் அதில் வடிவு கவி ஏது என்றாய். வ…
-
- 10 replies
- 1.8k views
-
-
களம் காண களம் தந்த யாழ் களமே! காவியமாய் வாழ்ந்திடு கார் இருள் அகற்றும் கதிரவன் போல் பாரினிலே தமிழர் நிலம் மீளும் வரை நித்திலத்தில் நின் பணியும் களப் பணிகளும் காத்திரமாய் தொடர்ந்திட்ட்டும் கணனி உலகிலே கன்னித் தமிழின் காப்பரணாய் கண்டம் விட்டு கண்டம் தாண்டி வாழும் தமிழரின் வரமாய் திகழ்பவளே வாழிய! வாழியாவே. #ஈழத்துப்பித்தன்
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
ஓ துகிலுரியப்பட்ட தங்கையே துட்சாதனன்களோடு நவகண்ணன்களும் கைகோர்த்துச் செய்த கொடுமை... பிணங்களின் நினங்களின்மேல் அபிவிருத்திப் பாடைகட்டும் அரக்க உலகே எப்போது உன் மனச்சாட்சி திறக்கும்... மனமிருக்கிறதா இருந்தால்.............. இன்றேனும் இல்லை நாளையேனும் உன் மனதைத் திறப்பாயா இல்லை சிங்களத் திமிரோடு சங்கமித்து சங்கமித்திரையையும் சாகடித்துப் புணர்வாயா? புணர்வதற்கு பெண்ணெண்ண பிணமென்ன.... தூ........... சிங்கம் புணர்ந்தெடுத்த சிங்களத்து வம்சமது செங்களத்தில் பட்டபாட்டை இப்படித்தான் தீர்த்ததுவோ! இதன்பின்னும் ஈனர்களாய் ஒரு கூட்டம் வீணர்களாய் ஒரு கூட்டம் வெட்டிகளாய் ஒரு கூட்டம் வேண்டாம் தாயே நீ எம்மை மன்னிப்பாய்! காத்திடவும் முடியாது நீதி காண்பதற்கும் முடி…
-
- 10 replies
- 863 views
-
-
உனக்கு ஆட்சேபனையில்லையெனில் கவிதை மலர்களுக்குள் உன்னை தூவுகின்றேன் எங்கிருந்தோ வந்த உன் அழகு என் வாலிபத்தை துவசம் செய்தது. உன்னை நினைத்துப்பார்க்கின்றேன்.. நீ அழகான ஆனால் அரிதான படைப்பு. என்னை நினைத்துப்பார்க்கின்றேன் காலம் தந்த சிறகுகளைக்கொண்டு உனக்காக பறக்கின்றேன். வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிக்குள் - உன் வேர் ஊடுருவியிருப்பதாக உணர்கின்றேன்.. என்னிதயத்தில் எனக்கே தெரியாத ஓர் இடத்தில் நீ பதுங்கு குழி அமைத்திருக்கின்றாய். மனசின் இலைகளின் இடுக்கில் நீ பூத்திருக்கின்றாய். உனக்கு ஒன்று தெரியுமா?.... உன்னைக் காண்பதற்கு முன்னால் நானும் காதலை எதிர்த்தவன் தான்......
-
- 10 replies
- 1.9k views
-
-
கொற்றவைத்தமிழே! நற்றுணை பொங்கு! என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன்... தாயே!... என்னுளம் நுழைக! கங்குல் கரைய, அதிகாலை வெளிக்க, செங்கதிர் வீசும் சூரியன் சிரிக்க, தங்களர் வலுவில் தமிழ்மண் துளிர்க்க தாம் தீம் தோமென தமிழே பொங்கு! எங்கனும் தமிழின் ஓசை சிறக்க, ஏதிலி எனும் பேர் காற்றினில் பறக்க, வங்கப் பரப்பதில் வரிப்புலி சிரிக்க வண்தமிழ்கொடியே! வனப்புடன் பொங்கு! மங்கல ஒலியில் மண்மகள் குளிர, சிங்களச் சேனைகள் செருக்களம் சரிய, அங்கையற்கண்ணிகள் அரியணை செய்ய அன்னைத் தமிழே! அமிழ்தெனப் பொங்கு! வான் புலிச் சிறகுகள் வல்லமை வகுக்க, தேன்கவிராயர்கள் தீந…
-
- 10 replies
- 1.3k views
-
-
''இன்ர நெட்'' லவ்..... கவிதை.... பலகோடி ''லவ் பேட்ஸ்''கள் இணையத் தளங்களிலே வலங்கள் வரும்.... அதில் சிலகோடி தங்களுக்காய் ஜோடிகள் தேடி நிற்கும்.... ஜோடிகள் கிடைத்தவுடன் ஜோராக சேர்ந்து கொண்டு தங்கள் உணர்வெல்லாம் ''மொனிட்டரிலே'' உண்மையாய் கொட்டி நிற்கும் .... அழுவதற்கும் கை விரல்கள் அழகாக ரைப் அடிக்கும்... கோபப் படுவதற்கு ''கீ போட்''டை கொதிப்புடன் உடைத்தெறியும்..... அழுவதும் எழுத்தில் தான்... சிரிப்பதும் எழுத்தில் தான்... முகம் பார்க்க முன்னர் ''என் கேஜ்'' ஐ முடிவு செய்வதும் எழுத்தில் தான்.... இரண்டும் பார்த்திராது ஒன்று இக்கரையில் நின்று நீதான் என் ''பியூட்டி'' எனும்.... மறுகரைய…
-
- 10 replies
- 2.7k views
-
-
கண்ணின் மணியாய் கனிந்தவளே கனக்குதடி இதயம் காணத்துடிக்குதடி உன்னை.. கண்ணோடு கண் கொண்டு கதைகள் பேசி கணங்கள் மறந்து களித்திருந்த நினைவுகள்..! கனவுகள் கூட கணமும் காட்டுதடி உன்னை கனக்கும் பிரிவுக்குள் கண்கள் சிவக்குதடி தினமும். கண்ணீரின் நிறையது கடல் தாண்டிப் போனதடி கனக்கும் சோகம் கட்டிலில் நோயோடு கட்டியதடி என்னை. கனவாகிப் போனதுவே காளையிவன் களிப்பு..! கணமும் ஏங்குதடி கண்ணில் உன் விம்பம் நாடி. கதறுகிறேன் இன்று தனிமையில்.. கனிந்த உன் நினைவுகள் கனக்குதடி மனசெங்கும்.. கழுத்தில் ஒரு சுருக்கு களிப்புடன் தா கனவில் உன்னைக் கண்டபடி கழற்றி விட என் உயிரை கழன்று விடுகிறேன் உலகை விட்டே கண்களால் நீ என்றும் என்னைக் காணாதிருக்க…
-
- 10 replies
- 2k views
-
-
நீண்ட நாட்களுக்கு முதல் யாழ் கள உறுப்பினரும் சிறந்த கவிதாயினியுமான ஜேர்மன் மண்ணை சேர்ந்த அன்புக்குரிய நண்பி நித்தியா எழுதியது நளினமேனி நவரசப் பந்தல் இனிய மெய்யான பொய் பொய்யோ மெய்யோ என அய்யோ என்னை மலைக்க வைக்கும் இரு குன்றுகள் நெய்யாய் எனை உருக்கி ஒரு கை போதாமல் என் இரு கைகளால் அள்ளி பருகப் பருகத் தாகம் பெருக முயல முயல முயற்சி நீள அகல அகல அனைத்தும் அகன்று ஒடுங்கி ஒன்றாய் நீயும் நானும்... நெருங்கி நெருங்கி நெருப்பு மூட்டி மூட்டிய தீயில் முழுவதும் தீய்த்து தீய்ந்து பயனாய் மூளும் தீயை தீயாய் மாறி யாண்டும் எரித்து எரிந்தது சுட்டு சூடு பறக்க... என் உடலில் உரசி உசிரை கரைத்து கரைந்து இரண்டற இன்றே கலந்த…
-
- 10 replies
- 700 views
-
-
-
ஐரோப்பியத் தடை தூக்கம் கலைக்க கூவிய சேவல் தடை ஹைக்கூ ஒன்று முயன்றிருக்கிறேன். கன்னி முயற்சியென்பதால் கட்டாயம் உங்கள் விமர்சனங்கள் தேவை. (இல்லாட்டிக் கோவம் போட்டிடுவன்) அன்புடன் மணிவாசகன்
-
- 10 replies
- 3.2k views
-
-
அகப்பை ஆக்கவும் காய்ச்சவும் அள்ளி பரிமாறவும் நாங்கள் தேவை. இவற்றை செய்வதற்கு பானையில் இருக்க வேண்டும் பானையில் இருப்பதையே நாங்கள் எடுப்போம் நாங்கள்; பானை பிடிக்கும் பாக்கிய சாலிகள் தொண்டுழியர்கள் அப்போதெல்லாம் மங்கையர் கைகளில் மட்டுமே இருந்தோம் இப்போதெல்லாம் மணவாளன் கையிலும் இருக்கிறோம். அநேக சந்தர்ப்பங்களில் செங்கோலாகவும் [ஆண்களுக்கெதிராக] பயன் படுகிறோம். செங்கோல் எனும் சொல்லும் போது பல ஆண்கள் அடி வேண்டியிருப்பார்கள் போல உது பற்றி உங்கள் கருத்துக்கள்
-
- 10 replies
- 4.8k views
-
-
கட்டியவனோ காலமாகி விட்டான் ! பெற்றவனோ கைகழுவி விட்டான் ! இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ? அது வரையும் உழைத்தே உண்ணுவேன் ! முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே ! .......................................................... எனக்கில்லை! வாழும்வரை தன்னம்பிக்கையோடு .... (எங்கேயோ பார்த்ததில் மனதை ...)
-
- 10 replies
- 1.7k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்... யாழில் எல்லாரும் காதலில் துன்பப்பட்டு அழுதபடி கவிதை எழுதி கண்ணீர் வடிப்பதை தள்ளி நின்று வேடிக்கை பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. இதனால் இன்றிலிருந்து நான் காதலை போற்றி, காதலுக்கு சப்போர்ட் பண்ணி கவிதை மாதிரி ஒன்றை எழுதி இங்கு ஒட்டலாம் எண்டு நினைக்கின்றேன். இன்றில் இருந்து நான் கண்டபடி காதலை கற்பனை செய்து ஒவ்வொரு தலைப்புக்களில் எழுதப்போகின்றேன். வாசிச்சுப்போட்டு ஒருவரும் சிரிக்ககூடாது. எனது இதயத்தில் இருந்து வரும் உண்மையான வரிகளை பார்த்து சிரித்தால் பிறகு அப்புச்சாமி கோவிப்பார். இது உங்களுக்குதான் கூடாது. காதலே வா!! காதலே வா..!! நீ வராவிட்டால் நான் சாவதை தவிர வேறு வழிகளும் என்னிடம் உள்ளன.. …
-
- 10 replies
- 2.2k views
-
-
பனிச் சோலை உன்னைப் பகலெல்லாம் பார்த்துக் கனிச்சாற்றே சொன்னேன் கவிதை_தனியே உன்னை மறந்து இங்கே உயிர்வாழ்வதென்றால் நினைவிளந்து போகாதோ என் மனம் மூச்சாகி என் மனசில் மோக நினைவூட்ட நீச்சலிட்டு ஆடிடும் நித்திலமே_பூச்சாரம் போல் என் இதயத்தில் பூத்தவளே ஏந்திழையுன் எண்ணமின்றி இன்னொன்று இல்லை இனி தூங்க மறுத்துத் துடிக்கின்ற கண்ணிமையும் ஏங்கி தவிக்கும் இதயமும்_பூங்கொடியே உனை எண்ணி புலம்பிடுதே உன் இன்முகம் காண துடிக்குதே என் கண் நம்மை தொட்டுப் போன தென்றல் நாளை வருமென்றே_நான் இமை கொட்டாதிருக்கின்றேனே துயிலின்றி உள்ளேன் துடித்து
-
- 10 replies
- 2.2k views
-
-
பண்டித எழுத்தாளர்கள் பழித்தனர் பாமரனின் எண்ணங்களின் எழுத்துக்களை தலித் இலக்கியங்கள் தரம் குறைந்தவை என்றனர் புரட்சி பண்டிதர்கள் புத்தக புரட்சியே புனித புரட்சி என்று புலியெதிர்ப்பு புராணம் வடித்தனர் ஆயுதம் ஏந்தி அகிம்சையாக போராடி அன்னியனை அழிக்காதபடியால் தான் அர்சுடன் அண்டிப் பிழைக்கின்றார்களாம் அன்றைய போராளிகள் முதலுதவி பயிற்சி ஒருநாள் முன்னரங்கம் இருநாள் முடியாது தொடர பலநாள் என முடிவுடன் புறப்பட்டார்கள் முஸ்லிம் நாடு. முஸ்லிம் நண்பர்களுடனும் சில நாள் கடத்தல் பண்டிதர்களின் புண்ணியதில் கடல் கடந்தனர் கனடாவுக்கு கண்டவன் எல்லாம் கனடாவிலாம் கழகதார் மட்டும் கணவாங்களாம்.. இலக்கியம் எம்மவர்க்கு…
-
- 10 replies
- 1.4k views
-
-
குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கனடாவிலிருந்து பவித்திரா- குடும்பி மலையொன்றும் கொடியவரின் சொத்தல்ல. கும்மாள மிட்டுக் கூக்குரலி டுதல்தான் வடுவினை மறைக்க வலுவற்றோர் புரிகின்ற வஞ்சனைச் செயல்களே வருத்தம் வேண்டாம் படுகுழியிற் தாம்வீழ்ந்த பரிதாப நிலைதனை பாரறியும் இழிவினை மறைத்திட வேண்டியே சடுதியாய் வகுத்த சூழ்ச்சியில் நின்றுமே தலைமைச் சிங்களம் தடுமாறி நிற்கிறது! மலைகள் பாறைகள் மருவிய நீர்நிலைகள் மலர்கள் மணம்வீசும் அடர்ந்த காடுகள் கலைகள் கழனிகள் கலப்பை பிடித்துழும் கண்ணியம் நிறைமாந்தர் கனிவுறை உழவர் தலைவன் கொள்கையே தமக்கெனக் கொண்ட தண்மைமிகு உளம்கொள் திராவிட மக்கள் நிலைபெற்ற…
-
- 10 replies
- 1.2k views
-
-
இன்னும் இருக்கிறது காதல் கடிதம் காதல் ......................!!! *********** முன்னிரவுகளில் தூவிய நட்சத்திரங்களை அடித்து சென்றுவிட்டது ஆதவக்கரங்கள். ********* மெல்லியதாய் எங்கோ ஒலிக்கிறது சோகப்பாடல், சோர்ந்து போய் உச்சரிக்கிறது உதடு. ************ இதே நிலா அன்று, நீயும் நானும். அதோ நிலா .................!!! *********** மலர்தாவிய வண்டை திட்டினாய். வியந்தேன்............. மனம் மாறி திட்டினாய். சிதைந்தேன். ******* உன்னை சந்திக்கும் அந்த நேரம் கடக்கையில் நரகம் தெரிகிறது. கடந்தபின்....... மரணம் புரிகிறது. *********** கைதவறி பட்டபோது தடுமாறிய மனது நீ கரம்பற்றிப்போனபோது அனாதையாய் போனது ............ ************* உன்னை பார்த்தத…
-
- 10 replies
- 1.3k views
-
-
அந்திமந்தாரை திரைப்படத்தில் வரும் உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல்: சகியே நீதான் துணையே! விழிமேல் அமர்ந்த இமையே" அந்த மெட்டுக்கு என் வரிகளில் ஒரு புது முயற்சி : உயிரே நீதான் உறவே என் உணர்வுக்குள் பூத்த காதலின் தாயே உயிரே நீதான் உறவே! (2) கனவுகளில் நீ காட்சிகளில் நீ காண்பது எங்கணும் நீதான் உறவே(2) வலிகளை தாங்கி சுகங்களைக் கொடுத்தாய் என் இதயத்தில் நீதான் என்றுமே துடிப்பாய்! இடர்களைக் களைந்து இனிமைகள் தந்தாய் உறவே உயர்வாய் எனக்குள்ளே நின்றாய்! (உயிரே நீதான் 2) கரைகளைத் தொடுகின்ற அலைகளைப்போலே உன் நினைவுகள் என்னை அணைப்பதினாலே உயிருக்குள் ஊறும் புது சுகம் கண்டேன் உன்னால் அன்பே காதலைக் கண்டேன் வேருக்கு வார்த்திடும் வான்முகில் போலே என் வாழ்வின் வளமாய் நீ வந்தாய…
-
- 10 replies
- 2.4k views
-
-
நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... நண்பனென்ற அடையாளத்தில் நீயும் அட்டகாசம் செய்கையில் .. அவ்வப்போது சிறகடிக்கும் உன் விழிகளில் அடிக்கடி காதல் அரங்கேறுவதை எட்டி நின்று ரசிக்கத்தான் எத்தனை ஆசை எனக்கு .. உன்விழிகளில் நான் கண்ட காதலை நீ,... என் மொழிகளில் கேட்க வேண்டுமென அடம்பிடித்தது இன்றும் என்னில் அழியாமல் இருக்கிறதே .... வசந்தங்களில் மட்டுமே .. பூக்கள் பூக்குமாம்.. ஆனால்.. நீ மட்டும் எப்படி பெண்ணே .. வேனலில் கூட கவிச்சோலையாய் ... எப்பொழுதும் என்னில் ?.... கேட்டதும் நீ தானே .. அன்று ஆற்றோ…
-
- 10 replies
- 2.3k views
-
-
இடமொன்று தருவாயா? ஈர்பத்து ஆண்டுகளாய் இடறாத என்மனதை அசைத்தவளே அகிலத்தை அழகாக்க வந்தவளே வாசமில்லா மலராகி வாடி நிலம்தொட்டு கசங்கிக் கிடந்தவனை கவர்ந்திழுத்த காரிகையே கானல் நீரென்று கனவெல்லாம் களைந்தகற்றிக் கடிமனதைத் திடப்படுத்தும் காலம்வரை காத்தனையோ ஆண்டைந்து பொறுத்(து)அன்னை அகிலத்தில் போட்டிருந்தால் துணையாக வாவென்று துணிவோடு கேட்டிருப்பேன் விதிவந்து விளையாடி விரிசல்கள் செய்யாமல் கற்றவனாய் இருந்திருந்தால் கன்னியுனைக் கேட்டிருப்பேன் எட்டாத கொப்பென்று என்மனது சொன்னாலும் என்னவளே உன்நினைவை எடுத்தெறிய முடியலையே அன்பென்ற வார்த்தைக்கு அழகூட்ட வந்தவளே - உன் இதயத்தில் உட்கார இடமொன்று தருவாயா?
-
- 10 replies
- 1.7k views
-
-
தேச ஒருமைப்பாடென்று கூடிக் கற்பழித்தவர்கள் எங்கள் வாய்கால்களில் தங்கள் குறிகளை கழுவிக்கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் மன்றாடுவோம். கழுகின் நிழல்களில் ஒதுங்கி வாள் சுமந்த நீதிதேவதை வெள்ளையாடையோடு வருகிறாள் உயர்ந்த ஜனநாயகநாடும் காந்தியச் சக்கரங்களால் சாம்பல் மேடுகளிலும் எலும்புச்சிதைவுகளிலும் ஏறி வருகிறது. காடுகளை அழிக்கையில் உறங்கி இருந்திருப்பார்கள். அல்லது விருந்தில் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு எதுவுமே தெரியாது வாருங்கள் மன்றாடுவோம். நீதி கேட்போம். வண்ணாத்துப்பூச்சிகளையும் மின்மினிப்பூச்சிகளையும் கொன்று சிதைத்த கதைகளை சொல்லுவோம். கூட்டம் கூட்டமாய் தவித்து நின்ற மான்குட்டிகளை நஞ்சு பூசிக்கொன்ற கதைகளை சொல்லுவோம். ஒலிவ்இலைகளை சுமந்த வெள்ளைப…
-
- 10 replies
- 1.1k views
-
-
ஈழக்கருவறையைக் காத்து வளர்த்தவன் ஆர்த்தெழுந்து தமிழ் தொடுத்துத் தாலாட்டுப் பாடிடவும், அனல் கொட்டும் வீரத்தின் மிடுக்கெடுத்து வனையவும், போக்கற்ற புரட்டனைத்தும் எழுத்தீயில் எரிக்கவும், எழுந்த என் எழுத்தாணி... இன்றுமட்டும், இலக்கு விட்டு.. ஏன் அழுது நிற்கிறது? புறம் படைக்கும் தமிழ் மகளின் போர்க்குணத்தை மொழியவும், புனை கவியில் எழுகை எனும் பெருநடப்பை விதைக்கவும், இணையில்லா விடுதலையில் வனப்பெடுத்துப் புனையவும் இலக்கெடுத்த என் பேனா இன்றேன் நலிகிறது? ஒப்பாரிப் பாடல்களை எப்போதும் பாடாத என் இதயம் இப்போதேன் அழுதபடி ஒப்பாரி உரைக்கிறது? அன்னை மண்ணிலே குருதியாறுகள் காயவில்லையே, உறையவில்லையே... இலக்கெடுத்த நம் தாயின் வேதனை ஆறவில்லையே,.. …
-
- 10 replies
- 2.1k views
-
-
புத்தாண்டே நீ புதிதாய் வருகின்றாய் அத்தனை பேரும் ஆவலுடன் உனக்காய் அகமகிழ்ந்து எங்கும் காத்திருக்க எத்துனையும் அலுக்காது எப்படி நீயும் எழில் பொங்க வருகின்றாய் சாதிமத பேதமின்றி சண்டைகள் ஏதுமின்றி சமத்துவத்தோடு நீயும் சரிநிகராக சகலருக்குமாக எப்படி வருகின்றாய் புத்தாண்டிலாவது புதுவழி பிறக்குமென நம்பிக்கை கொண்டோரின் கனவை நனவாக்க நாடுகள் தோறும் நீ நளினத்துடன் வருகின்றாய் எத்துன்பம் வந்தாலும் அத்தனையும் களைய ஆவலுடன் உன்னை அத்தனை பேர் பார்த்திருக்க ஏற்றமுடன் நீயும் எப்படியோ வருகின்றாய் ஆனாலும் நாமும்தான் ஆசையுடன் உன்னை ஆண்டாண்டாய்ப் பார்த்திருந்தோம் ஆறுதல் தேடி ஊரூராய் அலைந்திட்டோம் ஆழக்கடல் கடந்து அகதியாய் அலைந்திட்டோம் ஊரெல்லாம் கூடி ஒப்பாரி வைத்த…
-
- 10 replies
- 741 views
-
-
புலதினில் இயந்திரத்தோடு இயந்திரமாக உறவுகளை பிரிந்து தனிமரமாக புறாக்கூட்டுக்குள் அடைந்திருக்கும் ஏதிலித்தமிழன் நான் வயல் வெளியில் நடக்க ஆசை கினற்றில் குளிக்க ஆசை குடும்பத்தினருடன் கூடி இருக்க ஆசை ஆனால் முடியாது என்னால் விடுமுறையில் நண்பர்கள் தம் நாடு செல்கையில் எரிச்சலுடன் அவர்களை பார்கிறேன் நீ போகவில்லையா எண்ட கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் அப்படி மீறி ஊருக்கு போனாலும் சிறைக்கைதியாக நான் வீட்டில் சொந்த நாட்டில் குற்வாளிபோல ஒழித்திருக்க நான் செய்த ஒரு தவறு தமிழனாய் பிறந்தது சுதந்திர தமிழீழம் விடியலுக்காய் காத்திருக்கிறது அந்த விடியலுக்காய் நானும் காத்திருகிறேன் வீர புருசர்களின் இரத்ததால் விடியும் தமிழீழத்தை ஆவலுடன் எ…
-
- 10 replies
- 1.4k views
-
-
உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தல் இறந்திருக்கும்.... @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை
-
- 10 replies
- 2.3k views
-